Page 88 of 401 FirstFirst ... 3878868788899098138188 ... LastLast
Results 871 to 880 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #871
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    மறுபடியும் தில்லானா..
    -----------------------
    மறுபடியும் ஓர் நன்றிப் பதிவு..

    https://www.facebook.com/photo.php?f...9911407&type=1


    "கலியுக நந்தி,கோடையிடி
    முத்துராக்கண்ணன்
    ஒரு தவிலு."-என்றதும்
    மேள முழக்கத்துடன்
    காட்டப்படும்
    அமரர் பாலையாவின்
    குலுங்கும் மார்புகள் தவிர
    படத்தில் வேறு
    கவர்ச்சி கிடையாது.

    அர்த்தமற்ற
    மசாலாக்கள் கிடையாது.

    அழகழகாய் பெண்களுண்டு.
    அணுவளவும்
    ஆபாசம் கிடையாது.

    இசையுண்டு.
    காதுகளுக்கு
    ஆபத்து கிடையாது.

    காதல் உண்டு.
    காமம் கிடையாது.

    இதில் வரும்
    நாகேஷ் போல
    சிரிப்பு மூட்டுகிற
    வில்லன்
    எந்தப் படத்திலும்
    கிடையாது.

    நம்பியார் இருக்கிறார்.
    கை பிசைந்து,
    முகம் உருட்டும்
    கெட்டதனம் கிடையாது.

    நாட்டியப் பேரொளியின்
    நடனப் பாதங்கள்
    வேறெவர்க்கும்
    கிடையாது.

    நடிகர் திலகம்-
    நாதஸ்வரம் போல.
    அவரின்றி
    இந்தப் படமே
    கிடையாது.

    நம்
    இதயத் திரையில்
    அடிக்கடி ஓடும்
    "தில்லானா
    மோகனாம்பாள்"
    திரைப்படத்தை,
    இன்று
    இன்னுமொருமுறை
    ஓட விட்ட
    "சன்" தொலைக்காட்சிக்கு
    நன்றி சொல்லாவிடில்..
    எனக்கு
    மோட்சமே
    கிடையாது.

    Thanks: https://www.facebook.com/aathavan.svga

  2. Likes KCSHEKAR, Gopal.s, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #872
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    முகநூலில் நான் பதிந்தது ...

    சன் டிவியில தில்லானா மோகனாம்பாள் பார்த்தோமா . சும்மா பாமரத்தனமா சிவாஜி கணேசன் சூப்பரா நடிச்சிருக்கார்ன்னு சொல்லக்கூடாது . சொல்லிட்டா பாமரனுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமப் போயிடும் . அதனால ரூம் போட்டு யோசிச்சு ., சிவாஜி கணேசன் வாசிக்கும் போது மூணாவது வரிசையில் நாலாவது உக்கார்ந்து காது குடைஞ்ச ஒருவரின் உடல் மொழி அபாரம் . சிவாஜியெல்லாம் அப்புறம் தான் -ண்னு அள்ளிவிட்டா அவனவன் என்ன ஒரு நுண்ணிய ரசனையடா என மெர்சலாயிடுவான் 

  5. #873
    Junior Member Junior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Sri Lanka
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு பதிவை புரிந்துக் கொள்ளாமல் பதில் சொல்வது என்பது வேறு. ஆனால் புரிந்துக் கொண்டும் தனக்குப் பிடிக்காத நபர் எழுதியிருக்கிறார் என்ற காரணத்திற்க்காக அதை திரித்து வேறு அர்த்தம் வரும்படி வியாக்கியானம் செய்வது என்பதெல்லாம் ரொம்ப பழைய டெக்னிக். அதை இங்கே முயற்சிக்க வேண்டாம்.

    இந்த திரியில் தங்களுடைய hidden agenda-வை பிரயோகிக்க நினைக்கும் அனைவருக்கும் இது பொருந்தும். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி!

    அன்புடன்

    முரளி
    Last edited by Murali Srinivas; 7th April 2015 at 09:41 AM.

  6. #874
    Regular Hubber Irene Hastings's Avatar
    Join Date
    Oct 2007
    Posts
    158
    Post Thanks / Like
    Tamil explorer.com



    'தில்லானா மோகனாம்பாள்'' படத்தில் உண்மையாக நாதஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான்களான எம்.பி. என். சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள்.
    அவர்களில் இளையவரான பொன்னுசாமியை பத்தாண்டுகளுக்கு முன்பு சந்தித்தபோது எடுத்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்:
    ''தில்லானா மோகனாம்பாள் ' படத்திற்கு நாங்கள் தான் நாதஸ்வரம் வாசிக்கப் போகிறோம் என்று முடிவானதும் ஒன்றைத் தீர்மானமாகச் சொன்னார். ''நாதஸ்வர இசை ரிக்கார்டிங் நான் இல்லாம நடக்கக் கூடாது'' என்று சொல்லிவிட்டு கே.வி.மகாதேவன் குழுவோடு ரிக்கார்டிங் நடக்கும்போது கூடவே இருப்பார் சிவாஜி. நாதஸ்வரத்தை
    நாங்கள் வாசிக்கிறபோது எங்களுடைய முகபாவங்கள், அழுத்தம் கொடுக்கிற விரலசைவு, நாதஸ்வரத்தை நாங்கள் தாங்கிப் பிடிக்கிற போக்கு இவற்றையெல்லாம் நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். படத்தைப் பிறகு பார்த்தபோது தான் அவருடைய கவனிப்பின் அர்த்தம் புரிந்தது.
    சென்னையில் இருபது நாட்களுக்கு மேல் ரிகர்சல் நடந்தது.
    ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் ரிக்கார்டிங். நகுமோ, தில்லானா, ஆயிரம் கண் போதாது, நலந்தானா என்று பலவற்றை எடுத்திருந்தோம்.
    ஒரு சமயம் ரிகர்சல் ஒரு பக்கம் நாங்கள். இன்னொரு புறம் சிவாஜி, ஏ.விஎம்.ராஜன்,பாலையா, சாரங்கபாணி குழுவினர்.
    நாங்கள் வாசிக்க எதிரே அவர்கள் வாசிக்கிற மாதிரி அபிநயிக்க வேண்டும்.
    ''எப்படி இருக்கு?'' என்று எங்களிடம் கேட்டார் சிவாஜி.
    '' நீங்க தான் ஒரிஜினல். வாசித்த நாங்கள் நகல்ன்னு சொல்ற அளவுக்கு நீங்க நடிச்சிட்டீங்க'' என்று நாங்கள் சொன்னதும் சிவாஜிக்கு மகிழ்ச்சி.
    பிளாட்டிங் பேப்பர் மாதிரி எங்களுடைய முகபாவங்களைப் பார்வையிலேயே உறிஞ்சிவிடுவார். நாதஸ்வரத்தை அழுத்தி வாசிக்கும்போது கழுத்து நரம்பு புடைப்பதைக் கூட அழகாகப் பண்ணியிருப்பார்.
    பாலையா அண்ணன் எங்கள் குழுவில் இருந்த தவில்காரரிடம் வாசிக்கவே கற்றுக் கொண்டு தவிலை எங்களுக்கு வாசித்தே காண்பித்தார். படத்திலும் அமர்க்களப்படுத்திவிட்டார்.
    அவ்வளவு அற்புதமான கலைஞர்கள்!''
    லைக் செய்யுங்கள் Tamilexplorer.com
    நன்றி என்.சொக்கன் .
    Visit :Tamilexplorer.com

  7. Likes kalnayak, KCSHEKAR liked this post
  8. #875
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. Likes Russellmai, eehaiupehazij liked this post
  10. #876
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் பாத்திரமொன்றிய அபார நடிப்பிற்கும் நாட்டிய பேரொளியின் நடன திறமைக்கும் நடுவே நமது மனதில் ஊடுருவும் துணைப்பாத்திரங்களில் மனோரமாவின் வெகுளித்தனம் மிக்க ஜில்ஜில் ரமாமணி பாத்திரம் குறிப்பிடத்தகுந்ததே. அவர் தோன்றும் காட்சிகளில் நடிகர்த்திலகமே சற்று ரிலாக்ஸ் மூடுக்கு வருவதுபோல் தோன்றுகிறது. கள்வனின் காதலி திரைக் காவியத்தில் சுறுசுறுப்பாக பட்டையை கிளப்பிய தனது சதாரம் நாடக ஆடல் பாடலை மனோரமா மீள்பதிவு செய்வதை எப்படி ரசிக்கிறார் நடிகமாமன்னர்!!
    https://www.google.co.in/url?sa=t&rc...w72HfL10d0B8Ew

    Last edited by sivajisenthil; 7th April 2015 at 03:04 PM.

  11. Likes Russellmai, KCSHEKAR liked this post
  12. #877
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Enga Mama

    Friends,

    Yesterday was watching Enga Mama songs and enjoying each scene of NT, what a fresh look and after watching so many times still these songs look so fresh and enjoyable. I will be posting the NT clips which I always enjoy watching infinity times.


  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  14. #878
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Enga Mama 2


  15. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  16. #879
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Enga Mama 3


  17. Likes Russellmai, eehaiupehazij liked this post
  18. #880
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    Enga Mama 4


  19. Likes Russellmai, eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •