Page 220 of 401 FirstFirst ... 120170210218219220221222230270320 ... LastLast
Results 2,191 to 2,200 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2191
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    பாகப் பிரிவினை - 1959



    இந்த கேள்வி என் மனதில் இன்று வரை நிழலாடுகிறது. என்னவோ பதினாறு வயதினிலே க்கு முன்பு வெளிப்புற படப்பிடிப்பே நடக்காத மாதிரியும், அந்த படம்தான் தமிழ் பட திருப்பு முனை என்றும் ,பீம்சிங்,கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலசந்தர் போன்றவர்களை தொபெரென்று போட்டுவிட்டு , பாரதிராஜா (எனக்கும் பிடிக்கும்)இவரின் நூற்றுகணக்கான போலிகள் (செல்வராஜா,பாக்கியராஜா,etc etc )இவர்களை பத்திரிகைகள் கொண்டாடின. இத்தனைக்கும் துளி கூட ரியலிச சாயல் இல்லாமல், sensationalism ,pseudo -eusthetics ,கிச்சு கிச்சு காமெடிகள்,ஓட்ட வைத்தார்போல காட்சிகள், உண்மையில்லா பாத்திர வார்ப்புகள்,cliche ஆன படங்கள்,சம்பந்தமில்லா montage ,மொக்கை நடிப்பு என்று நூற்று கணக்கில் படங்கள்.(மகேந்திரன் விதிவிலக்கு,பாலு மகேந்திரா கொஞ்சம் தேறுவார்).ஷ்யாம் பெனெகல்,கிரீஷ் கர்னார்ட், அடூர் படங்களில் இருந்து உருவிய சில காட்சிகள்.(மூலத்தின் சாரத்தை உள்வாங்காமல்).எனக்கு குமட்டியது.மூச்சு திணறியது.

    பதினாறு வயதினிலே துவக்கமே அபத்தம். பொருந்தா காதலில், ஒரு நாயகி சப்பாணிக்காக காத்திருப்பதாக. இது ரொமாண்டிக் வகை காதலல்லவே?அனுதாப வசதி காதல்தானே ,என்ன build up சம்பந்தமில்லாமல் என்ற சிரிப்பு வரும்.பிறகு ஓரளவு சுவையான காட்சிகள். ஆனால் டாக்டர் காட்சிகள் படத்தின் நம்பக தன்மையை தொபெலாக்கி விடும். டாக்டர் செவ்வாய் கிரகத்திலிருந்தா வருகிறார்? என் கிராமத்து நண்பர்களே இதை பற்றி ஏளனம் செய்துள்ளனர். பிறகு சப்பாணி-மயில் காட்சிகள் ஈர்ப்புள்ளவை. சுவாரஸ்யம். ஆனால் முடிவு? ஒரு சாதா தமிழ் பட கற்பழிப்பு சார்ந்த முடிவு. எந்த பாத்திரங்களிலும் அசல் தன்மையில்லை. வாழ்க்கை பதிவுகள் இல்லை.(குசும்பு,நையாண்டி,sadism இவை தவிர)
    காட்சிகள் சில ரசனைக்குரியவையே அன்றி காவியம் என்று போற்றப்படத் தக்கதல்ல. அற்புதமான உள்வாங்கல் அதே சமயம் மனம் திறந்த உண்மையின் தைரிய வெளிப்பாடு. ஆயிரம் சதவீதம் ஒத்துப் போகிறேன். நீங்கள் என் நண்பர் என்பதற்காக அல்ல. ஒரு உண்மையான போலி வேஷம் காட்டாத விண் தொடும் விமர்சகர் என்ற வரையில். சபாஷ் நண்பரே! ஆனால் உண்மை கசக்கும் உண்மையானவர்களைத் தவிர.
    Last edited by vasudevan31355; 19th May 2015 at 08:26 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks Russellbpw, adiram thanked for this post
    Likes KCSHEKAR, uvausan, adiram liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2192
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சின்ன வயசு சிவாஜிகள் ! :
    குறுந்தொடர் பகுதி 2 : மாஸ்டர் பிரபாகர் / தங்கைக்காக
    மாஸ்டர் பிரபாகர் துறுதுறுப்பான குழந்தை நட்சத்திரமாக பெரும்பாலான படங்களில் சிவாஜி ஸ்டைல் காட்டுவார் !
    தங்கைக்காக திரைப்படத்தில் பாசமலரை நினைவுபடுத்தும் இந்த பாடல் காட்சியிலும் சின்ன சிவாஜியாக பின்னியிருப்பார்


    ராமன் எத்தனை ராமனடி, எங்க மாமா....வா ராஜா வா.... பாமா விஜயம் படங்களில் சிவாஜி ஸ்டைலை அப்படியே வெளிப்படுத்தியிருப்பார்



    அடங்கொப்பன் தன்னானே............ நடிகர்திலகமே குழந்தை நட்சத்திரமாகிவிட்டாரே!!

    இந்த நாட்டிலே ஏழைகளுக்கு வாழை இலையே இல்லையா...?!!!!

    Last edited by sivajisenthil; 19th May 2015 at 09:21 PM.

  5. Likes Georgeqlj, KCSHEKAR, adiram, Russellmai liked this post
  6. #2193
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Part-3

    பாக பிரிவினை படத்தை பொறுத்த வரை ஒரு நடிகனின் உச்ச பட்ச சாதனை ஐம்பதுகளில். இன்று போல கேமரா, கட் shots ,வெளிநாட்டு ஒப்பனையாளர் , இரண்டு வருடமாக ஒரே படம் என்பதெல்லாம் இல்லாத போது கைகால் ஊனமுற்ற பாத்திரம்.அதிலும் கதாநாயகன் என்றால் ஒளி வட்டம் இருந்த காலங்களில் இமேஜ் வட்டத்தில் இல்லாமல் , அறிமுகமாகும் போதே எருமை குட்டை தண்ணீரில் விழுந்து எழுந்திருக்க முடியாமல் தத்தளிப்பது, எருமை மாட்டின் முதுகில் சவாரி செய்வதும் என நடிப்புக்காக வேள்வி வளர்ப்பார்.

    வெற்று பொழுதுபோக்கு படங்கள் வெள்ளிவிழா காணுவது சாதனையே அல்ல. அதனை ரவிசந்திரன் கூட செய்வார். இந்த மாதிரி வெகு ஜன ஈர்ப்புக்கு வாய்ப்பு குறைந்த படங்களை பிளாக் பஸ்ட்டர் ஆக்குவதற்கு வெள்ளி விழா காண வைப்பதற்கு ,நமது நடிகர்திலகத்தை விட்டால் யார்?

    கண்ணையன் பாத்திரத்தை வெறும் அப்பாவி போல நடித்து விட்டு கடக்க முடியாது. இந்த படத்தில் கண்ணையன் உலகம் குறுகியது அவனின் முடக்கமான நிலையால். அவன் எதிர்கொள்வதோ வீட்டில் அன்புள்ளங்களை மட்டுமே. இந்த நிலையில் சிறிதே தாழ்வு மனப்பான்மை, அன்பு நிறை உள்ளம், நிறைய விஷயங்களில் தேர்ச்சி குறைவு இவற்றால் அவன் அப்பாவி போல தோற்றம் தர வேண்டும். கை கால் அசைவுகள் அவர் ஊன நிலைக்கு தக்க இயங்க வேண்டும். (படிக்காத மேதை EQ அப்பாவித்தனமும்,சாப்பாட்டு ராமனின் வெட்டி அரட்டை அப்பாவித்தனமும் இதிலிருந்து எவ்வளவு மாறும்? மேதையின் அப்பாவி பாத்திரங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி நடத்தலாம்.)

    இந்த பாத்திரத்தை நடிகர்திலகம் கையாளும் லாவகம் இருக்கிறதே? அடடா.... அத்தனை அருமை. மாடு உதைத்து கழுநீர் தொட்டியில் விழுந்து மற்றவர்கள் உதவியால் வெளியேறும் முதல் காட்சியில் துவங்கி, பெரியப்பாவிடம் பக்தி நிறைந்த நட்பு,அப்பா அம்மாவிடம் பணிவு, பெண்களிடம் கலாட்டா ,இதில் பிள்ளையாரு கோயிலுக்கு,தாழையாம் ,தேரோடும் எங்க சீரான பாடல்களில் தாள லயத்துக்கேற்ப நொண்டி நொண்டி முழு பாடலுக்கும் நடனமாடும் தேர்ச்சி (கமல் அப்படியே இந்த ஸ்டெப் களை ஆட்டு குட்டி,,செவ்வந்தி பூ முடிச்ச பாடல்களில் அட்சரம் தப்பாமல் கையாளுவார்),தம்பியுடன் வாஞ்சை,அவன் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் போது திருப்ப பார்க்கும் பாசமுள்ள குத்தல், எம்.ஆர்.ராதா வின் அடாவடி தனங்களுக்கு சவடால்களுக்கு தன் இயல்பு மாறாமல் அளிக்கும் counter response ,reactions , (எம்.ஆர்.ராதா அப்படியே தன்னுடைய சிஷ்யனை பார்த்து பெருமை பட்டு எங்கியோ போயோட்டாம்பா எவ்வளவு நல்லா நடிக்கிறான் என்று சொன்னாராம்),பொன்னி ஒரு சங்கடமான சூழ்நிலையில் தன்னை மணக்கும் நிலைக்கு தள்ள படும் போது empathy யுடன் அவள் நிலையை பேசும் அழகு,தன் குறை மறந்து மண வாழ்க்கையில் தோய்வது ,பிரிவினை கொடுமை தாளாமல் பெற்றோரிடம் ,பெரியப்பாவிடம் தவிப்பது,பெரியம்மாவின் உதாசீனத்தை பொருமலுடன் ஏற்பது,தன்னுடைய மகனை உதாசீனம் செய்யும் போது ஒரு வெறுப்புடன் கையாலாகா தனத்தை விம்மலுடன் காட்டுவது, பட்டணத்தில் டாக்டர் செக் அப் செய்ததை கூச்சத்துடன் விவரிக்கும் பாங்கு என ஒவ்வொரு அணுவையும் ஆக்கிரமித்து ,நம் கவனம் ஈர்த்து தன்னிடமே தக்க வைப்பார்.

    எம்.ஆர்.ராதாவிற்கு ரத்த கண்ணீருக்கு பிறகு ஒரு பெரிய break தந்த படம் இது.அடாவடியின் உச்சம். வசனங்கள் பெரும் பலம்.நடிகர்திலகத்தின் முன்னே தைரியமாக நின்று பார்வையாளரை ஈர்ப்பார்.(நடிகர்திலகம் உடனே தனது counter கொடுத்து சமன் செய்வார்).

    சரோஜாதேவிக்கு நடிக்கும் வாய்ப்பு. நன்றாக பயன் படுத்தி ,வரும் காட்சிகளில் அனுதாபம் தட்டுவார். பாலையா,சுப்பையா,சி.கே.சரஸ்வதி ,ராஜம்மா எல்லோரும் அருமையான கூட்டணி .கிட்டத்தட்ட தில்லானா அளவு எல்லா நடிகர்களும் ஒத்துழைத்து களை கட்ட வைப்பார்கள்.

    படப் பிடிப்பு, படத்தொகுப்பு,பின்னணி இசை ,பாடல்கள் எல்லாமே உன்னதம். எம்.எஸ்.வீ-டி.கே.ஆர் இணைவில் தாழையாம் பூ,தங்கத்திலே,தேரோடும்,ஒற்றுமையாய், ஏன் பிறந்தாய் எல்லா பாடல்களும் அருமை.

    1956 முதல் பிணங்கி நின்ற கண்ணதாசன் ,இந்த படத்தின் மூலம் திரும்பினார். பட்டுகோட்டையார் ஏன் பிறந்தாய் மகனே பாட்டை எழுத மறுத்ததால் இந்த யோகம். ஆனால் முழுவதும் மனம் மாறாமல் கால் அடிபட்டு படுக்கையில் கிடந்த பழைய நண்பருக்கு தோதாக தங்கத்திலே பாட்டில் ஒரு வரி சேர்த்தாலும் நடிகர்திலகத்தின் பெருந்தன்மை அதை அனுமதித்தது.ஆண்டவன் கட்டளை முன்னாலே அரச கட்டளை என்னாகும் என்று எழுதி விட்டு துன்ப பட்ட வாலிக்கும், இதற்கும் எத்தனை வித்யாசம்?இதுவல்லவோ பெருந்தன்மை,மனித தன்மை,விவேகம். தமிழர்களுக்கு நல்லதுதான் ஆகவே ஆகாதே?

    இது வந்த வருடம்(1959) முதலிரண்டு வசூல் படங்களாக வீரபாண்டிய கட்டபொம்மன்,பாகபிரிவினை.இரண்டுக்கும் எவ்வளவு வேறுபாடு?அதுதான் சிவாஜி. 1960,1961,1962 எல்லா வருடங்களிலும் முதல் இரண்டு உன்னத வசூல் படங்கள் இந்த box -office சக்ரவர்த்தியுடையதே.(1960- தெய்வ பிறவி,படிக்காத மேதை, 1961-பாவமன்னிப்பு,பாசமலர்,1962-ஆலய மணி)

    இந்த படத்தை இன்றைய தலைமுறையும் அலுக்காமல் ரசிக்க முடியும். ரசிக்க வேண்டும். நம் உன்னதங்களை,சாதனைகளை கொண்டாட தமிழர்கள் கற்க வேண்டும்.
    Last edited by Gopal.s; 19th May 2015 at 09:48 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. Thanks adiram thanked for this post
  8. #2194
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,

    மீள் பதிவுகளிலேயே கிட்டத்தட்ட நாலு மாசம் ஜல்லியடித்து கொண்டிருந்தேன். ஒரு நல்ல வாசகர் துணை இன்றி சோர்ந்து கிடந்த போது ,நீ மீண்டு வந்து, முரளியின் உத்வேகத்தில் பாக பிரிவினை எழுதினேன். தொடர்வேன். உங்களுக்கு நன்றி.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  9. Likes kalnayak, KCSHEKAR liked this post
  10. #2195
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gopal,s. View Post
    part-3


    எம்.ஆர்.ராதாவிற்கு ரத்த கண்ணீருக்கு பிறகு ஒரு பெரிய break தந்த படம் இது.அடாவடியின் உச்சம். வசனங்கள் பெரும் பலம்.நடிகர்திலகத்தின் முன்னே தைரியமாக நின்று பார்வையாளரை ஈர்ப்பார்.(நடிகர்திலகம் உடனே தனது counter கொடுத்து சமன் செய்வார்).
    சமனுக்கு மேல் தலைவரே. சமன் செய்ய முடியாத எமன்.

    அடாவடியை "டேய்! சிங்கப்பூரான்" என்ற சொல்லிலேயே அடக்கி விடுவார்.

    கோ,

    எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன் செகண்ட் காட்சி.

    ராஜம்மா சரோஜாதேவிக்கு ஆதரவு தந்து ஒற்றை மாட்டு வண்டியில் ஏற்றி வரும் போது இவருக்கு அறிமுகப்படுத்தி வைப்பார். அந்தக் காட்சி முடிந்தவுடன் திலகம் மாட்டு வண்டிக்காரனுக்கு ஒரு குரல் கொடுப்பார் பாருங்கள். என்னா மாடுலேஷேன்! (அதுவரை தேவியிடம் பேசி பின் வாஞ்சையாக பழம் கொடுப்பவர் சடாலென்று குரல் விடுவார்)

    'எலே! ஓட்ரா டேய்!'

    வண்டிக்காரன் மேல் அதிகாரமும், முறைப்பும் கொடி கட்டிப் பறக்கும். (ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்குதான்)

    எனக்காக அந்த முறைப்பை ஒருமுறை மீண்டும் பாருங்கள்.
    Last edited by vasudevan31355; 19th May 2015 at 10:44 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #2196
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    வாசு,

    மீள் பதிவுகளிலேயே கிட்டத்தட்ட நாலு மாசம் ஜல்லியடித்து கொண்டிருந்தேன். ஒரு நல்ல வாசகர் துணை இன்றி சோர்ந்து கிடந்த போது ,நீ மீண்டு வந்து, முரளியின் உத்வேகத்தில் பாக பிரிவினை எழுதினேன். தொடர்வேன். உங்களுக்கு நன்றி.
    சந்தோஷமாக இருக்கிறது கோ. (முரளி சாருக்கு கூடுதல் நன்றி! உங்களை உசுப்பேற்றி விட்டதற்கு)

    நன்றியும் கூட. அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்காமல் அடுத்த கட்டத்திற்கு தாவியதற்கு. (இதுவும் சூப்பர் ஹிட் தான்) மாம்பழத் தோப்பில் அணில்கள் ஒரு மரத்தில் மட்டுமல்லாமல் எல்லா மரங்களிலும் பழத்தை கடித்து விட்டு சுவைத்து வருமே! அது போல.

    அவரது எந்தப் படங்களிலும் ஏதாவது ஒரு சுவையை எந்த வகையிலும் பெறலாம். பிடித்த படம் பிடிக்காத படம் தேவையில்லை. பிடித்தமானவரின் பிடித்தம் பற்றி பிதற்றிக் கொண்டிருப்போம் சந்தோஷமாய். அதுதான் அணில்கலாய் அந்த தெய்வத்திற்கு நாம் செய்யும் அருஞ்சேவை.
    Last edited by vasudevan31355; 19th May 2015 at 10:43 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes Russellmai, kalnayak, KCSHEKAR liked this post
  13. #2197
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    காட்சிகள் சில ரசனைக்குரியவையே அன்றி காவியம் என்று போற்றப்படத் தக்கதல்ல. அற்புதமான உள்வாங்கல் அதே சமயம் மனம் திறந்த உண்மையின் தைரிய வெளிப்பாடு. ஆயிரம் சதவீதம் ஒத்துப் போகிறேன். நீங்கள் என் நண்பர் என்பதற்காக அல்ல. ஒரு உண்மையான போலி வேஷம் காட்டாத விண் தொடும் விமர்சகர் என்ற வரையில். சபாஷ் நண்பரே! ஆனால் உண்மை கசக்கும் உண்மையானவர்களைத் தவிர.
    சாதரணமாக கதையாக இருந்தாலும் அன்றைய சூழலுக்கு புதுசு..

  14. #2198
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால்
    தாங்கள் புதியதாக எழுதுவதற்கு வாசு வரவேண்டியிருக்கிறது பார்த்தீர்களா..
    கலக்குங்கள்...
    பாகப்பிரிவினையை அக்குவேறு ஆணிவேறாய் அலசுங்கள்..
    படிக்கிறோம்.. படிக்கிறோம்.. .......................படிக்கிறோம்...
    படித்துககொண்டே இருக்கிறோம்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. #2199
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திலக சங்கமம் - நான் வணங்கும் தெய்வம்

    இருவர் உள்ளத்தின் அபார அளப்பரையில் சுவடின்றி அமுங்கி விட்டது நா.வ.தெ. திரை இசைத் திலகத்தின் பாடல்கள் இப்படத்தில் மக்களிடம் சென்றடையவில்லை, ஓரிரு பாடல்களைத் தவிீர. ஏ.எல்.ராகவன் பாடிய டூயட் பாடல் முல்லைப்பூ மணக்குது பாடல் ஹிட்டாகியது. என்றாலும் நடிகர் திலகத்திற்கு சரியான படி பாடல் அமையவில்லை. இது ஏமாற்றமே. ஆனால் கதையில் பாடலுக்கான சூழலேதும் இல்லை.

    உருக்குலைந்த தோற்றத்தில் நடிகர் திலகம் ஏற்று நடித்த கதாபாத்திரம் நடந்து செல்லும் பின்னணியில் பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் பாடல் ஒலிக்கிறது.

    ஆனாலும் எல்லாவற்றையும் சேர்த்து சுசீலாவின் குரலில் ஒலிக்கும் பாடலில் சமன் செய்திருப்பார்கள்.

    கனவும் பலித்தது, கவலை மறைந்தது, தினமும நான் வணங்கும் தெய்வத்தினாலே... இப்பாடல் சூப்பர் ஹிட்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  16. Thanks vasudevan31355 thanked for this post
  17. #2200
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler nostalgia on Supporting characters ensemble in Thillaana Mohanaambal, the bench mark movie of NT! : Scene stealer Manorama!/NT breaking the fourth wall?!

    எண்ணற்ற பாத்திரப் பதிவுகளை நடிகர் திலகம் தந்திருந்தாலும் எல்லாவற்றையும் மீறி மனக்கண் முன்னே என்றென்றும் நிழலாடும் குணசித்திரம்
    தில்லானா மோகனாம்பாளில் அவர் அதியற்புதமாக வெளிக்கொணர்ந்த நாதஸ்வர நாயகர் சிக்கலாரே !
    மற்ற எந்த தமிழ் திரைப்படத்துடனும் ஒப்பிடுகையில் நட்சத்திரக் கூட்டம் மிகுந்த காவியம் ஏகப்பட்ட துணைப் பாத்திரங்களுக்கு மத்தியிலும் நடிகர்திலகத்தின் மனக் காயங்களுக்கு மருந்தாக ஒரு வெகுளியான பாத்திரப் படைப்பில் நமது மனதில் நடிப்புக் கொடி நாட்டியவர் மனோரமா!
    இப்பாடல் காட்சியில் நடிகர்திலகத்தோடு இணைந்து ஒரு மகிழ்ச்சி குதூகலம் நமக்கும் ஒட்டிக் கொள்கிறதே !!
    தனது ஆர்ப்பாட்டமான கள்வனின் காதலி சதாரம் டப்பாங்குத்தை மனோரமா நகலெடுப்பதை நடிகர்திலகம் ரசிக்கும் வண்ணம் breaking the fourth wall
    (திரைக் கதாபாத்திரங்கள் சில முகபாவங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு மறைமுகமாக சில விஷயங்களை உணர்த்துவதே )!!


    Last edited by sivajisenthil; 20th May 2015 at 07:57 AM.

  18. Thanks vasudevan31355 thanked for this post
    Likes Russellmai, KCSHEKAR liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •