Page 101 of 401 FirstFirst ... 519199100101102103111151201 ... LastLast
Results 1,001 to 1,010 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #1001
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. Likes eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1002
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நண்பர்கள் ஜோ ரவிகிரண் சூரியா
    தயவு செய்து தர்க்கத்தை நிறுத்துங்கள்
    அத்துடன் உங்கள் தர்கப் பதிவுகளையும் நீக்கிவிடுங்கள்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. Thanks eehaiupehazij thanked for this post
  6. #1003
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Received Email from one of our Hub Reader

    Sir please.thread is running smoothly.but why both hubbers fight unnecessarily.please stop the war.I am the regular reader to read this hub only.t.u

    (Venu gopal)
    venugopal93.a14@gmail.com
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #1004
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    செலுலாய்ட் சோழன் – 68
    (From Mr.Sudhangan's Facebook)


    1963 வருடம் வந்த அத்தனை சிவாஜி படங்களுமே வித்யாசமானவை!
    இரத்தத்திலகம் தவிர, இருவர் உள்ளம், கல்யாணியின் கணவன், குங்குமம், குலமகள் ராதை,நான் வணங்கும் தெய்வம், பார் மகளே பார்,
    இதில் ` இருவர் உள்ளம்’ படம் எழுத்தாளர் லட்சுமியின் ` பெண் மனம்’ நாவல் தான் இந்தப் படம்!
    படத்தின் தயாரிப்பாளர் எல்.வி. பிரசாத்!
    அதுவரையில் சிவாஜி நடித்த படங்களிலிருந்து, வித்யாசமாக சிவாஜி வித்யாசமாக நடித்திருந்த படம்!
    இந்தப் படத்தில் எல்லோருக்குமே ஒரு வித்யாசமான கதாபாத்திரம்!
    எம்.ஆர். ராதா இதில் ஒரு அடக்கமான குடும்பத்தலைவர் பாத்திரத்தில் நடித்திருப்பார்!
    இந்தப் படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர் மு. கருணாநிதி!
    மு,கருணாநிதி எம்.எல்.ஏ. என்று டைட்டிலில் வரும்!
    சிவாஜி ஒரு காதல் மன்னன்! அப்படித்தான் டைட்டிலில் பாட்டிலேயே அறிமுகமாவார்!
    `பறவைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்! கொண்டாட்டம் பலவிதன், நான் அதிலே ஒருவிதம்!
    இந்த பாடலிலேயே சிவாஜி ஒரு ப்ளேபாய் என்பதும், அவர் ஒவ்வொரு பெண்களோடும் ஆடுகிற மாதிரியும் வரும்!
    பின்னாளில் பல பாலசந்தர் படங்களில் வெற்றிகரமான கதாநாயகியாக உலா வந்த ஜெயந்தி இந்த பாடலில் ஒரு சில வரிகளுக்கு சிவாஜியுடம் நடனமாடிவிட்டுப் போவார்! பார்க்கிற பெண்களையெல்லாம் மடக்கி தன் வலையில் போட்டு அவர்களை ஏமாற்றுகிற பணக்கார வீட்டுப் பிள்ளை சிவாஜி! அப்போதுதான் படத்தின் கதாநாயகி சரோஜாதேவி அவர் கண்களில் படுவார்! மிகவும் ஒழுக்கமான ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் வேடம் அவருக்கும்!
    அவரை தன் வலையில் சிக்க வைக்க முயலுவார் சிவாஜி! அவர் லேசில் சிக்க மாட்டார்! இப்போது சிவாஜியின் தங்கைக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்க வருவார் சரோஜாதேவி! அது சிவாஜியின் வீடு என்பது அவருக்குத் தெரியாது!
    முதல் நாள் ட்யூஷன் சொல்லிகொடுக்கும்போது அந்த அறையிலேயே உட்கார்ந்திருப்பார் சிவாஜி! கணக்கு சொல்லிக் கொடுக்க வந்த சரோஜாதேவி, சிவாஜி எதிரில் இருப்பதை பார்த்ததும், தன் மாணவியான சிவாஜியின் தங்கையிடம் சரோஜாதேவி, ` கணக்கை அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல தமிழ் புத்தகத்தை எடு’ அந்த பெண் புத்தகத்தை எடுக்கும்போது சிவாஜியை பார்த்து ` நல்ல பாடம் கற்பிக்கிறேன்’ என்பார்! புத்தகத்தை எடுத்து, `மகாபாரதத்தில ஒரு சம்பவம்! யாசகம் பெறுவதல்ல காதல்! என்றறிவாய் மூட கீசகா ! செல்வாய் என்றாள்! கீசகன் சிரித்தான் ( லேசாக எதிரே இருக்கும் சிவாஜியைப் பார்ப்பார் ) இந்த வாசகம் போதுமென்றான் ! மங்கையை தொடவும் வந்தான்! ஆசையில் விழந்த அந்த அரக்கனே அழிந்தானம்மா ! என்று மெல்லிய குரலில் பாடுவார் சரோஜாதேவி! இந்தக் காட்சியின் இந்த வசனமும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது!

    காரணம் படத்திற்கு வசனம் எழுதியது மு. கருணாநிதி! அவருடைய கட்சியும், கொள்கைகளும் ராமாயண, மகாபாரத்ததை ஏற்றுக்கொள்ளாதவர்கள்! அவர் இந்தக் காட்சியில் இப்படி எழுதியதுதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது! சரோஜாதேவி பாடியதும் எதிரே இருந்த சிவாஜி கைதட்டிப் பாராட்டுவார்! உடனே சரோஜாதேவி, சிவாஜியின் தங்கையான தன் மாணவியைப் பார்த்து பத்மா உனக்கு இதன் அர்த்தம் புரியலை போலிருக்கு! சொல்றேன் கேளு! திரெளபதி கிட்ட தவறாக நடக்க முயற்சித்தான் அந்த கீசகன்! அவள் இப்ப என்ன சொன்னாள் தெரியுமா ? என்பார்! உடனே சிவாஜி, ஒண்ணும் சொல்ல வேண்டாம் ! அவன் அங்கிருந்தே போய்விட்டான் என்று அந்த அறையை விட்டு நகருவார்! இப்படி மோதலில் ஆரம்பித்து இருவருக்கும் திருமணம் நடக்கும்!
    சந்தர்ப்பவசத்தால் ஒரு பணக்காரனுக்கு மனைவியாகிவிட்ட சரோஜாதேவியால் இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியாது! முதலிரவில் உங்கள் பணத்தினால் என்னை வாங்கி விட்டீர்கள்! நான் உங்கள் மனைவி! என் உடலை எடுத்துக்கொள்ளுங்கள்! ஆனால் என் உள்ளத்தை உங்களால் வாங்க முடியாது’ என்பார்!

    அதுவரையில் விளையாட்டுப் பிள்ளையாக, பல பெண்களோடு விளையாடிய சிவாஜி, கெஞ்சுவார்! உன் உடல் தான் எனக்குத் தேவை என்றால் அது திருமணம் வரையில் வந்திருக்காது! சரி நீயாக விரும்புகிறவரையில் நான் உன்னை தொடமாட்டேன் ‘ என்று சபதமேற்பார்! படத்தின் விறுவிறுப்பு அப்போது கூடும்!
    இந்தப் படத்திற்கு இசை கே.வி, மகாதேவன்!
    இந்த இடத்தில் ஒரு விஷயத்தை பதிவு செய்தே ஆகவேண்டும்!
    ஆதிகாலத்தில் மனிதனுகு மொழி கிடையாது! அவனுக்கு துன்பம் வரும்போது அவன் அழுவான்!
    கண்களில் கண்ணீர் வரும்போது அதை அழகை என்றார்கள்!
    அவனுக்கு சந்தோஷம் வரும் போது அவன் துள்ளிக்குதித்தான்!
    இப்படி மாறுபட்ட மனநிலைகளில் மனிதன் சத்தம் எழுப்பினான்!
    அந்த வாயொலி தான் பின்னால் ஒழங்குபடுத்தப்பட்டு பாடல் என்றானது!
    பாட்டை கேட்டதும் குழந்தை தூங்குகிறது! மகுடியின் இசைக்கு பாம்பு மயங்குகிறது!
    பாட்டுக்கு அப்படி ஒரு அற்புத சக்தி உண்டு! பாவேந்தர் பாரதிதாசன் ` பாடாத தேனீக்கள், உலவாத தென்றல்! பசியாத நல்வயிறு பார்த்ததுண்டா!’ என்பார்! பாட்டுக்கு அந்த நாளில் அத்தனை முக்கியத்துவம் இருந்தது!
    இருவர் உள்ளம் படமும் அதற்கு விதிவிலக்கல்ல! அத்தனை பாடல்களும் அதி அற்புதம்! இப்போது படத்தில் சிவாஜி, சரோஜாதேவி இருவரும் தம்பதிகள்! ஆனால் அவர்களுக்குள் தாம்பத்ய உறவு கிடையாது!’ அவர்களுக்குள் நடக்கும் இந்த பனிப்போர் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்குத் தெரியாது! இப்போது வீட்டில் ஒரு விசேஷம் !
    அதில் மருமகள் சரோஜாதேவியைப் பாடச் சொல்வார்கள்! அப்போது அந்த சூழுலுக்கு அற்புதமான வரிகளை கொட்டியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்!
    ` இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா !
    இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா!
    உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா!
    உருவம் போடும் வேஷம் உண்மையாகுமா !
    விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா !
    வீட்டுக் குயிலை கூட்டில் வைத்தால் பாட்டு பாடுமா !
    மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே!
    சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே!
    அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே!
    அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே!
    இந்தப் பாடலும், அதற்கான காட்சியும் ரசிகர்களை சுண்டியிழுத்தது!
    வானொலியில் ஒரு நாளைக்கு பலமுறை இந்த பாடலை ஒளிபரப்பினார்கள்!
    ஏன் இப்படி இந்த வரிகள்! என்று பாட்டைக் கேட்டவர்கள் யோசித்தார்கள்!

    ( தொடரும்)
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  8. Thanks ifohadroziza thanked for this post
  9. #1005
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    http://www.thehindu.com/news/cities/...cle7097711.ece

    The Hindu
    Sivaji’s film Santhi celebrates 50 years


    Fifty years ago, Sivaji Ganesan’s film, Santhi, marked the end of a popular combination in Tamil cinema.

    It was the last film in which Sivaji and M.R. Radha shared space on the silver screen.

    This snippet was shared by T. Murali of Nadikar Thilakam Films Appreciation Association which organised a function on Sunday to the mark the 50 year of Santhi.

    The film that was to be released on April 10 in 1965 was delayed by 12 days as the makers wanted a ‘U’ certificate instead of an ‘A’.

    “Earlier, the Central Board of Film Certification thought of giving it an ‘A’. The makers thought such a certificate for those times would deter people from bringing their families to the film. So, it took them a little while to get a ‘U’ certificate,” he said.

    Jayanthi Kannappan, daughter-in-law of A.L. Srinivasan who produced Santhi, brought the camera using which the film was shot 50 years ago.

    “My father-in-law had the privilege of paying salaries to four Chief Ministers, including M. Karunanidhi, Jayalalithaa, M.G. Ramachandran and N.T. Rama Rao, for various films. Not just that, he also introduced five directors, including A. Bhim Singh and K.S. Gopalakrishnan,” she said.

    The programme was followed by the screening of the film. The film’s cast included Sivaji, C.R. Vijayakumari, Devika and S.S. Rajendran, and was directed by Bhim Singh.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  10. Thanks ifohadroziza, eehaiupehazij thanked for this post
  11. #1006
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அவன் ஒரு சரித்திரம் 004:
    கப்பலோட்டிய தமிழன். வெள்ளையரை எதிர்த்து கடல்வழி வாணிபம் செய்ய சொந்தமாக கப்பல் வாங்கி வணிகம் செய்தவர். தென்னிந்தியாவின் தென்பகுதி மாவட்டங்களில் வெள்ளையரை எதிர்த்து சுதந்திர முழக்கமிட்டவர். இவரை ஆங்கிலேய அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையில் அவர் பல்வேறு கடின வேலைகளை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டார். கல் உடைத்தார். செக்கிழுத்தார். "செக்கிழுத்த செம்மல்" என்றும் இவரை கூறுவர். நடிகர் திலகம் இவர் வழக்கறிஞராக பணிபுரிந்தபோது இருந்த கம்பீரத்தையும், சிறையில் கடின உழைப்பின் மூலம் வாடுவதையும், நம் கண் முன்னே நிறுத்தினார். வ உ சி யின் மகனே, நடிகர் திலகத்தைப் பார்த்தால் எங்கள் தந்தையாரைப் பார்த்தது போலவே இருக்கிறது என்று பாராட்டும் அளவுக்கு இவரது நடிப்பு இருந்தது. சிறையில் இவர் வாடும் காட்சிகள் கொண்ட "தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்" என்ற பாடல் உங்களுடன் பகிர்கின்றேன்.



    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

  12. Thanks ifohadroziza thanked for this post
    Likes ifohadroziza liked this post
  13. #1007
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

  14. Thanks ifohadroziza thanked for this post
  15. #1008
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    https://www.facebook.com/video.php?v=1524395341170158

    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

  16. Thanks Subramaniam Ramajayam thanked for this post
    Likes rajeshkrv liked this post
  17. #1009
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகம் புகழ் உரைக்கும் அனைத்து திரி நண்பர்களுக்கும் என்றும் புன்முறுவல் தவழ்ந்திட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

  18. Likes ifohadroziza liked this post
  19. #1010
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு,தமிழருவி மணியன் அவர்கள் தனது ரெளத்திரம் பத்திரிகையில் நடிகர்திலகம் காலம் கலையுலகின் பொற்காலம் என்ற தலைப்பில் தொடர்ந்து மக்கள்தலைவர் சிவாஜி அவர்களை பற்றி எழுதுகிறார். அனைவரும் வாங்கி படித்து மற்றவர்களுக்கும் பகிரவும்,







    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,

  20. Thanks Georgeqlj, eehaiupehazij, ifohadroziza thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •