Page 336 of 401 FirstFirst ... 236286326334335336337338346386 ... LastLast
Results 3,351 to 3,360 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #3351
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    The Stylist Forever
    The Tamil chevalier leaves behind him a kaleidoscope of characters and emotions

    KAMAL HAASAN ON SIVAJI GANESAN


    Sivaji saab is the genetic code embedded in every Tamil actor. Even if we try to be independent, the dna imprint remains. For 48 years, Tamils have been under the spell of Sivaji. He had a large heart—that was his medical problem too. We had almost given up on him in 1993 when the doctors gave him just two years. We took him to France, did everything we could. He survived his heart ailment for 15 years. But for his ill-health, he would have been active even in the last four years.

    Sivaji was style personified—he would not take it off like a shirt.

    He slept in style;
    Woke up in style;
    Came to work in style.

    He was style !

    He was the trendsetter !! .

    And I'm proud to be his descendant.


    My association with him dates back to my childhood. I was about four years old when we met in the studios. Once, he even said how I might have sat on his lap more than his children. He would always be in the studios then. I was the vidushak who would be made to recite Sivaji sir's dialogues on the sets.

    Sivakumar, a fellow-actor, and I used to have sessions where we competed over narrating his dialogues. We would compete over who remembered more. That's the kind of effect he has. Even for the present generation, Sivaji is the man. Upcoming artists are told, "Become an actor like Sivaji." Even for my children, he is the ultimate.

    As for criticism that Sivaji overacted or was loud, why don't these westernised critics look at Akira Kurosawa's films? We have a certain style that is rooted here. We have either actors or non-actors. The Japanese never compromised to suit European tastes and I respect them. So much so that Hollywood went on to adapt/remake Japanese films. This is part of an Asian aesthetic. Sivaji too has to be translated for a western audience.

    For that matter, even the early Chaplin was "loud". And so were Hollywood stars of the early black-and-white era. We are more willing to learn and try hard to appreciate an Elvis Presley but not our own icons. If Elvis spawned a thousand clones in the West, so did Sivaji here. He is our Elvis. He is the King.

    Now, an Indian funeral is itself so different—there's so much emotion, so many tears, such drama. A European funeral is such a contrast. There's great restraint. Even the sorrow is muted. Sivaji's acting is as much a part of our culture. But see how Sivaji in Thevar Magan turns a new leaf. Here, the actor steps out of his era. And Thevar Magan was my kind of salute to a doyen.

    Personally, I can't be critical of Sivaji sir. I have been so close to him and such an admirer, I cannot be alive to his faults, if any. I lose my critical faculties. He's been a goading force, other than a guiding force. I am utterly biased about him and there's no scholar left in me. Sivaji has been such a challenge that it makes an actor ask himself, "What's the use of being born after him?" With Sivaji, you touch base.

    The only thing Sivaji perhaps regretted was that he was not well-read like me. He lacked the vocabulary, he felt. That was his modesty. "I'm just a school dropout," he once said at a function. On the other hand, I have the dubious distinction of having uttered dialogues, even reciting poetry, in Telugu, Malayalam and other tongues. But I cannot read any of these languages. Whereas Sivaji was the master when it came to Tamil. Nobody could match up to him. Once, when I was a child actor, I could not pronounce arisi (Tamil for rice) correctly and he would intone it like me and make fun. He was the master of Tamil diction.

    As a politician, Sivaji failed. He was too straightforward. He never asked for favours, and was not clever or even wise in politics. Sivaji behaved like a king even in politics. I differed with Sivaji's political beliefs, but that would not in any way lessen my regard for him. And whatever their political differences, Karunanidhi and Sivaji made for a great artistic duo. (Karunanidhi scripted Sivaji's debut film Parasakthi and many more.) If one was the mind, the other was the voice.

    The irony is Sivaji gave me an opportunity to rehearse the death scene in real life. After Thevar Magan, where we did a death scene, I received news from Singapore that he had passed away during a function there. I was so shaken and went through such emotions, and I was only a happy fool the next morning to realise that the news was wrong. But this time it was for real.

    (The writer is a renowned actor and filmmaker)
    Last edited by RavikiranSurya; 27th June 2015 at 12:39 PM.

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3352
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வானத்து விண்மீன்களைக் கூட எண்ணி விடலாம். ஆனால் ஜெயா டி.வி.யில் புதிய பறவை ஒளிபரப்பப் படுவதை எண்ணி மாளாது. ஆனால் அத்தனை முறையும் பார்க்க வைக்கும் உன்னதத் திரைக்காவியமன்றோ..

    எங்கே நிம்மதி.... வெறும் பாடல் என்ற வார்தையைத் தூக்கி எறிந்து இனம் புரியா உணர்வை நாடி நரம்புகளில் ரத்த நாளங்களில் செலுத்தும் போதை வஸ்துவன்றோ நடிகர் திலகத்தின் நடிப்பு. இது மிகவும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் போதை வஸ்து. இதற்கு எந்த உலகத்திலும் தடையில்லை. எப்போது வேண்டுமானாலும் செலுத்தலாம். குறிப்பாக திரையரங்குகளில் இந்த வஸ்து செலுத்த்ப்படும் போது அதன் வீரியம் பல்லாயிரம் மடங்கு கூடி அங்கிருக்கும் அத்தனை பேரையும் கட்டிப் போட்டு இழுத்துச் சென்று விடும். நம்மை அவருடைய நடிப்பில் மயங்க வைத்து கிறங்க வைத்து அவருடைய நினைப்பிலேயே மிதக்க வைத்து விடும். அவராக நிறுத்த வேண்டும் அல்லது காட்சி முடிய வேண்டும். இந்த நன்றி கெட்ட தமிழ்நாடே வேண்டாம் நாங்கள் சிவாஜியின் உலகத்திலேயே இருந்து விடுகிறோமே.. எங்களை பூமிக்கு அனுப்பாதே இறைவா என கெஞ்சத் தோன்றும்.

    எல்லாம் முடிந்து பூமிக்குத் திரும்பினால்..

    சே.. திரும்பவும் தமிழ்நாடா.. இந்த நன்றி கெட்ட தமிழனோடா வாழ வேண்டும்.. தமிழின் கலை அடையாளத்தை மதிக்கத் தெரியாதவர்களோடா நாம் வாழ வேண்டும் என்கிற எண்ணத்தைத் தோன்ற வைக்கும். ஆனால்.. உடனே நம் கடமை உணர்வு நம்மைத் தடுத்து விடும். முதலில் நீ உன் பங்கை ஆற்று. உன்னால் முடிந்த வகையில் நடிகர் திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் உன்னை ஈடுபடுத்திக் கொள். மற்றவை தானாக நடந்து விடும்.. என்று உள்ளுணர்வு நம்மைத் தேற்றி உற்சாகப்படுத்தி விடும்.

    இது தான் ஒரு சிவாஜி ரசிகனின் வாழ்க்கைச் சக்கரம்.. சுழன்று கொண்டே இருக்கும்..
    இது தான் சிவாஜி என்னும் கடலின் வாழ்க்கை அலைகள்..ஓயவே ஓயாது...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Thanks eehaiupehazij thanked for this post
  6. #3353
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    படித்தததில் ஒரு பகுதி

    சிவாஜியின் நடிப்பு நிச்சயம் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டதல்ல. மற்றவர்கள் இயல்பாக வசனம் பேசும் காட்சிகளில், அதீத உணர்வுடனும் அழுத்தமான உச்சரிப்புடனும் திரையில் தனிக் கவனம் பெறும் அவர் மீது காத்திரமான விமர்சனங்கள் பல உண்டு. அவற்றையெல்லாம் மீறி, அற்புதமான தன் நடிப்புத் திறனால், பல படங்களின் வெற்றியை உறுதி செய்தார் சிவாஜி. தன்னை விட அதிக வயதுள்ள நாயகர்கள் இளைஞர்கள் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் 13 குழந்தைகளுக்குத் தந்தையாக நடிக்கும் துணிச்சலை வேறு எவரிடமும் எதிர்பார்க்க முடியாது. ‘திருவருட்செல்வர்' தொடங்கி எத்தனையோ வயோதிகப் பாத்திரங்களில் நடிக்கத் தயங்கியதில்லை.

    வேறென்ன செய்ய முடியும்?

    உண்மையில், நடுத்தர மற்றும் சற்றே வயதான வேடங் களில் நடித்தபோது சிவாஜியிடம் கம்பீரமும் மிடுக்கும் கூடியிருந்ததைப் பார்க்க முடியும். ‘தெய்வமகன்' படத்தின் புகழ்பெற்ற அந்த கோரமுக மகன் பாத்திரத்தைவிடத் தந்தை பாத்திரத்தில் வரும் சிவாஜிதான் சிறப்பாக நடித்திருப்

    பார். மகனைப் புறக்கணிக்க நேர்ந்ததால் எழும் குற்றவுணர்ச்சி யும், சமூகத்தின் முன் அவனைத் தன் மகனாக அறிவிக்கத் தயங்கும் போலி கவுரமும் தன்னை அலைக்கழிப்பதை நுட்பமாக வெளிப்படுத்தியிருப்பார். ஒரு காட்சியில், கேமராவுக்கு முதுகைக் காட்டியபடி சிவாஜி விசும்பிக் கொண்டிருப்பார். அப்போது எதிரில் மேஜர் சுந்தர்ராஜன் அசைவற்று அவரையே பார்த்துக்கொண்டு நிற்பார். அதை ஒரு விமர்சனத்தில் இப்படி எழுதியிருந்தார்களாம்: ‘சிவாஜியின் முதுகுகூட நடித்துக்கொண்டிருந்தது. மேஜர் சுந்தர்ராஜன் தேமேயென்று நின்றுகொண்டிருந்தார்’ என்று. பின்னாட்களில் அதைக் குறிப்பிட்டு மேஜர் சுந்தர்ராஜன் சொன்னார், “சிவாஜி நடித்துக்கொண்டிருக்கும்போது அதைப் பார்த்துக்கொண்டு நிற்காமல் வேறென்ன செய்ய முடியும்!”

  7. Likes Harrietlgy, Russellmai liked this post
  8. #3354
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிப்புக் கடலின் நினைவலைகள் NT's Total Recall !

    நடிப்புச் சக்கரவர்த்தியின் ராஜமுத்திரைகள் குறுந்தொடர்

    நடிப்பின் ஓவியர் திலகம் நம் இதயத்தில் செதுக்கிட்ட மனகா(சா)ட்சியின் மாட்சி !! (Ca)scen(o)e Royale ! ராஜ முத்திரைக் காட்சி!!Royal Seal of Acting!

    தான் நடித்திட்ட அனைத்துப் படங்களிலும் நடிப்பில் முத்திரை பதித்து நடிப்பிலக்கணம் இயற்றிய தொல்காப்பியர் நடிகர்திலகம் !!
    ஆனாலும் நடிகர்திலகத்தின் படக்காட்சிகளை அசைபோட்டு ரசித்து ஆனந்திக்கும் வேளையிலும் எல்லாக் காட்சிகளையும் மீறி ஒரு காட்சி நம் இதயம் கவர்ந்த காட்சியாக நமது மனசாட்சியால் அங்கீகரிகப்பட்டு நாம் நிற்கும்போதும் நடக்கும் போதும்...உறங்கும்போதும் நம் மனக்கண்ணில் நிழலாடிக் கொண்டேயிருக்கும் !! அத்தகைய Scene Stealerகளின் தொகுப்பு!!!!


    ராஜமுத்திரை 1 / Royal (Scene) Seal 1 :

    கா..கா... கா.... Crow...Crow....Crow ...../பாடல் காட்சியின் மாட்சி : பராசக்தி (1952)

    புயலாய் சூறாவளியாய் சுழன்றடித்த முதல் படம். நாடகங்களில் பெற்ற அனுபவம் நடிப்புக்கும் உணர்ச்சி மிக்க வசன உச்சரிப்புடன் கூடிய முக பாவங்களுக்கும் கை கொடுத்தது இயற்கையே! ஆனால் இந்தப் புதுமுக இளமைப் புயலுக்கு ஒரு பாடல் காட்சிக்கு உதட்டசைவு தருவது இயற்கையாக அமைந்தது விந்தையே! அதுவும் பாடல் வரிகளைக் கிரகித்துக் கொண்டு பாடகரின் கனமான குரலின் (சிதம்பரம் ஜெயராமனார்!) மாடுலேஷனுக்கேற்ப அலட்டிக்கொள்ளாமல் கலைந்த சுருள்முடி தலையுடன் தீர்க்கமான உருட்டு விழிகளுடன் லேசாக ஸ்டைலாக மடக்கி ஏற்றிவிடப்பட்ட இன் செய்த வெள்ளை முழுக்கை சட்டையுடன் புன்முறுவலுடன் பகிர்ந்துண்ணும் காகங்களுக்கு உணவை சுண்டிவிடும் உற்சாக ஸ்டைலுடன் உதட்டசைவு தந்து இக்காட்சியை கல்வெட்டுக் காட்சியாக நமது இதயத்தில் செதுக்கினார் நடிப்போவிய Leonardo DaVinci சிற்பி நடிகர் திலகம்!!

    சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனம் கூப்பாடு போட்டு குமுறுதுங்க ....காப்பாற்றக் கஞ்சி தண்ணி ஊத்துங்க.....
    இப்பாடல் வரிகளில் ஒரே டேக்கில் நடிகர்திலகத்தின் உடல்மொழி முகபாவனை மாற்றங்கள் ....100 பெர்சன்ட் பாடலுக்கேற்ற உதட்டசைவு....
    என் மனதில் தே(த)ங்கிவிட்ட காட்சி இதுவே !!

    இறுதிக்கட்ட கோர்ட் சீன் வசனப் பிரளயம் நிகழ்ந்த போதும் இன்னும் இக்காட்சியமைப்பின் பிரமிப்பிலிருந்து வெளியேற இயலவில்லையே......!!



    இப்பதிவின் உள்ளடக்கம் முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்துக் கண்ணோட்டமே! கருத்து மாறுபாடுகள் / எண்ணப் பரிமாறல்கள் நடிகர் திலகத்தின் பெருமைக்கு இன்னும் மெருகேற்றும் உரைகற்களாகும் என்று நம்புகிறேன்!
    செந்தில்
    Last edited by sivajisenthil; 27th June 2015 at 06:27 PM.

  9. Likes KCSHEKAR, Russellmai liked this post
  10. #3355
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிப்புக் கடலின் நினைவலைகள் NT's Total Recall !

    நடிப்புச் சக்கரவர்த்தியின் ராஜமுத்திரைகள் குறுந்தொடர்

    நடிப்பின் ஓவியர் திலகம் நம் இதயத்தில் செதுக்கிட்ட மனகா(சா)ட்சியின் மாட்சி !! (Ca)scen(o)e Royale ! ராஜ முத்திரைக் காட்சி!!Royal Seal of Acting!


    ராஜமுத்திரை 2 : பாலும் பழமும்

    உடலும் உயிரும் தந்ததோடு நில்லாது பாலூட்டி சீராட்டி வளர்த்த விதத்தில் அன்னையும் பிதாவுமே முன்னறி தெய்வங்கள்
    ஆனால் ஒவ்வொரு மனிதனின் வெற்றிகரமான வாழ்வியல் சாதனைக்குப் பின்னும் துணை நின்று அவன் வம்சவிருத்திக்கு ஆதாரமாக விளங்கி வாழ்வின் இன்ப துன்பங்களில் சமபங்கு வகிப்பது இறைவன் கொடுத்த வரமான மனைவியே !!
    பெரும்பாலும் ஆணாதிக்கம் தலைதூக்கி நிற்கும் கலாசார வாழ்வமைப்பில் ஆணைச் சார்ந்தே பெண்ணின் பெருமை அமைகிறது !
    அந்தக் கால கட்டத்திலேயே ஆணுக்குப் பெண் சமமே என்ற உயரிய கருத்தை நடிகர்திலகம் வாயிலாக மறக்க முடியாத இந்த நடிப்பின் ராஜமுத்திரைக் காட்சியோட்டத்தின் வாயிலாக மானுடம் கடைப்பிடிக்க வேண்டிய பாடமாக வரையறுக்க இயன்றது
    நோய்வாய்பட்ட மனைவியை குழந்தை போல நடிகர்திலகம் மனதில் சோகத்தையும் விழிகளில் கண்ணீரையும் தேக்கி மனத்தைக் கசிய வைக்கும் நடிப்பு வெளிப்பாட்டில் பேணிக்காக்கும் இக்காட்சி பாலும் பழமும் திரைக்காவியம் வாயிலாக மனதில் ஆழப் பதிந்தது !!நடிகர்திலகத்தின் மிக வித்தியாசமான சால்ட் பெப்பர் சிகையலங்கார தோற்றப் பொலிவு சிரஞ்சீவித்துவம் பெற்றது



    இதே காட்சியமைப்பு பின்னாளில் தங்கபதக்கம் திரைப்படத்திலும் இடம் பெற்றது சுமைதாங்கி சாய்ந்தால் பாடல் மூலம் !!
    Last edited by sivajisenthil; 27th June 2015 at 10:52 PM.

  11. Likes KCSHEKAR, Russellmai liked this post
  12. #3356
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    படிக்காத மேதை பதிவுகளைப் பாராட்டிய அனைத்து நல்லிதயங்களுக்கும் என் மனமார்ந்த சிரந்தாழ்ந்த நன்றி! குறிப்பாக படத்தின் சிறப்பு காட்சிகளை பற்றிய இரண்டாவது பதிவிற்கு அமோக பாராட்டுகளை வழங்கிய அனைவருக்கும் நன்றி! அதில் ஒரு சில விஷயங்களை ஒப்பீட்டு முறையில் எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்த சாரதிக்கும் நன்றி!

    சாரதி அந்த பதிவைப் படித்து விட்டு மற்றொரு விஷயத்தை குறிப்பிட்டு அதை நீங்கள் எழுதியிருக்கலாமே என்றார். அதனால் என்ன இப்போது எழுதி விட்டால் போகிறது என்று சொன்னேன்.

    அவர் சொன்னது என்னவென்றால் ஒரு சில வினாடி அல்லது நிமிட நேரங்களில் பல வித உணர்வுகளை முகத்தில் காட்டுவதில் நடிகர் திலகம் சமர்த்தர். ஆனால் வெகு சில படங்களில் மட்டுமே ஒரே நேரத்தில் விதவிதமான உணர்வுகளை ஒரு சேர வெளிப்படுத்தியிருப்பார். அந்த வெகு சிலவற்றில் படிக்காத மேதை படத்தில் ரங்காராவ் மறைவிற்கு பின் வரும் அந்த காட்சியும் ஒன்று. ஒரே நேரத்தில் திகைப்பு, மறுதலிப்பு, அதிர்ச்சி, சோகம், அழுகை ஆகிய அனைத்தும் அந்த நிமிட நேரத்தில் முகத்தில் வந்து போகும். ஒவ்வொரு முறை படம் பார்க்கும்போதும் இந்தக் காட்சிக்காக காத்திருப்பேன் என்றார் சாரதி.

    உண்மைதான்! நடிகர் திலகத்தைத்தான் எப்படி எப்படியெல்லாம் ரசிக்கலாம் என்பதற்கு நமது ரசிகர்களுடன் பேசினாலே புரிந்துக் கொள்ளலாம்!

    நன்றி சாரதி!

    அன்புடன்

  13. #3357
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Definition of Style 27 & திலக சங்கமம்

    அன்னை இல்லம்




    ஆம், அன்னை இல்லம் என்றால் நம் நினைவுக்கு நடிகர் திலகம் வாழுகின்ற இந்த இடம் தான் நம் நினைவில் உடனே தோன்றுகிறது. அந்த அளவிற்கு நம்முள் கலந்து விட்ட அந்த இல்லத்தின் மேன்மை அவருடைய அந்தப் படத்திற்கும் கிட்டியது சிறப்பன்றோ..



    நடிகர் திலகத்தின் திரைப்பட வரலாற்றில் அன்னை இல்லம் திரைப்படத்திற்குத் தனியிடம் உண்டு. அதே போல் ரசிகர்கள் நெஞ்சிலும் இதற்குத் தனியிடம் உண்டு. குறிப்பாக நடிகர் திலகத்திற்கு ஜோடியாக படங்களில் தேவிகா தான் சிறந்தவர் என்றும் அதுவரை பத்மினியை சிறந்த ஜோடியாக எண்ணியவர்களும் பந்த பாசம் பாவ மன்னிப்பு படங்களுக்குப் பிறகு தேவிகா வசம் சரணடைந்தவர்களும் ஏராளம் (அடியேன் உட்பட).

    இயக்குநர் பி.மாதவன் நடிகர் திலகத்துடன் இணைந்த முதல் படம் அன்னை இல்லம்.
    அப்போதையை கால கட்டத்தில் சென்னையிலேயே உயரமான கட்டிடமான 14 மாடி ஆயுள் காப்பீட்டுத்திட்ட அலுவலக்க் கட்டிடத்தின் உச்சியில் உள்ள தளத்தில் சிவப்பு விளக்கு எரியுதம்மா பாடல் காட்சியின் ஒரு பகுதி படமாக்கப் பட்டது. இது அபூர்வமானதாகும்.
    சென்னை காஸினோ திரையரங்கில் 100- நாட்களைக் கடந்து வெற்றி நடை போட்டது அன்னை இல்லம்.

    இது போன்ற பல சிறப்புகளைக் கொண்ட இத்திரைக்காவியத்தின் கதைச் சுருக்கம்,
    (பாட்டுப்புத்தகத்தில் உள்ளவாறு)


    வாழ்ந்தவன் தாழ்ந்து விட்டால் மீண்டும் அவனால் வாழ முடியாதா?
    இந்த உலகில் கெட்டவர்கள்தான் வாழ்வுச் சக்கரத்தை சுலபமாக உருட்ட முடியுமா?
    கெட்டுப்போன பிறகு, தனக்குத் தானே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன், மற்றவர்களுக்காகவும் பகிரங்கமாக வாழ முடியுமா
    இந்தக் கேள்விகளுக்குக் கிடைக்கும் விடைதான் 'அன்னை இல்லத்'தின் வரலாறு!
    பரமேசன், கௌரி, குமரேசன், ஷண்முகம் - இது கயிலைநாதனின் தெய்வீகக் குடும்பம் அல்ல; கருணையே உருவான ஒரு மனித ஜீவனின் திருக்குடும்பம்!
    'இல்லை' என்போருக்கு இல்லாது என்னாமல், அள்ளி அள்ளிக் கொடுத்தான். இறுதியில் அவனுக்கே இல்லை எனும் பொல்லாத நிலை வந்தது. மனைவியின் பிரசவத்துக்குப் பணம் தேவைப்பட்டது. கொடுத்தவர்களிடம் எல்லாம் கையேந்தினான் - யாரும் கொடுக்கவில்லை. மனம் மாறியது - குணம் மாறியது - கொலைகாரன் என்ற பழியோடு சட்டத்துக்கு பயந்து ஓடினான்.
    வேடனின் வலையிலிருந்து தப்பிய மான் வேங்கையின் விழியில் பட்டது போல் நமது கொடைவள்ளல் ஒரு கொடியவனின் வலையில் சிக்கினான்.
    வருடச் சக்கரம் இருபத்தைந்து முறைகள் சுழன்றது!
    இந்த இடைக்காலத்தில் உலகில் எத்தனையோ மாற்றங்கள்!எத்தனையோ தோற்றங்கள்!பிரிந்து போன எத்தனையோ மனிதர்கள் கூடினர் - கூடியிருந்த எத்தனையோ உயிர்கள் பிரிந்தன! - ஆனால் நம் கொடைவள்ளலின் குடும்பமோ பிரிந்தது பிரிந்தபடியே தான் இருந்தது! அதற்காக உலகம் விடியாமலா போயிற்று? கருவிகள் இயங்காமலா இருநதது? இல்லை - இல்லை!
    அந்தோ ?
    ஒரு கணவன் - மனைவியைப் பிரிகிறான்.
    ஒரு மனைவி - கணவனையும் மகனையும் பிரிந்தாள்.
    ஒரு மகன் - தந்தையையும் தமையனையும் பிரிந்தான்.
    இன்னொரு மகன் - தாயைப் பிரிந்தான்.
    இவர்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக இருக்க வேண்டியவர்கள். ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாமலே இந்த உலகில் அவர்கள் பழகுகின்றனர்.
    தந்தையும் மூத்த மகனும் ஒரு இல்லத்தில்!
    தாயும் இளைய மகனும் இன்னொரு இல்லத்தில்!
    இந்த இரண்டு இல்லங்கள் ஒன்று சேர்ந்தனவா!
    - அன்னை இல்லம் திரைப்படத்தைப் பாருங்கள்
    ராஜாமணி பிக்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி பாசமலர், குங்கும்ம் படங்களை இணைந்து தயாரித்த, மோகன் ஆர்ட்ஸ் மோகன் மற்றும் எம்.ஆர்.சந்தானம் இருவரும் தனித்தனியே பட நிறுவனங்களைத் தொடங்கினர். அதில் எம்.ஆர்.சந்தானம் தொடங்கிய நிறுவனமே கமலா பிக்சர்ஸ். இந்த கமலா பிக்சர்ஸ் முதல் தயாரிப்பே அன்னை இல்லம். முலக்கதையை தாதா மிராஸி எழுதியிருக்க, திரைக்கதையை ஜி.பாலசுப்ரமணியம் அமைக்க, வசனம் ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். தனி ஒளிப்பதிவாளராக நடிகர் திலகத்தின் படங்களில் பி.என்.சுந்தரம் பணிபுரிநத முதல் படம். அன்னை இல்லம் படத்தில் பணியாற்றிய கலைஞர்களைப் பற்றிய முழுவிவரங்களைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.
    http://www.mayyam.com/talk/showthrea...=1#post1135586



    கவியரசரின் பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தைக் கடந்து வாழ்கின்றன என்றால் கூடவே திரை இசைத் திலகத்தின் சிறப்பான இசையும் அதற்கு முக்கிய பங்காற்றியது. நடையா இது நடையா பாடல் எந்த அளவிற்கு மிகப் பிரபலமானதோ, அந்த அளவிற்கு விமர்சனத்தையும் சந்தித்தது. குறிப்பாக அந்தக் கால இளைஞர்கள் பெண்களை கேலி செய்ய இப்பாடலைப் பாடி, பெரும் எதிர்ப்பையும் சம்பாதித்தது பலருக்கு நினைவிருக்கும்.

    ஆனாலும் இரண்டு பாடல்கள் மிகப் பெரும் அளவில் இன்றளவும் புகழ் பெற்று அன்றாடம் வானொலியிலோ தொலைக்காட்சியிலோ ஒலிபரப்ப அல்லது ஒளிபரப்பப் பட்டுத் தான் வருகிறது. அதில் ஒன்று மடிமீது தலைவைத்து என்ற பாடல்.
    இன்னொரு பாடலே இன்றைய விரிவுரைக்கு காரணி. இந்த அளவிற்கு இப்பதிவிற்கு முன்னுரை தரவேண்டியதன் காரணம் பலருக்கு தேவைப்படலாம். இருக்கிறது. எடுத்துக் கொண்ட பாடலின் சிறப்பு அப்படி.

    எண்ணிரண்டு பதினாறு வயது

    சினிமா ... திரையரங்குகளில் புரொஜக்ட்ரில் 27 ஃப்ரேம்ஸ் ஒரு விநாடிக்கு என அசையும் அளவிலானது. அதே சினிமா, இன்றைய நவீன யுகத்தில், இணைய தளங்களில் மற்றும் நெடுந்தகடு சாதனங்களில் 29.97 அல்லது 30 ஃப்ரேம்ஸ் என்ற வேகத்தில் அசைகிறது. இந்த இரு வேறுபாடுகளுக்கும் காரணம் அவை வீசும் ஒளியின் வேகம், அதனுடன் பயணிக்கும் ஒலியின் வேகம் இவற்றின் அடிப்படையில் இவை வகுக்கப்படுவதேயாகும்.

    இந்த அளவினை இங்கு குறிப்பிடக் காரணம், இக்காணொளியின் இப்பாடலின் நீளம் 4.05 நிமிடங்கள். அதில் நடிகர் திலகத்தின் காட்சி இடம் பெறுவது 0.30 முதல் 4.00 வரை. அதாவது 3.30 நிமிடங்கள், அதாவது 210 விநாடிகள். இந்த 210 விநாடிகளில் சராசரி 30 ஃப்ரேம்ஸ் என வைத்துக் கொண்டால், 6300 ஃப்ரேம்ஸ் வருகிறது.

    இந்த 6300 ஃப்ரேம்களில் நடிகர் திலகம் தோன்றும ஒவ்வொரு ஃப்ரேமும் ஒவ்வொரு காவியம் படைக்கலாம் என்கின்ற அளவிற்கு அவருடைய உடல் மொழி, நடை, உடை அனைத்தும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும். எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் ஸ்டைலைக் குறிப்பிட்டு எழுத விரும்புகிறேன்.

    அதற்கு முன் ஒரு சிறிய Flashback. கடந்த பிப்ரவரி மாதம் நம் நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் அன்புக்கரங்கள் திரையிட்ட போது ஒரு இளம் ரசிகை, இப்பாடலைப் பற்றி மிகவும் சிலாகித்துக் கூறினார். குறிப்பாக நடிகர் திலகத்தின் வாயசைப்பிலேயே மொழியின் உச்சரிப்பு வேறுபாட்டைக் கண்டதாக மிகவும் ரசித்துக் கூறினார். இதைப்பற்றிய பதிவுகள் இங்கே மீண்டும் நம் பார்வைக்குத் தர விரும்புகிறேன்.

    முரளி சாரின் பதிவு

    இன்று மாலை நமது NT FAnS சார்பில் திரையிடப்பட்ட அன்புக் கரங்கள் திரைப்படம் நல்ல ஒரு மாலையை பரிசாக தந்தது. ஆழமான உணர்ச்சிபூர்வமான ஒரு திரைப்படத்தை நடிகர் திலகத்தின் நடிப்பை ஒரே அலைவரிசை ரசிகர்களோடு சேர்ந்து பார்ப்பது ஒரு சுவையான அனுபவம் என்றால் அந்த சுவைக்கு சுவையூட்டுவது போல் அமைந்தது ஒரு இளம் பெண்ணின் பேச்சு.

    நமது அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இருபதுகளின் முதல் பகுதியில் இருக்கும் அந்த இளம் பெண் சபையில் ஒரு சில வார்த்தைகள் பேசலாமா என்று அனுமதி கேட்க பேசுங்கள் என்று சொன்னோம்.

    சபையோருக்கு தன் வணக்கத்தை சொல்லிவிட்டு ஆரம்பித்த அந்த இளம் பெண் தன் தமிழில் ஏதேனும் குறைகள் இருந்தால் மன்னிக்கும்படி கூறிவிட்டு பேச்சை தொடங்கினார். காரணம் அந்தப் பெண் பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் பம்பாய் மாநகரத்தில். ஆனால் அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் பெண் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக தமிழை ஒரு பாடமாக சொல்லித்தரும் பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கின்றனர். அது மட்டுமல்ல வீட்டில் பேசுவது முழுக்க தமிழில் மட்டும்தான் என்பதோடு நின்று விடாமல் தமிழ படங்களையும் தமிழ் பாடல்களையும் பார்க்க வைத்திருக்கின்றனர். பழைய தமிழ் படங்கள் குறிப்பாக நடிகர் திலகத்தின் படங்களை காண்பித்திருக்கின்றனர். தமிழை அதன் உச்சரிப்பு சுத்தியோடு கற்றுக் கொண்டது நடிகர் திலகதிடமிருந்துதான் என்று பெருமையாக குறிப்பிட்டார் அந்த இளம் பெண்.

    வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றும் குடும்பம் என்பதால் திவ்யப்பிரபந்தங்கள், பாசுரங்கள் திருவாய்மொழி முதலியவற்றை கற்க ஆரம்பித்திருக்கிறார் அந்தப் பெண். அந்த நேரத்தில்தான் திருமால் பெருமை பார்க்கும் வாய்ப்பு அந்தப் பெண்ணிற்கு கிடைத்திருக்கிறது. ஆண்டாளைப் பற்றியும் பெரியாழ்வார் பற்றியும் படித்துக் கொண்டிருந்த தனக்கு பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் தொண்டரடிப்பொடியாழ்வாரும் உருவகப்பட்டது நடிகர் திலகத்தின் மூலமாகத்தான் என்று அந்தப் பெண் சொன்னபோது அரங்கம் கைதட்டி வரவேற்றது. அதே போன்று திருவிளையாடல் ஈசனையும் அந்தப் பெண் நினைவு கூர்ந்தார்.

    இறுதியாக அந்தப் பெண் குறிப்பிட்ட விஷயம் அவர் எந்தளவிற்கு கிரகிப்பு தன்மை வாய்ந்தவர் என்பதையும் எத்துனை நுணுக்கமாக காட்சிகளை உற்று நோக்குபவர் என்பதை புலப்படுத்தியது. பொதுவாக தமிழில் ர மற்றும் ற ஆகிய இரண்டு எழுத்துக்கள் எப்படி வித்தியாசப்படுகின்றன அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதில் ஒரு குழப்பமே இருந்ததாகவும் அது அன்னை இல்லம் படத்தில் வரும் எண்ணிரெண்டு பதினாறு வயது பாடல் காட்சியை பார்த்ததும்தான் தெளிவு கிடைத்ததாகவும் குறிப்பிட்ட அந்தப் பெண் அந்த வரிகளை சொல்லிக் காட்டினார்.

    சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றி கிடந்தோம்

    என்ற வரியில் சுற்றி என்ற வார்த்தையில் வரும் ற வையும் சுவர்களுக்குள் என்ற வார்த்தையில் வரும் ர வையும் எப்படி உச்சரிக்க வேண்டும் எதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எதை இலகுவாக உச்சரிக்க வேண்டும் என்பதை தன் வாயசைப்பினாலேயே சொல்லிக் கொடுத்தவர் நடிகர் திலகம் என்றபோது அனைவரும் சிலிர்த்து விட்டனர். வாய்பிற்கு நன்றி கூறி விடைபெற்றார் அந்தப் பெண்.

    அவரின் மனதிலிருந்து நேரடியாக வந்த அந்த கருத்துகளுக்கு நன்றி தெரிவித்த நான் அவரின் பார்வையை சிலாகிக்கும் விதமாக ஒன்றை சுட்டிக் காட்டினேன். அவர் குறிப்பிட்ட அந்த அன்னை இல்லம் பாடல்காட்சியில் அந்த குறிப்பிட்ட வரிகளில் கடற்கரையில் பாறை மீது ஏறி நிற்கும் நடிகர் திலகம் தனக்கே உரித்தான அந்த கையை சற்றே மேலே தூக்கி நீட்டியவாறே பாடுவார். அந்த வசீகரத்தில் அனைவரும் தன்னை மறந்து அவரின் உடல்மொழியைதான் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் அதையும் தாண்டி அவரின் வாயசைப்பை கவனித்த அந்தப் பெண்ணிற்கு பாராட்டுகளை தெரிவித்தேன்.

    எந்த தலைமுறையையும் ஏன் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அவர்கள் அனைவரையும் கவரக்கூடிய ஒரே நடிகன் என்றென்றும் நமது நடிகர் திலகம் மட்டும்தானே!

    அன்புடன்
    மேற்காணும் பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...=1#post1207943


    அடியேனின் பதிவிலிருந்து..

    8.2.2015 மாலை மறக்க முடியாத மாலை. தலைமுறைகளைத் தாண்டி நூற்றாண்டுகளைத் தாண்டி, பல புதினங்கள், பல இலக்கியங்கள், பல இலக்கண நூல்கள் செய்வதை தன் ஒரே ஒரு வாயசைப்பில் செய்து சரித்திரம் படைத்துள்ளார் நடிகர் திலகம்.
    மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம். இன்று மாலை அன்புக்கரங்கள் நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் திரையிடப்பட்டபோது வந்திருந்த உறுப்பினர்களில் ஒருவர் இளைய தலைமுறையைச் சார்ந்தவர். அந்தப் பெண்மணி நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்றால் அவர் அதை எப்படி உணர்ந்திருக்கிறார் என்பதை அறிந்த போது அது மெய் சிலிர்க்க வைக்கும் செய்தியாகி விட்டது.
    தமிழின் சிறப்பான வல்லினம், மெல்லினம் இடையினம் இவை மூன்றையும் பாடங்களில் உச்சரித்து வகுப்பறையில் கேட்டிருக்கிறோம். நடிகர் திலகத்தின் உச்சரிப்பில் அதை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.
    ஆனால் அவருடைய உதட்டசைவில் அந்த வேறுபாட்டை அவர் உணர்த்தியிருக்கிறார் என்பதையும் அதை இன்றைய தலைமுறை இளம்பெண் ஒருவர் கவனித்து ரசித்து அதைக் கூறிய போது ஆஹா.. நாம் எவ்வளவு பெரிய மேதையுடன் வாழ்ந்திருக்கிறோம் என மிகப் பெரிய கர்வம் ஏற்பட்டது. வாழ்ந்த வாழ்க்கையின் பயன் பூர்த்தியாகி விட்டது எனத் தோன்றியது.
    எண்ணிரண்டு பதினாறு வயது .. இந்தப் பாடலில் ஒரு சரணத்தில் சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம் என்ற வரிகளின் போது அவருடைய ஸ்டைலையே பார்த்து ரசித்து மெய் மறந்து கை தட்டியிருக்கிறோம்.
    மடையா அதற்கும் மேலே அந்தப் பாட்டில் விஷயம் இருக்கிறது எனப் பொட்டில் அடித்தாற்போல அந்த இளம் பெண் கூறியது இவ்வளவு வயதானால் என்ன எத்தனை முறை பார்த்திருந்தால் தான் என்ன நடிகர் திலகம் என்ற கடலில் நாம் ஓரிரு முத்துக்களைத் தான் நாம் எடுத்து அணிந்திருக்கிறோம் என மறைமுகமாக நம்மை சாடியது போல் இருந்தது.
    சுற்றி என்ற வார்த்தையில் வரும் வல்லின ற விற்கு அதற்கேற்பவும், சுவர்களுக்குள் என்ற வார்த்தையில் வரும் இடையின ர விற்கு அதற்கேற்பவும் நடிகர் திலகம் தன் உதட்டசைவை வெளிப்படுத்தியிருக்கிறார் என அந்தப் பெண் எடுத்துரைத்த போது..
    ஓ... எனக் கத்த வேண்டும் போலிருந்தது.. தலைவா என்று உரக்கக் கூறி இறைவனுக்கு நன்றியை மிகவும் பலத்த குரலில் சொல்ல வேண்டும் போலத் தோன்றியது..

    நடிகர் திலகம் பாட்டிற்கு வெளிப்படுத்தும் உதட்டசைவை ஏளனம் புரிவோர்க்கு இது சரியான சவுக்கடி

    அந்த இளம்பெண்ணிற்கு என் உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
    அந்த வேறுபாட்டை நீங்கள் இப்போது கவனியுங்கள்.
    இப்பதிவிற்கான இணைப்பு - http://www.mayyam.com/talk/showthrea...=1#post1207958

    மேற்காணும் நிகழ்வின் போதே இப்பாடலைப் பற்றி சற்று விரிவாக எழுதவேண்டும் என எண்ணம் ஏற்பட்டது. இந்த அடிப்படையிலேயே இப்பதிவின் நீளம் அமைந்து விட்டது.




    இக்காட்சியின் துவக்கத்தில் கவனித்தால் தெரியும். முத்துராமன் கையில் ஒரு பூ இருக்கும். காதலியுடன் உரையாடும் அவரை கலாய்த்தவாறே வருகிறார் நடிகர் திலகம். நாணத்துடன் அவள் ஓடி விட, பதிலுக்கு முத்துராமன் நடிகர் திலகத்தை சீண்டுகிறார். உங்கள் காதல் விவகாரம் எப்படி. என்று. அதுவரை முத்துராமன் கையிலிருந்த பூவை நடிகர் திலகம் வாங்குகிறார். அங்கேயே ஆரம்பிக்கிறது அவரின் ஆளுமையும் ஸ்டைலும். வைப்ரஃபோன் போன்று ஒரு வாத்தியம் இரண்டு மூன்று முறை ஒலிக்க, ஒவ்வொரு முறைக்கும் பூவை உதிர்க்கிறார் நம்மவர். எண்ணிரண்டு பதினாறு வயது என்றவாறே எழுந்து நிற்கிறார். அந்த எழுந்திருக்கும் ஸ்டைலே அசத்த ஆரம்பித்து விடுகிறது. இப்போது, அக்கார்டின் ஆரம்பிக்கிறது. இந்த அக்கார்டின் ஒலிக்கும் போது என்ன ஸ்டைலாக கம்பீரமாக பூவை முகர்ந்தவாறே நடக்கிறார். இப்போது முத்துராமன் எழுந்து பின் தொடர்கிறார். மிகச் சிறப்பான ஒத்துழைப்பை இப்பாடலில் அவர் அளித்திருப்பார்.
    முத்துராமன் உரிமையோடு தோளில் கை போடும் போது திரும்பி அவளைப் பற்றி பாட ஆரம்பிக்கிறார். இப்போது தாளம் துவங்குகிறது. இரு கண்களினாலும் பக்கவாட்டில் முத்துராமனைப் பார்த்தவாறே திரும்புகிறார். ஆஹா அந்த திரும்பும் ஸ்டைலை என்ன சொல்ல...உடனே இரு விரல்களைக் காட்டி அவள் கண்ணிரண்டை குறிப்பிடுகிறார். அடுத்த்து ஆஹா... மொத்த திரையரங்கிலும் ரசிகர்கள் இருக்கையிலிருந்து எழுந்து அரங்கத்தின் உத்தரத்தை தலையால் முட்டி விட்டு கீழிறங்கும் அளவிற்கு துள்ளிக் குதிக்க வைக்கும் ஒரு கண்ணடிப்பு... அதில் ஒரு புன்சிரிப்பு...

    இப்போது இரு கைவிரல்களும் பாடலின் தாளத்திற்கேற்ப சொடுக்குப் போட்டவாறே அட்டகாசமான ஒரு நடை... இதை முத்துராமனும் ரசிக்கிறார்.
    இப்போது ஈஸ்வரியின் ஹம்மிங்.. ஃப்ரேமின் இடப்புறம் நாயகன் வலப்புறம் நாயகி எனப்பிரிக்கிறார்கள் இயக்குநரும் படத்தொகுப்பாளரும். நல்ல கான்செப்ட். நாயகி நேர்நிலையில் காமிராவைப் பார்த்தவாறு வர அவளை நடிகர் திலகம் பக்கவாட்டில் பார்க்கும் வகையில் காட்சியை உருவாக்கிய விதம் லாஜிக்க்காவும் சிறப்பாக உள்ளது. பார்ப்பதற்கும் ரம்மியமாக உள்ளது. இந்த இடத்தில் ஃப்ரேமில் தனக்கு எதிரே நாயகி உள்ளதாக கற்பனை செய்து நாயகன் பாடுவதாக எடுத்துள்ளார்கள்.

    நாயகி இறங்கி வர வர நாயகனான நடிகர் திலகம் ரசித்துக் கொண்டே இருக்கிறார். அவள் அழகாக புடவைத் தலைப்பை இங்குமங்குமாக அசைக்க, உடனே ஒரு ப்ளையிங் கிஸ்... இதையெல்லாம் எங்கள் தலைவர் அப்பவே பண்ணிட்டாராக்கும் .

    காதலின் ஆழம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை எவ்வளவு அழகாக த்த்ரூபமாக வடித்துள்ளனர் இயக்குநரும் நடிகர் திலகமும். தன்னிலை மறந்த நிலையில் முன்னிரண்டு மலரெடுத்தாள் என் மீது தொடுத்தாள் என்கிற சரணத்தைத் தொடங்கும் போது அவள் நினைவாகவே தரையை வெறித்துப் பார்ப்பதும், பிறகு திடீரென நினைவுக்கு வந்தவராக அவளை உருவகப் படுத்திப் பார்ப்பதுமாக ... எழுத்தை எந்த அளவிற்கு ஜீவனுடன் வடித்திருக்கிறார் நடிகர் திலகம்... இப்போது இரண்டாம் முறை அந்த டையினை இங்கும் அங்கும் ஆட்டும் நேர்த்தி ... என்ன நான் சொல்வது சரிதானே என்பது போல் முத்துராமனைப் பார்த்து தலையாட்டிய வாறே முக்கனியும் சர்க்க்ரையும் என்ற வரியை முதன் முறை பாடுகிறார்.

    இப்போது மீண்டும் அந்த வரி. முக்கனியும் சர்க்கரையும் சேர்த்தெடுத்துக் கொடுத்தாள்.. ஆஹா.. கண்கொள்ளாக் காட்சி.. அவள் நினைப்பில் லயித்தவாறே தன் டையை முறுக்கிக் கொள்வதும், ஆனந்த்ப் புன்னகை புரிவதும் அப்போது அதற்குள் பல்லைக் கடித்தவாறே சிரிப்பதும்...

    இப்போது பாருங்கள்.. கடற்கரை நீர்ப்பரப்பில் ரசித்துப் பாடியவாறே தலையை ஆட்டிக் கொண்டு நடப்பதை.. ஆஹா.. பிறவிப்பயன் அடைந்து விட்டோம் என ரசிகர்கள் பரவசத்தின் உச்சிக்கே அல்லவா செல்கிறார்கள். அதுவும் சும்மாவா, இடது கை சுட்டு விரலால் லேசாக மேலே சுட்டிக்காட்டி விட்டு மடக்கிக் கொள்ளும் ஒய்யாரம்.. உதட்டிலோ சொக்கவைக்கும் புன்னகை..

    அந்த நிலையிலேயே அவர் மீண்டும் அவள் நினைவில் ஆழ்ந்து விட, படத்தொகுப்பாளரின் கைங்கரியத்தில் அந்த ஃப்ரேமிலேயே மேலெழும்புகிறாள் நாயகி.

    இப்போது இரண்டு ஸ்டெப் எடுத்து வைத்து விட்டு நிற்கிறாள். அவள் காலந்தாளாம். இதை அவர் சொல்லிக் காட்டுகிறார். காலளந்த நிலையினில் என் காதலையும் அளந்தாள்.. இந்த வரிகளின் போது அவர் முகத்தைப் பக்கவாட்டில் காட்டுகிறார்கள். அப்போதும் நாயகனின் நினைவு காதலியிடம் தான் என்பதை சித்தரிக்கும் வகையில் பார்வையில் எங்கோ இருப்பது போல பார்வை.

    இப்போது அடுத்த வரி, காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் ... இந்த வரிகளின் போது தலையை இப்படியும் அப்படியுமாக அசைக்கும் அழகு..

    இப்போது வருகிறது பாருங்கள்.. உலகத்திலேயே சிறந்த நடையழகனின் உன்னத நடையழகு, ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் மன்மத நடையழகு.. காலளந்த நடையினில் என் காதலையும் அளந்தாள் என்ற வரிகளுக்கு அவர் காட்டும் அந்த ஸ்டைல்.. இன்னும் எத்தனை காலம் தவம் புரிந்தாலும் இப்படி ஓர் அழகு சுந்தரனை நம்மால் காண முடியாது என்று நம்மை அறுதியாகக் கூற வைக்கும்.

    அதற்குப் பிறகு.. ஆஹா.. அற்புதம்... அந்த படகின் கொம்பைப் பிடித்துக் கொண்டே தன் உடம்பை இப்படியும் அப்படியுமாக மிக இயற்கையாக அசைத்து காலமகள் பெற்ற மயில் இரவினிலே மலர்ந்தாள் என்ற வரியைப்பாடும் அருமையை...

    இது தானய்யா இயற்கை நடிப்பு...

    ஆஹா ... ஆஹா.. இப்போது அந்த மணல் முகட்டிலிருந்து பார்வையாளரை நோக்கி நடக்கும் வகையில் காட்சியமைப்பு. இப்போது அவருடைய நடையைப் பாருங்கள்..

    இந்த மூன்றாவது சரணம் தான் உச்சம்.. இப்போது ஃப்ரேமின் இடது புறத்தில் நடிகர் திலகத்தின் பக்கவாட்டுத் தோற்றமும் வலது புறத்தில் நாயகியான தேவிகாவின் நளினமான அசைவுகளும் அவருடைய மனக்கண் முன் நிழலாட, அவள் அதில் விடைபெறுவது போன்ற பாவனை காட்ட அவளுடைய அந்த அழகிய தோற்றம் தந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் புன்னகை மலர தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமோதித்து அதனை சித்தரிக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பு.. அப்போது அங்கு புன்சிரிப்பு...

    இப்போது தான் அந்த சரணம்.. மேலே குறிப்பிட்ட அந்த இளம் ரசிகையின் மனம் கவர்ந்த சரணம். முதன் முறை அந்த வரிகளைப் பாடும் போது சற்று லாங் ஷாட்டில் தலைவரின் அட்டகாசமான போஸ். இரு கைகளையும் பாக்கெட்டில் வைத்தவாறே பாடுகிறார். சுற்றி நான்கு சுவர்களுக்குள் தூக்கமின்றிக் கிடந்தோம்.. இதை இரண்டாம் முறை சொல்லும் போது காமிரா அவருடைய முகத்தை க்ளோஸப்பில் கொண்டு வர, இங்கே தான் நடிப்பிலக்கணம் இன்னோர் எடுத்துக்காட்டை இயம்புகிறது. சுற்றி எனும் போது வல்லின ற விற்கான உதட்டசைவையும், சுவர் என்கின்ற போது இடையின ர விற்கான உதட்டசைவையும் வெளிப்படுத்தி தமிழிலக்கண வகுப்பே எடுத்திருப்பார் தலைவர்.

    இப்போது சரணத்தின் முடிவில் வரும் வரியான துன்பம் போன்ற இன்பத்திலே இருவருமே நடந்தோம் என்கிற வரி இரண்டாம் முறை வரும் போது..

    ஆஹா.. மீண்டும் தியேட்டர் அதிருதே.. கொட்டாய் பிச்சிக்கிட்டில்லே விழுது.. யாரங்கே இனிமே சிவாஜி படம் போடறதாயிருந்தா மொதல்லே ஸீலிங்ஸை ஸ்ட்ராங்கா போடுங்கப்பா.. இவங்க குதிக்கிறதில்லாம நாமளும் குதிக்கிறோம்.. சீலிங்கே ஆடுதே... என தியேட்டர் உரிமையாளர் கூறுவதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயமாகி விடுகிறதே.. இருவருமே நடந்தோம் என்கிற போது இரு கைகளையும் விரித்து தோளை சிலுப்புகிறாரே..

    சும்மாவா முடிக்கிறார் பாட்டை.. நம்மையெல்லாம் கட்டிப்போட்டு விடுகிறாரே.. எங்கோ பார்த்தவாறே தன் இடது கை சுட்டு விரலால் சுட்டிக்காட்டியவாறே உதட்டில் புன்னகையுடன் ஒரு மாதிரி தலையைக் குனிந்து அவர் பார்க்கும் போது..

    ஆஹா.. கடவுளே.. நீ உலகத்தில் எத்தனையோ சோதனைகளை மக்களுக்குத் தருகிறாய். எத்தனையோ தொல்லைகள் தருகிறாய்.. சொல்லொணா துயரங்களக்கு மக்கள் ஆளாகிறார்கள். இதறகாக எல்லாருமே உன்னை சபிக்கிறார்கள். அதில் நாங்களும் விதி விலக்கல்ல..

    ஆனால் அத்தனையையும் மறக்க வைக்க எங்களுக்கு நடிகர் திலகத்தை அளித்தாயே.. இது போதும இறைவா.. உன்னுடைய இறைவன் பதவி காப்பாற்றப்பட்டு விட்டது.. பிழைத்துப் போ...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. #3358
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post


    திரையுலகில் மட்டுமின்றி பொதுவாழ்விலும் சரித்திரம் படைத்த திருவிளையாடல் திரைக்காவியத்தின் பொன்விழா நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பில் கொண்டாட உத்தேசிக்கப் பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. நமது எண்ணங்களும் திட்டங்களும் ஈடேறினால் இது மிகவும் சிறப்பானதாகவும் மறக்க முடியாத வகையிலும் அமைந்து வரலாற்றில் இடம் பெறும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.

    இதைப் பற்றி சில மேலான விவரங்களை நமது முரளி சார் கூறுவார்.

    ஆவலுடன் காத்திருப்போம்..
    நமச்சிவாய வாழ்க!

    நாதன் தாழ் வாழ்க!

    இமைப்பொழுதும் என் நெஞ்சில்

    நீங்காதான் தாழ் வாழ்க!


    எல்லாம் வல்ல சர்வேஸ்வரன் தாழ் பணிந்து முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறோம்!

    அவனருளால் அனைத்தும் நல்லபடியாகட்டும்!

    தேவா! மகாதேவா! சம்போ மகாதேவா!

    அன்புடன்

  15. Thanks vasudevan31355 thanked for this post
    Likes sss, Russellmai liked this post
  16. #3359
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  17. #3360
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    Definition of Style 27 & திலக சங்கமம்

    அன்னை இல்லம்




    ஆனால் அத்தனையையும் மறக்க வைக்க எங்களுக்கு நடிகர் திலகத்தை அளித்தாயே.. இது போதும இறைவா.. உன்னுடைய இறைவன் பதவி காப்பாற்றப்பட்டு விட்டது.. பிழைத்துப் போ...
    ரயில்
    மழை
    மலை
    அப்புறம்
    இது போன்ற நடிகர்திலகத்தை
    பற்றிய வர்ணனைகள்
    எப்போதும்
    சலிக்காது.
    Last edited by senthilvel; 28th June 2015 at 11:12 AM.

  18. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •