Page 318 of 400 FirstFirst ... 218268308316317318319320328368 ... LastLast
Results 3,171 to 3,180 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

  1. #3171
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    அன்பு சகோதரர் திரு. வரதகுமார் சுந்தராமன் அவர்கள் அறிவது :

    இந்த பட்டியலில், நமது இதய தெய்வம் பாரத ரத்னா மக்கள் திலகம் அவர்களின் துணைவி அன்னை ஜானகி, நாயகியாய் அவருடன் இணைந்த "மருத நாட்டு இளவரசி" காவியத்தில், இடம் பெற்ற அருமையான காதல் பாடல் " நதியே நீராழி அதையே சேர்தல் நாம் சேர்ந்தோம் " என்ற பாடலின் இடையே, நம் மன்னவனைப் போற்றி வரும் அற்புதமான வரிகளாகிய "ஆனந்தக்கடல் நீ ! அதிலொரு மீன் போல் மகிழ்வேன், வாழ்வினில் மாறாப் பிரேமையினால்" (அன்பினால்) என்பது விடுபட்டு விட்டது.

    அதே போன்று, "மோகினி" என்ற காவியத்தில், இடம் பெற்ற "வசந்த மாலை நேரம் மந்த மாருதம் குளிர்ந்து வீசிடும்" என்ற பாடலின் இடையே அன்னை ஜானகி அவர்கள் நம் பொன்மனசெம்மலை நோக்கி பாடும் " காதல் வேகம் போல் இல்லையே - உனது கால்கள் தாவும் வேகம், வேதை கொண்டு வரும் பாதை கண்டு மெலிவாரே வீர விஜயன் (மக்கள் திலகத்தின் கதா பாத்திர பெயர் விஜயன் என்பது குறிப்பிடத்தக்கது) காட்டும் நடையிலும், திராட்டிலும் - அந்த ஓட்டம் விரைவு வேணும் , செல்லு செல்லு பரியே " (பரி என்ற சொல்லுக்கு குதிரை என்று பொருள் உண்டு) என்ற வரிகளும், கவனத்தில் கொள்ளத்தக்கது.



    அனைவருக்கும் வணக்கம்.

    சில நாட்களாக திரியில் பங்கேற்க முடியவில்லை. மன்னிக்கவும்.

    திரு.குமார் சார்,
    கதாநாயகிகளின் காதல் கீதங்களில் தலைவரைப் பற்றிய வரிகள் அருமை. உங்கள் புதுமையான சிந்தனைக்கு பாராட்டுக்கள்.

    திரு.செல்வகுமார் சார்,
    அன்னை ஜானகி அம்மையார் தலைவர் குறித்து மோகினி, மருதநாட்டு இளவரசி படங்களில் பாடிய பாடல்களின் வரிகளை நீங்கள் குறிப்பிட்டது அற்புதம்.

    அந்தப் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம்..
    வைஜெயந்திமாலா: (பாக்தாத் திருடன்)

    ‘‘சொக்குதே மனம்
    சுத்துதே ஜெகம்
    தூண்டில் மீனைப்போலே
    ஆனேனே உன் வசம்...’’

    இசையரசி சுசீலா அவர்களின் குரலில் எனக்கு பிடித்த அட்டகாசப் பாடல். தபலா பேசும். தலைவரைப் பார்த்த எல்லாருமே இந்த வரிகளில் கண்டுள்ள நிலைமைக்கு உள்ளாவது இயற்கைதானே.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3172
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post


    FROM 27.03.2015 AT SHANMUGHA THEATRE, COIMBATORE
    தகவல் தெரிவித்த திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  4. #3173
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR Roop View Post
    திரு.ரூப் குமார் சார்,
    தாங்கள் பதிவிட்டுள்ள பணம் படைத்தவன் ஸ்டில்ஸ் அற்புதம். மிக்க நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  5. #3174
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    தலைவரின் அற்புதமான, அரிய புகைப்படத்தை பதிவிட்ட திரு.ஆர்.கே.எஸ்.அவர்களுக்கு நன்றி. நாடோடி மன்னன் பட தகவலுக்கும் நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  6. #3175
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    குமுதம் ரிபோர்டர் -03/04/2015




    ‘‘தங்கம் சொக்கத்தங்கமாக இருந்தால் அதை அணிய முடியாது. அது உறுதியாக, உடலில் அணியக் கூடிய வகையில் இருக்க வேண்டுமானால், சிறிது செம்பை தங்கத்தில் கலப்பார்கள். அப்படி, தங்கம் உறுதியாக இருக்கவும் உழைக்கவும் அதில் சிறிது செம்பை கலப்பது போன்றதுதான் ராஜதந்திரம். செம்பு அதிகமானால் அது மோசடி’’ என்று கூறினார் மூதறிஞர் ராஜாஜி.

    அப்படி மூதறிஞர் ராஜாஜி கூறியபடி ராஜதந்திரமாக செயல்பட்டுள்ளார் தலைவர் என்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். எல்லாமே நாட்டு நலனுக்குத்தானே தவிர, குடும்ப நலனுக்கு அல்ல. அதற்கு இது ஒரு சான்று. நன்றி திரு.லோகநாதன் சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  7. #3176
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Varadakumar Sundaraman View Post
    makkal thilagam mgr thread- senior hubber thiru selvakumar's article ''மனதில் நிறைந்த மக்கள்திலகம்''is publshed in ''vallamai'' to day.



    படிக்காத பாமரர்களுக்கு எம். ஜி. ஆர். ஓர் பல்கலைக்கழகம்



    “எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வியில்லை !
    அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை !”

    படித்து, பல பட்டங்கள் பெற்று இன்று உயர்ந்த நிலையில் இருந்தாலும், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். அவர்களின் பக்தன் என்று அழைக்கப்படுவதில்தான் எனக்குப் பெருமை. எனது வாழ்வில் நான் பெற்ற பாக்கியம் எம். ஜி. ஆர். ரசிகன் என்ற உயரிய பதவி !



    அருமை திரு.செல்வகுமார் சார். நாம் எல்லாருமே உயரிய பதவி பெற்றவர்கள். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  8. #3177
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR Roop View Post


    ‘இவர் போல யாரென்று
    ஊர் சொல்ல வேண்டும்’

    திரு.குமார் சார், பணம் படைத்தவன் பற்றி தாங்கள் இணையத்தில் இருந்து எடுத்து பதிவிட்டுள்ள பதிவுகள் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

    எனக்கு மிகவும் பிடித்த ‘பணம் படைத்தவன்’ பற்றி நிறைய எழுத ஆசை. இப்போதைக்கு இவ்வளவுதான் முடிகிறது...........

    ‘பவளக்கொடியிலே முத்துக்கள்...’ பாடல் நம்மை வேறோர் உலகிற்கு அழைத்துச் செல்லும். பாடலில் தலைவரின் முஸ்லிம் மன்னர்களுக்குரிய உடை ‘நச் ’. அந்த உடையில் இருக்கும்போது கையில் பேப்பரை பிரித்து படிப்பது போல (படத்தில் வராது) ஒரு ஸ்டில் வித்தியாசமாக இருக்கும். படப்பிடிப்பு இடைவேளையில் படித்திருக்கிறார் போலிருக்கிறது. கிடைக்கும் ஓய்வு நேரத்தை கூட வீணாக்காமல் பயன்படுத்திக் கொள்ளும் தலைவரின் அந்த புகைப்படமும் நமக்கு பாடம்.

    ‘பருவத்தில் கொஞ்சம்...’ பாடலில் தலைவரை மயக்குவதற்காக சவுகார் ஜானகி ஆடும்போது, பாடல் ஆரம்பத்தில் ‘திடீரென இது எதற்கு?’ என்பதுபோல கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டே முகத்தை லேசாக சாய்த்து உதட்டை பிதுக்கும் தலைவரின் எதிர்வினை அழகு. அந்தப் பாடலில் ஸ்வெட்டர் போன்ற தலைவரின் ஷர்ட் அழகு. மேலே முதலில் உள்ள படத்தையே பாருங்களேன். வித்தியாசமான டி-ஷர்ட். இவையெல்லாம் வண்ணத்தில் எடுக்கப்படாமல் போய்விட்டதே. என்ன கலரில் டி-ஷர்ட் அணிந்திருக்கிறார் என்பது தெரியவில்லையே என்ற வருத்தம் எனக்கு நிறைய உண்டு.

    கண்போன போக்கிலே கால் போகலாமா? பாடல் எனக்கு பிடித்த அருமையான பாடல். பாடலில், தேர்ந்த இசைக்கலைஞரைப் போல அகார்டியன் மற்றும் வயலின் வாசிப்பார் தலைவர். நாகரீக மோகத்தால் ஆட்டம்போடும் பெண்ணாக சவுகார் ஜானகியை காட்டும் அதே நேரத்தில், தமிழ் பெண்களுக்கே உரிய பண்பாட்டோடு நாணமும், காதல் வயப்பட்டு தலைவரைப் பார்க்கும் ஆர்வமுமாக சுவர் மறைவில் கே.ஆர்.விஜயாவை காட்டும்போது, வார்த்தைகளே இல்லாமல் இரு வேறு கலாசாரங்களைக் கொண்ட பெண்களின் குணங்களை காட்டும் காட்சி ரசிக்கத்தக்கது.

    ‘மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?..’ என்ற வரிகளின்போது ஒத்தையடிப் பாதையில் மகாத்மா நடந்து செல்வது போன்று சுவரில் மாட்டப்பட்டிருக்கும் படம், மனிதன் எந்தப் பாதையில் நடக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லும் அற்புதம்.

    பாடலில் வரும் புகழ்பெற்ற வரிகள்...

    ‘இருந்தாலும் மறைந்தாலும்
    பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யார் என்று
    ஊர் சொல்ல வேண்டும்..’

    .... திரைப்படத்தில் தான் பாடிய பாடல் வரிகளுக்கு தானே இலக்கணமாகிப் போன பெருமைக்குரியவர் நம் தலைவர்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  9. #3178
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [/QUOTE]

    திரு. சைலேஷ் சார்,

    4,000 பதிவுகள் கண்ட உங்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நான் சில நேரங்களில் திரிக்கு வரமுடியாமல் போவதுண்டு. சகோதரர்கள் பலரும் அவ்வப்போது இதேபோல, பணிகள், பொறுப்புகள் காரணமாக வராமல் இருப்பதுண்டு.

    ஆனால், நான் திரிக்கு திரும்பி விட்ட இடத்தில் இருந்து பார்த்தால், நாள் தவறாமல் நீங்கள் பதிவிடுவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். தினமும் தலைவருக்கு புகழ்மாலை சூட்டும் உங்கள் பக்திக்கும் கடமை உணர்வுக்கும் சிரம் தாழ்த்திய வணக்கங்கள். நான் ஐந்து, ஆறு பாராக்களில் சொல்வதை ஒரே ஒரு வீடியோ பதிவில் வார்த்தையே இல்லாமல் சொல்லி விடுகிறீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. #3179
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நீங்க நல்லா இருக்கணும்...

    நேற்று இரவு ஜெயா டி.வியில் தேன்கிண்ணம் நிகழ்ச்சி பார்த்தேன். தினமும் பார்ப்பதில்லை. நேற்று பார்த்தேன். அதில் திங்கட்கிழமைகளில் சிறப்புத் தேன் கிண்ணம் என்று ஒரு பிரபலம் அந்த நிகழ்ச்சியை வழங்குவார். நேற்று இரவும் ஒரு பிரபலம் நிகழ்ச்சியை வழங்கினார். அவர் பெயர் திரு. கே.ஆர். மீனாட்சி சுந்தரம். எழுத்தாளர்.

    தலைவர் நடித்த படங்களில் இருந்து நல்லது கண்ணே, நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற, கண்ணே கனியே.. உட்பட பல பாடல்களை தொகுத்து வழங்கினார். தனது தாத்தாவுக்கு இதயக்கனி படத்தில் வரும், ‘நீங்க நல்லா இருக்கணும்..’ பாடல் ரொம்ப பிடிக்கும் என்றும் தனது தாத்தா அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பார் என்றும் திரு.மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார். தாத்தாவுடன் அலங்கார் தியேட்டரில் இதயக்கனி படம் பார்த்ததையும் பகிர்ந்து கொண்டார்.

    இப்படியெல்லாம் தனது தாத்தாவைப் பற்றி சொன்னாரே. அவரும் பிரபலம்தான். சுதந்திரப் போராட்ட வீரர், பெருந்தலைவர் காமராஜரின் சீடர், மூதறிஞர் ராஜாஜியின் பக்தர், பேரறிஞர் அண்ணா, கலைவாணர், புரட்சித் தலைவருடன் நட்பாக பழகியவர், எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவர். 1942-ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் திருவாடானை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மக்களே திரண்டு சிறையை உடைத்து அவரை விடுதலை செய்த பெருமைக்குரியவர், போலீசாரின் துப்பாக்கி குண்டு இடதுகையில் பாய்ந்த தியாகத் தழும்பு பெற்றவர், தமிழ்ப் பண்ணை என்ற பதிப்பகம் நடத்தியவர், நகைச்சுவையுடன் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் கொண்டவர், அமங்கலமான மரணத்தையே, தனது மணிவிழா நிகழ்ச்சியின்போது புனித நீர் ஊற்றப்படும்போதே சாய்ந்து மங்கலமான இறப்பாக மாற்றியவர், திரு. சிவாஜிகணேசன் அவர்களின் பெயரில் ரசிகர் மன்றத்தை ஏற்படுத்தி அதன் தலைவராக இருந்தவர், அவர்... திரு.சின்ன அண்ணாமலை அவர்கள்.

    திரு.சின்ன அண்ணாமலை அவர்கள், தலைவரை வைத்து ஒரு படம் எடுத்தார். திரு.குமார் சார், திரு.வினோத் சார், திரு.செல்வகுமார் சார் ஆகியோருக்கு இதுபற்றி விவரம் தெரிந்திருக்கும். சொல்லுங்களேன். சுவாரசியமாக இருக்கும்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  11. #3180
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post





    அவன் கொடுத்தது எத்தனை கோடி
    அந்த கோமகன் திருமுகம் வாழி! வாழி!

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •