Page 224 of 401 FirstFirst ... 124174214222223224225226234274324 ... LastLast
Results 2,231 to 2,240 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2231
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால்,

    'பாலும் பழமு'மாய் நீங்களும், ராகவேந்திரன் சாரும் இருக்க, முரளித்தேனும் கூட இருக்க விருந்துக்கு குறைச்சலேது?





    இரும்புத்திரை, பாவ மன்னிப்பு, இருவர் உள்ளம், தீபம், வாழ்க்கை என்று தலைவர் அடக்கி வாசித்து அடங்காத விமர்சகர்களை அடக்கி ஆண்டதுண்டு. இதுவும் முடியும், இன்னமும் முடியும், என்னமும் செய்ய முடியும் என்று நடிப்பு வாளெடுத்து நயவஞ்சக விமர்சகர்களை சாய்த்தவர் அவர்.

    'இரும்புத்திரை' அடக்கம் கொள்கைப் பிடிப்பு அடக்கம். கொண்ட காரிய சாதிப்பு அடக்கம். இரும்பைப் போல உள்பக்கம் உறுதியானது. ஆனால் இளகு மனம் கொண்டது.

    'பாவ மன்னிப்பு' அடக்கம் பாவப்பட்ட, போராட்ட அடக்கம். ஆனால் ஒரு சமயம் வீறு கொண்டு எழுந்து பின் அடங்கி விடும். ஆற்றா அன்னைத் துயர் அடக்கம். சிரித்தழுது சிலிர்க்க வைத்த அடக்கம்.

    'இருவர் உள்ளம்' இம்சைப்பட்டு இரக்கப்பட வைத்த அடக்கம். அனைத்து தரப்பினரையும் அடக்கி ஆண்ட சாந்(தா)த அடக்கம்.

    'தீப'மோ உள்விழுங்கி தியாக அடக்கம். நிறை காதலை மனதில் வைத்து மறை காதலால் மறையும் அடக்கம்

    'வாழ்க்கை' வாழ்க்கையோடு ஒன்றிய அடக்கம், அடிபட்ட புலியின் அடக்கம். ஆறாத காயத்தின் அடக்கம். வஞ்சித்த சுற்றம் மீது வாஞ்சை வைக்காமல் திரும்ப வஞ்சம் காட்டும் அடக்கம்.

    ஒவ்வொன்றும் ஒவ்வொருவித அடக்கம். இந்த அடக்கம் வேறு. அந்த அடக்கம் வேறு. ஒன்றையொன்று டச் பண்ணாது. ஆனால் அனைவர் மனதையும் டச் பண்ணும்.

    ஆனால் எவரும் அவரை டச் செய்ய முடியாது.

    இது நம்மமுடைய அடக்கம்.
    Last edited by vasudevan31355; 21st May 2015 at 10:41 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellmai, uvausan, adiram liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2232
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    பாலும் பழமும்(தொடர்ச்சி)

    நடிகர்திலகமே படத்தின் தலையாய உயிர்மூச்சு. படவுலகத்துக்கும்,முதிர்ச்சியற்ற ரசிகர்களுக்கும் நல்ல கலையை தன் உழைப்பென்ற ரத்தத்தால் அமுதாக்கி கொடுத்து கொண்டிருந்தார் பலன் கருதாது. அவர் நடித்த அத்தனை படங்களும் ,ரசிகர்களை உயர்த்தி ,ரசனையை ஒரு படி மேலேற்றும் பணிகளை செய்தன. மற்றொரு புறம் ,ரசிகர்களை திருப்தி படுத்தி,அவன் ரசனை முன்னேறாமல் செய்து,அவனுக்கு பழகிய விருப்பப்பட்ட விஷயங்களை கொடுத்து வியாபாரியாக போட்டியாளர்கள். இப்போதைய படித்த இளைஞர்கள் (ஏட்டு படிப்பே. ரசனை உயர்ந்ததா?) மிக்க காலத்திலேயே கமல் போன்றவர்கள் இவ்வளவு திணறும் போது ,அந்த கால மந்தை கூட்டத்தின் நடுவே ,நடிகர்திலகத்தின் பணி எவ்வளவு மகத்தானது?
    ,பராசக்தி அந்தநாள்,ரங்கோன் ராதா, மணமகன் தேவை,அன்னையின் ஆணை,கப்பலோட்டிய தமிழன்,பார் மகளே பார்,புதிய பறவை,தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்கள் காலத்தை எவ்வளவு முந்தியவை? அதுவரை இருந்த மசாலாக்களை முறித்து போட்டவை.

    இந்த படத்தில் ,நடிப்புக்கு ஒரு புது இலக்கணம் வரைய பட்டது. poise ,elegance ,balance ,style எல்லாம் கொண்ட ஒரு sophisticated underplay with restraint என்பது அரங்கேறி ரசிகர்களை குதூகலத்தில் தள்ளியது. அவன் ரசனையை கைபிடித்து பத்திரமாக மேலேற்றியது. மூக்காலே ,முணு முணுப்பது(whisper through Nasal Tone ) போல வசனம் பேசி அந்த பாத்திரத்துக்கு தொழில் சார்ந்த ஒரு மரியாதை கிடைக்க செய்வார்.ஒரு உயர் ரக கண்ணிய போக்கு ,பாத்திரத்தின் மனநிலையையும் ,உணர்வு நிலையையும் கூட துல்லியமாக நூல் பிடித்தாற்போல வெளியிட்டு விடும்.
    இலகுவான ஒரு உபரி செய்தி. டி.எம்.எஸ் அவர்களுக்கு ஜலதோஷம். அத்துடன் பாடியதால், சிவாஜி தன் பாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்த குரல் பாடல்களுக்கும் கிடைத்து விட்டது.

    நடிகர்திலகத்துக்கு இதில் தோதான திரைக்கதையமைப்பு. கண்ணியமான லட்சிய உணர்வுள்ள மருத்துவராக ஆரம்பம், தன் லட்சியத்தை சுமக்கும் துணையை தேர்வு செய்யும் கட்டம், முரண்பட்டு நிற்கும் குடும்பத்தாரிடம் சங்கட வெளியீடு, இலட்சிய மனைவியுடன் உணர்வு ரீதியில் காதலாகி கசிந்துருகும் இடங்கள், அவள் நோய் வாய் பட்ட பிறகு எல்லாவற்றையும் துறந்து அவளுக்காகவே வாழும் வாழ்வு, பிரிவின் சோகம்-தாபம்-வேதனை-விரக்தி, குடும்பத்தால் சுமத்த பட்டு வேண்டா வெறுப்பாக இரண்டாவது திருமணம், மனைவியுடன் ஓட்ட முடியாமல் அவள் உணர்வுகளை தாண்ட முடியாமல் தகிப்பது,கண் போன பின் நீலாவிடம் இயல்பாக அமையும் பிடிப்பு, அவளிடம் உள்ளம் திறப்பது,என்று படம் முழுதும் அவருக்கு கொடி நாட்ட தோதாக கதை ,காட்சிகள்.(பீம்சிங் அல்லவா?)

    அவ்வளவு பிரமாதமாக அமையும் அவர் வெளியீட்டு முறை. அமைதியான ,லட்சிய மருத்துவர் , காதலில் விழும் அழகு நான் பேச நினைப்பதெல்லாம் என்றால், மனைவியை குழந்தை போல எண்ணி உருகி பணிவிடை செய்யும் பாங்கு பாலும் பழுமும் கைகளில் ஏந்தி.(சுமைதாங்கி சாய்ந்தால் முன்னோடி)எம்.ஆர்.ராதாவின் நியாமற்ற வேண்டுகோளை curt ஆக ,அமைதியான கண்டிப்புடன் புறம் தள்ளும் அழகு. மனைவிக்கு பணிவிடை செய்யும் போது ,இடையீடு செய்யும் தொலை பேசியில் முதல் வேண்டுகோள் மறுப்பு ,இரண்டாவது முறை இயலாமை கலந்த வெறுப்பான மறுப்பு, மூன்றாவது முறை மூர்க்கமான வெறுப்புடன் உயிர் போச்சா இருக்கா I am coming என்ற இயலாமையின் உக்கிர வெளியீடு,(சாந்தி விலகி போகும் முடிவுக்கு வரும் காட்சி. என்னவொரு impact ), civilian march பாணி நடையுடன் ,வாக்கிங் ஸ்டிக் உடன் பாடும் போனால் போகட்டும் போடா என்ற விரக்தி-தத்துவ பாடலின் ரசிக ஈர்ப்பு முறை (இதனை முன்னோடியாக கொண்டே சிவாஜி என்றால் ஒரு தத்துவ சோலோ என்ற formula எண்பதுகள் வரை தொடர்ந்தது )நளினியின் பிடிவாதம்,பெரியவரின் உடல் நிலை கருதி தன்னிலை வெளியிட்டு திருமணத்துக்கு உடன் படும் கட்டம்,இரண்டாம் மனைவியின் உணர்வு வெளியீட்டின் தகிப்பை தாங்க முடியாத கட்டம்,நீலாவின் குரல் கேட்டதும் வரும் துடிப்பு,அவளிடம் உருவாகும் நேசம் நிறை நட்பு, பெரியவருடன் தன கையறு நிலையை சொல்லி கலங்கி தவிப்பது என்று டாக்டர் ரவியின் பாத்திரம் என்றென்றும் பேச படும் அளவில் நடிப்பில் முன்னோடி புது பாணி அரங்கேற்ற படும்.(இதை ரிலீஸ் நாளில் உடனே பார்த்த அண்ணாவின் மனநிலை யூகிக்க கூடியதே)

    சரோஜாதேவி பிரமாத படுத்துவார். சாவித்திரியின் spontaneity வராவிட்டாலும் ,அவரை விட சில இடங்களில் முந்துவார். முக்கியமாக நோயில் வீழ்ந்து கணவரின் அளவு மீறிய ஈடுபாட்டோடு வரும் பணிவிடைகளில் உருகி நெகிழ்ந்து அதே சமயம் கடமை மறக்கும் கணவரை எண்ணி மருகுவது, நீலாவாக வேடமிடும் போது கணவரின் காதல் கண்டு பெருமிதம் ஒரு புறம்,தன்னிலை எண்ணி தன்னிரக்கம் மறுபுறம், இரண்டாம் மனைவியின் ஸ்தானத்திற்கு கொடுக்கும் மனிதம் என்று முகபாவங்களில் பிரமாத படுத்துவார். மின்னல் போல உணர்வுகளை வெட்டி வெளியிடுவார். நட்பை விரும்பவும் செய்வார்.
    சௌகார் ஜானகி,சுப்பையா,பாலையா,எம்.ஆர்.ராதா ,நாகையா வழக்கம் போல நல்ல பங்களிப்பு. சுப்பையாவிற்கு அவருக்கென்றே தைத்த சட்டை போன்ற ரோல்.(நானே ராஜாவில் வில்லனாகவும் கிழிப்பார். என்னவொரு performer !!!!)
    sarojadevi's best performance.. yes even better than savithiri & sowkar. (enga azhanumo anga mattume azhudhu matra idathil thanakke uryiya kurmbu ponga Saro dhool kilappuvar)

  5. Likes RAGHAVENDRA, vasudevan31355 liked this post
  6. #2233
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பாலும் பழமும் (தொடர்ச்சி)

    பாலும் பழமும் படத்தின் மிக பெரிய பலம், எந்தொவொரு எதிர் மறை பாத்திரமும் இல்லாமல் , வாழ்க்கையின் சுருதி பேதங்களை அடிநாதமாக கொண்ட நிகழ்வுகள்,உணர்வுகள். சிறுசிறு மனத்தாபங்கள் (திருமணத்திற்கு ஒப்பும் பெரியவர்கள் ,மணத்திற்கு நேரில் வராதது அழகாக register ஆகும்) உணர்வு போராட்டங்கள் இவையே கதையை நடத்தி செல்லும்.

    ஒரே எதிர்மறை பாத்திரம் செல்லத்துரை என்கிற எம்.ஆர்.ராதா நகைசுவைக்கு பயன் படுத்த பட்டிருப்பார்.கதையோடு ஒட்டாதெனினும் ,செந்தில்-கௌண்டமணி போல கருணாநிதி-ராதா நன்கு நகைச்சுவை மிளிரும்.

    பாடல்கள் 1961 அதுவும் பீம்சிங் படம் , அதிலும் வேலுமணி (பதிபக்தி பங்குதாரர்கள் )படமென்றால், அதிலும் சிவாஜி என்றால் விஸ்வநாதன்-ராமமூர்த்தி உற்சாகத்தை கேட்கவும் வேண்டுமா?பா படங்களே பாடல் படங்கள் ,அதிலும் இதில் இரண்டு பா. ஆலயமணியின்,நான் பேச ,பாலும் பழமும்,போனால் போகட்டும்,காதல் சிறகை,என்னை யாரென்று,இந்த நாடகம் என திணற வைக்கும் அளவு சிறந்த பாடல்கள் அருமையான படமாக்கத்தில் மிளிரும். இதில் தென்றல் வரும் என்ற எனது பிரிய பாடல் நீக்க பட்டு விட்டது நீளம் கருதி.

    லாஜிக் அருமையாக வரும். குடும்பத்தினர் கல்யாணத்திற்கு வராதது (சாந்தியை தெரியாது),எம்.ஆர்.ராதா மட்டும் பார்ப்பது,ரயில் விபத்து எல்லாம் சரி. சுவிட்செர்லாந்து சினிமா கற்பனை என்று விடலாம். சில வேளைகளில் டாக்டர் கொஞ்சம் நிதானமிழப்பார். ஆனால் பெரிய துன்பம் என்பதால் சில நேரம், குணமாற்றம் தடுமாற்றத்தில் ஏற்படுவதில்லையா?

    படம் தொடுக்க பட்டிருக்கும் மாலை போல அழகான திரைக்கதையால்.ஒவ்வொரு கணமும் ,பார்வையாளருடன் பிணைந்திருக்கும். போர் என்று ஓர் நிமிடம் கூட இருக்காது.இது போன்ற படங்கள் மனிதனின் மனத்தில் உன்னதம் வளர்க்கும். வாழ்க்கை ஏற்ற-தாழ்வு,இன்ப-துன்பம் யாவற்றிலும் உயர் சமூக நோக்கம் ,மனிதத்துடன் ஜீவிக்க இப்படி பட்ட படங்கள் உதவின.

    (முற்றும்)
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Thanks adiram thanked for this post
    Likes Harrietlgy, KCSHEKAR, uvausan, adiram liked this post
  8. #2234
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  9. Likes RAGHAVENDRA liked this post
  10. #2235
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  11. Likes RAGHAVENDRA liked this post
  12. #2236
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  13. Likes RAGHAVENDRA, Russellmai, uvausan, Gopal.s liked this post
  14. #2237
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  15. Likes Gopal.s, RAGHAVENDRA, Russellmai liked this post
  16. #2238
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  17. Likes Gopal.s, RAGHAVENDRA, Russellmai liked this post
  18. #2239
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  19. Thanks eehaiupehazij thanked for this post
  20. #2240
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  21. Likes Gopal.s, RAGHAVENDRA, Russellmai, uvausan liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •