Page 356 of 401 FirstFirst ... 256306346354355356357358366 ... LastLast
Results 3,551 to 3,560 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #3551
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Last edited by Yukesh Babu; 8th July 2015 at 11:10 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3552
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. Likes J.Radhakrishnan, Russellmai liked this post
  5. #3553
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. Thanks ifohadroziza thanked for this post
  7. #3554
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  8. Likes Russellmai liked this post
  9. #3555
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  10. Likes Harrietlgy, Russellmai, KCSHEKAR liked this post
  11. #3556
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  12. Likes Harrietlgy, Russellmai, KCSHEKAR liked this post
  13. #3557
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  14. Likes Harrietlgy, Russellmai, KCSHEKAR liked this post
  15. #3558
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  16. Likes Harrietlgy, Russellmai, KCSHEKAR liked this post
  17. #3559
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    மெல்லிசை மன்னர் பூரண குணமடைந்து இசைப்பணி தொடர்ந்திட இறைவனை வேண்டுகிறோம்


  18. Thanks Russellbpw thanked for this post
    Likes Russellmai, KCSHEKAR liked this post
  19. #3560
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 28 - நவராத்திரி



    எந்த காரியமானாலும் நாம் இறைவனை வணங்கித் தொழுது விட்டுத் தொடங்குவோம். முடிவில் நன்றி சொல்வோம். ஆனால் இங்கு இறைவனுக்கு நன்றியுடன் நாம் தொடங்குகிறோம். அதன் காரணத்தை நான் சொல்லவும் வேண்டுமோ..

    எவ்வளவோ குறைபாடுகளோடு மனிதனை இறைவன் படைக்கிறான். இதில் மிகவும் குறிப்பிட வேண்டியதொன்று, விழித்திறனின்மை அல்லது பார்வையின்மை. எத்தனையோ பார்வையற்றோர் தங்களுடைய மாற்றுத் திறன்களின் மூலம் பார்வையின்மையைப் பல்வேறு வகைகளில் மறக்கின்றனர். ஈடு செய்து கொள்கின்றனர். ஆனால் ஒரே விஷயத்தில் மட்டும் அவர்கள் மேல் நமக்கு நிச்சயமாக ஒரு பச்சாதாப உணர்வும் இறைவனின் மேல் கோபமும் ஏற்படும். அது...

    தமிழகத்தின் பெருமை, தரணி போற்றும் அற்புதம், இந்த நடிகர் திலகத்தின் நடிப்பைக் காண்பதற்காகவேணும் இறைவா அவர்களின் பார்வையைத் தந்து விட்டிருக்கக் கூடாதா என்று இறைவனிடம் உரிமையான கோபமும் வேண்டுதலும் உண்டாகும்..

    இப்போது நாம் காணும் இக்காட்சி இந்த கோபத்திற்கு ஓர் நியாயமான காரணத்தைத் தானாகவே உண்டாக்கி விடும்.

    இருந்தாலும் அந்தக் கோபத்தை விழித்திறனற்றோருக்கென ஒதுக்கி விட்டு. நமக்கு பார்வைத்திறனளித்தன் மூலம் நடிகர் திலகம் என்னும் உன்னதக் கலைஞனின் சிறப்பை அணுஅணுவாக ரசிப்பதற்கு விழிகளையும், அதை உணர்வதற்கு இதயத்தையும் அளித்த இறைவா உனக்கு கோடானு கோடி நன்றி.



    தான் காதலிக்கும் வாலிபனே தனக்கு மணமகனாக வரப்போகிறான் என்பதை அறியாமல் தன் தந்தை மேல் கோபம் கொண்டு வீட்டை விட்டுச்செல்லும் ஓர் இளம் பெண் ஒன்பது இரவுகளைத் தாண்டி இறுதியில் வீட்டுக்கு பத்திரமாக வந்து சேர்வதும், அவள் காதலனே மணமகனாக வருவதைக் கண்டு ஆனந்தம் அடைவதும் அந்த ஒன்பது இரவுகளில் அவள் சந்திக்கும் அனுபவங்களின் சுவையான தொகுப்பே நடிகர் திலகத்தின் நூறாவது திரைக்காவியமான நவராத்திரி என்பதும் மக்கள் அறிந்த விஷயம்.

    அந்த ஒன்பது பாத்திரங்களும், ஒவ்வொன்றுமே தனித்தனியாக முனைவர் பட்டத்திற்கான ஆய்விற்குத் தகுதியுடையவை. நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் அவர் நடித்த பாத்திரங்களே அவ்வாறென்றால், அவருடைய உயர்வு எவ்வளவு உச்சத்தில் இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

    அள்ள அள்ளக் குறையாத நடிகர் திலகத்தின் நடிப்பு என்னும் அந்தத் தேனமுதில் ஒரு துளியினை, இந்த அற்புதத்தின் மேன்மையாக இங்கு நாம் பருக இருக்கிறோம்.

    தொடக்கமாக நவராத்திரி திரைக்காவியத்தில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களையும் நினைவுறுத்திக்கொண்டு இப்பதிவினைத் தொடங்கலாம் என எண்ணுகிறேன். கீழ்க்காணும் சுட்டியில் நவராத்திரி திரைக்காவியத்தில் பங்காற்றிய கலைஞர்களைப் பற்றிய விவரங்களைக் காணலாம்.

    http://www.mayyam.com/talk/showthrea...=1#post1144976

    ***

    அற்புதத்திற்கோர் அற்புதராஜ்




    காட்சிப்படி நாயகியின் பெயர் நளினா (சாவித்திரி). நாயகன் கோடீஸ்வரன் அற்புதராஜ் (நடிகர் திலகம்). லல்லி அற்புதராஜின் ஒரே மகள் (குட்டி பத்மினி).

    நளினா கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயல்வதாக காட்சி தொடங்குகிறது.
    தந்தையிடம் தன் முடிவை எண்ணி வருத்தப்படவேண்டாம், மன்னித்து விடுங்கள் எனக் கூறியவாறு கிணற்றில் குதிக்க எத்தனிக்கிறாள் நளினா. கையுறையுடன் ஒரு கரம் அவள் கரத்தைப் பற்றியிழுத்து அவளைக் காப்பாற்றுகிறது.
    .....இந்தக் கையைப் பார்த்தவுடனேயே அரங்கம் இரண்டு பட்டு விடும். இங்கேயே துவங்குகிறது நடிகர் திலகத்தின் சாம்ராஜ்ஜியம். கையுறைக்கே கைதட்டல் வாங்குபவர் அவராக மட்டும் தான் இருக்க முடியும்.

    அவர் கைகளில் இருந்து Zoom in ஆகும் காமிராவில் இப்போது அந்த நடிப்புக் கடவுளின் அற்புதமான முக தரிசனம் துவங்குகிறது.
    கண்கள் அவள் கைகளைத் தன் கைகளிலிருந்து விடுவிக்க முயற்சிக்கிறாளா என்பதைப் பார்த்து, தன் கைகள் உறுதியாக பிடித்துக் கொண்டுள்ளன என்பதை உறுதி செய்து கொண்டு அதன் பின்னர் அவள் முகத்தைப் பார்க்க நிமிர்கிறது.

    ..... தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்தை எந்த அளவிற்கு Study செய்ய வேண்டும் என்பதற்கான இலக்கணம்... அவள் தப்பி விடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வை பார்வையாளருக்கு உணர்த்துகிறார்..

    இப்போது அவளை ஏறிட்டுப் பார்க்கிறார்..(விநாடி 0.47)



    ..... இக்காட்சியில் நடிகையர் திலகத்தைக் குறிப்பிடவில்லையென்றால் அது நியாயமாகாது. அவருடைய Reaction ஐப் பாருங்கள். யாரோ எவரோ என திடுக்கிட்டும் சற்றே அச்சமுடனும் அவரைப் பார்க்கிறார். தற்கொலை செய்யப் போனாலும் கூட அந்த நேரத்தில் பெண்மைக்கே உரித்தான அந்த உணர்வை அவ்வளவு அருமையாக பிரதிபலித்திருக்கும் அந்த திறமை நடிகையர் திலகம் சாவித்திரிக்கு மட்டுமே உரித்தானதாகும்.. ..

    இப்போது அந்தப் பெண் அவனை நோக்கி, யார் நீங்க, என்னை ஏன் தடுக்கறீங்க.. விடுங்க.. எனக் கூறியவாறே அவனிடமிருந்து தன் கையை விடுவிக்க முயல்கிறாள். ஆனால் அவரோ தன் பிடியை இன்னும் இறுக்குகிறார். நான் யாருங்கறதை அப்புறம் சொல்றேன்.. என அவளை நோக்கி கேள்விக்களையை வீசுகிறார்.

    ....இப்போது நடிகர் திலகத்தின் முகத்தை கவனியுங்கள். தன் கைப்பிடி இறுகுவதைத் தன் முகத்தில் கொண்டு வருவதை... இக்காட்சி க்ளோஸப்பில் எடுப்பதால் கைகள் ஃப்ரேமில் இடம் பெறாது. அதனைத் தன் மனதில் நிறுத்தி, அந்தக் கைகள் இறுக்குவதைத் தன் முகத்தில் பிரதிபலித்து அந்தப் பாத்திரத்தின் அப்போதைய Reactionஐத் தன் முகத்திலேயே கொண்டு வருகிறார். . ..

    நானும் கொஞ்ச தூரமாக வாட்ச் பண்ணிட்டே தான் வர்றேன். நான் நெனச்சது சரியாப்போச்சு.. நீ ஏன் தற்கொலை செய்துக்கப் போறே... யார் நீ... என அவளைக் கேட்கிறார்.
    அவளோ அதைப் பத்தி சொல்ல வேண்டிய அவசியமில்லே. என்னைத் தடுக்க நீங்க யார் எனக் கோபமுடன் கேட்கிறாள்.
    நான் யாரோ நீ யாரோ அதெல்லாம் என் இருப்பிடத்துக்குப் போய் பேசிக்கலாம். இப்போ என் கூட வா என அவளை அழைக்கிறார். அவளோ திமிறுகிறாள். இப்போது அந்த வார்த்தை...

    புதிய பரிமாணத்தில் இவ்வளவு அழகாக இந்த வார்த்தையை அதுவும் அந்த சந்தர்ப்பத்திற்கேற்றவாறு கூறுகிறார். அவளுடைய திமிறுதலால் அவர் பேசும் போது தடுக்கிறது. இதனைப் புரிந்து கொண்டு அந்த வார்த்தையைக் கூறுகிறார்.
    NON-SENSE...

    அந்த நான் சென்ஸ் வார்த்தையை உச்சரிக்கும் போது கவனித்தால் நான் எனச் சொல்லி விட்டு சற்றே இடைவெளி விட்டு சென்ஸ் என்று முடிக்கிறார்.

    ....திரையரங்கானால் இந்த நான்சென்ஸ் வார்த்தைக்கே இரண்டு பட்டு விடும். கொட்டகை இடிந்து விழும் அளவிற்கு ரசிகர்களின் ஆரவாரம் உச்சமடையும் . ..

    அது மட்டுமா.. அடுத்து கூறுகிறார். என் கையிலே கெடைச்ச பிறகு நீ தப்ப முடியாது. Follow me... என்கிறாற்...

    ....திரையரங்கானால் இந்த Follow me வார்த்தைக்கு மீண்டும் ரசிகர்களின் ஆரவாரம் உச்சமடையும் . ..



    ....இந்த இடத்தில் ஏ.பி.என். அவர்களின் திரைக்கதையமைப்பு பாராட்ட வேண்டும். லேசாக நாயகனைப் பற்றி பார்வையாளர்களிடம் ஒரு விதமான அசூயை உணர்வை இந்த . "என் கையிலே கெடைச்ச பிறகு நீ தப்ப முடியாது" என்கிற வரியில் கொண்டு வருகிறார். பின்னால் வரும் காட்சிகளில் அவர் மேல் அதீதமான மதிப்பும் மரியாதையையும் கொண்டு வருவதற்கான உத்தியாக இந்த வசனத்தை அவர் பயன்படுத்தியிருப்பது மிகவும் சாதுர்யமானது ..

    அவளை விடாமல் தரதரவென இழுத்துச் செல்கிறார். அவளோ விடுங்க விடுங்க என திமிறுகிறாள். Shut up என உரத்த குரல் கொடுத்து காரின் பின் கதவைத் திறந்து அவளை உள்ளே இருத்துகிறார். கதவைச் சாத்தி விட்டுத் தன் உடம்பை ஆயாசத்திலிருந்து விடுவித்துக் கொண்டு தானும் காரில் அமர்கிறார்.. நிமிடம் 01.30ல்.



    ....சும்மாவா கவியரசர் எழுதினார் உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கும் திலகமே.. இந்த வாக்கியத்திற்கு உதாரணமும் ஜீவனும் இந்த ஒரு உடல் மொழியிலேயே வெளிப்பட்டு விடுகிறதே.. யாராவது ஒருவராவது இக்காட்சியில் திரையரங்கில் சும்மா உட்கார்ந்திருப்பாரா என்ன.. நூறாவது படத்தைக் குறைந்தது நூறு முறையாவது பார்க்க வைத்து விடுமே...இரண்டு கைகளையும் விரித்து பக்க வாட்டில் கிட்டத் தட்ட 45 டிகிரி கோணத்தில் கொண்டு செல்கிறார். இரண்டுமே அரை டிகிரி கூட வித்தியாசமில்லாத அளவிற்கு அவ்வளவு துல்லியமாக வைத்துக்கொள்ளும் Perfectionist இவரைத் தவிர வேறு யாருளர்.. பின்னர் இடுப்பை மட்டும் லேசாக இருபுறமும் பக்கவாட்டில் அசைத்தவாறு ஒரு ஜெர்க் தருவாரே ... கடவுளே...இது போதுமய்யா இந்த ஜென்மம் முழுதும் நினைத்து நினைத்து மகிழ.....

    இப்போதும் லேசான அதே சமயம் போலித்தனமான வில்லத்தனத்துடன் அவளை வீட்டுக்குள் தள்ளி கதவை சாத்துகிறார். அவள் அப்போது வெலவெலத்துப் போகிறாள். அவளை நெருங்கி வருகிறார். தொடர்ந்து சொல்கிறார். உனக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். மறுபடியும் சொல்றேன். என் கையிலே கிடைச்சப்புறம் உன்னை வெளியே அனுப்புறதோ அல்லது இங்கேயே இருக்க வெக்கிறதோ என் இஷ்டம். மேற்கொண்டு நீ இதைப்பத்திப் பேசக்கூடாது என்கிறார்.

    ....இப்போது அவருடைய குரலில் உள்ள மாடுலேஷனை கவனியுங்கள்.. வார்த்தைப் பிரயோகத்தில் உள்ள அந்த கடுமை அந்த கதாபாத்திரத்தின் பிடிவாத்த்தை வலியுறுத்துவதையும் அந்த ஆளுமையை பிரதிபலிப்பதையும்.. ஆனால் அதையும் மீறி அவருடைய உள்மனதில் அந்தப் பெண்ணை அந்த அளவிற்கு கடுமையாக நடத்தினால் தான் அவளை அப்போதைக்கு அங்கு இருத்தி காப்பாற்ற முடியும் என்கின்ற அந்த மனிதாபிமான உணர்வையும் அந்த வார்த்தைப் பிரயோகத்தில் நுழைத்திருப்பார்.. .....

    ....நடிப்புத் துறையில் வந்திருக்கும் அத்தனை பேருக்கும் ஓர் வேண்டுகோள்.. மற்றும் பாடம்.. தயவு செய்து குரல் திரிபு என்கிற Voice Modulation என்றால் என்ன என்பதை நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் காட்சியில் அவர் ஏற்றிருக்கும் அந்த பாத்திரத்தின் வெளிப்புற உடல்மொழி, உள்மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் இவை இரண்டையுமே இந்தக் காட்சியில் நடிகர் திலகம் இலக்கணமாக வடித்திருக்கிறார். இது ஓர் உதாரணமே. .....

    இப்போது இருவருமே ஒருவரையொருவர் வாதம் புரிந்து கொண்டே உள்ளே நுழைகின்றனர். அவளைப் பொறுத்த வரையில் வெளியே போக முடியாது என்பது தெரிந்து விட்டது. வேறு வழியின்றி உள்ளே செல்கிறார். அதை அந்த நடையிலேயே நடிகையர் திலகம் சாவித்திரி பிரதிபலிப்பதைப் பாருங்கள்..

    பேசிக்கொண்டே தன் கையுறையை கழற்றுகிறார் அவர். தன்னைப் பற்றி அவரிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று அந்தப் பெண் கூற, அதை சொல்லாமல் உன்னை வெளியில் அனுப்பப் போவதுமில்லை என அவர் அந்தக் கண்டிப்பை விடாமல் சொல்கிறார். வேறு வழியின்றி இப்போ நான் என்ன சார் சொல்லணும், கேளுங்க என அந்தப் பெண் கூறுகிறாள்.

    உனக்கு தாய் தகப்பன் இருக்காங்களா.. அவர் கேட்கிறார்...

    ....கழற்றிய கையுறையைக் கொண்டு கையை மேலும் கீழும் ஆட்டியவாறு அவளைக் கேள்வி கேட்கும் தோரணை.. தலைவர் பின்னும் ஸ்டைல்.. தியேட்டர் சும்மா அதிருமில்லே... .....

    உடனே ம்ஹீம்... எனக் கூறியவாறே நகர்கிறார்..

    ....இப்போது அந்த ம்ஹூம்.. வார்த்தைக்கு ஒரு அளப்பரை .....

    மாற்றாந்தாயின் கொடுமையை சகிக்க முடியாமத்தான் நீ தற்கொலைங்கிற முடிவுக்கு வந்தியா என அவர் கேட்கிறார். இப்போது சாவித்திரியின் Reaction அட்டகாசம். சகஜ நிலைக்கு லேசாக திரும்பும் அவர் இதைக் கேட்டவுடன் முகத்தை அலட்சியமாகவும் அருவெறுப்புடனும் வைத்துக்கொண்டு அய்ய்ய்யே... என மறுக்கும் போது ... இன்னொரு சாவித்திரியை நாம் எப்போது பார்ப்போம் என மனம் ஏங்குகிறது...

    உடனே முகத்தில் சற்றே புதிராக வைத்துக்கொண்டு அவர் கேட்கிறார். கல்யாணம் செய்து கொடுத்த இடத்தில் கணவன் ஏதாவது தவறாக நடந்து ... எனக் கூறி அவர் முடிக்கவில்லை.. உடனே அவள் எனக்கு இன்னும் மேரேஜே ஆகலை சார் என்கிறாள்.. இதன் மூலம் அந்தப் பெண் பெரிய இடத்துப் பெண் என்பதை அவளையும் மீறி வெளிப்படுத்துகிறாள். இதுவும் இயக்குநரின் திறமைக்கு சான்று. அதற்கு I See என்கிறார் அவர்.

    அவருக்குள் லேசாக அவள் மீது நம்பிக்கை வைக்கிறது. குரலில் இருந்த கடுமையை சற்றே குறைத்துக் கொள்கிறார். காரணம் கல்யாணமாகாத இளம் பெண் என்கின்ற எச்சரிக்கை உணர்வு.
    ....இப்போது அந்த I See வார்த்தைக்கு ஒரு அளப்பரை. .....

    படிச்சிருக்கியா... அவர்..
    படிச்சிருக்கேன் ... அவள்...

    ஒ...ஒ.... ஆமோதித்தவாறே நகர்கிறார்...

    ....இப்போது அந்த ஒ...ஓ... வார்த்தைக்கு ஒரு அளப்பரை. .....

    பரீட்சையிலே Fail ஆயிட்டதனாலே சில மாணவர்கள் தவறான முடிவுக்குப் போறாங்க... அதைப் போல நீங்க ... எனக் கேட்கிறார்..
    இப்போது அந்தக் கேள்வி முடிவதற்குள்ளாகவே அவள் முந்திக்கொண்டு பதிலளிக்கிறாள். இதென்ன அனாவசியமான கேள்வி.. என்னை விட்டுடுங்க சார் .. நான் போயிடறேன்.. எனத் துடிக்கிறாள் அவள்..

    சரி இனிமேல் அவளிடம் கேட்டு பயனில்லை என்கிற முடிவுக்கு வரும் அவர் பேச்சை மாற்றுகிறார்..
    ..... சரி இனிமேல் அவளிடம் கேட்டு பயனில்லை என்கிற முடிவுக்கு வரும் அவர் பேச்சை மாற்றுகிறார் ... இதை கதையில் சுலபமாக எழுதிவிடலாம்.. திரையில் நடிகரைக் கொண்டு எப்படி சித்தரிப்பது.. இங்கு தான் நடிப்பின் இலக்கணம் பாடம் தருகிறது.. அந்த முகத்தைப் பாருங்கள்.. இந்த வாக்கியம் அப்படியே உருப்பெற்றிருக்கும்.. .....

    உன் பேரென்ன கேட்கிறார்...
    நளினா என்கிறாள் அவள்...

    Beautiful name... என வியக்கிறார் அவர்..

    .....Beautiful name... இந்த இரண்டு வார்த்தைகளுக்குள் அவர் கொண்டு வரும் உணர்வுகள்... அப்பப்பா.. அந்தப் பெயர் அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் அந்த இரண்டு வார்த்தைகளுக்கும் இரண்டு விதமான ராக பாவனைகளோடு லேசாக இசை கலந்து உச்சரிக்கிறார்... வார்த்தைகளுக்குள் இசையை நுழைக்கும் வித்தகரன்றோ...முகத்தைப் பாருங்கள்.. அந்த உணர்வையும் கொண்டு வருகிறார். முகமும் நடிக்கிறது. குரலும் நடிக்கிறது. விழிகளும் நடிக்கின்றன.. .. .....

    இப்போது தான் இயக்குநரும் படத்தொகுப்பாளரும் தங்கள் புத்திசாலித்தனத்தை நுழைக்கிறார்கள். அப்பா எனக் கூப்பிட்டவாறே குழந்தை ஒன்று உள்ளே நுழைகிறது.. சற்றே வியப்பு மேலிட அந்தப் பெண் பார்க்கிறாள்..

    துள்ளிக்குதித்து ஓடிவரும் அந்தப் பெண் குழந்தை அப்பாவிடம் ஓடி வந்து Good evening Daddy என்றவாறே, தன் ஸ்கர்ட்டை இரு கைகளாலும் விரித்தவாறே புன்னகையுடன் விளிக்கிறது. தந்தையின் பாதிப்பு பெண் குழந்தையிடம் இருக்கும் என்ற பழமொழியை மெய்ப்பிக்கிறார் இயக்குநர். குட்டி பத்மினிக்கு இந்த இடத்தில் தியேட்டரில் கைதட்டல் பலமாக்க் கிடைக்கும். உடனே அந்தக் குழந்தையின் அதே ஸ்டைலைத் தந்தையும் செய்து அவளுக்கு தலையை குனிந்து உடலை வளைத்து அழகாக Good evening dear என வணக்கம் செலுத்துகிறார். குழந்தை முத்தமிட தேங்க் யூ டியர் என குழந்தைக்கு நன்றி சொல்கிறார்.

    அப்பா - நீ இன்னும் தூங்கலையா..
    குழந்தை - நீங்க வராம எப்படிப்பா நான் தூங்குவேன்..
    குழந்தை இன்னும் சாப்பிடவில்லை எனப் புரிந்து கொண்டு தந்தை கேட்கிறார்.
    அப்ப நீ இன்னும் சாப்பிடலையா..
    குழந்தை - நீங்க இல்லாம நான் எப்படி சாப்பிடுவேன்..

    இப்போது அப்பா குழந்தையிடம் மன்னிப்புக் கேட்கிறார்..

    Oh I am so sorry dear...

    நீ கொஞ்ச நாழி இரு... இதோ நான் வந்துடறேன்.. அப்பா குழந்தையை அனுப்புகிறார்.. Gently Gently என்று குழந்தையை நிதானமாகச் செல்லப் பணிக்கிறார்.

    தந்தைக்கும் மகளுக்குமான இந்த உரையாடலை ஒரு விதமான பிரமிப்புடன் பார்க்கிறார் அந்தப் பெண்.

    .....உலகத்திலுள்ள அத்தனை நடிப்புப் பள்ளிகளும் இலக்கணமாக வடிக்க வேண்டிய காட்சி.. இவர்கள் உரையாடலை பிரமிப்புடன் கேட்பதை சாவித்திரி அவர்கள் அவ்வளவு தத்ரூபமாக வெளிக்காட்டியிருப்பார்.. அதுவும் அந்த ஜெண்ட்லி ஜெண்ட்லி என்ற வார்த்தையை நடிகர் திலகம் கூறும் போது நமது சப்த நாடியும் மறந்து போய் வாயைப் பிளந்து திரை முழுதும் அவரையே பார்த்துக்கொண்டிருப்போம் .....

    இப்போது திரும்புகிறார். திரும்பும்போது கை சும்மா இருக்கிறதா.. கையுறையணிந்த கையை மேலும் கீழும் லேசாக ஆட்டியவாறே திரும்புகிறார்.

    .....பல நடிகர்கள், சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக, வலுக்கட்டாயமாக ஏதாவது ஒரு மேனரிஸத்தை செய்வதை நாம் பல ஆண்டுகளாகப் பல படங்களில் பார்த்திருக்கிறோம். அதற்கு ஒரு அர்த்தமும் இருக்காது. ஆனால் அதற்கென்று ஓர் இடம் பொருள் ஏவல் எனச்சொல்லப்படும் CONTEXT வேண்டும் என்பதை ஓர் இலக்கணமாக வகுத்தவர் நடிகர் திலகம். இந்த பாத்திரத்தைப் பொறுத்த மட்டில் அந்த கையுறைக்கும் ஜீவன் தந்திருப்பார். அந்த அற்புதராஜ் பாத்திரத்தைப் பொறுத்த மட்டில் SOPHISTICATED MILLIONARE பாத்திரம். அதில் படபடப்பு அவசரம் போன்ற குணங்கள் ஏதுமில்லாத பெரிய மனிதர். அவருடைய நடை உடை பாவனைகளில் ஓர் நிதானமிருக்கும் நளினமிருக்கும் என வகுத்து அதற்கேற்ப அந்தப் பாத்திரத்திற்கு ஓர் உடல் மொழியை வடிவமைத்துள்ளார் நடிகர் திலகம். அவருடைய ரசிகர்களுக்கு இவையெல்லாம் அத்துப்படி... அந்த ஜெண்ட்லி ஜெண்ட்லி சொல்லும் போது அரங்கமே அதிரும். சும்மா அதிருதில்லே என்பார்களே.. அதற்கு சரியான உதாரணம் இந்த காட்சி.. இந்த பாத்திரம்.....

    இப்போது அடுத்த உடல் மொழி.. இந்த உலகமே தலைகீழாக விழுந்து விடும் அளவிற்கு திரையரங்கை அதிர வைக்கும் ஸ்டைல்..
    நளினா.. அந்தப் பெண்ணை அழைக்கிறார். நீ உன்னைப்பற்றிச் சொல்லாட்டிப்போனாலும் நான் என்னைப் பத்திச் சொல்றேன் கேள். என ஆரம்பிக்கும் கம்பீரம்..

    ..... இடது கையில் உள்ள கையுறையை அனாயாசமாக தூக்கி எறிந்து விட்டு தோளைச்சிலுப்பும் அழகு.......

    இவ்வளவு நேரம் இருந்த அற்புதராஜ், தன் மனைவியின் ஃபோட்டோவை நோக்கி செல்கிறார். சிகரெட்டைப் பற்ற வைத்து, அந்த தீக்குச்சியின் தீயை அணைத்து விட்டு தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

    .....சிகரெட்டைப் பற்ற வைக்கும் ஸ்டைல், அந்த தீக்குச்சியை மேலும் கீழும் ஆட்டி அணைக்கும் லாவகம்.. புகையை விடுவித்தவாறு பேசத் தொடங்கும் தோரணை .......

    இந்த ஊரில் இருக்கும் குறிப்பிட்ட பணக்காரர்களில் நானும் ஒருத்தன்.. இப்போது தான் தன் பெயரைக் குறிப்பிடுகிறார். என் பெயர் அற்புதராஜ். ஆஸ்தி அந்தஸ்து எதுக்குமே குறைவில்லை எனக் கூறியவாறே தன் மனைவியின் ஃபோட்டோவை உணர்வு பூர்வமாக பார்க்கிறார்.

    .....ஆஸ்தி அந்தஸ்து எதுக்குமே குறைவில்லை எனச் சொல்லும் போது அந்த பணக்கார தோரணையைக் காட்ட உடம்பை சிலுப்புவது.. தன் மனைவியைப் பற்றிச் சொல்ல முற்படும் போது தன் சுட்டு விரலால் ஒரு முத்தம் வைத்துக் கொண்டு அதை அவளுடைய ஃபோட்டோவில் முகவாய்க்கட்டையிலும் கன்னத்திலும் வைத்து அதன் மூலம் கணவன் மனைவி இருவருக்குமிடையே இருந்த அன்னியோன்யத்தை வெளிப்படுத்தும் மேதமை... இதற்கும் திரையரங்கம் அளப்பரையைக் காணும்

    அதிலும் இயக்குநர் மற்றும் நடிகர் திலகத்தின் அணுகுமுறை நம்மை வியக்கவைக்கிறது. இல்லற வாழ்க்கையில் நாங்கள் ரெண்டு பேரும் என ஆரம்பிக்கிறார்.. ஏதோ சொல்லப் போகிறார் என எதிர்பார்க்க வைத்து நம்மை ஏமாற்றி விட்டு ம்.ஹூம்..ஹூம்.. என சிரித்தவாறே சொல்லி விட்டு நகரும் போது.. ஆஹா.. கண்ணியமான வகையில் தாம்பத்யத்தை அந்த ம்ஹூம்.. என்ற வார்த்தையிலேயே வெளிப்படுத்தி விட்ட இந்த நடிப்புக் கடவுளை என்னென்பது... .......


    அவ்வளவு நேரம் இருந்த அற்புதராஜ் மறைந்து இப்போது நம் முன் நிற்பது மனைவியைப் பிரிந்து வாடும் கணவன் அற்புதராஜ்...குழந்தையைப் பாராட்டி சீராட்டி வளர்க்கும் பாக்கியத்தை இழந்து என்னையும் அனாதையாகத் தவிக்க விட்டு விட்டுப் போய்விட்டாள் என் மனைவி என்று தன் வேதனையை அவளிடம் பகிர்ந்து கொள்கிறார். கொஞ்ச நாளில் தெய்வமாகவே மாறிட்டாள் என்று அவள் பிரிவைப் பற்றி வருந்தியவாறே சொல்கிறார். அந்தப் பிரிவுத்துயரை ஆற்றிக்கொள்ள அவருக்குத் துணை வருவது அந்த சிகரெட். அந்த புகையை வெளிவிடும் போது அவருடைய மனதில் உள்ள சோகமும் வெளிப்படுகிறது. நானும் மறுமணம் செய்துக்கலை. BUT, எனக் கூறி விட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் பேச்சை மாற்றுகிறார். நண்பர்கள் தன்னை மறுமணம் செய்து கொள்ள சொல்வதையும் அதற்கான வியாக்யானத்தையும் கூறுகிறார். இந்தக் குழந்தையோ ராத்திரி படுக்கையில் எழுந்திரிச்சிட்டு அம்மாவைப் பற்றிக் கேட்பதை மன நெகிழ்வுடன் கூறுகிறார்.

    .....என்ன சார் METHOD ACTING... SUBTLE ACTING... இதையெல்லாம் நடிகர் திலகம் ஏற்கெனவே செய்து காட்டி விட்டார்.. அந்தக் குரலில் அவருடைய பாவங்கள் எப்படியெல்லாம் குழைகிறது பாருங்கள்.. வார்த்தைகளை முடிக்க முடியாமல் தழுதழுப்பைக் குரலில் கொண்டு வரும் போது.. எழுத்தாளர்களின் உரையாடல்கள் அங்கே உயிர் கொண்டு உலவுகின்றனவே.. இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் குரலை மட்டும் கேட்டாலே போதுமே... அதுவும் தன் கையை அந்தக் குழந்தை இருக்கும் திசையை நோக்கி சுட்டிக்காட்டும் போது அவர் முகத்தில் அந்த சோகம் இழையோடுமே... அப்போது கூட உணர்ச்சியின் உச்சத்திற்குப் போய் விடுவார என நினைக்கும் போது நம்மை ஏமாற்றி விட்டு அப்படியே அதை விழுங்கி விட்டு.. என்னை தொல்லைப் படுத்துவாங்க என்பாரே.. ஈரேழு லோகத்திலும் இவரைப் போன்ற நடிகரைக் காண முடியுமா என்ன

    இப்போது திரும்பவும் இயக்குநரின் திரைக்கதை மற்றும் வசன யுக்தி புலப்படுகிறது. சற்றே சஸ்பென்ஸோடு, இதையெல்லாம் யோசனை பண்ணி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் எனச் சொல்லி ஒரு சின்ன PAUSE கொடுப்பார். .அதை உங்கிட்ட சொல்லலாம் என நினைக்கிறேன் சொல்லலாமா என கண்களில் ஒரு விதமான மர்மத்துடன் அவளைக் கேட்கும் பாங்கு.. இப்போது நடிகையர் திலகத்தின் பக்கம் காட்சி திரும்புகிறது. அவள் என்னவோ ஏதோ என்று வேறு மாதிரி நினைத்து அவசர அவசரமாக வேண்டாம் என சொல்ல முற்படுகிறார். இந்த இடத்தில் சாவித்திரியின் கண்களைப் பார்க்க வேண்டுமே.. இந்த உணர்வு அப்படியே பிரதிபலித்திருக்கும்.. அவள் சொல்லச் சொல்ல அதை சட்டை செய்யாமல் அற்புதராஜ் சிகரெட்டுடன் இடது கையை ஸ்டைலாக மேலே தூக்கி ஒரு வீசு வீசி விட்டு NONSENSE என்கிறார். அந்த நான்சென்ஸ் வார்த்தை இடத்திற்கேற்றவாறு மாறுவதைப் பார்த்தால் நடிகர் திலகத்தின் நடிப்பிலக்கணத்தைப் புரிந்து கொள்ளலாம். ......


    நான்சென்ஸ்.. சொல்லப் போறதை வெயிட் பண்ணிக் கேட்கணும் என்றவாறே சிகரெட் கையுடன் அந்தக் குழந்தையைச் சுட்டிக்காட்டி பேசுகிறார். இந்தக் குழந்தை இருக்கும் போது இன்னோரு கல்யாணம் செய்து கொண்டால் என்ன ஆகுமோ என்கிற பல்வேறு கேள்விக்கணைகளைத் தனக்குள் கேட்டுக்கொண்டவாறே அவளுக்கு விடையளிக்கிறார்.

    .... இப்போது அவருடைய உடல் மொழி பேசுகிறது. அவருடைய கைவிரல்கள் பேசுகின்றன.. அவருடைய விழிகள் பேசுகின்றன.. அதனுடைய முடிவு என் குழந்தை மேலே சத்தியமா என்னும் போது கண்களை மட்டும் தாழ்த்தி குழந்தை இருக்கும் பக்கம் பார்ப்பது.. காட்சியில் இவர் மட்டும் பங்கு பெறும் க்ளோஸப் என்பதே தெரியாமல் நம்மை அவர்களெல்லாம் ஃப்ரேமில் இருக்கிறார்போல் ஒரு பிரமையை தன் நடிப்பின் மூலம் உண்டாக்கும் அவருடைய அதீத சக்தி... அதே போல இறைவன் மீது ஆணையிடும் போது கண்களை மட்டும் உயர்த்தி சபதமிடுவது..

    இதற்கப்புறம் தன் மனைவி மீது சத்தியம் இடுவது தான் உச்சக் கட்டம்.. தாம்ப்த்யம் என்றால் என்ன என்பதை அறுதியிட்டு உணர்த்தும் விதம்.. இறைவனுக்கு ஒரு முறை கையை உணர்த்துபவர், அவனுக்கும் மேலே தன் மனைவியை வைத்திருப்பதை, இரு முறை கையை மேலே சுழற்றி உயர்த்திக் காட்டுவதன் மூலம் இரு மடங்கு மரியாதையை அவளுக்குத் தந்து, கடவுளுக்கும் மேலாக அவளை வைத்திருப்பதை ஆணித்தரமாகக் கூறுவது உலகில் நடிப்பின் இலக்கணம் இது தான் என அழுத்தம் திருத்தமாகக் கூறிவிடுகிறது. . ......


    நான் ரெண்டாவது கல்யாணமே செய்துக்கிறதில்லே என முடிவு பண்ணிட்டேன் என அவர் கூறி முடிக்கும் போது..
    அந்தக் கதாபாத்திரத்தின் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் அந்தப் பெண்ணுக்கு மட்டுமில்லை நமக்கும்

    கொண்டே போகிறது..
    து
    ந்
    ர்




    இப்போது சாவித்திரியின் சுற்று. சட்டென்று அவர் முகத்தில் மலரும் அந்த புன்னகை. ஓரு பெரிய ஆபத்திலிருந்து மீண்டவர் எவ்வளவு சந்தோஷப்படுவாரோ அப்படி ஓர் உணர்வை தன் கண்களில் கொண்டு வருவார். அப்படியும் ஒரு சந்தேகம் லேசாக வர, உண்மையாகவா என அவரிடம் கேட்கிறார்.
    சில்லி... ஸ்டைலாக சிரித்தவாறே, அவளை எகத்தாளமாகப் பார்க்கிறார். தான் இவ்வளவு சொல்லியும் இப்படிக் கேட்கிறாளே என அலட்சியமாகப் பார்க்கிறார்.
    ப்ராமிஸாக சொல்கிறேன். உன்னைப் போல ஒவ்வொரு பெண்ணையும் நான் சகோதரியாகத் தான் பார்க்கிறேன் என அவர் சொல்லும் போது, அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்கு அவர் மேல் அபரிமிதமான மதிப்பைக் கூட்டுகிறது.

    இறுதியில் அவள் தன் தவறை உணர்ந்து அவர் காலடியில் விழுந்து மன்னிப்புக் கோருகிறாள்.

    .... தன்னைப் பற்றிக் கூறாவிட்டாலும் அவரைப் பாராட்டத் தயங்கவில்லை அவள். உண்மையிலேயே நீங்கள் அற்புதத்திற்கே ராஜா தான் என அவள் கூறும் போது அரங்கமே அதிருகிறது. புகழ்ச்சி வார்த்தைகள் செயற்கையாக வடிவமைக்கப்படாமல் அந்தப் பாத்திரத்தின் தன்மையை உணர்த்துவதாக அமையும் போது அந்தப் புகழ்ச்சியில் உண்மை வெளிப்படுகிறது. இந்த வகையான புகழுரைகள் உயிர் பெறுவதும் உணர்வு பெறுவதும் நடிகர் திலகத்திற்கு மட்டுமே சாத்தியம்.

    இந்தக் கட்டத்தில் தன் காலில் விழுந்தவளை எழுப்பும் முகமாக, GETUP என நடிகர் திலகம் சொல்லும் போது மீண்டும் திரையரங்கமே அதிரும். அந்த கெட்டப் என்கிற வார்த்தையை முழுமையாகக் கூறிவிடாமல் கெட்ப் என்பது போன்று சுருக்கியவாறு அவர் சொல்லும் போது... மீண்டும் திரையரங்கமே அதிரும் .... இறுதியாக அந்த மேடை மீதிலிருந்து தன் உடலை மீண்டும் சிலுப்பியவாறே அவர் இறங்கி வரும் போது .. அதற்கும் ஓர் அதிர்வலை திரையரங்கில் காத்திருக்கும்.. ..


    இப்போது குழந்தையை அழைத்து அந்தப் பெண்ணை கூட்டிச் சென்று சாப்பிட வைத்துப் படுக்க வைக்கப் பணிக்கிறார் அற்புதராஜ். அவர்கள் செல்லும் திசையைப் பார்த்தவாறே வானொலியை இயக்குகிறார்.

    வானொலியில் ஒரு பெண் குரல் ஒலிக்கிறது..

    பெண்ணென்று பூமி தனில் பிறந்து விட்டால்
    மிக்கப் பிழைகள் இருக்குதடி தங்கமே தங்கம்...

    என்ற வரி ஒலிக்கிறது.

    [ உயிரோட்டமான குரல் - சூலமங்கலம் ராஜலட்சுமி]

    வானொலியை நிறுத்துகிறார்.
    மனம் அதை ஆமோதிக்கிறது. முகம் அதை பிரதிபலிக்கிறது.
    பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் எனக் கூறி அந்தப் பெண் போன திசையைத் திரும்பிப் பார்க்கிறார்...


    ....அந்த வானொலியை இயக்க அவர் போகும் போதே நம் மனம் துடிக்கிறது. அந்த வரிகள் ஒலிக்கும் போது அதை உன்னிப்பாக கேட்கிறார். அந்த வரிகளை இவர் பேச ஆரம்பிக்கும் போது முழுதும் சொல்வார் என்பது போன்ற எதிர்பார்ப்பைத் தருகிறார். ஆனால் நம்மை ஏமாற்றி விட்டு அந்த ஒரு PAUSE கொடுத்து விட்டு அந்த வரிகளைத் தன் முகத்திலேயே வெளிப்படுத்தும் அந்த உணர்வு பூர்வமான காட்சி...அது நமக்குள் ஏற்படுத்தும் தீர்மானம் ..



    மனிதனாக பூமியில் பிறந்து விட்டால்
    சிவாஜி ரசிகனாகப் பிறக்க வேண்டும் தங்கமே தங்கம்
    என மனம் துடிக்கிறது...

    எந்த காரியமானாலும் நாம் இறைவனை வணங்கித் தொழுது விட்டுத் தொடங்குவோம். முடிவில் நன்றி சொல்வோம். ஆனால் இங்கு இறைவனுக்கு நன்றியுடன் நாம் தொடங்குகிறோம். அதன் காரணத்தை நான் சொல்லவும் வேண்டுமோ..


    ....

    நண்பர்களே.. இந்தப் பதிவு மிகவும் நீண்டதாகப் போயிற்று.. ஆனால் நிறுத்த முடியவில்லை. மனம் வரவில்லை. சிரமம் பாராது படிக்க வேண்டுகிறேன்.

    முகநூல் நண்பர் திரு பிரணவமூர்த்தி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இந்தப் பதிவினை அளிக்கிறேன்.
    Last edited by RAGHAVENDRA; 9th July 2015 at 07:21 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •