Results 1 to 1 of 1

Thread: தமிழ் தாயின் தலைமகன் நடிகர் திலகம் சிவாஜ

 1. #1
  Senior Member Veteran Hubber RavikiranSurya's Avatar
  Join Date
  Jan 2014
  Posts
  2,912
  Post Thanks / Like

  தமிழ் தாயின் தலைமகன் நடிகர் திலகம் சிவாஜ

  நான் சிவாஜி ரசிகன்!- இது டிஜிட்டல் உலகில் , உலக தமிழர் இன்று பெருமையுடன் உச்சரிக்கும் வார்த்தை !

  சிவாஜி மாதிரி நடிக்க ஒருத்தன் பொறக்கணும் ! - இது திறமையாளர்களை அடையாளம் காணும் உண்மை தமிழர் கர்வத்துடன் இன்று உச்சரிக்கும் வசனம் !

  உலக சினிமாவை கண்டால் தோளில் உள்ள துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்ட இந்திய திரை உலக ஜாம்பவான்கள் மத்தியில், நெஞ்சு நிமிர்த்தி வீறு நடைபோட்டு உலக அரங்கில் தமிழனை தலை நிமிரச்செய்த, இந்திய திரை உலகையே தமிழகத்தை திரும்பி பார்க்க செய்த இந்த திறமையின் ஒட்டு மொத்த சொரூபம் தான் சிவாஜி கணேசன் !

  நடிப்பின் நுணுக்கங்களை நாடி நரம்புகளாக எலும்பு சதையாக உதிரமாக கொண்ட ஒரு ANATOMY ATOM தான் நடிகர் திலகம் !

  நடிப்பின் நுணுக்கங்களை முதன்மையாக கொண்டு, இதர நுணுக்கங்களை படிகளாக கண்டு சகல நுணுக்கங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தாலும் தன்னடக்கத்துடன் தனது தொழிலில் மட்டும் தாக்கம் கொண்டவர் இந்த திரை உலக சித்தர் !

  இவரை பார்த்து கற்றவர் கற்றுகொண்டிருப்பவர், கற்றுகொள்ளபோகிறவர் இப்படி உலக கலை துறை அழிந்தாலும் சாஸ்வதமாய் விளங்கிகொண்டிருப்பவர், விளங்கபோகிறவர் தமிழகத்தின் பெருமையாய் என்றும் இருக்கும் விழுப்புரம் சின்னையா கணேசன் என்கிற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் !

  பாட்டெடுக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்.... படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன ...தென்றலை தீண்டியதில்லை நான்...தீயை தாண்டியிருக்கிறேன் ! - இது கலை தெய்வம் சிவாஜி அவர்களின் முதல் பட CLIMAX வசனம் !

  எவ்வளவு நிதர்சனமான உண்மை !!!

  இந்த உண்மை கலைஞன் இறந்த பிறகும் கூட இவைகளை நித்தமும் சந்தித்துக்கொண்டு இருக்கிறாரே !

  எனது பார்வையில் தொடக்கம் முதல் இன்றுவரை ...இன்றுமட்டும் ஏன் நாளை கூட இவருக்கு நடக்கபோவதை ஒரு விசேஷ பயிற்சியின் மூலம் ஆறாம் அறிவிற்கும் அப்பால் சிந்தித்து அதில் வளைய வரும் எண்ணங்களை எழுத்துக்களாக இங்கு பதிவு செய்ய இருக்கிறேன் !

  கடந்த காலங்களில் இவர் பெயர் எப்படியெல்லாம் அரசியல் காழ்புணர்ச்சியால் மாசுபடுத்தபட்டுள்ளன....இருந்தும் அந்த ஈன செயல்களை செய்தவர்களுக்கு உணவு மணக்கும் ஒரு கருவேப்பிலையாக உதவி புரிந்தவர் என்பதை தொழில்நுட்ப உதவி கொண்டு மையத்தின் உதவியுடன் உலகறிய செய்வதே எனது அவா !

  அவருக்கு தீங்கு செய்தவர்கள், சதி நேரிடையாக, மறைமுகமாக செய்தவர்கள் இதை படித்தால் நிச்சயம் எதிர் காற்று வீசும் என்ற நம்பிக்கையுடன் ....நான் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன் !

  உண்மையை நேசிக்கும் அனைவரின் வாழ்த்துக்களும் ஊக்கமும் நிச்சயம் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் !

  முழுக்க முழுக்க இது எனது பார்வையில் உள்ள அனுமானம் மட்டுமே !

  RKS
  "நடிகர் திலகம்" "செவாலியே" "பத்மஸ்ரீ" "பத்மபூஷன்" சிவாஜி கணேசன் -
  THE ONLY WONDER OF WORLD CINEMA AND THE BOX OFFICE SAMRAAT SINCE 1952 !

  உலக நடிகர்களிலேயே வல்லரசு எனப்படும் அமெரிக்காவின் அதிபராம் திரு JOHN F KENNEDY கலாசாரா தூதுவராக கௌரவித்த ஒரே இந்திய நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

  நான்குகண்டங்களின் அரசாங்கத்தாலும் பட்டமும் பதவியும் கொடுத்து கௌரவிக்கப்பட்ட ஒரே உலக நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

  THE WORLD's MOST PRODUCER & DISTRIBUTOR FRIENDLY HERO..!

 2. Thanks sss thanked for this post
  Likes sss liked this post
 3. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Posts
  Many
   

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •