Page 319 of 400 FirstFirst ... 219269309317318319320321329369 ... LastLast
Results 3,181 to 3,190 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

  1. #3181
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    ‘அன்னை மடியை விரித்தாள் எனக்காக...’

    நியூட்ரினோ திட்டம் குறித்து எழுதுவேன் என்று சொல்லியிருந்தேன். அதுகுறித்து இந்தப் பதிவு.


    தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. முதலில் நியூட்ரினோ என்றால் என்னவென்று பார்ப்போம்.

    உலகின் அனைத்துப் பொருட்களும் உயிர்களும் (நாம் உட்பட) அணுக்கள் எனப்படும் மிகச்சிறிய துகள்களால் ஆனவை. ஒரு பொருளை கூறுபோட்டுக் கொண்டே போனால், இனிமேலும் பகுக்க முடியாது என்ற நிலையில், கண்ணுக்குத் தெரியாத துகளே அணு.19ம் நூற்றாண்டின் இந்த அணுக்கொள்கையையும் மீறி, பின்னர் வந்த ரூதர் போர்ட் போன்ற அறிவியலாளர்கள் அணுக்களை பகுக்க முடியும் என்றும் அதன் வெளிப்புறம் எலக்ட்ரானாலும் உட்புறம் புரோட்டான் மற்றும் நியூட்ரான் துகளாலும் ஆனது எனக் கண்டறிந்தனர். இந்த அணுக்களை பிளப்பதன் மூலம் மாபெரும் சக்தி உண்டாகிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

    அந்த சக்தியைப் பயன்படுத்தி அணுமின்சாரம் தயாரிப்பு போன்ற ஆக்க வேலைகளையும் செய்யலாம். அணுகுண்டு, நியூட்ரான் குண்டு தயாரிக்கும் அழிவு வேலைக்கும் பயன்படுத்தலாம் (உலகம் சுற்றும் வாலிபனில் விஞ்ஞானி முருகனாக வரும் தலைவர் உலகை அழிக்கும் அணுசக்தியை கண்டுபிடிப்பாரே. இப்படித்தான்) அணுவில் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் தவிர வேறு சில துகள்களும் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து அதற்கு நியூட்ரினோ என்று பெயரிட்டனர். மிகவும் எடை குறைவான ஒளியின் வேகத்தை உடைய நியூட்ரினோ துகள், பூமியின் ஒருபுறம் ஊடுருவி மறுபுறம் எந்த பாதிப்பும் இன்றி வெளிவரக் கூடியது.

    இந்த நியூட்ரினோ ஆராய்ச்சிக்காக பிரெடரிக் ரெய்னெஸ், மற்றும் கிளைட் கோவன் ஆகியோருக்கு 1995ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதுபற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்
    .

    http://www.nobel-winners.com/Physics...ck_reines.html

    நியூட்ரினோவை ஆக்கசக்திக்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமா? என்பதற்கான சோதனை செய்வதற்கான ஆய்வகத்தைத்தான் தேனி மாவட்டத்தில் கொண்டுவர முயற்சிக்கிறது மத்திய அரசு.

    அறிவியல் வளர்வதையோ அதன் மூலம் மக்கள் பயன்பெறுவதையோ யார்தான் எதிர்ப்பார்கள்? ஆனால், இந்த ஆராய்ச்சிக் கூடம் மேற்குத் தொடர்ச்சி மலையை 2 கி.மி.தூரத்துக்கு குடைந்து அமைக்கப்பட வேண்டும் என்று திட்டம். இதனால், சுற்றுச் சூழல் பாதிக்கப்படும். விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். வனவளம் அழியும். மேற்கு தொடர்ச்சி மலையை பாரம்பரிய சின்னமாக ஐ.நா.சபை 2012-ல் அறிவித்தது. அதைப் பாதுகாப்பதற்கு பதிலாக அதை குடைய நினைக்கிறது மத்திய அரசு. முக்கியமாக, ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக கேரள அரசு கூறி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த மறுக்கிறது. நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் நடவடிக்கையால் 50 கி.மீ. தூரத்தில் உள்ள அணைக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உண்டு.

    சரி... எல்லா ஆய்வுகளுக்கும் இப்படி எல்லாம் ஆபத்துக்கள் இருக்கத்தான் செய்யும் என்று வாதிட்டாலும், இந்த திட்டத்தால் பயன் உறுதியா என்றால் அதுவும் இல்லை. பயன் ஏதாவது கிடைக்குமா? என்று பரிசோதிக்கவே இந்த ஆய்வகமாம்.

    இயற்கையை அழிக்க நினைத்தால் அந்த இயற்கையே நமக்கு எதிராக திரும்பும். பாசம் படத்தில் தலைவர் பாடும்..

    ‘உலகம் பிறந்தது எனக்காக
    ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்ந்தது எனக்காக
    அன்னை மடியை விரித்தாள் எனக்காக...’

    பாடல் இயற்கை அன்னையின் அழகையும் மனித குலம் செழிக்க அள்ளித் தரும் அவள் கருணையையும் நமக்கு விளக்கும். இப்படி நமக்காக படைக்கப்பட்ட உலகையும் இயற்கையையும் அழிக்க நாம் நினைத்தால் அழிவு நமக்குத்தான்.

    இந்த நேரத்தில், நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து சட்ட ரீதியாக போராடி, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதிக்க காரணமாக இருந்த மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ பாராட்டப்பட வேண்டியவர். யாராக இருந்தால் என்ன? நல்லது செய்தால் தலைவர் வழியில் பாராட்டுவோமே. அதிலும் அவர் பேரறிஞர் அண்ணாவின் தம்பிமார்களுள் ஒருவர், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதில் மகிழ்ச்சி. தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி வழங்கும்வரை இடைக்காலத் தடை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியம் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்காது என்று நம்புவோம்.

    ஏற்கனவே, தண்ணீர் இல்லாமலும், உரவிலை உயர்வாலும், விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமலும் விவசாயிகள் அல்லல்படுகின்றனர். இருக்கும் விளை நிலங்களையும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வளைத்து பிளாட் போட்டு விற்கின்றனர். ஆராய்ச்சி என்ற பெயரில் நியூட்ரினோ, மீத்தேன் (இதுபற்றி அடுத்து எழுதுகிறேன்)போன்ற திட்டங்களால் விவசாயம் மேலும் அழியும்.

    என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பல்லாண்டு வாழ்க திரைக்காவியத்தில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தன் பொறுப்பில் தனியாக அழைத்துச் சென்று தங்கவைத்து கொஞ்சம் கொஞ்சமாக கைதிகளை பண்படுத்தும் தலைவர், அவர்களின் துணையோடு நிலத்தையும் பண்படுத்துவார். அந்த நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டு அவற்றை குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்குவார்.

    காய்கறிகளை விற்கபோகும்போது மாட்டு வண்டியில் குவிந்து கிடக்கும் காய்கறிகளைப் பார்த்துவிட்டு, கைதிகளிடம் தலைவர், ‘‘மனுஷனை மனுஷன் ஏமாத்தலாம். மண் மாதா ஏமாத்த மாட்டாள்.நெற்றி வேர்வை நிலத்தில் விழ பாடுபட்டால் பூமித்தாய் பொன்னாய் கொட்டிக் கொடுப்பாள்’’ என்று விவசாயத்தின் சிறப்பை தலைவர் கூறுவார்.

    கிளைமாக்சில், குறைந்த விலைக்கு காய்கறி விற்கப்படுவதை பொறுக்காத, கொள்ளை லாபம் அடிக்க நினைக்கும் வியாபாரியும், தலைவரால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதியும் சேர்ந்து இயற்கை அன்னையின் மடியில் விளைந்த காய்கறிகளையும் அந்த தோட்டத்தையும் பாழ்படுத்த யானைகளோடு வருவார்கள். அந்த காட்சியில் நேவி ப்ளூ நிற பேண்ட், ஷர்ட் மற்றும் ஓலைத் தொப்பியுடன் தலைவர் ‘நச் ’.

    மக்களுக்கு பயன்படும் உணவுப் பொருட்களை அழிப்பதை அனுமதிக்க முடியாது. அந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துவோம் என்று கூறி, நல்ல மனிதர்களாக மாறிவிட்ட கைதிகளின் துணையோடு அவர்களை விரட்டியடிப்பார். அப்போதும் கூட தானே தலைவன் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ள மாட்டார். நாமெல்லாம் அண்ணாவின் தம்பிகள் என்று கூறி, ஒவ்வொரு கைதியாக தன்னை ஒன்னாம் தம்பி, இரண்டாம் தம்பி.... என்று வரிசையாக கூற, எல்லாரும் கூறி முடித்த பின் தலைவர் தன்னை அடக்கத்துடன், கடைசி தம்பி.. என்று கூறியவாறே வில்லன் கூட்டத்துடன் மோதி வெற்றி பெறுவார்.

    இயற்கை வளங்களையும் விவசாயத்தையும் அழிப்பதை சமூக அக்கறையும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வும் கொண்டோர் அனுமதிக்கக் கூடாது. சட்ட ரீதியாக போராட வேண்டியது அவசியம்.

    அது சரி.... எனக்கு ஒன்று புரிவதே இல்லை. பெரிய தொழிற்சாலைகள், நல்ல திட்டங்கள் எல்லாம் இங்கு வருவதே இல்லை. மீத்தேன் திட்டம் , நியூட்ரினோ திட்டம் போன்றவற்றை மட்டும் இங்கு கொண்டு வருகின்றனர். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த மாநிலமான குஜராத்திலோ அல்லது உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலோ இந்த திட்டங்களை செயல்படுத்தாதது ஏன்? இவையெல்லாம் நல்ல திட்டங்கள் என்றால் முதலில் அங்கு செயல்படுத்திப் பார்க்கட்டுமே?

    ஒரு மருந்தை மக்களிடம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னால், அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா? என்று அறிய அதை முதலில் எலி, குரங்கு போன்றவற்றுக்கு கொடுத்து பரிசோதிப்பார்கள். அவற்றைவிட கீழானவன் தமிழன் என்று நினைக்கிறார்களோ என்னவோ?

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
    Last edited by KALAIVENTHAN; 31st March 2015 at 06:50 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3182
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    வல்லமை இணைய தளத்தில் மனதில் நிறைந்த மக்கள் திலகம் கட்டுரை பகுதியில் நம் இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்கள் எழதி அனுப்பிய கட்டுரை இடம் பெற்றுள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி . மக்கள் திலகத்தின் மாண்புகளை அழகாக பதிவிட்டுள்ள திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி . கட்டுரையை திரியில் பதிவிட்ட இனிய நண்பர் திரு குமார் அவர்களுக்கு நன்றி .

    கலைவேந்தன் சார்
    இன்று மாலை உங்கள் மின்னல் வேக 11 பதிவுகள் . அருமை .மக்கள் திலகத்தின் படங்களின் காட்சிகளுடன் இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சியை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளது மிக சிறப்பாக இருந்தது .

  4. #3183
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by varadakumar sundaraman View Post
    very nice still.

    Thanks kumar sir

  5. #3184
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #3185
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Varadakumar Sundaraman View Post
    makkal thilagam mgr thread- senior hubber thiru selvakumar's article ''மனதில் நிறைந்த மக்கள்திலகம்''is publshed in ''vallamai'' to day.



    படிக்காத பாமரர்களுக்கு எம். ஜி. ஆர். ஓர் பல்கலைக்கழகம்



    புராணக்கதைகளில், ஆண்டவனைப் பற்றி கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், நாம் ஆண்டவனை நேரில் பார்த்ததில்லை. கருணையின் வடிவமாக, நம் தமிழகத்தை ஆண்டவர். கலியுக கடவுளாக புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களைத்தான் நான் பார்த்து பரவசமடைந்துள்ளேன்.

    பாசமிகு நேசத்தலைவராம், பொன்மனச்செம்மல் அவர்கள். “குடியிருந்த கோயில்” காவியத்தில் அன்னையின் அன்பிற்குக் கட்டுப்பட்டு, மனம் திருந்திய மைந்தனாக, பாசத்தை வெளிப்படுத்தும் சகோதரனாக, அவர் வெகு இயல்பாக நடித்த காட்சிகளும், கதையமைப்பும், இனிய பாடல்களும், என்னுடைய அந்த 12 வயதில் அவருடைய தீவிர ரசிகனாக மாற்றியது. பலரது எதிர்காலம் இந்த 12 வயது விடலைப்பருவத்தில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாயும் பருவம் அது. எதிர்மறையான அணுகுமுறைகளால் வாழ்க்கையே திசை மாறும்.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில், தொடர்ந்து, மக்கள் திலகத்தின் பழைய, புதிய காவியங்களைப் பார்த்து, ஒரு குறிக்கோளாக, இப்படித்தான் வாழவேண்டும் என்ற இலட்சிய வேட்கை கொண்டு வாழ்ந்து வருகிறேன்.

    எழில் வேந்தன் எம். ஜி. ஆர். நடித்த காவியங்களில், மூடநம்பிக்கை காட்சிகள் கிடையாது. அதே சமயம், மூட நம்பிக்கைகளை ஒழிக்கிறேன் என்று கூறி மற்றவர்களின் நம்பிக்கையை அவர் கொச்சைப்படுத்தவில்லை. அவரது எல்லா காவியங்களிலும், எவருடைய மனதையும், புண்படுத்தாமல் , காயப்படுத்தாமல், காட்சிகள் அமைந்திருக்கும்.

    குணக்குன்று எம். ஜி. ஆர். சில காவியங்களில், காட்சியமைப்பின் படி, எதிர்மறையான கதா பாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதிலும் ஒரு அறிவுரை வழங்கும் நற் செய்தியினை வெளிப்படுத்தி இருப்பார். உதாரணமாக, “எங்க வீட்டு பிள்ளை” காவியத்தில், கதைப்படி நாயகன் சிற்றுண்டி விடுதிக்குச் சென்று அங்கு சிற்றுண்டி சுவைத்து விட்டு, அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் நழுவி விடுவார். காட்சியமைப்பை அத்துடன் விட்டிருக்கலாம். ஆனால், தனது படத்தைப் பார்க்கும் ரசிகன் இந்த தவறைச் செய்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், சிற்றுண்டி விடுதியை விட்டு வெளியேறிய பிறகு, ” ச்சே, எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன், சிற்றுண்டிக்கான பணத்தை கொடுக்காமல் வந்து விட்டோமே” என்று வருத்தப்படும் வசனத்தை பேசுவார். அதே போன்று, “ஒளி விளக்கு” காவியத்தில், நாயகன் கதைப்படி, மதுப் பழக்கம் கொண்டவனாக இருந்தாலும், தனது ரசிகன் “குடிப்பழக்கத்துக்கு ஆளாகி விடக்கூடாது” என்ற எண்ணத்தில், நாயகனின் மனசாட்சி பாடுவதாக “தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா” என்ற பாடல் எதிரொலிக்கும். காதல் பாடலில் கூட, விவசாயத்தின் முறைகளை எடுத்துரைத்து, ஒரு தமிழக பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வலியுறத்தி “இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளே” என்ற பாடலை பாடுவார். இப்படி பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    நடிகப்பேரரசர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஒவ்வொரு ப(பா)டமும், முழுக்க முழுக்க ஜன ரஞ்சகமான பொழுது போக்கு அம்சங்களுடன், நற்போதனைகளையும், நற்கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாகவே இருக்கும். அதே நேரத்தில், கதையின் மெருகு குலையாமல், எக்காலத்துக்கும் ஏற்ப சமுதாய முன்னேற்றத்துக்கான புத்துணர்ச்சியுடன், பாடல்களும், வசனக்காட்சிகளும் அமைந்து இருக்கும். சோர்ந்து போய் சோகமாக இருக்கும் தருணங்களில், கலைச்சுடரின் காவியப்பாடல்களை கேட்கும் பொழுது, இனம் புரியாத ஒரு இன்பமும், எழுச்சியும் காணப்படும். இதை, பல முறை நான் அனுபவித்துள்ளேன். மருத்துவத்துக்கும் இல்லாத இந்த சக்தி அவரது படங்களை காண்பதிலும், பாடல்களை கேட்பதிலும் உள்ளது என்றால், அவர் உண்மையிலேயே ஒரு அற்புத, அபூர்வ சக்தி என்றே கூறலாம். மனிதப் புனிதராம் எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். ஒரு எட்டாவது அதிசயம் தான், தனிப்பிறவி என்றே தான் சொல்ல வேண்டும்.

    சமுதாய விழிப்புணர்ச்சி, தாய் நாடு மற்றும் தாய் மொழிப்பற்று கொண்டதாக விளங்கும் கலைவேந்தன் எம். ஜி. ஆரின் காவியங்கள், என் போன்ற ரசிகர்களை கவர்ந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஏன், இன்றைய இளம் தலைமுறையினரும், அவரது காவியங்களைத்தான் ரசிக்கிறார்கள். சமீபத்திய எடுத்துக்காட்டு … பல முறை திரையிடப்பட்டும், தமிழகத்தின் நிரந்தர வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களின் “ஆயிரத்தில் ஒருவன்” காவியம் வெள்ளி விழா கண்டு மொத்தம் 190 நாட்கள் ஓடி, உலக சினிமா வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி சாதனை கண்டது. வரலாறு படைத்த நம் வள்ளல் எம். ஜி. ஆர். அவர்கள் கதாநாயகனாக நடித்த 115 காவியங்களில் சுமார் 85 சதவிகிதம் இன்றும், தமிழகத் திரையரங்குகளை ஆக்கிரமித்து கொண்டு தான் வருகிறது. உலகெங்கிலும், ரசிகர்களை கொண்ட ஒரு மாபெரும் தமிழ் நடிகரும் எம். ஜி. ஆர். அவர்களே ! தமிழகத்தில் இணையதளம், முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் போன்றவற்றில் அதிகம் பதிவிடப்படுவதும் சொக்கத்தங்கம் எம். ஜி. ஆர். அவர்களைப்பற்றிய செய்திகளும், புகைப்படங்களும் தான். அவ்வளவு ஏன், மறைந்து கால் நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் அவரை பற்றி போட்டிக்கட்டுரை வெளியிடுவதும் “வல்லமை” போன்ற பிரசித்தி பெற்ற இணைய தளங்களே ! உலகெங்கிலும், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு இவர்களுக்கு அடுத்தபடியாக பேசப்படும் ஒரே தமிழக நபர் எழிலான முகராசி கொண்ட எங்கள் தங்கம் எம். ஜி. ஆர். என்பதில், ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படக்கூடியதாகும்.

    நடிகராக இருந்தபொழுதே, தான் சம்பாதித்தை, நாட்டு மக்களின் நலனுக்காக, அள்ளி அள்ளி கொடுத்து, “கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்” என்றழைக்கப்பட்டார். கடையெழு வள்ளல்களும், அரசுகருவூலத்திலிருந்து தான் வாரி வழங்கினார்கள். ஆனால் நம் எட்டாவது வள்ளலோ, இதிலும், ஒரு புதிய சரித்திரத்தையே உருவாக்கினார். இளம் வயதில் பசியின் கொடுமையை அனுபவித்த காரணத்தால், மக்களின் உண்மைத் தலைவராகி, ஆட்சிகட்டிலில் அமர்ந்தவுடன், குழந்தைகளின் பசியினைப் போக்கிட, சத்துணவு திட்டத்தை கொணர்ந்த சமதர்ம சமுதாய காவலன் அல்லவா நம் கொள்கைத்தங்கம்.

    எத்தனை சம்பவங்கள், எத்தனை எத்தனை அனுபவங்கள்? அதில் எவ்வளவு படிப்பினைகள்? படித்தவர்களுக்கு பாடசாலை, படிக்காத பாமர மக்களுக்கு அவர் ஓர் பல்கலைக்கழகம். அதனால்தான் அவர் “வாத்தியார்” என்றும் போற்றப்படுகிறார். நாட்டு மக்களின் வாட்டம் போக்கிட நலத்திட்டங்கள் பல தீட்டி தமிழக முதல்வர்களில் ஓர் ஒளிவிளக்காகத் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல! “ஓடி ஓடி உழைக்கணும்” என்ற உழைப்பின் உயரிய தத்துவத்தை மக்கள் மனதிலே நன்கு பதிய வைத்தது மட்டுமல்லாமல், வலிய ஓடோடி சென்று உதவிகள் புரிந்தது, அந்த முப்பிறவி கண்ட மூன்றெழுத்து மந்திரத்தின் தனிப்பாணி.

    வளர்ந்து வரும் தலைமுறைக்கு ஆசைமுகமாய் காணப்படும் பண்பின் இருப்பிடம், அன்பின் பிறப்பிடம், பாசத்தின் உறைவிடம், பேரறிஞர் அண்ணா அவர்களின் இதயக்கனியாம் நம் எம். ஜி. ஆர். அவர்களின் சீரிய அறிவுரைகளும், போதனைகளும். எதிர்கால இந்தியாவை வளமான வல்லரசாக மாற்றக்கூடிய இக்கால இளைஞர்களுக்கு அவசியம் தேவை. திரைவானில் மட்டுமல்ல, அரசியில் வானிலும், கொடி கட்டிப் பறந்து கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நாயகன். பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தவன், வாழ்ந்தவன், அவருடன் சிற்சில சமயங்களில் பழகிய வாய்ப்பும் கிட்டியவன் என்று எண்ணும்போது, நான் பிறவிப்பயனை அடைந்து விட்டேன் என்றே கூற வேண்டும்.

    “எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை !
    அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை !”

    படித்து, பல பட்டங்கள் பெற்று இன்று உயர்ந்த நிலையில் இருந்தாலும், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பக்தன் என்று அழைக்கப்படுவதில்தான் எனக்குப் பெருமை. எனது வாழ்வில் நான் பெற்ற பாக்கியம் எம். ஜி. ஆர். ரசிகன் என்ற உயரிய பதவி !



    பல புனித நூல்கள் பல நூற்றோண்டுகளாக செய்ய நினைத்ததை பொன்மனச்செம்மல் அவர்கள் தனது திரைகவியங்கள் மூலம் பாமரமக்களுக்கு சென்றுஅடைய செய்தார்.

  7. #3186
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    இராமநாதசேதுபதி:
    இன்றும் இரட்டை வேடம் என்றவுடன் எங்க வீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆர் மாதிரியா?
    என்றுதான் சிலாகித்துப் பேசுவதைக் காண்கிறோம்.எம்.ஜி.ஆர் படங்களுக்கு முன்னரும்
    இரட்டை வேடம் தரித்த நடிகர்கள் இருந்தாலும் இன்றளவில் இப்போது வரும் இரட்டை
    வேடப் படங்களுக்கு முன்னோடியாக எங்கவீட்டுப்பிள்ளை தான் இருந்து வருகிறது.
    எம்.ஜி.ஆரின் ஆர்பாட்டமான இளமை துள்ளலான நடிப்பும்,அப்பாவி பயந்த சுபாவியாக
    வரும் கதாபாத்திரமும்,அருமையான பாடல்களும் இன்றைய தலைமுறையும் ரசிக்கும்
    வண்ணம் அமையப்பெற்ற காவியமாகும்.

    Courtesy :
    Varun Sagar‎பொன்மனச்செம்மல் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டை எதிர்நோக்கி... FB

  8. #3187
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர்

    திரு குமார் அவர்களுக்கு

    தாங்கள் பதிவிட்ட நமது

    தலைவர் புகைப்படம்

    சில மாற்றங்களுடன்.....

    (நன்றி தங்களுக்கு)


    என்றும் அன்புடன்

    எஸ். ரவிச்சந்திரன்
    -----------------------------------------------------------------------
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
    மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
    -----------------------------------------------------------------------


    Last edited by ravichandrran; 31st March 2015 at 11:22 PM.

  9. #3188
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

  10. Likes ainefal liked this post
  11. #3189
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    அன்னை மடியை விரித்தாள் எனக்காக..

    நியூட்ரினோ திட்டம் குறித்து எழுதுவேன் என்று சொல்லியிருந்தேன். அதுகுறித்து இந்தப் பதிவு......

    Thiru Kalaiventhan Sir,

    Very informative article.

    Thank you

    Regds,

    S.Ravichandran
    Last edited by ravichandrran; 31st March 2015 at 11:28 PM.

  12. #3190
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் -ஏப்ரல் மாத முதல் இதழ்.



    1978ல் எம்.ஜி.ஆர். தலைமையிலான தமிழக அரசின் அரசவைக் கவிஞராக
    நியமிக்கப்பட்டார் கண்ணதாசன்.



Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •