Page 316 of 401 FirstFirst ... 216266306314315316317318326366 ... LastLast
Results 3,151 to 3,160 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #3151
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3152
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3153
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திலக சங்கமம்

    ரத்த திலகம் 1963





    பனி படர்ந்த மலையின் மேலே


    அடர்ந்த காடு, பனி பொழியும் நேரம். இதை த்த்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும். முகாம் அறையிலிருந்து இயற்கையை ரசித்தவாறே வெளிவருகிறார் நடிகர் திலகம். செல்லோவுடன் ஹார்மோனிகா அற்புதமாக ஒலிக்க, திரையிசைத் திலகத்தின் ராஜ்ஜியம் துவங்குகிறது.

    வந்து நிற்கிறார் இடுப்பில் கைகளைக் கட்டிக்கொண்டு கம்பீரமாக ராணுவ மிடுக்குடன் தலைவர். பாடகர் திலகத்தின் குரல் துவங்குகிறது. பனிபடர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன் சிலையைப் போலே. கனி கொடுத்த மாலையைப் போலே கன்னி வந்தாள் கண் முன்னாலே..

    இந்த வரிகளிலேயே துவங்கி விடுகிறது நடிகர் திலகத்தின் சாம்ராஜ்ஜியம். பனிபடர்ந்த மலையின் மேலே வரிகளின் போது தலை சற்றே மேல் நோக்கியவாறு அந்த மேலே என்ற வார்த்தையை உணர்த்துகிறது. படுத்திருந்தேன் எனத் துவங்கும் போது சற்றே கீழ்நோக்கி, சிலையைப் போலே என்ற வரிகளின் போது தலையை ஆமோதிப்பதைப் போல் அசைத்து பிறகு கன்னி வந்தாள் கண் முன்னாலே என்கிற வரிகளின் போது திசை திரும்பி செல்கிறார்.
    இப்போது படத்தொகுப்பாளரின் கைவண்ணம் ஆரம்பம். பாரத தேவி கையில் புறாவுடன் வருகிறார். மிகவும் பணிவுடனும் பக்தியுடனும் அவளை நோக்கி செல்கையில் அந்த நடையிலேயே அந்த பணிவை சித்தரிக்கும் பாங்கைப் பாருங்கள். அந்த மாஸ்க் ஷாட்டில் முன்னணியில் க்ளோஸப் முகத்தைப் பார்ப்பதா அல்லது பின்னணியில் இரு கைகளையும் நீட்டி அந்தக் கன்னியை வரவேற்றுப் பாடுவதைப் பார்ப்பதா..
    க்ளோஸப்பில் கண்கள் மூடியிருக்க கனிந்து நின்ற கன்னம் பார்த்தேன் எனும் போது கண்களைத் திறக்கும் யுக்தி.. அவள் முகத்தில் கண்ணீரின் சின்னம் பார்த்தேன் என்ற வரியின் போது தன் முகத்திலும் அந்த வருத்தத்தைக் கொண்டு வருகிறார்.

    கலங்கினேன், துடித்தேன். அம்மா.. அம்மம்மா.. என பாடகர் திலகம் குரலால் நம்மை உருக்க, ஒரு மரத்தின் மீது சாய்ந்து தலைவர் தன் முகத்தில் கொண்டு வரும் அந்த உணர்வு...

    நீ அழுத நிலை கண்டு, நிலவே அழுததம்மா, வானம் அழுததம்மா, வண்ண மலர் புலம்புதம்மா, கானகமும் கலங்குதம்மா..
    இந்த வரிகளின் போது அத்தனை உணர்வுகளையும் தன் கண்களிலேயே நமக்கு சொல்லி விடுகிறார்.

    அந்த க்ளோஸப் முகம் வாட்டத்தோடு அப்படியே இருக்க, பின்னணியில் காரணத்தைச் சொன்னால் காளை நான் உதவி செய்வேன் என்று இரு கைகளையும் நீட்டி ஆணித்தரமாகச் சொல்லும் உறுதி,

    இப்போது அந்த பாரத தேவி புறாவை வருடியவாறே அவர் சொல்வதைக் கேட்கிறார். க்ளோஸப் முகம் சற்றே முறுவலைக் கொண்டு வருகிறது. பின்னணியில் இதற்காகத் தான் என்னென்ன செய்யப் போகிறேன் என கூறியவாறே கைகளால் அந்த வரிகளுக்கு உயிர் தருகிறார் தலைவர். இதைக் கேட்கக் கேட்க க்ளோஸப் முகத்தில் கண்கள் விரிகின்றன. அந்தக் காளை சொல்லச் சொல்ல சந்தோஷத்தில் க்ளோஸப் முகம் புன்னகையைப் பெரிதாக்கிக் கொண்டே வருகிறது.
    சொல்லம்மா சொல்லென்றேன் இந்த வரிகளின் போது பின்னணியில் உள்ள முகம் புன்னகையோடு மலர்கிறது. க்ளோஸப் முகம் பாரத தேவியின் பதிலை எதிர்பார்ப்பது போல் முகத்தில் ஒரு கேள்விக்குறியை முன்வைக்கிறது.

    அமைதி தேடி உருகி வந்தேன் என்ற சரணத்தின் போது பின்னணி முகமும் க்ளோஸப்பில் வருகிறது. இப்போது இரு முகங்களிலும் பாரததேவியின் விடையை எதிர்நோக்குகின்றன.
    இப்போது இடையிசையில் மெல்லிய புல்லாங்குழல் நம்மை சொக்க வைக்கிறது. கதவு திறப்பதையும் வெளியுலகம் விரிவதையும் இதன் மூலம் சித்தரிக்கிறார் திரை இசைத் திலகம்.

    இப்போது காட்சி இடம் மாறுகிறது. எதிரி நாட்டின் விருந்தினர் அறையில் நுழைகிறது காமிரா.

    பசியார ஓடி வந்த பத்துப் பேர் மத்தியிலே பகையார ஒருவன் வந்த பாபத்தை என்ன சொல்வேன்...

    இந்த வரிகளின் போது கவியரசரின் வரிகளில் ஒரு தேச பக்தனின் கோபம் கொந்தளிக்கிறது. அப்போதைய இந்திய சீனப் போரின் பிரதிபலிப்பாய் இப்படம் எடுக்கப் பட்டதன் காரணம் இப்பாடல் காட்சியில் கூறப்படுகிறது. பாரதப் பிரதமர் நேருவும் சீனப் பிரதமர் சூ என் லாயும் உரையாடும் காட்சி. வஞ்சகமாய் எல்லையில் சீனர்களின் ஊடுருவலை நிறைவேற்றி விட்டு இங்கு உறவாட வந்த சீன நாட்டின் மேல் இந்தியர்களுக்கு அன்று ஏற்பட்ட கோபம் இன்னும் தணியவில்லை.

    இந்தியனின் உள்ளத்தை அப்படியே வரிகளில் கொட்டி விட்டார் கவியரசர். யாரை அழித்தேன் யார் குடியை நான் கெடுத்தேன் என்ற வரிகளின் போது நடிகர் திலகத்தின் முகத்தில் அந்த தேசபக்தனின் கோபம் கொப்பளிப்பதைப் பாருங்கள்.

    இப்போது அந்த கோபம் துணிவை வரவழைக்கிறது. அந்த துணிவு ஓடி வர என்ற வரிகளின் மூலம் தன் உடல் மொழியில் அதை வெளிப்படுத்துகிறார் நடிகர் திலகம். க்ளோஸப் முகத்திலோ அந்த வீரம் செறிந்த புன்னகை மலர்கிறது.

    வீரமுண்டு தோள்கள் உண்டு என்ற வரிகளின் போது அதைத் தன் உடல் மொழியால் பின்னணியில் வலியுறுத்த க்ளோஸப்பில் அநத முகம் அப்படியே வீராவேசமாக மாறுவதையும் அதில் ஒரு செருக்கு புன்னகையில் மலர்வதையும் பாருங்கள்.

    அடுத்த வரி தியேட்டராயிருந்தால் விண்ணைப் பிளக்கும் கரவொலி எழுந்து விடும்.
    தர்மம் மிக்க தலைவன் உண்டு...

    யாரென்று சொல்லவும் வேண்டுமோ..

    இப்போது இன்னும் உச்சத்தில் தலைவரின் உடல் மொழி கரவொலியை எழுப்பும்.

    வீரமிக்க தோளகள் உண்டு... இந்த வரிகளின் போது இரு கைகளையும் மேலே தூக்கி தோள்களின் வலிவைக் கூறுகிறார். இப்போது அந்த க்ளோஸப் முகத்தையுபம் அந்தக் கண்களையும் பாருங்கள். புருவத்தையும் கண்களின் கருவிழிகளையும் மேலே உயர்த்தி சிரிப்பதைப் பாருங்கள்.. அப்படியே கண்களை மூடுகிறார்.

    தலைவா... கொடுத்து வைத்துக்கிறோமய்யா உம்மோடு வாழ்ந்ததற்கு...

    இப்போது மீண்டும் இந்த வரிகள்..

    க்ளோஸப் முகம் மறைய பக்கவாட்டில் காமிரா படம் பிடிக்க, வீரம் மிக்க தோள்கள் உண்டு வரிகளின் போது இரு கைகளும் முன்னே கம்பீரமாக நீள்கின்றன, இப்போது முஷ்டியை மடக்கி பல்லைக் கடிக்கிறார். அதில் அந்த வைராக்கியம் பிரதிபலிக்கிறது. வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு என்கிற வரிகளின் போது தன் நெஞ்சுறுதியைக் காட்டுகிறார். தாரம் மிக்க தர்மம் உண்டு வரிகளின் போது புறங்கையை காமிராவை நோக்கி நீட்டி அதில் தெளிவான மனதை பிரதிபலிக்கிறார். இப்போது மேலே கையை உயர்த்தி வாயருகே கொண்டு சென்று ஒரு முத்தமிட்டு கையை உயர்த்தி தர்மமிக்க தலைவன் உண்டு எனக் கூறும் போது..

    Flat... இதற்கு மேல் நடிப்பைப் பற்றி எவனாவது வாயைத் திறப்பானா என்ன...

    இப்போது பின்னணி இசை ஒலிக்க பிரதமரின் காட்சியும் அதை பாரத தேவி பார்க்கும் காட்சியும் ஒரு சேர சித்தரிக்கப்படுகின்றன. ஒரு குழந்தை நேருவுக்கு ரோஜாவைப் பரிசளிக்க அன்பு நிறைந்த மகன், அருள் நிறைந்த கருணை மகன், பண்பு நிறைந்த மகன், பழ நாட்டின் மூத்த மகன், இருக்கின்றான் தாயே ஏங்காதே என்றுரைத்தேன் என்ற வரிகளின் போது அந்த பாரத தேவியாக வரும் நடிகையின் முகத்தில் தோன்றும் அந்த மலர்ச்சி..

    யாரவர் என கண்டறிந்து ஓடிச் சென்று காலடியில் விழவேண்டும் போலிருக்கிறது. உண்மையான பாரத மாதாவை சித்தரித்திருக்கிறார் அந்த நடிகை. அங்கே நாம் பாரத மாதாவைத் தான் பார்க்கிறோம்.

    நேருவைப் பற்றிச் சொன்னதும் பாரத தேவியின் முகத்தில் மலரும் புன்னகையை இப்போது அந்த வீரன் மனமுவந்து வர்ணிக்கிறான். இப்போது மீண்டும் க்ளோஸப்பில் நடிகர் திலகம். பின்னணியில் கைகளில் மலர்களுடன் அந்த சிரிப்பை வர்ணித்தவாறே தானும் புன்னகையுடன் அவள் காலடியில் அந்த மலர்களை சமர்ப்பிக்கும் போது அந்த க்ளோஸப் முகத்தில் மலரும் புன்னகையைப் பாருங்கள்..

    இப்போது அந்த வீரன் எழுந்து, என்னை மறந்தேன், இரவுலகில் சேர்ந்து விட்டேன், கண்ணை மெல்ல மறைத்து கற்பனையில் கலந்து விட்டேன் என்ற வரிகளின் போது அந்த க்ளோஸப் முகத்தைப் பார்ப்பதா, பின்னணியில் உள்ள முகத்தைப் பார்ப்பதா, என மனம் அல்லாடுகிறது.

    இப்போது காட்சி யதார்த்தத்திற்கு வருகிறது .பாறை மீதமர்ந்தவாறே புன்னகைத்தவாறே தலைவர் கற்பனையில் கலந்து விட்டேன் எனப் பாடும் போது தலையைக்குனிந்து சிரிக்கும் அழகு ஆஹா...

    இப்போது தான் மீண்டும் பல்லவிக்கு வருகிறார் இசையமைப்பாளர். பனிபடர்ந்த மலையின் மேலே என்னும் வரிகளுக்கு கையை மேலே உயர்த்திக் காட்டுகிறார். கன்னி வந்தாள் கண் முன்னாலே என்னும் வரிகளின் போது விரலைக் கண்ணருகே கொண்டு வந்து பின் முன்புறம் கொண்டு செல்லும் அழகு..

    இவ்வளவு நேரம் தன் அருமையான கற்பனையை சக வீர்ர்களிடம் கூறுவதை இறுதியில் தான் காட்டுகிறார் இயக்குநர்.

    ...

    இக்காட்சியில் ஒளிப்பதிவாளர் ஜாகீர்தார், ஆபரேடிவ் காமிராமேன் சிட்டிபாபு, படத்தொகுப்பாளர் தேவராஜ், இயக்குநர் தாதா மிராஸி என அனைவரின் பங்கும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

    நடிகர் திலகத்தின் திரையுலக வரலாற்றில் ரத்த திலகம் மிகவும் குறிப்பிடத் தக்க இடம் பெற்றது என்றால் இப்பாடல் காட்சிக்குப் பெரும் பங்கு உண்டு.

    ரத்த திலகம் என்றாலே பெரும்பாலும் பசுமை நிறைந்த நினைவுகளே மற்றும் ஒரு கோப்பையிலே பாடல் தான் மக்களிடம் உடனே நினைவுக்கு வருகின்றன என்றாலும் இப்பாடல் காட்சியின் படமாக்கம், நடிப்பு, வரிகள் என அனைத்து அம்சங்களும் இதை ஒரு காவியமாக உருவாக்கியிருக்கின்றன.

    இந்த மாதிரியான சூழலில் திரையிசைத் திலகத்தின் அணுகுமுறை மிகவும் சிறப்பாக இருக்கும். இதே காட்சிக்கு மெல்லிசை மன்னரும் சிறப்பான முறையில் பாடல் அமைத்திருப்பார் என்றாலும் இதனுடைய பாதிப்பே தனி.


    இதைப் போன்ற தேசபக்திப்பாடல்களின் மூலம் மக்களிடம் இன்னும் இறையாண்மையை விதைத்து வருவதில் தலையாய பங்கு நடிகர் திலகத்தினுடையது என்னும் போது நம்முள் மீண்டும் மீண்டும் ஏற்படுவது..

    Thank God,,, I am a proud fan of NT.

    பாடல் வரிகள் ஆங்கிலத்திலும் தமிழிலும்..

    Pani padarndha malaiyin maelae
    Padutthirundhaen silaiyai polae
    Kani thoduttha maalai polae
    Kanni vandhaal kan munnaalae

    Pani padarndha malaiyin maelae
    Padutthirundhaen silaiyai polae
    Kani thoduttha maalai polae
    Kanni vandhaal kan munnaalae


    Kunindhu nindra mughatthai paartthaen
    Kunghumap poo niratthai paartthaen
    Kanindhu nindra kannam paartthaen
    Kanneerin chinnam paartthaen

    Kalanghinaen... thuditthaen... ammaa... ammammaa...
    Nee azhudha nilaiyarindhu nilavae azhudhadhamma
    Vaanam azhudhadhammaa
    Vanna malar pulambudhammaa
    Kaanam azhudhadhammaa
    Kaanaghamum kalanghudhammaa

    Kaaranatthai chonnaal
    Kaalai naan udhavi seivaen

    Vaarananghal pootti vandhu
    Vannat thaer pootti vandhu
    Thorananghal aadughindra
    Thooya naghar veedhiyilae
    Oorvalamaai unnai
    Udanazhaitthu naan varuvaen
    Sollammaa sollendraen
    Thooya maghal thalai nimirndhaal


    Amaidhi thaedi urughi nindraen
    Anbu vellam perugha vandhaen
    Imayam mudhal kumari varai yen
    Idhayatthaiyae thirandhu vaitthaen

    Undu pasiyaara ulagham varattum yendru
    Kandu thaen kalandhu karndha paal karandhapadi
    Kondu vandhu vaitthu kooppittaen varughavendru
    Pasiyaara odi vandha patthu paer matthiyilae
    Paghaiyaara oruvan vandha paabatthai
    Yenna solvaen...


    Yaarai azhitthaen
    Yaar kudiyai naan kedutthaen
    Seer sumandhu sendradhu thaan
    Seidhadhoru paavamendraal
    Annai uraittha mozhi
    Atthanaiyum kaettirundhaen
    Pinnar manadhil perundhunivu modhi vara
    Perundhunivu modhi vara

    Veeramundu tholghal undu
    Vettri kollum njaanam undu
    Saalam mikka dharumam undu
    Dharumam mikka thalaivan undu

    Veeramundu tholghal undu
    Vettri kollum njaanam undu
    Saalam mikka dharumam undu
    Dharumam mikka thalaivan undu


    Anbu niraindha maghan
    Arul niraindha karunai maghan
    Panbu niraindha maghan
    Pazha naattin moottha maghan
    Irukkindraan thaayae
    Yaenghaadhae yendruraitthaen

    Annai siritthaal
    Adadaa O achirippil
    Munnait thamizh manamae
    Mulaitthezhundhu nindradhammaa
    Yennai marandhaen
    Iravulaghil saerndhu vittaen
    Kannai mella maraitthu...
    Karpanaiyil kalandhu vittaen
    Karpanaiyil kalandhu vittaen

    Pani padarndha malaiyin maelae
    Padutthirundhaen silaiyai polae
    Kani thoduttha maalai polae
    Kanni vandhaal kan munnaalae

    Pani padarndha malaiyin maelae
    Padutthirundhaen silaiyai polae
    Kani thoduttha maalai polae
    Kanni vandhaal kan munnaalae

    பனி படர்ந்த மலையின் மேலே
    படுத்திருந்தேன் சிலையைப் போலே
    கனி தொடுத்த மாலை போலே
    கன்னி வந்தாள் கண் முன்னாலே

    பனி படர்ந்த மலையின் மேலே
    படுத்திருந்தேன் சிலையைப் போலே
    கனி தொடுத்த மாலை போலே
    கன்னி வந்தாள் கண் முன்னாலே


    குனிந்து நின்ற முகத்தைப் பார்த்தேன்
    குங்குமப் பூ நிறத்தைப் பார்த்தேன்
    கனிந்து நின்ற கன்னம் பார்த்தேன்
    கண்ணீரின் சின்னம் பார்த்தேன்

    கலங்கினேன்... துடித்தேன்... அம்மா... அம்மம்மா...
    நீ அழுத நிலையறிந்து நிலவே அழுததம்மா
    வானம் அழுததம்மா வண்ண மலர் புலம்புதம்மா
    கானம் அழுததம்மா
    கானகமும் கலங்குதம்மா...

    காரணத்தைச் சொன்னால்
    காளை நான் உதவி செய்வேன்

    வாரணங்கள் பூட்டி வந்து
    வண்ணத் தேர் ஓட்டி வந்து
    தோரணங்கள் ஆடுகின்ற தூய நகர் வீதியிலே...
    ஊர்வலமாய் உன்னை
    உடனழைத்து நான் வருவேன்
    சொல்லம்மா சொல்லென்றேன்
    தூய மகள் தலை நிமிர்ந்தாள்


    அமைதி தேடி உருகி நின்றேன்
    அன்பு வெள்ளம் பெருக வந்தேன்
    இமயம் முதல் குமரி வரை என்
    இதயத்தையே திறந்து வைத்தேன்

    உண்டு பசியாற உலகம் வரட்டும் என்று
    கண்டு தேன் கலந்து கறந்த பால் கறந்தபடி
    கொண்டு வந்து வைத்து
    கூப்பிட்டேன் வருகவென்று
    பசியாற ஓடி வந்த பத்துப் பேர் மத்தியிலே
    பகையாற ஒருவன் வந்த
    பாபத்தை என்ன சொல்வேன்...


    யாரை அழித்தேன்
    யார் குடியை நான் கெடுத்தேன்
    சீர் சுமந்து சென்றது தான்
    செய்ததொரு பாவமென்றால்
    அன்னை உரைத்த மொழி
    அத்தனையும் கேட்டிருந்தேன்
    பின்னர் மனதில் பெருந்துணிவு மோதி வர
    பெருந்துணிவு மோதி வர

    வீரமுண்டு தோள்கள் உண்டு
    வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு
    சாலம் மிக்க தருமம் உண்டு
    தருமம் மிக்க தலைவன் உண்டு

    வீரமுண்டு தோள்கள் உண்டு
    வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு
    சாலம் மிக்க தருமம் உண்டு
    தருமம் மிக்க தலைவன் உண்டு


    அன்பு நிறைந்த மகன்
    அருள் நிறைந்த கருணை மகன்
    பண்பு நிறைந்த மகன்
    பழ நாட்டின் மூத்த மகன்
    இருக்கின்றான் தாயே
    ஏங்காதே என்றுரைத்தேன்

    அன்னை சிரித்தாள்
    அடடா ஓ அச் சிரிப்பில்
    முன்னைத் தமிழ் மணமே
    முளைத்தெழுந்து நின்றதம்மா
    என்னை மறந்தேன்
    இரவுலகில் சேர்ந்து விட்டேன்
    கண்ணை மெல்ல மறைத்து...
    கற்பனையில் கலந்து விட்டேன்
    கற்பனையில் கலந்து விட்டேன்

    பனி படர்ந்த மலையின் மேலே
    படுத்திருந்தேன் சிலையைப் போலே
    கனி தொடுத்த மாலை போலே
    கன்னி வந்தாள் கண் முன்னாலே

    பனி படர்ந்த மலையின் மேலே
    படுத்திருந்தேன் சிலையைப் போலே
    கனி தொடுத்த மாலை போலே
    கன்னி வந்தாள் கண் முன்னாலே
    Last edited by RAGHAVENDRA; 17th June 2015 at 09:41 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #3154
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நம்மிடையே வாழ்ந்து மறைந்தும் மறையாமல் நம் மனதில் வாழும் நடிப்பு கடவுளின் உயர்ந்த மனிதன் பார்த்து ,சுவைத்து,மகிழ்ந்தேன். சில படங்கள் லட்சம் முறை பார்த்தாலும் அலுப்பதில்லை. என்ன ஒரு Depth நடிப்பில். அவர் வசனம் பேசும் காட்சிகளை விட,reaction காட்டும் காட்சிகள் அதிகம் நிறைந்த உயர்ந்த மனிதனை பற்றி என்ன சொல்ல?திராவிட மன்மத நடிப்பு கடவுளே ,நீ எங்களுக்கு வாரி தந்து சென்று விட்டாய். நாங்கள்தான் உனக்கு ஒன்றுமே செய்யாமல் ஊமையாய் கதறி கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தமிழனும் தலை குனிய வேண்டும் உன் பின்னே அணி திரண்டு உனக்கு சிறப்புகள் சேர்க்க மறந்த மானங்கெட்ட இனத்தில் பிறந்ததற்காக.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. Thanks eehaiupehazij thanked for this post
    Likes sss, Harrietlgy, Georgeqlj liked this post
  7. #3155
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உயர்ந்த மனிதன்- 1968 --நடிப்பு தெய்வத்தின் 125 ஆவது சித்திரம்.

    சிலருக்கு மட்டும் வாழ்க்கை வச படுவதில்லை. ஆணாக(பணக்கார??) பிறந்தாலும் ,பலன் பூரணமாய் அனுபவிக்க படுவதில்லை.சூழ்நிலை கைதி -அதுவும் ராஜலிங்கம் போல் எல்லோருக்கும் நல்லவனாக வாழ விரும்பும் உயர்ந்த மனிதனுக்கு....

    எல்லோருக்கும் எதிர்காலம் குறித்து குழப்பம் உண்டு.நிகழ் காலம் குறித்து அதிருப்தி உண்டு. ஆனால் ராஜுவுக்கோ எதிர்காலம் சூன்யம்.நிகழ்காலம் தண்டனை.கடந்த காலமோ குழப்பம். அவன் அறிவு,விருப்பம் எதுவும் பயன் படாமல் அவன் நாட்கள்.... பாரம்பரியம்,கெளரவம்,மனசாட்சி எல்லாவற்றையும் கேள்வி குறியாக்கி கேலி செய்கிறது.அவன் சுதந்திரம் பெற்ற மனிதனாக வாழவே இல்லை.

    பார் மகளே பார் படத்தில் NT கதாபாத்திரம்தான் உயர்ந்த மனிதனில் NT தந்தை பாத்திரம் -சங்கரலிங்கம்.தன் அந்தஸ்துக்கு குறைந்த எதுவுமே துச்சம்.அடுத்தவர் சுதந்திரத்தை பிடுங்கி (மகன் ஆனாலும்) அடிமை படுத்தும் சுயநல மூர்க்கன்.எல்லாவற்றையும் வாய் மூடி மௌனியாய் சகித்து வாழும் ராஜு தான் விரும்பிய ஏழை பெண்ணை மணந்து சில காலம் வாழ்கிறான். ஆனால் கண்ணெதிரே தந்தையால் அவள் எரிக்க பட்டு, ஒரே மாதத்துக்குள் மருமணம் புரிய நிர்பந்திக்க பட்டு, ஒட்டாமல் அமைதி வாழ்க்கை வாழும் அவன் வாழ்க்கையில், சத்யா என்ற அநாதை ஒருவன் வேலையாளாய் நுழைந்து ,அன்பிற்கு பாத்திரமாகி,சோதனை கடந்து ,இறுதியில் சத்யா தன் மகனே என்ற உண்மை தெரிந்து சுபம்.

    உருவம்,உள்ளடக்கம் எதிலும் சோதனை முயற்சி செய்யாமல் , சில பாத்திர வார்ப்புகள்,சில பாத்திர திரிபுகள், நேர்மையான ஆற்றோட்டமாய் திரைகதை. அற்புதமான வசனங்கள். மிக மிக நேர்த்தியான நடிப்பு, இவற்றை வைத்து அற்புதமான படத்தை கொடுத்தனர் கிருஷ்ணன்-பஞ்சு,மற்றும் ஏ.வீ.எம்.(உபயம்-உதர் புருஷ்-பெங்காலி)

    காட்டாற்று வெள்ளமாய் ஓடிய சிவாஜியின் 68 ஆம் வருடத்திய நடிப்பில் அணை போட்டு வரம்பில் நிறுத்திய இரு படங்கள் தில்லானாவும்,உயர்ந்த மனிதனும்தான். இதில் அவர் பங்கு தில்லானாவை விட காம்ப்ளெக்ஸ் ஆனது. அவர் விரும்பாத பாத்திரம்.(விரும்பியது டாக்டர் பாத்திரம்).

    வேறு எந்த படத்திலாவது அவர் பாத்திரம் படத்திலேயே இந்த அளவு சுய விமரிசனத்திற்கும் ,பிறர்(முக்கியமாய் நெருங்கிய நண்பன்) விமர்சனத்திற்கும் ஆளாகி இருக்குமா என்பது சந்தேகம்.
    கோழை,சில உயர்ந்த மனிதர்கள்,சூன்யமாய் பொய் வாழ்க்கை, சுமைதாங்கி,தியாகி,தனது சுய துக்கம் சுகம் நினையாத பொதிமாடு,என்று சுயமாகவும்,
    கோழை,சுயநலக்காரன்,அப்பனை சமாளிக்க முடியாதவன்,தன்னை நம்பியவர்களை காப்பாற்ற முடியாதவன்,என்று டாக்டரும்,
    ஜென்டில்மன்,பொய்யன்,காட்டுமிராண்டி என்று மனைவியும்,
    உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என்று சுந்தரம் மகள் கவுரியாலும்
    விமரிசிக்க படும் இந்த ராஜு யார்?

    சுருக்கமாக சொன்னால் ,தன சுயத்தை இழந்து வாழ்பவன். அதனால்,பிறரால்,அவரவர் சௌகரியத்திற்கு விமரிசிக்க படுபவன். இப்போது புரிந்திற்குமே சிங்கத்திற்கு சற்றே தீனி கிடைத்திருக்கும் என்று?

    உ.ம வை வித்தியாசமான படமாக்குவது டாக்டர் பாத்திரம். நண்பன் என்றாலே,பின்னால் விரோதியாக போகும் இந்நாள் alter -ego என்ற சம்பிரதாயத்தை முறியடித்து, ஒரு தாட்சண்யம் இல்லாத மனசாட்சி,இங்கிதமற்ற இரக்கமற்ற உறுத்தி கொண்டே இருக்கும் அனுகூல சத்ரு, சங்கீதத்தில் கவுன்ட்டர்-பாயிண்ட் என்று சொல்லும் படியான அபஸ்வர இசைவு . தனக்கு சொந்தமில்லாத பொருளை ,விட்டு கொடுத்து விட்ட பாவனையில்,தானும் அந்த அசம்பாவித சம்பவத்தில் கூட இருந்தும் தன்னாலும் தான் ஆசை பட்டவளை காப்பாற்ற முடியாத உண்மையை வசதியாக மறந்து,கல்யாணமும் செய்து கொள்ளாமல் எல்லா சந்தர்பங்களிலும் ராஜுவை இடித்து கொண்டே இருக்கும் ஒரு பாத்திரம்.ஆனால் மக்களின் மனதில் ராஜுவை விட அதிக இடம் பிடிக்கும் வாய்ப்பு. ராஜு அபார சுய இரக்கம்,சுய வெறுப்புக்கு ஆளாகி ஒருவித துறவு நிலை குற்ற உணர்வுடன் இந்த சித்ரவதை நண்பனை விரும்பி ஏற்கும் மேசொகிஸ்ட்(Masochist) ஆன மனநிலையை வெளிபடுத்துவான் நட்பின் உயர்வை காட்ட ஒரு காட்சியும் வலிந்து இருக்காது.

    இதன் protoganist ஆக வந்த நடிப்பு கடவுளின் படம் நெடுக மிளிரும் நடிப்பை விவரிக்க இந்த பகுதி சமர்ப்பணம்.
    இந்த படத்தின் அழகே,அவர் வசனம் பேசும் காட்சிகளை விட reaction காட்டும் காட்சிகள் அதிகம். சிவாஜியின் மேதைமை ஜொலிக்கும்.

    முதல் காட்சியிலேயே அந்தந்த பத்திர வார்ப்புகள் சித்திரிக்க படும்.நாடகத்தனம் கொஞ்சம் இருந்தாலும் சிவாஜியின் magic அதனை சமன் செய்யும்.

    ரொம்ப uneasy restraint என்று சொல்லப்படும் பாணியில் தந்தை எதிரே நடப்பதில் ஒட்டாமல், நடப்பதை மனதளவில் அங்கீகரிக்காமல் ஆனால் எந்த வெளிப்படையான எதிர்ப்பும் காட்டாமல் கடந்து செல்வார். தனது சம நண்பன் கோபாலுடன் சமமில்லாத பால்ய நண்பன் சுந்தரத்திற்கு நேர்ந்த ஒரு அநீதியை கூட ஒட்டாமல் துறவு நிலையாய் விளக்குவார். பிறகு சிறிது குற்ற உணர்வு உறுத்த நான் உன்னை சம நிலையில் அங்கீகரிக்கிறேன் என்ற தேற்றலோடு, சிகரெட் கொடுத்து சமாளிப்பார். அனால் ராஜு ,கோபால்,சுந்தரம் உடன் பழகும் விதம் சமூக நிர்பந்த நியதிற்குட்பட்டே (சமம், சமமின்மை )இருக்கும்.பின்னால் ராஜுவின் எந்த act of commission ,omission எல்லாவற்றுக்கும் இந்த ஒரு காட்சியே நம் மனநிலையை தயார் செய்து விடும்.

    கதையின் நாயகி,பார்வதியிடம் பழகும் போது inhibition துறந்து உரக்க பேசுவார்,நையாண்டி செய்வார்,இயல்பை மீறி நடப்பார்.பார்வதி அந்தஸ்தில் குறைந்திருப்பதும்,சுந்தரத்திற்கு கொடுக்க இயலாத முக்கியத்துவத்தை இந்த உறவிற்கு கொடுக்க முடிவதும், ஒரு அசட்டு தைரியத்தையும் அவருக்கு அளிக்கும்.(தந்தையை மீறியும் ,சமாளிக்கலாம் என்று) ஒரு liberated மனநிலையில் இருப்பார். இந்த மனநிலை பின்னால் ஒரே ஒரு காட்சியில் வெளிப்படும்.அதை பிறகு பார்க்கலாம்.
    ஆனால் மனைவி எரிபடும் காட்சியில், ஒரு ஊமை புலம்பலோடு,ஒரு குழந்தையின் இயலாமை கதறலோடு முடிப்பார். பிறகு தந்தை தன்னை மறுமணத்திற்கு ,துப்பாக்கியை வைத்து தற்கொலை மிரட்டலோடு ,மன்றாடும் போது, கோபம்,அதிர்ச்சி,இயலாமை,சுய-வெறுப்பு,விரக்தி அத்தனையையும் ஒரு பத்து நொடி close -up ஷாட்டில் காட்டி விடுவார்.(சிவாஜிக்கு இது புதிதல்ல).அரை மனதோடு சம்மதிக்கும் காட்சியில் அடுத்த பத்தொன்பது வருட வாழ்கை சித்திரம் நமக்கு கோடி காட்ட பட்டு விடும்.

    வயதான பிறகு,வரும் காட்சிகளின் அழகு . .... மனைவி விமலாவுடன் பாந்தமான ,இதமான ஆனால் ஒட்டாத ஒரு உறவு.(விமலாவின் இயல்பே அதற்கு ஒரு காரணம் என்றாலும்). நண்பன் கோபாலுடன் வரும் அனைத்து காட்சிகளிலும்,இதமோ,இங்கிதமோ இல்லாத கோபாலின் பேச்சுகளுக்கு, ஒரு தந்தை,ஒரு ரெண்டுங்கெட்டான் நண்பன்,குத்தும் தன மனசாட்சி மூன்று நிலையிலும் கோபாலை வரித்து ,மிக அழகாக கையாள்வார்.அவருக்கு ஒருவேளை உறுத்தல் குறைய ,ஈகோவை கோட் ஸ்டாண்டில் மாட்ட,தந்தையின் இழப்பை சரி செய்ய , இந்த நண்பன் அவசிய தேவை போலும்!

    கோபாலுடன் நண்பன் என்ற உரிமையில் பேசும் கணங்கள்,கோபாலின் உடல்நிலை சம்பந்தமான இடங்கள்.கோபால் நிதானம் தவறும் இடங்கள்.குழந்தையை போல் நடத்துவார். இந்த இடங்களை கையாள இனி ஒரு நடிகன் பிறப்பது இயலாது.(பாத்திரத்தை அதன் குணாதிசயம்,கதையியல்பு,மனோதத்துவ பின்னணியில் புரிந்து,அதை நேர்த்தியுடன் செயல் படுத்தும் நடிப்பு வெளிப்பாடு.)

    சோர்ந்து இருக்கும் போது ,உடல் கோளாறு என்று டாக்டரை கூப்பிடும் இடத்தில், விமலா,கோபால் இருவருக்குமான இடம் ,ராஜுவின் உடல் மொழியில்,பொய் அனுசரணையுடன் பிசைதலுக்கு இசையும் காட்சியில் ஒரு revelation போல பரவச படுத்தும்.

    NT யின் நடிப்பு பரிமாணங்களை அலசும் போது ,இந்த படத்தில் மறக்க முடியாத இன்னொரு புது பரிமாணம், சத்யாவுடன் அவருக்கு develop ஆகும் உறவு. பல படங்களில் இந்த மாதிரி உறவுகள் வரும் போது pre -Emptive & Prevailing mood பாணியிலோ அல்லது விரோத அடிப்படையிலோ தான் பிளாட் development premise ஆக இருக்கும். இந்த படத்திலோ முற்றும் புது பரிமாணம். அதை சிவாஜி ஆண்டிருக்கும் விதம் ஒரு தனி சுவை. ஒரு வெகுளி தனமான ,rawness கொண்ட படிப்பறிவில்லா ஒரு பையன் மேல் ஒரு soft -corner என்பதற்கு மேல் செல்ல மாட்டார். முதல் முறை பார்க்கும் போது சாதா அறிமுகம், டாக்டர் சிபாரிசில் வேலை என்பதுடன் , மற்ற படி எந்த ஒரு கவனிப்பும் காட்ட மாட்டார். சத்யன் ஆங்கிலம் தெரியாமல் ,விமலாவுடன் மாட்டி கொண்டு முழிக்கும் காட்சியில் ஆகட்டும், பிறகு சம்பளத்தை கொடுத்து ஆசிர்வாதம் வழங்கும் காட்சியில் ஆகட்டும்(முதலில் அம்மாவிடம் என்பார்) ,ஒரு செல்லமான தோரணையில் ஒரு நல்ல ரெண்டுங்கெட்டான் வேலைகார பையன் என்ற அளவிலேயே நிற்கும். அம்மா படத்திற்கு நேர்ந்த அவமானத்தை சகிக்காமல்,சத்யம் விலக விரும்பும் காட்சியில் கூட டாக்டரிடம் ,முதல்லே அவனுக்கு புத்தி சொல்லு என்று பொறுப்பை டாக்டரிடம் கொடுப்பார். டாக்டர் குடித்து விட்டு நிதானம் இழக்கும் காட்சியிலும் ,வேலையாளாகவே நடத்தி வெளியேற சொல்வார். ஆனால் டாக்டரின் மரணத்திற்கு பிறகான வெற்றிடத்தில்,சத்யனின் பிரத்யேக அக்கறை தன்மையிலும்,retire ஆன மாணிக்கம் என்ற முதிய வேலையாளின் வேண்டுகோள் படியும் துளி அக்கறையும் , நெருக்கமும் கூடும் வெகு இயல்பாக. அந்த சாப்பிடும் காட்சி ஒரு கவிதை. பிறகு கூட மனைவியின் தலையீட்டில் சத்யன் பாதிக்க படும் போது ஓவர்-ரியாக்ட் செய்யாமலே அன்பை விளக்குவார்.

    விமலாவுடன் வரும் வெடிக்கும் காட்சியில்(வசனப்படியே கட்டுபடுத்தி வைத்திருந்த எரிமலை) கொஞ்சம் வழக்கமான NT பாணி முத்திரைகளுடன் கூடிய சீற்றமாய் வெளிப்படும். நெருப்பில் தன மனைவியை காப்பாற்ற தவறி ,பொய் வாழ்கை வாழும் ஒருவனின் ,inhibition துறந்த சீற்றம்.Incoherent ஆய் துவங்கி,கோபமாய் வெடித்து,நிலை உணர்ந்து படி படியாய் அடங்க வேண்டிய காட்சி. . கோபம் சிறிதே அடங்கி,சோபாவில் கால் போட்டிருக்கும் போது ,சமாதானமாய் shoe அவிழ்க்க வரும் வரும் மனைவியிடம் பிணக்கமுற்ற சமாதான கோடி காட்டும் அந்த சிறிய கால் மாற்றும் gesture கோடானு கோடி கதை பேசி விடும்.

    விமலாவிடம் வெடித்த பின் ,planter 's conference செல்ல ,புறப்படும் போது, விமலா சத்யனை கூப்பிட்டு போக சொல்லும் போது ,ஒரு அன்னியோன்யமான ,ஆச்சர்யத்தை வார்த்தையின்றி வெளிப்படுத்துவார். அந்த வெடிப்புக்கு பின், விமலாவும் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையில்,டிரைவர் சுந்தரத்தை பழைய சிறு வயது நண்பராக்கி, பார்வதியுடன் இருந்த போது அடைந்த சுதந்திரத்தை உணர்வார்.

    அந்த நாள் ஞாபகம் பாடல்,தமிழ் பட சரித்திரத்தில் மைல் கல். Dancing இல் ஒரு பகுதி usage of property for effective rendering . என்று ஒன்று உண்டு. இந்த பாடலில், வாக்கிங் ஸ்டிக்கை ஒரு துணை பாத்திரம் ஆகவே உபயோக படுத்தி இருப்பார். அவர் சிறு வயது சந்தோஷங்களை விவரிக்கும் போது ,ஒரு விளையாட்டு பொருளாய் கையில் சுழலும். உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என்ற வரிகளில் அவர் உயர்ந்திருக்கும்.வாக்கிங் ஸ்டிக்கை, கீழே விடும் அழகே தனி.(வீரபாண்டிய கட்டபொம்மனின் வாள் உரையில் போடும் அழகை ஒத்தது ) டென்ஷன் ஆன வரிகளில் வாக்கிங் stick கழுத்திலும், மிக மிக மன அழுத்தத்திற்கு ஆட்படும் வரிகளில் ,நடக்கவே ஒரு சப்போர்ட் போலவும் பயன்படுத்துவார்.நண்பனுடன் சம நிலையில் பழ குவதாய் பாவனை செய்தாலும்,அலட்சியமாய் கழுத்தில் மாட்டி இழுப்பார். ராஜுவின் குணாதிசயம் வன்மைக்கு பணிதல்(தந்தை,விமலா, கோபால்),கீழோரிடம் empathy இருந்தாலும், ஒரு அந்தஸ்து தோரணை ஒட்டி பிறந்த குணம் போலும்!!

    அடுத்த காட்சியில் அவர் வாக்கிங்கிற்கு சுந்தரத்தை அழைக்கும் போது தொப்பியை கழற்ற சொல்லும் gesture . கவுரி-சத்யா காதலை உணர்ந்து அவர் அதை அணுகும் பிரச்சனைக்குரிய காட்சி, NT யின் மேதைமைக்கு ஒரு சான்று. conference போய் வந்த தோரணையில் பிரச்சனையை அணுகுவார். தள்ளி நிற்பார், மிரட்டுவார், ஆழம் பார்ப்பார், ஒரு உயர்ந்த ,வறண்ட,flat வாய்ஸ் இல் பேசுவார்.இறுதியாய் உறுதியை உணர்ந்து சிறிதே உணர்ச்சி வச பட்டு ஒபபுவார். எனக்கு தெரிந்து இவ்வளவு காம்ப்ளெக்ஸ் ஆக ஒரு காட்சியை யாரும் அணுகியதில்லை.

    கடைசி காட்சி (நாகேஷ் அவர்களை ஒரு விமான பயணத்தில் சந்தித்த போது இக்காட்சியை சிலாகித்தார்).Acting is not about discipline ,Technic , Perfection ,control and execution alone .Some times you loose your control and self to surprise yourself to surprise the audience .இதற்கு நல்ல உதாரணம் அவர் திருட்டு பழி விழுந்து தன நம்பிக்கையை குலைத்த சத்யாவை manhandle செய்யும் விதம்.(தில்லானா காட்சியில் அடிக்காமல் பாய்வார்) தன்னிடம் பேசும் கவுரி
    விமலாவிடம் பேசாதே என்ற விஷயத்தை பேச முயலும் போது ,விமலா இருக்கும் போது இந்த விஷயத்தை என் பேசுகிறாய் என்பது போல் உடல் மொழி ,முகபாவத்தில் சொல்லும் அழகில்....

    இந்த படத்தின் தனி சிறப்பு ஆற்றோட்டமான திரைகதை. Flashback அது இது என்று போட்டு (நிறைய சந்தர்பங்கள் இருந்தும் ) கதையின் மெல்லிய ஓட்டத்தை சிதைக்காமல், நேரடியாக கொண்டு சென்றிருப்பார்கள். ஜாவர் சீதாராமனின் வசனங்கள் (அந்த நாள்,ஆண்டவன் கட்டளை) தமிழ் பட நியதிகளை மீறாமல் , பாத்திர இயல்புகளை முன்னிறுத்தி ,மிக polish ஆக இருக்கும். கோபால்-ராஜூ உரையாடல்கள்,விமலா-ராஜூ, தொழிலாளி-முதலாளி உறவு சார்ந்தவை,கோபால் மரண காட்சி, கொடைக்கானல் காட்சிகள் குறிப்பிட வேண்டியவை.(ஒருவேளை உதர் புருஷ் வசனங்களை மொழி மாற்று செய்திருப்பார்களோ என்ற அளவு வித்யாசமாக இருக்கும்.) Hats off ஜாவர்.மற்ற படி ரொம்ப Technical விஷயங்கள் தேவை படாத கதை.

    கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியுடன் பிணங்கி (குங்குமம்)இந்த படத்தில் இணைந்தார். அமைதியான துருத்தாத இயக்கம்.
    அடுத்த படி சரியான பாத்திர தேர்வு. சுந்தர் ராஜன் ,டாக்டர் வேஷத்திற்கு தேர்வு செய்ய பட்டிறிந்தாலும் ,அவரால் நேர் அல்லது எதிர் நிலைகளில் இயங்கியிருக்க முடியுமே தவிர நேர்-எதிர்,எதிர்-நேர் என்ற கோபாலின் புதிர் நிலை மனபான்மைகளுக்கு அசோகனின் கோமாளி தனம் கலந்த mystic ஆன நடிப்பு ஒரு புதிர் தன்மையை நிலை நிறுத்துகிறது.(Dark knight Heath Ledger போல்) .அசோகன் நல்ல தேர்வு.

    வாணிஸ்ரீ ஒரு அற்புதம்.அறிமுகமாகி இரண்டாம் வருடத்தில் ஒரு rawness , Passion ridden poor teenager , பாத்திரத்துக்கு பொருத்தம். சௌகார், sophisticated ,obsessive -compulsive குணங்கள் நிறைத்த இந்த பாத்திரத்திற்கு இரண்டாவது nomination கூட இருக்க முடியாது. சிவகுமார் இதே குணாதிசயம் கொண்ட மனிதர்.கேட்கவா வேண்டும்?
    நாகையா,சுந்தர ராஜன்,ராமதாஸ் அத்தனை பெரும் நல்ல பங்களிப்பை செய்திருப்பார்கள்.

    இசை புரட்சி நிகழ்த்தியிருப்பார் விஸ்வநாதன்.(ராமமூர்த்தியை பிரிந்த பின் தனியாய் போட்ட படங்களிலேயே மிக சிறந்த படம்) பால் போலவே,வெள்ளிக்கிண்ணம்தான்,என்-கேள்விக்கென்ன பதில்,அந்த நாள் என்ற பாடல்கள் வாலி கூட்டணியில்.உறுத்தாத பின்னணி இசை.

    ஏ.வீ.எம்.செட்டியார் சிவாஜியை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டி (இந்த படத்தை re-make செய்ய முடியாது என்று சொன்னார்)

    கிருஷ்ணன்-பஞ்சு சிவாஜியை best perfectionist என்று பாராட்டினார்கள்.

    ரசிகர்களின் பார்வையில் இன்றளவும் மறக்க முடியாத படம்.
    Last edited by Gopal.s; 17th June 2015 at 10:46 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  8. Thanks eehaiupehazij thanked for this post
  9. #3156
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    BLUE
    and
    WHITE



    Last edited by senthilvel; 17th June 2015 at 10:58 PM.

  10. Likes Russellmai liked this post
  11. #3157
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  12. Likes Russellmai liked this post
  13. #3158
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


  14. Likes Russellmai liked this post
  15. #3159
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  16. Likes Russellmai liked this post
  17. #3160
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like



  18. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •