Page 298 of 401 FirstFirst ... 198248288296297298299300308348398 ... LastLast
Results 2,971 to 2,980 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2971
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2972
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ஆர்கேஎஸ்.

    இந்த விவாதம் எதற்கு? தேவையில்லை, விட்டு விடுங்கள். நீங்கள் யாரை convince செய்ய போகிறீர்கள்? இப்போது எதனால் இந்த விவாதம் வந்தது? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

    அந்த நாள் ஞாபகம் தொடரில் நான் பட்டிக்காடா பட்டணமா சாதனை பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். மதுரையில் முதன் முதலாக 5 லட்சம் வசூல் செய்த படம் பட்டிக்காடா பட்டணமா என்று சொன்னேன். அது பொய்யில்லையே! அது போல் மதுரையில் முதன் முதலாக 5 லட்சம் வசூல் செய்த கலர் படம் வசந்த மாளிகை என்பதையும் சொன்னேன். அதுவும் உண்மைதானே! நாம் 72-ஐ பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அன்றைய நிலவரத்தை சொல்கிறோம். வேறு எந்த ஒப்பிடோ இல்லை எதிர் மறை விமர்சனமோ இல்லை. உடனே எதிர் வினையாக மூன்று நான்கு பதிவுகள். இதை தொடர்ந்து சகோதரர் செல்வகுமார் அவர்களின் பதிவு கடுங் கோவத்துடன் வருகிறது. அவர் என் பதிவை படித்தாரா என்றே தெரியவில்லை. [உணர்ச்சிவசப்பட்டதில் நான்கு அரங்குகளில் வெள்ளி விழா ஓடிய உ.சு.வாவை 6 அரங்குகள் என்றாக்கி விட்டார். மதுரையில் 250 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் 300 ஆகி விட்டது].

    நாம் வசூல் பற்றி பேசினால் அது சீண்டுதல். அதே நேரத்தில் அவர்கள் ரசிகர் மன்ற நோட்டிஸ் போட்டுவிட்டு இது பார்வைக்குத்தான் விவாதத்திற்கு அல்ல என்பார்கள். இது நாம் ரெகுலராக பார்த்து வருவதுதானே!

    நான் என்ன எழுதினாலும் [குறிப்பாக மதுரையைப் பற்றி] வினோத் சாரும், குமார் சாரும், நண்பர் கலைவேந்தனும் react பண்ணுவார்கள். காரணம் சிவாஜி சாதனை என்று எப்படி எழுதலாம்? அதனால்தான் சொல்கிறேன். விவாதம் வேண்டாம். வேண்டுமானால் ஒன்று செய்யலாம். இப்படி சொல்லி விடலாம்.

    சிவாஜி கணேசன் என்று ஒரு நடிகர் இருந்தார். அவர் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை. மிஞ்சிப் போனால் அவருக்கு 100 ரசிகர்கள் தேறுவார்கள். அவர்கள் ஏதோ அவ்வப்போது கத்திக் கொண்டிருப்பார்கள்.

    இப்படி ஒரு statement கொடுத்து விட்டால் அவர்களும் சந்தோஷப்பட்டுக் கொள்வார்கள். விஷயம் முடிந்தது.

    முன்பு இருந்ததை விட நீங்கள் நிறைய mature ஆகியிருக்கிறீர்கள். யாருடனும் சண்டை போடாமல் பதிவிடுகிறீர்கள். மீண்டும் ஏன் அந்த பழைய நிலைக்கு போக நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒரு நல்ல காரியத்தை செய்துக் கொண்டிருக்கிறீர்கள் அதை தொடருங்கள்.

    என் பதிவிற்கு எதிர் வினையாற்றிய எவர் மீதும் எனக்கு கோவமில்லை. வயதில் என்னை விட அனைவரும் மூத்தவர்கள். அவர்கள் இலக்கில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதற்காக நாம் அவர்களை குறை சொல்ல முடியாது.

    நண்பர் ஆர்கேஎஸ் என் பெயரை குறிப்பிட்டு கேள்வி கேட்டதால்தான் இதையும் எழுத நேர்ந்தது. இந்த விவாதம் இத்துடன் முடியட்டும். நண்பர்கள் யாரும் இதை முன்னெடுக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    அன்புடன்

  4. Likes Subramaniam Ramajayam liked this post
  5. #2973
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    ராமச்சந்திரன் சார்,

    திருச்சியில் சின்ன துரையின் தியேட்டர்கள் படையெடுப்பையும் அங்கெல்லாம் வசூலை குவிப்பதையும் பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி!. விரைவில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் பச்சை விளக்கும், ராஜ ராஜ சோழனும் மற்றும் பல படங்களும் வந்து திருச்சி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தட்டும்!

    அன்புடன்

  6. #2974
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    முத்தையன் சார்,

    ஒரு முத்தாரத்தில் பாடலின் ஒளி வடிவக் காட்சிகளுக்கு மிக்க நன்றி. நான் முன்பே ஒரு முறை குறிப்பிட்டது போல நீங்கள் ஒரு திரையரங்க ஆபரேட்டராக இருப்பதால் ஒரு ரசிகனின் மனோநிலையில் காட்சியையும் அதன் ஆழ் பரிமாணங்களையும் உங்களால் உணர முடிகிறது. அதை அதே உணர்வு எதிரொலிக்கும் வண்ணம் இங்கே பதிவிட முடிகிறது.

    இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். காரணம் இரு வேறுபட்ட நிலைகளை நடிகர் திலகம் அற்புதமாக பிரதிபலித்திருப்பார். பார்ட்டி இருக்கிறது. என்னை குடிக்க சொல்வார்கள். நீ வந்தால் அதிலிருந்து தப்பிக்கலாம் என்று சொல்லி மனைவியை கூட்டி வந்திருப்பார். சொன்னது போல் நல்ல பிள்ளையாக சோபாவில் அமர்ந்திருப்பார். அந்த ஸ்டில் உங்கள் பதிவில் இருக்கிறது. [அந்தப் போஸில்தான் மனிதன் என்ன handsome?] முதல் சரணத்தில் (அந்த மாலை இந்தப் பெண்ணின்) விஜயா பாடிக் கொண்டே நடிகர் திலகம் அமர்ந்திருக்கும் சோபாவிற்கு பின்புறமாக வருவார். சிவாஜிக்கு பக்கத்து ஸீட்டில் பாலாஜி அமர்ந்திருப்பார். அவர் கையில் மதுக் கோப்பை இருக்கும். விஜயா பக்கத்தில் வருவதைப் பார்த்தவுடன் பாலாஜி சற்றே சங்கடமாக உணர்ந்து மதுக் கோப்பையை கால்களுக்கிடையே மறைத்துக் கொள்ள முயற்சி செய்வார். அவ்வளவு இயல்பாக இருக்கும். ராமண்ணா அழகாக எடுத்திருப்பார்.

    அந்த சரணம் முடியும். திரும்பி பார்க்கும் விஜயா நடிகர் திலகத்தை காணாமல் கண்களால் தேடுவார். அங்கே பாலாஜியின் கைகளில் இருக்கும் கோப்பையிலிருந்து குடித்துக் கொண்டிருக்கும் கணவனை பார்க்க, மனைவி பார்த்து விட்டாள் என்று தெரிந்ததும் நடிகர் திலகம் காட்டும் reactions!

    முதலில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டவனின் அதிர்ச்சி, அடுத்து sorry sorry என கண்களால் சொல்வது, பிறகு மன்னிக்க மாட்டாயா என்ற கெஞ்சலை கண்களில் வெளிப்படுத்துவது, பிறகு உன்னிடம் எனக்கு என்ன பயம் என்று முகபாவத்தை மாற்றுவது, செய்த தவறினால் தோன்றும் குற்ற உணர்வை மறைக்க சிகரெட்டை புகைப்பது, நடக்க முடியாமல் பின்னுகின்ற கால்களை நான் நார்மலாக இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக நடப்பது, சோபாவின் நுனியில் அமர்வது, மனைவியின் கோவமான பார்வையை எதிர் கொள்ள முடியாமல் முகத்தை திருப்ப முயற்சிப்பது, நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே என்ற வரிக்கு வலது கையை மொத்தமாக மூடி உள்ளே இருக்கும் சிகரெட்டை ஆழமாக இழுப்பது என்று அடித்து தூள் கிளப்பியிருப்பார் நடிகர் திலகம்.

    நான் இப்போது இவ்வளவு விளக்கமாக சொன்னதை அந்த உணர்வுகளை உங்களது நான்கு ஸ்டில்ஸ் மூலமாகவே பார்வையாளனுக்கு கடத்தி விட்டீர்கள்!

    வாழ்த்துகள் மற்றும் மனமார்ந்த நன்றிகள் சார்!

    அன்புடன்

  7. Likes sss, Russellmai, uzzimah liked this post
  8. #2975
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    Julius ceaser நாடகத்தில் senetor சம்பந்த பட்ட கொலை காட்சி. சீசர் ,ரோமானிய சாம்ராஜ்யத்தின் சர்வாதிகாரியாகி ,அதுவரை குடியாட்சி என்ற பெயரில் நடந்த கோமாளிதனங்களுக்கு முடிவு கட்ட எண்ண , மார்கஸ் ,காசியஸ் சதிவலையில் வீழ்ந்து ப்ருட்டஸ் இணைந்து கொள்ள, மார்க் அண்டனி சதி செய்து ஒதுக்க பட , செனெட் அரங்கேற்றும் கொலைகாட்சி.(Act 3)

    சீசர் அரசவைக்குள் நுழையும் senate கூடத்தில் நுழையும் தன்னம்பிக்கை கலந்த கம்பீரம்,மற்றவர் உடல் மொழி ,நிற்கும் நிலை பார்த்து சந்தேகம் கொள்வதும், தம்பியை மன்னிக்க சொல்லி இறைஞ்சுவனிடம் காட்டும் நிர்த்தாட்சண்யம்,மற்றவர் அவனுக்கு சார்பாக பேசும் போது தன்னிலை பிறழா கண்டிப்பான உறுதி,கத்தியால் எதிர்பாராமல் குத்த படும் அதிர்ச்சி வியப்பு கலந்த தடுமாற்றம், brutus இருந்துமா இது நடந்தது என்ற வினாவுடன் வருபவரை Brutus குத்திய உடன் நீயுமா என்று சாயும் இறுதி முடிவு என்று அவருக்கு சீசர் பாத்திரம் பொருந்தும் அழகை பார்த்து ரசிக்கலாம்.சாகும் போது சீசர் வலிப்பு வியாதி உள்ளவன் என்பதை அழகாக கிரகித்து சீசரின் முடிவை காட்டுவார்.
    Last edited by Gopal.s; 14th June 2015 at 05:21 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Likes adiram, uzzimah liked this post
  10. #2976
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    larger than life பாத்திரங்களில் நடிக்க விசேஷ பயிற்சி, தேவையான உருவம், குரல், நடை பாவனை,உடைகள் பொருந்தும் உருவ அமைப்பு, கற்பனை , அதீத சக்தி இவையெல்லாம் தேவை என்றும் ,சராசரிகளால் அவை கனவு கூட காண முடியாத விஷயம் என்றும் பார்த்தோம்.

    ஆனால் நான் அதிசயிக்கும் அம்சம் ,இந்த கஷ்டமான territory யில் அவர் அதிக எண்ணிக்கையில் நடித்த வித விதமான பாத்திரங்கள் , உலக அளவில் சாதனையாகவே கருத பட வேண்டும். Stella Adler ,Oscar wild ,Shakspere School இது தவிர நம் கூத்து-நாடக கலை மரபு, மற்ற மாநில வீரர்கள் என்று 20 இலிருந்து 80 வயது வரை கி.மு வில் socretes ,அலெக்சாண்டர்,ஜூலியஸ் சீசர் தொடங்கி கி.பி முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி பத்தொன்பதாம் நூற்றாண்டு சரித்திர நாயகர்கள், வீரர்கள்,புலவர்கள் அடியார்கள்,கற்பனை வீர பாத்திரங்கள் என்று வேறுபட்ட பாத்திரங்கள், கால அளவுக்கு அப்பாற்பட்ட கடவுள் பாத்திரங்கள், கர்ணன்,பரதன் போன்ற புராண பாத்திரங்கள் என அத்தனையிலும் நடிப்பில் காட்டிய மிக துல்லிய வேறுபாடு ராமனந்த் சாகர் போன்றவர்களை இவர் வீட்டு வாசலுக்கு அழைத்து வந்ததில் வியப்பென்ன?

    உள்ளே போகு முன் பட்டியலிட்டால் இது மிக தெளிவாகும்.

    மனோகரா, தூக்கு தூக்கி,காவேரி, தெனாலி ராமன் ,நானே ராஜா,வணங்காமுடி,தங்கமலை ரகசியம்,ராணி லலிதாங்கி ,அம்பிகாபதி,சம்பூர்ண ராமாயணம்,உத்தம புத்திரன்,சாரங்க தாரா,காத்தவராயன்,தங்க பதுமை,
    வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜ பக்தி,மருத நாட்டு வீரன்,ஸ்ரீவள்ளி,சித்தூர் ராணி பத்மினி,கர்ணன்,மகாகவி காளிதாஸ்,கந்தன் கருணை ஹரிச்சந்திரா,ராஜ ராஜ சோழன்,தச்சோளி அம்பு,சந்திர குப்தா சாணக்யா, பக்த துக்காராம்,எமனுக்கு எமன்,ராஜரிஷி போன்ற முழு படங்களும் தோன்றும் பாத்திரங்களுடன் ஒரே படத்தில் பல்வேறு பாத்திரங்கள் திருவிளையாடல் (சிவன், புலவர், மீனவன், விறகு வெட்டி),சரஸ்வதி சபதம்(நாரதர்,புலவர்),திருவருட்செல்வர்(அரசன், சேக்கிழார்,சலவை தொழிலாளி,சுந்தரர்,அப்பர் ),திருமால் பெருமை (பெரியாழ்வார்,விஷ்ணு சித்தர்,தொண்டரடி பொடியாழ்வார், திருமங்கை ஆழ்வார்,விபர நாராயணர்) என்றும் ,பல படங்களில் இடை செருகலான நாடக காட்சிகளிலும் தோன்றியுள்ளார். இல்லற ஜோதி (சலீம்),நான் பெற்ற செல்வம்(சிவன்,நக்கீரன்),ராஜா ராணி(சேரன் செங்குட்டுவன்,சாக்ரடிஸ் ),அன்னையின் ஆணை(சாம்ராட் அசோகன்)ரத்த திலகம் (ஒதெல்லோ ),ராமன் எத்தனை ராமனடி(வீர சிவாஜி),எங்கிருந்தோ வந்தாள் (துஷ்யந்த்),சொர்க்கம்(ஜூலியஸ் சீசர் )ராஜபார்ட் ரங்கதுரை (ஹாம்லெட்),அன்பை தேடி (புத்தர்),ரோஜாவின் ராஜா(சாம்ராட் அசோகன்) என்று விரியும்.
    Last edited by Gopal.s; 14th June 2015 at 05:59 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #2977
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    பொதுவாக அக்காலத்தையும் ,இக்காலத்தையும் இணைக்கும் கண்ணி என்பது ceremonial military parade ,marches ,drilling . எக்காலத்திலும் மாற்ற முடியாத நிலைத்தன்மை கொண்டதால் ,shakespere நாடக நடிகர்கள் பின்பற்றும் முறை பெரும்பாலும் இதனை சார்ந்ததே.period படங்கள் சார்ந்த larger than life பாத்திரங்களுக்கு ஏற்ற முறை. கண் முன் பார்த்து பின் பற்ற கூடிய பாரம்பரிய தொடர்ச்சி முறை.

    shakespere நடிகர்களை நான் லண்டன், நியூயார்க் நகரங்களில் நாடகங்கள் பார்க்கும் வழக்கமுடையவன் என்பதால் கூர்ந்து கவனித்துள்ளேன்.

    அவர்கள் நடிக்கும் முறை கீழ்கண்டவாறே அமையும். முறையான பயிற்சியால் ஒவ்வொரு நடிகரிடமும் முறைகள் பெரிதாக மாறாது. ஆனால் உருவ அமைப்பு, குரல், மற்றும் இயற்கை திறமையில் சிறிதே வேறுபாடு தெரியும்.

    உடல் மொழி, கால், கைகள் இயங்கு முறை geometric symmetry கொண்ட change in pace &abruptness in transition என்ற முறையில் அமையும்.Traditional ceremonial military parade /drill /marching முறை சார்ந்தே வகுக்க பட்டிருக்கும்.

    நடைகளின் முறை பெரும்பாலும் quick march ,slow march ,cut the pace ,double march easy march ,mark time ,step forward முறையில் அமையும். ஆனால் command synchrony இல்லாமல் randomness கொண்டு கலையாக்க பட்டிருக்கும்.

    உடலியங்கு முறை attention ,parade rest ,stand at ease என்று நான்கின் பாற்பட்டு advance ,retire ,left ,right ,retreat முறையில் saluting ,turning motions கொஞ்சம் கப்பலின் இயங்கு முறை சார்ந்ததாக இருக்கும்.

    முகபாவங்கள் மிக இறுக்கமான தன்மை கொண்டு சிறிதே இள க்கம், சிறிதே மிக இறுக்கம் என்ற மூன்று நிலைகளில் slow transition கொண்டதாய் register ஆகும்.

    ஆனால் கண்கள் body motion follow thru மட்டும் இன்றி சிறிதே cautionary alertness கொண்ட inert emotionless vibrations கொண்டு உயிர்ப்புடன் இயங்கும்.

    voice pitch ,tonal modulations என்று ஆராய்ந்தால் mid -flat pitch இல் reciting rhythmically என்ற பாணியில் identifier ,precautionary ,cautionary ,executive ,guided emotional overtone என்ற பெரும்பாலும் parade command முறைமை கொண்ட ஏற்ற இறக்கங்கள் கொண்டதே.

    நான் பல நாடகங்களை ,பலவித நடிகர்களின் நடிப்பை பார்த்து ஆய்ந்தவன் என்ற வகையில் உறுதியாக சொல்லுவேன், நடிகர்திலகத்தை மிஞ்ச இனி ஒருவன் பிறக்கவும் முடியாது.பிறந்ததும் இல்லை. ஒன்றிலிருந்து ஆயிரம் வரை நடிகர்திலகம் பெயரை எழுதி விட்டே, 1001 ஆக அடுத்து வரும் நடிகனை குறிப்பிடலாம்.
    Last edited by Gopal.s; 14th June 2015 at 10:04 AM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  12. Thanks eehaiupehazij thanked for this post
  13. #2978
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    From today (14.06.2015) edition of daily thanthi epaper

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks eehaiupehazij, Gopal.s thanked for this post
    Likes Russellmai, ainefal liked this post
  15. #2979
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு கலைஞன் ,அரசியலில் வென்று விட்டால் எவ்வளவு வரலாற்று திரிபுகள். கலைஞர் டீவீ நிகழ்ச்சியில் பிறைசூடன் காகித ஓடம் உவமையை முதலில் பிரயோகித்தவர் கலைஞர். பிறகே காகிதத்தில் கப்பல் செய்து என்று கண்ணதாசன் என்றார். (திரியில்
    ஒருவர் இதே தவறை செய்ததாக ஞாபகம்)

    அன்பு கரங்கள் படத்தில் காகிதத்தில் கப்பல் செய்து பாடலினை புனைந்தவர் வாலி. வந்த வருடம் 1965.

    மறக்க முடியுமா படத்தில் கலைஞர் கைவண்ணத்தில் காகித ஓடம் வந்தது 1966 இல்.

    என்னவோ போடா மாதவா...... சரித்திரம் சந்தி சிரிக்க போகிறது. பேராசிரியர்களும் புளுகி தள்ளும் கலி காலமாயிற்றே?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  16. Likes Harrietlgy liked this post
  17. #2980
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  18. Likes eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •