Page 201 of 400 FirstFirst ... 101151191199200201202203211251301 ... LastLast
Results 2,001 to 2,010 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

  1. #2001
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ''எங்க வீட்டு பிள்ளை '' பொன்விழா ஆண்டு நிறைவு

    இனிய நண்பர்களே

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த ''எங்க வீட்டு பிள்ளை '' பொன்விழா ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக நண்பர்கள் எங்கள் வீட்டு பிள்ளை படத்தை பற்றிய தங்களின் விமர்சனம் , முதல் நாள் படம் பார்த்த அனுபவம் . விளம்பர ஆவணங்கள் , மக்கள் திலகத்தின் நடிப்பை பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் , படத்தின் பாடல்கள் பற்றிய விரிவான கட்டுரைகள் , படத்தின் இதர காட்சிகளின் சிறப்பம்சங்கள் என்று இங்கு பகிர்ந்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன்
    எங்க வீட்டு பிள்ளை உருவான விதம் .
    எங்க வீட்டு பிள்ளை - புதுமையான விளம்பரம் .
    படம் வருவதற்க்கு முன் ரசிகர்களின் மன நிலை
    படம் வெளியானவுடன் நிகழ்ந்த வெற்றி செய்திகள்
    பல்வேறு தரப்பினர் - விமர்சகர்களின் விமர்சனங்கள்
    எங்க வீட்டு பிள்ளை உருவாக்கிய சரித்திரம் - சாதனைகள்
    எங்க வீட்டு பிள்ளை வெற்றியின் எதிரொலி
    1977 வரை திரை உலக வரலாற்றில் அசைக்க முடியாத வரலாறு
    மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் நண்பர்கள் தங்கள் அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் எங்க வீட்டு பிள்ளை - பொன் விழா பதிவுகள் புதிய சாதனை படைக்க வேண்டுகிறேன் .
    Last edited by esvee; 4th March 2015 at 04:56 AM.

  2. Likes ainefal liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2002
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்

    மக்கள் திலகத்தின் எங்க வீட்டு பிள்ளை பொன் விழா விற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உங்களுக்கு இதயங்கனிந்த
    பாராட்டுக்கள் . நடிகர் திலகத்தின் பழனி பொன்விழாவிற்கு எங்களது அன்பு வாழ்த்துக்கள் .

  5. #2003
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் மலர் மாலை -2 புத்தக பணிகள் நிறைவு பெரும் நிலையில் உள்ளது . விரைவில் புத்தக வெளியீடு பற்றிய அறிவிப்பை இனிய நண்பர் திரு பம்மலார் அறிவிக்க உள்ளார் . மக்கள் திலகத்தின் புத்தக வரலாற்றியில் இது வரை யில் யாரும் செய்யாத , பல புதுமைகளை புத்தக உலக வரலாற்றில் முதல் முறையாக இம் மலரில் நம் பம்மலார் செய்துள்ளார் . வணிக விளம்பரம் இல்லாமல் , முழுக்க முழுக்க எம்ஜிஆர் என்று தனி முத்திரையுடன் தயாரித்துள்ளார் .கண்ணை கவரும் மக்கள் திலகம் எம்ஜிஆர் நிழற் படங்கள் , அபூர்வ செய்திகள் -இது வரை நாம் யாருமே பார்த்திராத புதுமை மலராக வர உள்ளது .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு உலக தரத்தில் மலர் மாலை -2 தகவல் களஞ்சியம் வருவது மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு பெருமை சேர்ப்பதில் முதலிடம் பிடிக்கிறார் திரு பம்மலார் .

    மலர் மாலை -2 வெளிவரும் நன்னாளை உலகமெங்கும் வாழும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் .

  6. #2004
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -14

    29 நாட்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி 2000 பதிவுகளை கடந்து 30,000 பார்வையாளர்களுடன் பயணிக்கிறது.
    பங்கு பெற்ற பதிவாளர்கள் , பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி .

  7. #2005
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    TIRUCHENGODE-NAMAKKAL ROAD

  8. #2006
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2007
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கோபால்,

    இரண்டு நாட்களுக்கு முன் மேலோட்டமாக நீங்கள் பதிவிட்டிருப்பதை பார்த்தேன். முழுதாக படிக்க நேரமில்லை. திரிக்கு வந்ததற்காக வாழ்த்து தெரிவித்தேன். நேற்று நான் திரிக்கே வரவில்லை. இன்றுதான் உங்கள் பதிவை நிதானமாக படித்தேன்.

    தமிழ் இந்துவின் பத்திரிகை தர்மம் பற்றி பேசியிருக்கிறீர்கள். ராமா நாய்டு இறந்தபோது வெளியான செய்தியில் வசந்தமாளிகை பற்றி ஹைலைட் செய்யவில்லை என்று குறைபட்டிருக்கிறீர்கள். பிப்ரவரி 13ம் தேதியன்று தமிழ் இந்து நாளிதழில் காதலர் தினத்துக்காக திரு.சிவாஜி கணேசன், திருமதி. வாணி ஸ்ரீ படத்துடன் காதல் காவியமான வசந்த மாளிகை பற்றிய செய்தி வந்துள்ளது. ராமா நாய்டு இறந்தது 18ம் தேதி. எனவே,5 நாட்களுக்குள் மீண்டும் அதே படத்தை குறிப்பிட்ட நடிகர்களின் ஸ்டில்லுடன் ஹைலைட் செய்ய வேண்டாம், புதிதாக, சுவையாக சொல்லாத விஷயம் ஏதாவது இருந்தால் ஹைலைட் செய்யலாம் என்று தமிழ் இந்து ஆசிரியர் குழு முடிவு செய்திருக்கலாம்.

    மேலும், அதே பிப்ரவரி 13ம் தேதி வசந்தமாளிகை பற்றி செய்தி வெளியான அடுத்த பக்கத்திலேயே ‘காதலை வாழ்த்தும் இயற்கை’ என்ற தலைப்பில் திரு.சிவாஜி கணேசன், பத்மினி அவர்களின் பேசும் தெய்வம் படத்தின் ஸ்டில்லும் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. அந்தக் கட்டுரையை எழுதியிருப்பவர் மரியாதைக்குரிய திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்கள்.பாபு திரைப்படம் பார்த்த அனுபவத்தைப் பற்றி பாஸ்கர் என்பவர் தமிழ் இந்துவில் எழுதிய கட்டுரையை நீங்களே உங்கள் திரியில் பதிவிடவில்லையா? நேற்று கூட சாந்தி தியேட்டர் வணிகவளாகமாக மாற்றப்படும் செய்தியையும் தியேட்டரின் சிறப்புகளையும் திரு.சிவாஜிகணேசன் திரைப்படங்கள் அங்கு ஓடிய விவரங்களையும் திரு.ராம்குமார், திரு.பிரபு ஆகியோரின் படங்களுடன் எந்த தமிழ் பத்திரிகையிலும் வராத அளவுக்கு செய்தி வெளியிட்டது தமிழ் இந்து. திரு.சிவாஜி கணேசனை தமிழ் இந்துவில் இருட்டடிப்பு செய்வதில்லை.

    நான் யாரையோ சொன்னால், உங்களுக்கென்ன அக்கறை என்று கேட்காதீர்கள்.தமிழ் இந்துவின் ஆசிரியர் மரியாதைக்குரிய திரு.அசோகன் அவர்கள் என் நெருங்கிய நண்பர். நல்லவர், நேர்மையாளர், பணத்துக்கு ஆசைப்படாதவர், கடும் உழைப்பாளி, தர்ம நியாயம் தெரிந்தவர். தலைசிறந்த பத்திரிகையாளர். என் நண்பரான அவரை நீங்கள் குறை கூறுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஒரு பத்திரிகையில் வெளியாகும் செய்தி தனிநபரால் முடிவெடுக்கப்படுவதல்ல. எடிட்டோரியல் மீட்டிங் போட்டு பேசி முடிவு எடுத்து இறுதி வடிவம் ஆசிரியருக்கு சென்று ஓ.கே.செய்த பிறகுதான் அச்சுக்கு அனுப்பப்படும். தனி நபர் விருப்பு வெறுப்புக்கேற்ப யாரும் செயல்பட முடியாது.

    அதே போல, நாங்கள் விரும்பும் வகையில் செய்தி வராவிட்டால் என் செல்வாக்கை பயன்படுத்தி அவர் வேலையை காலி செய்து விடுவேன் என்று யாரையோ பிளாக் மெயில் செய்கிறீர்கள். ஒரு பத்திரிகையில் இருந்து கொண்டே வேறு பத்திரிகையில் வேலை பார்ப்பது, செய்திகளை வேறு பத்திரிக்கைக்கு தருவது, பணம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிடுவது,நிர்வாகத்துக்கு எதிராக செயல்படுவது என்பது போன்றவற்றுக்காகத்தான் பத்திரிகைகளில் ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள். நீங்கள் போன் செய்தால் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். பத்திரிகை குடும்பத்தைச் சேரந்தவர் என்று கூறிக் கொள்ளும் உங்களுக்கு இது தெரியாமல் போனது வியப்பே.

    மேலும், இது சட்டப்படி குற்றம். இது போன்று இணையதளத்தின் மூலம் அச்சுறுத்தி பிளாக் மெயில் செய்வது சைபர் கிரைம் குற்றத்தின் கீழ் வரக் கூடியது. இதைப் பார்த்தவுடன் நீங்கள் அந்த போஸ்டிங்குகளை டெலிட் செய்து விடலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக அவற்றை ஸ்டேட்டஸ் பொசிஷனில் ஸ்கேன் செய்து வைத்திருக்கிறேன். நீங்கள் அமெரிக்காவிலோ, வியட்நாமிலோ, இந்தோனேஷியாவிலோ இருந்தாலும் கண்டுபிடிப்பது கஷ்டமில்லை. அதற்காக, உங்கள் மீது புகார் செய்ய மாட்டேன். நண்பராயிற்றே.

    ஒரு நிறுவனத்தில் சிஇஓ எப்படி பணியாற்ற வேண்டும், ஒரு வங்கியில் பணிபுரியும் வங்கி அதிகாரி எப்படி பணியாற்ற வேண்டும் என்றெல்லாம் யாரும், யாருக்கும் சொல்ல முடியாதோ அதே போல, பத்திரிகை தர்மத்தைபற்றி நண்பர் அசோகன் உட்பட நீங்கள் யாருக்கும் சொல்லத் தேவையில்லை.

    டிசிஎஸ் நிறுவனத்தில் கொத்து கொத்தாக தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். அப்படி நீக்கப்பட்ட ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தியை சமீபத்தில் பார்த்து வேதனைப்பட்டேன். உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அவர்களது வேலை இழப்பை தடுங்கள். அந்தக் குடும்பங்கள் உங்களை வாழ்த்தும்.

    எனக்கு திறமையாளர்களையும் உழைப்பாளிகளையும் பிடிக்கும். திறமையாளர் நீங்கள். அதனால், உங்கள் மீது அன்பு உண்டு. ஏடாகூடமாக பேசி பலரது வெறுப்புக்கு ஆளாகிறீர்களே என்ற இரக்கமும் உண்டு. இனியாவது எல்லாரையும் அன்பால் வெல்லப் பாருங்கள். நீங்கள் என்னை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று கருதுகிறேன். தமிழகம் வரும்போது சொல்லுங்கள். நான் எந்த ஊரில் இருந்தாலும் சென்னை வந்துவிடுகிறேன். திருவல்லிக்கேணி ரத்னா கபேயில் உணவு அருந்திக் கொண்டே மனம் விட்டு பேசுவோம்.

    நேற்று கூட உள்ளூர் கேபிளில் இரவில் ஒளிபரப்பான படத்தை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தபோது, நீங்கள், முரளி, ராகவேந்திரா சார், கிருஷ்ணா சார், ஆர்.கே.எஸ், ரவி சார், பம்மல் சுவாமிநாதன், சின்னக் கண்ணன் எல்லோரும் நினைவில் வந்து போனீர்கள். படம் .... ரத்தபாசம். திரு. சிவாஜி கணேசன் படம் என்பதால் நீங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தீர்கள்.

    நண்பராயிற்றே என்ற அக்கறையில் சொல்கிறேன். ‘நான் அப்படித்தான் இருப்பேன், நீ யார் அதைச் சொல்ல?’ என்று கேட்பீர்களானால்..... வருந்துகிறேன்.

    நண்பர், நேர்மையாளர் திரு.அசோகன் பற்றிய உங்கள் கருத்துக்கு என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. #2008
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    இனிய நண்பர் கலைவேந்தன் அவர்களே



    முதற்க்கண் நான் தர்மம் எங்கே வசூலையும் பெரிய இடத்து பெண் வசூலையும் ஒப்பிட்டு பதிவு செய்யவில்லை என்பதை திரு செல்வகுமாரும் தாங்களும் சவுகடிக்கு பாராட்டு என்று பதிவிட்ட திரு லோகநாதன் அவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.


    என் பதில் அவர்களுக்கே ..அதாவது அந்த மாபெரும் சுவரொட்டியை தயார் செய்து ஊர் முழுதும் ஒட்டிய கண்ணியவானுக்கு.

    மிக்க நன்றி

    rks
    நண்பர் திரு.ஆர்.கே.எஸ்.

    தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. பெரிய இடத்துப் பெண் வசூல் ரூ.88,000 என்று (மட்டும்தான்) திரு.லோகநாதன் பதிவிட்டிருந்தார். பதிலுக்கு நீங்கள் 4 வாரத்தில் தர்மம் எங்கே?தான் அதிக வசூல். இதை தியேட்டருக்கு போன் செய்து கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று போன் நம்பரையும் போட்டிருந்தீர்கள். இதைப் படிப்பவர்கள் நாங்கள் ஏதோ பொய் சொல்கிறோம் என்று நினைக்க மாட்டார்களா? அதைத்தான் குறிப்பிட்டேன். அதனால்தான், திரு.செல்வகுமார் அவர்கள் தியேட்டர் மேலாளர் திரு.பாலமுருகனிடம் பேசி வசூல் விவரம் வெளியிட்டார். நீங்கள் கூறியபடி எல்லாரும் உணர்ச்சி வசப்படக் கூடியது புரிந்து கொள்ளக் கூடியதே. உங்கள் விளக்கத்தைப் பார்த்தேன். நானும் உங்கள் நிலையை புரிந்து கொண்டேன்.

    எங்கள் வாழ்த்தை நீங்கள் தெரிந்து கொண்டதையும் ஏற்றுக் கொண்டதையும் அறிந்து மிக்க மகிழ்ச்சி. ஏப்ரல் 1ம் தேதி முதல் உங்கள் தீவிர பங்களிப்பை எதிர்பார்க்கிறேன். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  11. #2009
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் இம்மாதத்திய நிகழ்வு..

    மார்ச் 15, 2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை ருஷ்ய கலாச்சார மய்ய அரங்கில்

    பழநி

    ஐம்பதாவது ஆண்டு பொன் விழாக் காணும் உன்னதத் திரைக்காவியம்

    ஒரே நாளில் வெளியான இரு படங்களுக்கு ஒரே நாளில் பொன் விழாக் கொண்டாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    இதே நாளில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் பொன் விழாவும் மார்ச் 15, 2015 அன்று கொண்டாடப் படுகிறது.

    விழாக்கொண்டாடும் நண்பர்களுக்கு நமது உளம் கனிந்த வாழ்த்துக்கள்.
    எங்க வீட்டுப் பிள்ளை பொன்விழா கொண்டாட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்பு நிறை பண்பாளப் பெருந்தகை திரு.ராகவேந்திரா அவர்களுக்கு நன்றி. பொன்விழா காணும் பழநி திரைக்காவியக் கொண்டாட்டத்துக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

    சாந்தி வளாகத்தில் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் படங்களுக்கென ஒரு திரையரங்கை ஒதுக்க வேண்டும் என்று ஏற்கனவே நீங்கள் தெரிவித்த யோசனையை திரு.சைலேஷ் பாசு வரவேற்றுள்ளார். நீங்கள் கூறியிருப்பது போல நாங்கள் எல்லாருமே வரவேற்கிறோம். அதற்கும் ஒருபடி மேலேயே போய் சொல்கிறேன். ஏற்கனவே நான் சொன்னதுதான். தமிழக அரசை எதிர்பார்க்காதீர்கள். அந்த வளாகத்திலேயே திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க உங்களைப் போன்றவர்கள் வலியுறுத்தி மணிமண்டபம் அமைந்தால் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கோரிக்கை எழுப்பினால் எங்கள் தார்மீக ஆதரவு உண்டு. தங்களின் புதிய பொறுப்புக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  12. Likes ainefal liked this post
  13. #2010
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம்...ஈடில்லாப் புன்னகை!


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •