Page 103 of 401 FirstFirst ... 35393101102103104105113153203 ... LastLast
Results 1,021 to 1,030 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #1021
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by SUNDARAJAN View Post


    சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல எவரும் எட்டாத அதிசியம்,
    happy newyear to all our NT FOLLOWERS AND HUB READERS.
    Let us try to follow murali sirs advices to aviod unpleasntness in both of mgr and our thiris hereafter.
    HAPPY TAMIL NEWYEAR TO ALL OF YOU
    RAMAJAYAM

  2. Likes eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1022
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    ஜோ,

    நாம் பலமுறை இங்கே விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறோம். குறிப்பாக அரசியல் சார்ந்த விவாதங்களில் பங்கெடுத்திருக்கிறோம். காரசாரமாக விவாதித்திருக்கிறோம். ஆனால் ஒரு நாளும் நீங்கள் தரம் தாழ்ந்தோ அல்லது ஒருமை விளிகளை பயன்படுத்தி நான் பார்த்ததில்லை. ஆனால் நேற்று நீங்கள் பயன்படுத்திய வாக்குகளும் உங்கள் பதிவின் தொனியும் மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்தது என்பதை சொல்ல விரும்புகிறேன்.

    அன்புடன்
    முரளி சார்,
    உங்களுக்கு ஏமாற்றத்தையும் மனவருத்தத்தையும் கொடுக்க நேர்ந்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.

  5. #1023
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு முரளி அவர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் .நான் கடந்த 9 வருடங்களாக மையம் திரியில் இடம் பெற்ற பல் வேறு திரிகளை தொடர்ந்து படித்து வருகிறேன் .நடிகர் திலகம் திரியில் உள்ள 36 திரிகளில் 40,993 பதிவுகளை படித்து உள்ளேன் . திரு ராகவேந்திரன் , திரு பம்மலார் ,திரு கார்த்திக் , நெய்வேலி திரு வாசுதேவன், திரு கோபால் மற்றும் உங்கள் பதிவுகளை படித்து ரசித்தவன் . பல அரிய தகவல்கள் , கட்டுரைகள் , ஆவணங்கள் , அபூர்வ விளம்பரங்கள் கண்டு மகிழ்ந்தவன் .

    ஆரோக்கியமான விவாதங்கள் , விளக்கங்கள் என்றுமே பயன் தரும் . ஆனால் தேவை இல்லாமல்ஒருவரை பிடிக்கவில்லை [ அரசியல் அல்லது சினிமா ] என்றால் அவரை பற்றி ஒரு எல்லைக்குள் விமர்சனம் செய்தால் எந்த பாதிப்பும் வராது . எல்லை மீறும் போது மனத்தாங்கல் உண்டாகும் அளவிற்கு சென்று விடுகிறது . இது இருவருக்கும் பொருந்தும் . இனி வரும் காலத்தில் அவரவர் புகழ் பற்றி பதிவிட்டு வந்தால் இரு தரப்பினருக்கும் நல்ல புரிதல் தொடரும் என்பது என் கருத்து .

  6. #1024
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மையம் உறவுகள் அனைவருக்கும், இனிய.... மன்மத புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. Thanks ifohadroziza thanked for this post
  8. #1025
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சகோதரி சாரதா
    என்னை உங்களுக்கு தெரியாது
    நான் ஹப்பில் இணைந்தபொழுது
    தாங்கள் ஹப்பில் வருவது நின்றுவிட்டது
    தங்கள் எழுத்துக்கள் மிகவும் பாரட்டதக்கவை
    மிகவும் ரசித்து வாசித்துள்ளேன்
    நீண்ட நாட்களின் பின்
    தாங்கள் இணையத்தக்கு வந்துள்ளீர்கள்
    மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்
    நடிகர் திலகம் பற்றிய
    தங்களின் புதிய படைப்புகளை
    ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்
    நன்றி


    saradhaa_sn
    Senior Member
    Veteran Hubber


    Mini Statistics

    Join Date 13th July 2005
    Last Activity Today 10:56 AM

    • Avatar



    Last edited by sivaa; 14th April 2015 at 11:16 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #1026
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்து திரி பங்களிப்பாளர்களுக்கும் ,வாசிப்பாளர்களுக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் திரியில் வந்த பிறகு சாரதா அவர்களின் பதிவு வரவே இல்லை. இப்போது வருகை தரும் கட்டியம் வந்து விட்டது. அனைவரின் நன்மதிப்பை பெற்றவர் என்ற வகையில் அவருக்கு எனது சிறப்பான பிரத்யேக வாழ்த்துக்களை தெரிவித்து.அவர் திரிக்கு மீண்டும் வரும் நாளை எதிர்நோக்கி இருப்பேன்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Thanks ifohadroziza thanked for this post
  11. #1027
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by murali srinivas View Post
    ஆர்கேஎஸ்,

    உங்கள் பங்கிற்கு நீங்களும் தரம் தாழ்ந்து வார்த்தைகளை கொட்டியிருக்கிறீர்கள். அவர்கள்தான் முதலில் ஆரம்பித்தார்கள் என நீங்கள் சொல்லலாம். இருந்தாலும் கூட நீங்கள் பொறுமை காத்திருக்கலாம். தேவையற்ற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம். இந்த திரியில் அரசியல் தேவையா என்று கேள்வி கேட்ட நீங்களே அந்த அரசியலை ஆராய்ச்சி செய்திருக்க வேண்டாம். இனி மேலாவது நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட கலையுலக செய்திகளை மட்டும் பதிவிடுங்கள்..

    அன்புடன்
    முரளி சார்

    முதற்க்கண் திரியின் அனைத்து நண்பர்களுக்கும் எந்த வித பாகுபாடும் இன்றி தெரிவிக்கும் இனிய தமிழர் புத்தாண்டு நல வாழ்த்துக்கள். அனைவரும் அனைத்து நலமும் பெற இறைவனோடு கலந்திட்ட நடிகர் திலகம் அவர்கள் அருள் புரிய வேண்டுகிறேன்.

    உங்கள் பதிவை படித்தேன். நான் பதில் புனைந்திருக்க கூடாதுதான். என்ன செய்ய ?

    அதர்மம் தலைவிரித்தாடும்போது தர்மம் தானாக முன்வந்து அதனை அழிப்பதும் இயற்கையாக நடக்கும் ஒரு சம்பவம்தானே. அதுபோல இதுவும் நடந்துவிட்டது...! வருந்துகிறேன்..நீங்கள் வருந்தியதர்க்காக மட்டும் !

    நிச்சயம் கட்டுபடுத்திகொள்ள முயற்சிக்கிறேன். ஆனால் திரும்பவும் ஆசியா நாடுகளில் ஏதாவது ஒரு மூலையில் இருந்து அநியாயத்திற்கு ஆதரவான தவறான குரல் வரும்பட்சத்தில் ...எப்படி கட்டுபடுத்திகொள்வது சார்..

    விளக்கின் ஒளியில் நல்ல புத்தகங்களை படித்து அறிவுபசியும் ஆறலாம்...அல்லது அந்த ஒளியில் இருந்து ஒரு தீக்குச்சியை பற்றவைத்து குடிசையும் எரிக்கலாம்....அவர் அவர்கள் மன நிலை பொறுத்த விஷயமாகிறது.

    நடிகர் திலகத்தை critic என்ற பெயரில் போர்வையில் எவன் வசைபாடினாலும் எனது இசையிலிருந்து மட்டும் நிச்சயம் தப்ப முடியாது. இங்கிருப்பவராக இருந்தாலும் சரி...என்கிருப்பவராக இருந்தாலும் சரி..!

    காரணம் ! நடிகர் திலகம் அவர்களை வசை பாடும் வாய்கள் நடுநிலை கடைபிடிக்காதவை. ஆகவே..அவர்களை தாலோலிப்பது கடினமாகிறது. !

    மூட்டிவிடும் நாரத குணம் கொண்டவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி ஆள கற்றுக்கொண்டு தம்முடைய வரையறைக்குள் இருந்தால் எனது இசை இசையாக இருக்கும், இல்லையென்றால் வசையாக மாறாமல் என்ன செய்ய முடியும் சார் ..!

    என் பதிவு மற்றவர் பதிவினை பொறுத்து அமைவதே. நடிகர் திலகம் அவர்களை, அவர் ரசிகர்களை மறைமுகமாக தாக்கி எழுதாமல் இருக்கும் வரை இந்த கிரணின் கதிர்கள் அவர்களை தாக்காது ! இது என்னுடைய வாக்கு !

    Rks
    Last edited by RavikiranSurya; 14th April 2015 at 12:10 PM.

  12. Likes ifohadroziza liked this post
  13. #1028
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2008
    Location
    BANGALORE
    Posts
    211
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மற்றும் நமது திரி நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
    TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM

  14. Thanks ifohadroziza thanked for this post
  15. #1029
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


  16. Thanks ifohadroziza thanked for this post
  17. #1030
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர்கள் திரு.ராகவேந்திரா சார், திரு.கோபால், திரு.முரளி, திரு.ஆர்.கே.எஸ்., திரு.கல்நாயக், திரு.சின்னக்கண்ணன், திரு.கோபு, மரியாதைக்குரிய பெரியவர் திரு.சுப்ரமணியம் ராமஜெயம், திரு.சிவா, திரு.சிவாஜி செந்தில், திரு.செந்தில்வேல் சிவராஜ், திரு.ஜோ, திரு.டிசிஎஸ், திரு.டிஏசினிமா, திரு.சதீஷ், திரு.சுந்தராஜன், திரு.சந்திரசேகர், திரு.ஹரீஷ், (நினைவுக்கு வந்தவரை கூறியிருக்கிறேன். பெயர்கள் விடுபட்டவர்கள் மன்னிக்கவும்) உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    திரு.முரளி, உங்களுக்கு நேற்று இரவே மக்கள் திலகம் திரியில் பதில் அளித்திருந்தேன். பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இருந்தாலும், திரு.சந்திரசேகர் நேற்று ஒரு இமெயில் பதிவிட்டிருந்தார். அதில் திரு.வேணுகோபால் என்பவர் இந்த திரியை மட்டுமே படிப்பதாக கூறியிருந்தார். அதுபோல, இந்த திரியை மட்டுமே படிப்பவர்கள், என் மீதான உங்கள் குற்றச்சாட்டை பார்த்து விட்டு என்னை தவறாக நினைக்கக் கூடாது என்பதற்காக, எனது விளக்கத்தை இங்கேயும் பதிவிடுகிறேன். அதை கீழே தருகிறேன். நன்றி.
    ------------------

    நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

    சென்ற வாரம் கோபால் எழுதிய பதிவுகளை கண்டிக்கவில்லை என்று நானும் திரு.செல்வகுமார் சாரும் கூறியதை குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது ஒரு உதாரணம் அவ்வளவே. கருணாநிதி பற்றி எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று திரு.செல்வகுமார் கூறியதாக குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் அப்படி சொல்லவில்லை. அதே நேரம், நண்பர் திரு.ஜோ கூறுவது போல திராவிட இயக்கங்களை பற்றி மிகக் கடுமையான விமர்சனங்களை உங்கள் திரியில் வைத்துக் கொண்டே கருணாநிதி பற்றி மக்கள் திலகம் திரியில் உள்ள விமர்சனங்களை நீங்கள் கேள்வி கேட்பது என்ன நியாயம்? அதை நீங்கள் தடுக்கலாமே?

    என் பதிவுகளில் இருந்த சில முரண்களை சுட்டிக் காட்டியபோது.. என்று கூறியிருக்கிறீர்கள். மாற்றிச் சொல்கிறீர்கள் திரு.முரளி. உங்கள் பதிவுகளில் உள்ள முரண்களைத்தான் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

    திரு.மணியனையோ, திரு.தாமரை மணாளனையோ நீங்கள் விமர்சிப்பதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், அந்தப் பிரச்னையில் தேவையில்லாமல் புரட்சித் தலைவரை இழுக்கிறீர்களே? என்றும் ‘மற்றவர்களை பயன்படுத்திக் கொள்வதில் புரட்சித் தலைவர் கைதேர்ந்தவர் என்றும், இன்னும் ஒரு சிவாஜி படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டால் அவமானப்பட்டு விடுவோம் என்று நினைத்த எம்.ஜி.ஆர்.......’ என்றும் தேவையில்லாமல் புரட்சித் தலைவரை இழுக்கிறீர்களே? என்றும் கேட்டிருந்தேன். ‘அவமானப்பட்டு விடுவோம்’ என்று புரட்சித் தலைவர் உங்களிடம் சொல்லியிருக்க வாய்ப்பில்லாதபோது ஏன் தவறான கருத்தை விதைக்கிறீர்கள்? என்றும் கேட்டிருந்தேன்.

    அந்தக் கட்டுரையில் சக்தி கிருஷ்ணசாமியும் மணியனும் லொகேஷன் பார்க்க வெளிநாடு புறப்பட்டு சென்றனர் என்றும் கூறியிருந்தீர்கள். அது சக்தி கிருஷ்ணசாமி அல்ல. சித்ரா கிருஷ்ணசாமி என்றும் உங்கள் முரண்பாட்டை நான்தான் சுட்டிக் காட்டினேனே தவிர, நீங்கள் எனது முரண்பாட்டை சுட்டிக் காட்டியதாக கூறுவது சரியல்ல.

    மதுரை மாநாட்டில் புரட்சித் தலைவர் பேசியதை பற்றி நீங்கள் குறிப்பிட்டதற்கு, நான் பதில் சொன்னேன். அப்போது கருணாநிதி எந்த அளவுக்கு கடுமையாக பேசுவார் என்று காட்டுவதற்காக குறிப்பிட்டேன். நான் என்ன சொன்னேன் என்பது திரு.வாசு சாருக்கும், திரு.ராகவேந்தர் சாருக்கும் தெரியும். அதனால், விஷயத்தை விளக்க விரும்பவில்லை. அவர்கள் நல்லவர்கள். திரு.சிவாஜி கணேசன் அவர்களை பற்றி பிறர் தவறாக சொன்னால் துடித்துப் போவார்கள். அதனால் அவர்கள் மனம் புண்படக் கூடாதே என்றும் என்னை தவறாக நினைக்கக் கூடாதே என்றும் மன்னிப்பு கோரினேன்.

    நீங்கள் புரட்சித் தலைவரை என்ன வேண்டுமானாலும் சொல்வீர்கள். அதற்கு நாங்கள் காரண, காரியங்களோடு பதில் மட்டும் சொல்ல வேண்டும். உங்களை திருப்பி கேள்வியே கேட்கக் கூடாது. இல்லையா?

    ரஷ்ய மை பற்றி பெருந்தலைவர் குறிப்பிட்டதை கூறியிருக்கிறீர்கள். அப்போது தெரிந்து கொண்டேதான் மீண்டும் தவறான கருத்தை பதிவு செய்திருக்கிறீர்களா? ரஷ்ய மையால் வந்த வாழ்வு என்று சொல்லியிருக்கிறீர்கள். 1971-ம் ஆண்டு அமைந்த ஆட்சியே கள்ள ஓட்டால்தான் அமைந்தது என்று கூறுகிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

    நான் உங்களை பழித்தேன் என்று கூறுவது திசை திருப்பும் முயற்சி. நான் உங்களை என்ன சொல்லி பழித்தேன்? அவமானப்பட்டு விடுவோம் என்பதை உணர்ந்த எம்ஜிஆர் .... என்றெல்லாம் தவறாக எழுதாதீர்கள். இனியாவது அப்படி எழுதாதீர்கள் என்று ஆதாரத்தோடு கூறினேன். இது பழித்தலா? உங்களை நான் பழிக்கவே இல்லையே? என்ன பழித்தேன்?

    அப்படி நீங்கள் உங்களை நான் பழித்ததாக நினைத்தால் மன்னிக்கவும். எல்லாரையும் மதிப்பவன் நான். புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •