Page 13 of 401 FirstFirst ... 311121314152363113 ... LastLast
Results 121 to 130 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #121
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சித்ரா பௌர்ணமி - ஒரு மீள் பார்வை - Part I

    வெகு நாட்களுக்குப் பின் ஏன் பல வருடங்களுக்கு பிறகு இந்தப் படத்தை revisit செய்யும் சந்தர்ப்பம் அமைந்தது. காரணம் ஒரு நண்பர். இத்தனை வருடங்களுக்கு பிறகு பார்த்தபோது தோன்றிய எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ளவே இந்த பதிவு.

    கதை என்னவோ பழி வாங்கும் கதைதான். பெற்றோர்களை தன கண் முன் கொலை செய்த வில்லனை பழி வாங்க துடிக்கும் நாயகன் என்று பார்த்து பழகிய கதைதான். ஜமின்தார் காலத்திய பழசு என்பதனால்தான் என்னவோ கதையின் பின்புலமும் ஜமீன் ஜமின்தார் என்றே சுற்றி வருகிறது. ஆனால் மலைப்பிரதேச கிராமம் என்று களத்தை தீர்மானித்திருப்பது வித்தியாசம். அந்த மலைப்பிரதேச கிராமத்தை திரையில் காட்ட அவர்கள் எடுத்துக் கொண்ட இடமோ காஷ்மீர் என்ற வகையில் கொஞ்சம் வேறு மாதிரியாக சற்று பிரம்மாண்டமாகவே யோசித்திருக்கிறார்கள் என சொல்ல வேண்டும்.

    ஏழைகள் வாழும் குடிசைப் பகுதியை தன் சுய தேவைக்கு எடுத்துக் கொள்ள அதிகாரத்தையும் வன்முறையையும் பயன்படுத்தும் ஜமின்தார், அவரின் நடவடிக்கையை எதிர்த்து தன் இடத்தை விட்டுக் கொடுக்க மறுக்கும் பைரவன். அவனுக்கு ஒரு மகன். மனைவி நிறைமாத கர்ப்பிணி. நேரில் வரும் ஜமின்தார் தன் குதிரைக் காலால் பைரவனை கொன்று விடுகிறார். பெண் குழந்தையை பெற்றெடுக்கும் அவன் மனைவி. அவள் படுத்திருக்கும் கூடாரம் தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது.

    அங்கிருக்கும் வைத்தியர் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றுகிறார். சித்ரா பௌர்ணமியன்று கொல்லப்பட்ட இருவரின் உடல்களையும் அருகருகே புதைக்கும் சிறுவன் செங்கோடன் ஜமின்தாரை பழி வாங்குவதற்காக சபதம் மேற்கொள்கிறான். பழிவாங்கும் உணர்ச்சி தன் மனதை விட்டு மறையக் கூடாது என்பதற்காகவே தன் கையிலும் தன் தங்கையின் கையிலும் சூடு வைத்துக் கொள்கிறான்.

    ஜமின்தாரை கொலை செய்ய முயற்சி செய்யும் சிறுவன் செங்கோடனையும் அவன் தங்கையையும் ஜமிந்தாரின் ஆட்கள் துரத்த இருவரும் பிரிந்து விடுகின்றனர். மயங்கி விழுந்த சிறுமியை மற்றொரு ஜமீன் வாரிசிடம் போய் சேருகிறாள். .காலம் உருண்டோடுகிறது. செங்கோடன் இப்போது வாலிபன். தன் சபதத்தை முடிக்க முடியாமல் பழி வாங்கும் வெறியோடு அலைந்து திரிகிறான். வழி பிரிந்த தங்கை விஜயா சின்னமலை ஜமிந்தாரின் தங்கையாக் வளர்க்கப்பட்டு பெரிய ஜமிந்தாரின் மகன் குமாருக்கே மனம் செய்துக் கொடுக்கபடுகிறாள். அவர்களுக்கு ஒரு மகன். ஜமிந்தாரின் ஒரே பெண் வாரிசு ராணி. செங்கோடனிடம் முதலில் மோதும் அவள் பின் அவனிடம் மனதை பறிகொடுத்து அவனை பின் தொடர்ந்து அவனிடம் மாட்டிக் கொண்டு ஒரு கட்டத்தில் அவனை விட்டு பிரிய மாட்டேன் என அடம் பிடித்து செங்கோடனுக்கே மனைவியாகிறாள். இதற்கிடையில் தன்னை விட்டுப் பிரிந்த தன் தங்கை தன் எதிரி ஜமிந்தாரின் மருமகளாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள் என தெரிந்துக் கொள்ளும் செங்கோடன் அதை அவளிடம் வெளிப்படுத்துகிறான்.

    ஒரு புறம் தன் தந்தையையும் காப்பாற்ற வேண்டும் தன் கணவனும் கொலைகாரனாவதை தடுக்க வேண்டும் என்று போராடும் செங்கோடனின் மனைவி ராணி, மற்றொரு புறம் தன் மாமனாரின் உயிரும் பிழைக்க வேண்டும், அண்ணனுக்கும் ஒன்றும் ஆகி விடக்கூடாது என்று பல வழிகளில் முயற்சிக்கும் செங்கோடனின் தங்கை விஜயா, தன் தந்தையை பழி வாங்க துடித்துக் கொண்டிருக்கும் செங்கோடன் தன் மனைவியின் அண்ணன் என்று தெரிந்ததும் எந்த பக்கமும் பேச முடியாமல் தவிக்கும் ஜமிந்தாரின் மகன் குமார், செங்கோடனுக்கு உதவி செய்யும் சின்ன ஜமீன், சபதத்தை எப்படியும் நிறைவேற்றிட துடிக்கும் செங்கோடன், அவனை எப்படியும் கொல்ல வேண்டும் என்று துடிக்கும் ஜமின்தார் இப்படி உணர்ச்சிக் குவியலான பிரச்சனைகளுக்கு முடிவு காண்கிறது கிளைமாக்ஸ். .

    (தொடரும்)

    அன்புடன்

  2. Likes RAGHAVENDRA, kalnayak, KCSHEKAR liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #122
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சித்ரா பௌர்ணமி - ஒரு மீள் பார்வை - Part II

    பாலமுருகன் - மாதவன் கூட்டணியில் வந்த படம். இந்தப் படம் ஒரு one dimensional படம் என்றே சொல்ல வேண்டும். பழி வாங்குதல் என்ற ஒரு அம்சமே பிரதானமாக முன்னிறுத்தப்படும் கதை. பாசம் நகைச்சுவை காதல் போன்ற விஷயங்கள் படத்தில் இடம் பெற்றிருந்தாலும் அவையெல்லாம் அடக்கியே வாசிக்கப்படுகின்றன. பொதுவாக பாலமுருகன் கதை வசனம் எழுதும் படங்களில் பல்வேறு கதை சந்தர்பங்கள் அதில் விழும் முடிச்சுகள், அதனால் ஏற்படும் உணர்ச்சி குவியலான காட்சியமைப்புகள் போன்றவை அவரது ட்ரேட் மார்க் முத்திரையாக விளங்கும். இதை நாம் அவர் கதை வசனம் எழுதிய அன்புக்கரங்கள், எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா போன்ற பல படங்களில் அனுபவப்படலாம். இந்தப் படத்திலும் தாய் தந்தை பாசம், அண்ணன் தங்கை பாசம் ஒரு தலை காதல், சின்ன ஜமீனின் காமடி எல்லாம் இருந்தும் அவை பழி வாங்குதலின் ஒரு பாகமாகவே விளங்குவதால் அந்த பழி வாங்கும் விஷயம் மட்டுமே தூக்கலாக இருப்பது போல் ஓர் உணர்வு.

    நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை ப்பூ என்று ஊதிவிடக் கூடிய ரோல். கோபம், வெறுப்பு, பகை தோல்வி ஆகியவற்றையெல்லாம் அனாயாசமாக செய்திருக்கிறார். கதை மலைப்பிரதேச கிராமத்தில் நடக்கிறப்படியால் நாயகன் பாத்திரமும் ஒரு மலைவாழ் இனத்தவரை அடையாளப்படுத்துவதாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அந்த நீண்ட தலைமுடி, தலையை சுற்றி ஒரு ஹேர்பாண்ட் என்ற தோற்றம்தான் படம் முழுக்க. அதிலும் இன்றைய பாஃஷன் கலரான பர்கண்டி [Burgundy] நிறத்தில் தலைமுடி அதற்கு மாட்சாக ஹேர்பாண்ட், டார்க் கலர்களில் tight fitting pant shirt என்று தன் ஸ்டைல் quotient -ஐ விட்டு விடாமல் தோற்றமளிக்கிறார் நடிகர் திலகம்.. செந்தூர நெற்றிப் பொட்டின் பாடல் காட்சியில் நார்மல் ஹேர் ஸ்டைலில் விதவிதமான டிரஸ்களில் அசத்துவார். படம் முழுக்க அவருக்கு பழகி வந்த குதிரையேற்ற சவாரி என்பதனால் அதையும் அனாயாசமாக செய்திருக்கிறார்

    படத்தில் வேறு எந்த பாத்திரங்களுக்கும் பெரிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை. அது நாயகி வேடத்தில் வரும் ஜெயலலிதாவாகட்டும், தங்கையாக வரும் விஜயகுமாரியாகட்டும், தங்கை கணவனாக வரும் முத்துராமனாகட்டும், சின்ன ஜமீன் நாகேஷ் ஏன் மெயின் வில்லன் மனோகர் உட்பட.

    படத்தில் ஐந்து பாடல்கள். அதில் இரண்டு பாடல்கள் படத்தின் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும்போதே வெளிவந்து பிரபலமடைந்தன. நடிகர் திலகம் நாயகியை கிண்டல் செய்துப் பாடும் என்னடி சின்ன குட்டி போட்ட புள்ளி சரிதானா பாடலும் டிஎம்எஸ் சுசீலா ஜோடிப் பாடலான வந்தாலும் வந்தான்டி ராஜா பாடலும்தான் முதலிலேயே வெளிவந்து பிரபலமானது. அதிலும் வந்தாலும் வந்தான்டி ராஜா பாடல் ரொம்பவே பிரபலம் தேங்க்ஸ் டு இலங்கை வானொலி. கதையின் போக்கையே அந்தப் பாடலில் சொல்லியிருப்பார் கவியரசர். நாயகன் நாயகியின் குடும்பம், புதிதாக பிறக்கப் போகும் ஒரு ஜீவன், நாயகனுக்கும் நாயகியின் தந்தைக்கும் இடையே நிலவும் பகை,, பழி வாங்க துடிக்கும் நாயகன், தடுக்க நினைக்கும் நாயகி அதை செய்வதற்கு பிறக்கப் போகும் குழந்தையை அந்தக் நோக்கில் வளர்க்கப் போகிறேன் என்று சொல்லும் நாயகி இப்படி கதையின் மொத்த சாரத்தையும் இரண்டே சரணங்களில் எடுத்துச் சொல்ல கவியரசரால் மட்டுமே முடியும். இப்படி ஒரு சூழலிலும் ஒரு டுயட்டின் இனிமை குறையாமல் அதே நேரம் கோவமும் கெஞ்சலும் வெளிப்படும் ஒரு ட்யூன் அமைத்த மெல்லிசை மன்னர், சந்தோஷமும் ஆவேசமும் குரலில் ஒரே போல பிரதிபலித்த டிஎம்எஸ், சந்தோஷத்தையும் உள்ளத்தின் தவிப்பையும் குரலில் கொண்டுவந்த இசையரசி அதை திரையில் அப்படியே பிரதிபலித்த நடிகர் திலகம் என்று இந்தக் காட்சி ஒரு கவன ஈர்ப்புக் பாடல்காட்சியாக அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

    செந்தூர நெற்றிப்பொட்டின் டுயட் படம் வெளிவந்தபிறகு பிரபலமான பாடல். இன்னும் சொல்லப் போனால் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் வந்தபிறகு மிக அதிக புகழ்ப் பெற்ற பாடல்க் காட்சி என்று கூட சொல்லலாம். முன்பே சொன்னது போல் நடிகர் திலகம் அசத்தலாக இருப்பார்.

    ஜெயலலிதாவின் அறிமுகப் பாடலாக காலம் உண்டு என்ற எல்ஆர் ஈஸ்வரி பாடல். ஒரு ஸ்கேட்டிங் கிளப்பில் ஸ்கேட் செய்துக் கொண்டே பாடுவது போல் அமைந்த காட்சி.

    ஜமீன்தாரை ஒரு விழாவில் கொல்ல முயற்சிக்கும் தன அண்ணனை தடுக்க முயற்சிக்கும் விதமாக தங்கை விஜயகுமாரி பாடும் பாடல் நீயும் வாழ வேண்டும் என்ற பாடல். வாணி ஜெயராம் பாடியிருப்பார்.

    (தொடரும்)

    அன்புடன்

  5. #123
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சித்ரா பௌர்ணமி - ஒரு மீள் பார்வை - Part III

    இந்த நேரத்தில் ஒன்று சொல்ல வேண்டும். 1971-72 -73 காலகட்டத்தில் நடிகர் திலகம் ஏரளாமான படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒரு கணக்கு எடுத்தோமென்றால் 30- 35 படங்கள் வரும். அந்த நேரத்தில் பூஜை போடப்பட்ட படங்கள், படப்பிடிப்பு துவங்கிய படங்கள் என்ற வகையிலே சொல்கிறேன். அதற்கு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வந்த படங்களையெல்லாம் சேர்த்து சொல்லவில்லை.

    எப்படியாவது நடிகர் திலகத்தின் கால்ஷீட் வாங்கிவிட்டு ஒரு வார படப்பிடிப்பு schedule .நடத்திவிட்டால் போதும் என்று ஏராளமான தயாரிப்பாளர்கள் போக் ரோடையும் பெசன்ட் ரோடையும் முற்றுகையிட்டுக் கொண்டிருந்த நேரம். இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் புவனேஸ்வரி மூவீஸ். மூன்று தெய்வங்கள் படத்தை தயாரித்தவர்கள். அந்தப் படம் அவர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் வணிக ரீதியான வெற்றியைக் கொடுத்ததும் தங்களது அடுத்தப் படமாக இந்த சித்ரா பௌர்ணமியை ஆரம்பித்தார்கள். ஒரு schedule .படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலத்திலும் நடத்தி முடித்தனர்.

    அதன் பிறகு சின்ன சின்ன schedule-கள் நடந்தன. நடிகர் திலகத்தின் அனைத்துப் படங்களுமே multiple schedule-களில்தான் நிறைவடையும். ஆனால் ஒரு சில நேரங்களில் எத்துனை முயற்சி எடுத்தாலும் சில படங்கள் எங்கேயாவது struck ஆகிவிடும். In spite of best efforts என்று சொல்வார்களே அது போல.

    நடிகர் திலகம் தன் பங்கை செவ்வனே முடித்துக் கொடுக்க 1976 செப்டம்பரில் படம் தணிக்கைக் குழுவிற்கு போனது. ஆனால் படத்திற்கு வில்லனாக வந்தது அன்று அமலில் இருந்த அவசர நிலை பிரகடனமும் அதன் காரணமாக திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும். ஒரு பழி வாங்கும் கதைக்கு தேவையான குறைந்தபட்ச சண்டைக் காட்சிகள் கூட இடம் பெற முடியாத சூழல். இன்னும் சொல்லப் போனால் நாயகன் எங்கே ஒளிந்திருக்கின்றான் என்பதை கண்டுபிடிக்க அவனின் மருத்துவரை கட்டி வைத்து கசையடி கொடுக்கும் காட்சி. அதில் கூட கசையடியை காட்டாமல் அருகில் உள்ள அருவியை மட்டும் காட்டுவார்கள். வசனம் மட்டும் ஒலிக்கும். இவையெல்லாம் படத்திற்கு ஒரு drawback ஆக மாறியது. செப்டம்பரில் சென்சாரான சித்ரா பௌர்ணமி அந்த வருடம் தீபாவளிக்கு வெளியிடுவதற்கு அரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டன. 1976-ம் வருட தீபாவளி அக்டோபர் 22 வெள்ளிக்கிழமையன்று வந்தது. 1976 ஜூன் 25 அன்று வெளியான உத்தமன் படத்திற்கு பின் அடுத்து வெளிவரும் படம். பொதுவாகவே ஒரு படம் தாமதமாக வந்தால் ஏற்படக்கூடிய ஒரு மந்தம் சித்ரா பௌர்ணமியையும் பாதித்தது.
    .
    ஆனால் சித்ரா பௌர்ணமி படத்திற்கு எதிர்பார்ப்பு குறைந்ததன் பினனணியில் மற்றொரு நடிகர் திலகத்தின் படமும் இருந்தது. அதுதான் இளைய தலைமுறை. யோகசித்ரா பானரில் G .K தர்மராஜ் தயாரித்த படம் கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தார்கள். நடிகர் திலகம் ஒரு கல்லூரி ஹாஸ்டல் வார்டனாக நடித்திருக்க வாணிஸ்ரீ ஜோடியுடன் பாடல்களும் முன்கூட்டியே ஹிட் ஆகிவிட இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியிருந்தது. போதாததற்கு இளைய தலைமுறை படமும் அதே தீபாவளி நாளில் வெளியாகும் என்று விளம்பரம் வந்து அதற்கும் சுறுசுறுப்பாக அரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டன. தமிழகத்தின் பெரும்பான்மையான ஏரியாக்களில் யோகசித்ரா நிறுவனமே நேரிடையாக வெளியிட்டது. மதுரையில் யோகசித்ரா ஒரு விநியோக அலுவலகம் தொடங்கி மதுரை சினிப்ரியாவில் படத்தை ஒப்பந்தம் செய்தார்கள். சித்ரா பௌர்ணமி மதுரை ஸ்ரீமீனாட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    யோகசித்ரா மதுரையில் இல்லாத புதுமையாக [அதற்கு முன் வெளிவந்த ஒரு சில படங்களை தவிர்த்து] டிக்கெட் முன்பதிவு முறையை கொண்டுவந்து டிக்கெட் ரிசர்வ் செய்தார்கள்..மீண்டும் ஒரு தீபாவளிக்கு நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் வெளியாகின்ற சூழலில் ஓபனிங் ஷோவிற்கு இளைய தலைமுறை படத்திற்கு டிக்கெட் புக் செய்தோம் படம் வெளியாவதற்கு முதல்நாள் யோகசித்ரா தர்மராஜுக்கு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ஒருவர் நீதிமன்றத்தை அணுக அது படம் வெளியாவதை நிறுத்தி வைக்கும் உத்தரவு வரை சென்று விட்டது. அதன் பிறகு அவர் அந்த பிரச்சனைகளையெல்லாம்.தீர்த்துவிட்டு படத்தை 1977 மே 28 ரிலீஸ் செய்தது தனி கதை.

    இளைய தலைமுறை வெளியாகிவிடும் என்ற நம்பிக்கையில் சினிப்ரியா தியேட்டர் முன்பு கூட்டம் அலைமோதுகிறது. படம் வரவில்லை என்று தெரிந்தவுடன் அந்த கூட்டம் மீனாட்சிக்கு வந்தது. நாங்களும் சினிப்ரியா போயிருந்தோம். அங்கிருந்து மீனாட்சிக்கு மதியக் காட்சிக்கு வந்தால் டிக்கெட் கிடைக்கவில்லை. மாலைக் காட்சிக்கும் கிடைக்கவில்லை. இரவுக் காட்சிக்கும் கிடைக்கவில்லை. வெறுப்பாகி விட்டது. அந்த காலகட்டத்தில் என் கஸின் படித்து முடித்து வேலைக்கும் போய்விட்டான் என்பது மட்டுமல்ல வேலை காரணம் மதுரையையும் விட்டுப் போய்விட்டான். அதன் காரணம் முதல் நாள் டிக்கெட் வாங்கக்கூடிய source -கள் யாரும் இல்லை. அப்போதும் பள்ளி மாணவனாகிய எனக்கு அந்த source -களை பழக்கமுமில்லை. வேறு வழியில்லாமல் மதுரை ஸ்ரீதேவியில் அன்று வெளியாகியிருந்த தாயில்லாக் குழந்தை என்ற தேவர் பிலிம்ஸ் படத்திற்கு போனோம். விஜயகுமார் ஜெயசித்ரா ஜோடியாக நடித்த அந்தப் படத்தில் நீ மேகமானால் என்ன நான் தோகையான பின்னே என்ற அந்த பிரபல பாடல் மட்டும் நினைவில் இருக்கிறது.

    மறுநாள் முன்கூட்டியே பள்ளி நண்பர்களுடன் பேசி வைத்திருந்தபடி தீபாவளிக்கு நியூசினிமாவில் வெளியான ப்ரூஸ்லி நடித்த Enter The Dragon படத்திற்கு போனோம். மூன்றாம் நாள் ஞாயிறு மாலை 4 மணிக்கே மீனாட்சி போகலாம் என்று நானும் என் நண்பனும் கிளம்ப தியேட்டர் முன்பு இருந்த சூழலைப் பார்த்துவிட்டு இது சரிவராது என்று அங்கிருந்து நேராக சிந்தாமணி டாக்கிஸ் சென்று மூன்று முடிச்சு படத்திற்கு Q-வில் நின்று டிக்கெட் வாங்கி பார்த்து விட்டு வந்தோம் அதற்கு அடுத்த ஞாயிறன்றுதான் சித்ரா பௌர்ணமி பார்க்க முடிந்தது..

    அன்றைய நாளில் படமே தாமதமாக வந்ததாலும் சற்று அந்நியப்பட்டுப் போன கதையாக தோன்றியதாலும் அதை ரசிக்க முடியவில்லை என்று இப்போது யோசிக்கும்போது தோன்றுகிறது. இன்றைக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்கும்போது போரடிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
    நாங்கள் எப்போதும் நடிகர் திலகத்தின் ஒரு நான்கு படங்களைப் பற்றி சொல்லும்போது அவை காலாகாலத்தில் வந்திருந்தால் பெற வேண்டிய வெற்றியைப் பெற்றிருக்கும் என்று குறிப்பிடுவதுண்டு.

    அதில் தாமதமாக வந்தாலும் வெற்றி பெற்ற படம் என்னைப் போல் ஒருவன். மதுரை தங்கத்தில் பெரியளவிற்கு வசூலித்த இந்தப் படம் மற்ற நகரங்களில் வெளியாகி ஒரு மாதத்திற்கு பிறகுதான் சென்னையில் வெளியானது. இரண்டு தாமதங்களையும் தாண்டி சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் 70 நாட்கள் ஓடியது என்றால் 72- 73 காலகட்டத்தில் வந்திருந்தால் என்னைப் போல் ஒருவன் வெள்ளிவிழா கொண்டாடியிருக்கும்.
    அதே போன்று பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போன படங்கள் என்று ரோஜாவின் ராஜா மற்றும் வைர நெஞ்சம் படங்களை சொல்வோம். அவையும் 72- 73 ல் வெளியாகியிருந்தால் நிச்சயம் 100 நாட்களை கடந்திருக்கும். நான்காவது படமான சித்ரா பௌர்ணமியை அப்படி சொல்ல முடியுமா என்றால் 100 நாட்களை தொடுகிறதோ இல்லையோ நல்ல ஒரு வெற்றியை பெற்றிருக்கும் என்றே தோன்றுகிறது. இன்றைய நாளில் தியேட்டர்களில் மறு வெளியீடு கண்டால் படம் நன்றாகவே போகும் என்றே தோன்றுகிறது.

    இந்தப் படத்தை பற்றிய எந்தவித ஐடியாவும் இல்லாமல் இருந்த நான் வெகு நாட்களுக்கு பிறகு ஒரு விமர்சன கட்டுரையாக படத்தைப் பற்றியும் அந்த நாட்களைப் பற்றியும் எண்ணுவதற்கு எழுதுவதற்கு காரணமாக இருந்தவர் இரண்டு பேர். ஒருவர் இந்தப் படத்தைப் பற்றிய சில விவரங்களை கேட்டு நான் re-visit செய்ய காரணமாக இருந்த நண்பர் ஆர்கேஎஸ். இரண்டாமவர் மதுர கானங்கள் திரியில் வந்தாலும் வந்தான்டி ராஜா பாடலை சிலாகித்து என்னை படத்தை முழுமையாக பார்க்க வைத்த நண்பர் கலைவேந்தன். இருவருக்கும் மனமார்ந்த நன்றி.

    சற்று அதிகமாகவே நீளம் கூடிவிட்டது. பொறுமையாக படித்த அனைவருக்கும் நன்றி!

    அன்புடன்

  6. #124
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sri Lanka
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    பட்டாகத்தி,

    உங்கள் கருத்துகளை கூற உங்களுக்கு தாராளமாக உரிமை உண்டு. ஆனால் அதே நேரத்தில் எழுதியவரையும் தவறான வார்த்தைகளினால் தாக்காமல் மற்ற நடிகர்களையும் தேவையின்றி இழுக்காமல் எழுதுங்கள். முன்னரே சொன்னதுதான். சொன்ன கருத்தோடு முரண்படலாம். அதற்காக புண்படுத்த வேண்டாமே!

    புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்

    அன்புடன்
    முரளி,

    நன்றி! தங்கள் கருத்துக்களை ஏற்கிறேன். ஆனால் நான் எதையுமே தவறாக சொல்லவில்லையே. நண்பர் சிவாவையும் நான் எதுவும் தரக்குறைவாக சொல்லவில்லையே! பேத்த வேண்டாம் என்பது தகாத வார்த்தையா? அது ஒரு சாதாரண இலக்கண வார்த்தை.

    அது சரி... எந்த நடிகரையும் நான் இழுக்க வில்லையே? நண்பர் சிவா கமலை வாரிசாக நடிகர் திலகம் ஏற்றுக் கொண்டார் என்பதற்குதான் நான் மறுப்பு தெரிவித்தேனே தவிர சொந்தமாக கமலை நான் இழுக்கவில்லையே?

    என் கருத்தில் தவறிருந்தால் அப்படி நடிகர் திலகம் சொன்னதை நிரூபியுங்கள். நீங்கள் என்னவோ என் பதிவு மிகுந்த கண்டனத்துக்குரியது என்பது போல சித்தரித்துள்ளீர்கள். அந்தப் பதிவில் என்ன தவறு கண்டீகள்? நீங்களும் எல்லாவற்றிக்கும் குறை கண்டு பிடிக்காதீர்கள். கண்டிக்க வேண்டியவற்றை தாராளமாய் கண்டியுங்கள். ஏற்கிறேன். உண்மையை மட்டுமே எழுதியுள்ளேன்.

    மறுபடியும் சொல்கிறேன். எந்த ஒரு நடிகரையும் நடிகர் திலகம் தன் வாரிசாக நியமித்து அறிவிப்பு செய்ததில்லை. அப்படி இருந்தால் ஆவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டுகிறேன். (போதுமா... கமல் பெயரை உச்சரிக்கவில்லை நண்பரே!)

  7. #125
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. Likes RAGHAVENDRA, eehaiupehazij, kalnayak liked this post
  9. #126
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. #127
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like


  11. Thanks eehaiupehazij thanked for this post
  12. #128
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Top Ten Tamil actors in God Avtars!
    NT stands first as Lord Shiva in Thiruvilaiyadal

    Sivaji Ganesan
    The first actor that would strike anyone while recollecting about stars who have portrayed the role of Gods would be the legendary Sivaji Ganesan. His movie Thiruvilaiyadal  is watched even today with utmost interest by many movie lovers.

    http://mlife.mtsindia.in/ag/oind_sim...ajiganesan.jpg


    Courtesy : One India

    Not very long ago, Tamil cinema was producing lots of devotional movies. Movies that were powerful enough to make the audience literally pray in front of the big screen. Such were the performances by the actors and their magnitude screen presence as Gods.

    Then there was this period where computer graphics took over the natural charm a devotional movie would otherwise have. Sure, graphics is a part of such movies but overdoing it gradually reduced the attractiveness and soon people lost interest in devotional films.

    Though these kind of movies are still being made in Kollywood, it is not long before filmmakers might actually stop dishing out such movies considering the fact that the way movie lovers look at a film has changed over the years.

    That's why it becomes an important responsibility for us to preserve and cherish those movies and what else could be a better day other than Maha Shivaratri to do exactly that? Having said that it is also equally important to cast one's mind back to the actors and actresses who have portrayed the roles of different Gods and Goddesses with ease and elegance.

    On this auspicious day of Maha Shivaratri, we bring to you famous actors and actresses of Tamil cinema who have donned the roles of various Gods and Goddesses.

    http://mlife.mtsindia.in/?isdn=91892...ndia.in/MBLAZE
    Last edited by sivajisenthil; 18th February 2015 at 02:14 PM.

  13. Likes RAGHAVENDRA, kalnayak liked this post
  14. #129
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like





  15. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, KCSHEKAR, RAGHAVENDRA liked this post
  16. #130
    Junior Member Regular Hubber
    Join Date
    Apr 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று பொள்ளாச்சி படப்பிடிப்பில் இளையதிலகத்தை சந்தித்தோம்.சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் எங்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
    மற்றவர்களிடம்எங்களை அறிமுகம் செய்யும்போது அப்பாவின் தீவிர ரசிகர்கள் என்றே அறிமுகம் செய்கிறார்.அவரின் கனிவான பேச்சும் உபசரிப்பும் இன்றுவரை மாறாத குணங்கள்


    ்.
    Last edited by Senthilvel Sivaraj; 18th February 2015 at 08:38 PM. Reason: spelling

  17. Likes Russellmai, KCSHEKAR, RAGHAVENDRA liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •