Page 338 of 400 FirstFirst ... 238288328336337338339340348388 ... LastLast
Results 3,371 to 3,380 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #3371
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    From Facebook

    படத்தினால் பாடலா. . பாடலினால் படமா ?
    இந்த படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் மறக்க. முடியாதவை.. மெல்லிசை மன்னரின் அற்புத படைப்பு... சிவாஜி KR.விஜயா ஜோடியின் அருமையான நடிப்பு,அழகிய கலர் படம்....அதுவும் ஊட்டியின் இயற்க்கை காட்சிகள்.. வேறு என்ன வேண்டும். நமக்கு..

    அங்கே மாலை மயக்கம்
    படம் : ஊட்டி வரை உறவு
    குரல் : டி.எம்.எஸ்., பி.சுசீலா
    இசை : எம்.எஸ்.வி.
    பாடல் : கண்ண்தாசன்
    நடிகர்கள் : சிவாஜி, கே.ஆர்.விஜயா
    அங்கே மாலை மயக்கம் யாருக்காக
    இங்கே மயங்க்கும் இரண்டு பேருக்காக
    இது நாளை வரும் என்று காத்திருந்தால்
    ஒரு நாளல்லவோ வீணாகும்
    (அங்கே)
    ஆடச் சொல்வது தேன்மலர் நூறு
    அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
    கூடச் சொல்வது காவிரி ஆறு
    கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
    (அங்கே)
    கேட்டுக் கொள்வது காதலின் இனிமை
    கேட்டால் தருவது காதலி கடமை
    இன்பம் என்பது இருவரின் உரிமை
    யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
    லாலாலாலா..லாலாலாலா..லாலாலாலா..
    லாலாலாலா..லாலாலாலா..லாலாலாலா..
    ஆஹாஹாஹா..ஆஹாஹாஹா
    ஓஹோஹோஹோ.ஹஹஹஹம்..
    (அங்கே)

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3372
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    வணக்கம் ராஜேஷ்ஜி!
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #3373
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்!

    எனக்கு எதுவுமே புரியவில்லை. உங்களைப் போல நானும் மிக நகைச்சுவையாக ஜாலியாக பதில் கூறியுள்ளேன். smiley பார்க்க வில்லையா நீங்கள்? அதற்குள் என்னென்னவோ உரிமை அது இது என்று பெரிய பெரிய வார்த்தையெல்லாம் போட்டு விட்டீர்களே! நகைச்சுவை என்ற தலைப்பை தந்ததே நீங்கள்தானே! நிஜமாகவே ஒன்றும் புரியவில்லை. கொஞ்சம் அவசரப்படுகிறீர்களோ?சரி! 'புன்னகை' பதிவை புன்னகையுடன் படித்து விட்டீர்களா?
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #3374
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    வணக்கம் ராஜேஷ்ஜி!
    vanakkam

    nalam thaane

  7. #3375
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நலமே! நலமே! நலமேஜி!
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3376
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி வாசு - ஆபீஸ்ல் வேலையே ஒடவில்லை - உங்கள் மனதையும் புண்படுத்திவிட்டோமோ என்று - இந்த திரியின் பெரிய மகிமை - இங்கு யாருக்குமே எந்த விதமான Status Consciousness இல்லாததது தான் - பிறகு எங்கிருந்து வருகிறது " பக்கா லோ கிளாஸ் " என்ற வார்த்தைகள் ? உங்களைப்போல ஜன ரஞ்சகமாக எழுத முடியவில்லையே என்று பல தடவைகள் என்னை நானே கோபித்துக் கொண்டிருக்கிறேன் - எல்லாமே தெரிந்துக்கொள்ள வேண்டும் , எழுத வேண்டும் என்ற ஆசைகள் இருந்தாலும் அந்த அளவிற்கு திறமையை வளர்த்துக்கொள்ள தவறிவிட்டேன் . ஒரு வேளை என் பதிவுகளில் வார்த்தைக்கு வார்த்தை smiley உபயோகித்திருந்தால் நீங்களும் , CK வும் தவாறன கண்ணோட்டத்தில் என் பதிவுகளை படித்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் . உங்கள் புரிதலுக்கு மீண்டும் நன்றி .

    புன்னகை மிகவும் அருமையான படம் - உண்மை எல்லா சமயத்திலும் விலை போகாது என்பதை உணர்த்தும் உன்னத படம் . உண்மையின் எதார்த்தங்களை வலியுறுத்தும் கருத்துக்கள் நிறைந்த இருந்ததால் உண்மையில் விலை போகவில்லை . GG யின் அருமையான நடிப்பு , முடிவும் மிகுந்த சோகம் .. நல்ல படங்கள் ஓடுவதில்லை என்பதை உறுதியாக நிரூபித்த படம் - அருமையான பாலாவின் பாடலை தேர்ந்து எடுத்துள்ளீர்கள் வழக்கம் போல - அருமை . கொஞ்ச நாட்கள் திரியில் இருந்து ஒய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் வாசு - நன்றி மீண்டும்

  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #3377
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //கொஞ்ச நாட்கள் திரியில் இருந்து ஒய்வு எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்//

    ரவி சார்

    'புன்னகை'க்கு நன்றி!

    நீங்கள் எப்போது என்னைப் புண்படுத்தினீர்கள்? நீங்களாகவே ஏதாவது நினைத்துக் கொள்வதா? எல்லாருமே ஜாலியாகத்தான் பதிவுகள் இடுகிறோம்.

    நீங்கள் திரியை விட்டு ஒதுங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறேன் என்று அடிக்கடி சொல்வதை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மாபெரும் குற்றம். நாங்கள் விட்டு விடுவோமா என்ன? நகைச்சுவைப் பதிவுகளை ரசிக்கக் காத்திருக்கும் நேரத்தில் சீரியஸ் பதிவுகள் ஏன்? நோ. நோ. இனிமேல் 'மயிலே' எல்லாம் கிடையாது. ஆர்டர்தான். அப்புறம் இந்தக் குற்றத்துக்கெல்லாம் தரும் தண்டனை அநியாயத்துக்கு இருக்கும். ரிலாக்சாக நகைச்சுவைப் பதிவுகளை இட வேண்டும். இதுவே இந்த மன்றத்தின் கட்டளை. இன்னும் சில தினங்களில் பாகம் 4 முடிவடையப் போகிறது தெரியுமோ?
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #3378
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ரவி, வாசு, சிக்கா ஜீஸ்...

    அந்த அய்யன் திருவள்ளுவரே உப்பு போட்ட மாதிரி ஊடல் இருந்தால்தான் எல்லாமே ருசிக்கும்னு கடேசில சொல்லிட்டுப் போயிருக்காரு..

    நிலவுக்கும் நிழல் உண்டு ( ஆனா.... ) அந்த நிழலுக்கும் ஒளியுண்டு..

    எதையும் பார்க்கும் கோணம் வேறுபட வாய்ப்புகள் அதிகம்.....

    அட .... துக்கிணியூண்டு விஷயம்.. ஒரு வீடியோவைப் பதிந்து விட்டு... பாட்டு கேட்குது படம் தெரியலை என்று நான் எழுதினேன் ( என் மனசுக்குள் பாட்டை மட்டும் ரசிப்பதால் படத்தை கவனிக்கவில்லை என்று சொல்வதா க நினைப்பு )... ஆனா நம்ம வாசுஜி... படம் நல்லாத்தானே தெரியுது.. பாட்டும் நல்லாவே கேட்குதே என்று பதில் கொடுத்தார்.. அப்புறம்தான் அதுக்கு இப்படியும் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் என்றே புரிந்தது... (கிக்கிக்கீ)

    ரவி ஜி... இதுக்காக வருத்தப்படுவதே தப்பு... உரிமையாக சண்டை போட வேண்டியவர் நீங்க. சிக்கா ஒரு சின்னக் குழந்தை. பேரிலேயே தெரியலையா ? அவரை வளர்த்து விட வேண்டிய கடமை நமக்கு இல்லையா ? திடீர்னு லீவு கேட்டா சரிப்படுமா ?

    அருமையான பதிவுகளுக்காக காத்திருக்கும் நேரத்தில் ( ஆண்டவன் தயவில் இப்போதைக்கு உடல் நிலை ஒத்துழைக்கிறது.. தினமும் படிக்க முடிகிறது ).. இப்படி சொல்லலாமோ ?


  12. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, uvausan, vasudevan31355 liked this post
  13. #3379
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்!

    பார்த்தீர்களா! மது அண்ணா எவ்வளவு அழகாக 'என்னை விட்டு ஓடிப் போக முடியுமா? என்று உங்களை எங்கள் சார்பாகக் கேட்டிருக்கிறார். அவர் உங்கள் பதிவுகளுக்கு பரம ரசிகர். சும்மா சின்ன பிள்ளை மாதிரி கோபிச்சுக்கக் கூடாது. நம் அனைவரின் பிரார்த்தனையும் மது அண்ணா பூரண நலம் பெற்று பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் வாழவேண்டும் என்பதே. கொஞ்சம் இயலாத நிலையிலும் கூட அவர் தன் உடல் நிலையைப் பொருட்படுத்தாது எவ்வளவு ஆர்வமுடன் மதுரகானங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்! அவர் மனம் இன்புறவாவது நாம் எல்லோரும் திரியில் பங்கு கொண்டே ஆக வேண்டும். ஒற்றுமையே இந்தத் திரியின் வலிமை என்பது எல்லோரும் அறிந்ததே. மது அண்ணா, மற்ற நண்பர்கள் வழி நடத்துதலில் இந்த திரி பல பாகங்கள் காண வேண்டும். இதுவே நம் விருப்பம். நன்றி மது அண்ணா!
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Thanks uvausan thanked for this post
    Likes uvausan liked this post
  15. #3380
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    //அட .... துக்கிணியூண்டு விஷயம்.. ஒரு வீடியோவைப் பதிந்து விட்டு... பாட்டு கேட்குது படம் தெரியலை என்று நான் எழுதினேன் ( என் மனசுக்குள் பாட்டை மட்டும் ரசிப்பதால் படத்தை கவனிக்கவில்லை என்று சொல்வதா க நினைப்பு )... ஆனா நம்ம வாசுஜி... படம் நல்லாத்தானே தெரியுது.. பாட்டும் நல்லாவே கேட்குதே என்று பதில் கொடுத்தார்.. அப்புறம்தான் அதுக்கு இப்படியும் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம் என்றே புரிந்தது... (கிக்கிக்கீ)//

    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •