Page 235 of 401 FirstFirst ... 135185225233234235236237245285335 ... LastLast
Results 2,341 to 2,350 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2341
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post



    திரு. கோபால்,

    தெருவில் வரையப்படும் ஓவியங்களும் சரி, அதை வரைபவர்களும் சரி தரம் குறைந்தவையோ, தரம் குறைந்தவர்களோ அல்ல. ஆர்ட் காலெரியில் குளுகுளு அறையில் படங்களை பார்த்து ரசிக்கிறார்களே சொகுசானவர்கள், அவர்கள் அப்படி ரசிப்பதற்கு ஆர்ட் காலெரியையும் குளுகுளு வசதியையும் ஏற்படுத்தி தருபவர்களே தெருவில் வசிப்பவர்கள்தான். ஆர்ட் காலெரியில் வைக்கப்பட்டிருக்கும் சில மாடர்ன் ஆர்ட்கள் யாருக்கும் புரியாது என்ற விமர்சனங்களும் உண்டு.

    காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் திலகத்தையோ அவர் திரியையோ தாழ்த்திப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    வாங்க கலை. ரசனைகளில் உயர் ரசனை, கீழ் ரசனை எல்லாம் உண்டு. ஓவியத்தில் portrait ,images ,landscapes எல்லாம் புகைப்பட கலையால் அழிந்த பிறகு ஓவியம் ஜீவித்தது pointilism ,impressionism ,expressionism ,sur -realism ,cubism ,abstract post modernism இவற்றால்தானே? ஒருவர் சங்கீதம் தேர்ந்து பாடுவதற்கும், தெரு பாடகர்களுக்கும் வித்யாசம் உண்டு.
    எல்லாருமே ஓவியம் வரையும் போது(பள்ளி சிறார்கள் உட்பட) Rembrandt ,Vangoh ,Picasso போன்றோர் கொண்டாட பட காரணங்கள் உண்டு. நமக்கு புரியாதவை இல்லாதவையாகி விட முடியாது. eistein கோட்பாடு எல்லோருக்கும் புரியாது. அதற்கென்று அவை ஏற்க முடியாதவை என்று அர்த்தமல்ல.நீங்கள் முன்முடிவுகள்,முன்பகை,வைத்து கலையை அணுகினால் ,இருக்கும் நிலை தாண்ட முடியாது. நான் உதாசீனம் செய்பவை எக்காலத்திலும் கலையாக முடியாது.
    Last edited by Gopal.s; 22nd May 2015 at 10:26 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2342
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர் ,

    உங்கள் மீது வருத்தமோ,கோபமோ, எழ வாய்ப்பேயில்லை. தன்னலம் பாராது எங்களை வழி நடத்தும் பிதாமகர்,தாங்கள்.

    நவராத்திரி பின்னொரு நாளில் பதிப்பேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. Likes RAGHAVENDRA liked this post
  5. #2343
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like





  6. #2344
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler 4 : Beach songs with NT!

    கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!

    பகுதி 4 :தியாகம்

    வசந்த கால கோலங்கள் ....கலைந்திடும் கனவுகள்.......என்னவொரு மென்மையான இதய வருடல்....நுரை பொங்கும் கடலலைகள் பாதங்களை மோதி வருடுவது போன்ற குறுகுறுப்பு !!

    Last edited by sivajisenthil; 23rd May 2015 at 12:03 AM.

  7. Likes kalnayak, Russellmai liked this post
  8. #2345
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    பாலும் பழமும்..

    பல காட்சிகளில் நுட்பமான நடிப்பில் நடிகர் திலகம் நம்மை மயக்கி விடுவார்..

    எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று Contrivation... பொதுவாக Contrivation...என்றால் வலுவில் திணிக்கப் படுவது அதனால் அதில் செயற்கை இருக்கும் என்கிற அபிப்ராயம் உண்டு. ஆனால் அந்த Contrivation...என்கிறதையே யதார்த்தமாக மாற்றிய பெருமை பீம்சிங்கையே சாரும். டாக்டருக்குத் தன் கடமை உணர்ச்சியைப் புரிய வைக்க சாந்தி வெள்ளைக் கோட்டு அணிந்து டாக்டராக உருவகப்படுத்தி ரவிக்குப் புரிய வைக்கும் காட்சி. பேசப்படாது, நான் இப்போ டாக்டர் ரவி. நான் தான் நீங்க என சொல்வதும் அதற்கு உடனே நடிகர் திலகம் அப்போ நீங்க தான் நாங்களா எனக் கேட்டு விட்டு உடனே குரலை மாற்றி பெண் குரலில் பேசுவதும்...

    ஆஹா.. யதார்த்தம் என்றால் இதுவல்லவோ யதார்த்தம்.. இயற்கை நடிப்பு என்றால் இதுவல்லவோ இயற்கை நடிப்பு..
    ராகவேந்திரா,

    பிரமாதம். Role Reversal Contrivation ,இதே சிவாஜி-சரோஜாதேவி இணைவில் ஆலயமணி படத்திலும் பிரமாதமாக வந்திருக்கும். அந்த ஏஸ் ஞாபகம் உள்ளதா?



    50 . 10 இலிருந்து 51.28 வரையும், 56.30 இல் இருந்து 57.35 வரையும்.

    என்னா pair பா சிவாஜி-சரோஜாதேவி தூள்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes kalnayak, KCSHEKAR, Russellmai liked this post
  10. #2346
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Physical deformation or physically disabled functions like dumbness...

    இந்தக் குறையோடு வாழ்ந்தாலும் அந்த பாத்திரத்தின் ஈகோவை சற்றும் தளர்த்தாமல் வெறும் அனுதாபத்தை மட்டுமே நம்பி பாத்திரத்தை டெவலப் செய்யாமல் அதே சமயம் ஆடியன்ஸின் முழு பரிதாபத்தையும் சம்பாதிக்கக் கூடிய நடிப்பை வழங்குவது நடிகர் திலகத்திற்கே சாத்தியம். பாகப் பிரிவினை இதற்கு உதாரணம் என்றால் இதை விட அதிகமாக அவர் எஸ்டாப்ளிஷ் செய்தது வளர்பிறை படத்தில். சரஸ்வதி சபதம் படத்தில் ஊமையாக வந்தாலும் அதில் அப்பாவித்தனம் கலந்திருப்பதால் அனுதாபம் பெறுதற்கு அந்தப் பாத்திரத்திற்கு சுலபமாக முடிந்தது. கதையமைப்பும் கைகொடுத்தது. ஆனால் வளர்பிறை அப்படியல்ல. ஊமையாக வந்தாலும் கோபம் சற்றும் குறையாத ஈகோவில் சளைக்காத பாத்திரம். ஒரு கட்டத்தில் தாயாரும் தாரமும் ஒதுக்கினாலும் கூட தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காத பாத்திரம். சரோஜாதேவியின் மிகச் சிறந்த நடிப்பில் நம்மால் மறக்க முடியாத படம். எப்படி சாவித்திரி சிவாஜி ஜோடிக்கு எல்லாம் உனக்காக அமைந்ததோ அதே போன்று சிவாஜி-சரோஜாதேவி என்றால் வளர்பிறையைச் சொல்லலாம்.

    பாத்திரங்களை யதார்த்தமாக வடிவமைப்பதில் யோகானந்த் வல்லவர். அதிகப் பேசப்படாதவர். ஆனால் அவருடைய படங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பில் வித்தியாசம் தெரியும். நடிப்பது தெரியாது ஆனால் அங்கே மிகச் சிறந்த பங்களிப்பில் நடிகர் திலகம் அசத்துவார்.

    வளர்பிறை சிறந்த யூனிட். கர்ணன் புகழ் ஏ.எஸ்.நாகராஜன் மூலக்கதையை ஜாவர் சீதாராமன் நுட்பமாக திரைக்கதையாக்கி பாத்திரங்களை மிகவும் சிறப்பாக செதுக்கியிருப்பார்.

    துரதிருஷ்டவசமாக இன்னும் இப்படத்தின் டிவிடி வெளியாகவில்லை.

    காத்திருப்போம். நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் பார்த்து விடுவோம் என்று.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes vasudevan31355, KCSHEKAR, Gopal.s liked this post
  12. #2347
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால்,

    role reversal contrivation ...

    நடிகர் திலகத்தின் பல படங்களில் இடம் பெற்றுள்ளது என்றாலும் யதார்த்தமாக அமைந்தது சில படங்களில் மட்டுமே..அதில் மேலே நீங்கள் குறிப்பிட்ட காட்சி ஒன்று.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes vasudevan31355 liked this post
  14. #2348
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அப்படியே பாகபிரிவினை செட் நடிகர்கள்.(தங்கவேலு கூடுதல்)

    திலக சங்கமத்தில் கலகலக்குத்து காத்து (டி.எம்.எஸ்-பீ.எஸ்), கூண்டு திறந்ததம்மா(டி.எம்.எஸ்),மவுனம்(பீ.எஸ்),நான்கு சுவர்களுக்குள் (பீ.எஸ்),பூஜ்யத்துக்குள்ளே (டி.எம்.எஸ்) என்று ஜுகல் பந்தி.

    சுப்பா ராவ் கேமரா.

    இந்த படம் எனக்கு சுமாராகவே நினைவில் நிழல் போல உள்ளது. படத்தின் DVD க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். வாசு புண்ணியத்தில் எல்லாம் உனக்காக கிடைத்தது. இதே போல 2001 இல் இருவர் உள்ளம் கிடைக்காமல் சிங்கப்பூர் little india வில் ஒரு கடையில் கெஞ்சி கெஞ்சி ,அவர் ஒரு படு சுமார் பிரிண்ட் போட்டு கொடுத்தார். வொய் .ஜி .மகேந்திரா 2009 இல் வைஜயந்தி,சரோஜா தேவியை கௌரவிக்கும் போது இந்த பட காட்சிகள் கிடைக்கவில்லை என வருந்த, அவருக்கு உடனே வியட்நாம் வீடு நாடக கிரீன் ரூம் சென்று கொடுத்தேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  15. Thanks vasudevan31355 thanked for this post
    Likes KCSHEKAR, RAGHAVENDRA liked this post
  16. #2349
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler 5 : Beach songs with NT!

    கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!

    பகுதி 5 :ராஜா

    காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுச் செல்லும் கள்வராக இல்லாமல் ஒரு மாறுதலுக்கு காவலர் முன்னிலையிலேயே காதலைக் கடத்தும் ஜோடிகள் ! கடத்தல் வைரங்களைக் கைப்பற்ற காவலர் திலகம் கிடுக்கிப்பிடி போடத் தேர்ந்தெடுத்த இடம் எழில் கொஞ்சும் கடற்கரை எல்லையே





    அக்கரைப் பச்சை !

    Unlike our police helplessly watching the beach scene James Bond has his (24X7)Thunderball duty to dispatch baddies even as he relaxes in a beach!!

    Last edited by sivajisenthil; 23rd May 2015 at 08:52 AM.

  17. Thanks vasudevan31355 thanked for this post
  18. #2350
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகம் சண்டைக் காட்சிகள்.

    தொடர்-13

    நண்பர்களே!

    நடுவில் நின்று போய் இருந்த என்னுடைய 'நடிகர் திலகம் சண்டைக் காட்சிகள்' தொடரை தொடர்கிறேன். ராகவேந்திரன் சார், சந்திரசேகர் சார், வாசு சார், கோபால் மற்றும் இதர நண்பர்களும் தொடரை தொடரும்படி கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல. உங்களுக்காகவும், மற்ற எல்லோருக்காகவும்தான்.

    இனி நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகளை சண்டை சச்சரவுகள் இல்லாமல் கண் கொட்டாமல் ரசிப்போம்.


    தொடருக்குப் போவதற்கு முன்னால்.

    நம்மைப் போன்ற தலைவரின் தீவிரவாத ரசிகர்கள் கூட தலைவர் 'தங்கை' படத்தில்தான் சண்டைக்காட்சி கோதாவில் இறங்கினார் என்று சொல்வதுண்டு. அந்த எண்ணம் ஓரளவிற்கே சரி! (உத்தமபுத்திரனும், வணங்காமுடியும் விதிவிலக்கு. அது எல்லோரும் உணர்ந்ததே!) ஆனால் 67க்கு முன்னால்? ம்...சொல்லுங்கள். 67க்கு முன்னால்?.

    அதற்கு முன்னாலும் சண்டைக்காட்சிகளில் அவர் 'சூரக்கோட்டை சிங்கம்'தான். ஆனால் கூண்டில் உறுமிக் கொண்டிருந்த சிங்கம். ('தங்கை' படத்தில் பாலாஜி கூண்டை திறந்து விட்டு விட்டார்) அதை நிரூபிக்கத்தான் இந்த சண்டைக்காட்சி. நம்மில் பலர் இந்த சண்டைக் காட்சியை மறந்திருப்போம் அல்லது சற்று அலட்சியம் செய்திருப்போம். பரவாயில்லை. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இனி ஒவ்வொன்றாக எடுப்போம். நாமும் ரசித்து பிறரிடமும் நடிகர் திலகத்தின் சண்டைக் காட்சிகளின் மகத்துவத்தை கூறுவோம். அகிலம் அறியும்படி செய்வோம்.

    இனி தொடருகிறேன்....


    சரி! என்ன அப்படி ஒரு சண்டைகாட்சி! 'டிஷ்யூம்.. டிஷ்யூம்' ஒலிக்காத காலகட்டத்தில் வந்த சண்டைக்காட்சி. அதாவது நேச்சுரல் பைட். எதிராளியைக் குத்திப் பதம் பார்க்கும் போது 'டொக்' என்ற ஒலி மட்டுமே இயல்பாக ஒலிக்கும். அதுதானே சரி! இப்போதைக்கு அது சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் விஷயம் தெரிந்தவர்களுக்கு 'டிஷ்யூம்' தான் சிரிப்பை வரவழைக்கும். 'டிஷ்யூம்.. டிஷ்யூம்' எபெக்ட்டுக்குத்தானே! செயற்கையும் கூட.

    இனிமேல் சொல்லாவிட்டால் என்னை அடிப்பீர்கள். என்னுடன் சண்டைக்கு வருவீர்கள்.



    வெள்ளியம்பலத்தின் (பாலையா) 'புதையல்' ஆசை வெறியில் அப்பாவி இளைஞன் துரை ('நடிப்பின் துரை') சிக்கிக் கொள்கிறான். ஒன்றுமே அறியாத துரையை புதையல் ரகசியம் கேட்டு தொல்லை தருகிறான் அம்பலம். துரை தனக்குத் தெரியாது என்று மறுக்க, அவனை அப்படியே தனது அண்டர்கிரவுண்ட் பாதாள இருட்டு அறைக்குள் தள்ளி விடுகிறான் அம்பலம். இதை சற்றும் எதிர்பாராத துரை சற்றே நிலைதடுமாறி உடன் சகஜ நிலைக்குத் திரும்புகிறான். வெள்ளியம்பலத்துக்கு எதிராக வெகுண்டு எழுகிறான்.

    அறைக்குள் வரும் வெள்ளியம்பலத்தின் அம்பலத்தை அவனிடமே வெட்ட வெளிச்சமாக்கத் தொடங்குகிறான் தன்னுடைய சிம்ம கர்ஜனையால்.

    ('நீ ஒரு வெளிச்சம் போடும் காட்டு ராஜா')

    நாயகன் இப்படி முழங்கும் போது வில்லன் வெள்ளி சும்மா இருப்பானா? சனியாயிற்றே அவன்! தன்னிடமுள்ள அடியாட்களை துரை மீது ஏவி விடுகிறான். ஒன்றல்ல இரண்டல்ல... ஏழெட்டு அடியாட்களை. துரை ஒருவன். இளைஞன். வீரன். அவர்களுடன் தைரியமாக மோதுகிறான். துணிச்சலுடன் தன்னால் முடிந்தவரை போராடுகிறான். அவர்களை துவம்சம் செய்து பந்தாடுகிறான். ஆனாலும் அவர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் போராட்டத்தின் முடிவில் அவர்கள் கையில் சிக்குகிறான்.

    சண்டைக்கு முன் ஸ்டைல் போஸ்.



    கமால் பிரதர்ஸ் பிரைவேட் லிட்தயாரித்த 'புதையல்' (1957) படத்தின் அற்புதமான உண்மையான தத்ரூபமான சண்டைக்காட்சி. மெய் சிலிர்க்க வைக்கிறது நடிகர் திலகத்தின் வீரம். அருமையான உடல்வாகு. மிக எழிலான தோற்றம். இளம் வயது. மடித்து விடப்பட்ட முழுக்கை வெள்ளை சட்டை. லூஸுமில்லாமல், டைட்டாகவுமில்லாமல் 'சிக்'கென்ற மிக அழகான பேன்ட். 'கருகரு' சொந்த முடி. அலட்சிய தோரணை. பாலையா வெள்ளி அம்பலமாக அடியாட்களை கைகொட்டிக் கூப்பிடும்போது தூணில் சாய்ந்தபடி, வலது கையை பின் பக்கத் தலையில் வைத்து, இடது கையை இடுப்பில் ஊன்றியபடி, ஸ்டைலாக பின்பக்கம் திரும்பி, ஓடிவரும் அடியாட்களை நடிகர் திலகம் அலட்சியப் பார்வை பார்க்கும் போதே அதம் பறக்க ஆரம்பித்து விடும்.

    பாலையா இவரிடம், "பார்த்தாயா? காட்டு ராஜாவின் படைகள்" என்று கொக்கரிக்க,

    "படைகள்... ('ஹ ஹ ஹ ஹ' என்று நக்கல் சிரிப்பு உதிர்ப்பார்) சோற்றால் அடித்த பிண்டங்கள்...எடுபிடிக்கள்...ஏனோதானாக்கள்...இள ிச்சவ ாயர்கள்"
    என்று நடிகர் திலகம் பதில் கொக்கரிப்பு செய்யும் போது நரம்புகள் நமக்கு சூடாகும்.

    பாலையா: ஏய்! நான் போக்கிரி!

    நடிகர் திலகம்: போக்கற்றவர்களுக்கு.

    பாலையா: கொன்று விடுவேன்.

    நடிகர் திலகம்: கோழைகள் பயப்படுவார்கள்..

    பாலையா: ஏய்! நான் இந்த ஊருக்கே ராஜா.

    நடிகர் திலகம்: கோழி கூடத்தான் குப்பை மேட்டுக்கு ராஜா. (கதை வசனம் கலைஞர் ஆயிற்றே!)

    பதிலடி முதலில் 'பொளேர் பொளேர்' என்று பொட்டில் அடித்தாற்போல் வரும்.

    பின் 'ஸ்டன்ட் சோமு'பார்டி அடியாட்களுடன், கையடி,காலடி, நரம்படி, எலும்படி என்று கைகலகலப்பு நீளும். கழுத்துக்கள் முறியும், எலும்புகள் நொறுங்கும்.


    முதலில் தன் மீது பாய்ந்து வரும் அடியாள் ஒருவரை நடிகர் திலகம் படு அலட்சியமாகவும், வேகமாகவும் அப்படியே பிடித்துத் தள்ளுவது சண்டையின் விறுவிறு துவக்கம். அதே போல அடுத்து வரும் ஆளையும் பலமாகத் தள்ளுவார். பின் எல்லோரும் இவரைச் சுற்றி வளைத்து பிடித்தவுடன் திமிறிக் கொண்டு ஒரு பின் பக்க டைவ் செய்வது போல் காட்சி. (இந்த இடம் 'டூப்' உபயோகப்படுத்தி இருப்பார்கள்). பின் வருபவர்களை ஒவ்வொருவராக இவர் கும்மாங்குத்து விட்டு நம்மைக் குதூகலிக்க வைப்பது அபாரம்.



    அடுத்து தன்னை நோக்கி வேகமாகப் பாயும் ஒரு அடியாளின் ஷோல்டரைத் தட்டி (செம சூப்பராக இருக்கும்) கழுத்தைப் பிடித்து அப்படியே விட்டுக் கிடாசுவார். (விட்டல்ராவின் ஒளிப்பதிவு இந்த ஸ்டன்ட் காட்சியில் விளாசி எடுக்கும். பின் ஆக்ரோஷ சண்டைதான். இடையில் சில காட்சிகளில் டூப் போட்டிருப்பார்கள். அதில் நடிகர் திலகத்திற்கு பொருத்தமான டூப் போடாமல் பம்பை முடியுடன் ஒருவரை பொருத்தமே இல்லாமல், அந்தபந்தம் இல்லாமல், டூப்பாகப் போட்டிருப்பார்கள். (இது ஒன்றுதான் நெகடிவ் பாய்ன்ட்)



    அடுத்து வரும் அடியாளின் கையை அப்படியே முறுக்கி குப்புற விழ வைப்பார். இன்னொருவர் வரும் போது நடிகர் திலகம் காலால் எட்டி உதைக்க, அந்த அடியாள் வசமாக நடிகர் திலகத்தின் காலைப் பிடித்துக் கொண்டதும் பின்னால் அடிக்கப் பாய்ந்து வரும் ஆளை அப்படியே திரும்பி ஒரு குத்து விடுவார். பின் நடக்கும் களேபரங்களில் அடியாட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் தகர டின்களின் மேல் விழுவதும், அடி தாங்க மாட்டாமல் பேரல்களின் உள்ளே குப்புற கவிழ்ந்து விழுவதும் காட்சிக்கு பிரம்மாண்டம் கொடுக்கும்.

    பின் சில காட்சிகளை டூப் பார்த்து கொள்ள, பின் ஒரு அதகளமான சீன்.

    அடுத்து வரும் அடியாளின் கைகளைப் பிடித்து கழுத்தில் சுற்றி வளைத்து க்ஷண நேரத்தில் மூட்டையை பக்கவாட்டில் தூக்கிப் போடுவது போல தூக்கிப் போடுவாரே பார்க்கலாம். நிஜமாகவே மயிர்க்கூச்செரியச் செய்யும் காட்சி. இந்தக் காட்சியை ஒரு நான்கைந்து தரமாவது ரிவர்ஸ் செய்து பின் பாஸ் செய்து பாருங்கள். மிக மிக அற்புதமான காட்சி இது. அசந்தே போனேன். சர்வ அலட்சியமாக செய்வார் நடிகர் திலகம்.

    அடுத்து இன்னும்.. இன்னும்...

    நடிப்பில் உச்சம் தொடுவது போல அடிகள் கொடுப்பதிலும் தூக்கிக் கிடாசுவதிலும் உச்சம் தொடுவார். ஒரு அடியாளின் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து அப்படியே தூக்கி வீசுவார். அடுத்து வரும் ஆளின் இடுப்பை சுற்றி வளைத்து அப்படியே தலைகீழாகத் தூக்கிப் போடுவார். பின் துரத்தும் அடியாட்களிடம் இருந்து மாடிப்படிகட்டுகள் ஏறி ஓடி அப்படியே திரும்பி அவர்கள் அத்தனை பேர் மேலும் அப்படியே புலி போல டூப்பே இல்லாமல் பாய்வார்.

    புலிப் பாய்ச்சல்



    அடடா! காணக் கோடி கோடியாய்க் கண்கள் வேண்டும். பார்ப்பவர்கள் அப்படியே உறைந்து வாய் பிளந்து பார்க்குமளவிற்கு நடிகர் திலகத்தின் சாகசங்கள் இந்த சண்டைக் காட்சியில் சரித்திரம் படைக்கும். பின் அத்தனை அடியாட்களும் இவர் மேல் விழுந்து இவரை பிடித்து கட்டி வைத்து விடுவார்கள்.


    இந்தக் காலத்து ஹீரோக்களும் நகைக் கடையை தன் உடலில் சுமக்கும் இருபது முப்பது சோற்றுத் தடியன்களுடன் சண்டை போடுகிறார்கள். ஹீரோ சும்மா சாதாரணத் துண்டால் சுழற்றி அடித்தால் கூட அடிவாங்கும் அடியாள் ஐநூறு அடி தள்ளி வலி தாங்காமல் கத்தியபடி உருண்டு புரண்டு, அங்கே உள்ள பொருட்களின் மீது விழுந்து வைக்கிறான். ஹீரோ ஒரு அடி கூட வாங்காமல் அதுவும் படு ஸ்டைல் காட்டி, அத்தனை பேரையும் சாய்த்துவிட்டு, சட்டையின் சலவை மடிப்பு கலையாமல் பஞ்ச் டயலாக் விடுகிறான். கொஞ்சம் கூட நம்பவே முடியாத இந்த மாதிரி கூத்துக்களையெல்லாம் நாமும் விதியே என்று பாவமாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

    இந்த சண்டைக் காட்சியிலும் நடிகர் திலகம் ஏழெட்டுப் பேர்களுடன் மோதுகிறார். ஆனால் நம்பும்படியாக இருக்கும். ஒரு ஆவேச இளைஞன் எந்த அளவிற்கு தன்னால் முடிந்த பலம் காட்டி மோதுவானோ அது நடிகர் திலகம் மூலம் அம்சமாக நமக்கு உணர்த்தப்படும். தூக்கிக் கிடாசுவதற்கு தக்கபடி ஆட்கள் சற்று ஒல்லியாக ஆனால் அதே சமயம் ஸ்ட்ராங்காக இருப்பார்கள். ஒற்றை ஆள் இத்தனை பேருடன் போராடி இறுதியில் அவர்களிடம் மாட்டிக் கொள்வார். இதுதானே இயல்பாய் நடக்கக் கூடியது?


    மிக மிக இயற்கையான இரத்தம் உறையச் செய்யும் விறுவிறுப்பான சண்டைக்காட்சி. புதையல் கதையிலும், நடிகர் திலகத்தின் இளமை அழகிலும், சொல் சித்தர் விளையாட்டிலும், 'பத்மஸ்ரீ', பத்மினியின் காதல் களியாட்டங்களிலும், சந்திரபாபுவின் நகைச்சுவையிலும், இனிமையான பாடல்களிலும் நடிகர் திலகம் உயிரைக் கொடுத்து நடித்த இந்த அற்புத சண்டைக்காட்சி கொஞ்சம் கண்டு கொள்ளப்படாமல் போய் விட்டது.

    இனி என்ன? எடுத்துக் கொடுத்தாகி விட்டது. நீங்கள் இந்த சண்டைக்காட்சியின் பெருமையை அனைவரிடமும் சொல்லி வாயார தலைவரைப் புகழ்ந்து, மனம் மகிழ்ந்து அவர் பெருமையை பறை சாற்ற வேண்டும்.

    'தங்கை'க்கெல்லாம் முன்னாடியே தன்னிகரில்லா சாதனைகளையெல்லாம் எப்போதோ தங்க நிகர் தலைவர் சண்டைக்காட்சிகளில் படைத்தாகி விட்டது என்று இப்போது நம்புகிறீர்களா?

    'மன்னர்' இசையமைத்து கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த நமக்குக் கிடைத்த அரும் 'புதையல்' சண்டைக்காட்சி இது. நன்றி நண்பர்களே! அடுத்து இது போன்ற அரியதொரு சண்டைக் காட்சியில் உங்களை சந்திக்கிறேன்.


    'புதையல்' படத்தின் இந்த அருமையான சண்டைக்காட்சியை முதன்முதலில் இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக.

    Last edited by vasudevan31355; 23rd May 2015 at 10:22 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •