Page 326 of 401 FirstFirst ... 226276316324325326327328336376 ... LastLast
Results 3,251 to 3,260 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #3251
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,

    எதிரொலி படத்தின் ஹைலைட் காட்சிகள் சிலலவற்றைப் பற்றிய நினைவுகள் அருமை. நடிகர்திலகமும் அற்புதமாகப் பண்ணியிருந்தார். கே.பியும் சிறப்பாக கையாண்டிருந்தார். ஏன் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பது இன்றுவரை கேள்விக்குறியே.

    இயக்குனரின் தலையீடும் அதிகம் இல்லையென்பதை கே.பி. அவர்களின் பல பேட்டிகளில் அறியலாம். அவர் சொன்னது "இப்படத்தின் ஹீரோ சிவாஜியாக இருந்ததால் சீன் பை சீனாக காட்சிகளை விளக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லாமல் இருந்தது. காட்சியைப்பற்றிய விளக்கத்தை மட்டும் அவரிடம் சொல்லிவிட்டு நான் ஒதுங்கிக்கொள்வேன். காட்சியை நான் எதிர்பார்த்ததுக்கு மேலாக நடித்துக் கொடுத்து விடுவார். பல காட்சிகளில் இரண்டாவது டேக் எடுத்ததே கிடையாது. படம் நிச்சயம் பெரிய வெற்றி பெரும் என்று நானும் எதிர்பார்த்தேன். ஆனால் படம் வெற்றிபெறாமல் போனாலும், நான் மன திருப்தியோடு செய்த நல்ல படங்களில் எதிரொலியும் ஒன்று என்பதை மறுக்க முடியாது. வெற்றி பெற்ற பல படங்கள் என் மனதைவிட்டு அன்னியப்பட்டு நின்றாலும், வெற்றி பெறாத எதிரொலி, புன்னகை, அவர்கள் போன்றவை எனக்கு மிகவும் பிடித்தவை".

    நீங்கள் குறிப்பிட்டதுபோல படத்தில் மேஜர் செம வில்லன். பேச்சிலேயே அருமையாக வில்லத்தனம் செய்வார். "அப்படி ஒரு போர்ட்டரே இல்லையே தொரை" என்னுமிடத்திலும், விஜயலலிதாவிடம் "சத்தியமா இனிமே அவரை பணம் கேட்டு மிரட்டமாட்டேன், பழைய காரணத்தை சொல்லி" என்றவாறு தனது புதிய மிரட்டல் ஆயுதமான போட்டோவை காட்டும் இடத்திலும் அட்டகாசம். மற்ற படங்களில் இவரைப்போய் கதாநாயகிகளின் அப்பாவாகவே காட்டிய மற்ற இயக்குனர்களை என்ன சொல்வது.

    எதிரொலி பற்றி நிறைய பேசியிருக்கிறோம். இன்னும் நிறைய பேசவேண்டும்.

  2. Thanks Gopal.s thanked for this post
    Likes KCSHEKAR liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3252
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னையில் 1972..ம் வருடம் ஓடிக்கொண்டிருந்த சினிமா படங்கள்...a sweet memory




    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  5. Likes KCSHEKAR, ainefal liked this post
  6. #3253
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

  7. #3254
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாலாடை படம் நாளாகி வந்த படம். பீம்சிங் பிசியாகி விட்டதால் Associates திருமலை-மகாலிங்கமே பெரும் பகுதியை இயக்கினர்.கமலா movies ,சந்தானம் தயாரிப்பில் வெளிவந்த இந்த படம் சுமார் வெற்றியையே ஈட்டியது. பல குறைகள் ,பிழைகள் மலிந்த படம். சீரான ஓட்டம் இருக்காது. (தொபேலென்று உப்பு சப்பில்லாத சம்பவங்களில் நகரும். ) நாகேஷ் படத்தை ஆக்கிரமித்து சிரிப்பும் வராமல் குட்டிசுவர் ஆக்குவார். இந்த அழகில் டூயட் வேறு.

    இந்த படத்தில் நான் ரசித்தது பிலஹரி என்ற ராமனின் அற்புத வசனங்கள்,பாத்திர வார்ப்புக்கள். ஒப்பு கொள்ளும் படி லாஜிக்.
    சிவாஜி-பத்மினி-கே.ஆர்.விஜயா ஆகியோரின் அற்புத பங்களிப்பு.
    இந்த இணையில் சிவாஜிக்கு அடுத்து விஜயாவே ஸ்கோர் செய்வார்.(இரு மலர்களிலும் அப்படியே)

    1)இதில் அற்புதமான விஷயம் சிவாஜி பாத்திரங்களுடன் கொள்ளும் உறவு.கதையுடன் அற்புதமாக விரியும். முதலில் கணவன்-மனைவு அன்னியோன்யம், அடுத்தது குழந்தை பெற வாய்ப்பில்லை என்ற குறையை முழுங்கி வாழும் ஏமாற்றம் மறைக்கும் காதல் வாழ்வு, தான் பார்த்து வளர்ந்த விஜயாவை குழந்தை போல பாவிப்பது,
    பத்மினி தன்னை திருமணத்துக்கு வற்புறுத்தும் போது அரை மனதாக சம்மதித்தாலும், விஜயாவை எந்த விதத்திலும் புண் படுத்தாமல் உறவில் திளைக்கவும் முடியாமல் இருதலை கொள்ளி நிலை,பத்மினி கர்ப்பம் என்றதும் எல்லாவற்றையும் உதாசீனம் செய்து துச்சமாக நினைத்து பத்மினியிடம் முழு அன்பை பொழிவது,பின் விஜாயாவை மனைவியாக மதிக்க நிர்பந்திக்க படும் நிலையில் அவருடம் ஒட்டா உறவு என அற்புத நடிப்பு. அடடா ,அந்த மேதை இந்த nuisance புரிந்து நடிக்கும் பாங்கு ,படத்தை திரும்பி திரும்பி பார்க்க வைக்கும். கே.ஆர்.விஜயாவுக்கும் ரொம்ப சிக்கலான பாத்திரம். அற்புதமாக கையாண்டு மெருகேற்றுவார். ஏமாற்றம் இருந்தாலும், முழுங்கி அத்தானுடன் சிறுமி நிலையிலேயே தொடர்வார். அக்காவை முன்னிட்டு வெளி காட்டவும் முடியாத நிலை. கடைசியில் வெளி கொணருவார். பத்மினியை முழுங்கி ஏப்பம் விடுவார் நடிப்பில்.(ஒரு வேளை பாத்திர வார்ப்பினாலா)

    2)பிள்ளையில்லா ஏக்கத்தில் ,தன் கனவான fantasy மயக்கத்தில் கே.ஆர்.விஜயாவிடம் ,தன் வீட்டிற்குள் ஒரு சிறுவன் புகுந்து அட்டகாசம் செய்ததை, தான் அவனை கண்டிக்க முடியாமல் நேசத்தின் பார்ப் பட்டதை விவரிக்கும் பாங்கு. இதனால்தானா ,இந்த மனிதரிடம் அடிமை பட்டு வாழ்கிறோம்.

    3) இது ஒரு trivial விஷயம் என்றாலும் சிவாஜி-கே.ஆர்.விஜயா இணையில் எனக்கு மிக பிடித்த காதல் காட்சி. ஓரளவு நெருக்கம். அழகாக வந்திருக்கும் இங்கே ஆஹா இங்கே பாடல்.(மற்றது ஒன்றா இரண்டா,சுகம் சுகம், பூ மாலையில்,அங்கே மாலை மயக்கம்)

    பாலாடை போன்ற dull படங்களை கூட நடிகர்திலகத்திற்காக ஐந்து முறை பார்க்க முடிகிறது.(இத்தனைக்கும் உலக பட ரசிகனாக்கும்)
    Last edited by Murali Srinivas; 23rd June 2015 at 06:47 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Likes Russellmai, KCSHEKAR liked this post
  9. #3255
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy Mr. Sudhangan facebook

    செலுலாய்ட் சோழன் – 79
    எம்.ஆர். ராதா சிவாஜியின் பெற்றோர்கள் மனதை கெடுத்துக்கொண்டிருக்கும் போது, சிவாஜி தன் வீட்டிற்கு வந்து சேருவார்!
    எம்.ஆர்.ராதா யார் என்பது தெரிந்ததும் அவரை சரியாக உதைத்து வெளியே அனுப்புவார்!
    இப்போது சிவாஜியின் பெற்றோர்கள் மனது சஞ்சலப்படும்.
    அப்போது சிவாஜியின் தாயார் ` அந்தப் பெண் நல்ல பெண் என்பதற்கு என்ன ஆதாரம் ? என்று கேட்பார் சிவாஜியின் தாயார்.
    `என் தாய் நல்லவங்கறதுக்கு நான் எப்படி ஆதாரத்தை காட்ட முடியும்’ என்பார் சிவாஜி
    அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று சொல்லிவிட்டு சாவித்திரி அதாவது எஸ்.எஸ்.ஆர் வீட்டிற்கு போவார்!
    ஆனால் அதற்குள் எஸ்.எஸ். ஆர் எழுதிய கடித்தை பார்த்த சாவித்திரி விஷத்தை குடித்திருப்பார்!
    சிவாஜி போய்ப் பார்க்கும் போது சாவித்திரி அப்படியே மயங்கி சாய்ந்து உயிரை விடுவார்!
    இறந்த அந்த பெண்ணுக்கு தாலி கட்டுவார் சிவாஜி
    படம் மிக அருமையாக ஒடியது!
    சிவாஜி படங்களில் பல நல்ல கதாபாத்திரங்கள் இருக்கும்!
    இந்தப் படத்தில் சாவித்திரி,எஸ்.எஸ். ஆர், கே.ஆர்.விஜயா எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர். ராதா என்று போட்டி போட்டுக்கொண்டு பியந்து உதறியிருப்பார்கள்!
    பாரதியாரின் ` சிந்து நதியின் மிசை நிலவினிலே’ என்கிற பாட்டை பிரபலப்படுத்தியிருப்பார்கள்.
    சிவாஜியைப் பொருத்தவரையில் படம் நன்றாக வரவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்!
    `சிவாஜி கண்ட சினிமா ராஜ்யம்’ புத்தகத்தில் வசனகர்த்தா ஆரூர்தாள் சிவாஜியில் குணநலன்களை அருமையாகச் சொல்லியிருப்பார்!
    `சிவாஜியிடம் சிறந்த நடிப்பாற்றலுடன் சீரிய நற்பண்புகளும் குடி கொண்டிருந்தன என்பது, அவருடன் நெருங்கி பழகி அவரை நன்கு புரிந்து கொண்டவர்களுக்குத்தான் தெரியும்.
    மனதார யாருக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டார்.
    தன்னால் ஒரு படமோ அந்தப் படத்தின் படப்பிடிப்போ பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார்.
    அவர் நடிக்கும் படங்களில், மனதளவுக்கு அவருக்கு ஒவ்வொத சக நடிகர்கள் இருப்பதை சிறிதும் பொருட்படுத்த மாட்டார். `இவர் வேண்டாம், அவரை போடு’ என்ற வார்த்தை அவர் வாயிலிருந்து வந்து நான் கேட்டதேயில்லை.
    எம்.ஜி.ஆருடன் பல படங்களில் இணைந்து நடித்து அந்நாட்களில் அவரோடு ஒரு ` காம்பினேஷன் மவுஸ்’ ஏற்படுத்திக்கொண்டிருந்த சரோஜாதேவியை, சிவாஜி ஃபிலிம்சின் சொந்த படம் ` புதிய பறவை’யில் கதாநாயகியாகப் போட்டுக் கொள்ளலாம் என்று தன் தம்பி சண்முகம் சொன்னதற்கு சிவாஜி எந்த வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.
    தான் நடிக்கும் படங்களின் `பாலிடிக்ஸ்’ பற்றி எந்த விவரத்தையும் அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாமல், தான் உண்டு,தன் நடிப்பு உண்டு என்று இருந்துவிடுவார்.
    தனக்கு இந்தப் படத்தில் இவ்வளவு சம்பளம் என்பதே அவருக்கு நினைவிருக்காது. முன்பணத்தையும், படம் முடிந்ததும் தரப்புடும் முழுப்பணத்தையும் அவர் தன் கையால் தொட்டதே இல்லை.
    சிவாஜி `ஃபிலிம்சிலிருந்து அவ்வப்போது, கடிதங்கள் வரும். அவற்றில் கையெழுத்துப் போடுவார். அந்த சமயங்களில் அவர் அருகில் அமர்ந்திருக்கும் என்னிடம் குறும்பாகக் கூறுவார்.
    ` சிவாஜி ஃபிலிம்ஸ் என்னை குத்தகைக்கு எடுத்திருக்கு.அந்தக் குத்தகை பத்திரத்திலதான் நான் இப்போது கையெழுத்தூப் போடறேன்.
    இதை நான் சிரித்துக்கொண்டே கேட்பேன், ` அண்ணே!, இப்போ ஒரு லட்ச ரூபாயை ஒங்க கையில குடுத்தா நீங்க என்ன செய்வீங்க?’
    `உடனே ஒங்கையில கொடுத்திடுவேன்’
    `எதுக்கு?’
    `சரியா இருக்கான்னு எண்ணிப்பாக்கறதுக்கு !’
    `ஏன் நீங்க எண்ணிப் பாக்க மாட்டிங்களா ?’
    `ஊகூம் எண்ணத் தெரிஞ்சாதானே? ஆமா... ஒரு லட்சத்தில எத்தனை ஆயிரம் இருக்கும்?’
    `நூறு ஆயிரம் இருக்கும்.’ என்று நான் சொன்னதைக் கேட்டு
    ஆச்சரியத்துடன், ` அடேங்கப்பா... நூறு ஆயிரமா? ஆயிரமே ரொம்பப் பெரிசாச்சே! சரி! ஆருரான் (ஆருர்தாஸைஅப்படித்தான் சிவாஜி அழைப்பார்) நான் இப்படிக் கேட்டதைஅ வெளியில சொல்லிடாதே’
    `ஏன்?’
    ` எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சுடுவாங்க’
    `உண்மைதானே, நடிப்பு ஒண்ணைத்தவிர வேறு எதுவுமே உங்களுக்கு தெரியாதுங்கறது நாடறிஞ்சதுதானே. நீங்கள் என்னைக் கேக்கறீங்க. நீ ஏண்டா சினிமாவுக்கு வந்தேன்னு’
    `ஆமா! தம் அடிக்க மாட்டேங்கறே! தண்ணி அடிக்க மாடேங்கறே! சீட்டாடத் தெரியாது. பெண்ணுங்க சகவாசன் இல்லே. இப்படி ஒன்னை எவன் சினிமாவுக்கு வரச் சொன்னான் ?’
    `தெரியாத்தனமா வந்துட்டேன். மன்னிச்சுடுங்க. இனிமே வரமாட்டேன்’
    `இனிமே என்னத்த வராம இருக்கிறது ? அதான் வந்து என் உயிரை வாங்கிக்கிட்டிருக்கியே அப்புறம் என்ன ?
    `உயிரை வாங்கிக்கிட்டிருக்கியேன்னு’ அவர் சொன்னது வசனம் பேசுவது சம்பந்தமாக சில நேரங்களில் சிவாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் எங்களுக்குள் உண்டாகும் வாய்ச் சண்டையை குறிக்கும் பொருட்டு!
    பண விஷயத்தில் ` நடிகர் திலகம்’ மட்டுமல்ல ` மக்கள் திலகமும் இவ்வண்ணமே.
    எம்.ஜி.ஆருக்கு நான் எழுதிய வண்ணப் படம் ஏவிஎம்மின் ` அன்பே வா’ சிவாஜிக்கு சிவாஜி ஃபிலிம்சின் ` புதிய பறவை’.
    இன்றைக்கு இந்த இரண்டு படங்களையும் புதுப்படங்களைப் போல பார்த்து பார்த்து ரசித்து இன்புறுகிறார்கள்.
    அந்த நேரத்தில் ஏவி.எம்.மின் ` காக்கும் கரங்கள்’ பிரசாத் ப்ரொடக்ஷன்ஸின் ` இதயக் கமலம்’ வாகினி ஸ்டுடியோவின் ` ஜகதலப் பிரதாபன்’ எம்.ஜி.ஆர் நடித்த ` தாலி பாக்கியம்’ `தாழம்பூ’ ` ஆசைமுகம்’ ஆகிய படங்கள் என் கையில் இருந்தது.
    தேவரண்ணன் மிக வேகமாக தயாரித்துக் கொண்டிருந்த `வேட்டைக்காரன்’ படத்துக்கு இரவு பகலாக எழுதி எழுதி விழிகள் சிவந்து, விரல்கள் வீங்கி போயிருந்த வேதனையான வேளை அது!
    அப்போதுதான் சிவாஜி ஃபிலிம்சின் `புதிய பறவை’ பறந்து வந்து என் தலையில் அமர்ந்து என்னைக் கொத்தியது.
    `புதிய பறவை’ க்கு நான் எழுத முடியாது என்று மறுத்த செய்தி சிவாஜியின் செவிகளுக்கு எட்டியது.
    உடனே, சிவாஜி படத் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த துரை என்பவரிடன் வினயமாக இப்படி கூறியிருக்கிறார்.
    `சாரை நான் பாக்கணும். சார் எங்கிட்ட வராரா ? அல்லது நான் சார் கிட்டே வரட்டுமா ? இப்ப நான் சொன்ன இந்த வார்த்தையை அப்படியே ஆருரான் கிட்ட போய் சொல்லு’
    துரை வந்து இப்படி சொன்னதும் அவர் கொண்டு வந்திருந்த காரில் ஏறி சிவாஜியை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றேன்.
    மாடிக் கூடத்தில் சிவாஜி, கமலாம்மா இருவரும் இருந்தனர்.
    என்னப் பார்த்தது சிவாஜி என்ன செய்தார் தெரியுமா ?

  10. Likes Russellmai, KCSHEKAR liked this post
  11. #3256
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    QATAR
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy Mr. Sudhangan Face book


    செலுலாய்ட் சோழன் – 80
    சிவாஜி அழைத்து அவரைப் பார்க்க போகிறார் கதை-வசனகர்த்தா ஆரூர்தாஸ். அவரே சொல்கிறார் அந்த சந்திப்பைப் பற்றி!
    என்னைக் கண்டதும் ஆசிரியரைக் கண்ட பள்ளி மாணவர் போல,எழந்து நின்று கைகுவித்து வணங்கியவாறு ( இதெல்லாம் பழைய நாடகக்காரர்களுக்கே உரித்தான குறும்பு என்பதை நான் அறியாதவனா என்ன ?)
    `வாங்க சார்! வணக்கம் உக்காருங்க! கமலா ஸாருக்கு வணக்கம் சொல்லிக்க (அவர் புன்னகை புரிந்தார்)
    சிவாஜி: `புதிய பறவை’ படத்துக்கு எழத முடியாதுன்னு சொல்லிட்டிங்களாமே ?’
    நான்: முடியாதுன்னு சொல்லலே! நேரமில்லைன்னுதான் சொன்னேன்’
    அவர்: மத்த படங்கள் எல்லாம் எப்படி எழுதறீங்க?’
    நான்: கஷ்டமாகத்தான் இருக்கு !’
    அவர்: அந்த கஷ்டத்தோடு இதையும் சேத்துக்க வேண்டியதுதான்!
    நான் : ( மெளனம்)
    இப்போது அவரது பேச்சின் தொனி மாறியது.
    சிவாஜி : ஏண்டா! ஒனக்கு என்ன தைரியம் இருந்தா என் படத்துக்கு எழுத மாட்டேன்னு சொல்லுவே? டேய்! இது சிவாஜி ஃபிலிம்ஸோட படம்.பா. first colour film! நீ ரொம்ப பிஸியா இருக்கேன்னு தெரிஞ்சுதான் இவ்வளவு நாளா உன்னை விட்டுவெச்சான் சண்முகம்.இல்லேன்னா முதல்லேயே உனக்கு அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணியிருப்பான்
    ஏவிஎம்க்கு எழுத நேரமிருக்கு. தேவருக்கு எழுத நேரம் இருக்கு.எம்.ஜி.ஆருக்கு எழுத நேரமிருக்கு! எனக்கு எழுத மட்டும் உனக்கு நேரமில்லையா ? முடியாதுன்னு சொன்னியாமே?’
    நான்: மன்னிக்கணும் வார்த்தை மாறுது. முடியாதுன்னு நான் சொல்லலே. முடியலேன்னுதான் சொன்னேன். முடியாதுன்னு சொல்றதுக்கும், முடியலேன்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு’
    சிவாஜி ( சற்று கோபத்துடன்) எங்கிட்டயே டயலாக் பேசிக் காட்டறியா நீ ?’
    நான் ( நிதானமாக) நான் டயலாக் பேசி காட்டறதுக்கு ஒங்களை விட்டா எனக்கு வேற யார் இருக்காங்க ?’
    இப்படி நான் சொன்னதும் ஒரு சிறு ஊமைப் புன்னகை அவருடைய உதடுகளின் இடையில் நெளிந்து ஒளிர்ந்தது. ஒப்பனை இட்டுக் கொண்டு படப்பிடிப்புத்தளத்தில் நடிக்கும் போதும் நடிக்காத மற்றா நேரங்களிலும் அவருடைய முகபாவங்கள் அனைத்தும் எனக்கு அத்துப்படி!
    அடித்த வேகத்தில் உயரே எழும்பிய பந்து சற்றைக்கெல்லாம் கீழே விழுந்து அடங்கிவிட்டதை நான் புரிந்து கொண்டேன்
    எனக்குச் சிரிப்பு வந்தது – சிரித்தேன்
    அவர் : என்ன சிரிக்கிறே ?’
    நான்: ஒண்ணும் இல்லே – இதே சிவாஜி அண்ணனை அஞ்சாறு வருஷத்துகு முந்தி நண்பர் ஜெமினி கணேசன் முதல் முதல்லே எனக்கு அறிமுகப்படுத்தி ` பாசமலர்’ படத்துக்கு என்னை வசனம் எழத வச்ச, அந்தப் பழைய காட்சி ஞாபக்த்துக்கு வந்தது. அதோட. சேர்ந்து சிரிப்பும் வந்தது’
    அவர்: என்ன கிண்டல் பண்றியா ? நீ ரொம்ப `பிஸி’ யா இருக்கேன்னு எனக்குத் தெரியும் .அதுக்குத் தகுந்த மாதிரி காசை வாங்கிட்டுப்போ. நீ ஒண்ணும் சலுகை காட்ட வேண்டாம்
    இதோ பார், இந்த படத்தை பொறுத்தவரையிலே சிவாஜி ஃபிலிம்சுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லே. எனக்கும் ஒனக்குந்தான் பேச்சு ( பக்கத்தில் நின்ற கமலாம்மாவிடம்) கமலா! ஐயாயிரம் ரூபா பணம் கொண்டா ( அவர் உள்ளே போனார்)
    நான் : அண்ணே! நான் காசை எதிர்பார்த்து இங்கே வரலை
    அவர்: ` என் படத்துக்கு எழுத மறுப்பேன்னு நானும் எதிர்பார்க்கலே’
    இதற்குள் கமலாம்மா கையில் கரன்ஸி நோட்டுக்களுடன் வந்தார்.
    சிவாஜி: ஒங்கையாலே அதை அவன்கிட்டே கொடு
    கமலா அம்மா என்ற ` பாக்கியலட்சுமி’ யின் கரத்திலிருந்து பணம் என்கிற ` தனலட்சுமி’ தானாக வந்தாள். தட்டாமல் வாங்கிக் க்ண்களில் ஒற்றிக் கொண்டு பையில் வைத்துக் கொண்டேன்.
    அந்த நாட்களில் முன்னனிக் கதை வசனகர்த்தாவுக்கு முன்பணமாக ஆயிரத்தி ஒன்றுதான் கொடுப்பார்கள். இயக்குனர்களுக்குத்தான் ஐயாயிரம் தருவார்கள். எனக்கு சிவாஜி கொடுத்த அந்த ஐயாயிரம் மிகவும் அதிகம். அது கணக்குப்பிரகாரம் கொடுத்தது அல்ல. என் எழுத்துக்கள் மீது அவர் கொண்டிருந்த காதலுக்காகக் கொடுத்தது என்பதை நான் அறிவேன்.
    சிவாஜி: இதோ பார் ! இது அட்வான்ஸ்தான். ஒணக்கு எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிக்க. எங்கிட்ட கேக்க வேண்டாம். ஒனக்கு எப்போ எவ்வள்வு தேவைப்படுதோ அம்மாகிட்ட கேளு. நீ வந்து கேக்கணும்னு அவசியம் இல்லே. ஒரு போன் பண்ணு. கொடுத்து அனுப்புவாங்க. எனக்கு வேண்டியதெல்லாம் படத்தோட மொத்தம் வசனங்கள் அடங்குன முழு ஸ்கிரிப்ட். எவ்வளவு சீக்கிரம் எழுத முடியுமோ எழுதி முடிச்சிட்டு,முதல்லேருந்து எல்லாத்தையும் எங்கிட்ட படிச்சுக் காட்டிடு.
    `பாசமலர்’ லேருந்து இது வரைக்கும் நீ எழுதின எந்த ஸ்கிரிப்டையும் நான் படிக்கச் சொல்லிக் கேட்டதில்லே. ஷீட்டிங்கல, செட்டுல நீ சொன்ன வசனத்தை நான் பேசியிருக்கேன் அவ்வளவுதான்.
    இந்தப் படத்துல என்னவோ எனக்கு ஒரு ` இண்ட்ரஸ்ட்’ ஏற்பட்டிருக்கு. அதோட டைரக்டர் தாதாமிராசி தமிழ் தெரியாதவன். ஆனால் நல்லா எடுப்பான். அதனால் தான் அவனைப் போட்டிருக்கோம்.
    எங்கள்ள நீயும் ஒருத்தன். அதனால் இதை ஒன்னோட சொந்தப் படமா நினைச்சிக்கிட்டு, அப்பப்போ ஷிட்டிங்குக்கு வந்து டயலாக் சொல்லிக் கொடுத்து மேக்ஸிமம் ஒத்துழைக்கணும். நான் கேட்டதுக்க்காக எழுதிப் போட்டுட்டு ஒடிடாதே.
    வேடனிடம் அகப்பட்ட மான் வேறு வழியின்றி மிரண்டு போய் நிற்குமே அதைப் போல நின்றேன்.
    அவர்: எப்ப எழத ஆரம்பிக்கப் போறே?
    நான்: யோசிச்சு சொல்றேன்
    அவர்: யோசிக்கறதுக்கெல்லாம் நேரம் இல்லே
    நான்: ஷெட்யூல் பை ஷெட்யூலா எழுதி கொடுக்கட்டுமா ?
    சிவாஜி: ஷெடியூல் பை ஷெட்யூலா ? டேய் ஆருரான். ஒரே ஷெட்யூல்ல இந்த ஜீலை மாசத்துக்குள்ளே படத்தை முடிச்சி ஆகஸ்ட்ல ரீலிஸ் பண்ணனும்னு சண்முகம் சொல்லி இருக்கான்.
    நான்: அப்படின்னா இப்போ எனக்கு இருக்கிற நெருக்கடியான நிலமையில் ராத்திரியில் ஒக்காந்து விடிய விடிய எழுதறதை வேற வழி இல்லே’
    சிவாஜி: சரி எத்தனை ராத்திரியில் எழுதி முடிப்பே?
    நான்: ஏழு இரவுகள். ! ஒண்ணு ரெண்டு நாள் கூடலாம் இல்லே குறையலாம். அது நான் போற வேகத்தை பொறுத்தது.
    சிவாஜி : எனக்குத் தெரியும். நீ வேகமாக எழதக் கூடியவன். சீக்கிரம் முடிச்சிடுவே. ஒகே அப்போ எழத ஒக்கார்ரே?
    நான்: இன்னிக்கு ராத்திரியே
    சிவாஜி உடனே அடுத்த கட்டத்திற்கு போனார்
    எப்படி ?

  12. Likes Georgeqlj, Russellmai, KCSHEKAR liked this post
  13. #3257
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARAJAN View Post
    சென்னையில் 1972..ம் வருடம் ஓடிக்கொண்டிருந்த சினிமா படங்கள்...a sweet memory




    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
    சுந்தர்ராஜன்
    மிக மிக அபூர்வ ஆவணமாக 1972ம் ஆண்டில் ஓர் தமிழ் நாளிதழின் இன்றைய சினிமா பகுதியின் நிழற்படம் பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

    ஆனால் தினத்தந்தி உள்பட பல நாளிதழ்களின் இந்தப் பகுதி மட்டும் துல்லியத்தன்மை கொண்டதல்ல. பல நாட்களில் சில குறிப்பிட்ட திரையரங்குகளின் படங்களின் பெயர்கள் மாற்றப்படாமல் அப்படியே இருக்கும். இதில் சென்னை மட்டுமின்றி சுற்று வட்டாரத்திலுள்ள செங்கல்பட்டு, வட தென்னாற்காடு மாவட்ட திரையரங்குகளின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும்.

    மேற்காணும் நிழற்படத்திலேயே எடுத்துக்கொண்டோமானால் கூட, 1972ம் ஆண்டில் குளோப் திரையரங்கைப் பொறுத்தவரை, எம்.ஜி.ஆர். படங்கள் நான் ஏன் பிறந்தேன், இதயவீணை, மற்றும் கருந்தேள் கண்ணாயிரம், மிஸ்டர் சம்பத், வாழையடி வாழை, ராணி யார் குழந்தை, நவாப் நாற்காலி, கருந்தேள் கண்ணாயிரம், போன்ற படங்கள் வெளியாயின. இவற்றில் ஏதாவது ஒன்று தான் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கவேண்டும். அப்படியில்லையென்றால், இவற்றிற்கு ஊடாக ஆங்கிலப் படங்கள் சிலவும், இதர மொழிப்படங்கள் சிலவும் வெளியாகின.

    மேற்காணும் பட்டியலை அடிப்படையாக வைத்து யூகித்தால் குளோப் திரையரங்கில் அநேகமாக இதயவீணை ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.



    என்றாலும் கூட அந்தக் காலகட்டத்தில் சென்னையில் இருந்த திரையரங்குகள் என்னென்ன என்பதை எடுத்தியம்பும் வரலாற்றுச்சான்றாக இந் நிழற்படம் விளங்குகிறது. இந்த வகையில் தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
    Last edited by RAGHAVENDRA; 23rd June 2015 at 12:16 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Likes KCSHEKAR liked this post
  15. #3258
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ரங்கனின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்தது என்று நேற்றும் நிரூபணமானது.

    நேற்று, 21.06.2015 ஞாயிறு மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பாக படிக்காத மேதை திரைக்காவியம் திரையிடப்பட்டது. அரங்கு நிறைந்து மக்கள் பெருவாரியாக வருகை புரிந்து ரங்கனோடு ஒன்றிப்போயினர். இதற்கு எத்தலைமுறையும் விதிவிலக்கல்ல.

    முன்னதாக படத்தொகுப்பாளர் இயக்குநரும் பீம்சிங் அவர்களின் புதல்வருமான திரு லெனின் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

    விழா பற்றிய தொகுப்பினை முரளி சார் அவர்களின் எழுத்தில் படிப்பதே சுவை,முழுமை என்பதால் அனைவரைப் போல் நானும் காத்திருக்கிறேன்.

    அது வரை விழாவிலிருந்து ஓரிரு நிழற்படங்கள்

    திரு லெனின் அவர்களுக்கு திரு கவிதாலயா கிருஷ்ணன் அவர்கள் நினைவுப்பரிசு வழங்குகிறார்.



    திரு லெனின் அவர்கள் உரையாற்றுகிறார்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. #3259
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    படிக்காத மேதை - 55

    ரங்கனின் பிறந்த நாளை அவனுக்கு 55 வயது நிறைவு பெறுவதை முன்னிட்டு ஞாயிறு மாலை கொண்டாடினோம். எத்தனை வருடம் ஆனாலும் ஒரு காலகட்டத்தில் சிவாஜி என்கிற பெயரே மறந்து போனாலும் ரங்கன் மட்டும் மனங்களை விட்டு மறையவே மாட்டான் என்று குமுதம் 55 வருடங்களுக்கு முன்பு சொன்னது எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மை என்பது விழாவிலும் படம் திரையிட்டப்பட்டபோதும் தெளிவாகியது.

    சென்ற வருடம் பச்சை விளக்கு திரைப்படத்தின் பொன்விழா நடைபெற்றபோது வருகை தந்திருந்த படத் தொகுப்பாளார் இயக்குனர் B.லெனின் நமது அழைப்பை ஏற்று இந்த விழாவிலும் கலந்துக் கொண்டார். விழாவின் தொடக்கத்தில் படத்தைப் பற்றிய சிறப்பு செய்திகளை நாம் பகிர்ந்துக் கொண்டபிறகு லெனின் பேசினார்.

    படிக்காத மேதை படத்தை பற்றி மட்டும் குறிப்பிடாமல் நடிகர் திலகத்துடனான பரிச்சயத்தை பழகியதை பகிர்ந்துக் கொண்டார் லெனின். சென்ற வருடம் குறிப்பிட்ட அதே செய்தியை மீண்டும் சொல்லி பேச்சை துவக்கினார். அதாவது நடிகர் திலகத்தின் திரைப்படைப்புகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்ற செய்திதான் அது. அவரின் படங்களில் பல விஷயங்கள் பொதிந்துக் கிடக்கின்றன என்றார். உதாரணமாக நாம் சாதாரணமாக நினைக்கக் கூடிய பலே பாண்டியாவில் வரும் மருது கேரக்டர் உடுத்தியிருக்கும் லுங்கியை சற்றே மேலே தூக்கி கட்டும் அந்த ஸ்டைல் இருக்கிறதே அதை ஒரு எடிட்டர் என்ற முறையில் ஷாட் பை ஷாட்டாக தொகுத்தால் அதில் படிப்பதற்கு இருக்கிறது பல செய்திகள் என்றார்.

    நடிகர் திலகத்தின் மிகப் பெரிய சிறப்பு அவரது குரல் modulation. ஏதென்ஸ் நகரத்து எழில்மிக்க வாலிபர்களே என்று ஆரம்பிக்கும்போது அவரது modulation-ஐ கவனிக்க வேண்டும். வீரம் விலை போகாது எனும் வரியில் வீரம் என்ற வார்த்தை எப்படி அழுத்தம் கொடுக்கப்பட்டு ஏறுமுகமாக உச்சரிக்கப்படுகிறது என்பதை கவனித்தால் எப்படி வசனம் பேச வேண்டும் என்பது யாரும் சொல்லாமலே புரியும். எங்கே கூட்டி எங்கே குறைத்து எங்கே அழுத்தி எங்கே மெதுவாக தொட்டு தமிழ் பேசப்பட வேண்டும் என்பதற்கு இன்றைக்கும் பாடமாக இருக்கக் கூடியவர் அவர். கருணாநிதியின் வசனங்களுக்கு சிறப்பூட்டியது நடிகர் திலகத்தின் குரல் வளம். வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவது பெரிதல்ல. யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் சிவாஜி மாதிரி பேச முடியுமா என்று கேட்டால் முடியாது என்றே சொல்ல வேண்டும். சிவாஜி மாதிரி என்று சொல்லும்போதே அங்கே originality போய் செயற்கைதனம் வந்து விடும் என்றார்.

    சரித்திரப் படங்கள் மட்டுமல்லாமல் சமூகப் படங்களிலும் இதை நாம் காணலாம் என்ற லெனின் எங்கே போய்விட்டாய் சாந்தி எங்கு போய்விட்டாய் சாந்தி என்று பாலும்பழமும் படத்தில் பேசுவதை அந்த modulation-ஐ உதாரணமாக எடுத்துச் சொன்னார். படங்களில் சிவாஜிக்கு வைக்கப்பட்டது போல் மிக அதிக அளவு tight close up வைக்கப்பட்ட நடிகனே உலகத்தில் இருக்க முடியாது என்ற லெனின் ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே என்ற வரிக்கு 75 mm லென்ஸ் பயன்படுத்தி எடுக்கபப்ட்ட tight close up நினைவிருக்கிறதா என்று கேட்டு அதில் கழுத்தை மட்டும் அசைத்து அந்த கன்னமும் புருவமும் ஏறி இறங்குவதை செய்வதற்கு யார் இருக்கிறார்கள் என்று கேட்டார். அதன் தொடர்ச்சியாக மற்றொரு சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார் லெனின்.

    பார் மகளே பார் படத்தின் ஷூட்டிங் நடந்துக் கொண்டிருந்த சமயம். அவள் பறந்து போனாளே பாடல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. முத்துராமன் பாடும் portions outdoor -லும் நடிகர் திலகம் பாடும் காட்சிகள் indoor -லும் படமாக்கப்பட்டு பின்பு match செய்யப்பட்டது. Indoor ஷூட்டிங்கில் இந்த வீட்டிற்கு விளக்கில்லை என்ற வரிகள் படமாக்கப்படும்போது செட்டிற்கு வந்த மற்றொரு இயக்குனர் செட்டையும் கேமரா ஆங்கிளையும் பார்த்துவிட்டு " ஏன் பீம் பாய், trolley பயன்படுத்தி long shot -ல் எடுத்தால் செட்டும் கவராகும். காட்சியும் அழகுற அமையுமே" என்று கேட்க அதற்கு பீம்சிங் "சிவாஜி பாயை வைத்துக் கொண்டு எதற்கு long shot?" என்று பதில் கேள்வி கேட்டாராம். இதை பெருமையாக சொன்ன லெனின் அவர் ஒரு cameraman -ன் delight என்றார். அவரிடம் காட்சியை மட்டும் விளக்கி விட்டால் போதும் எங்கே நிற்க வேண்டும் எப்படி திரும்ப வேண்டும் என்பதையெல்லாம் அவரே அழகாக செய்து விடுவார். left-ல் 25 டிகிரி என்றால் மிக சரியாக 25 டிகிரி திரும்புவார். Right -ல் 40 டிகிரி என்றால் 40 டிகிரி மிக சரியாக் இருக்கும். வேறு எந்த அடிகராக இருந்தாலும் அந்த perfection -ஐ பார்க்க முடியாது. மற்றவர்களுக்கு நிற்கிற இடத்தை விட்டு நகர கூடாது என்பதற்காக தரையில் சாக்பீசால் வட்டம் வரைவார்கள். வலது பக்கம் பார்க்க வேண்டும் என்றால் அங்கே ஒரு assistant கையில் ஒரு பொருளை பிடித்துக் கொண்டு இதையே பாருங்கள் என்று நிற்க வைக்க வேண்டிய கட்டாயம். இது போன்ற பிரச்சனைகள் எதுவும் சிவாஜி படங்களில் வராது என்றார் லெனின்.

    நடிகர் திலகம் போல டப்பிங் பேசுவதிலும் நேர்த்தி காட்டக்கூடியவர் யாருமில்லை என்று சொன்ன லெனின் அது போல் வயதில் எவ்வளவு சிறியவர் ஆனாலும் அவர்கள் சொல்லும் குறைகளையும் காது கொடுத்துக் கேட்கும் பெருந்தன்மை கொண்டவர் நடிகர் திலகம் என்றார். மேற்சொன்ன இரண்டையும் பாதுகாப்பு படத்தின் டப்பிங் நேரத்தில் பார்த்ததாக சொன்னார். தன் தந்தையார் வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்ததால் பாதுகாப்பு படத்தின் டப்பிங் வேலைகளை தான் மேற்பார்வையிட போனதை குறிப்பிட்ட அவர் சிவாஜி அதிகாலையிலே வந்து டப்பிங் தொடங்கி விடுவார். அப்படி அவர் தொடங்கும்போது திரையில் முதல் காட்சி ஓட சிவாஜி டப்பிங் பேச துவங்கினார். முதல் ஷாட் முடிந்தது. அதில் சற்று குறை இருப்பது போல் தோன்றியதால் நான் one more என்று கேட்க என்னடா என்று அவருக்கே உரித்தான பாணியில் கேட்க நான் இன்னும் கொஞ்சம் பாவம் வேண்டும் என்று கேட்க போடா என்று சொல்லிவிட்டு அடுத்தடுத்த ரீல்களுக்கு டப்பிங் பேச ஆரம்பித்து விட்டார். நானும் சரி என்று விட்டு விட்டேன்.

    எல்லாம் முடிந்த பிறகு என்னை கூப்பிட்டு அந்த முதல் ரீலிலே என்னமோ சொன்னியே அதை மறுபடியும் போட சொல்லு என்றார். இல்லே வேண்டாம். அதே இருக்கட்டும் என்று நான் சொல்ல போட சொல்லுடா என்று சொல்லி அந்த ரீல் மீண்டும் திரையிடப்பட்டவுடன் நீ எப்படி எதிர்பார்க்கிறே என்று கேட்டு நான் சொல்ல அதேற்கேற்றாற்போல் மீண்டும் பேசி கொடுத்துவிட்டு இப்போது திருப்தியா என்றார். என் வயதுக்கு என அனுபவத்திற்கு அவர் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் செய்தார். தன நடிப்பை பற்றிய விமர்சனம் எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் அதை விமர்சிப்பவர்கள் கூற்றில் நியாயம் இருந்தால் தன்னை திருத்திக் கொள்ள தயங்க மாட்டார் நடிகர் திலகம் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்றார்.

    மேலும் முதலில் அவர் ஏன் மறுத்தார் என்பதற்கும் பிற்பாடுதான் காரணத்தை தெரிந்துக் கொண்டேன் என்று சொன்ன லெனின் அது என்னவென்பதையும் சொன்னார். டப்பிங் பேசும்போது காலையில் பேசும் வசனம் முதல் ஷாட்டில் ஓகே ஆக வேண்டும் என்று நினைப்பார். அதனால்தான் இது தெரியாமல் நான் one more கேட்க அப்போது அதை மறுத்து விட்டு அடுத்த ரீலுக்கு போயிருக்கிறார். அதே நேரத்தில் தாம் பேசியதில் ஏதோ குறை இருக்கிறது. அதனால்தான் அவன் அப்படி சொல்லியிருக்கின்றான் என்பதை புரிந்துக் கொண்டு பிற்பாடு அந்த தவறை சரி செய்திருக்கிறார். சொன்னவன் சிறுவன் ஆயிற்றே அவன் என்ன சொல்வது என்றெல்லாம் நினைக்காமல் என் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து இறங்கி வந்தாரே அதுதான் அவரின் தொழில் பக்தி அர்பணிப்பு! என்று நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார் லெனின்.

    இன்றைக்கு இருக்கக் கூடிய இளைய தலைமுறையில் ஒரு சில பேர்கள் அவரின் நடிப்பை பற்றி சில மாறுபட்ட கருத்துகளை கொண்டிருக்க கூடும். அப்படி இல்லை. அவரின் நடிப்பு என்பது over the top கிடையாது என்பதை ஒரு ரசிகனாக இல்லாமல் ஒரு எடிட்டராக உலகின் எந்த மனிதனோடும் என்னால் வாதிக்க முடியும். I can challenge anybody in this world! என்று சொன்னார் லெனின்.

    இறுதியாக மீண்டும் ஒரு முறை சிவாஜியை அவர்தம் படைப்புகளை ஆவணப்படுத்துங்கள். இந்த விஷயமாக நானும் என்னால் முடிந்த சில விஷயங்களை செய்துக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்ட லெனின் அப்படி உருவாக்கப்படும் ஆவணங்கள் 365 நாட்களிலும் 24 * 7 அனைவருக்கும் available ஆக இருக்க வேண்டும் என்ற தன ஆசையை வெளிப்படுத்தி பேச்சை நிறைவு செய்தார்.

    திரு லெனின் அவர்களுக்கு நமது அமைப்பின் சார்பாக ஒரு நினைவு பரிசு [படிக்காத மேதை 55 என்ற Memento] நமது அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினரான திரு கவிதாலயா கிருஷ்ணன் வழங்கினார்.

    அதன் பிறகு படிக்காத மேதை படம் திரையிடபப்ட்டது. அதைப பற்றிய ஒரு சிறிய குறிப்பு நாளை!

    (தொடரும்​)

    அன்புடன்

  17. #3260
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி,

    உன் reporting நேர்த்தி அலாதி. கே.எஸ்.ஜி கூப்பிடவில்லையா?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •