Results 1 to 10 of 896

Thread: Thala Ajith's 56th Film-Vedhalam-Veeram Siva-AMRathnam - Anirudh - Winning combo

Threaded View

  1. #11
    Member Devoted Hubber maniram_1234's Avatar
    Join Date
    Nov 2009
    Location
    chennai
    Posts
    30
    Post Thanks / Like
    பெரிய ஹீரோ, எந்தவித வித்யாசமும் இல்லாத கமர்ஷியல் கதை எனும் போது தடுமாறும் பல இயக்குனர்களுக்கு மத்தியில் சிவா தன்னால் முடிந்தவரை ஒரு பொழுதுபோக்கு சினிமாவை தர முயன்றிருக்கிறார்.

    பணத்திற்க்காக எதை வேண்டுமானாலும் செய்யும் ரவுடி கணேஷ் என்கிற வேதாளம். தன் உயிரைக் காப்பாற்றிய உடன் பிறவா தங்கையின் பாசத்தினால் அவரைக் கொல்ல முயற்சித்த ரவுடிகளை பழிவாங்கும் மிகவும் எளிதான பழகிய கதைதான் வேதாளம்.

    படத்தை முதல் ப்ரேம் முதல் கடைசி ப்ரேம் வரை தாங்கி செல்லும் ஒரே நபர் அஜித் தான். முதல் பாதியில் தங்கையை காப்பாற்றும் அண்ணன் பிற்ப்பாதியில் ரவுடி என இரு கேரக்டர்களையும் அசால்டாக செய்திருக்கிறார்.

    முதல் பாதியில் தெறிக்கவிடலாமா என சாதாரண டாக்ஸி ட்ரைவராக இருந்தவர் மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுக்கும் சீன், இண்டர்வெல் சீக்வன்ஸ், இரண்டாம் பாதியில் தங்கையை வில்லன்களிடமிருந்து காபாற்றும் சீன், க்ளைமேக்ஸ் ஆகியவற்றில் அஜித்தின் நடிப்பும் ஸ்கிரீன் பிரசன்ஸ்ஸிம் ஒவ்வொரு அஜித் ரசிகர்களுக்கும் தீபாவளி விருந்து. அதுபோக ஆலுமா டோலுமா, வீர விநாயகா பாடல்கள் மற்றும் காமடி சீன்கள் என அசத்தியிருக்கிறார். A complete mass performance by Ajith!

    ஒரே ஒரு பாடலுக்கு வந்து போகிறார் ஸ்ருதிஹாசன். லட்சுமிமேனனுக்கு அஜித்தின் தங்கையாக நல்ல பாத்திரம். சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற துனை நடிகர்கள் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை.

    படத்தின் மற்றுமொரு பலம் அனிருத்தின் இசை. ஒரு மாஸ் ஹீரோவின் ரசிகர்கள் எதை எதிர்பார்ப்பார்கள் என்பதை தெளிவாக புரிந்திருக்கிறார். முதல் பாதியில் வீர விநாயகா இரண்டாம் பாதியில் ஆலுமா டோலுமா பின் மாஸ் சீன்களுக்கு தெறி தீம் என உண்மையிலே தெறிக்கவிட்டிருக்கிறார்.

    இயக்குனர் சிவா, நிறைகளையும் குறைகளையும் சரி சமமாக தந்திருக்கிறார். இரண்டு மாஸ் பாடல்கள், அஜித் ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் நான்கு மாஸ் சீனகள், கவர்ச்சி ஆபாசம் இல்லாத ஜனரஞ்சகமான கதை என மாஸாக ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தை தர முயன்றிருக்கிறார். அதே நேரத்தில் பல லாஜிக் ஓட்டைகள், வலுவின்றி காமடியன்களாக தெரியும் வில்லன்கள், எல்லாருமே எளிதாக யூகிக்கும் திரைக்கதை, தேவையற்ற காமடிகள், ஓவர்டோசான சென்டிமென்ட் சீன்கள் என பல தவறுகளையும் செய்திருக்கிறார். திரைக்கதையிலும் லாஜிக்கிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் வேதாளம் நிச்சயம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் சினிமாவாக அமைந்திருக்கும்.

    லாஜிக் ஓட்டைகளை தவிர்த்து சினிமாவை ரசிக்கும் கமர்ஷியல் சினிமா ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் வேதாளத்தின் சிவா அஜித் அனிருத் கூட்டணி நிச்சயம் தீனி போடும். குறிப்பாக முதல் பாதியில் வரு தெறி தீம் சீனில் அஜித்தின் நடிப்பும் மிரட்டலும் மாஸ் சினிமாவின் உச்சகட்டம்!

    Vedalam – Though the film do not have engaging screen play, there are enough Mass scenes to thrill you!

    Rating – 2.75/5

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •