Page 221 of 401 FirstFirst ... 121171211219220221222223231271321 ... LastLast
Results 2,201 to 2,210 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2201
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    திரி சூடு பிடித்திருக்கிறது.

    வாசு சாரின் வரவால் கோபால் சார் எழுத்து மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. சிவாஜி செந்தில் சாரின் பதிவுகள், ராகவேந்தர் சாரின் திலக சங்கமம் தொடர், முரளி சாரின் அனுபவப் பதிவுகள், செந்தில்வேல் சாரின் பொக்கிஷப் பதிவுகள், மதுரை சுந்தரராஜன் அவர்களுடைய பதிவுகள், என களை கட்டுகிறது திரி. வாழ்த்துக்கள். வாசு சார் உங்களின் விடுபட்ட்போன நடிகர்திலகத்தின் விறுவிறு தொடர்களை மீண்டும் எதிர்பார்க்கிறோம்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  2. Thanks eehaiupehazij, vasudevan31355 thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2202
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2203
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெகு ஜன ஈர்ப்புக்கு வாய்ப்பு குறைந்த படங்களை பிளாக் பஸ்ட்டர் ஆக்குவதற்கு வெள்ளி விழா காண வைப்பதற்கு ,நமது நடிகர்திலகத்தை விட்டால் யார்?

    இந்த மாதிரி உண்மைகளை ஏன் உணர்வதில்லை திரைப்பட விமர்சகர்கள்என்பதுதானே சிவாஜி ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி?
    Last edited by senthilvel; 20th May 2015 at 01:32 PM.

  6. Likes Subramaniam Ramajayam liked this post
  7. #2204
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. Likes Russellmai, eehaiupehazij liked this post
  9. #2205
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. Likes Russellmai liked this post
  11. #2206
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. Likes Russellmai liked this post
  13. #2207
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    வாசு சொன்னது போல் உங்களிடம் உள்ள ஒரு நல்ல குணம் உண்மையை எழுத தயங்காதிருப்பது. அதை உறுதிப்படுத்தும் வண்ணம் இரண்டு உண்மைகளை ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

    1. எழுத சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு கடந்த சில பல மாதங்களாக மீள் பதிவுகளை போட்டு ஜல்லியடித்துக் கொண்டிருந்தேன் என்ற ஒப்புதல் வாக்குமூலம். [இதை நீங்கள் எழுதவில்லையென்றால் நான் எழுதியிருப்பேன் என்பதை புரிந்துக் கொண்டு முன் ஜாமீன் பெற்று விட்டீர்கள். ஓகே]

    2. வெற்றுப் பொழுதுபோக்கு படத்தை வெள்ளி விழா காண வைக்க ரவிச்சந்திரன் கூட போதும் என்ற மற்றொரு உண்மைக்கும் நன்றி.

    இனி பாகப்பிரிவினைக்கு வருவோம்.

    நடிகர் திலகம்-பீம்சிங்- வேலுமணி கூட்டணியில் வெளிவந்த பாகப்பிரிவினை மற்றும் பாலும் பழமும் இரண்டுமே கிளாஸ் படங்கள் என்பது மட்டுமல்ல இரண்டுமே பிளாக்பஸ்டர் படங்கள் என்பதுதான் சாதனையே.

    ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே நடிக்கும் இந்த காலகட்டத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்த மாபெரும் நடிகனல்லவா நமது நடிகர் திலகம். கட்டபொம்மனும் கன்னையனும் 1959 என்ற ஒரே காலண்டர் வருடத்தில் உருவகப்பட்டவர்கள் எனும்போது இன்றைக்கும் எத்துனை பிரமிப்பாய் பார்க்கிறோம்! [இது என்ன பிரமாதம்! கெளரவம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியையே படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் நடித்தவராயிற்றே!]

    பாகப்பிரிவினையின் மற்றொரு சிறப்பம்சம் பாத்திரப் படைப்பு. பொதுவாக மாற்றுத் திறனாளிகளை முக்கிய பாத்திரமாக்கும்போது அவர்களை அனுதாப அடிப்படையிலே அணுகுவதுதான் தமிழ் சினிமா வழக்கம். அதை மீறி கருத்து வேறுபாடுகள் மன முறிவுகள் அவற்றின் மூலம் உண்டாகும் உணர்ச்சிப் போராட்டங்கள் என்ற தளத்தில் சஞ்சரிக்கும் ஒரு திரைக்கதையமைப்பு. பாராட்டுக்குரியவர்கள் எம்.எஸ். சோலைமலை மற்றும் பீம்சிங். நாயகன் தன் உடல் குறைபாட்டை நினைத்து வருந்தாமல் வாழும் அந்த பாஸிடிவ் அணுகுமுறை. தாழையாம் பூ முடித்து பாடலில் மட்டும் அந்த சோகம் மெல்லியதாய் வெளிப்படும் [அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை]. ஆனால் அடுத்த வரியில் நாயகி தன் விருப்பத்தை வெளிப்படுத்தியவுடன் பாடல் முடியும் நேரம். மேட்டிலிருந்து பள்ளத்தில் இறங்கும் மாட்டை நடத்தியபடி அங்கே தேங்கியிருக்கும் தண்ணீரை காலால் எத்தி சிதறடிப்பாரே! என்ன ஒரு பாஸிடிவ் உற்சாகம்!

    நடிகர் திலகம் படம் முழுக்க பிச்சு உதறியிருப்பார். எம்.ஆர். ராதாவிற்கு author backed role. அதில் ஸ்கோர் செய்வது ரொம்ப ஈஸி. எதையும் நேர் முரணாக பேசுவது. நாத்திக வாதங்களை உள்ளே நுழைப்பது. இதன் மூலம் கைதட்டல்களும் பேரும் கிடைக்கும்.[பிற்காலங்களில் கவுண்டமணி செய்ததும் இதுதான்]. ஆனால் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு வென்றிருப்பார் நடிகர் திலகம். [பாவ மன்னிப்பிலும் அது போலவே]. சரோஜாதேவியின் பாத்திரம் உணர்ந்த நடிப்பு. [நடிகர் திலகத்தோடு அவர் இணைந்த almost all படங்களில் வெகு சிலவற்றை தவிர்த்து அவர் நடிப்பு திறம்பட விளங்குவதைப் பார்க்கலாம்].

    பாலையா சுப்பையா ராஜம்மா சி.கே. சரஸ்வதி, நம்பியார் என அனைவரும் பாந்தம். மெல்லிசை மன்னர்களின் சாம்ராஜிய கொடி பட்டொளி வீசி பறக்க ஆரம்பித்த நேரம். நீங்கள் குறிப்பிட்டது போல் நடிகர் திலகத்தை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் படம் வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகமே! பொழுதுப் போக்கு படங்களையெல்லாம் பின்தள்ளி அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்து ஓடிய நாட்களில் புதிய சாதனை படைத்து ஒரு புதிய வரலாற்றை உருவாகியது பாகப்பிரிவினை.

    மதுரை சிந்தாமணியில் 216 நாட்கள் ஓடி கருப்பு வெள்ளைப் படங்களில் [ஏன் கலர் படங்களையும் சேர்த்தாலும் கூட] புதிய சரித்திரம் எழுதியது. மதுரை மாநகரிலே 1959-ம் வருடத்திலேயே மூன்று லட்சத்து முப்பத்தேழாயிரம் ரூபாய் [3,37,000/-] வசூல் செய்த படம். 1959 என்ற ஒரே காலண்டர் வருடத்தில் கட்டபொம்மன் பாகப்பிரிவினை என்ற இரண்டு வெள்ளிவிழாப் படங்களை கொடுத்து நடிகர் திலகம் புதிய சாதனை புரிந்தார் என்றால் அதற்கு உறுதுணையாக நின்று அப்படிப்பட்ட சாதனை நிகழ்த்தப்பட்ட முதல் நகரம் என்ற பெருமையையும் எங்கள் மதுரை தட்டி சென்றது. அதன் பிறகு மேலும் இரண்டு முறை இதே போன்ற சாதனை [ஒரே காலண்டர் வருடத்தில் இரண்டு வெள்ளிவிழாப் படங்கள் - 1972 -பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை, 1983 - நீதிபதி, சந்திப்பு] நிகழ்ந்த களமாக விளங்கி தமிழகத்திலேயே மூன்று முறை ஒரே காலண்டர் வருடத்தில் ஒரே நடிகரின் இரண்டு படங்கள் வெள்ளி விழா கண்ட ஒரே நகரம் என்ற நிரந்தர பெருமையை தக்க வைத்துக் கொண்டது எங்கள் கூடல் மாநகரம்.

    மதுரையில் மட்டுமல்ல சுற்றுவட்டாரங்களிலும் வெற்றிக் கொடி நாட்டிய படம் பாகப்பிரிவினை.[திண்டுக்கல் NVGB -யில் 100 நாட்கள். நடிகர் திலகமும் ஏனைய கலைஞர்களும் நேரில் வந்தார்கள்]. மறு வெளியீடுகளில் மட்டும் குறைச்சலா என்ன! மதுரையில் எப்போதெல்லாம் மறு வெளியீடு கண்டதோ அப்போதெல்லாம் தேர் கூட்டம் திருவிழா கூட்டம். ஒரு முறை கணேஷா தியேட்டரில் கோடை வெயிலில் அதுவும் மாட்னி காட்சியில் ஆட்கள் சீட்டில் பிதுங்கி வழிய வழிய பார்த்ததை மறக்கவே முடியாது.

    நன்றி கோபால்! மேலும் இது போன்ற புதிய பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் ரசிகன்

    அன்புடன்

  14. #2208
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சின்ன சிவாஜி : குறுந்தொடர்
    பகுதி 3 : மாஸ்டர் X? / வசந்த மாளிகை
    ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்......அன்னை அரவணைப்பின்றி ஆயா வளர்ப்பில்....ராஜவாரிசே ஆயினும் மனம் வெறுத்த தந்தை மதுவில் மூழ்கிட ......வழிமாறும் தனயன்.....பால்மணம் நீங்கும் முன்னரே 'மது'பாலன் ஆகிவிட்ட சோகக்கதை!
    சின்ன சிவாஜியாக மாஸ்டர் X ....? பதைக்க வைத்த காட்சிக் களம் !


    மாஸ்டர் சேகர் சின்ன சிவாஜியாக நடித்த ராஜா.....தகுந்த காணொளிக் காட்சிகள் கிடைத்தவுடன்!
    Last edited by sivajisenthil; 21st May 2015 at 07:13 AM.

  15. Thanks Gopal.s thanked for this post
    Likes Georgeqlj, Russellmai liked this post
  16. #2209
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Sivaji Sendhil sir,

    Sorry for disturbance.

    In Vasandha Maaligai, Master Ramu acted as youngest brother of vanishree.

    How can we forget the dialogue, when master Ramu wake him (NT) from sleep... "Akka varalai..?"

  17. Thanks eehaiupehazij thanked for this post
  18. #2210
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Excellent Gopal sir & Murali sir,

    //நடிகர் திலகம்-பீம்சிங்- வேலுமணி கூட்டணியில் வெளிவந்த பாகப்பிரிவினை மற்றும் பாலும் பழமும் இரண்டுமே கிளாஸ் படங்கள் என்பது மட்டுமல்ல இரண்டுமே பிளாக்பஸ்டர் படங்கள் என்பதுதான் சாதனையே.//

    After this two super-duper hits, Velumani jumped to "somewhere" and finally he travelled in bus, asking his friend to take a ticket for him.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •