Page 234 of 401 FirstFirst ... 134184224232233234235236244284334 ... LastLast
Results 2,331 to 2,340 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

  1. #2331
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like




    திரு. கோபால்,

    தெருவில் வரையப்படும் ஓவியங்களும் சரி, அதை வரைபவர்களும் சரி தரம் குறைந்தவையோ, தரம் குறைந்தவர்களோ அல்ல. ஆர்ட் காலெரியில் குளுகுளு அறையில் படங்களை பார்த்து ரசிக்கிறார்களே சொகுசானவர்கள், அவர்கள் அப்படி ரசிப்பதற்கு ஆர்ட் காலெரியையும் குளுகுளு வசதியையும் ஏற்படுத்தி தருபவர்களே தெருவில் வசிப்பவர்கள்தான். ஆர்ட் காலெரியில் வைக்கப்பட்டிருக்கும் சில மாடர்ன் ஆர்ட்கள் யாருக்கும் புரியாது என்ற விமர்சனங்களும் உண்டு.

    காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் திலகத்தையோ அவர் திரியையோ தாழ்த்திப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2332
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    super reply kalai venthan sir



    Quote Originally Posted by KALAIVENTHAN View Post




    திரு. கோபால்,

    தெருவில் வரையப்படும் ஓவியங்களும் சரி, அதை வரைபவர்களும் சரி தரம் குறைந்தவையோ, தரம் குறைந்தவர்களோ அல்ல. ஆர்ட் காலெரியில் குளுகுளு அறையில் படங்களை பார்த்து ரசிக்கிறார்களே சொகுசானவர்கள், அவர்கள் அப்படி ரசிப்பதற்கு ஆர்ட் காலெரியையும் குளுகுளு வசதியையும் ஏற்படுத்தி தருபவர்களே தெருவில் வசிப்பவர்கள்தான். ஆர்ட் காலெரியில் வைக்கப்பட்டிருக்கும் சில மாடர்ன் ஆர்ட்கள் யாருக்கும் புரியாது என்ற விமர்சனங்களும் உண்டு.

    காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் திலகத்தையோ அவர் திரியையோ தாழ்த்திப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  4. #2333
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    அன்பு நண்பர் செந்தில்வேல் அவர்களுக்கு

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    gkrishna

  5. Thanks Georgeqlj thanked for this post
  6. #2334
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler : Beach songs with NT!

    கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!

    Part 1 : Annai Illam ! அன்னை இல்லம்

    கடற்கரையில் மணலினூடே காலாற நடப்பது ஒரு சுகம் ! பீச்சில் சுண்டல் சுவைத்து காதலியுடன் உலகை மறப்பதும் சுகமே!!காதலியைக் கலாய்ப்பதும் சுவாரஸ்யமே!


    கடலில் உக்கிரமாக எழும் அலைகள் ஆர்ப்பரித்து அடங்குவது கடற்கரை எல்லையிலேயே !!
    மனதில் எழுந்த காதல் அலைகளை நண்பருடன் பகிர்ந்து மன சாந்தமடைகிறார் நடிகர் திலகம் !


    Last edited by sivajisenthil; 22nd May 2015 at 07:01 PM.

  7. Thanks Georgeqlj thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai liked this post
  8. #2335
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan - Definition of Style 21

    பாலும் பழமும்

    பாலும் பழமும்..

    பல காட்சிகளில் நுட்பமான நடிப்பில் நடிகர் திலகம் நம்மை மயக்கி விடுவார்..

    எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று Contrivation... பொதுவாக Contrivation...என்றால் வலுவில் திணிக்கப் படுவது அதனால் அதில் செயற்கை இருக்கும் என்கிற அபிப்ராயம் உண்டு. ஆனால் அந்த Contrivation...என்கிறதையே யதார்த்தமாக மாற்றிய பெருமை பீம்சிங்கையே சாரும். டாக்டருக்குத் தன் கடமை உணர்ச்சியைப் புரிய வைக்க சாந்தி வெள்ளைக் கோட்டு அணிந்து டாக்டராக உருவகப்படுத்தி ரவிக்குப் புரிய வைக்கும் காட்சி. பேசப்படாது, நான் இப்போ டாக்டர் ரவி. நான் தான் நீங்க என சொல்வதும் அதற்கு உடனே நடிகர் திலகம் அப்போ நீங்க தான் நாங்களா எனக் கேட்டு விட்டு உடனே குரலை மாற்றி பெண் குரலில் பேசுவதும்...

    ஆஹா.. யதார்த்தம் என்றால் இதுவல்லவோ யதார்த்தம்.. இயற்கை நடிப்பு என்றால் இதுவல்லவோ இயற்கை நடிப்பு..

    இந்த இடத்தில் தலைவர் ஒரு விதமான புன்னகையோடு, அவள் சொல்வதைப் புரிந்து கொண்டே வருவதைத் தன் முகத்திலேயே பிரதிபலித்து, அப்படியே தன் கடமை உணர்ச்சி உந்த அமரும் இடம்...அந்த உட்காரும் விதத்திலேயே அந்த பாத்திரத்தின் மனதை வெளிப்படுத்தும் உன்னதம்...

    சரோஜாதேவி சொல்லச் சொல்ல அந்த முகத்தில் மெலிதாக வெளிப்படும் பல்வேறு உணர்வுகள்,

    பேரும் புகழுமாய் நீங்கள் கழுத்தில் மாலையுடன் வந்து நிற்பதை நான் பார்க்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது என்று சரோஜா தேவி சொல்லும் போது லேசாக கண்களை அவள் பக்கம் திருப்பி தான் அவளை கவனிப்பதாக நமக்கு உணர்த்தும் யுக்தி, அவள் காபி கொண்டு வரப் போனவுடன் அந்த சிந்தனையுடனேயே நம்மை கர்வத்தோடு புருவத்தை நிமிர்த்திப் பார்க்கும் பார்வை...

    அது மட்டுமா. உடனேயே காட்சி சீரியஸாகி விடுகிறது. சாப்பிட உட்காரும் சாந்தியை அவரழைக்க, உடனே ஓடுவதும். (அழகுப் பதுமையாகவே வலம் வந்த சரோஜாதேவி அவர்களின் நடிப்பில் புதிய பரிமாணத்தை அறிமுகப் படுத்தியது பாகப்பிரிவினை என்றால் அதை அழுத்தமாக நிரூபித்தது பாலும் பழமும், அதற்கு இந்தக் காட்சி ஒரு பானை சோற்றில் ஒரு பதம்.. கையைக் கழுவிக் கொண்டு அவர் ஓடும் இடம் குறிப்பிட வேண்டும்.) அப்போது டாக்டர் தன் மருத்துவ உபகரணங்களைப் பார்த்துக் கொண்டே அவளுக்கு உத்தரவிடுவதும், அதை அவர் எடுக்கச் செல்வதும்.. அந்த அளவிற்கு கேஷுவலாக இருக்கும். அதுவும் அந்த மருந்துகளின் பெயர்களை நடிகர் திலகம் உச்சரிக்கும் போது..
    யாராவது அங்கே சிவாஜியை நினைப்பார்களா... டாக்டர் ரவியைத் தானே பார்ப்பார்கள்.. இதற்கு மேல் இயற்கை நடிப்புக்கு உதாரணம் வேறென்ன வேண்டும்..
    உடனே அங்கு வசனத்தின் பங்கு குறைந்து மெல்லிசை மன்னர் காட்சியைத் தன்வசம் எடுத்துக் கொண்டு விடுவார்.

    இந்தக் காட்சி படத்தில் என்னை மிகவும் ஈர்த்த காட்சி.. கோபாலின் எழுத்தில் இந்தப் படத்தைப் பற்றிப் படித்தவுடனேயே என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இவை.




    பார்க்க 49.45 நிமிடத் துளியில்.
    Last edited by RAGHAVENDRA; 23rd May 2015 at 06:46 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes KCSHEKAR, Russellmai, Gopal.s, Georgeqlj liked this post
  10. #2336
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோபால்.. என்று புதிய பறவை படத்தின் க்ளைமாக்ஸில் சரோஜா தேவி நாயகனிடம் நான் தோற்று விட்டேன் என்று கூறும் அந்த குரலில் நம் கோபாலைப் பார்த்து நான் கூவ வேண்டும் போல் தோன்றுகிறது... தங்களுடைய எழுத்தில் பாலும் பழமும் பொங்கும் தமிழமுதாய் பிரவாகமெடுக்க பருகக் காத்திருக்கும் எங்களிடம் ஏனிந்தக் கோபம் என்று மனம் கேட்கிறது...

    Please be cool Gopal. It was for pure fun and nothing underlined. முந்தைய பதிவில் நான் குறிப்பிட்டிருக்கும் என் எண்ணங்கள் தங்களுடைய பாலும் பழமும் படத்தைப் பற்றிய பதிவைப் படித்த உடனேயே தோன்றியவை. நம் அருமை நண்பர்களின் பதிவுகள் தொடர்ச்சியாக வந்ததாலும் எனக்கும் உடனடியாக பதில் போடுவதற்கான அவகாசம் கிடைக்காததாலும் சற்று மெதுவாக போடலாம் என்றிருந்தேன். அவ்வளவே.

    பாராட்டுவதைப் பற்றி முரளி சார் சொன்னதே என் கருத்தும். சொல்லப் போனால் என்னை விட தங்களுக்குத் தான் அதிகம் பொருந்தும். அனைத்து விதமான பாராட்டுக்களுக்கும் அப்பாற்பட்ட தங்களை வித்தியாசமான விதத்தில் பாராட்டலாம் என்று தான் முரளி சாரை நகைச்சுவையாக சீண்டினேன்.

    Nothing else intended. Please take it in lighter vein.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Thanks Georgeqlj thanked for this post
    Likes KCSHEKAR, Russellmai, Gopal.s liked this post
  12. #2337
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் செந்தில்வேல் அவர்களுக்கு

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  13. Thanks Georgeqlj thanked for this post
  14. #2338
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler 2 : Beach songs with NT!

    கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!

    Part 2 : நெஞ்சிருக்கும் வரை

    வாழ்ந்தே தீருவோம் என்னும் நேர்மறை எண்ணமே நம்மை வாழ வைத்து விடுமே ! மூன்று பிரம்மச்சாரி நண்பர்கள் கவலை மறக்க கலக்கியெடுக்கும் கடல் கரையோர ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!! Watch NT's meticulous steps while Gopi and Muthuraaman try dancing steps with observing side eyes on NT!!

  15. Likes KCSHEKAR, Russellmai, Gopal.s liked this post
  16. #2339
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Gap filler 3: Beach songs with NT!

    கடற்கரை கான அலைகள்! காதல் வலைகள்!! கற்பனை சிலைகள்!! மனித மன நிலைகள்!!!

    Part 3 : உத்தமன்

    கடல் மட்டும் அலைகளின் சீற்றத்தால் பொங்குவதில்லை மனித மனமும் பொங்குமே கைப்பிடித்த காதல் பூங்கொடியாள் கைகழுவிச் செல்லுன்போது !
    சிலை வடித்து முடிக்கும் முன்னே தலை வெடித்துப் போன கதையை கடற்கரையோரம் வெளிப்படுத்துகிறார் நடிப்பின் உத்தமர் !!
    மாயாஜாலம் புரியும் நடிகர்திலகத்தின் மாறிமாறி மின்னும் முகபாவங்கள் வானவில்லின் வர்ணஜாலமே! பின்னணி இசையும் பாடல் வரிகளும் பொதிந்த அர்த்தங்களும் நம்மை ஏதோ இனம் புரியாத பரவச நிலைக்கு உட்படுத்துவது உளவியல் விந்தையே ! அது நடிகமன்னனின் நடிப்புக் களவியல் சிந்தையே !!




    But...enjoy 6'2" Sean Connery's beach song 'underneath a mango tree...' in his James Bond/OO7 intro movie DrNo even as Ursula Andress emerges out of the sea like Venus!!
    This is a bonus!!



    Connery's back pose with a blue T-shirt reminds me of NT with a red/maroon T-shirt in Ooty varai Oravu in the song Poo Maalaiyil Oar Malligai!!
    Last edited by sivajisenthil; 22nd May 2015 at 10:28 PM.

  17. Likes KCSHEKAR, Russellmai liked this post
  18. #2340
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    //நடிகர் திலகம் திரியில் பதிய ஒரு பெரிய பதிவு தயார் செய்து கொண்டிருந்ததால் மெய்மறந்து அதிலேயே மூழ்கி விட்டேன். (நமக்குதான் நடிகர் திலகம் என்றாலே நானூறு நாளுக்கு பசி, தூக்கம் இருக்காதே)//
    எங்கே?எங்கே?வாசு?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •