Page 119 of 401 FirstFirst ... 1969109117118119120121129169219 ... LastLast
Results 1,181 to 1,190 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #1181
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARAJAN View Post
    தங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ராகவேந்தர் சார். நடிகர்திலகம்.காம் ஆண்டுவிழாவிற்கு அனைவரும் வாழ்த்து சொல்லி விட்டார்கள். நான் மட்டும் இன்னும் சொல்லவில்லை. காரணம், இன்னும் சில தினங்களில் நமது நடிகர்திலகம்.காம் 100000 பாா்வைகளை நெருங்க இருக்கிறது. அதற்கும் சேர்த்து தாங்கள் வியக்கும் வண்ணம் ஒரு அற்புதமான வீடியோ பதிவு காத்திருக்கிறது என்பதை நமது திரி நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.
    சுந்தர்ராஜன்
    தங்களுடைய அன்பு என்னை மிகவும் பாதித்து விட்டது. தங்களுக்கு என் உளமார்ந்த நன்றியை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.
    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes ifohadroziza liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #1182
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நான் விரும்பியது சினிமா, பத்திரிகை.



    சினிமாவில் நான் நுழையாததற்கு காரணம் அந்த நாட்களில் சூழ்நிலை இன்று போல இல்லை. satellite சேனல்கள் தோன்றாத காலம். டாகுமெண்டரி கிலோ என்ன விலை என்ற காலம். ருத்ரையா போன்றோரின் சுணக்கம் ஒரு காரணம். என் கனவுகளை ,அன்றைய தமிழ் சினிமா தாங்கியிருக்க முடியாது.



    பத்திரிகையாளனாக ஆவதற்கு எனக்கு நிறைய வாய்ப்புகள். ஆனால் , நான் இறுதியான ,உறுதியான, எண்ணங்கள் கொண்டவன் .யாருக்கும் எதற்கும் வளையாதவன். (பெற்றோர்கள்,முதலாளிகள் உட்பட).முக்கியமாக நேர்மையாளன்.

    நான் ஒரு நடுநிலை பத்திரிகையாளனானால் , என்னால் எல்லா தரப்பு அரசியல் மற்றும் சினிமா வாசகர்களுக்கு ,பிரதிநிதியாக இயங்க முடியாது என்பதால் அதை தவிர்த்தவன். ஒரு பிரத்யேக அரசியல் சார்பு கொண்ட பத்திரிகையில், அல்லது ஒரு குறிப்பிட்ட நடிகர் சார்பான பத்திரிகையில் இயங்குவது போல , நடுநிலை பத்திரிகைகளில் செயல் படுவது ,மக்களுக்கு செய்யும் துரோகம்.அதை செய்ய விரும்பாததால், திறமை இருந்தும் ,ஆர்வம் இருந்தும் தவிர்த்தேன்.



    கலை- நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருக்கும் பட்சத்தில், ஒரு நடுநிலை பத்திரிகையில் இயங்கும் பட்சத்தில், உங்களை உங்கள் விருப்பங்களை மட்டுமல்ல , என்னை, முரளியை,ரவியை,ராகவேந்தரை,எங்கள் விருப்பங்களை சேர்ந்தே சுமக்கிறீர்கள் என்ற பொறுப்புணர்ச்சியுடன் இயங்கும் படி தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #1183
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post

    என் ஒன்று விட்ட அண்ணனும் ,ஒன்று விட்ட அக்காவும் அவர்களது மக்களும் ,நான்கு நாட்கள் முன்பு ஒரு சாலை விபத்தில் இயற்கை எய்திய துன்பத்தில் ஆழ்ந்திருந்தேன்.
    .
    திரு.கோபால்

    விபத்தில் மரணம் அடைந்த தங்கள் உறவினர் பிரிவால் வாடும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. Thanks Gopal.s thanked for this post
  7. #1184
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARAJAN View Post


    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

    அந்த நேரத்தில் 25000 ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை

    நடிகர் திலகம் அவர்கள்

    சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஆரம்பத்திலேயே
    மிகப்பெரிய தொகையை
    வாரி வழங்கியிருக்கிறார் என்றால்

    கர்ணனைப் போல் ஈகைக்குணத்துடன்
    அவதரித்த வள்ளல் என்றுதான் சொல்லவேண்டும்
    Last edited by sivaa; 20th April 2015 at 06:50 PM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. Thanks eehaiupehazij thanked for this post
    Likes ifohadroziza liked this post
  9. #1185
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. Likes Russellmai, eehaiupehazij liked this post
  11. #1186
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    பாவமன்னிப்பு - சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் , இந்த படத்தின் சாரம் தான் அது !


  12. Thanks ifohadroziza, eehaiupehazij thanked for this post
    Likes ifohadroziza, Russellmai liked this post
  13. #1187
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like




    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்.

  14. Thanks ifohadroziza, eehaiupehazij thanked for this post
  15. #1188
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    முரளி,

    அன்பு இதயங்களே,

    என் சொந்த சோகத்தை பகிர்ந்த போது ,இத்தனை பேர் உடன் நின்றது எனக்கு மிக ஆறுதல். நான் சொந்தம் என்று மட்டும் துயர் அடையவில்லை. இறந்த குடும்பம் ,உண்மையிலேயே உன்னதமான நல்லவர்கள். வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள்.நான் மூன்று நான்கு நாட்களாக நடிகர்திலகம் படங்கள், எனக்கு பிடித்த மலையாள படங்கள் இவற்றிலே உழன்று ஆறுதல் தேடுகிறேன். (சமீபத்தில் எலிபத்தாயம்,எஸ்தப்பன்,முகாமுகம்,.ஜே .சி.டேனியல்) ஜெ.சி.டேனியல் நிஜமாகவே என் துக்கத்தை அதிகரித்து விட்டது. மேதைகளை புறம் தள்ளுவதில் இந்தியர்கள் ஒருங்கிணைந்தே செயலாற்றுகிறோம்.
    இனிய நண்பர் திரு கோபால் சார்

    உங்கள் இந்த பதிவில் உங்கள் எதிர்பார்ப்பில் உங்களுக்குள் ஒரு ஞாயம் இருக்கிறது என்பதுமட்டும் எனக்கு புரிகிறது.

    மற்றபடி எனக்கு இப்படி ஒருவர் அழைக்கவேண்டும் என்பதில் பெரிய நம்பிக்கை இல்லை அது மரியாதை குரயாதபட்சத்தில். நானும் என்னுடைய பதிவில் திரு எம் ஜி ராமசந்திரன் அவர்கள் என்று அழைத்தால் அவர்களும் ஒன்றும் தவறாக நினைக்கபோவதில்லை. காரணம் நாம் "திரு" என்றும் ..."அவர்கள்" என்று மரியாதையாக தானே அழைக்கிறோம் என்ற காரணத்தால்.

    தவறான தகவல், தவறான பதிவு இவை வரும்போது நாம் வாதாடுவதில் தவறில்லை என்று நினைக்கிறன். இன்று வந்திருக்கும் பதிவுகளில் கூட நமது ரசிகர் தரப்பில் அதை செய்தார்கள்...இப்படி செய்தார்கள்...நாம் பதிலடி கொடுத்தோம் என்ற முறையில் எழுதப்பட்டு உள்ளன...அது உண்மையா பொய்யா என்பது கூட நமக்கு தெரியாத பட்சத்தில்...அதனை நாம் உண்மையாக எடுத்துகொள்ளமுடியாது. காரணம் இரு ரசிகர்களுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் ! இருவரும் யோகியம் கிடையாது...எனும் பட்சத்தில் நடுநிலை யாரும் கடைக்பிடிக்கவும் முடியாது ..! நமது நம்பிக்கை நமக்கு ...அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு...RAILWAY TRACK போல பயணிக்கும் அவ்வளவே !

    ஒரு பதிவின் போக்கு....அது தொடங்கிய விதம்...அது தொடர்ந்துகொண்டிருக்கும் விதம்...அதில் புதைந்துள்ள பொருள்கள்...இவை கூட, திரை உலகில் இருக்கும்வரை வாங்கிகொண்டிருந்த நமது இதய தெய்வத்தின் ரசிகன் நாம்..இது கூட நாம் புரிந்துகொள்ளவில்லை என்றால்.......ஹ..ஹ...ஹ...!

    எழுத்துக்களில் சாமர்த்தியம் - எது சாமர்த்தியம் என்பதை - கூற நினைக்கும் நேரத்தில்... வசூல் ராஜா MBBS திரைபடபாடல் "கலக்கபோவது யாரு"....பாடலில் வரி நினைவிற்கு வருகிறது - "விழுவதுபோல விழுவேன் எந்தன் எதிரியின் சுகம் காண...

    ஆகையால் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும், இருக்கும் என்ற நம்பிக்கையை மட்டும் கைவிடோம் !

    RKS !
    Last edited by RavikiranSurya; 20th April 2015 at 12:58 PM.

  16. Thanks Gopal.s thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  17. #1189
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    சாந்தி - பொன் விழா நிகழ்ச்சி - 1965- 2015 – Part I

    சென்ற ஞாயிறன்று [ஏப்ரல் 12] நடைபெற்ற சாந்தி பொன் விழா கொண்டாட்ட நிகழ்ச்சியைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்திருக்க கடந்த 3,4 நாட்களாக திரியில் வேறு பல் விஷயங்கள் முக்கியத்துவம் பெற்று விட்டதால் எழுத முடியாமல் போனது. சாந்தி விழாவிற்கு போகும் முன் ஒரு சின்ன பிளாஷ்ஃபாக்

    NT FANS என்ற நமது திரைப்பட appreciation association தொடங்கப்பட்டு அதன் மூலமாக மாதாமாதம் ஒரு நடிகர் திலகத்தின் படம் திரையிடப்படும் என அறிவித்தற்கு ஏற்ப கடந்த 40 மாதங்கள் அது வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை பெரும்பாலானோர் அறிந்திருக்கக் கூடும். அப்படி திரையிடும்போது 50 ஆண்டுகள் நிறைவு செய்த படங்கள், 60 ஆண்டுகள் நிறைவு செய்த படங்கள் போன்றவற்றை நாம் திரையிட்டு அந்த படத்தில் பங்கு பெற்றவர்கள் எவரேனும் இன்றைய நிலையில் விழாவில் கலந்துக் கொள்ளும் நிலையில் இருந்தால் அவர்களை அழைத்து கௌரவித்து அவர்களின் அந்த மலரும் நினைவுகளை கூறக் கேட்டு மகிழ்வது வழக்கம். .

    பார்த்தால் பசி தீரும் படத்திலிருந்து ஆரம்பித்து நாளது தேதி வரை பல படங்களை திரையிட்டிருக்கிறோம். இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட அன்று AL S புரொடக்ஷன்ஸ் அதிபர் AL ஸ்ரீனிவாசன் அவர்களின் மருமகள் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் வந்திருந்தார். அவர்களின் சொந்த தயாரிப்பான செந்தாமரை படத்தின் டிவிடி இதுவரை வெளிவரவில்லை. அந்த படத்தின் பிரிண்ட் அல்லது நெகடிவ் அவர்களிடம் இருக்கிறதா என்று கேட்டபோது அவர்களிடம் இல்லை என்ற பதில் வ்ந்தது. ஆகவே அந்தப் படத்தை திரையிட முடியவில்லை

    அதன் பிறகு சென்ற வருடம் 2014 மார்ச் மாதம் பச்சை விளக்கு திரைப்படத்தின் பொன் விழா கொண்டாட்டத்தின்போது அந்த விழாவிற்கு வந்திருந்து விழாவிற்கு பிறகு திரையிடப்பட்ட படத்தையும் பார்த்துவிட்டு சென்றார். அந்த நேரமே அவரிடம் சாந்தி படத்தைப் பற்றி நினைவூட்டினோம். நிச்சயமாக அதை கொண்டாடுவோம் என்று சொல்லி சென்றார்

    2015 ஏப்ரல் மாத திரைப்படம் சாந்தி என்று முடிவானதும் சென்ற மார்ச் மாத இறுதியில் திருமதி ஜெயந்தி அவர்களை சந்திக்க சென்றோம். படத்தின் விழா கொண்டாடும்போது என்னென்னவெல்லாம் செய்ய போகிறார் என்பதை எங்களிடம் எடுத்துச் சொன்ன அவர் பழைய நாட்களின் பல சுவையான திரைப்பட உலக தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். நான்கு நாட்கள் கழித்து சந்திக்க சொன்ன அவர் அதற்கு முன் படத்தில் பணியாற்றிய பல கலைஞர்களையும் invite செய்து விடுகிறேன் என்று சொன்னார்.

    அதன் பிறகு இரண்டு மூன்று முறை முயற்சித்தும் அவரை சந்திக்க முடியவில்லை. அவரது மகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நேரம் என்பதுதான் காரணம் என்பதை தெரிந்துக் கொண்டோம். அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றவுடன் விழாவன்று ஒரு சில பொருட்களை காட்சியாக வைக்கலாம் என்று சொல்லியிருந்தார். ஆனால் எவை எவை என்று சொல்லவில்லை.

    விழாவன்று மாலை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட்ட திருமதி ஜெயந்தி தான் கொண்டு வந்த சாந்தி திரைப்படம் சம்மந்தப்பட்ட பொருட்களை காட்சிக்கு வைத்தார். படத்தின் வருகிறது விளம்பரம் முதல் அனைத்து விளம்பரங்களையும் பிறகு படப்பிடிப்பின் இடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் எடுத்து வைத்த அவர், சாந்தி திரைப்படம் எடுக்கப்பட்ட Mitchelle (மிச்செல்) காமிராவையும் அங்கே கொண்டு வந்து காட்சிப் பொருளாக வைத்ததுதான் ஹைலைட். விழாவிற்கு வந்திருந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்த அந்த காமிராவோடு பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    ரஷ்யன் கலாச்சார மய்யத்தின் லாபியில் இவை காட்சிக்கு வைக்கப்பட சற்று நேரம் கழித்து உள்ளே அரங்கத்தினுள்ளில் விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களான திருமதி ஜெயந்தி, ஆனந்த் தியேட்டர் அதிபர் உமாபதியின் புதல்வர் திரு கருணாகரன், லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் அவர்களின் துணைவியார் திருமதி தாமரை செல்வி அவர்கள், நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் புதல்வியார் திருமதி விஜயசாமுண்டீஸ்வரி ஆகியோர் மேடையில் அமர வைக்கப்பட்டனர்.

    நமது அமைப்பின் சார்பில் படம் திரையிடும்போது அந்த படத்தின் சிறப்பம்சங்களையும் படம் தயாரிப்பில் இருந்தபோதும் வெளியானபோதும் இருந்த அன்றைய சமூக சூழல் போன்றவ்ற்றை பற்றிய ஒரு குறிப்பும் நமது வரவேற்புரையில் இடம் பெறும். அன்றும் அது போன்ற சுவையான தகவல்கள் அங்கே பகிர்ந்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் குறிப்பாக ஒரு சில தகவல்கள் சுவையானவை.

    நடிகர் திலகம் அவர்களுடன் நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள் இணைந்து நடித்த கடைசி படம் சாந்தி.

    மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த கடைசி நடிகர் திலகத்தின் படம் சாந்தி.

    லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் அவர்கள் நடிகர் திலகத்தின் படங்களில் ஒரு முக்கிய வேடம் தாங்கி நடித்த கடைசி படம் சாந்தி. [இதன் பிறகு எதிரொலி படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் அதில் எஸ்எஸ்ஆர் அவர்களுக்கு ஒரு சின்ன ரோல்தான்].

    இந்த விஷயங்களையெல்லாம் குறிப்பிட்டு விட்டு சாந்தி திரைப்படத்திற்கு தணிக்கையில் ஏற்பட்ட சிக்கலை எடுத்துக் கூறினேன். படத்தின் கதையம்சம் காரணமாக வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற A சர்டிபிகேட் கொடுக்கலாமா என்று தணிக்கை குழுவினர் யோசித்ததையும் அன்றைய நாட்களில் அப்படிப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டால் அது படத்திற்கு அதன் ஓட்டத்திற்கு முதுகெலும்பாக விளங்ககூடிய Family audience மற்றும் பெண்கள் ஆகியோரின் வருகையை பாதித்துவிடும் என்ற காரணத்தினால் revising கமிட்டிக்கு அனுப்பட்டதையும் அங்கே படத்திற்கு U சர்டிபிகேட் வழங்கப்பட்டதையும் அதன் காரணமாக 1965 ஏப்ரல் 10- ந் தேதி வெளியாகும் என்று விளம்பரம் செய்யப்பட்ட சாந்தி 12 நாட்கள் கழித்து ஏப்ரல் 22 அன்று வெளியானதையும் எடுத்துச் சொன்னேன். படம் வெளியான பிறகு அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததையும் படம் 100 நாட்கள் ஓடியதையும் எடுத்துச் சொன்னேன்.

    இந்த வரவேற்புரை முடிந்தவுடன் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் பேச வந்தார்.

    (தொடரும்)

    அன்புடன்.

  18. Thanks mappi thanked for this post
    Likes Gopal.s liked this post
  19. #1190
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    Dear Shri. Gopal,

    Saddened to note the sudden and untimely demise of your relatives.

    Though belated, my heartfelt condolences.

    R. Parthasarathy

  20. Thanks Gopal.s thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •