Page 169 of 400 FirstFirst ... 69119159167168169170171179219269 ... LastLast
Results 1,681 to 1,690 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

 1. #1681
  Senior Member Seasoned Hubber Varadakumar Sundaraman's Avatar
  Join Date
  Dec 2014
  Posts
  1,385
  Post Thanks / Like

 2. Likes vasudevan31355, gopu1954 liked this post
 3. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

 4. #1682
  Senior Member Seasoned Hubber Varadakumar Sundaraman's Avatar
  Join Date
  Dec 2014
  Posts
  1,385
  Post Thanks / Like

 5. Thanks vasudevan31355, g94127302 thanked for this post
  Likes vasudevan31355, gopu1954, g94127302 liked this post
 6. #1683
  Senior Member Seasoned Hubber g94127302's Avatar
  Join Date
  Jun 2012
  Posts
  1,641
  Post Thanks / Like
  கருவின் கரு - 172

  பாகம் 2 - தந்தை

  தந்தை - மகன் பந்தம்

  மாணவ /வாலிப / திருமண பருவம்


  உண்மை சம்பவம் 27

  நான் ISB இல் professor ஆக இருக்கிறேன் - பல மாணவர்கள் , என்னிடம் படித்தவர்கள் இன்று வெளிநாட்டில் பெரிய அந்தஸ்த்தில் இருக்கிறார்கள் - என்னுடன் இன்னும் தொடர்பில் உள்ளனர் - இருந்தாலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் மாணவன் என் மனதில் ஆழமாக பதிந்து போல வேறு எந்த மாணவனும் பதிய வில்லை - ஒரு நிமிஷம் - நான் professor ஆ அல்லது அவனா என்று என்னை ஸ்தம்பிக்க வைத்து விட்டான் . பார்க்க மிக சாதரணமாகத்தான் இருப்பான் - அவன் பூர்வீகம் கும்பகோணம் - அப்பா ஒரு கோயிலில் குருக்களாக இருக்கிறார் . அம்மா வீட்டில் முடங்கி இருப்பவள் .

  அவன் கண்ணில் இருந்த ஒரு ஒளி என்னை அவன்பால் இழுத்தது , வலிய பேச வைத்தது .. என் பல கேள்விகளுக்கு பிறகு அவன் தந்தையப்பற்றி பேச்சு வந்தது . உன் தந்தை எப்படி ? மிக மிக சாதரணமான , casual ஆன கேள்வி - அவன் சொன்ன பதில் என்னை ஒன்றுமில்லை என்று ஆக்கி விட்டது

  " சார் , அப்பாவை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் " என்று சொன்னான் - அவன் தமிழை திருத்தினேன் - "அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன்" என்று சொல்லவேண்டும் என்றேன் .

  " இல்லை சார் , நான் சொன்னது சரிதான் என்றான் !" - நான் class இல் மற்ற மாணவர்களை குழப்புவதற்கும் மேலாக என்னை குழப்பிவிட்டான் . " எப்படி சரி ?" என்றேன் - பதிலில் ஒரு மிகப்பெரிய உண்மையை அவன் எனக்கு உணர்த்தினான் .

  " சார் மகனின் ஒவ்வொரு பருவத்திலும் "அப்பா " என்ற வார்த்தைக்கு அர்த்தம் மாறிக்கொண்டே இருக்கும் - அப்பா ஒரு கடவுளுக்கு சமம் - அப்படித்தான் அவர் தெரிவார் நமக்கு முதலில் , பிறகு ஒரு கடமை வீரன் ; பிறகு உணர்ச்சிகளின் உச்சம் ; பிறகு அமைதியின் இருப்பிடம் - மீண்டும் அவர் கடவுளுக்கு சமம் ....

  " இன்னும் சரியாக எனக்கு விளங்கவில்லை .. என் முகத்தில் இருந்த அறியாமை அவனை மேலும் விவரிக்கத்தூண்டியது .

  " சார் - திருக்குறள் ஒரு தந்தை மாதிரி - ஒவ்வொரு தடவை ஒரு குறளை படிக்கும் போதும் அந்த குறள் வேறு வேறு அர்த்தத்தை தரக்கூடியது . " - குழப்புகிறானே !!! என் கவலை தொடர்ந்தது

  " சார் இந்த குறல் உங்களுக்கு தெரிந்திருக்கும் - " நிலையாமை " என்ற அதிகாரத்தில் வருகிறது .

  குறள் 336

  " நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
  பெருமை உடைத்துஇவ்வுலகு "


  அதாவது இந்த உலகமானது நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைக் பெருமையாகக் கொண்டதாகும் . வாழ்க்கையில் , மரணத்தின் எதார்த்தங்களை எடுத்துச் சொல்லும் குறள் . திருவள்ளுவர் இப்படி மறைமுகமாக புகழ்வதுபோல் இகழ கூடியவரா ? இதில் இந்த உலகிற்கு என்ன பெருமை இருக்க முடியும் ?? பல கேள்விகள் என் மனதில் ----

  இப்படித்தான் சிறு வயதில் படித்திருக்கிறேன் - இன்று அதே குறளை மீண்டும் படிக்கும் பொழுது வேறு வித்தியாசமான அர்த்தம் வருகிறது .

  " என் ஆர்வம் அதிகரித்தது -- என்ன அர்த்தம் அது ?"

  " இதன் வேறு அர்த்தத்தை சொல்லும் முன் ஒரு சிறிய சம்பவத்தை உங்களிடம் சொல்கிறேன் --- ஒருவர் புத்தரிடம் ஒருவனை அறிமுகம் செய்யும் போது " he is a sinner " என்று சொன்னார் - உடனே புத்தர் " oh ! இவர் ஒரு potential saint " என்று பதில் கொடுத்தார் . அந்த கெட்டவனுக்கு ஒரு ஞானியின் அந்தஸ்த்துக்கு உயர ஒரு வாயிப்பு இருக்கிறது இன்னும் வரப்போகும் காலத்தில் ... இதுதான் புத்தர் சொல்ல வந்தது ...


  ஒருவன் எப்பவாவது தவறு செய்திருந்தால் அதே கண்ணோட்டத்தில் தான் இந்த உலகம் அவனை பார்க்கிறது -- அவன் இன்று மாறி இருக்கலாம் என்றே உணர்ந்து கொள்வதில்லை - ஒருவன் திருடன் , கோபக்காரன் என்று ஒரு சமயம் பெயர் எடுத்திருந்தால் அவன் சாகும் வரை அவன் மன்னிக்கப்படுவதே இல்லை . நேற்று கெட்டவனாக இருந்தவன் இன்று திருந்தி ஒரு புது வாழ்வு வாழ ஒரு வாய்ப்பு இருக்கிறது - அதைத்தான் இந்த குறள் சொல்லுகிறது - இப்பொழுது இந்த கண்ணோட்டத்தில் படியுங்கள் - நான் சொல்வது உண்மை என்று புரியும் .

  நெருநல் உளனொருவன் இன்றில்லை - நேற்று தீய எண்ணகளுடனும் , பழக்க வழக்கங்களுடனும் இருந்தவன் இன்றில்லை - அவன் மாறிவிட்டான் நல்லவனாக ! இப்படிப்பட்ட ஒரு நல்லவனை அடைந்த பெருமை உடையது இவ்வுலகு --- இப்பொழுதுதான் இந்த உலகிற்கு பெருமை வருகிறது ..

  என்னைப்பொருத்த வரையில் இந்த குறளை தவறுதலாக " நிலையாமை அதிகாரத்தின் " கீழ் சேர்த்துள்ளார்கள் .. அப்பாவும் இந்த குறளை போலத்தான் - அவரை சரியாக புரிந்துக்கொள்ளவே முடியாது - ஒவ்வொரு தடவையும் அவரின் பந்தம் புதிய புதிய அர்த்தத்தை , தெய்வீகத்தன்மையை நமக்கு எடுத்துச்சொல்லிகோண்டே இருக்கும்.அதனால் தான் அவரை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன் - அவரைப்பற்றி சொல்கிறேன் என்று சொல்வதிலும் , அவரை கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று சொல்வதிலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன . கற்று கொள்கிறேன் என்று சொன்னால் பல புதிய அர்த்தங்களை தேடிக்கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்

  அவன் இப்படி சொன்ன பிறகு எல்லோரிடமும் நானும் என் அப்பாவை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்லி வருகிறேன் - professor என்பவர் பிறருக்கு பாடங்கள் சொல்லித்தருபவர் மட்டும் அல்ல பிறரிடம் பாடங்களை தெரிந்து கொள்பவரும் கூட ......

  Last edited by g94127302; 9th July 2015 at 11:36 AM.

 7. #1684
  Senior Member Seasoned Hubber g94127302's Avatar
  Join Date
  Jun 2012
  Posts
  1,641
  Post Thanks / Like
  கருவின் கரு - 173

  பாகம் 2 - தந்தை

  தந்தை - மகன் பந்தம்

  மாணவ /வாலிப / திருமண பருவம்


  " புரியாதது தந்தையின் அன்பு ; அதை புரிந்துக்கொள்ளாதது பிள்ளையின் பண்பு ;
  தெளிவான வேளையில் இன்று , அழகாக சிரித்தது அவன் தந்தைக்காட்டிய அன்பு "

  இதுவரை குழந்தைப்பருவத்தைப்பற்றி பார்த்தோம் . காலம் ஓடுகின்றது - பிஞ்சு பாதங்கள் வளர்கின்றது - இதுவரை ஒரு ஹீரோ வாகத் தெரிந்த தந்தை கண்டிப்பானவன் என்பதை மகன் உணர்கிறான் -- அந்த கண்டிப்பில் தன் சுதந்திரம் விலை போகிறது என்ற ஒரு தவறான எண்ணம் அவன் மனதில் உதயமாகுகின்றது - இருவருக்கும் உள்ள அந்த பந்தத்தில் சிறிது இடைவெளி தோன்ற ஆரம்பிக்கின்றது .. ஒரு விவரிக்க முடியாத உறவு இந்த பருவம் . மகன் தந்தையை வெறுக்க வில்லை , ஆனால் விலகி இருக்க அவனுக்கு சூழ்நிலைகள் உதவியாக இருக்கின்றன - மகன் தவறான வழியில் செல்லக்கூடாதே என்ற கவலை தந்தைக்கு - தான் செல்லும் வழியில் தந்தை வந்துவிடக்கூடதே என்ற கவலை மகனுக்கு ----


 8. #1685
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,085
  Post Thanks / Like
  7000 -முத்தான பதிவுகளை அளித்த அருமை ராகவேந்திரன் சாருக்கு என்னுடைய சிறப்புப் பதிவுப் பரிசு.  'நடிப்பின் கல்தூண்' வேல் கதை சொல்லி 'கல்தூண்' படத்தில் பாடும் பாடல்.

  வேல் பூஜை.

  வேல் நட்ட கதையை வேங்கை வெளிப்படுத்தும் பாடல்.

  ஊரே வணங்கும் பரமேஸ்வர கவுண்டரின் மூத்த மகன் திக்குவாய் கணபதி, கல்லூரிப் படிப்பு படித்துக் கொண்ருக்கும் திமிர் பிடித்த இளைய மகன் பழனிச்சாமி, கவுண்டரின் மனைவி, அந்த ஊரின் எக்ஸ்.எம்.எல்.ஏ இன்னும் பிறரும் வேல் பூஜைக்காக தங்கள் கிராமத்தின் கோவிலுக்கு வருகின்றனர்.

  பரிவட்டம் கட்டி பூஜை செய்ய பூசாரி தயாராகிறார். முறைப்படி மூத்த மகனுக்கு பரிவட்டம் கட்டி பூஜை ஆரம்பிப்பது மரபு. வில்லன் எம்.எல்.ஏ இளைய மகனை தூண்டி விட்டு பரிவட்ட ஆசையை அவனிடம் வளர்க்கிறான். பூசாரியிடம் தனக்கே பரிவட்டம் கட்ட வேண்டும் என்கிறான் இளையவன். 'அது முறையல்ல... குல வழக்கப்படி மூத்த பிள்ளைக்குத்தான் பரிவட்டம் கட்ட வேண்டும்' என்று பூசாரி எடுத்துச் சொல்லியும் இளையவன் கேட்காமல் யாரும் தொடக் கூடாத, பெரிய சரித்திரத்தை பின்னால் தன்னகத்தே கொண்டிருக்கும், கோவிலின் முன்னால் கம்பீரமாக நிற்கும் அந்த வேலைத் தொடப் போகிறான் தொடரப் போகும் விளைவுகளைப் பற்றி ஒன்றும் தெரியாமல்.

  தொடப் போனவனுக்கு தொடை நடுங்கும்படி ஓர் அடி விழுகிறது. சுருண்டு விழுந்தவன் எழுந்து பார்த்தால் நிற்பவன் தந்தை பரமேஸ்வர கவுண்டர்.

  ஒருமுறை நட்ட வேல் மறுமுறை மண்ணிலிருந்து எடுக்கப்பட்டால் ரத்தம் குடிக்காமல் மீண்டும் மண்ணில் பதியாது... புதையாது. அப்படிப்பட்ட பாரம்பரிய சக்தி மிகுந்த வேல். சாமானியர் எவரும் கை வைக்க முடியாத வேல்.

  வேலின் பின்னணிக் கதையை தந்தையிடம் கேட்கிறான் மகன்.

  "சொல்றேண்டா! நீ மாத்திரமில்ல....இங்க இருக்கிற எல்லாரும் தெரிஞ்சுக்கணும்...இந்த வேலைப் பத்தின கதையை சொல்றேன் கேளுடா''

  என்று கையில் ஆவேசமாக உடுக்கை எடுக்கிறான் தந்தை. எடுத்து அதை அடிக்க ஆரம்பிக்கிறான். வேலின் கதையை அனைவரும் உணரும்படி பாட்டாகப் பாடுகிறான். கதையின் பின்னணி உணர்ச்சியால் துடிக்கிறான். வேலின் பெருமையை வேதனையோடு கூறுகிறான். அந்தத் தந்தை சொல்லும் கதை தான் என்ன?

  ஏழுதலைமுறைக்கு முன்பு இருந்த, கவுண்டரின் வம்சத்தில் வந்த வீர மகன் ஒருவன் நட்ட வேல் அது. குற்றவாளிகளை கொன்று தீர்க்கும் ஒரு வேலையைத் தவிர வேறு வேலை ஒன்றும் அறியாத புனித வேல்.
  பகைவரையும் அஞ்ச வைத்து அவர்கள் குருதியையும் பொங்க வைக்கும் பொன்னான வேல். பாவம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டும் பக்தி தேவதையின் சக்தி வேல். பந்த பாசங்களுக்கு இடம் கொடாமல் பூமி விட்டு வெளி வந்தால் உயிர் வாங்கித்தான் மீண்டும் மண்ணில் பதியும் அந்த வேல்.

  நாச்சிமுத்து கவுண்டன் என்ற நயவஞ்சகனுக்கு நல்ல பெண்டாட்டியாய் ஒருத்தி. குலமகளாய் குணமகளாய் குணவதி அவள் தாரமாய் வாய்த்தும் நாச்சிமுத்துக் கவுண்டன் நாடியது தராதரம் கெட்ட நங்கைகளை. வைப்பாட்டி என்னும் வழி தவறிய பெண்களை.

  அவன் பத்தினித் தெய்வமோ அழகான ஒரு ஆண் பிள்ளை பெற்று இருந்தாள். இன்னொருத்தியுடன் கொஞ்சிக் குலாவிய கணவனை தடுக்கும் மனைவியை தன் மகன் சிறுவன் கண்முன்னே போட்டு உதைத்தான் நாச்சியப்பன். பையன் மனதில் வஞ்சம் முளைத்தது. தகப்பன் மேல் தாளமுடியாக் கோபம் பொங்கியது. நித்தம் அடி வாங்கும் தாயின் நிலை கண்டு சிறுவனுக்கு வாய் பேச்சு நின்று போனது. வாய் இழந்தாலும் வஞ்சம் வளர்ந்தது அந்த பிஞ்சு நெஞ்சில். தாயின் மேல் தொடரும் தந்தையின் தொடர் தாக்குதல்களில் வாய்விட்டு கதற முடியாமல் பதிலுக்குக் கண்ணீர் விட்டுக் கதறி, காவிரியின் வெள்ளத்தைத் தோற்கடித்தான் கற்புக்கரசி பெற்ற மைந்தன்.

  ஊர் பெயரைக் கெடுத்த ஊதாரிச் சிறுக்கி ஒருத்தியின் கைப்பாவை ஆனான் காமுகக் கணவன். அந்த ஊர் கெடுப்பவளோ 'மனைவியைக் கொன்று போடு' என்று மண்டியிட்டுக் கிடப்பவனிடம் கண்டிப்புடன் கட்டளை பிறப்பிக்கிறாள். "பட்டத்து ராணியை நீ பல்லாக்கில் அனுப்பி வைத்தால்தான் படுக்கைத் துணைக்கு என்னை பாங்காகப் பயன்படுத்த முடியும்" எனவும் நிபந்தனை விதிக்கிறாள்.

  வேசியின் பேரழகில் சொக்கிக் கிடந்தவன் வேதமாக அவள் சொல்லை மதித்தான். மனைவியை மகன் கண்முன்னே கழுத்தை நெரித்து மரண வாசலில் தள்ளினான் அந்த மதி கெட்டவன்.

  அப்பாவின் அக்கிரமத்தைப் பார்த்தான் மகன்.

  அம்மா கொலையுண்டதைக் கண்டான் மகன்

  அதிர்ச்சியில் அன்று நின்று போன வாய் இன்று

  அதே அதிர்ச்சியில் 'அம்மா' என்று அலறியது....கதறியது...ஓலமிட்டது.

  அம்மாவைச் சாய்த்த அப்பனைச் சாய்க்க ஆங்காரத்துடன் புறப்பட்டான் ஆண்மகன்.

  ஆனால்

  கண்மூடுமுன் கற்புக்கரசி கனலாய் நிற்கும் மகனைப் பார்த்து பாசத்தால் அவனைக் கட்டி, பாதகக் கணவனை பாடை போகும் போதும் கூட மகனிடமிருந்து பாதுகாத்துவிட்டுத்தான் பயணம் மேற்கொள்ளுகிறாள்.

  நீறு பூத்த நெருப்பாய் மகன் மனதில் பழி கனன்று கொண்டிருந்தது. அப்பனின் அக்கிரமமோ அதிகமாகிப் போய்க் கொண்டே இருந்தது. சிறுவன் வாலிபனாய் வளர்ந்து போனான். உடன் சினமும் சிதறாமல் உள்ளே வளர்ந்து கொண்டிருந்தது.

  உச்சமாய் அப்பன் கொடுந்தவறு ஒன்றை செய்ய தலைப்பட்டான். ஊர் பித்தமாக ஊரை எதிர்த்து கள்ளுக்கடை திறக்க சித்தமானான். அதுவரை பொறுத்த மகன் பொங்கினான். தாய் கடைசியில் வாங்கிய வாக்கு நினைவில் இருந்தது.

  தாய் தவித்து இறக்கும் போது தனயனிடம் உறுதி வாங்கிக் கொண்டது.

  "என்னைக்கு உங்க அப்பனின் அக்கிரமம் எல்லை மீறி ஊர் அழிக்குமோ அன்றைக்கு நீ அவனை அழித்து விடு... அதுவரை பொறுத்து விடு"

  வம்ச மகன் நட்ட வேல் வஞ்சம் தீர்க்க இந்த மகனால் இப்போது மண்ணிலிருந்து பிடுங்கப்பட்டது. பிதாவின் உயிர் பிள்ளையினால் பரிதாபமாய் பறி போனது.

  ஆமாம்! ஆறுபடை வேலனாக புதைந்த வேலெடுத்து, தந்தை பிள்ளை பாசம் அறுத்து, சூரபத்மன் மேனிதனில் வேல் பாய்ச்சி, ரத்தம் தந்த ரத்த உறவின் ரத்தம் பதிந்த வேலை மீண்டும் மண்ணில் புதைத்தான் மகன்.

  வேலின் மானம் காத்தான் வேங்கை.

  மகனிடம் இந்தக் கதை சொல்லி, வேலின் பெருமை சொல்லி, அங்கிருப்பவர்களுக்கு அதன் மகத்துவத்தைப் புரிய வைத்தார் பரமேஸ்வர கவுண்டர்.  வேங்கை பாய்ந்து பார்த்திருப்பீர்கள். சிங்கம் சீறி பார்த்திருப்பீர்கள். இதையெல்லாம் தாண்டிய சீற்றத்தைப் பார்த்திருக்கிறீர்களா? இதோ பாருங்கள்..இங்கு பாருங்கள்... இப்போது பாருங்கள்.

  பரமேஸ்வரக் கவுண்டராய் பரம்பரை வேலின் கதையை உடுக்கை அடித்து உறுமியபடி, ஊரார் முன் பாடலாய் உரைத்தபடி உலவும் நடிப்புச் சிங்கத்தின் சீற்றம் பாருங்கள். அங்கங்கள் துடிக்க அலைபாய்ந்த நடையுடன் அத்தனை பேர் மத்தியில் கம்பீரக் களிநடம் புரியும் நடிப்புக் கடவுளின் நடிப்பைக் காணுங்கள்.

  பரமேஸ்வரக் கவுண்டராய் பரமேஸ்வர வேடம் பூண்டவர். நடிப்பில் நம்மை ஆண்டவர்...நடிப்பின் ஆண்டவர்... நடிகர் திலகம் உடுக்கை அடித்து இந்தப் பாடலைப் பாடும் போது நம் சகல அங்கங்களும் ஒடுங்கிப் போகின்றன. சப்த நாடிகளும் அடங்கிப் போகின்றன.

  உடுக்கை வாங்கி, அம்மனை வணங்கி, அடிக்க அராம்பிப்பாரே! நடிப்பை வடிக்க ஆரம்பிப்பாரே!

  கைவைத்த பனியனும் வேட்டியும் அணிந்து, இடுப்பில் கட்டிய பட்டுத் துண்டுடன், உச்சந்தலையில் உன்னதம் காட்டும் கம்பீரக் குடுமியுடன், கையில் கட்டிய காப்புடன், கழுத்தில் செயினுடன் ருத்திராட்சக் கொட்டை மாலையுடன், நெற்றியில் நீறு குங்குமம் இட்டு காதில் கடுக்கணுடன், முறுக்கிய அடர் மீசையுடன் எனது கடவுள், நடிப்பைக் காத்த கடவுள் கையில் உடுக்கையுடன் உறுமியபடி களம் இறங்குமே!

  அந்த அழகுக் கம்பீரத்தை உங்களுக்கு நான் எப்படிச் சொல்ல?!

  'ஏழு தலைமுறையில் முன்பிருந்ததொரு
  எங்கள் வம்சமகன் நட்ட வேல்'

  என்று உடுக்கை அடியில் அதிசயங்கள் தொடங்க ஆரம்பித்து இதே வரிகள் உடுக்கை ஒலி இல்லாமல் ஒலிக்க, வரி முடிந்ததும் குளோஸ் -அப்பில் தலையை சற்றே சாய்த்து, படுகம்பீரத்துடன் பாடலைத் துவங்குவார் பார் புகழும் நடிக மன்னர். (கே.ஆர்.விஜயா நடிகர் திலகத்தை மெய்மறந்து பார்ப்பார்)

  'எங்கள் வம்சமகன்' என்னும் போது புருவங்களுடன் நெற்றி ஏறி இறங்கி குலத்தின் பெருமையை அருமையாக பேசும். 'முன்பிருந்ததொரு' எனும் போது கண்களை கம்பீரமாக மூடித் திறப்பார்.

  உடன் உடுக்கை அடிக்கும் அழகைப் பாருங்கள். காதருகே உடுக்கை வைத்து அந்த சப்தத்தைக் கேட்டவாறே தலையாட்டும் தன்னிகரில்லா அழகு.

  எந்த நாளினிலும் குற்றவாளிகளைக்
  கொன்று தீர்த்துவிடக் கற்ற வேல்

  வலதுகால் முன்வைத்து, வீராவேசமாக நடந்து வந்து, அதே நேரம் வலது கையை முன் நீட்டி, ரௌத்திரம் காட்டி,

  பகைவர் அஞ்சவரும் குருதி பொங்க வரும்
  பழியை வாங்க வரும் வீர வேல்

  பாவம் செய்தவர்க்கு பாடமாக வரும்
  பக்தி தேவதையின் சக்தி வேல்

  என்று அம்மன் கடவுள் பக்கம் ஆக்ரோஷமாகத் திரும்பும் திகைப்பூட்டும் திரைக் கடவுள்.

  பந்த பாசங்களை எந்த நாளினிலும்
  பார்ப்பதில்லை இந்த வெற்றி வேல்

  என்று பாடி திரும்ப சற்றே வசன நடையில் மீண்டும் உச்சரிக்கும் உறுமல்.

  இந்த பூமி விட்டு வந்த போதும்
  உயிர் வாங்கித்தான் பதியும் இந்த வேல்

  என்று பலி வாங்கும் வேலின் பழிதீர்த்தலை பட்டவர்த்தனமாக பார்ப்போருக்கு உரைக்கும் தீர்க்கம்.

  இது முடிந்தவுடன் மிக மிக அருமையான உடுக்கை சப்தத்துடன் மிகவும் ஒன்றி லயித்து அங்கிருப்பவர்களை வட்டமிடுவார்.

  இளைய மகனிடம் வந்து நின்று உடுக்கை தட்டியபடி, அதற்குத் தக்கவாறு தலையை ஆட்டியபடி,

  மாரியாத்தா சந்நிதியில் வேலெடுத்து நட்டு வச்ச
  காரணத்தை சொல்றேன் கேளடா
  அட மானமுள்ள நாச்சியப்பன் ஆனபழி தீர்த்துவிட்டு
  தானெடுத்து நட்ட வேலடா

  அடடடா! இந்த வரிகளை முடித்தவுடன் வெறும் உடுக்கை சப்தம் மட்டுமே. உடுக்கை அடிப்பார் பாருங்கள் எம் மன்னவர்! காணக் கோடிக் கண்கள் பத்தாதய்யா பத்தாது. பார்க்கும் நமக்கு உடல் சில்லிட்டுப் போகும். உதடுகளை ஒன்று குவித்து தலையை வலதும் இடதுமாய் ஆட்டி, தன்னையறியாமல் மனம் லயித்து, இவர் உடுக்கை அடிக்கும் அதிசய அற்புதம் எழுத்துக்களால் வர்ணிக்க முடியாதது. இந்த ஒரு இடத்தை மட்டும் எத்தனை முறை பார்த்து ரசிக்கலாம் தெரியுமா!

  இந்தக் காட்சியை பார்க்கும் போது என் கண்களில் என்னையுமறியாமல் ஏதோ இனம் புரியாத சோகக் கண்ணீர். மனம் பாரப்பட்டது. இந்த தெய்வம் பிறந்த மண்ணில்தானே நானும் பிறந்தேன் என்ற மார் தட்டும் பெருமையும் என்னை குடி கொண்டது.

  நாச்சிமுத்து கவுண்டரு கட்டி வந்த பெண்டாட்டி
  நல்லவள் ஒருத்தி இருந்தா
  அவ உள்ளபடி தானிருக்க ஒன்பது பேர் வைப்பாட்டி
  ஊருக்குள்ளே கூட இருந்தா

  உத்தமமாம் பத்தினியாய் சத்தியம் தவறாமல்
  ஒத்த பிள்ள பெத்து இருந்தா
  அந்த பச்ச புள்ள முன்னிலையில்
  பத்தினியை நாச்சிமுத்து நித்தமுமே போட்டு உதைச்சான்
  நித்தமுமே போட்டு உதைச்சான்

  மேற் சொன்ன வரிகளில் பிளாஷ்பேக் காட்சிகள் மிக அருமையாக தொகுக்கப்பட்டு காண்பிக்கப்படும். வரிகளில் கதை அற்புதமாய் புரியும். பதிவில் நான் கொடுத்திருக்கும் கதையைப் படித்தால் ஆழமாகப் புரிந்து கொள்ளளலாம்.

  இது முடிந்ததும் நடிகர் திலகம் அந்த பிளாஷ் பேக் காட்சிகளை அப்படியே உள்வாங்கி, தாய் படும் கஷ்டத்தை காணச் சகியாத அந்த பிள்ளையின் மனநிலையை அப்படியே உடுக்கை அடித்தவாறு நமக்குக் காட்டி, அந்த சோகத்தைக் கூட கம்பீரமாக மாற்றி, நம் மனதில்தான் எத்துணை ஆழமாக நடந்த சம்பவங்களைப் பதிய வைக்கிறார்!

  குளோஸ்-அப் காட்சியில் இவரின் முகபாவம் எப்படியெல்லாம் விந்தை புரிகிறது! அந்த பாவங்களில் நம் சிந்தையும் குளிர்கிறது.

  திரும்பவும் பிளாஷ் பேக் காட்சிகள்.

  தாய் வடித்த கண்ணீரை தான் பார்த்த பிள்ளைக்கு
  வாய்ப்பேச்சு நின்னதேயடா
  பிள்ளை வாயிழந்து போனாலும் பால் குடித்த நெஞ்சுக்குள்ளே
  வஞ்சம் ஒன்னு வந்ததேயடா

  சைடு ஆங்கிளில் உடுக்கை அமர்க்களம்.

  வெள்ளாட்டி முன்னிலையில் வெள்ளாடு போல
  அவள் வேதனையும் கொஞ்சமல்லடா
  அந்த வேதனையைப் பார்த்த பிள்ள தானழுத்த கண்ணீரு
  காவிரியை மிஞ்சுமேயடா

  'காவிரி' எனும் போது காவிய மகன் மீண்டும் காட்டப்படுவார். உலகில் உள்ள அத்தனை நடிப்பு நுட்பங்களும் இந்த மனிதருக்குள் புகுந்து புயலாய் வெளிப்படும் இந்த நேரத்தில்.

  'காவிரியை மிஞ்சுமேயடா' என்று தோள் பட்டைகளையும் உடலையும் வெளிப்பக்கம் வாங்கியவாறு, வாயைப் பிளந்து அழுதபடி, அனுபவித்த வேதனையை எண்ணி உருகும் இடம் ஒன்று போதும் இவர் நடிகரல்ல நடிக தெய்வம்...நடிகர்களுக்கெல்லாம் தெய்வம் என்று காட்ட.

  இருநூறுக்குப் பிறகு ஒன்றுமில்லை என்று சொல்வோர் இந்தப் பாடலில் இந்த மந்திரஜால நடிப்பு மன்னனின் அசைவுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? பதில் சொல்ல இயலுமா உங்களால்?

  வண்ணமுள்ள பெண்ணொருத்தி வஞ்சகனுக்கு
  வாய்த்து விட்டாள்
  பின்னும் அவள் போன கதை பெருசாச்சு
  அந்த பேரழகி சொன்னதுதான் செயலாச்சு

  பட்டத்து ராணியை நீ பல்லாக்கில் அனுப்பி விட்டால்
  பக்கத்தில் நானிருப்பேன் என்றாளே
  அந்த பாதகன் மனைவி தன்னைக் கொன்றானே
  பாதகன் மனைவி தன்னைக் கொன்றானே

  ப்ளாஷ்-பேக் காட்சி முடியும். மீண்டும் காமெரா நடிகர் திலகத்திடம் வரும்.

  அப்பாவின் செயல் பார்த்தான்
  அம்மாவின் கொலை பார்த்தான்
  அப்போது சீறி வந்தான் ஊமையடா

  அம்மா அம்மா அம்மா

  பேசி அம்மா அம்மா வென்றே துடித்தான் பிள்ளையடா...

  மீண்டும் குளோஸ்-அப். 'அம்மா அம்மா' வென்று கூறும்போது சாதனை நிகழ்த்தும் வாயசைப்புக்கள். உள்ளே நடித்துக் கொண்டிருக்கும் நாக்கு. உணர்ச்சிகளின் பிழம்பாய் அந்த முகம். தாயை இழந்த பிள்ளையின் முகத்தை இங்கே காணலாம். அந்த சோகத்தை இங்கே உணரலாம்.

  திரும்பவும் காட்சி கதைக்குத் திரும்பும்.

  கண்ணிலே நெருப்பெடுத்த வண்ணமகன் தான் பார்த்து
  பெண்ணரசிதான் அழைத்தாள் அன்பினிலே
  தன் பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவினிலே
  பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவினிலே

  இப்போது மீண்டும் சிங்கத்தின் ஆக்ரோஷமான ஆக்டிங்.

  பாடலுடன் நடிப்பும் வேகம் எடுக்கும்.

  கட்டுப்பட்ட அந்த மகன் காத்திருந்தாண்டா
  அந்தக் காலம் வரும் வேளை வரை காத்திருந்தாண்டா
  தட்டுக்கெட்ட அந்த எமன் பங்காளியானான்
  மகன் தாயுரைத்த வாக்கின்படி பகையாளியானான்

  ஆறுபடை வேலனென ஆடி வருகின்றான்
  சூரபதன் மேனிதனில் பாய வருகின்றான்
  தந்தையென பிள்ளையென பாசம் இனி இல்லை
  சந்ததியில் இந்த வடி வேல் உரைக்கும் எல்லை

  பாடல் முடிந்ததும் மீண்டும் உத்தமரின் உடுக்கை முழக்கம்.

  பின் வசன மழை.

  'அந்த நாச்சியப்பன் நட்ட வேல்தாண்டா இது.

  இந்த வேல் என் பரம்பரையின் வரலாறு...

  கட்டின பொண்டாட்டிக்கு துரோகம் செய்தவனுக்கு இது ஒரு சிம்ம சொப்பனம்...

  ஊரைப் பகைச்சுக்குற அயோக்கியனுக்கு இது ஒரு பாடம்....

  என் பரம்பரையில பொறக்குற தலைச்சன் புள்ளதான் இந்த வேலைத் தொட்டு பூஜை பண்ணனும்...'

  என்று ஆணித்தரமாகத் தொடருவார்.

  அப்பாடி! என்ன ஒரு காட்சி! எப்படிப்பட்ட பாடல்! கதைக்குப் பொருத்தமான வரிகளை கண்ணதாசன் மிக அற்புதமாக வடித்துத் தந்திருப்பார். பாடலுக்கேற்ற அருமையான கதை சொல்லும் மேஜரின் இயக்கம். பொருத்தமான நடிகர்கள் தேர்வு. உடுக்கையின் இடி மழை, 'மெல்லிசை மன்னரி'ன் வல்லிசை, அச்சு வார்த்து எடுத்த மாதிரி நடிகர் திலகத்திற்காக உணர்ச்சி ததும்பப் பாடும் 'பாடகர் திலகம்',

  இவை எல்லாவற்றையும் தூக்கி 'டபக்'கென்று வாயில் போட்டு விழுங்கி ஏப்பம் விட்டுக் கொள்ளும் நடிகர் திலகத்தின் ஈடுஇணையில்லா நடிப்பு. நடிப்பின் அரிச்சுவடி அறியாதவன் கூட இந்தப் பாடலில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்தால் நடிப்பை உணர்வதில் பண்டிதனாவான்.

  வி.கே.ஆர், மனோரமா, கே.ஆர்.விஜயா, கல்தூண் திலக்ஜி, சதீஷ், நாகேஷ், கோகுல்நாத், வாணி இன்னும் பலர் சுற்றியிருக்க அத்தனை பேர் மத்தியில் ஒற்றை ஆளாய் ஒப்பற்ற நடிப்பை வாரி வழங்கி, 'என்றுமே நான் நடிப்பில் எவரும் முந்த முடியாத தனிக் காட்டு 'ராஜா' என்று நடிகர் திலகம் நிரூபிப்பதோடு 'என்னுடைய பின்னாளைய படங்களையும் பாருங்கள்...அதில் கொஞ்சமும் என் நடிப்பு சளைத்ததல்ல...குறைந்ததல்ல' என்று சவால் விடுவது போல் தோன்றுகிறது.

  நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள்.


  Last edited by vasudevan31355; 9th July 2015 at 07:49 PM.
  நடிகர் திலகமே தெய்வம்

 9. Thanks RAGHAVENDRA, g94127302, sivajisenthil thanked for this post
 10. #1686
  Senior Member Seasoned Hubber g94127302's Avatar
  Join Date
  Jun 2012
  Posts
  1,641
  Post Thanks / Like
  வாசு - இந்த திரிக்கு ஒரு கல்தூணாக இருக்கும் நீங்கள் , கல்தூண் படத்தைப்பற்றி ஏன் இதுவரை அலசவேயில்லை என்ற ஒரு கேள்வி என் மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்தது . எப்படியோ என் மனதைப்படித்து விட்டீர்கள் - இன்று திரிக்கு வந்தால் ஒரே ஆச்சிரியம் - " "பாலாவிற்கு " சற்றே ஒய்வு கொடுத்து கல்தூணில் எங்களை கரைய வைத்துவிட்டீர்கள் - நீங்கள் எழுதி இருப்பது மிகையே அல்ல - அத்தனையும் உண்மை. "பாபனாசத்தில் "கமல் சொன்னதைப்போல - நடிகர் திலகத்தை , அவர் நடிப்பை பாராட்ட தெரியாதவர்கள் ஒரு நல்ல ரசிகனாக இருக்க முடியாது - இந்த படமும் மேஜரை காப்பற்றவேண்டி நடித்துக்கொடுத்த படம். ஓஹோ என்று ஓடி வசூலில் சாதனை பண்ணியப்படம் - தலைவரும் , கே .ஆர் விஜயாவும் மாட்டு வண்டியில் செல்லும் போது , பின் இசையில் , தலைவரின் பராசக்தி யில் வரும் " கா கா " பாடல் மலரும் நினைவுகளை உண்டாக்கும் .

  திரு ராகவேந்திரா அவர்களுக்கு இதற்கும் மேலும் ஒருவர் சிறப்பான பரிசைக்கொடுத்திருக்க முடியாது - அவருக்கு பரிசு என்று நீங்கள் அறிவித்து இருந்தாலும் எங்கள் எல்லோருக்குமே சமமாக வழங்கியுள்ளீர்கள் - உங்கள் பரந்த மனம் எங்களை புல்லரிக்க வைக்கின்றது - ஏன் ஒரு இலவச இணைப்பும் இல்லை இந்த தடவை - ஏன் ஏன் ஏன் ???
  Last edited by g94127302; 9th July 2015 at 09:39 PM.

 11. Thanks vasudevan31355 thanked for this post
  Likes RAGHAVENDRA, sivajisenthil liked this post
 12. #1687
  Senior Member Seasoned Hubber g94127302's Avatar
  Join Date
  Jun 2012
  Posts
  1,641
  Post Thanks / Like
  ராகவேந்திரா சார் - 7000 பதிவுகள் !! - நடிகர் திலகத்தின் நடிப்புக் கூட என்னை இவ்வளவு அசர வைத்ததில்லை - இதன்பின் எத்தனை உழைப்பு , ஈடுபாடு , தன்னடக்கம் , தளராமை , தன்னம்பிக்கை - உங்களிடம் கற்று கொள்ளவேண்டும் இவை எல்லாவற்றையும் - நல்ல தேக ஆரோக்கியத்துடன் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் நீங்கள் இட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை மட்டும் அல்ல , பிராத்தனையும் தான்

 13. Likes RAGHAVENDRA liked this post
 14. #1688
  Senior Member Diamond Hubber Yukesh Babu's Avatar
  Join Date
  Aug 2013
  Posts
  5,135
  Post Thanks / Like
  தாம்பத்யம்....இது..தாம்பத்யம்...
  "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ..."பாரதியின் இந்த இரண்டு வரிகளை இரவல் வாங்கிக் கொண்டு மீதி சந்தங்களை இதன் பொருளுக்கு முழு நீதி வழங்கி இருக்கிறார் கவியரசர் .இசையமைத்திருப்பவர் திரை இசைத் திலகம்..பாடலுக்கு உடல் நடிகர் திலகம்,பத்மினி அம்மா...உயிர் டி .எம்.எஸ்.......ஏற்ற இறக்கங்களுடன் பாடலை ஒரு இறவாப் பாடலாக்கி இருப்பார்.நடிகர் திலகமும்,பப்பிம்மாவும் வாழ்ந்திருப்பார்கள்.ஒரு ஆங்கிலேயக் கம்பெனியில் தலைமை அதிகாரியாக இருந்து பிரஸ்டிஜ் பத்மநாபன் என்று வலம் வரும் கம்பீரம்....ரிட்டைர்மேன்ட்டுக்குப் பிறகு சுருங்கி தன் நிலை தடுமாறி மனைவியிடம் குமுறும் குழந்தையாய்...குழந்தையை தேற்றி வாரி அணைக்கும் தாயாய் மனைவி ......காட்சி மனசை அரிக்கும் என்றால் பாடல் நெஞ்சைப் பிளக்கும்...பிள்ளைகள் மதிப்பதில்லை,மருமகள் சரியில்லை,மகளுக்குத் திருமணம் செய்யவில்லை...பாரம் நெஞ்சை அழுத்த ஒரு ஈசிச்சேரில் நடிகர் திலகம்..காலடியில் சாதாரண தேவேந்திரா மடிசார் புடவையிலும்,எளிமையில் அழகு மயிலென பப்பிம்மா...காட்சியை ரவி வர்மா பார்த்திருந்தால் சித்திரமாய்த் தீட்டி இருப்பார்...பப்பிம்மா கண்களில் குளமென கண்ணீர்...பாடல் பிறக்கிறது...""உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ?"'உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்வு ஒளிமயமானதடி ..பொன்னை மணந்ததால் சபையில் புகழும் வளர்ந்ததடி 'அவர்களுக்குள் ஒரு ப்ளாஷ் பேக் ......அவர்கள் திருமணம்....அம்மாஞ்சி அய்யராத்து பைய்யன் நடிகர் திலகத்தின் பஞ்சகச்சமும் நெத்தியில் வீபூதியும்....அழகு....மடிசார் புடவை,நெத்தியில் பட்டம்,சுட்டி,ஜடை சிங்காரம்,குஞ்சலம்,கொள்ளைப் பூ,கை கொள்ளாம வளையல்கள்........அந்த எடுப்பான மூக்கில் முத்துந்தளுக்கு,பேசரி........இந்த அழகைச் சொல்ல இதற்கு மேல் வார்த்தை ஏதும் இல்லை.....அவளைக் கரம் பிடித்த நாள் முதல் அவருக்கு ஏறு முகம்...பொன்னை மணந்ததால்....இங்கே சொல்ல வந்திருப்பது அவளுடைய தங்கமான குணம் பற்றி....அவளால் அவனுக்கு சமுதாயத்தில் ஒரு தனி அந்தஸ்து...காலம் நகர்கிறது...பிள்ளைகள் ..பல சுமைகள்.."கால சுமைதாங்கி போல வாழ்வில் எனைத் தாங்கி வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் இன்னல் தணியுதடி..."'ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன ?வேர் என நீ இருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்."....காலச்சுமையில் நான் ஓய்ந்து சாயும் பொழுதெல்லாம் என்னைத் தாங்கி என் கண்ணீரைத் துடைக்கும் பொழுது என் இன்னல்கள் துயரங்கள் தவிடு பொடியாகிறது....ஊஞ்சலில் சாய்ந்து கொண்டு நடிகர் திலகம்,அவர் முகம் பார்த்து விம்மும் பப்பிம்மா....சில்வுட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்...அதுவே இது..பிள்ளைகள் ஆதரவு இல்லை..."முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும் ..பிள்ளைக் குலமடியோ என்னைப் பேதைமை செய்ததடி பேருக்குப் பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு என் தேவையை யாரறிவார் உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்"...படுக்கை என்றதும் திருமண முதலிரவு நெஞ்சில் நிழலாடுகிறது...அதை வீழ்த்துகிறது நிகழ்காலம்...முள்ளில் படுக்கை..இமைகள் மூட மறுக்கின்றது....பேருக்குப் பிள்ளைகள் ....சொந்தம் என்று சொல்லிக் கொள்ள...ஆனால் அவர்களால் ஒரு பயனும் இல்லை...என் தேவைகளை உன்னையன்றி வேறு யார் உணர்வார்கள்...அந்த தெய்வம் தவிர?.....அவளை அவரின் காவல் தெய்வம் என்றே சொல்கிறார்....தாம்பத்யம்...இது....ஆஹா....வாழ்ந்திர ுக்கும் இந்த ஜோடியை காலம் உள்ளவரை தாம்பத்யம் உள்ளவரை யார் மறக்க முடியும்.....நெஞ்சில் என்றும் ஒரு ராகமாய்.....


  courtesy fb
  சிரித்து வாழ வேண்டும்
  பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

  உழைத்து வாழ வேண்டும்
  பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

 15. Thanks vasudevan31355, sivajisenthil thanked for this post
 16. #1689
  Senior Member Veteran Hubber rajraj's Avatar
  Join Date
  Oct 2004
  Posts
  4,551
  Post Thanks / Like

  Jugalbandi 40 ----Bhanumathi again

  From Alibabavum 40 thirudargaLum (1956)

  maasilaa uNmai kaadhale maarumo selvam vandhapodhile......
  From the original, Alibaba aur 40 chor(1954)

  Ae saba unse keh sara.......
  vasu: I don't have exclusive rights to post jugalbandi songs. You may post jugalbandi songs you like,preferably songs from movies after 1965, the year I left for the US. I did not watch any Indian movies after 1965 until VCRs became available as consumer electronics and Indian movies were available on tape ! Have fun !

  -
  " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

 17. Thanks vasudevan31355 thanked for this post
  Likes RAGHAVENDRA, gopu1954, vasudevan31355 liked this post
 18. #1690
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,085
  Post Thanks / Like
  குமார் சார்,

  கிடைத்தற்கரிய அற்புத பழைய சினிமா விளம்பரங்களை பதித்து திரிக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். இதையெல்லாம் காணும் போது மனம் அந்த காலத்திற்கே பறக்கிறது. அற்புதமான ஆவணங்களுக்கு நன்றிகள்.
  நடிகர் திலகமே தெய்வம்

 19. Likes RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •