Page 40 of 401 FirstFirst ... 3038394041425090140 ... LastLast
Results 391 to 400 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #391
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes Russellmai, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #392
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பாம்பு மெல்ல தலைய காட்டுது உசார் உசார் உசார்


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. Likes kalnayak liked this post
  6. #393
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #394
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சாந்தி திரையரங்க வளாக வடிவமைப்பு சிவாஜியை சுற்றியே அமையும் - அக்ஷயா நிறுவனம் அறிவிப்பு..

    காணொளியில் காண்க

    நாகர்கோவிலில் பெருந்தலைவர் காமராஜரின் சிலையைத் திறந்து வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அடுத்த வாரமே அப்பா அந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அந்த ஊரைச் சேர்ந்தவர் தான் இந்த அக்ஷயா நிறுவனத்தின் சிட்டிபாபு.
    - பேட்டியில் இளைய திலகம் பிரபு.

    Last edited by RAGHAVENDRA; 6th March 2015 at 08:42 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  9. #395
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Highlighting Yengae Nimmadhi song in Pudiya Paravai --The Hindu Tamil p.34

    எனது கைகள் மீட்டும் போது.....வீணை அழுகின்றது!..

    http://tamil.thehindu.com/cinema/cin...?homepage=true

    Also peruse the article by Randor Guy 'remembering Panju' related to NT combo with Krishnan Panju from Parasakthi to Uyarndha Manithan. p.2 of Friday Features The Hindu english today Mar 6

    http://r.search.yahoo.com/_ylt=A2oKm...PixzTqc2Y9B58-
    Last edited by sivajisenthil; 6th March 2015 at 02:02 PM.

  10. #396
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    டேவிட் லீன் [David Lean] ஒரு பிரிட்டிஷ் திரைப்பட இயக்குனர். மிகவும் புகழ் பெற்ற Lawrence of Arabia, Dr. Zhivago போன்ற படங்களை இயக்கியவர். இரண்டு முறை சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் அகாடமி விருது பெற்றவர். அவர் 1963-ல் இந்தியாவிற்கு வருகை புரிந்திருந்தார். அன்றைய காலத்தில் மும்பையை விட சென்னைதான் சினிமா தலைநகர் என்ற பெயர் பெற்றிருந்தது. சென்னைக்கு விஜயம் செய்த டேவிட் லீன் இங்கே சில திரைப்படங்களையும் பார்த்தார்.

    அவர் பார்த்த படங்களில் நமது நடிகர் திலகத்தின் பார் மகளே பார் திரைப்படமும் ஒன்று. அதில் சிவலிங்கம் என்ற அந்த பாத்திரத்தை, Aristocratic arrogance to the core என்று சொல்லப்படக்கூடிய அந்த காரக்டரை நடிகர் திலகம் திரையில் கையாண்ட விதம் பார்த்து பிரமித்துப் போன லீன் நடிகர் திலகத்தை நேரடியாக சந்திக்க வேண்டும் என்று சொல்லி அவரை தேடி அன்னை இல்லத்திற்கே வந்து விட்டார். அவரை வரவேற்று உபசரித்து உரையாடிய நடிகர் திலகத்திடம் தனது பாராட்டுகளையும் பிரமிப்பையும் சொன்ன டேவிட் லீன் நடிகர் திலகத்திடம் ஒரு கோரிக்கையையும் வைத்தார். தான் இயக்கும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிகர் திலகம் நடிக்க வேண்டும் என்பதுதான் அது.

    அவர் அன்பிற்கும் அழைப்பிற்கும் நன்றி சொன்ன நடிகர் திலகம் தனக்கும் அவர் படத்தில் நடிக்க ஆசைதான், ஆனால் ஹாலிவுட் படம் எனும்போது அதன் படப்பிடிப்பு வருடக்கணக்கில் நடைபெறும். அத்துனை காலம் தன்னால் தமிழ்ப் படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு வரமுடியாது என்றும் ஏற்கனவே தான் ஒப்புக் கொண்ட தமிழ்ப் படங்களே ஏராளமாக இருக்கின்றன என்றும் ஆகவே டேவிட் லீன் அவர்களின் அழைப்பை ஏற்க முடியாத சூழலில் இருப்பதையும் விளக்கிக் கூறினார்.

    நடிகர் திலகத்தின் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்ட டேவிட் லீன் அவர்கள் ஒரு வேளை நீங்கள் மனம் மாறி நடிக்க ஒப்புக் கொண்டால் நான் இயக்கும் படத்தில்தான் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு விடை பெற்று சென்றார்.

    இன்றைக்கு நேற்றைக்கு அல்ல 52 வருடங்களுக்கு முன்பே ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குனரெல்லாம் வீடு தேடி வந்து தங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பெருமையெல்லாம் நடிகர் திலகத்திற்கு மட்டும்தான் உரியது.

    அன்புடன்

  11. #397
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண் இல்லாமல் ஹோலியா..

    அது என்னவோ டிவியிலெல்லாம் எனர்ஜி எனர்ஜி என்று சொல்கிறார்களே..

    அதைப் பற்றித் தெரிந்து கொள்ள சிறந்த உதாரணம் இந்தப் பாட்டில்லையோ...நடிகர் திலகமும் நாட்டியப் பேரொளியும் ஆடியுள்ள நடனத்தில் இல்லாத எனர்ஜியா..

    அம்மாடி கொஞ்சம் பூச்சூட வா இந்த வரிகளின் போது பத்மினியைத் தாண்டி ஒரு ஜம்ப் செய்வாரே... ஆஹா.. காணக்கண் கொள்ளாக் காட்சி...

    அது மட்டுமா ... எடுத்து எடுத்து கொடுக்க கொடுத்து கொடுத்து சிவக்க.. இந்த வரிகளின் போது ஒரு ஸ்டைல் காட்டுவார் பாருங்கள்...(4.50 லிருந்து பார்க்கவும்)... அப்படியே நம்மை அள்ளிக் கொண்டு போய் விடுவார்..

    ஹ்ம்... என்ன செய்வது.. இதெல்லாம் மீடியாக்களின் கண்களில் படுவதில்லை...
    Last edited by RAGHAVENDRA; 7th March 2015 at 12:53 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks Gopal.s thanked for this post
    Likes Russellmai, Gopal.s liked this post
  13. #398
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes kalnayak, Russellmai liked this post
  15. #399
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கலை வேந்தன்,

    உங்கள் விளக்கத்தில் சில சந்தேகங்கள் உள்ளன.

    1)அசோகனை தாக்கி என்னுடைய பதிவில் ஏதுமில்லை.அதனால் உங்களுடைய பதிவில், அசோகனை பற்றி நீங்கள் குறிப்பிட்டதும், என் கருத்தும் ஒன்றே. அவர் எங்கள் பட்டறையில் தயாரான கூர் வாள் .

    2) எனக்கு தெரிந்து இது வரை இவ்வளவு திரையரங்களில் இவ்வளவு ஓட்டம் என்பதெல்லாம் ரசிகர் மன்ற பிரத்யேக பிட் நோட்டிச்களில் வெளியாகலாம் அல்லது பிரத்யேக ஒற்றை நோக்கம் கொண்ட பத்திரிகைகளில் வெளியாகலாம். ஹிந்து போன்ற பத்திரிகைகளில் நிகழ்ந்ததில்லை. ராமா நாயுடு மரணத்திற்கு ,இதனை முடிச்சு போடுவது என்ன வகையில் சாரும்? அப்படியே தர்மம் காத்தாலும், வசந்த மாளிகை பற்றிய செய்தியில், அது எத்தனை திரையரங்கு ,எவ்வளவு நாட்கள் ஓடியது, என்ற குறிப்புக்கள் இல்லை.

    3)உங்கள் கருத்துக்களில் சில உடன் பாடுள்ளவை. அன்பால் எல்லாரையும் கவர்வது அற்புதமான ஒன்றே. ஆனால் உங்களுக்கு உடன் பாடில்லாத கருத்துக்களை சொன்னதற்கு சாட்டை கொண்டு மிரட்டிய கலைவேந்தன் திருந்தியதில் எனக்கு உடன்பாடே.

    4)ஒரு தனி மனிதனின் அகால வேலையிழப்புக்கள் மரணத்தை விட கொடியவை.அவன் குடும்பத்தை உழப்பி திசையற்று செல்ல வைக்கும். நான் வாழ வைத்து பழக்க பட்டவனே அன்றி ,எனது பெட்டியில் எலும்பு கூடு சேர்ப்பவன் அல்ல.நானும் என் சகோதரர்களும் சுமார் 100 குடும்பங்களை வாழ வைத்துள்ளோம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளால்.

    5)என்னை தேடி அலையவே வேண்டாம். சொந்த பெயரில் வெளிப்படையாக இயங்குபவன் நான். அடுத்த முறை வரும் போது சென்னை மதுராவில் சந்திக்கலாம்.ரத்னா கபேயில் பழைய தரம் இல்லை.அத்துடன் ,உங்களுக்கு ப்ரொமோஷன் வந்த பிறகும் ஏன் கஞ்ச தனம்?

    6)என் கருத்து. சில பதவிகள்,பொது வாழ்வு, பொதுத்துறை, மீடியா இவற்றில் உள்ளவர்கள் ,அனைவருக்கும் பிரதிநிதி. செய்திகளை,பாதிக்கும் மேல் படிப்பவர்கள் முகம் சுளிக்கும் படி,தங்கள் விருப்பு-வெறுப்பு சார்ந்து வெளியிடுவது எந்த ஞாயமுமல்ல. இதற்கு சால்ஜாப்பு அவசியமும் அல்ல.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. #400
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் சரித்திர ,புராண படங்கள் மற்றும் ஓரங்க நாடகங்கள் அனைத்தும் Shakespere பள்ளி ,Oscar Wilde மற்றும் Stella Adler வகை பட்டதாகும். இதில் shakespere பள்ளி பற்றி பார்த்து விட்டு, அவருடைய larger than life பாத்திரம் ஒன்றினுள் நுழைவோம்.

    நியூயார்க் , ஹார்வேர்ட் ,பர்மிங்காம் ,முதலிய இடங்களில் முக்கியமாய் பேச பட்டு பயிற்று விக்க படும் இந்த வகை பள்ளிகளில் முக்கியமான நமக்கு பரிச்சயம் ஆனவர்கள்,Patrick Steward ,Ian Mckellen ,Ben kingsley ,Richard Barbadge ,John Hemings ,Thomas Pope ,George Bryan ,John Rice ஆகியோர் ஆவர்.Alexander Technique for Actors மற்றும் Elizebethan Theatre என்பது மிகவும் புகழ் பெற்றது. முக்கியமாய் அவர்கள் போதிப்பது மற்றும் எதிர் பார்ப்பது, மேற்குறிப்பிட்ட நடிகர்களின் பாணி கீழ்கண்டவாறு விரியும்.

    monologue எனப்படும், ஒரு பாத்திரம் எதிர் பாத்திரங்களின்றி தன்னுடனே உரையாடி உணர்ச்சியை வசனங்களுடன் ,மிகை பாவனைகள், உடல் மொழி, வலுவான கை கால் அசைவுகளுடன் வெளிபடுத்தும் முறை.

    Redirects Energy and cultivate Balance ,Poise ,Increased Physical ,Vocal and emotional freedom ..

    ஒவ்வொரு மிக நீண்ட வசனங்களை சொல்லி முடித்த பின் தேவை படும் சுவாச கட்டுப்பாடு.(End of the line breath support )

    பிறகு மூல கதை பிரதியை ஆராய்ந்து,பாத்திரத்தை கட்டமைத்து,மனகண்ணில் உணர்ந்து,பாத்திரங்களுக்குள் தொடர்பு மற்றும் உறவுநிலையை அறுதியிட்டு ,கதை சொல்லும் முறையை நிர்ணயித்தல்.

    Agecraft skills மற்றும் stamina .

    பாத்திரங்களை பார்ப்போர் மத்தியில் நிலை நிறுத்த ,வசனங்களை மனப்பாடம் செய்து, மிகை தோற்றம்,வலுவான சிறிதே மிகை படுத்த பட்ட கால்,கை,உடல் அசைவுகளுடன் மிகையான வெளியீட்டு முறையை பயன் படுத்தல்.

    பல பாத்திரங்களில் மிக குறுகிய காலங்களில் நடிக்க Cue Scripting மற்றும் Cue Acting முறையில் சொல்ல சொல்ல உள்வாங்கி உடனே நடிக்கும் முறையும் பயிற்றுவிக்க படும்.

    மிக பிரம்மாண்டமான கற்பனைகள் கொண்ட வலுவான உணர்ச்சி குவியல் நிறைந்த இந்த வகை பாத்திரம் மற்றும் கரு பொருளில் நடிக்கும் போது வெளியீட்டு முறைகளும் வலுவாக, மிகை நடிப்பு கொண்டு பார்ப்போரை ஆளுமை செய்து வசிய படுத்த வேண்டும்.

    என்னடா நடிகர்திலகத்தை ,அவர் பெற்ற நாடக கம்பெனி பயிற்சிகளை சொல்லி , என்னென்னவோ வெளிநாட்டு பெயர்களுடன் சம்பத்த படுத்தி நம்மை எல்லாம் குழப்புகிறானே என்று உங்களுக்கு தோன்றினால் இது வரை சொன்ன எனக்கு பாதி வெற்றி கிடைத்தாயிற்று என்று அர்த்தம்.


    என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.

    Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.

    உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  17. Likes Harrietlgy, ssp_s, RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •