Page 179 of 401 FirstFirst ... 79129169177178179180181189229279 ... LastLast
Results 1,781 to 1,790 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #1781
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1782
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  6. #1783
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  8. #1784
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  10. #1785
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. Likes RAGHAVENDRA, Russellmai liked this post
  12. #1786
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  13. Likes RAGHAVENDRA, uvausan, Russellmai liked this post
  14. #1787
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் – 70
    (From Mr.Sudhangan's Facebook)


    இருவர் உள்ளம் படம் வந்த அதே ஆண்டு வந்த படங்கள் `கல்யாணியின் கணவன்’ `குலமகள் ராதை’ `பார் மகளே பார்’
    இதில் `குலமகள் ராதை’ படத்திற்கு இசை கே,.வி. மகாதேவன்.
    முன்பு தியாகராஜ பாகவதர் பாடிய `ராதே உனக்கு கோபம் ஆகாதேடி’ பாடலை அப்படி டி.எம்.எஸ்ஸை வைத்து பாட வைத்திருப்பார் கே.வி. மகாதேவன்!
    தியாகராஜப் பாகவதரின் மறுஅவதாரக் குரலாகவே டி.எம்.எஸ்ஸை பார்த்தார்கள்!
    இந்தப் படத்திலும் எல்லாப் பாடல்களும் பிரபலம்!
    இதில் ஒரு பாட்டு அந்த பாட்டை பள்ளியில் தோழர்கள் ஒரு புதிராகவே விவாதித்தார்கள்!
    அந்த பாடல்தான் ` இரவுக்கு ஆயிரம் கண்கள்! பகலுக்கு ஒன்றே ஒன்று! அறிவுக்கு ஆயிரம் கண்கள்; உறவுக்கு ஒன்றே ஒன்று!
    இந்த பாடல் பி.சுசீலாவின் குரலில் இனிமையாக ஒலிக்கும்போது அது என்ன இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்கிற கேள்வி எழந்தது!
    இப்போதும் பல பெரியவர்களுக்கு சட்டென்று அந்த கேள்வி வரும்!
    நட்சத்திரங்கள் தான் இரவின் ஆயிரம் கண்கள்!
    பகலுக்கு சூரியன் மட்டுமே!
    இந்த புதிரான முதல் வரியினால் அடுத்து வந்த ஆழமான, கண்ணதாசன் பாடல் வரிகளில் அந்த வரிகளும் முக்கியமானதாகிப்போனது!
    `அங்கும் இங்கும் அலைபோலே – தினம்
    ஆடிடும் மானிட வாழ்விலே
    எங்கே நடக்கும், எது நடக்கும் – அது
    எங்கே முடியும் யாரறிவார்!
    மனித வாழ்க்கையின் யதார்த்தங்களை மிக அழகாக நான்குவரிகளில் சொல்லிவிட்டு போயிருப்பார் கவியரசு கண்ணதாசன்!
    இந்த படத்தின் கதை பிரபல எழுத்தாளர் அகிலனுடையது!
    அப்போது எழுத்தாளர்களின் கதைகளைத் தேடி சினிமா இயக்குனர்கள் போன காலம் !
    இந்தப் படத்தை இயக்கி வசனம் எழுதியவர் ஏ.பி.நாகராஜன்!
    காதலர்களுக்கான ஒரு சோகப் பாட்டும் இந்தப் படத்தில் உண்டு!
    உன்னைச் சொல்லி குற்றமில்லை
    என்னை சொல்லி குற்றமில்லை
    காலம் செய்த கோலமடி – கடவுள்
    செய்த குற்றமடி
    இது காதலில் தோல்வியுற்ற அந்த நாள் இளைஞர்களின் சோக கீதம்!
    அடுத்து வந்த படம் ` பார் மகளே பார்’
    அந்த நாட்களில் நல்ல கதைகளை தேடுவதில் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கு ஒரு வெறியே இருந்தது!
    சிவாஜி கூட எந்த எழத்தாளரைப் பார்த்தாலும், ` கதாசிரியரே எனக்கு ஒரு கதை சொல்லமாட்டீங்களா ?’ என்றுதான் கேட்பார்!
    அதே மாதிரி பண விஷயங்களை அவர் பேசவே மாட்டார்!
    அந்த நாட்களில் அந்த விவகாரம் முழுவதையும் கவனித்துக்கொண்டவர் அவர் தம்பி வி.சி. சண்முகம் தான்!
    ஒரு சுவையான சம்பவம் இது குறித்து நடந்தது!
    ஒரு எழத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளரான ஒருவரிடம் சிவாஜி கதை கேட்டார்.
    கதை அவருக்குப் பிடித்துப்போனது!
    அந்த தயாரிப்பாளர் ஒரு பைனான்சியரிடம் பணம் கேட்டிருந்தார் படமெடுக்க!
    சிவாஜி படம் என்றவுடன் ஒப்புக்கொண்ட அந்த பைனான்சியர் சிவாஜியை பார்க்கிற ஆவலில் இந்த இயக்குனரின் பெயரைச் சொல்லி அவரை வீட்டில் போய் சந்தித்தார்!
    சந்தித்தவர் பெட்டியை திறந்து சிவாஜியிடம் பணத்தை எடுத்து நீட்டினார்!
    கோபத்தில் கொதித்துப் போனார் ` கெட் அவுட்’ என்று ஒரே கத்தல்!
    ` நான் எந்த காலத்தில் காசை கையால் தொட்டிருக்கிறேன். உனக்காகவா படம் பண்ண ஒத்துக்கிட்டேன். எங்கே அந்த இயக்குனர்? அவரை அழைத்து வராமல் நீ எப்படி நேராக என்னை பார்க்க வரலாம்’ என்று சத்தம் போட்டு துரத்திவிட்டார்.
    பிறகு அந்தப் படம் நின்றே போனது!
    இந்த மாதிரி கதை தேடும் சூழலில் தான் ஒய்ஜிபியின் யுஏஏ குழவினர் ` பெற்றால்தான் பிள்ளையா’ என்று ஒரு நாடகம் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருப்பதாக் சிவாஜிக்கு தகவல் எட்டியது!
    அப்போது கஸ்தூரி பிலிம்ஸிற்காக பீம்சிங் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் சிவாஜி!
    இதை கேள்விப்பட்டதும், பீம்சிங்கும் அவரும் நாடகத்தை பார்க்கப் போனார்கள்.
    அந்த நாடகத்தை எழுதியவர் பட்டு!
    இவர் டி.டி.கே நிறுவனத்தில் சோவுடன் பணியாற்றி கொண்டிருந்தவர்!
    அமெச்சூர் நாடகங்களை நவீனப்படுத்தியதில் பட்டுவிற்கு பெரும் பங்கு உண்டு!
    ஒய்ஜிபி குழவின் கற்பனையாளர் பட்டு என்று அந்த நாட்களில் சொல்வார்கள்.
    நாடகத்தை சிவாஜி பார்த்தார்!
    ஒரு பணக்காரருக்கு ஒரு பெற்ற பிள்ளை, ஒரு வளர்ப்பு பிள்ளை! அந்த வளர்ப்பு பிள்ளையையும் தன் சொந்த பிள்ளை போல வளர்ந்து வருவார்!
    பின்னர் அந்த வளர்ப்பு விஷயம் தெரிந்து அவன் காணாமல் போவதைப் போல ஒரு கதை!
    நாடகத்தில் மெக்கானிக மாடசாமியாக நடித்தவர் சோ!
    அந்தவரையில் சோ சினிமா பக்கமே எட்டிப் பார்த்ததில்லை!
    நாடகம் சிவாஜி பீம்சிங் இருவருக்குமே பிடித்திருந்தது!
    அந்த கதையை வாங்கி பெற்ற பிள்ளை, வளர்ப்பு பிள்ளை என்பதை பெற்ற பெண், வளர்ப்பு பெண் என்று மாற்றினார்கள் சினிமாவிற்காக!
    அந்தக் கதைதான் ` பார் மகளே பார்’
    இந்தப் படத்தில் சிவாஜி தனது 35 வது வயதில் விஜயகுமாரிக்கும், புஷ்பலதாவிற்கும் தந்தையாக நடித்தார். அவருக்கு மாப்பிள்ளை முத்துராமன்!
    தன் இமேஜை வயதைப் பற்றி கவலைப்படாதவர் சிவாஜி கணேசன்!
    அவருக்கு கதைதான் கதாநாயகன்!
    மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்!
    இந்த படத்தின் ஆரம்பமே படு விறுவிறுப்பாக இருக்கும்!
    சிவாஜி ஒரு பெரிய பணக்காரர்!
    வெகுநாட்களாக குழந்தையில்லாமல் அவர் மனைவி பிரசவிக்கும் நேரம்!
    அவருடைய மனைவி செளகார் ஜானகி!
    அந்த நேரத்தில் வெளியூரில் இருப்பார் சிவாஜி!
    செளகாரின் அண்ணன் வி.கே. ராமசாமி!
    இப்போது செளகாருக்கு பெண் குழந்தை பிறந்த அதே நேரம் அதே மருத்துவமனையில் இன்னொரு பெண்ணுக்கும் பெண் குழந்தை பிறக்கும்.
    இரண்டு பெண்களுக்கு பிறந்த பெண் குழந்தைகளையும் இரண்டு நர்ஸுகள் வெளியே கொண்டு வருவார்கள்.
    அந்த நர்ஸுகளுக்குத்தான் எந்தப் பெண்ணுக்கு எந்த குழந்தை பிறந்தது என்பது தெரியும்!
    குழந்தையை வைத்து விட்டு அதை குளிப்பாட்ட ஹீட்டரை போடப் போவார் ஒரு நர்ஸ்!
    மின்சார ஷாக் அடிக்கும்! அந்த நர்ஸைக் காப்பாற்ற இன்னொருவர் போவார் இருவருமே இருந்த போவார்கள்!
    இப்போது எந்த குழந்தை யாருக்கும் பிறந்தது?
    இதை எப்படி கண்டுபிடிப்பது!
    அதில் ஒரு குழந்தையை பெற்ற நாட்டியக்காரி படுக்கையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒடியிருப்பார்!
    அந்தக் குழந்தையை என்ன செய்வது?
    அந்த டாக்டர் இப்போது செளகாரிடம், அவரது அண்ணன் வி.கே.ராமசாமியிடமும் விஷயத்தை சொல்லுவார்!
    அங்கே தான் கதையின் திருப்பம்.
    இந்த இடத்தில் தான் படத்தின் டைட்டில் ஆரம்பமாகும்!
    (தொடரும்)
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  15. #1788
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் – 71
    (From Mr.Sudhangan's Facebook)


    `பார் மகளே பார்’ படத்தில் முக்கியமான திருப்பம் என்ன ?
    பிறந்த ஒரு பெண் குழந்தை அனாதையாக இருக்கிறது!
    இன்னொரு பெண் குழந்தைக்கு தாயோ செளகார் ஜானகி!
    ஆனால் இரண்டில் எந்த குழந்தை தன் குழந்தை என்பது அங்கே யாருக்கும் தெரியாது!
    தெரிந்த நர்ஸுகள் இருவருமே இறந்துவிட்டார்கள்!
    எந்த குழந்தையை விடுவாள் அந்த தாய்!
    இந்த சூழலில் அந்த பெண் டாக்டரே சொல்வார், ` உங்களுக்கு இத்தனை நாள் கழித்து குழந்தை பிறந்திருக்கிறது!
    உங்களுக்கு இரண்டு குழந்தைகளை ஆண்டவன் கொடுத்திருப்பதாக நினைத்து நீங்களே ஏன் வளர்க்கக் கூடாது? நீங்களோ வசதி படைத்தவர்கள் !’ என்று சொல்வார்!
    இந்த விஷயம் செளகாருக்கும், அவரது அண்ணனாக வி.கே.ஆருக்கும் மட்டும்தான் தெரியும்.
    ஒப்புக்கொள்வார்கள்!
    இப்போது கணவர் சிவாஜி வருவார்!
    அவர் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததை கண்டு மகிழ்ந்து போவார்!
    இந்த இடத்தில் தான் படத்தின் டைட்டில் ஆரம்பமாகும்!
    இரண்டு குழந்தைகளும் தொட்டிலில் ஆடும்!
    அப்போது ஒரு பாடல் ஆரம்பமாகும்!
    `பார் மகளே பார்!
    பார் மகளே பார்!
    பார் மகளே பார்!
    பரந்த உலகினை பார்!
    பாசம் மலர்வதைப் பார்!
    பக்கம் துணையினைப் பார்!
    இந்த வரிகளைப் பாடும்போது ஒரு தொட்டிலில் இருக்கும் குழந்தை இன்னொரு குழந்தையைப் பார்க்கும்!
    உரிமையில் ஒன்று!
    உறவினில் ஒன்று!
    ஒரிடம் சேர்ந்தது பார்!
    இரண்டும் உண்மை
    என்றே நினைத்தால்!
    இரண்டும் ஒன்றாகும்!
    விதி ஒன்றே உண்மை
    என்றே நினைத்தால்
    இரண்டும் தவறாகும்!
    வாசம் என்பது மலர்களில் தானா?
    மனதினிலே இல்லை
    பாசம் என்பது பிறப்பினில் தானா ?
    வளர்வதில் ஏன் இல்லை?
    இந்த பாடலை எம்.எஸ். விஸ்வநாதன் பாடியிருப்பார்!
    பின்னால் அவர் பாடிய குரலையும், இந்த பாடலில் குரலையும் கேட்டுப் பார்த்தால் அவர் குரலில் தான் எத்தனை வித்யாசம் என்பது தெரியும்!
    இந்த படத்தின் திரைக்கதையை வலம்புரி சோமனாதன் எழுதியிருப்பார்!
    வசனம் ஆரூர்தாஸ்!
    நாடகத்தில் சோ நடித்த மெக்கானிக் மாடசாமியின் பாத்திரத்தில் சோ தான் நடிக்க வேண்டும் என்பதில் சிவாஜி உறுதியாக இருந்தார்!
    ஆனால் சோ சினிமாவில் நுழைவதற்கு முன் தன் வீட்டாரிடம் அனுமதி வாங்க பட்ட பாடு என்பது ஒரு தனிக் கதை!
    ஆனால் இந்தப் படத்தில் ஒரு விசேஷன் படத்தின் பெரும்பகுதியில் சிவாஜியின் கதாபாத்திரம் ஒரு வில்லத்தனமாகவே இருக்கு!
    பணக்காரச் செருக்கு. ஏழைகள் என்றால் ஏளனம், நன்றி மறத்தல் இப்படியாகவே காட்டியிருப்பார்கள்!
    அதே சமயம் தன் பெண்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் ஒரு நேசமான தந்தை!
    தனக்கு பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளான பெண்களுக்கு பெயர் வைக்கும் காட்சி ஒன்று ஆரம்பத்தில் வரும்!
    வி.கே.ஆர் கேட்பார்! `குழந்தைகளுக்கு என்ன பெயர்?’
    சிவாஜி சொல்லுவார், ` இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே பெயர்!’
    `அதெப்படி ஒரே பெயர்!’
    `ஒருத்திக்கு சந்திரா, இன்னொருத்திக்கு காந்தா , இப்ப ரெண்டு பேரையும் ஒண்ணா சொல்லிப் பாரு, சந்திரகாந்தா!
    இப்போது சந்திராவான விஜயகுமாரிக்கும்- அவர்களைப் போலவே வசதியுள்ள முத்துராமனுக்கும் காதல் வரும்!
    அதை பெரியோர்கள், குறிப்பாக பணக்கார தந்தை சிவாஜி ஏற்றுக்கொள்வார்!
    நிச்சயதார்த்திற்கும் நாள் குறிக்கப்படும்!
    கதை இப்படி போய்க்கொண்டிருக்கும்போதே, படம் பார்க்க வரும் ரசிகர்களை கட்டிப் போட வைக்கும் பாடல்கள் வரும்!
    அந்த பாடல்களில் தான் எத்தனை இசையான தமிழ் மயம்!
    அங்கேதான் படத்தை தூக்கி நிறுத்த கவியரசரும், மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தி புகுவார்கள்!
    இந்த பாடலுக்கு முன்பு இரண்டு குழந்தைகளையும் சிவாஜி, செளகார் இருவரும் தூங்க வைக்கிற பாடல்தான் எல்லோருக்குமே தெரியும்! அடிக்கடி எல்லா சானல்களிலும் கேட்கிற பாடல்!
    ` நீரோடும் வைகையிலே நின்றாடும் மானே’
    இந்தப் பாட்டை மறுபடி கேட்டாலும் அதில் தமிழும் இசையும் அந்த பாட்டுக்கு பின்னால் வரும் விசில் ஒலியும் இன்றும் மனதை விட்டு விலகாது!
    இப்போது முத்துராமன் சந்திராவான விஜயகுமாரிக்கு ஒரு டூயட்!
    இது படத்தின் இளமைக் காதல்!
    `மதுராம் நகரில் தமிழ்ச்சங்கம் – அதில்
    மங்கல கீதம் முழுங்கும்!
    கவி மன்னவர் காவியம் பொங்கும்
    அதை காதலர் உள்ளம் வணங்கும்!
    காதலர்கள் டூயட்டிற்கு ஆரம்பம் மதுரை நகரம்! அங்கே இருக்கும் தமிழ்ச் சங்கம்! அங்கே மங்கலம் கீதம் முழங்குமாம்! அதை காதலர்கள் உள்ளம் வணங்குமாம்!
    ரசனையுள்ள காதலர்களாக காட்டுவதில் அன்றைய திரைப்படக் கலைஞர்கள் உறுதியாக இருந்தார்கள்!
    அதே சமயம் ஒரு திரைப்படப்பாடல் மூலமாக, மதுரையில் தமிழ்ச் சங்கம் இருந்தது என்கிற ஒரு வரலாற்று உண்மையையும் பாடலில் வாயிலாக பதிய வைத்தார்கள்!
    அங்கேயிருந்து அந்த டூயட்டின் வரிகள் ராமாயணத்திற்கு போகும்!
    `மிதிலா நகரில் ஒரு மன்றம்!
    பொன்மேனிகள் ஜானகி தங்கம்!
    மணிமாடத்திலே வந்து தோன்றும்!
    மனமன்னவன் எண்ணத்தில் நீந்தும்!
    ஸ்ரீராமனை கண்டது மனமே
    பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே!
    அடுத்த வரி அப்படியே பிருந்தாவனத்துக்கு போகும்!
    ஒரு காதல் ஜோடிகளின் பாட்டில், மதுரை தமிழ்ச்சங்கம், ராமாயணம், கண்ணனின் காதல் எப்படியெல்லாம் போகிறது பாட்டு!
    அன்றைய படத்துறையில் படித்தவர்கள் இருந்தார்கள்!
    ரசனையின் மேன்மைகள் நிறைந்திருந்தது!
    பணமும், புகழும் வேண்டும் அதே சமயம் சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை, குறிப்பாக பாமர மக்களிடம் நல்ல விஷயங்களை கொண்டு செல்ல வேண்டும் அக்கறை தலைதூக்கியிருந்தது!
    இப்போது படத்தின் அடுத்த திருப்பம் ஆரம்பமாகும்!
    சிவாஜிக்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளில் ஒன்று அவருக்கு பிறக்காதது என்கிற ரகசியம் அவருக்குத் தெரியாது!
    முதல் காட்சியில் செளகாரின் அண்ணனாக காட்டப்பட்ட வி.கே.ஆர் உண்மையில் அவருடைய அண்ணன் அல்ல!
    அவர் கணவர் சிவாஜியின் நண்பர்!
    சிவாஜி வெளியூருக்கு போயிருந்ததால் தன் நண்பனின் மனைவியை தங்கையாக பாவிக்கிறார் வி.கே. ஆர்!
    ஆனால் இரட்டைக் குழந்தைகளில் ஒன்று அவர்களுக்கு பிறக்கவில்லை அந்த குடும்பத்திலேயே மூன்று பேருக்குத்தான் தெரியும்!
    வி.கே.ஆர். செளகார், அடுத்து பிறந்த குழந்தையை விட்டுவிட்டுப் போன பெண்ணின் அண்ணனாக சொல்லிக்கொண்டு அந்த வீட்டிலேயே வாழும் எம்.ஆர். ராதா!
    இப்போது வி.கே.ஆர் நொடிந்து போயிருப்பார்!
    ஆனால் ஆரம்பத்தில் தன் பெண்ணில் ஒரு பெண் வி.கே.ஆரின் மகனுக்கு என்று உறுதி கொடுத்திருக்கும் சிவாஜி குடும்பம்!
    இங்கே தான் ...?
    (தொடரும்)
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  16. #1789
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் – 72
    (From Mr.Sudhangan's Facebook)

    சிவாஜியின் திமிர்த்தனமான பேச்சையும், தன்னை அவமானப்படுத்தி விட்ட ஆத்திரத்திலும் சீறுவார் வி.கே.ஆர்!
    விளைவு!
    சிவாஜிக்கு பிறந்தது ஒரு பெண் குழந்தைதான்!
    இன்னொன்று மருத்துவமனையி கிடைத்த அனாதை குழந்தை என்கிற உண்மையை சபையில் அம்பலம் ஆகும்!
    இப்போதுதான் கதையில் உணர்ச்சி பூர்வமான திருப்பங்கள் ஏற்படும்!
    இரண்டு பெண்களையும் தன் கண்களாக நினைத்த பாசமுள்ள தந்தை சிவாஜிக்குள் அந்த பணக்கார அரக்கன் புகுந்து கொள்வான்!
    இப்போது இரண்டு பெண்களின் தன்னுள் இருக்கும் பணக்காரனின் உண்மை மகள் யார் ? குழப்பத்தில் யாருடனும் பேசாமல் ஒதுங்குவார்!
    இப்போது பாசமாக வளர்ந்த பெண்கள் யார் இவருடைய மகள் என்கிற இடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு அந்த வீட்டை விட்டு ஒடுவது என்பதில் போடி ஏற்படும்!
    பாசத்தற்கும் பணத்திற்குமான போராட்டத்தில் இறுதியில் பாசம் வெல்வதாக கதை முடியும்!
    இப்போது படங்களில் இந்த மாதிரி பாசத்தை,உணர்ச்சி கொந்தளிப்பை, லேசான அழுகையை கூட திரையில் பார்க்க தயாராக இல்லை!
    எல்லாமே சிரிப்பாக இருக்க வேண்டும்!
    அதனால் படங்கள் ஒன்று காதல்! அல்லது பழிவாங்கல்! லேட்டஸ்ட் இப்போது ஆவிகள் கதைகள் திரையில் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது!
    எங்குமே பசுமை காணவே இன்று ரசிகர்கள் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்!
    அதனால் தான் வாழ்க்கையில் சிறு பிரச்னை வந்தால் கூட உடனே எண்ணங்கள் தற்கொலையை நோக்கிப் போகிறது!
    தொழில் நுட்பம் என்பது படைப்பாகாது என்பதை புரிந்து கொள்ள வேண்டுமானால் நேற்றைய படங்களும், அதன் பின்னால் இருந்த சமுதாய பண்பும் கலாச்சாரமும் தெரிந்த மேன்மையான மனிதர்கள் அந்த படைப்பிற்கு பின்னாலிருந்தார்கள் என்பது புரியும்!
    இப்போது எந்த வேலைக்கு லாயிக்கில்லையென்றால், அந்த மாதிரி நபர்களுக்கு புகலிடம் இரண்டு,ஒன்று டிவி. இன்னொன்று சினிமா!
    நல்ல விலையில் இருப்பவர்களும் கூட சினிமா என்றால் போகத் தயாராக இருக்கிறார்கள்!
    இந்த மாதிரி நல்ல வேலையில் இருப்பவர்களுக்கு ஒரு உதாராணம் `சோ’
    சோ ஏற்கெனவே நாடகத்தில் பிரபலம்!
    அவருடைய ஆசான் அவருடன் டி.டி.கேயில் பணிபுரிந்து பட்டு!
    இவரைப் பார்த்துத்தான் சோ விற்கு நாடகம் எழுதும் ஆசையே வந்தது என்பதை அவரை சொல்லியிருக்கிறார்!
    சோ விற்கு பட வாய்ப்பு வந்ததே `பார் மகளே பார்’ படத்தில்தான்!
    ஆனால் வந்த வாய்ப்பை பயன்படுத்து முன், சோ வீட்டில் அனுமதி வாங்க பட்ட பாடு தனிக்கதை என்று முன்பே சொன்னேன்!அது என்ன கதை!
    சோ என்கிற நாடக நடிகர், நாடகாசிரியர், இயக்குனர், பத்திரிகை ஆசிfரியர், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர், இந்திய அரசியலில் இவரைத் தெரியாதவர்கள் கிடையாது!
    பல சமயங்களில் இந்திய, தமிழக அரசியல் முடிவுகளில் இவர் பங்கு மகத்தானது1
    இவர் ` பார் மகளே பார்’ படத்தை ஒப்புக்கொள்ளு முன் பட்ட பாடு என்ன ?
    அதுவே படு சுவாரஸ்யம்!
    அது இங்கே பதிவு செய்ய வேண்டியது அவசியம்!
    காரணம் சோ வின் வளர்ச்சிக்கு சிவாஜி ஒரு முக்கியக் காரணம் என்பதை அவரே சொல்லியிருக்கிறார்!
    ` சோ’ எழுதிய ` அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ புத்தகத்தில் அவரே இதைப் பற்றி சொல்லியிருக்கிறார்!
    `பார் மகளே பார்’ படத்தில் என்னை அறிமுகப்படுத்திய சிவாஜி இறுதிவரையில் என் நலத்தில் அக்கறை கொண்டவராகவே இருந்திருக்கிறார்! நான் இல்லாத நேரத்தில் என்னைப் பற்றி மற்றவர்களிடம் உயர்வாகப் பேசுவார்! நான் எதிரில் இருந்தால் என்னை மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருப்பார்!
    முதல் படத்தில் என் பாத்திரம் நன்றாக வரவேண்டுமென்பதில் அவர் காட்டிய அக்கறை அப்படியே தொடர்ந்தது. ஒரு முறை எனக்கு உடல் நலம் குன்றியதை, அவராகவே கவனித்து, அதற்காகவே ஒரு வார ஷூட்டிங் ஷெட்யூலை ரத்து செய்தார். தனிப்பட்ட பிரச்னைகளையும் கூட என்னிடம் மனம் விட்டுப் பேசுவார்!
    ஆனால் அதற்கு முன் ` பார் மகளே பார்’ வாய்ப்பு வந்ததும், அதை ஒப்புக்கொள்ள நான் பட்ட பாடே தனி!
    மேடையில் நான் ஏற்ற பாத்திரத்தை திரையிலும் செய்ய வேண்டுமென்று விரும்பினார் தயாரிப்பாளர் வி.சி.சுப்புராமன். நான் சற்றும் எதிர்பாராத வாய்ப்பு இது!
    நான் அப்பொழுது கூட அதிகம் சினிமா பார்க்கும் பழக்கமுடையவனல்ல.
    சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தவுடன் என்ன செய்வதென்றே புரியவில்லை.
    வீட்டில் பெரிய எதிர்ப்பு வரும் என்பது எனக்குத் தெரியும்!
    அதே சமயத்தில் அந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்கிற சபலமும் இருந்தது.
    நண்பர்கள் மூலமாக வி.சி. சுப்புராமனிடம் வாய்தா கேட்டேன்!
    வீட்டில் இது பற்றி நைஸாகப் பேசிப் பார்த்தேன். என்னுடைய தந்தை எதையுமே சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடியவர் என்பதால், அவர் எடுத்த உடனேயே சரி சொல்லிவிட்டார். என்னுடைய தாத்தா, ` இதுவரை எல்லா முடிவுகளையும் நீயே தான் எடுத்து வந்திருக்கிறாய்! இதிலும் அப்படியே செய்து கொள்’ என்று சொல்லிவிட்டார்! அவருக்கு அதில் இஷ்டமில்லை என்றாலும், என்னுடைய விஷயத்தில் குறுக்கிற அவர் விரும்பவில்லை1
    என்னுடைய சித்தப்பா டி.வி.கே சர்மா ரயில்வேயில் டெபுடி ஜெனரல் மானேஜராக இருந்தார். என்னுடைய முன்னேற்றத்தில் பெரும் அக்கறை கொண்டவர் அவர். ஆறு வயதில் நான் பார்வை கோளாறினால் அவதிப்பட்டபோது, அதைச் சரி செய்தவரும் அவர்தான்.
    அவரும் நான் சினிமாவில் நடிப்பதை ஏற்றுக்கொண்டுவிட்டார்.
    ஒரே ஒரு தடங்கல் – மிகப்பெரிய தடங்கல் என் தாயார்தான்.
    அவருக்கு நான் சினிமாவில் நடிப்பது சுத்தமாகப் பிடிக்கவில்லை.
    இந்த எதிர்ப்பை சமாளிப்பது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.
    இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறத்தில், பொறாமை காரணமாக, எனக்கு வந்த வாய்ப்பைக் கெடுக்க சிலர் முயன்றார்கள்.ஆனால், அவர்களது, முயற்சி வெற்றி பெறாத அளவிற்கு, சிவாஜி கணேசன் என்னை நடிக்க வைப்பதில் தீர்மானமாக இருந்துவிட்டார்.
    அடுத்து எனக்கு இன்னொரு சந்தேகம்!
    நான் சட்ட அதிகாரியாகப் பணி புரிந்து கொண்டிருந்த டி.டி.கே அலுவலகத்தில், என்ன சொல்வார்களோ என்பதுதான் அது!
    சினிமா வாய்ப்பிற்காக வேலை விடுகிற எண்ணம் எனக்கு துளியுமில்லை!
    ஆனால் அலுவலகத்தில் இந்த பேச்சை எடுத்தவுடன், திரு டி.டி.கே வாசு அவர்கள் உடனே சம்மதம் சொல்லிவிட்டார்.
    சாதாரணமாக கலைகளில் அவருக்கு இருக்கும் ஆர்வம் காரணமாக கூட இருந்திருக்கலாம்!
    இப்போது சமாளிக்க வேண்டியது என் தாயாரின் எதிர்ப்பை மட்டுமே1
    ஆனால் அவரோ மனம் தளரவேயில்லை!

    (தொடரும்)
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  17. #1790
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மனிதனும் மிருகமும் குறுந்தொடர்
    [COLOR="#000080"]நடிகர்திலகத்தின் பாத்திரப் படைப்பாற்றலில் மனிதருள் உறங்கும் விலங்குகள்![/COLOR]
    மனிதனும் தெய்வமாகலாம் அவனுள் உறையும் விலங்குகள் விலாங்குகள் விலங்கறுத்து வெளியேறும்போது !!
    மனிதன் மனிதனாக இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவனுள் உறங்கும் விலங்கை தட்டி எழுப்பி விடும்
    நமக்குள்ளேதான் எத்தனை விலங்குணர்ச்சிகள் (Animal Instincts)! சிலநேரம் சிம்மம்/ சிங்கம் போன்ற உயர்வு மனப்பான்மை/கம்பீரம்/ ஆளுமை!!
    சிலநேரம் புலிப்பாய்ச்சல்...வேங்கையின் சீற்றம்!! சில நேரம் நாயின் நன்றியறிதலுடன் கூடிய வாலாட்டல்!!
    சில நேரம் யானையின் தோரணை......பூனையின் பதுங்கல்!!.......மானின் துள்ளாட்டம்....குரங்கின் சேஷ்டைகள்..... நரியின் தந்திரம்.....காக்கையின் விருந்தோம்பல்...கழுகின் / பருந்தின் பார்வைக் கூர்மை.......குயிலின் மேன்மை..... தேனீயின் / எறும்பின் சுறுசுறுப்பு.....பாம்பின் பழிவாங்கல்....மீனின் நீந்தல்....குதிரையின் சக்தி....அப்பப்பா......
    இத்தனை குணங்களையும் வெளிக்கொணர்ந்து நம்மை பரவசப்படுத்த நடிகர்திலகம் என்னும் மகாநடிகனை விட்டால் வேறு யாருளர் !?

    பகுதி 1 நடிகர்திலகத்தின் சிம்ம கர்ஜனை
    MGM நிறுவன படங்களின் துவக்கமே சிம்ம கர்ஜனையோடுதான்......அதேபோல் சிம்ம கர்ஜனை என்பது உலகளாவிய நடிகர்களிலேயே நடிகர்திலகத்தின் தனிசொத்து என்பதை கர்ணன், கட்டபொம்மன், தங்கபதக்கம், நவராத்திரி...கௌரவம் திரைக்காவியங்கள் நிரூபித்தன!


    !
    ஓங்கி அடித்தால் ஒன்றரை டன் ...கரவலிமை! நடையில் சிங்கத்தின் கர்வம்!! உறுமலில் சிம்ம கர்ஜனையேதான்....உறுதி செய்யும் கர்ணன்
    23:10 லிருந்து கண்டு களித்திட.....




    இந்த சிங்கநாதம் எம் செவிகளில் வீழாத நாளுண்டோ !? கட்டபொம்மனின் காலத்தை வென்று நின்று நிலைத்திட்ட சிம்ம கர்ஜனை!!
    காத்திருக்கிறோம் மன்னவரை மீண்டும் கண்டிட...கர்ஜனை கேட்டிட!!




    இந்த சிங்கங்களோ தலை வணங்காத தன்மான சிங்கங்கள் !! ஒன்று மக்களின் பாதுகாவல் அணியில்..மற்றது சட்டத்தின் காவல் பணியில்!! இன்னொன்றோ சட்டத்தின் பிடியில் சிறைக் காவலில் !!!







    The End of Part 1
    But...NT will bounce right back to prove his prowess of a panther's character and a tiger's instinct right before our eyes!!
    Last edited by sivajisenthil; 5th May 2015 at 07:42 PM.

  18. Likes RAGHAVENDRA, Georgeqlj, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •