Results 1 to 4 of 4

Thread: ஆம்புலன்ஸ்

  1. #1
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    ஆம்புலன்ஸ்

    ஆம்புலன்ஸ்



    பொ.ஜ. - ஹலோ 108ங்களா.. நாங்க சென்னை பெசன்ட் நகர்லேருந்து பேசறோம்.. எங்க வீட்டிலே எங்க பையன் வழுக்கி விழுந்திட்டான்... அடிபட்டு துடிச்சிக்கிட்டிருக்கான்...

    ஆம்.. உங்க போன் நம்பரையும் அட்ரஸையும் சொல்லுங்க.. எங்கே வரணும்..

    பொ.ஜ.. எழுதிக்கங்க ...

    ஆம். ம்ம்.. நோட் பண்ணிட்டோம்... உங்களுக்குப் பக்கத்திலே இருக்கிற சென்டர்லேருந்து இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துடும்.. அடிபட்டவருக்கு வயசு என்ன இருக்கும்...

    பொ.ஜ.... சொல்கிறார்..

    ஆம்.. சரி இதோ எங்க டீம் ஆம்புலன்ஸ்லே வந்துடும்..

    பொ.ஜ. வீட்டிலிருந்து அடிபட்டு மயக்கமானவரை ஏற்றிக் கொண்டு ஆம். புறப்படுகிறது.. சைரன் துவங்குகிறது..

    முதல் சிக்னல்...

    டிரைவர் அருகில் உள்ள சக ஊழியரிடம்.... ஆரம்பிச்சாச்சு... இன்னும் மூணு கிலோ மீட்டர் போகணும் ... இங்கேயே இவ்வளவு நேரமாகிறதே..

    சைரன் அதன் கடமையை செய்து கொண்டிருக்கிறது..

    இரு புறமும் ஏராளமான கார்கள்.. ஆம்புலன்ஸுக்கு வழி கிடைப்பதற்குள் சிக்னல் விழுந்து விடுகிறது.. என்றாலும் இந்த சிக்னலை கடந்து விடுகிறது.

    சைரன் அதன் கடமையை செய்து கொண்டிருக்கிறது..

    அடுத்த சிக்னல்..

    பேஷண்ட்... வலி தாங்க முடியாமல் துடிக்கிறார்.. அவருடைய தந்தை அவசரத்தில் தவிக்கிறார்...

    ஒரு ஐம்பது அடி தாண்டியிருக்கும்... அடுத்த சிக்னல்..

    சிக்னலுக்கும் ஆம்புலன்ஸுக்கும் இடையே ஐம்பது மீ. இடைவெளி... இடது புறம் ஒரு பேருந்து.. எதிர்புறம் ஒரு கார்.. இடது புறம் பேருந்துக்கு முன்னால் ஒரு கார்..

    சைரன் அதன் கடமையை செய்து கொண்டிருக்கிறது..

    சிக்னல் விழுகிறது... ஒரு வழியாக ஆம்புலன்ஸ் இந்த சிக்னலைக் கடக்கிறது..

    பேஷண்ட்டின் வலி அதிகமாகிறது.. இன்னும் அதிகம் கத்துகிறார்.. ஊழியர் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்க அவர்கள் எப்படியாவது சீக்கிரம் வந்து விடுங்கள் எனக் கூறுகிறார்கள். ஆம்புலன்ஸ் விரைகிறது..

    ஆம்புலன்ஸ் சற்றே இடது புறம் வழி கிடைக்க முந்திச் செல்கிறது.. அடுத்த சிக்னல் கண்ணில் படுகிறது...

    அதைக் கடப்பதற்கு ஆம்புலன்ஸ் விரைகிறது. சிக்னல் சிகப்பில் இருந்தாலும் ஆம்புலன்ஸுக்கு பிரச்சினையில்லை என்பதாலும் சாலை சற்றே அந்த இடத்தில் காலியாக இருந்ததாலும் விரைந்து செல்ல முடிகிறது..

    சைரன் அதன் கடமையை செய்து கொண்டிருக்கிறது..

    டமால்....

    ஆம்புலன்ஸ் விரையும் சமயத்தில் இடது புறச் சாலையிலிருந்து வலது புறம் திரும்ப வேண்டிய கார் இந்த ஆம்புலன்ஸின் ஒலியை கவனிக்காமல் விரைய ஆம்புலன்ஸ் மோதி விடுகிறது...

    காரில் உள்ளவருக்கும் பலத்த அடி... கைப்பேசியில் பேசிக்கொண்டே ஆம்புலன்ஸின் ஓசையைக் கேட்கவில்லை, அதைப் பார்க்கவுமில்லை..

    இப்போது ஆம்புலன்ஸின் முன்பக்கத்தில் இடிபட்டு டிரைவருக்கும் அடிபட்டுவிடுகிறது...

    மக்கள் கூடுகிறார்கள்... போக்குவரத்து போலீஸும் வருகிறது.. அதற்குள் யாரோ ஒருவர் ஆம்புலன்ஸுக்கு சொல்லி விட அவர்கள் இடத்தைக் கேட்டு அங்கே விரைகிறார்கள்..

    இங்கே இந்த ஆம்புலன்ஸில் ஏற்கெனவே உள்ள பேஷண்டின் அலறல் திடீரென நின்று விடுகிறது..

    இரண்டாம் ஆம்புலன்ஸ் விரைகிறது. கிட்டத்தட்ட இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வர வேண்டும். முதல் ஆம்புலன்ஸ் செல்ல வேண்டிய அதே ஆஸ்பத்திரியிலிருந்து அடுத்த ஆம்புலன்ஸ்..

    எதிர் திசையில் சற்றே போக்குவரத்து நெரிசல் குறைவு என்பதால் இரண்டாம் ஆம்புலன்ஸ் விரைந்து வந்து விடுகிறது.

    அதில் ஒரு மருத்துவர் வருகிறார்.. முதலாம் ஆம்புலன்ஸ், மோதிய கார் இரண்டிலும் உள்ளவர்களை பரிசோதிக்கிறார்..

    முதலாம் ஆம்புலன்ஸில் இருந்த பேஷண்ட் ... மயங்கிக் கிடக்கிறார்...

    முதலாம் ஆம்புலன்ஸில் இருந்த டிரைவர்... அவரும் மயங்கிக் கிடக்கிறார்..

    மோதிய காரில் இருந்தவர் ஓர் இளம் பெண்... அவரைப் பரிசோதிக்கிறார்.. ம்ஹூம்... கையில் செல்ஃபோனுடன் ஸ்டீயரிங்கில் மோதி மயங்கிக் கிடக்கிறார்..

    முதலாம் ஆம்புலன்ஸில் பேஷண்டுடன் வந்தவர்.. அவர் சற்றே லேசான காயத்துடன் தப்பித்திருக்கிறார்.. .

    இரண்டு வண்டிகளிலும் வந்த அனைவருமே மயங்கிக் கிடக்கின்றனர்...

    போலீஸார் வருகிறார்கள்.. முதலாம் ஆம்புலன்ஸில் பேஷண்டுடன் வந்தவரைக் கேட்கிறார்கள்.. அந்த பேஷண்ட் வீட்டில் மாடி மதில் சுவரில் செல்போன் பேசியபடியே கீழே விழுந்து விட்டிருக்கிறார்..

    அனைவரையும் ஏற்றிக் கொண்டு இரண்டாம் ஆம்புலன்ஸ் விரைகிறது...

    ஆனால் அதற்குத் தெரியவில்லை.. தன் வண்டியில் டிரைவரையும் அவருடன் வந்த ஊழியரும் என இருவரைத் தவிர அனைவருமே தங்கள் வாழ்க்கைப் பயணத்தை முடித்து விட்டார்கள் என்பதை..

    சைரன்... அதன் கடமையை செய்து கொண்டிருக்கிறது..

    பி.கு..

    இந்தக் கதையில் எத்தனை ஆம்புலன்ஸ் வருகிறது என எண்ண வேண்டாம்.. எத்தனை வந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்...
    Last edited by RAGHAVENDRA; 15th February 2015 at 10:04 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Platinum Hubber pavalamani pragasam's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Madurai, India, India
    Posts
    21,889
    Post Thanks / Like
    நெஞ்சை பிசையும் சோகம்! முகத்தில் அறையும் யதார்த்தம்! ஒரு முறை நானும் என்னவரும் பைக்கில் ஒரு மேம்பாலத்தில் மெதுவாய் ஊர்ந்துகொண்டிருந்த போக்குவரத்தில் நிற்கையில் என் முதுகுக்குப் பின்னால் ஆம்புலன்ஸ் சைரன் விடாது ஒலிக்க அங்குலம் கூட இடைவெளி விட முடியாத சூழலில் நெஞ்சம் பதறியது. கைப்பேசியால் விளையும் சோகங்களுக்கு விடிவே கிடையாதா?
    Eager to watch the trends of the world & to nurture in the youth who carry the future world on their shoulders a right sense of values.

  4. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  5. #3
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    எத்தனை வந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்...
    உண்மையே ! யார் காரணம் , என்ன விடிவு இதற்கு என நினைக்க வைக்கும் வகையில் முடித்திருப்பது அருமை ! வாழ்த்துக்கள் ராகவேந்திரா !

  6. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA liked this post
  7. #4
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •