Page 285 of 401 FirstFirst ... 185235275283284285286287295335385 ... LastLast
Results 2,841 to 2,850 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2841
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நான் அவனில்லை .....ஆனால்...அவனில் நான்!!

    Face Off Factory NT! குறுந்தொடர் !

    நடிப்பது போல் நடிப்பது நடிகர் திலகத்தின் முத்திரை நடிப்பே !!

    திரையில் ஒரு குறிப்பிட்ட பாத்திரமாக மாறி அதன் குணாதிசயங்களை சித்தரிப்பது எந்தவொரு தேர்ந்த கலைஞருக்கும் சாத்தியமே
    ஆனால் அந்த கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரம் போல கூடு விட்டு கூடு பாயும் நடிப்புக் குறளி வித்தை நடிக மாயாவிக்கே சாத்தியம் !!
    3. தெய்வமகன்

    தெய்வமகன் இறுதிக் கட்ட காட்சிகளில் தந்தை சிவாஜியை கட்டிப் போட்டுவிட்டு அவரிடத்தில் நின்று வில்லன்களை துவம்சம் செய்து தம்பியை மீட்ட Face Off காட்சிகள் அமர்க்களம்!!

    Watch from 2 : 29 : 15...amazing!!

    Last edited by sivajisenthil; 10th June 2015 at 02:55 PM.

  2. Likes KCSHEKAR, Russellmai, Georgeqlj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2842
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நான் அவனில்லை .....ஆனால்...அவனில் நான்!!

    Face Off Factory NT! குறுந்தொடர் !

    நடிப்பது போல் நடிப்பது நடிகர் திலகத்தின் முத்திரை நடிப்பே !!

    திரையில் ஒரு குறிப்பிட்ட பாத்திரமாக மாறி அதன் குணாதிசயங்களை சித்தரிப்பது எந்தவொரு தேர்ந்த கலைஞருக்கும் சாத்தியமே
    ஆனால் அந்த கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரம் போல கூடு விட்டு கூடு பாயும் நடிப்புக் குறளி வித்தை நடிக மாயாவிக்கே சாத்தியம் !!
    4. பலே பாண்டியா !!
    நரைத்த முடியை டை அடித்து கறுப்பாக்கிக் கொண்டு விஞ்ஞானி சங்கர் தம்பி பாண்டியனாக Face Off செய்து அடிக்கும் லூட்டிகள் மனைவி சந்தியாவின் குழப்பங்கள் அமர்க்களம்






  5. Likes KCSHEKAR, Russellmai, Georgeqlj liked this post
  6. #2843
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நான் அவனில்லை .....ஆனால்...அவனில் நான்!!

    Face Off Factory NT! குறுந்தொடர் !

    நடிப்பது போல் நடிப்பது நடிகர் திலகத்தின் முத்திரை நடிப்பே !!

    திரையில் ஒரு குறிப்பிட்ட பாத்திரமாக மாறி அதன் குணாதிசயங்களை சித்தரிப்பது எந்தவொரு தேர்ந்த கலைஞருக்கும் சாத்தியமே
    ஆனால் அந்த கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரம் போல கூடு விட்டு கூடு பாயும் நடிப்புக் குறளி வித்தை நடிக மாயாவிக்கே சாத்தியம் !!
    5. நவராத்திரி

    நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த Face Off வெளிப்பாடு என்றும் கொண்டாடப்படும் நவராத்திரியே!!
    நாடக மேடை தெருக்கூத்துக் கலைஞராக பயந்த சுபாவம் காட்டும் கொழுக் மொழுக் மீசையில்லாத நடிகர்திலகம் முகத்தில் கோணல் மீசை ஏற்றிய ராஜாவாக
    மாறியவுடன் என்னவொரு விவரிக்க இயலாத உருமாற்றத்தில் நம்மைக் கட்டிப் போடுகிறார் !


    NT returns to show his face off magic in the gross entertainer Engal Thanga Raaja as Pattakkaththi Bairavan a neat transformation from the suave doctor role!!
    Last edited by sivajisenthil; 10th June 2015 at 06:35 PM.

  7. Likes KCSHEKAR, Russellmai, Georgeqlj liked this post
  8. #2844
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நான் அவனில்லை .....ஆனால்...அவனில் நான்!!

    Face Off Factory NT! குறுந்தொடர் !

    நடிப்பது போல் நடிப்பது நடிகர் திலகத்தின் முத்திரை நடிப்பே !!

    திரையில் ஒரு குறிப்பிட்ட பாத்திரமாக மாறி அதன் குணாதிசயங்களை சித்தரிப்பது எந்தவொரு தேர்ந்த கலைஞருக்கும் சாத்தியமே
    ஆனால் அந்த கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரம் போல கூடு விட்டு கூடு பாயும் நடிப்புக் குறளி வித்தை நடிக மாயாவிக்கே சாத்தியம் !!
    6. எங்கள் தங்க ராஜா

    எங்கள் தங்க ராஜா ஒருவகையில் டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைட் பாணி சஸ்பென்ஸ் திரிலர் !
    பகலில் சாதுவான மருத்துவர் இரவில் பழிவாங்கும் பட்டாக்கத்தி பைரவன் என்று சுவையான Face Off ரசித்து நடித்திருப்பார் நம் திலகம்!!
    Dr Jekyll



    Mr Hyde



    The End of Face/Off
    Last edited by sivajisenthil; 10th June 2015 at 09:39 PM.

  9. Likes sivaa, KCSHEKAR, Russellmai, Georgeqlj liked this post
  10. #2845
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 25

    பாலாடை.



    அதிகம் பேசப்படாத ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்பில் உச்சாணிக் கொம்பில் வைத்துப போற்றப் பட வேண்டிய திரைக்காவியங்களில் ஒன்று.
    பிலஹரியின் கதை என்று பார்த்தால், சற்றே அந்தக் கால கட்டத்திற்கு வித்தியாசமான கதை. இருமலர்கள், தேனும் பாலும், என இரு தாரங்களைப் பற்றிய பல படங்களை ஒன்றாக்கி வைத்து ஒரு கதை உருவானதற்போல் தோற்றமளிக்கும். மேற்சொன்ன இரு படங்களுமே பின்னால் வந்தவையே. ஆனால் முதல் தாரமே தன் கணவனை இரண்டாம் தாரமாய்த் தன் தஙகையை மணமுடிக்க முன்வரும் கதையமைப்பு அந்தக் காலகட்டத்தில் சினிமாவுக்கு சற்று வித்தியாசமான முயற்சி. பல இயக்குநர்கள் இது போன்ற முயற்சிகளை ரிஸ்க் என ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

    ஜானகி [பத்மினி]யும் சேகர் [சிவாஜி]ரும் அந்நியோனயமான தம்பதி. குழந்தை பிறக்கவில்லை என்ற ஏக்கம் இருவருக்கும் உண்டு என்றாலும் சேகருக்கு சற்று அதிகமாகவே உண்டு. தன் வீட்டில் வரிசையாக அந்த வீட்டு வம்சாவளியாக ஃபோட்டோக்களை மாட்டி வைப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவன். அந்த வரிசையில் அடுத்துத் தன் குழந்தையின் படம் அங்கு இடம் பெற மிகவும் விரும்புகிறான்.

    கணவன் மனைவி மருத்துவ பரிசோதனைக்குச் செல்கிறார்கள். துரதிருஷ்டவசமாக அவர்களுக்கு குழந்தை பெறும் வாய்ப்பில்லை என ஜானகியிடம் டாக்டர் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் ஜானகி இதைத் தன் கணவனிடம் சொல்லாமல் மறைக்கிறார்.

    இந்நிலையில் ஜானகியின் தங்கை சாந்தா தன் அக்காள் வீட்டிற்கு வருகிறாள். சுட்டிப் பெண்ணான சாந்தாவை நன்கு படிக்க வைத்து ஆளாக்கி வந்துள்ளனர் சேகர் தம்பதி.
    ஒரு மாறுதலுக்காக பொருட்காட்சி செல்கின்றனர் மூவரும். அங்கே எதேச்சையாக டாக்டர் குடும்ப சமேதமாய் அங்கு வருகிறார். டாக்டரின் மகன் ராமுவும் சேகரும் தனியாக அமர்ந்து உரையாடுகின்றனர்.

    சாதாரணமாக துவங்கும் உரையாடலின ஊடே ராமு, சேகரின் மனைவிக்கு நடந்த மருத்துவ பரிசோதனையின் முடிவைப் பற்றி சேகரிடம் சிலாகிக்கிறான். இதை சேகர் எப்படி எதிர் கொள்கிறான், அதைத் தொடர்ந்து தன் மனைவியிடம் இதை எப்படி அவளிடமிருந்தே அறிய முற்படுகிறான், அவளிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதே இங்கே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும் காட்சியாகும்.

    காட்சி 33.25 விநாடியில் தொடங்குகிறது.



    கதாசிரியர் பிலஹரியே வசனமும் எழுதியுள்ளார்.

    ராமு - மிஸ்டர் சேகர், நீங்களும் உங்க மனைவியும் எப்படி இருப்பீர்களோ என்று நான் நினைத்த்தற்கும் இப்போது நீங்கள் ரெண்டு பேரும் இப்போ இவ்வளவு சந்தோஷமா இருக்கறதைப் பாக்கறதுக்கும் ரொம்ப வித்தியாசம்..

    ... இந்த இடத்தில் அந்தப் பாத்திரத்திற்கு நடிகர் திலகம் தரும் Buildup ஐப் பாருங்கள். மிகவும் கேஷுவலாக அந்தப்பொருட்காட்சியை ரசித்துக் கொண்டிருக்கிறார். கை விரலால் அங்கு ஏதோ ஒரு ஸ்டாலை சுட்டி ரசித்துக் கொண்டே ராமு கூறுவதை செவி மடுக்கிறார்.
    உங்க மனைவி என்று ராமு சொன்னவுடனே முகம் மாறுவதும் திரும்பி கவனிப்பதையும் பாருங்கள்.

    சிரிப்பு குறையவில்லை. என்ன நினைச்சீங்க என்ன சந்தஷோம், என்ன வித்தியாசம் எனக் கேட்டுக் கொண்டே சிரிக்கிறார் சேகர். திரும்பவும் ஸ்டாலை ரசிக்கிறார்.

    ராமு - . ஒண்ணும் இல்லே, உங்க ரெண்டு பேருக்கும் நிரந்தரமா குழந்தை பாக்கியம் இல்லேன்னு தெரிஞ்சும் அதை மறக்கிறதுக்காக இப்படி ஊர் குழந்தைகளோடு உற்சாகமாக விளையாடிட்டிருந்தீங்களே ம்.. அதைத்தான்...

    நடந்ததையெல்லாம் ராமு விவரித்துக் கொண்டே வர கேட்டுக் கேட்டு மனம் அதிர்ச்சியடைய அதை மிகவும் பக்குவமாக முகத்தில் வெளியிடுவதைப் பாருங்கள்.

    இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் அந்த கால அவகாசம்..
    வசனம் முன்பே தெரிந்தாலும் அதற்கொப்ப முகபாவம் மாற்றுவதற்கும் ஒரு நேரம், காலம், மாத்திரை அளவு உள்ளது என்பதை இக்காட்சியில் நடிகர் திலகத்திடம் தெரிந்து கொள்ளலாம்.

    ராமு விவரிக்க தொடங்கும் போது சிரிப்பு அப்படியே உள்ளது, உங்க ரெண்டு பேருக்கும் என்று சொல்லும் போது சிரிப்பிலிருந்து கேள்விக்குறியாக TRANSFORMATION கொண்டு வருகிறார். அடுத்த வரி என்னவென்று தெரியாது என்பதற்கான அடையாளம் அது.
    எங்கம்மாகிட்டே உங்களைப் பத்தித் தான் விசாரிச்சேன் என ராமு ஆரம்பிக்கிறார். சேகரின் முகம் மாறுகிறது. அப்பத்தான் உங்களுக்கு குழந்தையே பிறக்காது என்கிற விஷயத்தை உங்க மனைவிகிட்டே சொன்னதாகவும் சொன்னாங்க என்று ராமு கூறும் போது அவர் முகத்தில் பாருங்கள் - இரண்டு மூன்று விஷயங்களை வெளிப்படுத்தியிருப்பார்.
    1. முதலாவது தனக்கு குழந்தை பிறக்காது என்ற அதிர்ச்சி.
    2. அதை டாக்டர் தன்னிடம் சொல்லாமல் மனைவியிடம் சொன்னது. அதனால் ஏமாற்றம்.
    3. அதை மனைவி தன்னிடம் சொல்லாமல் மறைத்தது. இதனால் ஆத்திரம்.
    இந்த மூன்றையும் சேர்த்து தன் ஒரு முகபாவத்தில் வெளிப்படுத்தித் தன் நடிப்பின் மேன்மையை உலகுக்கு வெளிக்காட்டியிருக்கிறார்.

    இப்போது மனம் உடைகிறது. பலூன் வெடிக்கிறது. [இயக்குநரின் டச்]

    எந்தப் பெண்ணாலேயும் தாங்க முடியாத ஒரு பெரிய அதிர்ச்சியை உங்க மனைவி பெரும் மன உறுதியோடு தாங்கிக்கிட்டாங்கன்னு சொல்லி எங்க மதர் ரொம்ப வருத்தப்பட்டாங்க.. என ராமு சொல்லும் போது,

    இப்போது பாருங்கள் அந்த சோகத்திலும் தன் மனைவியைப் பற்றி பெருமையாக நினைத்து சந்தோஷப்படுவதை... அந்தப் புன்னகையில் தான் எத்தனை அர்த்தங்கள்.
    தலையைக் குனிந்து அவர் சிரிக்கும் போது அதில் வேதனை கலந்திருப்பது தெளிவாகத் தெரியும்.

    இவ்வளவு பெரிய விஷயத்தை மறந்து, நீங்களும் இவ்வளவு உற்சாகமாக இருப்பதைப் பார்க்கும் போது என்னாலே என்ன சொல்றதுன்னே தெரியலே என ராமு சொல்லி தட்டிக் கொடுக்கும் போது அவருடைய ரியாக்ஷன்..

    ஆம்பளையாச்சே.. ராமு தன்னுடைய சுயகௌரவத்தை டச் பண்ணி விட்டார்.. தான் எதையும் தாங்கும் பெரிய இதயம் கொண்டவர் என்று சான்றிதழ் தந்து விட்டார். அந்த சோகத்திலேயும் மனிதருக்கு ஒரு கர்வம் வந்து விடுகிறது. உடனே தன் கவலையைக் காட்டிக் கொள்ள மனம் வராமல், சிரித்துக் கொண்டே மறைக்க முற்படுகிறார். ராமு என்ன சொல்றதுன்னே தெரியலே , என்று அவர் கூறும் போது அதில் அந்த கர்வம் தொனிப்பதை கவனியுங்கள். சற்றே மேலே பார்த்து அந்த சோகத்தை மறைத்து விடுகிறார். எல்லாம் கடவுள் செயல் என்று முடித்துக் கொள்கிறார்.

    -000-

    காட்சி இடம் மாறுகிறது. வீட்டில் கணவன் மனைவி ..

    கவலையும் துக்கமும் ஒரு சேர கணவனைப் பார்த்தவாறே ஜானகி உள் நுழைகிறார். சேகர், அங்கலாய்த்தவாறு பேசுகிறார். இந்த வீட்டில் யார் நம்மளை மதிக்கிறாங்க, யார் லட்சியம் பண்றாங்க என புலம்புகிறார். பேசிக்கொண்டே தனக்கு விஷயம் தெரியவந்து விட்டதை தன் பேச்சில் மறைமுகமாக புலப்படுத்த துவங்குகிறார்.

    நான் மனசில் உள்ளதையெல்லாம் அப்படியே கொட்டிடுவேன்..

    (இது கணவன் மனைவிக்குள் நடக்கும் உரையாடல் என்றாலும் நடிகர் திலகத்தின் நற்குணத்தை பிரதிபலிப்பதால், தியேட்டரில் ஆரவாரம் மிக பலமாக எழும். நான் குளோப் தியேட்டரில் அப்போது பார்த்தபோதை இதை பார்த்திருக்கிறேன்)

    மெல்ல மெல்ல மனைவியிடம் தன் மனக்குமுறலை வெளிப்படுத்த, அவளும் அதை துயரத்துடனும் ஒரு வித குற்ற உணர்ச்சியுடனும் கேட்டுக் கொண்டே வருகிறார்.
    இப்போது சேகர் ஒரு பொம்மையைக் கையில் வைத்துக் கொண்டே, கடவுளை நினைத்து மனம் நொந்து பேசுகிறார். உனக்கு பொம்மை குழந்தை தான்னு அவன் சொல்லிட்டா என்ன பண்றது.. என சொல்லும் போது அவர் முகத்தைப் பார்க்கணுமே.

    இதற்கப்புறம் தான் தியேட்டரே அதிரும் அந்த ஒரு வார்த்தை..

    FINISH

    இதை அவர் வாயால் சொல்லிக் கேட்க வேண்டும். இந்த இடத்தில் அவர் இந்த வார்த்தையை சொல்லும் விதம் அந்த வார்த்தைக்கே புதிய பரிமாணத்தைக் கொண்டு வருகிறார்.

    பிறகு, அந்த பொம்மையிடம் பேசும் காட்சி..

    தனக்குத் தானே வாகவும் தன் மனைவிக்குமாகவும் சேர்த்து ஆறுதல் வார்த்தைகளாய் அவர் பேசப் பேச நம் மனம் அப்படியே கரைகிறது. இதயத்தைப் பிழியும் அந்தக் குரல்..

    சிம்மக்குரல் மட்டுமல்ல தலைவா, நெஞ்சை உருக வைக்கும் பாசக் குரலும் உனக்கு மட்டும் தான் சொந்தம் என தியேட்டராய் இருந்தால் நாமெல்லாரும் கத்தி விடமாட்டோமா..

    பேசப் பேச ஜானகி குமுறிக் குமுறி அழத் தொடங்குகிறார்.

    இப்போது ஒரு வசனம் பேசுகிறார் பாருங்கள்.. HATS OFF TO BILAHARI.. எவ்வளவு பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை மிக சாதாரணமாக சொல்லி விளக்கி விட்டார்.. ஒருத்த்ருக்கொருத்தர் புரிஞ்சிக்க வேண்டியது தானே வேதனையை ...

    இந்தக் காலத்தில் இது நடக்குமா.. என மனம் ஏங்குகிறதே..

    அதுவும் அந்த பொம்மையிடம் கேட்கிறாரே... ஏம்பா நீயே சொல்லு .. நான் என்ன அவ்வளவு கல்நெஞ்சக்காரனா... அந்த வேதனையை என்னாலே பங்கு போட்டுக்க முடியாது... என பீறிட்டு வரும் அழுகையை அடக்க முயற்சிக்கும் அடையாளமாக மூக்கை உறிஞ்சுகிறார். அதையும் மீறி அழுகை வருகிறது.. அடக்குகிறார்..

    ஆனால் நாம்.. ஜானகியோடு சேர்ந்து நாமும் அல்லவா கண்ணீரைத் துடைக்க முயற்சிக்கிறோம்...

    அதுவும் அந்த சே.... சொல்வதைப் பாருங்கள்..

    இப்போது நமக்கும் ஒரு சே தோன்றுகிறது..

    சே.. இவரைப் போய் மிகை நடிப்பு,. அப்படி இப்படி என்று சொல்கிறார்களே, இவர்களுக்கெல்லாம் நடிப்பென்றால் என்னவென்றே தெரியாதா சே என்ன மனிதர்கள் என்று உரக்கக் கத்த வேண்டும் போல் தோன்றுகிறது.

    ஆஹா... உடைகிறது அணை, பீறிட்டுப் பாய்கிறது அன்பு வெள்ளம்..
    கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அழும் போது ...

    இந்தக் காட்சியை ரசிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்..

    நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி பத்மினி இணையில் வெளிவந்த ஈடு இணையில்லா ஒப்புயர்வற்ற காட்சிகளில் பாலாடை முதல் மூன்று இடங்களுக்குள்ளேயே இடம் பெற்று விடும்.

    மீண்டும் மீண்டும் பார்த்தாலும் அந்தக் குரலாலேயே அன்பையும் பாசத்தையும் வேதனையையும் ஏமாற்றத்தையும் சோகத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தக் கூடிய நடிகர் உலகத்திலேயே சிறந்த நடிகர் திலகம் மட்டும் தான். இதற்கு இந்தக் காட்சி மிகச் சிறந்த உதாரணம்.

    Thank God for giving my Life a meaning by being a Proud Fan of Nadigar Thilagam.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks Russellmai thanked for this post
  12. #2846
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அருமை தம்பி செந்தில் [ஹரிஷ்],

    இந்த தொடரை நீங்கள் விரும்பி படிக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். உங்களுக்காகவாவது வாரம் ஒரு முறை இந்த தொடரில் பதிவுகள் போட முயற்சிக்கிறேன்.

    நன்றி எஸ்.வாசு.

    நன்றி ஆதிராம்.

    நன்றி சந்திரசேகர் சார். அன்றைய நாட்களில் நடிகர் திலகத்தின் கால்ஷீட் முதற்கொண்டு எப்படி எழுதுகிறீர்கள் என்று கேட்டிருக்கிறீர்கள்.

    அன்றைய நாளில் நடிகர் திலகத்திற்க்கென்றே பல்வேறு இதழ்கள் வெளிவந்துக் கொண்டிருந்த நேரம். மதி ஒளி, சினிமா ஸ்டார், திரை வானம், மின்னல் கொடி, சிவாஜி ரசிகன் என்று பல இதழ்கள். இவை அனைத்தையும் வாங்கி படிக்க முடியாது. அன்றைய நாட்களில் பல்வேறு சிகர மன்றங்கள் சார்பில் தினசரி செயல்படக் கூடியவை மற்றும் ஞாயிறு வாசகசாலை போன்றவை நடத்தப்பட்டு வந்தன. அவற்றில் சென்று அங்கே வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை படிப்பது வழக்கம். மதுரையில் இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விக்டோரியா எட்வர்ட் மன்றம் போன்றவற்றில் என் தந்தையார் உறுப்பினராக இருந்த காரணத்தினால் அங்கேயெல்லாம் பல்வேறு தின இதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் முதலியவற்றை ஆவலோடு படிப்பேன். தாய் வழி தாத்தா ரெகுலராக நவசக்தி வாங்குவார். இவை போன்றவைதான் இந்த தகவல்களை வழங்கின.

    நினைவு வைத்துக் கொண்டிருக்கும் காரணம் ஸ்பெஷலாக ஒன்றுமில்லை. சினிமா அரசியல் மற்றும் ஸ்போர்ட்ஸ் போன்றவைகளை passionate-ஆக follow செய்தது ஒரு காரணமாக இருக்கலாம். அதுதான் இன்னும் நினைவில் நிறுத்தி வைத்திருக்கிறது.

    மீண்டும் நன்றி சார்!

    நண்பர் திருச்சி பாஸ்கர் மற்றும் வேறு சிலர் ஒரு சந்தேகம் கேட்டார்கள். பட்டிக்காடா பட்டணமா வசூல் பற்றி சொல்லும்போது அதன் சாதனை கருப்பு வெள்ளை படங்களை பொறுத்தவரையா இல்லை அனைத்து படங்களுக்கும் பொருந்துமா என்று கேட்டார்கள். நான் சொன்னேன், கருப்பு வெள்ளை படங்கள் கலர் படங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து படங்களின் வசூலை முறியடித்து முதன் முறையாக மதுரையில் 5 லட்சம் வசூல் என்ற பெருமையை பெற்றது பட்டிக்காடா பட்டணமாதான். கருப்பு வெள்ளை படங்களில் இன்று வரை சாதனையாக நிற்பதும் அதுதான்.

    கலர் படங்களைப் பொறுத்தவரை ஏன் எந்தப் படங்களை எடுத்துக் கொண்டாலும் மதுரையில் 5 லட்சம் மொத்த வசூல் என்ற ஒரு இலக்கை பட்டிக்காடா பட்டணமாவிற்கு முன்பு எந்த படமும் எட்டவில்லை. 5 லட்சம் மொத்த வசூல் என்ற வெற்றி இலக்கை எட்டி 5 லட்சத்தையும் தாண்டிய வசூல் பெற்ற முதல் கலர் படமும் நடிகர் திலகத்துடையதுதான். அதுதான் காலத்தை வென்ற காதல் காவியமான வசந்த மாளிகை.

    நியூசினிமாவில் ரூபாய் 5,30,000 -ற்கும் அதிகமான வசூலை பெற்றது வசந்த மாளிகை. மற்றொரு கோணத்தில் பார்த்தால் மதுரையில் ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளிவிழா படங்கள் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஒரே வருடத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான வசூலை பெற்ற இரண்டு படங்களை கொடுத்த முதல் கதாநாயகனும் நடிகர் திலகம்தான்.

    நன்றி அனைவருக்கும்!

    அன்புடன்

  13. #2847
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிப்புப் பள்ளத்தாக்கில் (Valley) காற்றுக்கென்ன வேலி?

    Winds too wind up with NT!

    நாதஸ்வர Cricket ஓட்டம் Vs புல்லாங்குழல் கபடி ஆட்டம் !

    பொங்கிப் பெருக்கெடுக்கும் நீரின் வெள்ளத்துக்கு ஒரு பள்ளத்தாக்கில் அணை கட்டலாம் சுழன்றடிக்கும் சூறாவளிக்கு?

    நடிப்பின் பள்ளத்தாக்கில் காற்றுக்கும் தன்னால் வேலி போட்டு கட்டுப்படுத்தி மனதை வருடும் தென்றலிசையாக அனுப்ப முடியும் என்பதை நிரூபிக்கிறார் காற்றொலி இசை விற்பன்னர் நடிகர்திலகம் !!
    ஏற்கனவே நாதஸ்வரம் என்றதும் சிக்கலாரே ஞாபகத்துக்கு வரும் அளவு ஊதித் தள்ளியவருக்கு புல்லாங்குழல் ஒரு பொருட்டில்லையே !!
    பிரத்தியேக உடையலங்காரம் பக்க வாத்தியங்கள் என்று பில்டப் தேவைப்படும் காற்றிசைக் கிரிக்கட்டில் சதமடித்தவர் எந்த பில்டப்பும் தேவைப்படாத காற்றிசைக் கபடியாம் புல்லாங்குழலாட்டத்திலும் சாம்பியனே!!
    நாதஸ்வர மேதைக்கு முதல் வணக்கம் !



    புல்லாங்குழல் கண்ணனுக்கு முதல் மரியாதை !



    பாட்டும் பாவமுமாகிய இறைவனே புல்லாங்குழல் வாசித்தால் ...?



    கண்ணன் இடத்தில் இந்த ராமன் (எத்தனை ராமனடி!) புல்லாங்குழலை வில்லென்று நினைத்து விட்டாரோ ?!




    புல்லாங்குழலையே நாதஸ்வரமாக்கி 'ஏழுகடல் சீமை அதை ஆளுகின்ற நேர்மை' வாசிக்கிறார் நடிப்பு ராமன்!!



    NTRangan replaces NTR?!

    சர்வாலங்கார கிருஷ்ணன் Vs எளிமையான கண்ணன் /
    ரங்கன்!
    Last edited by sivajisenthil; 11th June 2015 at 01:37 PM.

  14. #2848
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    கலை உலகம் மறந்துவிட்ட மேதை

    மேற்கண்ட பதிவு வெளிவந்த இதழ் நான் பார்க்கவில்லை
    வேறோர் திரியில் வாசித்தேன்

    கலை உலகம் மறந்துவிட்ட மேதை பற்றி அந்த இதழில் எழுதப்பட்ட
    விடயங்கள் அனைத்தும் முழுமையாக நான் வாசித்த திரியில்
    மறுபதிப்பு செய்தார்களா அல்லது பகுதியாக பதிதிவிட்டார்களா என்பது எனக்கு தெரியவில்லை

    பகுதியாக பதிவிட்டவிடத்து ஏனையவற்றை தவிர்த்து
    பதிவிட்டிருந்தார்களா என்பது தெரியவில்லை

    அந்த இதழில் வெளிவந்ததை முழுமையாக பதிவிட்டிருந்தால்
    சொல்லவந்தவிடயம் என்னவோ பட தயாரிப்பானர்
    திரு பந்துலு அவர்கள் பற்றியது

    உலகம் முழுவதும் பேசப்பட்ட படம்
    கெய்ரோ படவிழாவில் பங்குபற்றி பல விருதுகள் பெற்ற படம்
    பந்துலு அவர்கள் வாழ்ந்தவரை அவர் தயாரித்த படங்களில்
    வெள்ளிவிழா கண்ட ஒரே தமிழ் படம்
    வீரபாண்டியகட்டபொம்மன் இதைப்பற்றி எழுதாமல்
    விட்டது சதி சதி சதி அதைவிட வேறு என்ன இருக்கமுடியும்
    காரணம் அங்கே நடிகர்திலகத்தை பற்றி எழுதவேண்டிவந்துவிடும் அல்லவா?

    எனவே நடிகர்திலகத்தை தவிர்க்க பந்துலு அவர்கள் தயாரித்த
    அவர்பற்றி எழுதும்பொழுது தவிர்க்கமுடியாத படத்தை தவிர்த்துவிட்டார்கள்
    டியர் சிவா சார்,

    பந்துலு பற்றிய அந்தக் கட்டுரையில் அவரது எல்லாப்படங்களையும் குறிப்பிடத்தான் செய்திருப்பார்கள். 'அவர்கள்' அவர்களுக்கு தேவையானவற்றை எடிட் செய்து அவர்கள் திரியில் வெளியிட்டுக் கொண்டார்கள்.

    அவர்களைக் குறை சொல்லவில்லை. அவர்கள் நோக்கத்தில் அவர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள்.

    அதைப் புரிந்துகொள்ளாத நம்மில் சிலர்தான் 'ஒற்றுமைப்பாலம்' கட்டும் மேஸ்திரிகளாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

  15. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak liked this post
  16. #2849
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,
    நம்முடைய மய்யம் திரியில் நான் எழுதி வரும் Definition of Style, முகநூலில் என் பக்கத்திலும் பதிவிடப்பட்டு, நல்ல அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது. அங்கு ஒவ்வொரு நண்பருக்கும் என் உளமார்ந்த நன்றியையும் தெரிவித்து வருகிறேன். இங்குள்ள நம் நண்பர்கள் முரளி சார் உள்பட பல நண்பர்கள் அங்கும் நம் குழுவில் உள்ளனர். அவர்கள் உட்பட பலரறிவர்.

    இதில் சிகரம் வைக்கும் விதமாக பாலாடை பற்றிய எனது 25ம் பதிவினை முகநூல் நண்பர் திரு சித்ராலயா ஸ்ரீராம் அவருடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள அதனைப் படித்து நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் யூ.ஏ.ஏ. நாடக நடிகருமான திரு ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உணர்ச்சி பூர்வமான பாராட்டினை அளித்துள்ளார்கள். அதனை நம் நண்பர்களுக்காக மீள் பதிவு செய்வதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.

    Good Morning Shri Chitralaya Sriram, my well wisher, who is Shri Vee Yaar? wonderful analysis!, Vee Yaar,, [யாரோ],ah! He is much more than a writer, Director,, he brought back in vivid detail even the minutest nuances of Thespian , the true legend , master and University of acting Sivaji Ganesan's inimitable and brilliant acting , modulation , timing, delivery of dialogues in his characteristic fashion which is appealing to both mass and class alike, a performer par excellent as Vee Yaar has rightly burst out ,, some self styled professors! of acting used to say that it is over acting! how hallow it is! let them emote with face alone with right contortions of facial muscles and eyes and depict various emotions , exaltations, anguish , shock, horror in correct, in fact, excellent measure! i challenge,!, there is nobody, there shall be nobody! an actors who come somewhat nearer is our own Kamal Hassan here and late Sanjeev Kumar in north,, who else? Hollywood now we may say Alpacino,, they are greats but no way near Sivaji,, my goof friend and celebrity Crazy Mohan used to give a fitting rebuff to people who say Sivaji's was over acting with a caustic remark,, after Sivaji 'acting' is over,, how true1 Vee Yaar's thread bare analysis is rich in content ,pointed , focused and like the name of the film he took up[பாலாடை] yes,, he spoon fed us up with the full histrionic acumen of Sivaji, THE ACTOR, verbatim thorough honest heartfelt narration so full of life and admiration, rightly so,,Vee yaar did the honours with his honest write up full justice for that super human actor called Sivaji Ganesan, we were fortunate to have grown up watching his films,, even failure ones notable for his acting skills, his acting is much more than a poem,, i am unable to continue, overwhelmed with emotion, hats off to Shri Vee Yaar and you too Chitralaya Sriram for capsuling it in your FB page,, God bless you both and all our friends who have been endorsing this great write up!
    மேற்காணும் பதிவு இடம் பெற்ற முகநூல் பக்கத்திற்கான இணைப்பு

    https://www.facebook.com/notes/vee-y...93742120698991

    ரமேஷ் சார், தங்களுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கான பெருமை அனைத்தும் நம் இதயதெய்வத்திற்கே சாரும்.

    தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
    Last edited by RAGHAVENDRA; 11th June 2015 at 03:03 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes kalnayak, Georgeqlj liked this post
  18. #2850
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    l][/URL]
    Last edited by senthilvel; 11th June 2015 at 01:52 PM.

  19. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •