Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    பாகப் பிரிவினை - 1959



    இந்த கேள்வி என் மனதில் இன்று வரை நிழலாடுகிறது. என்னவோ பதினாறு வயதினிலே க்கு முன்பு வெளிப்புற படப்பிடிப்பே நடக்காத மாதிரியும், அந்த படம்தான் தமிழ் பட திருப்பு முனை என்றும் ,பீம்சிங்,கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலசந்தர் போன்றவர்களை தொபெரென்று போட்டுவிட்டு , பாரதிராஜா (எனக்கும் பிடிக்கும்)இவரின் நூற்றுகணக்கான போலிகள் (செல்வராஜா,பாக்கியராஜா,etc etc )இவர்களை பத்திரிகைகள் கொண்டாடின. இத்தனைக்கும் துளி கூட ரியலிச சாயல் இல்லாமல், sensationalism ,pseudo -eusthetics ,கிச்சு கிச்சு காமெடிகள்,ஓட்ட வைத்தார்போல காட்சிகள், உண்மையில்லா பாத்திர வார்ப்புகள்,cliche ஆன படங்கள்,சம்பந்தமில்லா montage ,மொக்கை நடிப்பு என்று நூற்று கணக்கில் படங்கள்.(மகேந்திரன் விதிவிலக்கு,பாலு மகேந்திரா கொஞ்சம் தேறுவார்).ஷ்யாம் பெனெகல்,கிரீஷ் கர்னார்ட், அடூர் படங்களில் இருந்து உருவிய சில காட்சிகள்.(மூலத்தின் சாரத்தை உள்வாங்காமல்).எனக்கு குமட்டியது.மூச்சு திணறியது.

    பதினாறு வயதினிலே துவக்கமே அபத்தம். பொருந்தா காதலில், ஒரு நாயகி சப்பாணிக்காக காத்திருப்பதாக. இது ரொமாண்டிக் வகை காதலல்லவே?அனுதாப வசதி காதல்தானே ,என்ன build up சம்பந்தமில்லாமல் என்ற சிரிப்பு வரும்.பிறகு ஓரளவு சுவையான காட்சிகள். ஆனால் டாக்டர் காட்சிகள் படத்தின் நம்பக தன்மையை தொபெலாக்கி விடும். டாக்டர் செவ்வாய் கிரகத்திலிருந்தா வருகிறார்? என் கிராமத்து நண்பர்களே இதை பற்றி ஏளனம் செய்துள்ளனர். பிறகு சப்பாணி-மயில் காட்சிகள் ஈர்ப்புள்ளவை. சுவாரஸ்யம். ஆனால் முடிவு? ஒரு சாதா தமிழ் பட கற்பழிப்பு சார்ந்த முடிவு. எந்த பாத்திரங்களிலும் அசல் தன்மையில்லை. வாழ்க்கை பதிவுகள் இல்லை.(குசும்பு,நையாண்டி,sadism இவை தவிர)
    காட்சிகள் சில ரசனைக்குரியவையே அன்றி காவியம் என்று போற்றப்படத் தக்கதல்ல. அற்புதமான உள்வாங்கல் அதே சமயம் மனம் திறந்த உண்மையின் தைரிய வெளிப்பாடு. ஆயிரம் சதவீதம் ஒத்துப் போகிறேன். நீங்கள் என் நண்பர் என்பதற்காக அல்ல. ஒரு உண்மையான போலி வேஷம் காட்டாத விண் தொடும் விமர்சகர் என்ற வரையில். சபாஷ் நண்பரே! ஆனால் உண்மை கசக்கும் உண்மையானவர்களைத் தவிர.
    Last edited by vasudevan31355; 19th May 2015 at 08:26 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks Russellbpw, adiram thanked for this post
    Likes KCSHEKAR, uvausan, adiram liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •