Page 278 of 402 FirstFirst ... 178228268276277278279280288328378 ... LastLast
Results 2,771 to 2,780 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

  1. #2771
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    மதுரை சென்ட்ரல் அரங்கில் நம் மக்கள் திலகத்தின் வெற்றிக்காவியம் "நம் நாடு" திரையிடப்பட்டு வசூல் மழை பொழிந்து வருகிறது. குறுகிய இடைவெளியில், பல முறை திரையிடப்பட்ட இந்த காவியம் 05-06-15 வெள்ளிக்கிழமை முதல் நாள் வசூலித்த தொகை ரூபாய் 17,800/-.

    07-06-15 ஞாயிறு அன்று மாலைக்காட்சியில் 20 ரூபாய் நுழைவு சீட்டில் 360 நபர்களும், 30 ரூபாய் நுழைவு சீட்டில் 260 நபர்களும், கண்டு களித்தனர்.


    இதே ரீதியில், சென்றால், மதுரை மாநகரில் சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ் திரை காவியங்களில் " அடிமைப்பெண்" நிகழ்த்திய சாதனையை "நம் நாடு" காவியமும் எட்டலாம். என்று கருதப்படுகிறது.

    மதுரை மாநகர் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும், வசூல் சாதனை என்றால், அது நம் பொன்மனச்செம்மல் நடித்த காவியங்களால் மட்டுமே முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. !

  2. Thanks Russellrqe thanked for this post
    Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2772
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by saileshbasu View Post
    நாங்கள் என்ன தவறு செய்தோம்?

    தலைவர் ஆட்சியில் நடந்த சாதனைகளை பட்டியலிட்டு "இது தவறா" "இது தவறா" என்று கேட்டது மக்கள் மததியில் நல்ல அதிர்வுகளை என்படுத்தியது. தமிழ் மக்களே நாடாளுமன்றத் தேர்வில் நீங்கள் அளித்த தீர்ப்பு தவறு என்றல், அதை இப்போது திருத்தி எழுதுங்கள்.

    முடிவு: தீ.மு.க 38 காங்கிரஸ் 30 முச்லிம் லீகுக்கு ஒரு இடம்!

    ஆதிமுக வெற்றிக்கு தலைவர் மீது மக்கள் கொண்டுள்ள அன்பிற்கும், மதிர்ப்புக்கும் அடையாளமாகும். அவரது நாணயமான, நேர்மையான, லஞ்ச உழலற்ற ஆட்சிக்கு மக்கள் வழங்கிய நர்சான்றிதழ். மக்கள் திலகத்தை பற்றி "எங்களுக்கு தெரியும்" என்று தமிழ் மக்கள் கூறுவது போல அமைந்தது தேர்தல் முடிவு. எதிர்கட்சிகள் மற்றும் அவர்களது அபாண்டமான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தோல்வி அடைந்தது.

    இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
    எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
    பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி......


    1980ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், சட்டமன்றத்தை கலைத்த பல மாநிலங்களில், தமிழகத்தில் மட்டுமே நம் பொன்மனச்செம்மல், அமோக வெற்றி பெற்று, மீண்டும் முதல்வரானார். இந்திரா காந்தி அவர்களின் தமிழக சட்டப்பேரவை கலைப்பு முடிவு சரியல்ல என்று மக்கள் தீர்ப்பு வழங்கி, நம் இதய தெய்வம் புரட்சித்தலைவரின் தலைமையில் நம்பிக்கை வைத்து அவருக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தனர்.

    இந்திய துணைக்கண்டம் முழுவதற்கும் அப்போதுதான் புரிந்தது மக்கள் திலகத்தின் மகத்தான சக்தியும், அசைக்க முடியாத மாபெரும் மக்கள் செல்வாக்கும்.


    வரலாற்று நிகழ்வுகளை நினைவுபடுத்தி செய்திகள் பதித்த சகோதரர்கள் திரு. சைலேஷ் பாசு, திரு. வினோத் மற்றும் திரு. வரதகுமார் சுந்தராமன் ஆகியோருக்கு நன்றி !

  5. Thanks Russellrqe thanked for this post
    Likes ainefal liked this post
  6. #2773
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    தேர்தலில் சாதனை படைத்த எம்.ஜி.ஆர்

    வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்- அதை
    வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்

    என்று தன் ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் தனது வெற்றியைக் காணிக்கையாக்கிய எம்ஜிஆரின் தேர்தல் வரலாறு சுவையானது.

    முதன்முதலாக அவர் மக்களை கடந்த 1962ல் திமுக கட்சியின் சார்பில் சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் திமுக தலைவர் அண்ணா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1967ல் பரங்கிமலைத் தொகுதியில் வேட்பாளர் ஆனார்.

    அந்த ஆண்டு அக்டோபர் 12ம் தேதி அன்று மாலை ஐந்தரை மணியளவில் பிரச்சாரத்திற்குக் கிளம்பிகொண்டிருந்த எம்ஜிஆரைச் சந்தித்த எம்.ஆர். ராதா அவரைத் துப்பாக்கியால் சுட்டார். கழுத்தில் கட்டுப்போட்ட எம்ஜிஆரின் சுவரொட்டிகள் திமுகவுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.

    1972ம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கி ஆறே மாதத்தில் திண்டுக்கல் இடைத்தேர்தல் வந்தது. அங்கு நிறுத்தப்பட்ட மாயத்தேவர் அமோக வெற்றிபெற்றார்.

    அதிமுகவை எதிர்த்து நின்று நான்கு முக்கிய கட்சிகளும் டெபாசிட்டை இழந்தன. எம்ஜிஆர் மத்திய அரசோடு இணக்கமாக இருக்க விரும்பி இந்திரா காங்கிரசுடன் கூட்டுச்சேரும்போது நாடாளுமன்றத்துக்கு 2:1 என்று தொகுதிப் பங்கீடு செய்வார்.

    இதுவே சட்டமன்றத்தேர்தல் என்றால் தமக்கு இரண்டு பங்கும் கூட்டணிக் கட்சிக்கு ஒரு பங்கும் பிரித்துக்கொள்வார். தனது வெற்றி பெரும்பான்மையான வெற்றியாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.

    கிறிஸ்தவ மதம் வலுவாக இருக்கும் சாத்தான் குளத்திலும், இசுலாமியர் நின்றால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று கருதப்படும் வாணியம்பாடியிலும் இந்து வேட்பாளரை நிறுத்தி தனது செல்வாக்கால் வெற்றிப்பெறச் செய்வார். 1985ல் அவர் அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்.

    தொடர்ந்து மூன்றுமுறை சட்டசபை தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று தன் ஆயுட்காலம் வரை முதலமைச்சராக இருந்தவர் இவர் ஒருவரேயாவார்.
    1980 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள், சாதகமாக அமையாததால், நம் புரட்சித்தலைவர் அவர்கள் தோற்றுவித்த பேரியக்கமாம் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, நாஞ்சில் மனோகரன், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி ஜெகதீசன், பி. டி. சரஸ்வதி, பி. சவுந்திர பாண்டியன், எட்மண்ட் போன்றோர் விலகினர். நம் புரட்சித்தலைவருக்கு துரோகம் செய்தவர்கள் வெட்கப்படும்படி மக்கள் சரியான தீர்ப்பினை 1980 சட்டமன்ற தேர்தல் மூலம் வழங்கினர்.

    நம் புரட்சித்தலைவரின் புகழுக்கு களங்கம் கற்பிப்போரையும், அவரது செல்வாக்கை குறைக்க முயற்சிப்பவர்களையும் எந்த காலத்திலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை !

    Last edited by makkal thilagam mgr; 9th June 2015 at 07:45 PM.

  7. Thanks Russellrqe thanked for this post
  8. #2774
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    MGR's election speech in 1980.


  9. Likes Russellrqe liked this post
  10. #2775
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திருநெல்வேலி என்றதும் பெரும்பாலனவர்களுக்கு '' அல்வா '' நினைவு வரும் .சிலருக்கு நெல்லை
    மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருத்தலங்கள் நினைவிற்கு வரும் .

    என்னை பொருத்தவரை நெல்லை என்றதும் நினைவிற்கு வருவது மக்கள திலகம் எம்ஜிஆர் அவர்களின் உரிமைக்குரல் வெள்ளிவிழா - நெல்லை லக்ஷ்மியில் கொண்டாடியதும் , உலகம் சுற்றும் வாலிபன் , நேற்று இன்று நாளை நூறு நாட்களை கடந்து வெற்றி பெற்றதும் , எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள் நிறைந்த நெல்லை மாவட்டம் மற்றும் அரசியல் களத்தில் 1977 பாராளுமன்ற
    தேர்தலில் ஆலடி அருணா வெற்றியும் , 1977,1980, 1984 மூன்று முறை நடந்த சட்டசபை தேர்தலில்
    அதிமுக பெரும்பாலான கைப்பற்றியதும் நினைவிற்கு வருகிறது .
    மக்கள் திலகத்தின் அதிமுக இயக்கம் 1991.2001,2011 ல் நடந்த சட்ட சபை தேர்தலிலும் , 2014 பாராளுமன்ற தேர்தலிலும் மாபெரும் வெற்றிகளை கண்டது .

    இன்னும் பல பெருமைகளை மக்கள் திலகத்திற்கு வழங்கிய நெல்லை பூமி பற்றி தகவல்கள் இருந்தால் நண்பர்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாம் .



  11. Likes ainefal liked this post
  12. #2776
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    AWAITING EAGARLY OUR PAMMALAR'S MALAR MALAI -2 AT THE EARLIEST.

  13. Likes ainefal liked this post
  14. #2777
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் …

    அன்பே வா திரைப்படத்தில் அனைத்துப்பாடல்களும் அற்புத வகையைச் சார்ந்தவை. மெல்லிசை மன்னரும் கவிஞர் வாலியும் இணைந்து தந்த இன்ப நாதங்கள்! ஏவிஎம் தயாரிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் ஒரு காதல் கதை சுகமாக பின்னப்பட்டிருக்க, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் அபிநய சரஸ்வதி சரோஜா தேவியும் இணைந்து நடித்த இன்னொரு காவியம். அலுப்பில்லாமல் ஒரு திரைப்படம் பார்க்க வேண்டுமெனில் அன்பே வா என்று அடித்துச் சொல்லலாம்! கண்ணைக் கவரும் அழகு எண்ணம் முழுவதையும் கொள்ளையடித்துவிடும்! நகைச்சுவைப் பகுதியை நாகேஷும் மனோரமா ஆச்சியும் கொட்டிக் குவித்திருக்கிறார்கள்.

    அன்பில் உயிர்க்கும் காதல் இன்பம் தருவது சரிதான்… ஆனால், ஒருவரையொருவர் புரிதல் அடிப்படையாக வேண்டுமன்றோ? இங்கே இவர்தம் புரிதல் இணைந்து நடக்கத் தவற … ஒருவர் புரிந்துகொள்ளும்போது மற்றொருவர் புரிந்துகொள்ளத் தவறுகிறார். இதுதான் கதையின் போக்காக… அதிலே வரும் பாடல்கள் பொழியும் தேனாக… டி. எம். சௌந்தரராஜன் அவர்களுடன் பி.சுசீலா குரல்கள் இணைய இனிய பாடல் ஒலிக்கிறது.

    நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
    நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
    நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத்தான் ஒரு
    கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

    பாடலின் காட்சி அமைப்பும்… ஈர்க்கும் இருவர் நடிப்பும்… இன்னும் இன்னும் இந்தப் பாடலை நமக்கு சொந்தம் செய்யச் செய்கிறது. திரைப்படத்திற்காக எழுதப்பட்டு இருந்தாலும்… அட… கவிஞன் எழுதிய ஒரு கவிதை இசையைப் பெற்றது போலிருக்க… இயல்பான வார்த்தைகள் அரங்கேறுகின்ற அழகுதான் வாலி அவர்களின் கைவண்ணம் காட்டுகிறது.

    ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
    அவள் தான் சொல்லத் துடித்தாள்
    உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
    கண்ணால் சொல்லி முடித்தாள்

    காதல் கொண்ட உள்ளங்கள் அனைத்திற்கும் பொருந்தும் கவிதைதான்… இன்பத்தேர் இதயம் நோக்கி நகர்வதைப்போல் ஒரு பாடல் பதிவாகி நம் மனதில் பதிந்திருக்கிறது. புரட்சித் தலைவரின் பாடல்கள் வெற்றியின் விளிம்பைத் தொடுபவை என்பதற்கு இந்தப் பாடலும் சத்திய சாட்சியாய்…

    courtesy -
    கவிஞர் காவிரிமைந்தன்.

  15. #2778
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  16. #2779
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என் இருபதாண்டு கால நண்பர்: கருணாநிதியை வாழ்த்தும் எம்.ஜி. ஆர்

    தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் இருபதாண்டுகளாகத் தொடர்புண்டு. அப்போது நான் கோவையிலே இருந்தேன். ஊருக்குள் பிளேக் என்ற நோய் பரவிக்கொண்டிருந்த காரணத்தால் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டுக் கலைஞர் என் வீட்டில் வந்து தங்கினார். என் வீடு என்றால் அப்போது 12 ரூபாய் வாடகை வீடுதான். இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும், நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன்.
    அப்போதெல்லாம் அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். ஆனால் நிலைமை எப்படி ஆயிற்று? நான் அவர் பக்கம் தான் ஈர்க்கப்பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும், நான் கழகத்தின் பொருளாளராகவும் இருக்கும் நிலைமைக்கு அந்த ஈர்ப்பு நடைபெற்றுள்ளது.
    கலைஞர் அவர்கள் இன்று முதல்வராக இருக்கிறார் என்பதால்தான் அவருக்குப் பெருமையும் புகழும் என்று யாராவது நினைத்தால் அது மாபெரும் தவறாகும். இந்தப் பதவிகளெல்லாம் அவரைத் தேடி வந்து அமைவதற்கு முன்பே பேருக்கும் புகழுக்கும் உரியவராக இருப்பவர் கலைஞர்.
    கோவையில் இருந்தபோது பல்லாண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரி, அபிமன்யு என்ற படங்களுக்கெல்லாம் கலைஞர் உரையாடல்களை எழுதினார். அந்தப் படங்களில் அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை. இப்படி பிரபலப்படுத்தப்படவில்லையே என்பதற்காக அவர் தம்முடைய உழைப்பை திறமையை காட்டாமல் இருந்ததில்லை. சலியாது உழைத்தார். தன் பெயர் வரவில்லை என்றாலும் தன் கருத்து வந்திருக்கிறது என்கிற திருப்தியில் உழைத்தார்.

    அதுவும் கொள்கைப் பிடிப்புள்ள தம் கருத்துக்களை படத்தில் அவர் நுழைக்கத் தவறியதே இல்லை. தனக்கென ஒரு கொள்கை தனக்கென ஒரு தலைவன் என்று வகுத்துக்கொண்டு பற்றோடும், பிடிப்போடும் அயராது உழைத்து வந்தவர் கலைஞர்.
    கொள்கைப் பிடிப்புக் காரணமாகச் சமயம் வரும்போது அண்ணாவுடனும் சரி, என்னுடனும் சரி, கலைஞர் வாதிடுவதற்கு ஒருபோதுமே தயங்கியதில்லை. அதேபோல கழகத்துக்கு ஒரு கேடு வருகிறது என்றால் தன் உயிரைக்கூட மதிக்காமல் முனைந்து பாடுபடுவதில் அவருக்கு இணையான செயலாற்றல் யாருக்கும் இருந்திருக்க முடியாது.
    ஒருதடவை பாண்டிச்சேரியில் அவர் சுயமரியாதை இயக்கத்தில் பிரச்சாரத்திற்காகச் சென்றிருந்தபோது அவரை தெருவில் தள்ளி அடித்து சாக்கடையில் வீசிவிட்டுப் போனார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட எழுந்து போய் ஒரு வீட்டுக்குள் நுழைந்தபோது அந்த வீட்டுக்குள் சீட்டாடிக் கொண்டிருந்தவர்கள் யார் தெரியுமா?

    அவரை அடிப்பதற்கு யார் ஆட்களை அனுப்பினார்களோ அவர்களே உள்ளே இருந்தார்கள். அங்கிருந்து தப்புவதற்கு அவர் எப்பாடு பட்டிருப்பார் என்பதை விளக்க வேண்டியதில்லை.
    இப்படியெல்லாம் அடிபட்டுத் தொல்லைகள் மிகத் தாங்கியவர் கலைஞர். கல்லக்குடி போராட்டத்தில் உயிரை வெல்லமாக நினைக்காமல் தண்டவாளத்தில் முதலில் படுத்தவர் கலைஞர்.
    இந்தத் தியாகம் மிகுந்த அனுபவங்களை எல்லாம் பெறும்போது அவர் இப்படி ஒருநாள் தமிழகத்தின் முதல்வராக ஆகப் போகிறோம் என்று அப்படியெல்லாம் தொல்லைப்பட்டவரல்ல.

    தமிழ் காக்க வேண்டும்; தமிழ்மானம் காக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் பல்லாண்டு காலம் ஓயாது உழைத்துச் செய்த தியாகத்தின் பலனாக இன்று அவரைத்தேடிப் பதவி கிடைத்திருக்கிறது.
    சிலருக்குப் பதவி கிடைத்தால் நாடு குட்டிச்சுவராகிவிடுகிறது. ஆனால் நமது கலைஞருக்கு பதவி கிடைத்ததால் நாடு வாழ்கிறது. ஏழை எளியவரின் நம்பிக்கை எல்லாம் அவரது விழிகளை நோக்கி உயர்கின்றன.
    கலைஞர் பெற்றுள்ள நல்ல அனுபவம், திறமை, செயலாற்றல், அறிவுணர்வுகள் எல்லாம் இந்தத் தமிழ் மண் நலம் பெறும்படி பரிமளிக்கின்றன.
    திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், தமிழகத்தின் முதலமைச்சர் ஆகிய இந்த இரண்டு பெரிய பொறுப்புகளையும் வகித்து வரும் கலைஞர் அவர்கள் எத்துறையில் திரும்பினாலும் அத்துறை சிறப்படைகிறது. எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்குகிறார் அவர்.
    கட்சியின் ஒவ்வொரு தொண்டனையும் தலைவனையும் நன்றாகப் புரிந்து வைத்துக்கொண்டு அவர் கழகத்தைச் சீராக நடத்திச் செல்கிறார்.
    தமிழகத்தின் முதல்வர் என்னும் முறையில் நல்ல நிர்வாகத் திறமையோடு கட்சிப் பாகுபாடு இல்லாமல் அரசாங்கத்தை நடத்திச் செல்கிறார் கலைஞர். எல்லாத் தரப்பினருக்கும் தேவையான நன்மைகளை உரிய நேரத்தில் செய்து வரும் ஒரே முதல்வர் கலைஞர் அவர்கள்தான்.
    எந்தக்கட்சியிலும் காணக் கிடைக்காத அருங்குணங்களைப் பெற்ற முதல்வர் கலைஞர் அவர்கள் அவரது அறிவாற்றலுக்கும் நல்ல பண்பாட்டுக்கும் அவருக்கு இப்போதுள்ள முதல்வர் பதவி மட்டும் போதாது. இன்னும் உயரிய பதவிகள் எல்லாம் அவரைத் தேடி வரும் காலம் விரைவில் வந்தே தீரும்.

    - எம்.ஜி.ஆர்
    (1971 ஆம் ஆண்டு பரங்கிமலைத்தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியது)
    Source : http://www.vikatan.com/news/article.php?aid=47426

  17. #2780
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •