Page 346 of 401 FirstFirst ... 246296336344345346347348356396 ... LastLast
Results 3,451 to 3,460 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #3451
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சுந்தரராஜன்
    சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் தாங்கள் நிகழ்த்தியுள்ள உன்னதமான தொண்டிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். இது போன்ற தேச பக்தியையும் இறையாண்மையையும் போற்றுவதில் என்றுமே முதன்மை வகிப்பவர்கள் சிவாஜி ரசிகர்கள் தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.
    வாழ்க. நடிகர் திலகத்தின் ஆசி தங்களுக்கு பரிபூரணமாக உண்டு.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3452
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #3453
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: 04.07.2015 Dinamani, Pa. Dinadayalan's Kanavu kannigal

    எதிலும் அகலக்கால் ஆகாது என்பார்கள். ‘அக்கம்மா பேட்டை பரமசிவம் நாகராஜன்’ என்கிற ஏ.பி. நாகராஜன்’ ஆர்வக் கோளாறில் ஒரே நேரத்தில் அநேக படங்களில் தன் கைப் பணத்தையும் கடின உழைப்பையும் முதலீடு செய்தார். பல்வேறு காரணங்களினால் அவை தோல்வியில் முடிந்தன.

    மீண்டும் எழுந்திருக்க முடியாத அடி. வி.கே. ராமசாமியும், ஏ.பி.என்னும் இணைந்து நான் பெற்ற செல்வம், மக்களைப் பெற்ற மகராசி போன்ற வசூல் படங்களைத் தயாரித்தவர்கள். நவராத்திரி கதைக்கான உரிமையும் வி.கே. ஆரிடம் இருந்தது. அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, மறுபடியும் யுகக் கலைஞன் சிவாஜி கணேசனை நாடிப் போவதைத் தவிர வேறு வழியில்லை.

    நெப்டியூன் ஸ்டுடியோவில் அன்னை இல்லம் ஷூட்டிங். வி.கே.ராமசாமியும் சிவாஜியும் பங்கேற்கும் காட்சி.ஏ.பி. என், வி.கே.ஆரிடம் கெஞ்சாத குறையாக வற்புறுத்தினார்.

    ‘நீங்க எப்படியாவது சிவாஜிகிட்டே சொல்லி, நவராத்திரி எடுக்க எனக்குச் சீக்கிரமா கால்ஷீட் வாங்கிக் கொடுக்கணும்’



    ‘அது உடனடியா கிடைக்காதே. அவர் அவ்வளவு பிசி. கர்ணன் அது இதுன்னு ஏகப்பட்ட படங்கள் வரிசையில் இருக்கு. சிவாஜி பிலிம்ஸ்னு சொந்த பேனர்ல வேற நடிக்கப் போறார். சரோஜாதேவிக்காகக் காத்திருக்கிறாங்க. இப்ப எங்கே போய் நாம முந்திக்கிறது...?’

    ‘1952லிருந்தே சிவாஜி பிஸின்றது எனக்கும் தெரியும். காலையில் 9 மணியிலிருந்து சாயங்காலம் 5 மணி வரைக்கும் தானே நடிக்கிறார். எனக்கு 6 லிருந்து ராத்திரி 9 வரைக்கும் ஒரு அரை கால்ஷீட் வாங்கித் தந்தீங்கன்னா நான் பொழைச்சுக்குவேன்.’

    வாழ்ந்து கெட்டவர்’ என்கிறப் பரிதாபத்தோடும், வித்தியாசமான கதைக்கருவோடும் ‘அன்னை இல்லத்தை’ அண்டி நின்றார் ஏ.பி.என். குரு பார்வையை விட உயர்ந்ததாகப் படைப்பாளிகள் நினைத்தது சிவாஜிகணேசனின் விழி அசைவை. அது காட்டிய வழியில் வெளிச்சம் பெற்றவர்கள் ஏராளம்! தமிழ் சினிமாவில் முதல் மண்வாசனைக் கலைஞன் ஏ.பி.என்! அவரது எழுத்தாற்றல் திரும்பவும் உச்சம் தொட உதவியது.

    ‘நான் தற்போது மிகச் சிரமமான நிலையில் இருக்கிறேன். சிவாஜி எனது ‘நவராத்திரி’ படத்தில் 9 வேடங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். கையில் நயாபைசா கிடையாது. ஆனால் சினிமாவை எடுத்து வெளியிட வேண்டும். மிகப் பெரிய அளவில் நவராத்திரி பற்றியச் செய்திகளையும் விளம்பரங்களையும் பத்திரிகைகளில் வெளியிட்டு உதவுங்கள். அதைப் பார்த்ததும் பைனான்சியர்கள் என்னைத் தேடி வருவார்கள்.’

    ‘மின்னல்’ என்கிற பெயரில் சினிமா பப்ளிசிடி கம்பெனி நடத்தியவர் எம். உதுமான் முகையதீன். அவரிடம் ஏ.பி. என். வைத்த வேண்டுகோளுக்கு நல்ல பலன் கிடைத்தது.

    பூஜ்யத்திலிருந்து தொடங்கியது நடிகர் திலகத்தின் முதல் நூறு! சிவாஜியும் சாவித்ரியும் நமக்குக் கிடைத்திருக்காவிட்டால், பல அற்புதமானப் பொற்காலச் சித்திரங்களைத் தமிழ் சினிமா நிச்சயம் இழந்திருக்கும்.

    புத்தம் புதிதாக ‘ஸ்ரீவிஜயலட்சுமி பிக்சர்ஸ்’ என்கிற பேனரில் நவராத்திரி உருவானது.

    நள்ளிரவில் காதலன் ஆனந்தனைத் தேடி அலையும் பரிதாபகரமான ‘நளினி’ என்ற வித்தியாசமான ரோல் சாவித்ரிக்கு. 9 வேடங்களில் நவரஸங்களைக் கொட்டித் தீர்த்த சிவாஜிக்குப் போட்டியாக சாவித்ரி ஒவ்வொரு எபிசோடிலும் நடிப்பில் இலக்கியம் படைத்தார்.

    அதிலும் திரையில் பத்து நிமிஷம் நடைபெறும் ‘சத்தியவான் சாவித்ரி’ தெருக்கூத்து விசேஷ விருந்து.

    எனக்குத் தெரிந்து 85 ஆண்டு காலத் தமிழ் சினிமா வரலாற்றில், வேறு எந்த வேற்று மொழி நாயகியும் சாவித்ரியைப் போல் தெருக்கூத்து ஆடியது கிடையாது. அதைப் பற்றி சிவாஜி தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

    ‘தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, சாக்கியர் கூத்து போன்றவற்றைச் சிறு வயதிலேயே பார்த்துப் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டவன் நான். அவற்றில் பாடுகின்ற முறை, வசனம் பேசுகின்ற லாகவம், மேடையில் தோன்றும் விதம் எல்லாமே சற்று வித்தியாசமானவை.

    நவராத்திரி படத்தில் அத்தகையக் கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் அக்காட்சியை அமைத்த டைரக்டருக்கும், எனக்குச் சமமாக ஆடிய சாவித்ரிக்கும் அந்தப் பெருமை சேரும். நவராத்திரியில் நடித்தது எனது திறமைக்கு ஒரு சோதனை.’

    சிவாஜி பார்த்துப் பரவசப்பட்டு நடித்ததை சாவித்ரி பார்க்காமலேயே வெளுத்துக் கட்டினார்.



    ‘வந்தேனே... ஏஏஏ... வந்தேனே... ஏஏஏ... ராஜாதி ராஜன் மகன் மகாராஜன் பிறந்ததாலே ராஜாதிராஜன் வந்தேனே...

    வந்தேனய்யா வந்து நின்று சபைக்கு வந்தனம் தந்தேனய்யா...’

    எனத் தொடங்கும் தெருக்கூத்து சிவாஜி- சாவித்ரியின் ஜோடிக் குரலிலேயே முழுவதும் பாடப்பட்டது. இடை இடையே ‘வசீகர வயாகரா’ வசனங்களும் நிறைய உண்டு.

    ‘இன்னும் மணமானதோ... ஓஹோ! இல்லையோ... சொல்லு. இச்சை கொண்டேன் கேட்பதற்கு லஜ்ஜையும் ஆகாது.’

    ‘சொல்ல வெட்கமாகுதே. ஓஹோ! இன்னும் மணமில்லை.’ சொந்தமான தந்தை தாயார் எண்ணிடவுமில்லை.’

    ‘அதாகப்பட்டது ப்ரபோ...’

    ‘பெண் பாவாய்’

    ‘என் திருமணத்தைப் பற்றி தாய் தந்தையர் நினைக்கவும் இல்லை. நானும்... - நேற்று வரை அதைப் பற்றிச் சிந்திக்கவும் இல்லை’

    ‘இன்றென்னவோ...’

    ‘அதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா ஸ்வாமி!’

    ‘ரூப சித்திர மாமர குயிலே உனக்கொரு வாசகத்தினை நான் உரைத்திட நாடி நிற்கிறதா...! அன்பினால் இன்பமாய் இங்கு வா ...’

    ‘அட்டி ஏது? இதோ கிட்டி வாரேன்.’

    ‘சித்தமானேன். சமீபத்தில் நீ வா’

    ‘மன்னா என் ஆசை மறந்திடாதே!’

    ‘சகி! உன் ஆசை நானோ மறப்பதில்லை.’

    ‘மறந்திடாதே!’

    ‘மறப்பதில்லை.’

    ‘தங்கச் சரிகை சேல எங்கும் பளபளக்க’ என கூத்தில் பாடியவாறு தோன்றும் சாவித்ரியின் தஞ்சாவூர் பொம்மை போன்ற பாந்தமான தோற்றமும், அங்க அசைவுகளும், காட்டும் முக பாவங்களும், ஸ்வாமி! என்று இழுத்துக் கூப்பிடும் அழகும், கைக்குட்டை வீசி ஆடும் ஆட்டமும், கூத்து முடிந்ததும் மூச்சு வாங்க போடும் கும்பிடும் அபாரம். எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாதது.

    தாய்மைப் பேறடைந்தத் தனக்காகக் காத்திருந்து, வடிவுக்கு வளைகாப்பில் நஷ்டத்தைச் சந்தித்த ஏ.பி. என்னுக்குக் கை கொடுத்துத் தூக்கி விடும் தூய உள்ளம் சாவித்ரிக்கு இருந்தது. அதற்காகத் தூக்கத்தையே மறந்து, அதுவரையில் கடைப் பிடித்த கொள்கையையும் தியாகம் செய்தார் நடிகையர் திலகம்.

    ‘இரவு ஷூட்டிங்கில் நடிப்பதை நான் பொதுவாக விரும்புவதில்லை.அப்படி நடித்தால் மறுநாள் மிகுந்த சோர்வாக இருக்கும்.அதற்குத் தேவையான ரெஸ்ட் கிடைப்பதும் அரிதாக இருந்தது.

    ‘மிகுந்த வெளிச்சத்தில் குளோஸ் அப் அதிகமாக எடுத்துக் கொள்ளாதே. கூடியவரையில் இரவு ஷூட்டிங் வேண்டாம். முகத்தின் பொலிவு கெட்டு சீக்கிரம் முற்றிப் போய் விடும்.’

    என்று அடிக்கடி என்னுடன் நடித்த என்.டி. ராமாராவும், நாகேஸ்வர ராவும் சொல்வதுண்டு. அது ஓரளவுக்கு உண்மை. என்னுடைய முகம் கள்ளமில்லாத குழந்தை முகமாக இருக்கிறது என்று பல ரசிகர்கள் குறிப்பிடுவது உண்டு. அதற்குக் காரணம், நான் கூடிய வரை இரவு ஷூட்டிங்கை மேற்கொள்ளாதுதான்.

    ஆனால் நவராத்திரி மட்டும் விதிவிலக்கு. படப்பிடிப்புக்கும் பெயருக்கும் நல்ல பொருத்தம். இரவு வேளைகளில் தான் அந்தப் படத்தின் ஷூட்டிங்ஸ். சரியான ராத்திரிப் படம்! டைட்டிலுக்கேற்றவாறு அமைந்து விட்டது.

    வராத்திரியில் நடிக்கிற போது அது அண்ணனின் 100வது படம் என்று எனக்குத் தெரியாது. சிவாஜியோடு யார் நடித்தாலும் அவரது நடிப்புக்கேற்ற ரீ ஆக்ஷன் பண்ணியாக வேண்டும். அவர் கூட நடிப்பது ரொம்பவும் எளிதானது.

    நாம் டல்லடித்து விடக்கூடாது என்ற வீம்பும் பிடிவாதமும் கூட நடிப்பவர்களுக்குத் தானாகவே வந்துவிடும். சத்யவான் சாவித்ரி தெருக்கூத்தை முழுக்க முழுக்க அவரிடமே பாடம் பண்ணிக்கொண்டு நடித்தேன். காரணம் தெருக்கூத்தை நான் பார்த்தது கிடையாது.

    பைத்தியக்கார ஆஸ்பத்திரி சம்பவங்களில் டாக்டராக வரும் சிவாஜியை, அவர் முன்னிலையிலேயே சில காட்சிகளில் குறும்பாக இமிடேட் செய்து நடித்தேன். நான் அவ்வாறு நடிப்பதை அவர் ஆர்வமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    த்தனைப் பெரிய நடிகர் சிவாஜி! நான் அவரை கேலி செய்வதாக நினைக்காமல், பெருந்தன்மையுடன் என்னைப் பாராட்டினார். ரசிகர்களும் அதற்குக் கலகலப்பாகக் கைத்தட்டினார்கள். மற்ற பிரபல ஹீரோக்களிடம் அது சாத்தியமா என்ன...?’ - சாவித்ரி.

    ‘நவராத்திரியில் கதாநாயகியாக சாவித்ரி ஜே ஜே என்று நடித்து இருக்கிறார்’ என குமுதம் நடிகையர் திலகத்தைப் பாராட்டியது.

    பீம்சிங்குக்குப் பிறகு ஏ.பி.என்.இயக்கத்தில் சிவாஜி- சாவித்ரி தொடர்ந்து சங்கமித்தனர். நவராத்திரியை அடுத்து வரலாறு காணாத ஆன்மிக பிரம்மாண்டமாக திருவிளையாடல் உருவானது. சாவித்ரி அதில் ஈஸ்வரி. சக்தி ஸ்வரூபமாக, பெண் உரிமைக்காக சிவனிடம் போராடும் வேடம். ‘சிவா’ ஜியுடன் ஒப்பிடும் போது சாவித்ரிக்கு நடிப்பாற்றலைக் காட்டும் வாய்ப்பு குறைவு.

    இருந்தாலும் படகோட்டி சரோவுக்குப் போட்டியாக, அலைகளில் எதிர்பார்ப்புடன் ஏராளமான காஸ்ட்யூமில் சாவித்ரியும் பாடினார். ‘ ஏலே எலோ... நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு’ பாடற் காட்சி அடங்கிய கடற்கரை சம்பவங்கள் ரசிகர்களுக்கு நிறைவளித்தது.

    வெகு காலம் வரையில் இலங்கை வானொலியில் திருவிளையாடல் வசனங்களை ஒலிபரப்பி, ‘நல்ல தமிழ் கேட்டீர்கள்’ என அறிவித்தார்கள். ஒவ்வொரு ஆடி பிறந்ததும் அம்மன் உற்சவங்களில் மூலை முடுக்கெல்லாம் திருவிளையாடல் ஒலிச்சித்திரம் கேட்கும்.



    வலைத்தளம், செல்போன், வாட்ஸ் அப், ட்ப்ஸ் மேஷ் என ஏதேதோ வந்து விட்டன. நாத்திகம் கொடி கட்டிப் பறந்த 1965ன் ஆடி அமாவாசை முதல், ஐம்பது ஆண்டுகளாக திருவிளையாடலில் சாவித்ரியின் சந்தனக் குரல், நம் செவிகளில் திரும்பத் திரும்ப பக்திமணம் கமழச் செய்கிறது.

    ‘திருவிளையாடலில் எனக்குப் பார்வதி வேஷம். அதுவும் பச்சை நிற மேக் அப். அதைப் போட்டுக் கொள்ளும் போது எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது. ஆனால், அப்புறம் படத்தில் அதுவே பிரமாதமாகப் பொருந்தி விட்டது.

    பரமசிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் அப்படியோர் அமைப்பை நீங்கள் எங்கே பார்ப்பது? நாங்கள் காலண்டரைப் பார்த்து அமைத்துக் கொண்டோம்!’ - சாவித்ரி.

    சென்னையில் முதன் முதலாக சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி என்று மூன்று தியேட்டர்களில் மகத்தான வசூலுடன் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் திருவிளையாடல். தேசிய அளவில் பாராட்டுப் பத்திரமும் அதற்குக் கிடைத்தது.

    கே. பாலசந்தரின் நாணல் படத்தில், ‘விண்ணுக்கு மேலாடை’ பாடல் காட்சியை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அதில் ‘சாந்தி’யில் திருவிளையாடல் ஓடிய காலம் கண்களில் தெரியும்.

    கற்பூர ஆரத்தி!

    திருவிளையாடலைத் தொடர்ந்து உடனடியாக ஏ.பி. என். கூட்டணியில் சரஸ்வதி சபதம் தொடங்கியது. சாவித்ரி- சரஸ்வதி. பத்மினி- பார்வதி. தேவிகா- மகாலட்சுமி.சிவாஜி கணேசன் நாரதராகவும், சரஸ்வதியால் ஊமையாக இருந்து ஞானம் பெற்றப் புலவராகவும் இரு வேடங்களில் நடித்து முப்பெரும் தேவியருக்கும் வேலை இல்லாமல் செய்து விட்டார்.

    மகன் சதீஷை வயிற்றில் சுமந்தவாறு கர்ப்ப ஸ்திரீ சாவித்ரி, சந்தோஷ சங்கடத்துடன் நடித்த படம் சரஸ்வதி சபதம். அம்மாவோடு ஷூட்டிங்குக்குச் சென்ற ஆறு வயதுச் சிறுமி விஜியை வியப்பில் ஆழ்த்தினார் டைரக்டர் ஏ.பி. நாகராஜன். அன்று ‘கோமாதா என் குலமாதா’ என்கிற ஏழு நிமிட பாடலைப் படமாக்கினார்கள்.

    தினமும் முதல் காட்சி படமாகும் வேளையில் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி, கலைஞர்கள் பய பக்தியோடு சாமி கும்பிடுவது சினிமா சடங்கு. ஏ.பி. என். என்ன செய்தார் தெரியுமா...?

    சாவித்ரி முழுதாக அரிதாரம் பூசி சர்வ அலங்காரத்துடன், சரஸ்வதி தேவியாக சத்திய லோகம் செட்டுக்குள் நுழைவார். நடிகையர் திலகத்தை அரங்க வாசலில் நிறுத்தி, அவருக்கு உச்சி முதல் பாதம் வரை திருஷ்டி கழித்து கற்பூர ஆரத்தி காட்டினார்.

    சரஸ்வதி சபதத்துக்கு முன்னும் பின்னும் எத்தனையோ பக்திச் சித்திரங்கள் திரையை ஆக்ரமித்து இருக்கின்றன. அவ்வளவு ஏன் நாடு விடுதலை பெறும் வரையில் புராணப் படங்களே அதிகம் தயாரானது.

    கவுன் அணிந்து கவர்ச்சி காட்டிய அநேக கனவுக் கன்னிகள் மார்க்கெட் இழந்ததும், அம்மன் வேடத்தில் ஆன்மிகம் பரப்புவது கோலிவுட் வாடிக்கை. ஆனால் சாவித்ரிக்கு நடந்தது போல் அவர்கள் யாருக்காவது நேர்ந்திருக்கிறதா ...?

    ஒரு வேளை தொடர்ந்து சாமி படங்களில் நடித்துள்ள ‘நம்ம வீட்டு தெய்வம்’ கே.ஆர்.விஜயாவை, யாராவது ஏ.பி. என். போல் இறைவியாக அர்ச்சித்து இருக்கிறார்களா...? தெரிந்தால் சொல்லுங்கள்.

    1966 ஆயுத பூஜைக்கு வெளியாகி சரஸ்வதி சபதமும் சென்னை ‘சாந்தி’யில் 133 நாள்கள் ஓடியது. சாவித்ரி டைட்டில் ரோலில் நடித்து தமிழில் வெற்றி பெற்ற கடைசிப் படம் அதுவே.
    Last edited by Barani; 4th July 2015 at 11:19 PM.

  6. #3454
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    பங்காரு பாபு தெலுங்கு படத்தில் இடம்பெற்ற அரிதான வசந்த மாளிகை ஷூட்டிங் சீன் !


  7. #3455
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    நடிகர் திலகத்தின் அருந்தவப்புதல்வரும் அகில இந்திய சிவாஜி மன்றத்தலைவருமான திரு ராம்குமார் கணேசன் அவர்களின் பிறந்த நாளையொட்டி மன்ற நிர்வாகிகளும் ரசிகர்களும் 04.07.2015 அன்று காலை அவரை சந்தித்து வாழ்த்துக் கூறினார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் வெளியீட்டினையொட்டி நமது நண்பர் திரு எஸ்.கே. விஜயன் அவர்கள் கொண்டு வந்துள்ள சிறப்பு மலர் ஒன்றினை திரு ராம்குமார் அவர்கள் அப்போது வெளியிட, மாநில நிர்வாகி திரு முருகவிலாஸ் நாகராஜன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.



    மலர் பற்றிய மேல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
    Last edited by RAGHAVENDRA; 5th July 2015 at 08:04 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Thanks Subramaniam Ramajayam thanked for this post
  9. #3456
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் வடிவ வெளியீட்டினையொட்டி திரு எஸ்.கே.விஜயன் அவர்கள் தொகுத்து திரு ராம்குமார் கணேசன் அவர்கள் வெளியிட்ட சிறப்பு மலரின் முகப்பு. மலர் பற்றி மேல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி -

    இதயவேந்தன் வாசகர் வட்டம்,
    257, பவுடர்மில்ஸ் ரோடு,
    காந்திஜி நகர், புளியந்தோப்பு,
    சென்னை-600012.

    கைப்பேசி எண் 9941798850

    திரைப்படம் வெளியாகும் தருணத்தில் மலரை விற்பனைக்குத் தர உத்தேசித்துள்ளனர்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #3457
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  11. Likes Russellmai liked this post
  12. #3458
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like





    தியாகம்

    ஜமீன்தாரின் பேரன் ராஜா.படித்தவர்.ஏழைகளுக்கு உதவும் கர்ணன்.டாக்டரின் தங்கை ராதா.இருவரும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் போல் காதலர்கள்.வசந்த மாளிகை போல் இருக்கும் அந்த ஜமீன் வீட்டு கணக்குப்பிள்ளையின் சதியால் ராஜா சிறைக்கு செல்லும்படி ஆகிறது.எதிர்பாராதது நடந்து விட்ட இந்த விஷயங்களால் ராதாவின் நட்பும் இழந்த காதல் ஆகி விடுகிறது.சிறைதண்டனை க்கு பின் ராஜா தன்னுடைய வாழ்க்கை முறைகளை முறைகளை மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.ராதாவைப் பார்க்கும் சமயங்களில் எல்லாம் தன் பழைய வாழ்க்கையை திரும்பிப் பார் த்து ஆறுதல் பட்டுக் கொள்வார்.
    அந்த ஊருக்கு புதிதாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாவின் நடவடிக்கைகளை பார்த்து அவருடைய இந்த நிலைக்கு என்ன காரணம் என்பதை அறிந்து ராஜாவிடம் உனக்காக நான் என்றுநட்பு கொள்கிறார்.
    நேர்மையான இன்ஸ்பெக்டர் என்று ராஜாவும் உணர்ந்து இன்ஸ்பெக்டருக்கு முதல் மரியாதை அளிக்கிறார்.
    கணக்குப்பிள்ளையின் சதிகள் தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என சில சம்பவங்களின் மூலம் தெரியவருகிறது.
    நெஞ்சங்கள் பாரந்தாங்கிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் ராதாவுக்கும் ராஜாவின் உண்மையான அன்பு புரிகிறது.
    பிறகென்ன அனைத்தும் சுபமாக முடிகிறது.

    கதைநாயகனைப் பற்றி..
    ராஜாவாக நடிப்புச்சிங்கம் சிவாஜி.அது என்ன நடிப்புச்சிங்கம்?
    காட்டுக்கு ராஜா சிங்கம்.நடிப்புக்கு ராஜா நடிகர்திலகம்.படத்திலும் பெயர் ராஜா.எல்லாமே பொருந்திப் போவதால் நடிப்புச்சிங்கம்.

    அமர்க்களமாக ஆரம்பிக்கும்ஆரம்பக்காட்சியில் தோளில் மீன்கூடையை சுமந்து கொண்டு அப்படியே சிகரெட் பிடிச்சுகிட்டுநடந்து வரும் அழகு இருக்கின்றதே.ஆயிரம் கண் போதாது அப்படின்னு அவருடையபாடலைத்தான் உவமையாக சொல்ல வேண்டும்.யானையின் நடையழகுபார்ப்பதற்கு அழகாக இருக்கும.்ஒரு பெரிய யானை அப்படியே மெல்ல மெல்ல அசைந்து அசைந்து நடந்து வரும் அழகை பார்த்திருக்கிறீர்களா?இது அதுக்கும் மேலே.அந்த நடையையே ஒரு 3மணி நேரத்திற்கு காண்பித்தாலும் சலிக்காது என்பது போல் அமைந்திருக்கும் அந்தக் காட்சி.

    கலர் கலரா பொடிகள் பறக்க .பக்க வாத்தியங்கள் பட்டைய கிளப்ப ஒரு சூறாவளிக்காற்று சுழன்று அடிச்சா எப்படி இருக்குமோஅப்படி ஒரு ஆட்டம் ஆடிக்கொண்டே கோவிலுக்குள் நுழையும் காட்சி இருக்கின்றதே.அதிர வைக்கும் காட்சி அமைப்பு.தேங்காய் வந்து கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லும்போது ஆடி வந்த வேகத்துடன் நின்று மூச்சு வாங்கிக்கொண்டேமுகத்தில் வேர்வை வழிய நாவால் உதட்டைலேசா தடவிக்கொண்டேஒரு பார்வை பார்ப்பார்.அந்த ஒரு கடினமான காட்சியிலும் சர்வ சாதாரணமாக கம்பீரமான முக பாவனையை வெளிப்படுத்தியிருப்பார்.

    எச்சில் இலை மேலே பறந்தாலும் எச்சில் இலைதான்
    கோபுரம் கீழே சாய்ஞ்சாலும்கோபுரம்தான்
    இந்த இரண்டு வரி வசனத்தில் இடம் பெறும் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு தொனியுடன்,ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு விதமான முகபாவத்தைக் காட்டி பேசியிருப்பார்.அந்த காட்சி ஆரம்பிக்கும் ஆரம்பமே அசத்தலாக இருக்கும்.தேவையில்லை இன்ஸ்பெக்டர்.,நானே வந்துட்டேன் னு சொல்லி ஸ்டேசன் வாசலில் வந்து நின்று கொண்டு ஒரு போஸ் கொடுப்பார்.அவர் அப்படி வந்து நிற்பதுக்கும் நம் உடம்பின் ரோமங்கள் சிலிர்ப்பதுக்கும் என்ன சம்பந்தம்?அதுதான்உன்னதமான நடிப்பும் உண்மையான ரசிப்பும் இணைந்த பிணைப்பு.இது போகபோக வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
    அந்த ஸ்டேசன் காட்சிகள்பசுமரத்தாணி காட்சிகள்.

    நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு பாடல் காட்சியில்நின்று கொண்டே அவர்பாடும் ஸ்டைல்,ஸ்டைல் என்று ஒன்றும் செய்யாமலேயே மிகப்பெரிய ஸ்டைலாக அமைந்த காட்சி.மனிதனம்மா மயங்குகிறேன்என்று அவர் பாடும்போது ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு முகபாவனையை வெளிப்படுத்தியிருப்பார்.அந்த பிரேமை ஸ்லோமோஷனில் வைத்து ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்கும் போது நிறுத்தி நிறுத்தி பார்த்தால் அவர் வெளிப்படுத்திய அந்த பாவனைகள்வியப்பின் உச்சம்.
    ம எழுத்துக்கு ஒரு பாவம்,அடுத்த எழுத்து
    னி எழுத்துக்கு ஒரு பாவம் இப்படி எழுத்துகளை உச்சரிப்பதுக்கு கூ ட முகபாவனைகளை வெளிப்படுத்தியிருப்பார்நடிப்புச்சிங்கம்.
    இந்தப் படத்தை ஷாட் பை ஷாட்டாக
    ரசித்துக்கொண்டே இருக்கலாம்.முகபாவனைகளையும்,அங்க அசைவைகளையும் கொண்டே அற்புத ங்களை நிகழ்த்திய படம்.
    மேலும்,

    இன்ஸ்க்டரிடமே சிகரெட் எடுத்து அதை பற்ற வைப்பது,அப்படியே இன்னொரு சிகரெட்டை எடுத்து காதில் வைப்பது,

    உங்க தங்கச்சிக்கு இதயம் இருக்கான்னு முதல்ல செக் பண்ணுங்க டாக்டர் னு மேஜரிடம் சொல்வது

    வி கே ஆரிடம் சவால் விடுவது, அவரை கிண்டல் செய்து பாடும் பாடல் காட்சிகள்

    மீன் மார்க்கெட் சண்டைக்காட்சிகள்,
    சைக்கிள் போட்டி,
    என்று படம் முழுவதும்அமர்க்களமான காட்சி அமைப்புகளைகொண்டிருக்கும்.

    கர்ணன்.,கட்டபொம்மன்.,கப்பலோட்டிய தமிழன் காவியப்படங்கள்.கமர்ஷியல் படங்களில்காவியப்படம் தியாகம்.
    மற்றவர்கள் கடினமாக முயற்சி செய்தாலும் கொண்டுவர முடியாத முக பாவனைகளையும்,அங்க அசைவுகளையும் சர்வ சாதாரணமாக நடிகர்திலகம் வெளிப்படுத்திய படங்களில் ஒன்றுதான்

    தி
    யா

    ம்
    Last edited by senthilvel; 5th July 2015 at 02:06 PM.

  13. #3459
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தியாகம் பற்றிய தங்கள் பதிவு அருமை செந்தில்வேல்

    மேலும் பல படங்களைப் பற்றி உங்கள் கைவண்ணத்தில் எதிர்பார்க்கும் ஆவலை உண்டாக்கி விட்டது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks Georgeqlj thanked for this post
  15. #3460
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் செப்டம்பர் 20, ஞாயிறு அன்று மாலை சென்னை தியாகராய நகர் வாணி மகால் பிரதான அரங்கில் திருவிளையாடல் திரைக்காவியத்தின் பொன்விழா நடைபெற உள்ளது.

    இதைப் பற்றிய மேலும் ஒரு TEASER நிழற்படம் தங்கள் பார்வைக்கு...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Thanks eehaiupehazij thanked for this post
    Likes sss, Russellmai, ainefal, Georgeqlj liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •