Page 7 of 7 FirstFirst ... 567
Results 61 to 68 of 68

Thread: Achcham Enbadhu Madamaiyada - STR + GVM + ARR

  1. #61
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பிற்கு சிம்பு வரவில்லையா? டி.ஆர்.விளக்கம்!

    சிம்பு நடித்த வாலு, இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்கள், பல பிரச்னைகளையும் தடைகளையும் தாண்டி தட்டுத்தடுமாறி ரிலீஸானது. இந்நிலையில் “அச்சம் என்பது மடமையடா” படத்திற்கும் இந்நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறதாம் படக்குழு.

    கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த “விண்ணைத் தாண்டி வருவாயா” திரைப்படம் ஹிட் அடித்தது மட்டுமில்லாமல், சிம்புவிற்கு உலகளவில் ரசிகர்களையும் சம்பாதித்துக்கொடுத்தது. மீண்டும் கெளதம் மேனன் - சிம்பு கூட்டணியில் வெளியாகவிருக்கும் படம் “அச்சம் என்பது மடமையடா”. தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் உருவாகிவருகிறது.

    இப்படத்திற்கான க்ளைமேக்ஸ் காட்சிகள் உட்பட இன்னும் ஐந்து நாட்களுக்கு படப்பிடிப்பு பாக்கியிருக்கிறதாம். அதுமட்டுமின்றி சித்ஸ்ரீராம் குரலில் அனைவரையும் வசீகரித்த ‘தள்ளிப்போகாதே…’ பாடலே இன்னும் படமாக்கப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் தெலுங்கு படத்திற்கான ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியையே முடித்துவிட்டார் கெளதம் மேனன். மேலும் தெலுங்கு ரிலீஸூக்கான புரமோஷன் வேலையிலும் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். ஆனால் தமிழில் எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.

    தமிழில் ஏன் தாமதமாகிறது என்று விசாரித்தால், சிம்பு தான் காரணம் என்கிறார்கள். ஆரம்ப கட்ட படப்பிடிப்பிற்கு சிம்பு சரியாக வந்துகொண்டிருந்தவர், க்ளைமேக்ஸ் காட்சிகளுக்கான ஷூட்டிங்கிற்கு சரியாக வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

    குறிப்பாக, க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கிற்கு அன்று காலையில் சிம்புவைத் தவிர கெளதம் மேனன் உட்பட மற்ற அனைத்து கலைஞர்களும் காத்திருக்க, அன்றைய ஷூட்டிங்கிற்கே சிம்பு வரவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் படக்குழுவிற்குள் சிறு பரபரப்பு நிலவியுள்ளது. அன்றுலிருந்து தமிழ் போர்ஷனுக்கான படப்பிடிப்பை பற்றி எதுவும் கெளதம் மேனன் பேசவில்லையாம்.

    இதுகுறித்து நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான டி.ராஜேந்தரிடம் பேசியபோது, “ டிடிஎஸ் கட்டணம் இன்னும் கட்டவில்லை. அதை கட்டியவுடன் படப்பிடிப்பிற்கு வந்துவிடுவார். ஷூட்டிங் வராததற்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. மேலும் கெளதமிற்கும் சிம்புவிற்கும் எந்த பிரச்னையும் இல்லை” என்று கூறினார்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #62
    Senior Member Regular Hubber RATHEESHAJITH's Avatar
    Join Date
    Dec 2004
    Posts
    251
    Post Thanks / Like
    Songs lam superb

  4. #63
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    தள்ளிப் போகாமல் ரிலீஸ் ஆகுமா 'அச்சம் என்பது மடமையடா'?


    கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் 'அச்சம் என்பது மடமையடா' படம் வெளிவருவதற்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

    கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஒன்றாக எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் கெளதம் மேனன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

    ஜூலை 15ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. படக்குழு அறிவித்த சமயத்தில் 'கபாலி' ஜூலை 1ம் தேதி வெளியீடாக இருந்தது. அதனால், அப்படம் வெளியாகி 2 வாரம் இடைவெளி விட்டு 'அச்சம் என்பது மடமையடா' என்று படக்குழு திட்டமிட்டது.

    இச்சமயத்தில் 'கபாலி' ஜூலை 22ம் தேதி வெளியீடாக மாறியிருக்கிறது. மேலும், இன்னும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு வருவதில்லை என்றும், அதனால் 'தள்ளிப் போகாதே' பாடல் இன்னும் படமாக்கப்படவில்லை என்று கெளதம் மேனன் தெரிவித்திருக்கிறார்.

    இதனால் படக்குழு திட்டமிட்டப்படி இப்படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் 'தள்ளிப் போகாதே' பாடல் படமாக்காமல் வெளியிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றும் கெளதம் மேனன் குறிப்பிட்டு இருக்கிறார்.

    'அச்சம் என்பது மடமையடா' படத்தின் இடையே தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பே பாக்கி இருக்கிறது. இதனால் இரண்டு படத்தையும் விரைவில் முடித்து வெளியிடு முனைப்பில் இருக்கிறார் கெளதம் மேனன்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  5. #64
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Gautham is the ideal teacher for any actor: Manjima Mohan

    Manjima Mohan, who is being launched by Gautham Vasudev Menon in his upcoming bilingual film Achcham Yenbadhu Madamaiyada (AYM), starring STR in the lead, couldn’t have asked for a better debut. With acclaimed cinematographer Vipin Mohan being her father, she is no stranger to films. Movies were always on her mind, even as a child artiste. She says, “I started my acting career knowing nothing. Director Vineeth Srinivasan had sent Gautham sir the trailer of Oru Vadakkan Selfie. When he called me up afterwards, I was speechless. I auditioned for the role and was eventually selected.”

    The doe-eyed beauty couldn’t stop talking about the ace director. “Gautham sir helped me a lot. In fact, I have always wanted to work with him. Initially, I was nervous, but he made me feel comfortable. He’s fun to be with, gives space to actors and pushes them to do better. One of the best things about him is that he’s calm and patient. I’ve never seen him yell at anybody. I’d say he’s an ideal teacher for any actor. I count myself lucky because I know this opportunity is something quite big, which everyone would ask for. Given a chance, I’d love to work with him once again,” she says.

    She was all praise for the cast, which includes Simbu. “He’s a natural performer and working with him has been a great experience. He taught me how to improvise on the scenes. When we started shooting, we never got to talk. All we shared was a formal relationship. Now, we both actually chill together! He is an amazing human being.” Interestingly, Manjima says she chooses her project based on the filmmakers. “To me, they are important more than the lead actors,” she chuckles.

    Like most of Gautham’s films, AYM is rooted in love, adds Manjima, but quickly adds — “This film will be more than the usual Gautham Menon outing. There’s action, romance, and drama.” Quiz her about her character in the film, and she answers, “I play a girl-next-door. But there’s something special about her — because the way she talks and behaves, makes guys easily fall for her. It’s completely opposite to what I played in Oru Vadakkan Selfie.”

    What’s next, we ask? “I am open to all industries —Telugu, Tamil or Malayalam. I am playing the female lead in director SR Prabhakaran’s next film featuring Vikram Prabhu. I liked the story and chose to be a part of the film after listening to the first half itself! Though I have been getting more offers, I am waiting for AYM to be released because I want to know how the audience receives me before deciding my next venture,” she concludes.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  6. #65
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    படப்பிடிப்பில் பங்கேற்க கெளதம் மேனனுக்கு சிம்பு தரப்பு நிபந்தனை



    'அச்சம் என்பது மடமையடா' படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து நிலுவை சம்பளத் தொகையைக் கொடுத்தால் இதர காட்சிகள் படப்பிடிப்பு என சிம்பு தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது.

    கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஒன்றாக எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் கெளதம் மேனன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது.

    'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு வருவதில்லை என்றும், அதனால் 'தள்ளிப் போகாதே' பாடல் இன்னும் படமாக்கப்படவில்லை என்று கெளதம் மேனன் தெரிவித்திருக்கிறார். இதனால் படக்குழு திட்டமிட்டப்படி இப்படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் 'தள்ளிப் போகாதே' பாடல் படமாக்காமல் வெளியிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றும் கெளதம் மேனன் குறிப்பிட்டு இருக்கிறார்.
    கெளதம் மேனனின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து சிம்பு தரப்பில் கேட்ட போது, "கெளதம் மேனனை மிகவும் மதிக்கிறார் சிம்பு. அதில் எந்தொரு மாற்று கருத்துமில்லை. ஆனால், தயாரிப்பு தரப்பில் இருந்து இன்னும் சம்பள பாக்கி இருக்கிறது. அதனைக் கொடுத்தால் இதர காட்சிகளை முடித்துக் கொடுத்துவிடுவார் சிம்பு.

    இதுவரை சம்பளம் இல்லாமல் கிட்டதட்ட முழுமையாக முடித்துக் கொடுத்திருக்கிறேன். அனைவருக்குமே பணம் என்பது மிகவும் முக்கியம். கெளதம் மேனனின் பேட்டிக்கு சிம்பு மிகவும் வருந்தினார். ஆனால், அது குறித்து எந்தொரு கருத்தும் தெரிவிக்க அவர் விரும்பவில்லை" என்று தெரிவித்தார்கள்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  7. #66
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    கௌதம், சிம்பு - அப்படி இவங்களுக்குள் என்னதான் சண்டை?

    கௌதம், சிம்பு கருத்து வேறுபாடு அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்ப் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்தாமல் தெலுங்கு பாடல் வெளியீட்டை பிரமாதப்படுத்தியுள்ளார் கௌதம்.




    கௌதமின் கஷ்ட நேரத்தில் தோள் கொடுத்தவர் சிம்பு. ஆனால், அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பில் கௌதமுக்கு தேவையில்லாமல் குடைச்சல் கொடுத்து வந்திருக்கிறார். தள்ளிப் போகாதே பாடலை படமாக்க அவர் எந்த ஒத்துழைப்பும் தரவில்லை என கூறப்படுகிறது.

    சிம்பு தரப்போ, சம்பளம் தந்தால் பாடலில் நடித்து தரலாம் என்கிறது. இந்நிலையில் இந்த பஞ்சாயத்து தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் கதவுகளை தட்டியுள்ளது.

    சிம்பு படத்தை இயக்கிக் கொண்டே தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை கௌதம் இயக்குவதே இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.
    Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam

  8. #67
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Running 🏃 time ⌚ is the plus, STR need to reduce @least 20 kg...

  9. #68
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by balaajee View Post
    Running �� time ⌚ is the plus, STR need to reduce @least 20 kg...
    lol ....
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

Page 7 of 7 FirstFirst ... 567

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •