Page 7 of 11 FirstFirst ... 56789 ... LastLast
Results 61 to 70 of 107

Thread: Nammaipol Oruvan SIVAKARTHIKEYAN

  1. #61
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ஒளிக்கு பி.சி.ஸ்ரீராம், ஒலிக்கு ரசூல் பூக்குட்டி, ஒப்பனைக்கு வீட்டா... அசத்தும் சிவ கார்த்திகேயன்

    சிவ கார்த்திகேயனின் ஆரம்ப நாள்களில் அவருக்காக சினிமா கம்பெனிகளின் படியேறியவர், ஆர்.டி.ராஜா. சிவ கார்த்திகேயனின் படங்களை விளம்பரங்கள் மூலம் கடைசி ரசிகன்வரை கொண்டு சேர்த்ததில் ராஜாவின் பங்கு அதிகம்.

    அவரது தயாரிப்பில் புதிய படம் நடிக்கிறார் சிவ கார்த்திகேயன். தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், 24 ஏஎம் ஸ்டுடியோஸ். ராஜாவின் பெயரில் இருந்தாலும் இது சிவ கார்த்திகேயனின் சொந்த நிறுவனம் என்று கிசுகிசுக்கிறார்கள்.

    சுந்தர் சி., அட்லி போன்றவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். மிகப்பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது.

    ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம், ஒலியமைப்புக்கு ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டி, கலைக்கு டி.முத்துராஜ், இசைக்கு அனிருத் என்று தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படா படா ஆள்கள். ஒப்பனைக்கு ஐ யில் பணியாற்றிய வீட்டா ஷான் ஃபுட்டை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதேபோல் சண்டைக் காட்சிகளை அமைக்க வெளிநாட்டு கலைஞர்களை வரவைக்கிறார்கள்.

    நேற்று இந்தப் படத்தின் தொடக்க விழா நடந்தது. அப்போது பேசிய ராஜா, ஒரு படத்தின் உன்னதமான தொழில்நுட்ப கலைஞர் குழு படத்தின் வெற்றியை பெரிதளவு தீர்மானிக்கிறது. எனது முதல் படத்தில் இத்தகைய பிரசித்திப் பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிவது எனக்கு பெருமை.

    இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அவர் இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பு. இந்த படம் அவரது கலை பயணத்தில் ஒரு முக்கிய படமாக இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வைப் போலவே மற்ற நடிக நடிகையர் தேர்வும் மிக மிக பெரியதாக இருக்கும். காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை என்றார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #62
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திலும் அனிருத்! - VIKATAN

    ரஜினிமுருகன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படம் பற்றி பலவிதமான தகவல்கள் உலவிவந்தன. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்போது அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

    சிவகார்த்திகேயனின் அடுத்தபடத்தை அவருடைய நண்பரான ஆர்.டி.ராஜா, 24ஏஎம்ஸ்டுடியோஸ் என்கிற புதியபடத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன்மூலம் இந்தப்படத்தைத் தயாரிக்கிறார். அட்லியிடம் பணியாற்றிய பாக்யராஜ்கண்ணன் எழுதி இயக்குகிறார்.

    இயக்குநர் புதியவர் என்றாலும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் மிகவலிமையானவர்களாக இருக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார், அனிருத் இசையமைக்கிறார், சண்டைப்பயிற்சி அனல்அரசு, படத்தொகுப்பு ரூபன், கலைஇயக்கம் டி.முத்துராஜ், ஒலிவடிவமைப்பு ரசூல்பூக்குட்டி இவர்களோடு வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட ஷான்புட் என்கிற ஆஸ்கர்விருது பெற்ற மேக்கப்கலைஞரும் இந்தப்படத்தில் பணியாற்றவிருக்கிறாராம்.
    இந்தப்படத்துக்கான பூஜை இன்று நடைபெற்றிருக்கிறது. அதில் படத்தில் பணியாற்றுகிறவர்கள் மட்டும் கலந்துகொண்டிருக்கிறார்கள். படத்தின் பெயர் மற்றும் கதாநாயகி பற்றிய விவரங்களை விரைவில் அறிவிப்பதாகச் சொல்லியிருக்கின்றனர். இந்தப்படம் காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் உள்ள படமாக இருக்குமென்றும், இதுவரை பார்த்த சிவகார்த்திகேயனை இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வகையில் பார்க்கலாம் என்றும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறியிருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகத் தெரிகிறது.

  4. #63
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    மூன்று கெட்டப்களில் சிவகார்த்திகேயன்

    பாக்யராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் மூன்று கெட்டப்களில் தோன்ற இருக்கிறார் சிவகார்த்திகேயன். இயக்குநர் அட்லீயிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் சிவகார்த்திகேயன். இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    சிவகார்த்திகேயன் நெருங்கிய நண்பரான ராஜா, 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.

    ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிருத், ஒலி வடிவமைப்புக்கு ஆஸ்கர் வென்ற ரெஸுல் பூக்குட்டி, சிறப்பு மேக்கப்புக்கு 'ஐ' திரைப்படத்தில் பணியாற்றிய 'வீடா' (Weta) நிறுவனத்தைச் சேர்ந்த ஷான் ஃபுட் என ஒரு பெரிய அணியே இப்படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்நிலையில், Weta நிறுவனம் ஏன் சிவகார்த்திகேயன் படத்துக்கு என்பது தான் அனைவரின் கேள்வியாக இருந்தது. இப்படத்தில் வயதானவர், வாலிபர் மற்றும் பெண் வேடம் என மூன்று கெட்டப்களில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களை விட, மிக அதிகமான பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

  5. #64
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ரவுடியுடன் மோதும் ரஜினி

    குறுகிய காலத்தில் எதிர்பாராத வளர்ச்சியை எட்டியவர்கள் விஜய் சேதுபதியும், சிவ கார்த்திகேயனும்.


    சின்ன பட்ஜெட் படங்கள், பரிசோதனை முயற்சிகள் என்று தன்னை வளர்த்துக் கொண்டார் விஜய் சேதுபதி. வழக்கமான கமர்ஷியல் பாதையில் சிகரம் தொட்டிருக்கிறார் சிவ கார்த்திகேயன். இவர்கள் இருவரின் படங்களும் அக்டோபர் 2 ஆம் தேதி மோதவிருக்கின்றன.

    சிவ கார்த்திகேயனை வைத்து எதிர் நீச்சல் படத்தை தயாரித்து, அவருக்கு பிரேக் தந்த தனுஷ், விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படம்தான் சிவ கார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்துடன் மோதவிருக்கிறது.

    வெற்றி பெறப் போவது விஜய் சேதுபதியா, சிவ கார்த்திகேயனா என்பதைவிட, தனுஷா, சிவ கார்த்திகேயனா என்றுதான் உற்று கவனிக்கிறது கோடம்பாக்கம்.

  6. #65
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ரஜினிமுருகன் படம் கைமாறியது?

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் இருக்கிறதாம். இந்தப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. முதலில் இந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம் வெளியிடுவதாகச் சொல்லப்பட்டது. அதன்பின் இப்படவெளியீட்டிலிருந்து அந்நிறுவனம் விலகிக்கொண்டது. திருப்பதிபிரதர்ஸ் நிறுவனமே படத்தை வெளியிடும் என்று சொன்னார்கள். இப்போது படம் கைமாறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
    இப்படம் வெளியிடும் உரிமையைப் பெற வேந்தர்மூவிஸ் முன்வந்திருக்கிறது. எனவே அவர்களுக்குப் படத்தைக் கொடுப்பதென லிங்குசாமி தரப்பு முடிவு செய்துவிட்டதாம். ஒப்பந்தம் கையெழுத்தானதும் வெளியில் சொல்வார்களாம். விரைவில் அது நடக்கும் என்றும் அதன்பின் சரியான வெளியீட்டுத்தேதி பார்த்து படத்தை வெளியிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

  7. #66
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    ரஜினி முருகனுக்கு வந்த நிலைமையை பாருங்கள்

    சிவ கார்த்திகேயன் படம் என்றால் கண்ணை மூடிக் கொண்டு நாற்பது கோடிக்கு வியாபாரம் பேசலாம். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்கிய பொன்ராமின் இயக்கத்தில் மீண்டும் சிவ கார்த்திகேயன், சூரி காம்பினேஷன் எனும் போது கோடிகளின் எண்ணிக்கை கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை. ஆனால்,


    ரஜினி முருகன் வெளியாவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.

    உத்தம வில்லனை வெளியிட திருப்பதி பிரதர்ஸ் ரஜினி முருகனை அடகு வைக்க வேண்டிய நிலை உருவானது. ரஜினி முருகனின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையில் வரும் பணத்தை தருவதாகக் கூறி வருண் மணியனிடமிருந்தும் அவர்கள் பல கோடிகள் வாங்கியதாக தகவல். இந்த கடன்களெல்லாம் பூதாகரமாக முன்னால் இருப்பதால் ரஜினி முருகனை வெளியிட திணறுகிறார்கள்.

    ரஜினி முருகனை வெளியிடுவதாக கூறிய பல கம்பெனிகள் பின்வாங்கிய நிலையில், மதுரை அன்பு செழியன் படத்தை தனது கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பாக வெளியிடுவதாக கூறப்பட்டது.

  8. #67
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like






    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  9. #68
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    What's wrong with him ?


  10. #69
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    எனக்கு எதிரிகள் என்று யாருமில்லை! - சிவகார்த்திகேயன் நேர்காணல்


    வசூல், வியாபாரம் என்று விறுவிறுப்பான ஏற்றம் தந்திருக்கும் சினிமாவில் எதையும் தன் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் யதார்த்தமாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கிறது 'ரஜினி முருகன்' என்ற திரைப்படம். அதுபற்றியே அதிகம் பேசித் தீர்த்தார் நம்மிடம்..
    இந்தப் படத்தில் மதுரை இளைஞரா நடிக்கிறீங்க போல இருக்கே?
    கூட்டுக்குடும்பம், திருவிழா என்று மதுரையை நீங்கள் இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத ஒரு கலரில் இப்படம் இருக்கும். ராஜ்கிரண், சமுத்திரக்கனி என்று ஒரு பெரிய ஜாம்பவான்களோடு நடித்த நாட்கள் மறக்க முடியாதவை.
    வில்லனாக பல படங்களில் சமுத்திரக்கனி நடித்து வந்தாலும், இப்படத்தில் ஏழரை மூக்கன் என்ற பாத்திரம் புதுசா இருக்கும். கொடூரமான வில்லனாக அல்லாமல் சூழ்ச்சி செய்யுற வில்லனாக நடித்திருக்கிறார். ராஜ்கிரண் சாருடைய பேரன் ரஜினி முருகனாக நான் நடித்திருக்கிறேன். ராஜ்கிரண் சார் படம் என்றாலே குடும்பப் பாங்கான காட்சிகள் இருக்கும். அதை நீங்கள் இப்படத்திலும் காணலாம். படத்தின் இயக்குநர் பொன்.ராம் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்லணும். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சத்யராஜ் சார் நட்பு கிடைத்தது, இப்படத்தில் ராஜ்கிரண் சார் நட்பு கிடைத்திருக்கிறது.

    சதீஷ், சூரி இந்த இரண்டு பேரைத் தவிர வேறு காமெடியன்கள் கூட நடிக்க தயங்குவது ஏன்?

    என்னுடைய படத்தில் நான் எப்போதுமே நாயகி, காமெடி போன்ற பாத்திரங்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை. அனைத்துமே இயக்குநரோடு பணி தான். 'காக்கி சட்டை' படத்தில் இமான் அண்ணாச்சிக் கூட நடித்தேன். இயக்குநர்கள் எனக்காக கதை யோசிக்கும் போதே சூரி, சதீஷ் என்று எழுதிவிடுகிறார்கள் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் நடித்த படங்களில் இவர்கள் இருவருடன் தான் நடித்திருக்கிறேன். எனது அடுத்த படத்தில் சதீஷ் உடன் காமெடி பண்ணவிருக்கிறேன்.

    உங்களுடைய அடுத்த படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி அப்படினு பெரிய பட்ஜெட்டுக்கு போய் இருக்கிறீர்கள். அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும் என திட்டமா?

    அடுத்த கட்டம் என்றெல்லாம் நான் எப்போதுமே திட்டமிடுவது கிடையாது. படமாக வேறு ஒரு கலரில் இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணி செய்தது. காதல், காமெடி கலந்த படம் தான், ஜாலியாக இருக்கும். பெரிய பட்ஜெட், பிரம்மாண்டமாக பண்ணவிருக்கிறார்கள் என்பது எல்லாம் பி.சி. ஸ்ரீராம் சார், ரசூல் பூக்குட்டி சார், ஷான் ஃபூட் வந்ததற்கு பிறகு அப்படி தெரிகிறது. இயக்குநர் பாக்யராஜ், அனிருத், நான் மூவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று திட்டமிட்டது மட்டுமே நான். மற்ற அனைவருமே தயாரிப்பாளர் ராஜாவோட முயற்சி தான்.
    அதே போல இப்படத்தைப் பற்றி பல்வேறு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது, நானும் படித்துக் கொண்டே இருக்கிறேன். நான் எதுவும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. இனிமேல் தான் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறோம். ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்றேன், இதுவரை என் படங்களில் நான் பண்ணாத விஷயங்கள் இப்படத்தில் இருக்கிறது.

    பல நடிகர்கள் இப்போது நினைப்பது உங்களுடைய வளர்ச்சியைப் பற்றி தான். உடனே இவ்வளவு பெரிய வளர்ச்சி கிடைக்கும் என நினைத்தீர்களா?

    நாம் இவ்வளவு பெரிய உயரத்துக்கு போக வேண்டும் என நினைத்து வரவில்லை. நான் பண்ணிய படங்கள் இவ்வளவு பெரிய ரீச் கிடைக்கும் என நினைக்கவில்லை. அப்படி பெரியளவில் ரீச் கிடைக்கும் போது சரியான அணி கூடத் தான் பயணம் பண்றோம் என தோன்றுகிறது. என் மீது பெரிய பொறுப்பு விழுந்துவிட்டதாக உணர்கிறேன். 8 படங்கள் பண்ணியிருக்கிறேன், பாண்டிராஜ் சார் தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள் தான். என் படங்கள் பெரிய தவறு எதுவும் பண்ணவில்லை. மெதுவாக எனது பாணியிலே பயணித்து சவாலான படங்கள் பண்ணுகிற திட்டம் இருக்கிறது. திரையுலகில் நுழைந்த உடன், ஆசைகளை மட்டும் நிறைய வைத்துக் கொண்டு வந்தேன். அவ்வளவு தான்.

    மெரினா படம் பண்ணும் போது இருந்த உங்கள் லட்சியம் என்ன? இப்போது உங்களுடைய லட்சியம் என்ன?

    அந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்தேன். முழுக்க பசங்களை முன்னுறுத்தி தான் கதை நகரும். அப்படத்தில் நடிக்கும் போது சினிமாவில் ஏதாவது ஒரு இடத்தில் இருந்துவிட வேண்டும், நல்ல பாத்திரங்கள் பண்ண வேண்டும் என நினைத்தேன். நாயகனாக வேண்டும் என நான் அப்போது நினைக்கவில்லை, எப்படியாவது பெரிய படங்களில் நாம் இருக்கிற அளவுக்கு வளர வேண்டும் என நினைத்தேன். அதுவே அப்போது எனது லட்சியமாக இருந்தது. இப்போது எனது லட்சியமாக மக்கள் அனைவருமே "இந்த சிவகார்த்திகேயன் எந்த வேடம் கிடைத்தாலும் பின்றேன் இல்ல" என்று பேசுற அளவுக்கு வளரணும். அது தான் என் லட்சியம்.
    தொடர்ச்சியாக காமெடி சார்ந்த படங்களே பண்ணும் திட்டமா.. இல்லையென்றால் நாலு சண்டை, குத்துப்பாட்டு போன்ற கமர்ஷியல் படம் பண்ணும் எண்ணமும் இருக்கிறதா?
    எனக்கு வரும் கதைகளில் பிடித்ததைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். அந்த மாதிரி படங்கள் எல்லாம் இப்போது நான் பண்ணுவது ரொம்ப சீக்கிரம் என நினைக்கிறேன். பொழுதுப்போக்கான படங்கள் பண்றது எனது திட்டம். அவ்வளவு தான். வேறு மாதிரியான கதைகள் எல்லாம் வருகிறது. 5 சண்டைக்காட்சிகள், 1 குத்துப்பாட்டு அந்தக் கதைக்கு தேவைப்பட்டால், அக்கதைக்கு எனக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக பண்ணுவேன்.

    முன்பை விட நிறைய சர்ச்சையில் சிக்கும் போது என்ன நினைக்கிறீர்கள்..

    தொலைக்காட்சியில் இருந்த போது உள்ள சிவகார்த்திகேயன் இப்போதும் மாறாமல் இருக்கிறேன். நான் ஒரு வார்த்தை பேசினால் அப்போது ஒரு மாதிரி புரிந்து கொண்டார்கள், இப்போது வேறு மாதிரி புரிந்து கொள்கிறார்கள். நடுவில் இந்த மாதிரி விஷயங்களை நினைத்து ரொம்ப குழம்பினேன். நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. இவரை வீழ்த்தி அடுத்த இடத்துக்கு செல்ல வேண்டும் என நினைத்ததும் இல்லை. நான் சூழ்நிலைகளுக்காக மாற்றி மாற்றி பேசினால் என்னை நான் இழந்துவிடுவேன்.

    'மெரினா' வெளியாகும் முன்பே திருமணமாகி விட்டது. இப்போது உங்களுடைய வளர்ச்சியை மனைவி ஆர்த்தி எப்படி பார்க்கிறார்?

    முன்பு அவங்களோடு நிறைய விவாதிப்பேன், நிறைய பேசுவேன். இப்போது நிறைய பணிகள் சம்பந்தமாக மும்முரமாக இருப்பேன். இப்போது ரொம்ப மாறியிருக்கிறேன் என அவங்களுக்கு தெரியுது. நமது கணவர் ரொம்ப கஷ்டப்பட்டு படம் பண்ணி முன்னுக்கு வந்திருக்கிறார் என அவங்க நினைக்கிறாங்க. எனக்கு எனது குடும்பத்துடன் ரொம்ப நேரம் செலவு பண்றது ரொம்ப பிடிக்கும். எனக்கு குழந்தை பிறந்த போது போய் 1 மணி நேரம் இருந்துட்டு படப்பிடிப்பு போய்விட்டேன். அந்த சமயத்தில் நான் அவங்க கூட இருந்திருக்கணும். அது தான் முறை. ஆனால், அதைக் கூட அவங்க குறையாக என்னிடமும், வெளியேயும் சொன்னதில்லை. என்னுடைய வளர்ச்சியில் மிகவும் சந்தோஷப்படுறாங்க என்பது மட்டும் எனக்கு தெரியும். ஏனென்றால் அவங்க வெளியே சொல்லும் போது என்னைப் பற்றி அவங்ககிட்ட எல்லாரும் கேட்கிறாங்க, நலம் விசாரிக்கிற போது அவங்களுக்கும் என் மீது நம்பிக்கை வந்திருக்கிறது.

    உங்க குழந்தை ஆராதனாவுக்கு உங்களுடைய படம் எல்லாம் போட்டு காட்டினீர்களா..

    அவங்களுக்கு என்னுடைய பாடல்கள் ரொம்ப பிடிக்கும். தினமும் படப்பிடிப்பில் இருந்து ஏதாவது வீடியோ எடுத்துக் கொண்டுவந்து காட்ட வேண்டும். இல்லையென்றால் youtubeல் எனது வீடியோ பார்க்க வேண்டும். 6 மாதங்களுக்கு முன்பு வரை "டார்லிங் டம்பக்கு" பாட்டை அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தாள், இப்போது "காதல் கண் கட்டுதே" பாடல் அடிக்கடி பார்க்கிறாள். "என்னமா இப்படி பண்றீங்களேமா" பாட்டை எடிட்டிங் ஸ்டூடியோவுக்கு கூட்டிச் சென்று காண்பித்தேன். அவளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது. மறுபடியும் மறுபடியும் பார்க்க 'ரஜினி முருகன்' படத்துக்கு அவங்க வெயிட்டிங்.

    முன்பு மாதிரி உங்களால் சென்னையில் சுதந்திரமாக நடமாட முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதா..

    நான் வெளியே போவது என்றால் சினிமா மற்றும் ஹோட்டல் இரண்டுக்கும் தான். மற்றபடி வீட்டில் தான் இருப்பேன். இப்போதும் போகிறேன். புகைப்படம் எடுக்கிறார்கள், நலம் விசாரிக்கிறார்கள். வேறு எங்கு செல்வதில்லை என்பதால் எனக்கு வருத்தம் எல்லாம் கண்டிப்பாக இல்லை.

  11. #70
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    முதலில் கவுண்டமணி அடுத்து அஜித் - ரவுண்டு கட்டும் சிவகார்த்திகேயன்

    ஓய்வில் இருக்கிறார் போலிருக்கிறது சிவகார்த்திகேயன். கவுண்டமணியை சந்தித்து உரையாடியவர் அடுத்து அஜித்தை சந்தித்து பேசியிருக்கிறார்.


    தமிழ் சினிமாவில் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக அஜித் மாறிக் கொண்டிருக்கிறார். அதிகம் அலட்டிக் கொள்ளாத அவரது இயல்புதான் அஜித்தின் பிளஸ்.

    வாயில் வெற்றிலை போட்டிருப்பவர்கள் புத்திசாலியாக தெரிவார்கள் என்று கமல் ஒருமுறை சொன்னார். அதற்கான காரணத்தையும் அவரே விளக்கினார். வெற்றிலை வாயில் இருந்தால் அதிகம் பேச முடியாது. எது கேட்டாலும் பதில் பேசாமல் தலையை மட்டும் ஆட்டுவார்கள். இந்த மௌனம் அவர்களை அழுத்தக்காரர்களாகவும், அதிகம் தெரிந்த புத்திசாலிகளாகவும் காட்டும் என்றார்.

    அஜித்தும் அதிகம் பேச மாட்டாரா... அவர் எது சொன்னாலும் பொன்மொழிதான் மற்றவர்களுக்கு. அண்ணன், அப்பா சொல்லித்தர வேண்டிய விஷயங்களை அஜித் என்னிடம் பேசினார். அவர் சொன்னவற்றை கடைபிடித்தால் பெரிய நடிகனாவேனோ இல்லையோ நல்ல மனிதனாவேன் என்று சிவகார்த்திகேயன் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

    வள்ளுவர் முதல் வள்ளலார்வரை பெரியவர்கள் சொன்னதைவிட அதிகம் அப்படி என்னதான் தல சொல்லியிருப்பார்?

Page 7 of 11 FirstFirst ... 56789 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •