Page 216 of 401 FirstFirst ... 116166206214215216217218226266316 ... LastLast
Results 2,151 to 2,160 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2151
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால்.
    ராஜபார்ட் ரங்கதுரையைப் பொறுத்த மட்டில் நீங்கள் சொன்னதில் பெரும்பாலானவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு.
    மெல்லிசை மன்னரின் பங்களிப்பினைப் பற்றி என் கருத்து தங்களிடமிருந்து மாறுபடும்.

    பெரும்பாலான காட்சிகளை, அதுவும் தாங்கள் குறிப்பிட்ட தொய்வான சில காட்சிகள் கூட திரையரங்கில் நம்மை உட்கார வைப்பது மெல்லிசை மன்னரின் பின்னணி இசையே. கதை நாடகக்காரனைச் சுற்றி அமைக்கப்பட்டிருப்பதால் எல்லாமே நாடகத்தன்மை வாய்ந்த பாடல்களாகவே அவர் அமைத்திருக்கிறார். மதன மாளிகை பாடல் கூட ஒரு வகையில் நாடக பாணி பாடலாகத்தான் அமைக்கப் பட்டிருக்கும். சரணங்களில் வரும் தாளம் இதற்கு சரியான உதாரணம்... குறிப்பாக சரணம் துவங்கும் போது வரும் தாளக்கட்டு தெருக்கூத்தின் அடிப்படையை ஒத்திருக்கும். தெருக்கூத்துக் காரர்கள் மேடையில் நுழையும் போது கால்களை மேலே தூக்கி வைத்து நடப்பார்கள். அந்த தாளக்கட்டை அடிப்படையாக வைத்தே மதன மாளிகை பாடலை அமைத்திருப்பார். இது ஒரு உதாரணமே..

    இந்த மாதிரி படங்களில் கே.வி.எம். அவர்களையே ரசித்துப் பழகி விட்ட காரணத்தால் அவருடைய பாணியிலிருந்து மாறுபட்ட, மெல்லிசை மன்னரின் இசையமைப்பு தங்களைக் கவராததில் வியப்பேதும் இல்லை.

    கே.வி.எம். அவர்களை மறந்து விட்டு ராஜபார்ட் ரங்கதுரை இசையைக் கவனித்தீர்களானால் நிச்சயம் மெல்லிசை மன்னரின் இசை தங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என் தீர்மானம்.

    அதே போல் இயக்குநர் மாதவனைப் பற்றியும் சொல்ல வேண்டும்..
    ஆயிரம் தான் சொல்லுங்கள்... சிவாஜி ரசிகர்களின் PULSE அறிந்து அவர்களுக்காகப் படம் பண்ணிய வகையில் திருலோக், மாதவன், சிவிஆர் இவர்களையெல்லாம் ரசிகர்கள் காலமெல்லாம் மறக்கவே மாட்டார்கள்..
    அதுவும் மாதவன்... Exploited Maximum from NT for the Sivaji Fans Benches...



    கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை ... என்பது போல... இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்..

    இந்தக் காட்சியைப் பாருங்கள்..

    புருவத்தைத் தூக்கி கண்களைச் சுழற்றி நம்மைக் கிறங்கடிக்கும் அந்த வசீகரத்தை... அந்த புன்னகை தவழும் மதிமுகத்தை எத்தனை முறை பார்த்தால் தான் என்ன..

    நடிகர்கள் பலர் வரலாம் போகலாம்.. ஆனால்

    பார்த்து ரசிப்பதற்கும் ரசித்துப் பார்ப்பதற்கும் .. இறைவன் படைத்த ஒரே படைப்பு...

    நடிகர் திலகம் மட்டுமே...
    Last edited by RAGHAVENDRA; 17th May 2015 at 10:14 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2152
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாபநாசம் திரைப்படத்தில் கமல் ஏற்றுள்ள பாத்திரம் ஒரு தீவிர சிவாஜி ரசிகர் என ஒரு நண்பர் கூறுகிறார். இதைப்பற்றித் தெரிந்தவர்கள் யாராவது சொல்ல முடியுமா. இதை கமல் அவர்களுக்கான திரியிலும் கேட்டுள்ளேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes Subramaniam Ramajayam liked this post
  6. #2153
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    பாபநாசம் திரைப்படத்தில் கமல் ஏற்றுள்ள பாத்திரம் ஒரு தீவிர சிவாஜி ரசிகர் என ஒரு நண்பர் கூறுகிறார். இதைப்பற்றித் தெரிந்தவர்கள் யாராவது சொல்ல முடியுமா. இதை கமல் அவர்களுக்கான திரியிலும் கேட்டுள்ளேன்.
    paapanaasam is a remake of Mohanlal's Drishyam with some flavor changes to suit Tamil nativity. In Drishyam Mohanlal depicts the role of a simple unassumed cable TV guy with affection on wife and two daughters. When the grown up daughter gets entrapped in a tangle, Lal, a school drop out, makes use of his wisdom upon having seen umpteen movies and their techniques to escape from such situations. He was not characterised as a fan to any particular matinee idol. Probably in Tamil too Jeethu Joseph the director may have followed the same line.

  7. #2154
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்கை திரைப்படத்தை இணையத்தில் பார்த்து பிரதி எப்படி உள்ளது என்று பார்த்தால் கோபால் சொன்னது போல் சுமாராகத் தான் உள்ளது.

    ஆனால் அதிர்ச்சி என்றால் அப்படி ஓர் அதிர்ச்சி..

    தங்கை படத்தின் டைட்டிலில் பின்னணியில் ஒலிப்பது, விஜயா படத்தின் டைட்டில் இசை..

    என்ன கொடுமை சார் இது.. மெல்லிசை மன்னர் போன்ற மிகப் பெரிய படைப்பாளிக்கு இப்படி ஓரு மரியாதையா..

    ஆண்டவனே.. தெரியாதவர்கள் இது மெல்லிசை மன்னரின் இசை என்றல்லவா எண்ணுவார்கள்...

    இல்லை.. எனக்குத் தான் சரியாகத் தெரியவில்லையா...

    யாராவது விளக்குங்களேன்.

    இதற்கு ஆபத்பாந்தவனாக வரக்கூடியவர் வாசு சார் தான்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes Subramaniam Ramajayam liked this post
  9. #2155
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    From the page of FB friend KN Arumugam

    ஒரு பிரமதரோடு இந்த அளவிற்கு கேஷுவலாக உரிமையோடு அமர்ந்த ஒரே தலைவர்..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #2156
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    THANGAI TITLES AND MUSIC
    you are very much correct raghavender sir it is not original title music of THANGAI.
    i am not able to say from where it is copied as i have not seen VIJAYA
    thanks

  11. #2157
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Yesterday watched Mirudhga Chakkaravarthy without break. In one scene, where the sabha people went to NT's house for

    inviting to preside over a felicitation function to Mr Nambiar. He readily obliged with their request without thinking about

    the travelling expenses in mind. He immediately rushes to Bus Stand to ask for the expenses to Sabha People and he heard

    the conversation that he won't ask for any expenses as well as PULI PASITHALUM PULLAI THINNATHU. After which

    HE PUT THE ANGAVASTHRAM IN HIS SHOULDER AND WALKS TOWARDS HIS MAJESTICALLY. This one scene itself is

    enough that LION IS ALWAYS LION.

  12. #2158
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் – 74
    (From Mr.Sudhangan's Face Book)


    சிவாஜியின் நடிப்பு எப்படிப்பட்டது ?
    சோ அதை எப்படி ஒப்பிடுகிறார்!
    லாரன்ஸ் ஒலிவயரின் – அழத்தம் !
    யார் இந்த லாரன்ஸ் ஒலிவியர்! இவர் பெயர் லாரன்ஸ்ட் கெர் ஒலிவியர்!
    1907 மே 22ல் பிறந்து, 1989 ஜீலை 11ல் இறந்தவர்!
    இவரை நடிகர்களுக்கெல்லாம் நடிகர் என்று சொல்வதுண்டு!
    இவர் ஒரு ஆங்கில நடிகர்!
    20ம் நூற்றாண்டின் நடுவில் பிரிட்டிஷ் மேடைகளை ஆக்ரமித்தவர்!
    50 படங்களில் நடித்தவர் ! இவருக்கென்று உலகம் முழுவதுமே ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருந்தது!
    சார்லஸ் லாஃப்டனின் குணசித்திரம்!
    இவரும் ஒரு ஆங்கில மேடை நடிகர்! குணசித்திர பாத்திரமோ கூப்பிடு சார்லஸை என்பார்கள்!
    லாரன்ஸ் ஒலியவரை விட மூத்தவர்!
    1899ல் பிறந்து 1962ல் இறந்தவர்!
    அலெக் கின்னஸின் – நயம்!
    இவரும் ஒரு ஆங்கில நடிகர்!
    1957ம் வருடம் இவர் நடித்த பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய் படத்தின் சிறந்த நடிகருக்கான அகாடமி விருத பெற்றவர்.
    சார்ல்டன் ஹெஸ்டனின் - கனம்
    இவர் அமெரிக்க நடிகர், அரசியல் ஆர்வலர்!
    2008ம் வருடம் தான் இவர் இறந்தார்!
    60 வருடங்களில் நூறு படங்களில் நடித்தவர்!
    டென் கமாண்ட்மெண்ட்ஸ்,பென்ஹர் போன்ற படங்களில் நடித்து பல விருதுகளை வாங்கிக் குவித்தவர்!
    இவர்களுக்கெல்லாம் இணையானவர் என்று சிவாஜி கணேசனை சொல்வார்கள்!
    சோ சொல்ல மறந்தது யூல் பிரின்னர்!
    நடையழகில் மன்னன் என்று உலக ரசிகர்களால் புகழப்பட்டவர்!
    இவர் நடித்த மிகப்பிரபலமான படம் கிங் அண்ட் ஐ!
    ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவின் திரை,மேடை நடிகரானவர்!
    யூல் பிரின்னரின் நடையை ` திருவிளையாடல்’ படத்தில் சிவன் செம்படவனாகி உருவெடுத்து கடற்கரையில் சிவாஜி ஒரு நடை நடப்பார் ! அதிலும், `கந்தன் கருணை’ படத்தில் `வெற்றி வேல் வீரவேல்’ பாடலிலும் அந்த பாதிப்பை சிவாஜியிடம் காண முடியும்!
    1964ம் வருடம்! இந்த வருடமும் சிவாஜியை மலை உச்சிக்கு கொண்டு போன வருடம் என்று சொல்லலாம்!
    `கர்ணன்’ `பச்சைவிளக்கு’ `ஆண்டவன் கட்டளை’ `கை கொடுத்த தெய்வம்’ `புதிய பறவை’ `நவராத்திரி’ ` முரடன் முத்து’
    இந்த வருடம் அவருக்கு 7 படங்கள்! எத்தனை விதமான கதாபாத்திரங்கள்!
    கர்ணன், பச்சை விளக்கு படத்தில் ரயில் என்ஜின் ஒட்டுனர், ` ஆண்டவன் கட்டளை’ கல்லூரி பேராசிரியர், `கைகொடுத்த தெய்வம்’ நடுத்தரக் குடும்பத்து இளைஞன், `புதிய பறவை’ கொலைகார பணக்காரன் ` நவராத்திரி’ எல்லா கதாபாத்திரங்களையும் ஒன்றிணைத்த ஒன்பது வேடங்கள்! ` முரடன் முத்து’ படத்தில் படிக்காத பாசமுள்ள முரட்டு இளைஞன்!
    இந்த வருட ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளிவந்த படம் கர்ணன்.
    சென்னை சாந்தி தியேட்டரில் `கர்ணன்’ மார்பில் அம்போடு தேர்காலில் விழுந்து கிடக்க, கண்ணன் என்.டி.ஆர் வயோதிகர் வேடத்தில் வந்து செய்து புண்ணியங்களை எனக்குக் கொடு என்று யாசகம் கேட்கும் அந்த யாசக காட்சியை சாந்தி தியேட்டரின் இடது புறச்சுவற்றில் நீள வாக்கில் பேனர் வைத்து, இரவில் அதைச் சுற்றி வண்ண விளக்குகள்!
    அதே நாளில் மவுண்ட் ரோடு(இன்றை அண்ணாசாலை) க்கு அந்த புறம் இருந்த சித்ரா தியேட்டரில் தேவர் பிலிம்ஸின் எம்.ஜி.ஆர் நடித்த `வேட்டைக்காரன்’
    சாந்தியின் நீளவாக்கில் பேனர் என்றால் அங்கே உயர வாக்கில் ஒரு மரத்திலிருந்து எம்.ஜி.ஆர் எட்டிப் பார்ப்பதைப் போன்ற உயரமான பேனர்!
    கூடவே உள்ளே ஒரு புலியை கொண்டு வந்து கூண்டிலடைத்து உலவ விட்டிருந்தார் தேவர்! இரு பக்கமும் கடும் போட்டி!
    இதில் `கர்ணன்’ படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலம்! கண்ணதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி!
    பெங்களூர் உட்லாண்ட்ஸ் ஒட்டலில் வைத்துத்தான் கம்போசிங் நடந்தது!
    சில சம்ஸ்கிருத ஸ்லோகங்ளுக்கு விளக்கம் அறிந்து கொள்ள சில பண்டிதர்களை வரவழைத்து அதன் பொருளை புரிந்து கொண்டு பாட்டு எழுதியிருப்பார் கவிஞர் கண்ணதாசன்!
    கர்நாடக சங்கீதம் தொட்டு, இந்துஸ்தானியை இசையை குழைந்த்து கொடுத்திருப்பார்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி!
    கர்ணனை அங்க தேசத்து மன்னன் ஆக்குவான் துரியோதனன்!
    அங்க தேசத்திற்கு கிளம்புவான் கர்ணன்!
    அப்போது துரியோதனன், `கர்ணா! போய் உடனே திரும்பிவிடு நாடுதான் உனக்கு அது! வீடு இதுதான் ‘ கர்ணன் அங்க தேசத்து மன்னனாக அரியாசனத்தில் அமருவான்!
    உடனே கர்ஜனையாக இனிய நாதமாக சீர்காழியின் குரல் எழும்பும்!
    `மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்!’
    `வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்!’
    `பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்!
    `பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்!
    அடுத்து குரலெடுப்பார் திருச்சி லோகநாதன்!
    `நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்’
    `நாடுதோறு நடந்து சிவந்தன பாவலர் கால்கள்’
    `நற்பொருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்’
    `தினம் கொடுத்து! தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன்
    திருக்கரமே!’
    இந்த வரிகளிலே அந்த கதாபாத்திரத்தின் கொடைத் தன்மையை அள்ளித் தெளித்திருப்பார் கண்ணதாசன்!
    அடுத்து, சீர்காழியும், டி.எம்.எஸ்ஸும் ` ஆயிரம் கரங்கள் நீட்டி,அணைக்கின்ற தாயே போற்றி!அருள் பொங்கும் முகத்தைக் காட்டி, இருள் நீக்கம் தந்தாய் போற்றி!
    படத்தின் கம்பீரத்தை தூக்கி நிறுத்திய குரல்கள் இசை!
    காதலுக்கு, விரக தாபத்திற்கு, பக்திக்கும், தத்துவத்திற்கு, வளைகாப்பிற்கு என்று சகலத்திற்கு அந்த படத்தில் பாடல் உண்டு!
    இன்றைக்கு ` உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா ‘ பாடலைக் கேட்டுக்கொண்டேயிருக்கும் பல்லாயிரக் கணக்கானோர் உண்டு!
    அதில் கர்ணனின் மனைவிக்கு வளைகாப்பு, அப்போது துரியோதனன் மனைவி அந்த கதாபாத்திரத்தில் சாவித்திரி பாடுவார்!
    `மஞ்சள் முகம் நிறம் மாறி!’
    மங்கை உடல் உரு மாறி!’
    கொஞ்சம் கிளி போல் பிள்ளை உருவானதே!
    கோரஸாக ஒலிக்கும் இந்த பாடலில் நடன அமைப்பு, அரங்க ஆடம்பரம், அதற்காக தேர்ந்தெடுத்த நிறங்கள்! ஒவ்வொரு அசைவிலும் ஒரு குழவாக அவர்கள் பணியாற்றியிருப்பதன் அற்புதத்தை அந்த காட்சியில் பார்க்கலாம்!
    `அஞ்சி அஞ்சி நடந்தாள்
    அந்நாளிலே! இவள்
    அன்னநடை தளர்ந்தாள்
    இந்நாளிலே!
    துள்ளி வந்த மான்
    இன்று சேய் கொண்டதே!
    அடுத்த வரிதான் ஹைலைட்!
    `கர்ணன் தந்த பிள்ளை என்றால் கார்மேகம் அல்லவா? எதிர்காலத்தில் இந்த தேசத்தில் அவன் கருணை செய்வான் அல்லவா ?
    கர்ணனுடைய வாரிசும் தர்மம் செய்வானாம்!
    அதுதான் ஆண்டவன் கட்டளையோ ?
    (தொடரும்)
    Last edited by KCSHEKAR; 18th May 2015 at 11:23 AM.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  14. #2159
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    [SIZE=5][B]நடிகர்திலகத்தின் உடல்மொழி:
    நடிகர்ததிலகத்தின் உடல்மொழி,வனஜா,கண்பத்,காவேரி கண்ணன்,Sarathy மற்றும் நான்(Gopal) இணைந்து நடத்திய ஜூகல்பந்தி கச்சேரி பகுதி-10 இல் பல இடங்களில் சிதறி கிடந்த முத்துக்கள் உங்களுக்காக ,தொகுக்க பட்டு.
    அப்பப்பா, நடிகர்திலகத்தின் உடல் மொழித் தொகுப்பு அருமை கோபால் சார்.

    எழுத்தாளரும், நடிகருமான சோ நடிகர்திலகத்தைப் பற்றி குறிப்பிட்டது :
    "உலகில் எந்தவொரு நடிகரும் காட்டாத பரிணாமங்களைக் கொட்டியவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன். லாரன்ஸ் ஆலிவரின் அழுத்தம், சார்லஸ் லாப்டனின் குணச்சித்திரம், டேவிட் நிலனின் நாசூக்கு, அலெக் கின்னசின் நயம், ஜாக் கில்கிடின் தோரனை, டேனி கேயின் குழந்தைத்தனம், கிளார்க் கேபிசின் மிடுக்கு, ஹம்ப்ரி போகார்டின் ஆழம், நார்மன் விஸ்டமின் அட்டகாச நகைச்சுவை, சார்லஸ் ஹெஸ்டனின் கணம் என்று பல மாபெரும் நடிகர்களின் பலம், திறன் ஆகியவற்றையெல்லாம் ஒருங்கே கொண்ட அற்புதம் சிவாஜி" - இதுதான் சத்தியமான உண்மை.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  15. #2160
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    சின்ன வயது சிவாஜிகள் !! குறுந்தொடர்
    பகுதி 1 : மாஸ்டர் ராஜ்குமார் (காதல் மன்னரின் ராமு படப் புகழ்!) ராஜபார்ட் ரங்கதுரை / தெய்வமகன் !!

    பெரும்பாலான தமிழ் படங்களில் ஹீரோக்கள் சிறுவனாக இருந்து பல சோதனைகளை வேதனைகளை துன்பங்களை தாங்கும் சுமைதாங்கிகளாக கூடப் பிறந்தவர்களின் நல் வாழ்வுக்காகப் படாத பாடு பட்டு வளர்ந்த பின்னும் இடிதாங்கிகளாக மாறி வாழ்வியல் இன்பங்களை துறந்தவர்களாகவே முடிவார்கள்!!
    இந்த செண்டிமெண்டுகள் நம் திலகப் படங்களில் கலகக் கலக்கலே!!






    13:45 -- 13:55


    Last edited by sivajisenthil; 18th May 2015 at 01:18 PM.

  16. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •