Page 258 of 401 FirstFirst ... 158208248256257258259260268308358 ... LastLast
Results 2,571 to 2,580 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2571
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2572
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2573
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2574
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    குழந்தை வளர்ப்பில் நடிகர்திலகம் ...அம்மையப்பராக !!

    குழந்தை வளர்ப்பில் வல்லவர்கள் பொதுவாக பெண்டிரே !
    ஆனால் தாயற்ற குழந்தைகளுக்கு ?...தாயும் தந்தையுமாகி குழந்தைகளை நடிகர்திலகம் பேணும் அழகைக் காண்போமே!


    அழும் குழந்தையும் ஆட்கொள்ளப் படுமே.... பூவாய் மலர்ந்து புன்னகைக்குமே நடிப்புத் தந்தையின் வாஞ்சையான பிணைப்பிலே !



    பெற்றவர் யாராயினும் உற்றவன் நானே !
    பாடல் காட்சியில் சிறுசிறு சுறுசுறு விறுவிறு குறுகுறு நடன அசைவுகளில் நடிகர்திலகத்தின் ஆளுமை!!



    செல்வத்துள் செல்வம் மழலை செல்வமே !
    இப்பாடல் காட்சியில் க்ளோசப் முகபாவங்கள் நூறு சதம் பொருத்தமான பாடலின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப உதட்டசைவுகள் உடல்மொழி.....சிலிர்ப்பே!



    அந்த இறைவன் ....அவனும் அன்னை இல்லாதவன்! அவனிடத்தில் நானிருப்பேன் குழந்தைகளே உங்களை மகிழ்விக்க!

    Last edited by sivajisenthil; 28th May 2015 at 08:43 PM.

  6. Likes RAGHAVENDRA, KCSHEKAR, Russellmai liked this post
  7. #2575
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பிறந்தநாள் வாழ்த்துக்களில் தங்கள் அன்பைப் பொழிந்த அன்பு உள்ளங்கள்,
    நெய்வேலி வாசுதேவன், பெங்களூர் பாலகிருஷ்ணன் சுந்தரபாண்டியன், சித்தூர் வாசுதேவன், சந்திரசேகர், முத்தையன் அம்மு, ரவிகிரண் சூர்யா,
    பார்த்தசாரதி, கலைவேந்தன், வரதகுமார் சுந்தரம், ரவிச்சந்திரன், எம்ஜிஆர் ரூப் கண்ணன், உள்ளிட்ட அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். எல்லாம் வல்ல இறையருளால் தாங்கள் அனைவரும் எல்லா நலனும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்புற வாழ்த்துக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2576
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Guest Role of Inanimate Objects in NT movies!
    Part 1 : Staircase Steps!


    நடிகர்திலகத்தின் பாதப் பதிவில் மெய்மறந்த படிக்கட்டுகள்
    நடிப்புப் புரட்சியின் சாட்சிகள் !

    திரைக்கு வெளியேயிருந்து நடிகமன்னரின் நடிப்பாற்றலில் சொக்கும் போது நமது உணர்வு உந்துதல்களை அலப்பரையாக வெளிப்படுத்தி மகிழ்கிறோம்
    ஆனால் திரைக்குள்ளேயிருந்து அவர் பொற்பாதங்களைத் தாங்கி அவர் நடிப்பின் கணம் சுமக்கும் படிக்கட்டுகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமல் மெய்மறந்து போகின்றனவோ ?!

    ஏற்ற இறக்கம் நிறைந்த வாழ்வின் உருவகமே நாம் தினந்தோறும் ஏறி இறங்கும் படிக்கட்டுகள்
    அந்தப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி தனது காந்த ஈர்ப்பான உடல்மொழி முகபாவங்கள் மூலம் நம்மை எப்படிக் கட்டிப் போடுகிறார் நடிகர்திலகம் !!






    உயர்ந்த மனிதனில் வாணிஸ்ரீ மறைவுக்குப் பின் சௌகார் ஜானகியை மணமுடிக்க ராமதாஸ் வற்புறுத்தும் போது சோகத்துயரை மறைத்துக்கொண்டு தளர்ந்த
    நடையுடன் அவர் மாடிப்படிகளில் ஏறும் காட்சி இன்னும் மனத்திரையை விட்டு அகலவில்லை
    அவ்வாறே தெய்வமகனில் அப்பா சிவாஜி வயதான பின் பண்டரிபாயை நோக்கி மாடிப்படிகளில் நளினமாக ஒருவிதமான குதூகலம் பொங்க படிப்படியாக இறங்கி வரும் காட்சியும் ....
    ம் ம் ம் .....கொடுத்து வைத்த படிக்கட்டுகள்....நடிப்பிமயத்தின் பாதம் தாங்கிட!!
    Last edited by sivajisenthil; 30th May 2015 at 06:14 PM.

  9. Thanks vasudevan31355 thanked for this post
  10. #2577
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    செந்தில் சார்,

    அருமை. விதவிதமான கான்செப்ட்களில் கடவுள். நல்ல கற்பனை வளம் உங்களுக்கு.



    'தேவகி எங்கே?' என்று கண் இமைப்பதற்குள் மாடி ஏறி, அங்கு அவளைத் தேடி காணாமல், பின் 'சரசர' வென புயலை விட வேகமாக இறங்க வைக்கும் படிக்கட்டுகள். (இவருடைய வேகம் தாளாமல்தான் படிக்கட்டுகள் வளைந்து விட்டனவோ!)

    பல வருடங்களுக்குப் பிறகு பிரிந்த தன் மனைவியைப் பார்க்கப் போகும் சந்தோஷத்தில் 'சுமதி! காஷ்மீருக்கு வர்றியா?' என்று உள்ளத்தில் ஆனந்தப் பொங்கலிட்டு படிக்கட்டுகளின் மீது ஏறி இறங்கிக் குதூகலிக்கும் குழந்தை மனநிலை சந்தோஷ 'திரிசூல' ஓட்டம்.

    போலி வேடமிட்டிருக்கும் மகனை உண்மை விளங்காமல் சொந்த மகனென்று தெரிந்து, (ஜெய்கணேஷின் இரு கைகளையும் பிடித்து, பாசத்தை பதுக்கி, பலமுடன் ஆட்டி, தட்டிப் பார்த்து பரவசம் காண்பார். பின் அதே போலத் தன் கையைத் தடவிப் பார்த்தும்.) அவன் போன பின்பு 'என் வாரிசு உயிரோடு' என்ற உற்சாகத்தில் படிக்கட்டுகளில் ஏறும் வயதான தந்தையின் வாலிப ஓட்டம்.

    'தெய்வ மகனி'ல் பண்டரிபாய் மூத்தவனை கோவிலில் மகனென்று புரியாமல் பார்த்து, இனம் புரியா தாய்மை உணர்ச்சி கொண்டு, அடி வயிறு கலங்கி, உடல் தள்ளாடி வீடு வருகையில் தகப்பன் மாடியில் கோட்டின் கீழ் பட்டனைப் போட்டவாறே கீழே வரும் மனைவிக்கு 'என்ன ஆனதோ தெரியவில்லையே' என்று விறுவிறுவென படிக்கட்டுகளில் கம்பீரமாக இறங்கும் தோரணையை மரித்தாலும் மறக்க இயலாது. (மாடிப்பட்டு இறங்கியவுடன் கொஞ்சம் கொஞ்சமாக பண்டரிபாயை நோக்கி நடை வேகத்தைக் கூட்டுவார்)

    'இந்த வீட்டுக்கு விளக்கில்லை
    சொந்தக் கூட்டுக்குக் குயில் இல்லை'

    என்று மகளைப் பிரிந்த தகப்பனின் சோகம். படிக்கட்டுகளின் வலதும் இடதுமாக ஓடி கைப்பிடியைப் பிடித்து சாய்ந்து புலம்பும் துயரம்.

    மகன் தனக்கெதிராக வாதாடப் போகிறான் என்று அதிர்ந்து, சரக்கு அடித்து விட்டு, கீழே உள்ள செல்லம்மாவை நோக்கி படிக்கட்டுகளில், பக்கவாட்டுகளில் (சைடில்) தள்ளாடி பாடியபடியே, ஆனால் நிமிர்ந்து வீரம் காட்டி வரும் திமிர்த்தனம் கொண்ட கௌரவ பாரிஸ்டர்.

    அதே போல கேஸ் பாதகமாகி விட்டது என்று உணர்ந்து தீர்ப்பும் அவ்வளவுதான் என்பதை படிக்கட்டுகளில் பைப் பிடித்தபடி காட்டி, விரக்தியாக அமர்ந்திருக்கும் அம்சம். அப்போதும் திமிர் போகாது. மடிசார் அணிந்திருக்கும் பண்டரிபாயிடம் ("என்னடி இது? டிபிகல் அம்மாமி மாதிரி! என்ன வேஷம்?) நக்கல். (ஆனால் வலுவிழந்ததால் வழக்கமான வலு இருக்காது.) உட்கார்ந்திருக்கும் போஸ் உலக டாலர்களை அள்ளிக் கொடுத்தாலும் அதற்கெல்லாம் ஈடாகாது.

    ம்ம்...எவ்வளவோ இருக்கிறது இந்த நடமாடும் (படிக்கட்டுகளில் மட்டுமல்ல... நம் உள்ளக் கட்டிலிலும்தான்) அதிசயத்தைப் பற்றி எழுத. நேரம்தான் இல்லை செந்தில்.
    Last edited by vasudevan31355; 29th May 2015 at 09:56 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks eehaiupehazij thanked for this post
  12. #2578
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    In Nallathoru Kudumbam also where he meets his wife after 25 years at that time when he climbs down from the

    steps with a joy in his face as well as with his unique style which is unmatchable.

  13. Thanks eehaiupehazij thanked for this post
    Likes RAGHAVENDRA, eehaiupehazij liked this post
  14. #2579
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    In Nallathoru Kudumbam also where he meets his wife after 25 years at that time when he climbs down from the

    steps with a joy in his face as well as with his unique style which is unmatchable.

  15. #2580
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வெள்ளை ரோஜவில் இந்த


    அட்டகாசமான காட்சி தொடக்கமும்
    அதன்பின் ஆரம்பிக்கும்
    ஆரவாரமான சண்டைக்காட்சியும் முடிவில்
    சாந்தமான முகபாவங்களில் நடிகர்திலகமும்
    அற்புதம்






    Last edited by senthilvel; 29th May 2015 at 01:51 PM.

  16. Likes RAGHAVENDRA, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •