Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler 1 : Train fight scene : NT Vs Sean Connery! (Sorkkam Vs From Russia with Love)

    சி க Vs சீ கா (சிவாஜி கணேசன் Vs சீன் கானரி ): ரயில் பெட்டி சண்டை
    நடிகர்திலகம் சிவாஜிகணேசனும் ஒரிஜினல் ஜேம்ஸ் பாண்ட் சீன் கானரியும் ஒரு சில அளவீடுகளில் கிட்டத்தட்ட ஒரேமாதிரி சாதனையாளர்கள் !!குறிப்பாக நடையின் கம்பீரம் உடையின் மிடுக்கு வசன உச்சரிப்பும் உடல்மொழி பாவங்களும் !!

    நடிப்பின் பரம்பொருள் நடிகர்திலகம்! இந்த உலகம் இருக்கும்வரை ஜேம்ஸ் பாண்ட் என்றாலே சீன் கானரிதான் !

    இருவரின் காவியப் படங்களும் மறுவெளியீட்டு மதிப்புள்ளவை. நடிகர்திலகத்துக்கு கர்ணன்...சீன் கானரிக்கு கோல்டுபிங்கர்!

    1982ல் கோல்டுபிங்கர் கோவை ரெயின்போ திரையரங்கில் நான்காவது மறுவெளியீடு கண்டபோது 65 நாட்கள் தினசரி 3 காட்சிகளாக ஓடி வசூல் சாதனையில் கோவையை பிரம்மிக்க வைத்தது!!(மூன்றாவது மறு வெளியீட்டில் யு ஒன்லி லிவ் டுவைஸ் 42 நாட்கள், ஆறாவது மறு வெளியீட்டில் தண்டர்பால் 35 நாட்கள்)
    நடிகர்திலகம் தங்கசுரங்கம் படத்தில் சீன் கானரியின் இன்ஸ்பிரேஷனில் துப்பறிவாளராக ஆக்ஷனில் அசத்தியிருப்பார்!

    சொர்க்கம் படத்தில் இடம்பெற்ற ரயில்பெட்டி சண்டை/சிவந்த மண் ஹெலிகாப்டர் சேஸ் ஆகியவை ப்ரம் ரஷ்யா வித் லவ் படத்தில் இடம்பெற்ற சீன் கானரி சண்டைக்காட்சிகளின் விறுவிறுப்பான தழுவலே!!
    சீன் கானரி உடல் பலத்தில் தனக்கு நிகரான ஒரே ஒரு வில்லனை (Robert Shaw) சமாளிக்கையில் சிவாஜிகணேசன் இரண்டு அடியாட்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதே !




    Last edited by sivajisenthil; 24th May 2015 at 09:05 AM.

  2. Likes KCSHEKAR, Russellmai, Georgeqlj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •