Page 8 of 13 FirstFirst ... 678910 ... LastLast
Results 71 to 80 of 126

Thread: கவிதை எழுதுவோம் வாருங்கள்.

  1. #71
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓர் இள அன்னை சோஃபாவில் சாய்ந்தவண்ணம் கண்ணயர்ந்திருக்கிறாள்..;அவளை இறுக அணைத்தபடி மார்பில் தலைசாய்த்துத் தூங்குகிறது குழந்தை.. இப்படி ஒரு புகைப்படம் போனவருடமோ என்னவோ முக நூலில் நண்பர் ஒருவர் கொடுத்து அவரும் ஒரு வெண்பா இட்டிருந்தார்.. அந்த படத்திற்கு நான் எழுதிய வெண்பா ( என்னிடம் நான் பதிந்து வைத்துக் கொள்ளவில்லை) இன்று மறுபடி இன்னொரு நண்பர் லைக்கிட அது கிடைத்தது

    வெல்லமென வந்தமகன் விந்தையென வஞ்சிமடிச்
    செல்லமெனக் கண்ணுறங்க சிந்தைநிறை கொண்டவளும்
    மெல்லமெல்ல மெய்மறந்து மேனிதனைச் சாய்த்தபடி
    தள்ளுகிறாள் தூக்கத்தைத் தான்..

    **

    கொள்ளையிட வந்தமகன் கெஞ்சிநெஞ்சில் கண்ணயர
    தொல்லைகளும் துன்பமதும் தள்ளிசெல மெய்மறந்து
    அல்லியிதழ்க் கண்ணிமைகள் அஞ்சுகத்தின் கண்தழுவி
    அள்ளுமனச் சித்திரம்தான் ஆம்

    **

    முற்றிலும் குறில்களால் ஆன கூவிளங்காய்ச் சீர்களில் நண்பர் எழுதியிருந்தார் (இறுதிச் சொல் மட்டும்காசு என்ற வாய்ப்பாட்டில் முடியும் வண்ணம்) எனக்கு அது வரலை..

  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #72
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நேர்நேர்நேர் தேமாங்காய் நேர்நேர்நிரை தேமாங்கனி
    நேர்நிரைநேர் கூவிளங்காய் நேர்நிரைநிரை கூவிளங்கனி
    நிரைநேர்நேர் புளிமாங்காய் நிரைநேர்நிரை புளிமாங்கனி
    நிரைநிரைநேர் கருவிளங்காய் நிரைநிரைநிரை கருவிளங்கனி
    என மூச்சீர் வகைகள் அசையால் எண்ணாக பிரியும்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  5. #73
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    தளை எனப்படுவது யாதெனின் முதல் சீரின் கடை அசையும்
    அடுத்த சீரின் முதல் அசையும் இணைவதாகும்
    நேர்ஒன்றிய ஆசிரியத் தளையில் முதல் சீர் கடை மாவுடன்
    அடுத்த சீர் முதல் அசை நேர் என நேருக்கு நேர் அமைவது
    அவ்வாறே நிறையொன்றிய ஆசிரியத் தளையில்
    விளமுடன் நிரையும் வளமாய் அமைவதே.
    Last edited by kalnayak; 9th March 2015 at 06:28 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  6. #74
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    எதுகை மோனை இயைபு முரண்
    மற்றும் அளபெடையென தொடை ஐந்தாம்.
    இரண்டாம் எழுத்து ஒத்து வந்தால் எதுகை
    முதலிலேயே ஒத்துவந்தால் மோனை
    முதல், மூன்றாம் ஐந்தாம் சீர்கள் மோனை கொள்ளும்
    அடிகளின் முதல் சீர் எதுகை கொள்ளும்
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  7. #75
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கல் நாயக் சார்.. நலமா

    மதுர கானங்கள் திரியில் எனை - நீங்க்ளெல்லாம் ஜல்லி அடிக்கிறீர்கள் என்றால் உங்களை என்னவென்று கூற என எழுதியிருந்தீர்கள்..அதற்கு நான் தன்னடக்கத்திற்காக எழுதியிருந்தேன் எனச் சொல்லியிருந்தேன் உங்களிடம்..ஆனால் அது..


    பொய்...

    எனது குரு நாதர்களில் ஒருவரான ஹரிகிருஷ்ணன் என் தமிழைச் செதுக்கியவர்களில் ஒருவர் (என்ன செய்ய..சின்னக்கண்ணன் அவ்வளவு மக்கு..ஒரு வாத்தியார்களில்லை..பலர் இருந்தார்கள் எனைச் செதுக்குவத்ற்கு..) (திருந்தவில்லை என்ப்துவேறு விஷயம்..

    எனது குரு நாத்ர் ஹரிகிருஷ்ணன் எழுதிய கவிதை - என் நெஞ்சத்தில்..என் நினைவோட்டத்தில் என்றும் பதிந்து இருக்கும் கவிதை ( வகை சிந்துப்பா- படித்தவுடன் உமக்கும் தோன்றும் அந்த வகையில் எழுத) இங்கு தருகின்றேன்

    **

    முகப்பு கவிதை
    ஒரு சொல் தொலைவு

    - ஹரி கிருஷ்ணன்

    ஒரு இருபதாண்டுகளுக்கு முன்னர் சென்னை பெசன்ட்நகர் ரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் ஆதிசங்கரரின் அன்னையைப் பற்றிப் பாட அழைத்திருந்தார்கள். மகாபெரியவரின் ஆசியுடன் நடந்த கவியரங்கம் அது. துறவி என்பவன் அன்னையின் சம்மதத்தோடுதான் துறவேற்க முடியும் என்பது நமக்குத் தெரிந்த ஒன்று. ஒரு பக்கம் பந்தங்களை இறுத்துக் கொணடு விடுபட்டுப் போகும் உறுதியான நிலையில் ஒரு
    சிறுவன்; மறுபக்கம், வாழ்க்கையில் இழக்க இனி ஏதும் இல்லை என்று நினைத்திருந்தவளுக்கு, ‘தன் வாழ்க்கைக்கு ஒரேஒரு பிடிப்பாக மிகுந்திருக்கும் இந்தப் பிள்ளையையும் இழந்தே ஆகவேண்டும்’ என்ற கட்டாயச் சூழல். அந்த அன்னையின் மனநிலையைப் படம் பிடித்திருக்கிறேன்.

    ஒரு சொல் தொலைவு


    அம்மா எனக்குப் பொழுதில்லை – காலை
    அழுந்தப் பிடித்த தொருமுதலை
    இம்மா நிலத்தில் நிலைப்பதற்கும் – கண்
    இமைப்பொ ழுதிலுயிர் துறப்பதற்கும்

    உன்வா யுதிர்க்கும் ஒற்றைச்சொல் – ஆம்
    ஒருசொல் தொலைவே மிகுந்துளது – சொல்
    உன்மக னுலகைத் துறப்பதுவா – அன்றி
    உலகினி லுயிரைத் துறப்பதுவா?

    ஒருகணப் போதே அவகாசம் – உன்
    உதடுகள் தருமொலி கதைபேசும் – இனி
    மறுமுறை நினைக்கப் பொழுதில்லை – உன்
    மகனுயிர் தனக்குன் சொல்எல்லை.

    சின்னச் சங்கரன் நதியினிலே – காலைத்
    திருகிப் பிடித்த பிடியினிலே – ஒரு
    கன்னங் கறுத்த பெருமுதலை – அது
    கவ்விட நடுங்கிச் சிதறுதலை.

    அன்னை யொருத்தி நதிக்கரையில் – பதறி
    அகலப் பிரிந்த கைகளுடன் – அவள்
    தன்னிலை பார்ப்ப தொருநொடியே – இளந்
    தனயனைப் பார்ப்ப தொருநொடியே.

    மரணம் ஜனனம் எனச்சுழலும் – புலை
    வாழ்க்கைச் சகடம் எற்றிவிட – இது
    தருணம் என்று சிரித்தபடி – அவன்
    சாற்றுதல் கேட்ப தொருநொடியே.

    எப்படிச் சொல்வாள் துறவேற்க – இலை
    எப்படிப் பொறுப்பாள் உயிர்துறக்க?
    எப்படிச் சொல்லினும் இலையெனினும் – இந்த
    ஈட்டி முனையவள் நெஞ்சுக்கே.

    நான்கு வயதுப் பிள்ளையினை – தந்தை
    நலிவுற விட்டுவான் ஏகியதும்
    ஏங்கித் துயர்கொண் டுழலாது – கல்வி
    ஏற்கத் தான்வழி புரிந்ததுவும்

    வேத வித்தாய் மகன்வளர – மனம்
    விம்மிப் பெருமித முற்றதுவும் – அலை
    மோதும் திரளாய் மனக்குகையில் – பிள்ளை
    முதலையின் வாய்ப்பிடி படும்வரையில்.

    ஒற்றைச் சொல்லா அவகாசம் – சொல்
    உதிர்த்த வுடனே இறும்பாசம் – உளம்
    முற்றிலும் ஓலம் மோதிவர – உயிர்
    மூச்சே பாரம் ஆகிவிட

    அன்னை சொன்னாள் அந்தச்சொல் – உயிர்
    அறுந்து வேரறச் சாய்க்கும்சொல் – வரும்
    பின்னைப் பிறப்பினை மாற்றும்சொல் – ஒளிப்
    பிள்ளையை ஞானியாய் நிறுத்தும்சொல்.

    ஷண்மத ஸ்தாபனம் அந்தச்சொல் – உயர்
    சதுர்மறைக் காப்பே அந்தச்சொல் – சுடர்
    உண்மையின் ஒளியினைத் துலக்கும்சொல் – பரம்
    ஒன்றே ‘நீ’யென விளக்கும்சொல்.

    துறவறம் கொள்ளென வாய்திறந்து – மனத்
    துயரம் மீதுறத் தெறித்திடும்சொல்.
    ஒருதளிர் சுமந்த பட்டமரம் – மதம்
    உயிர்தழைத் திடவெனத் தந்தவரம்.

    அன்பினால் துறந்தேன் சங்கரனே – உற
    வனைத்தையும் துறப்பாய் என்மகனே – இனி
    உன்கைப் பிடிநெருப் பொன்றைத்தான் – தாய்
    உடலுனை வரமாய்க் கேட்டிருக்கும்.

    சின்னச் சங்கரன் நடக்கின்றான் – மனம்
    தின்னத் தவிக்கச் செல்கின்றான்.
    அன்னை இன்னும் நதிக்கரையில் – அவள்
    ஆவி பிரிந்திடும் நாள்வரையில்

    **

    எப்படி இந்தப் பாட்டின் அனுபவம்..

    முரளிதரன்..சுலபம்தான் நீங்களும் எழுத முயற்சி பண்ணுங்கள்..

  8. Thanks kalnayak thanked for this post
    Likes kalnayak, Russellhni liked this post
  9. #76
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,

    இந்த கவிதையை படித்த பின்பு எனக்கு ஒன்று தான் தோன்றியது. நானும் கவிதை எழுதுகிறேன் என்று உளறிக் கொட்டத்த்தான் வேண்டுமா என்று. உங்கள் நெஞ்சத்தில், நினைவோட்டத்தில் என்றும் பதிந்து இருக்கும் கவிதை என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கான முழு தகுதியும் இந்த கவிதைக்கு இருக்கிறது. சொல்லவந்த பொருள் நெஞ்சை தொடுகிறது என்றால் சொல்ல பயன்படுத்திய வார்த்தைகள், என்னவென்று சொல்ல. இன்னும் நான் நிறைய தமிழ் படிக்க வேண்டும் - இந்த கவிதையை இன்னும் பலமுறை படித்தால் தான் எனக்கு முழுவதுமாக புரியும். சிந்துப்பா வகை *என்றும் சொல்லிவிட்டீர்கள். நான் இலக்கணம் கற்கும் ஆமை வேகத்தில், எப்போதுதான் இந்த சிந்துப்பாவை கற்பேனோ? நானும் முரளிதரன் உடன் சேர்ந்து சித்தப்பா என்று சொல்லும்படி ஆகிடுமோ என்று அஞ்சுகிறேன். அவராவது ஒன்றும் தெரியவில்லை என்று பிரமாதமாக கவிதை எழுதுகிறார். நான்?

    நெஞ்சைத் தொடும் கவிதை தந்தீர். நன்றி.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  10. Likes chinnakkannan liked this post
  11. #77
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,

    ஓற்றெழுத்துக்கள் இல்லாமல் ஒரு கவிதை தருவீரா?
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  12. #78
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    புரியலை கல் நாயக்.. ஒற்றெழுத்து..?

  13. #79
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    மன்னிக்கவும். அது ஒற்றெழுத்துத்தான் - ஒரு எழுத்து அல்ல. க், ங், ச், ஞ், ... போன்றவை இல்லாமல். அப்படி ஒரு குறள் இருக்கிறதா என்ன?*
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  14. #80
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இல்லை கல் நாயக்..

    ஆனால் தேடிய போது கிடைத்தது.. முதலெழுத்துக்கள் எல்லாம் சேர்த்து கவிதையின் அடக்கப்பொருள் வரவேண்டும்.(தலைப்பில்)

    தலைப்பு நமசிவாய

    நன்னெறிக் காட்டி நலம்பெற அருளி
    மனத்துளே மன்றத்தில் மணியொளிக் கூட்டி
    சித்தத்தில் சித்தாந்தச் சிவநாத மெழுப்பி
    வாயறியா பேரின்ப வாரியிலே ஆழ்த்தி
    யமபுரத்திற் கேகாமல் இக்கணந்தான் காத்திடுமே!

  15. Likes kalnayak liked this post
Page 8 of 13 FirstFirst ... 678910 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •