Page 95 of 401 FirstFirst ... 45859394959697105145195 ... LastLast
Results 941 to 950 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #941
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #942
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. Likes Russellmai liked this post
  6. #943
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  8. #944
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு,

    கோபாலின் ஒரு பதிவிற்கு எதிர்வினையாக இங்கே ஒரு பதிலும் எம்ஜிஆர் திரியில் ஒரு பதிலும் நீங்கள் பதிவிட்டிருப்பதைப் பார்த்தேன். அதன் தொடர்பாக என்னுள் எழுந்த ஒரு சில கேள்விகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

    தனி நபர் விமர்சனமும் தரக்குறைவான விமர்சனமும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் விமர்சனமே செய்யக்கூடாது என்பது போன்ற கருத்துக்களை முன் வைப்பது சரியான ஒன்றல்லவே. எந்த நபரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதுதானே ஜனநாயகத்தின் ஆணிவேர்! அதில் விதிவிலக்குகள் யாருமில்லை என்பதைத்தானே இன்றைய தினம் காந்திஜி மற்றும் நேருவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் காட்டுகிறது! அப்படியிருக்க எம்ஜிஆர் அவர்கள் மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர் என்ற உங்கள் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமையவில்லை என்பதை சொல்ல வேண்டும்.

    ஒரு திரைப்பட கலைஞர் என்ற முறையில் அவரை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னால்கூட என்னால் அதை ஒத்துக் கொள்ள முடியும். காரணம் திரைப்படங்களைப் பொறுத்தவரை நமக்கு பிடிக்கவில்லையென்றால் அதை பார்க்காமல் இருந்து விடலாம். ஆனால் ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவரை அவருக்கு வாக்களித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் அவரே முதல்வர் எனும்போது அந்த பொறுப்பில் இருந்த நேரத்தில் அவர் எடுத்த முடிவுகள் அது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பொருந்தும் எனும்போது அதை விமர்சனம் செய்யக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும்?

    அப்படி ஒரு விமர்சனம் முன்வைக்கப்படும்போது அதில் தவறான தகவல்கள் இருந்தாலோ இல்லை சொல்லப்படுபவையில் மாற்றுக் கருத்து இருந்தாலோ நீங்கள் அதற்கு தாராளமாக மறுப்பு தெரிவிக்கலாம். உங்கள் கருத்தை பதிவு செய்யலாம். அதுதானே சரியான முறை! அதை விடுத்து விமர்சனமே கூடாது என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். இதை நான் உங்களிடமும் நண்பர் கலைவேந்தன் அவர்களிடமும் மட்டுமே குறிப்பிடுகிறேன். ஏன் என்றால் கலைவேந்தன் அவர்களும் எம்ஜிஆர் பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் உடனே எதிர்வினையாற்றி விடுவார்.

    இவ்வளவு விளக்கமாக நான் எழுதுவதால் உடனே இங்கே விமர்சனம் செய்யப் போகிறோம் என்று அர்த்தமில்லை. அரசியல் பற்றிய விவாதங்களுக்கு நமது மய்யம் இணையதளத்திலே Current Affairs என்ற section இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    என்னுள் எழுந்த மற்றொரு கேள்வி. எம்ஜிஆர் பற்றி எதாவது சொன்னால் கோவப்படும் நீங்கள், நீங்கள் பங்கு பெறும் எம்ஜிஆர் திரியில் திமுக தலைவர் திரு கருணாநிதியை மிக மோசமாக விமர்சித்து வரும் பதிவுகளை, அவரை ஒருமையில் விளித்து பிற சமூக வலைதளங்களில் மற்றும் அதிமுக பத்திரிக்கையில் எழுதப்படும் கட்டுரைகள் மற்றும் கார்டூன்களை இங்கே பதிவேற்றம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதை நீங்கள் கண்டித்த மாதிரி தெரியவில்லையே? நான் கருணாநிதி ஆதரவாளன் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் எதிரான கருத்து உடையவன்தான் என்பது இங்கே தொடர்ந்து வாசிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் ஒருவருக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு வேறு நியாயம் என்று இருக்க முடியாதல்லவா?

    இதை குறிப்பிடும்போது நீங்கள் நேற்று எழுதிய மற்றொரு பதிவு பற்றியும் சொல்ல விரும்புகிறேன். நேற்றைய தினம் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தின் போஸ்டரை போட்டு கோபால் எழுதியதற்கும் முடிச்சு போட்டு பதிவு செய்திருக்கிறீர்கள்

    இன்றைக்கு இந்த திரியில் பதிவு செய்பவர்கள் எவரும் காங்கிரஸ் அனுதாபிகள் இல்லை. கோபால் ஆர்கேஎஸ் போன்றவர்கள் எந்தக் காலத்திலும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இல்லை. காங்கிரஸ் பற்றி அவ்வப்போது எழுதும் நானும் 1975 அக்டோபர் 2 -ற்கு பிறகு இயங்கிய காங்கிரஸ் கட்சியை ஆதரித்தவன் இல்லை. ராகவேந்தர் சார் போன்றவர்களும் அன்னை இந்திராவின் காலத்திற்குப் பிறகு இயங்கிய காங்கிரஸ்-ஐ ஆதரித்தவர் இல்லை. உண்மை நிலை இப்படியிருக்க இதையெல்லாம் நன்கு தெரிந்த உங்களைப் போன்றவர்களே ஏதோ கோவத்தில் இன்றைய காங்கிரஸ்-ன் நிலையை மேற்கோள் காட்டி இங்கே இருப்பவர்கள் அனைவரும் காங்கிரஸ் அனுதாபிகள் என்ற கருத்து வரும் வகையில் எழுதுவதை தவிர்க்கலாமே!

    நான் எழுதிய அனைத்து விஷயங்களையுமே நீங்கள் சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்

    அன்புடன்

  9. Thanks Gopal.s thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  10. #945
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலைஞர் குழுமத்தின் முரசு தொலைகாட்சியில் நடிகர் திலகம் இரண்டு வேடங்களில் நடித்து வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய இமாலய வெற்றி சித்திரம் சந்திப்பு தற்போது ஒளிபரப்பாகிகொண்டிருக்கிறது.

    சந்திப்பு திரைப்படத்தை பற்றி கூறுகையில் ஒரு விஷயத்தை இங்கு பகிர்ந்துகொள்ள நினைக்கிறன். சந்திப்பு வெளியான நேரத்தில் ஒரு சிலர் சிவாஜிக்கு ஜோடி ஸ்ரீதேவியா ...அவர் மகள் வயது ..எதற்கு ஸ்ரீதேவியுடன் ஜோடி எல்லாம் என்று கிண்டல் செய்தனர்.

    அதாவது...நடிகர் திலகத்திற்கு மட்டுமே சட்ட திட்டங்களை எப்போதும் போதிக்கும் கூட்டம் எல்லா காலத்திலும் உள்ளனர்.

    இவர்கள் இதர நடிகர்கள் தொங்குவதற்கு ஒரு இடம் கூட பாக்கியில்லாமல் அத்தனை இடங்களிலும் அதுவும் ஒரு ரப்பர் பேண்ட் வைத்து சதை தொங்குவதை கட்டிவிடலாம்..அந்தளவிற்கு சதை தொங்கிய நடிகர்கள் கொள்ளுபேத்திகளுடன் ஜோடி போட்டு நடித்ததையும் பார்த்தவர்கள். ஆனால் அதை பற்றி மட்டும் எந்த விமர்சனமும் கூறமாட்டார்கள் !

    முடிந்தால் வர்ணிப்பார்களே அல்லாமல் எந்த மாற்று விமர்சனம் கூற கூறமாட்டார்கள் மற்ற நடிகர்களை பொருத்தவரை. ஆனால் நடிகர் திலகம் ஸ்ரீதேவியுடன் நடித்தவுடன்..உடனே....ஞ்யாய தர்மம் பற்றி வாய் கிழிய பேசினார்கள்.

    ஆனால் நடந்தேறியது மற்றொன்று...சந்திப்பு திரையிட்ட இடம் அனைத்தும் திருவிழா கோலம் கண்டு பிரம்மாண்ட வசூல் சாதனை புரிந்து வெள்ளிவிழா கொண்டாடியது !

    இறக்கும் வரை ஒரு நடிகருக்கு மார்க்கெட் இருப்பது வினோதம். அப்படி ஒரு சிலரே இருந்தனர். அவர்களில் நடிகர் திலகம் முதன்மையானவர் என்றால் மிகையாகாது. உடல் நலம் சரி இல்லை என்றாலும் சரி...உடல் நிலை தெரிய நிலையிலும் சரி...நடிகர் திலகம் அவர்கள் இல்லத்து வாயிலில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கூட்டம் மொய்த்தபடி இருந்தார்கள் !

    உடல் நிலை கருத்தில் கொண்டு அவராக நடிப்பதை வெகுவாக குறைத்துகொண்டார். திரை உலகின் பீஷ்மர் அல்லவா ....ஆகையால்தான் அவரது விருப்பம் போல திரை வாழ்க்கை அமைந்தது..!

    கலைவாணியின் பிறப்பல்லவா...சொல்வாக்கும் செல்வாக்கும் இல்லாமலா இருக்கும் !

    RKS
    Last edited by RavikiranSurya; 11th April 2015 at 09:24 PM.

  11. Likes Gopal.s liked this post
  12. #946
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    WATCH FROM 13:00 mins

  13. #947
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    WATCH from 00:35.......See how the Calm Face Changes to Red one - Heights of Anger

  14. #948
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    சகோதரர் செல்வகுமார் அவர்களுக்கு,

    கோபாலின் ஒரு பதிவிற்கு எதிர்வினையாக இங்கே ஒரு பதிலும் எம்ஜிஆர் திரியில் ஒரு பதிலும் நீங்கள் பதிவிட்டிருப்பதைப் பார்த்தேன். அதன் தொடர்பாக என்னுள் எழுந்த ஒரு சில கேள்விகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

    தனி நபர் விமர்சனமும் தரக்குறைவான விமர்சனமும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் விமர்சனமே செய்யக்கூடாது என்பது போன்ற கருத்துக்களை முன் வைப்பது சரியான ஒன்றல்லவே. எந்த நபரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை என்பதுதானே ஜனநாயகத்தின் ஆணிவேர்! அதில் விதிவிலக்குகள் யாருமில்லை என்பதைத்தானே இன்றைய தினம் காந்திஜி மற்றும் நேருவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் காட்டுகிறது! அப்படியிருக்க எம்ஜிஆர் அவர்கள் மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவர் என்ற உங்கள் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமையவில்லை என்பதை சொல்ல வேண்டும்.

    ஒரு திரைப்பட கலைஞர் என்ற முறையில் அவரை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னால்கூட என்னால் அதை ஒத்துக் கொள்ள முடியும். காரணம் திரைப்படங்களைப் பொறுத்தவரை நமக்கு பிடிக்கவில்லையென்றால் அதை பார்க்காமல் இருந்து விடலாம். ஆனால் ஒரு மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருந்தவரை அவருக்கு வாக்களித்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் அவரே முதல்வர் எனும்போது அந்த பொறுப்பில் இருந்த நேரத்தில் அவர் எடுத்த முடிவுகள் அது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பொருந்தும் எனும்போது அதை விமர்சனம் செய்யக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும்?

    அப்படி ஒரு விமர்சனம் முன்வைக்கப்படும்போது அதில் தவறான தகவல்கள் இருந்தாலோ இல்லை சொல்லப்படுபவையில் மாற்றுக் கருத்து இருந்தாலோ நீங்கள் அதற்கு தாராளமாக மறுப்பு தெரிவிக்கலாம். உங்கள் கருத்தை பதிவு செய்யலாம். அதுதானே சரியான முறை! அதை விடுத்து விமர்சனமே கூடாது என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். இதை நான் உங்களிடமும் நண்பர் கலைவேந்தன் அவர்களிடமும் மட்டுமே குறிப்பிடுகிறேன். ஏன் என்றால் கலைவேந்தன் அவர்களும் எம்ஜிஆர் பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் உடனே எதிர்வினையாற்றி விடுவார்.

    இவ்வளவு விளக்கமாக நான் எழுதுவதால் உடனே இங்கே விமர்சனம் செய்யப் போகிறோம் என்று அர்த்தமில்லை. அரசியல் பற்றிய விவாதங்களுக்கு நமது மய்யம் இணையதளத்திலே Current Affairs என்ற section இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    என்னுள் எழுந்த மற்றொரு கேள்வி. எம்ஜிஆர் பற்றி எதாவது சொன்னால் கோவப்படும் நீங்கள், நீங்கள் பங்கு பெறும் எம்ஜிஆர் திரியில் திமுக தலைவர் திரு கருணாநிதியை மிக மோசமாக விமர்சித்து வரும் பதிவுகளை, அவரை ஒருமையில் விளித்து பிற சமூக வலைதளங்களில் மற்றும் அதிமுக பத்திரிக்கையில் எழுதப்படும் கட்டுரைகள் மற்றும் கார்டூன்களை இங்கே பதிவேற்றம் செய்யப்படுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? அதை நீங்கள் கண்டித்த மாதிரி தெரியவில்லையே? நான் கருணாநிதி ஆதரவாளன் அல்ல. இன்னும் சொல்லப் போனால் அனைத்து திராவிட இயக்கங்களுக்கும் எதிரான கருத்து உடையவன்தான் என்பது இங்கே தொடர்ந்து வாசிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும் ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் ஒருவருக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு வேறு நியாயம் என்று இருக்க முடியாதல்லவா?

    இதை குறிப்பிடும்போது நீங்கள் நேற்று எழுதிய மற்றொரு பதிவு பற்றியும் சொல்ல விரும்புகிறேன். நேற்றைய தினம் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தின் போஸ்டரை போட்டு கோபால் எழுதியதற்கும் முடிச்சு போட்டு பதிவு செய்திருக்கிறீர்கள்

    இன்றைக்கு இந்த திரியில் பதிவு செய்பவர்கள் எவரும் காங்கிரஸ் அனுதாபிகள் இல்லை. கோபால் ஆர்கேஎஸ் போன்றவர்கள் எந்தக் காலத்திலும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இல்லை. காங்கிரஸ் பற்றி அவ்வப்போது எழுதும் நானும் 1975 அக்டோபர் 2 -ற்கு பிறகு இயங்கிய காங்கிரஸ் கட்சியை ஆதரித்தவன் இல்லை. ராகவேந்தர் சார் போன்றவர்களும் அன்னை இந்திராவின் காலத்திற்குப் பிறகு இயங்கிய காங்கிரஸ்-ஐ ஆதரித்தவர் இல்லை. உண்மை நிலை இப்படியிருக்க இதையெல்லாம் நன்கு தெரிந்த உங்களைப் போன்றவர்களே ஏதோ கோவத்தில் இன்றைய காங்கிரஸ்-ன் நிலையை மேற்கோள் காட்டி இங்கே இருப்பவர்கள் அனைவரும் காங்கிரஸ் அனுதாபிகள் என்ற கருத்து வரும் வகையில் எழுதுவதை தவிர்க்கலாமே!

    நான் எழுதிய அனைத்து விஷயங்களையுமே நீங்கள் சரியான முறையில் புரிந்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்

    அன்புடன்
    திரு. முரளி சீனிவாஸ் அவர்களுக்கு :

    திரு. கோபால் அவர்களின் ஒரு பதிவிற்கு நான் அளித்த 2 வேறு பதில்கள் குறித்து தங்களுக்குள் எந்த வித கேள்விகளும் எழுவதற்கு நியாயமில்லை.

    அப்படியே அது குறித்து வினாக்கள் தோன்றினாலும், அதற்காக திரு. கோபால் அவர்களிடம்தான் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால், ஜெயகாந்தன் மறைவுக்கான இரங்கற் செய்தியில் சம்பந்தமே இல்லாமல் எங்கள் மக்கள் திலகத்தை பற்றி அவதூறாக விமர்சித்து இந்த சர்ச்சையை துவக்கி வைத்தவரே அவர்தான்.

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களை “ஞானசூனியம்” என்றும், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களை ‘பெண் பித்தன்’ என்றும், 1972க்கு பின் வெளியான படங்களில் தங்களின் அபிமான நடிகர் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பினை ரசிக்க முடியவில்லை என்றும், ஒரு தேர்தல் தோல்விக்காக கடையை (கட்சியை) மூடிக்கொண்டு சென்ற மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களை ஆபிரகாம் லிங்கன் ரேஞ்சுக்கு பேசுவதா என்றும் நடிகர் திலகம் திரியில் தங்களின் மகத்தான பங்களிப்புகளையும், அவ்வப்போது மக்கள் திலகம் திரியில் வந்து பங்களித்து நற்கருத்துக்களை கூறி வரும் சகோதர அன்பர்கள் திருவாளர்கள் ராகவேந்திரா, ரவிகிரண் சூரியா, ஹைதராபாத் ரவி, சிவாஜி செந்தில் உள்ளிட்ட சிலரை சகட்டு மேனிக்கு, தரக்குறைவாக வசை பாடிய திரு. கோபால் அவர்களை, அந்த சமயத்தில் கண்டிக்காமல், தற்போது தாங்கள் வக்காலத்து வாங்கியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    மகன் செத்தாலும் கவலை யில்லை, மருமகள் தாலி அறுக்க வேண்டும் என்ற ரீதியில். அதாவது நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்களை கேவலமாக விமர்சித்தாலும் பரவாயில்லை, எவருடனும் ஒப்பிட முடியாத எட்டாத உயரத்துக்கு சென்று விட்ட எட்டாவது அதிசயம் எங்கள் எட்டாவது வள்ளல் மக்கள் திலகத்தின் அழியாப் புகழை தாங்கி கொள்ள முடியாத எரிச்சல்தான் மேலோங்கி நிற்கிறது என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இல்லையென்றால் திரு. கோபால் அவர்கள் தேவையில்லாமல் எங்கள் புரட்சித்தலைவரை வம்புக்கிழுத்தமைக்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு வருவது ஏன் ?

    சரி எதோ எழுதி விட்டீர்கள். இனி விஷயத்துக்கு வருவோம் :

    விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் எவருமில்லை என்ற உண்மை எனக்கும் நன்கு புலப்பட்டிருந்தாலும், கிறுக்குத்தனமாக மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை ஜீரணித்துக் கொண்டிருக்கவும் முடியாது. வேடிக்கையும் பார்த்து கொண்டிருக்க முடியாது.
    ஒரு திரைப்படகலைஞர் என்ற முறையில் அவரை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னால் கூட தங்களால் ஏற்றுக் கொள்ள முடியும் என்று கூறியதற்கு நன்றி ! தங்களின் கருத்துப்படியே நானும் வருகிறேன். திருடாதே பாப்பா திருடாதே, தூங்காதே தம்பி தூங்காதே, ஏமாற்றாதே ஏமாற்றாதே என்று பாடியதும் திரைப்படங்களில் தானே ! அதை ஏன் அரசியலுடன் ஒப்பிட்டார் என்று முதலில் சகோதரர் திரு. கோபால் அவர்களை தாங்கள் கேட்டிருக்கலாமே.

    அரசியல் பற்றிய விவாதங்களுக்கென்று CURRENT AFFAIRS என்கின்ற தனியான Section ஒன்று இருப்பதை நான் அறியாமல் இல்லை. ஆனால் அந்த பகுதியில், திரு. கோபால் அவர்கள் தனது விமர்சனத்தை முன் வைத்திருக்கலாம் அல்லவா ? அதனை ஏன் சுட்டிக் காட்ட வில்லை. அவருக்கு, தாங்கள் அறிவுரை வழங்க தவறி விட்டீர்கள் என்றுதான் நான் கூறுவேன்.

    அரசியலில், எங்கள் பொன்மனசெம்மலின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நாங்கள் ஆதார பூர்வமான தகவல்களை அவ்வப்போது முன்வைத்து, மறுப்பு தெரிவித்து, அதனை தவிடு பொடியாக்கி வருவதும் தாங்கள் அறிந்ததே !

    சகோதரர் கலைவேந்தன் அவர்க;ள் மட்டுமல்ல, மக்கள் திலகத்தின் அனைத்து பக்தர்களும், ரசிகர்களும், விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்றி வருபவர்களே ! எங்கள் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள், அவரைப்பற்றிய எதிர்மறையான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில்தான் எங்களை பெருமையுடன் உயர் நிலையில் வைத்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாகத்தான், மக்கள், இனி எவராலும் தர முடியாத பொற்கால ஆட்சி வழங்கிய எங்கள் புரட்சித்தலைவர் மீது அபரிதமான நம்பிக்கை வைத்து, அவர் இறக்கும் வரை அவர்தான் முதலவர் என்று தீர்மானித்து வாக்களித்து மகிழ்ந்தனர். மேலும், எங்கள் பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் தனது சொந்த பலத்திலும், மக்களின் மகத்தான தொடர் ஆதரவினாலும் தான் ஆட்சியை பிடித்தாரே யன்றி, எதிரிகளின் பலவீனத்தால் அல்ல என்பதையும் தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
    என்னைப் பொருத்தவரை, தமிழ் திரையுலகின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களை வம்புக்கிழுத்தால் நான் பதிலடி கொடுத்துக்கொண்டேதான் இருப்பேன் என்பதையும் தாங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

    மக்கள் திலகம் திரியில், திரு. கருணாநிதி அவர்களை விமர்சனம் செய்து பதிவுகள் இடப்படுவதை தாங்கள் விரும்ப வில்லையாயின் அதற்கு தக்க ஆதாரத்துடன் பதிலை அளித்து விட்டு செல்லுங்களேன். நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம். நாங்களும் எங்கள் புரட்சித்தலைவர் உயிருடன் இருந்தவரை அவர் தோற்றுவித்த பேரியக்கத்தை தீவிரமாக ஆதரித்தவர்கள் தான். தற்போது, எந்த ஒரு கட்சியையும் சர்ந்துள்ளவர்கள் அல்ல என்பதையும் இத்தருணத்தில் குறிப்பிட விறிம்புகிறேன்.

    அது போன்று, காங்கிரஸ் கட்சியை கடந்த காலத்தில் ஆதரித்து வந்ததும், இனி ஆதரிப்பதோ அல்லது ஆதரிக்காமல் இருப்பதோ தங்களின் தனிப்பட்ட விருப்பம்.

    தற்காலத்தில், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள் நடுநிலை தவறும் பட்சத்தில், இந்த திரியும் நடுநிலையிலிருந்து விலகிச் செல்கின்றதோ என்று ஐயம் கொள்ள நேரிடுகிறது.

  15. #949
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

  16. #950
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •