Page 274 of 402 FirstFirst ... 174224264272273274275276284324374 ... LastLast
Results 2,731 to 2,740 of 4013

Thread: Makkal Thilakam MGR -PART 15

  1. #2731
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்துலக எம். ஜி.ஆர். பொது நல சங்கத்தின் துணைத்தலைவரும், ஒய்வு பெற்ற முன்னாள் குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளருமான திரு. எஸ். எம். மனோகரன் அவர்களின் மகன் திரு. செந்தில்குமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சியினையொட்டி

    அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சார்பில், நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள், மணமக்களை வாழ்த்தும் தோற்றத்துடன் வைக்கப்பட்டிப்ருந்த மிகப்பெரிய பதாகை.




    மணமக்களை வாழ்த்த வந்திருந்த, பொன்மனசெம்மல் எம். ஜி. ஆர். பக்தர்களும், ரசிகர்களும்.




  2. Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2732
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டான் தங்கமணி அரங்கில், மறு வெளியீட்டில் வெள்ளிவிழா கண்டு உலக சாதனை படைத்த நம் பொன்மனச்செம்மலின் வெற்றிக்காவியம் "ஆயிரத்தில் ஒருவன்", ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. அது குறித்த விளம்பரங்கள் :








    புகைப்படம் எடுத்து அனுப்பியவர் : சகோதரர் திரு. வேலூர் இராமமூர்த்தி அவர்கள்.
    Last edited by makkal thilagam mgr; 7th June 2015 at 12:07 PM.

  5. Likes ainefal liked this post
  6. #2733
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like

  7. Likes ainefal liked this post
  8. #2734
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2735
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1954ல் மலைக்கள்ளன் படம் பிரமாதமாக ஓடி, எம்ஜிஆருக்கு வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டப்பெயரும் ஒட்டிகொண்டது .
    1977 ல் அவர் திரை உலகை விட்டு விலகும் வரை வசூல் மன்னனாகவே விளங்கினார் .அதற்கு பின்னரும் அவருடைய
    பழைய படங்கள் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டு வருகிறது . அநேகமாக 38 வருடங்களாக தொடர்ந்து எம்ஜிஆர் படங்கள்
    தமிழகத்தில் ஓடிக்கொண்டு வருவது மிகப்பெரிய சாதனையாகும் .

    நன்றி - ஹரீஷ் - முகநூல்

  10. #2736
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    கோட்டையை பிடித்தது ' கோடம்பாக்கம் ' !

    இத்தனை அரசியல் பரபரப்புக்கு மத்தியிலும், 1977ல் தனது 136வது படமான ' மதுரை

    மீட்ட சுந்தர பாண்டியன்' படத்தில் நடித்து வந்தார் எம்ஜிஆர். அப்படத்தில்" தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை.." என்று பிரகடனப்படுத்தியபடி ஒரு பாடல்.

    அதில்:

    " ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்

    உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

    கோட்டையிலே நமது கொடி பறந்திடவேண்டும்

    கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்.

    புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்

    வீரமுண்டு வெற்றி உண்டு ; விளையாடும் களமும் உண்டு

    வா.. வா.. என் தோழா ! "

    - தலைவன் சொன்னதெல்லாம் வேத வாக்காக போற்றிக் கொண்டிருந்த அதிமுக கட்சி தொண்டர்களுக்கு, ரசிகர்களுக்கு இது போதாதா ! இதை விட வேறென்ன அழைப்பு வேண்டியிருக்கப் போகிறது ?

  11. #2737
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1977 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, 200 இடங்களில் நின்று 130 தொகுதிகளில் வென்று தனி மெஜாரிட்டியுடன் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. திமுகவோ வெறும் 48 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் 27 இடங்களுடனும், ஜனதா 10 இடங்களுடனும் திருப்திபட்டு கொள்ள வேண்டியதாயிற்று. அருப்புக்கோட்டைத் தொகுதியில் எம்ஜிஆர், சுமார் 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்.

    அரசியல் சட்டம் இடம் கொடுக்காது என்பதால், தனது கடைசிப் படமாக 'மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்' படத்தை முடித்து கொடுத்து விட்டு 30-6-1977 அன்று எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

    உலக வரலாற்றிலேயே, ஒரு சாதாரண சினிமா நடிகர் சொந்தமாக அரசியல் கட்சி ஆரம்பித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்த முதலாமவர் என்ற சாதனையோடு கோட்டைக்குள் நுழைந்தார் எம்ஜிஆர்.

    எந்த சினிமாவில் துக்கடா வேடத்திற்கு கூட வாய்ப்புக் கிடைக்காமல் ஸ்டுடியோ

    வாசல்களில் தவம் கிடந்தாரோ, அதே சினிமாவை தனது சாதுர்யத்தால் தன்வசமாக்கி அதன் மூலமாக புனித ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே புகுந்தார் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன்.

    ஆம். ஒரு நாடோடி, மன்னன் ஆனார் !

    'வேஷதாரி' என்று மட்டம் தட்டியவர்களையும், 'அரிதாரம் பூசிகிறவனெல்லாம் அரசாள முடியுமா' என்று நக்கலாக கேட்டவர்களையும் ' கோட்டையிலே இனிமேல் கூத்தாட்டம் தான் நடக்கும்' என்று கிண்டலடித்தவர்களையெல்லாம் வாயடைக்க செய்யும் விதத்தில் மக்கள் ஆதரவுடன் 1977ல் ஆரம்பித்து 87ல் மரணமடையும் வரை மொத்தம் 10 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 25 நாட்கள் தமிழகத்தின் முதலமைச்சராக முத்திரைப் பதித்தார்.

    பாலிடிக்ஸில் பயாஸ்கோப்புக்கு தனிப் பெரும் அந்தஸ்தையும் மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்த மக்கள் திலகம் 24-12-1987ல் மண்ணுலகை விட்டு மறைந்தார், தமிழக அரசியலிலும், சினிமாவிலும் மட்டுமின்றி ஏழை எளிய மக்களின் மனதிலும் நிரந்திரமாகத் தங்கி விட்டு.
    courtesy - net

  12. #2738
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் டாக்கியில் முதன்முதலாக திமுக கொடியை பகிரங்கமாக 'நாடோடி மன்னன்' படம் வாயிலாக காண்பித்தார் எம்.ஜி.ஆர். படத்தின் டைட்டிலில் கறுப்பு- சிவப்பு கொடியுடன் ' எம்ஜியார் பிக்சர்ஸ்' என்ற பேனரை திரையில் கண்ட திமுக கட்சியினருக்கு குறிப்பாக ரசிகர்களுக்கு பீறிட்டுப் பொங்கிய உணர்வை- உற்சாகத்தை இங்கு எழுத்தில் கொண்டு வர முயல்வது அத்தனை சுலபமில்லை.

    வீராங்கன் என்ற பெயரில் நாடோடியாக அதாவது புரட்சி வீரனாக வரும் எம்.ஜி.ஆரின் கொள்கைச் சிறப்பை அறிந்த பிறகு , மன்னன் எம்.ஜி.ஆரின் மனைவி சொல்வாள்:

    "அண்ணா.. நீங்கள் தான் அரசாள வர வேண்டும்"

    "எனக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால் நிலமற்றோருக்கு நிலமளிக்கப்பட்டு உழவுக்கு ஊக்கமளித்து உணவு உற்பத்தி பெருக்கப்படும். தொழிலுக்கும் ஊக்கமும் மானியமும் தரப்படும். பெண்கள் முன்னேற அவர்களுக்கு சுயதொழில் செய்ய அரசு உதவி செய்யும். அநியாய வரிகள் இருக்காது..."

    -என்ற ரீதியில் எதிர்கால செயற் திட்டங்களை அடுக்குவார் 'நாடோடி' எம்.ஜி.ஆர்.

    இன்னொரு காட்சியில் மார்த்தாண்டன் என்ற பெயரில் வரும் 'மன்னன்' எம்.ஜி.ஆருக்கும் 'நாடோடி' எம்.ஜி.ஆருக்கும் நேருக்கு நேர் நடக்கும் உரையாடல்:

    மன்னன்: "எதற்காகப் புரட்சி ? யாரை எதிர்த்து?"

    நாடோடி: " உங்கள் ஆட்சியை எதிர்த்து. சர்வாதிகார முறையை ஒழிக்க.

    எங்கள் லட்சியம் ஆளை ஒழிப்பதல்ல. மக்களாட்சியை

    ஏற்படுத்துவது."

    மன்னன்: " ஏன் நானும் மக்களில் ஒருவன் தானே. நானே ஆண்டாலென்ன?

    நாடோடி : " நீங்கள் மக்களில் ஒருவர் தான். ஆனால் மக்களின் நிலையை

    அறியாதவர். அவர்களின் நிலை உணர்ந்த ஒரு ஏழை தான்

    நாட்டை ஆளவேண்டும்."

    மன்னன்: " ஆட்சி பற்றி உனக்கென்ன தெரியும்? "

    நாடோடி : " நீங்கள் மாளிகையில் இருந்து கீழே மக்களை பார்க்கிறீர்கள்.

    ஆனால் நான் மக்களில் ஒருவனாக இருந்து மாளிகையை

    பார்க்கிறவன். மக்களின் துயரமும் தேவைகளும் எனக்கு

    நன்றாக தெரியும்"

    - இந்த காட்சியில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சி மன்னன் மார்த்தாண்டனாகவும்,

    நாடோடி வீராங்கன் திமுகவின் பிரதிநிதியாகவும் உணரப்பட்டது கழகக் கண்மணிகளால்.

    அதே படத்தில் மற்றொரு கட்டத்தில் , தனக்கு பதிலாக அரசை சில நாட்கள் ஆள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் மன்னனிடம் நாடோடி சொல்வார்:

    " பதவியில் அமருவது எனக்கு நோக்கமில்லை என்றாலும் மக்களுக்கு நன்மை கிடைக்குமென்பதால் ஒப்புக் கொள்கிறேன். நான் மக்களுக்காக செய்ய விரும்பும் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் எனக்கு அளிக்கப்பட வேண்டும். அதிகாரமில்லாத அரசாட்சியை நான் விரும்ப மாட்டேன் "

    அதே படத்தில் வரும் ''காடு வெளஞ்சென்ன மச்சான் ..." எனத் தொடங்கும் பாடலில்,

    " இப்போ- காடு வெளயட்டும் பொண்ணே

    நமக்கு காலமிருக்குது பின்னே.

    நாளை போடப் போறேன் சட்டம் - பொதுவில்

    நன்மைப் புரிந்திடும் திட்டம்.

    நாடு நலம் பெறும் திட்டம். "

    இவ்வாறாக , எம்.ஜி.ஆர். தனது வருங்கால இலக்கை கோடிட்டு காண்பிக்கிறாரா அல்லது தான் சார்ந்திருந்த திமுகவையும் அதன் தலைவரையும் உயர்த்திப் பிடிக்கிறாரா என்று கணிக்க முடியாதபடிக்கு ஒருவித கெட்டிக்காரத்தனம், இப்படம் முழுவதும்வியாபித்திருந்தது.

  13. #2739
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thaaru Maaru Song from the upcoming STR movie "Vaalu" features the Super Stars of Tamil Cinema.. Starting from Honorable makkal Thilagam MGR (our Vaathiyaar), Rajnikanth, Ajith and STR...Watch between 0.17 to 1.11


  14. Thanks ainefal thanked for this post
  15. #2740
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    Fwd by Mr.R.Saravanan, Madurai
    Last edited by ravichandrran; 7th June 2015 at 08:02 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •