Results 1 to 4 of 4

Thread: கொலையா ? தற்கொலையா?

Threaded View

  1. #1
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like

    கொலையா ? தற்கொலையா?

    செந்தில் கெமிக்கல் அண்ட் பெஸ்டிசைட் கம்பனி

    தொழிலதிபர் செந்தில் பழி வாங்க முடிவு செய்து விட்டார்.

    சுகாதார மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு துறை மந்திரி பெருமாளை, இந்த உலகத்தை விட்டு ஒரேயடியாகஒழித்து கட்டுவது என்று.

    “யாரிடம் வேலை காட்டுகிறான், அயோக்கியன் ” செந்தில் புகைந்தார். “பணிக்கர், நீ என்ன பண்ணுவியோ, எப்படி பண்ணுவியோ தெரியாது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லே! பெருமாளை போட்டுத்தள்ளனும், ஏற்பாடு பண்ணு!”.

    பணிக்கர், செந்திலின் அடியாள். அவரது அந்தரங்க காரியதரிசியும் கூட.

    “ஐயா! அது அவ்வளவு சுலபமான காரியமில்லே! அமைச்சரை நாம நெருங்கவே முடியாது. ”

    “இதோ பாரு பணிக்கர், அவனால எனக்கு ஏகப்பட்ட நஷ்டம். இதுவரை நான் அவனுக்கு ஐந்து கோடி அழுதிருக்கிறேன். இவ்வளவு நாள் நான் பாத்துக்கிறேன், நான் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு, இன்னிக்கு கைய விரிச்சுட்டான், ராஸ்கல்” செந்தில் பொருமினார்.

    “இருக்கட்டும் ஐயா! கொஞ்சம் பொறுமையா யோசிப்போம்!”

    “அதெப்படி சும்மா இருக்கிறது! அவன் போட்ட ஆர்டர்னாலே, இன்னிக்கு நம்ம தொழிற்சாலையை இழுத்து மூடி சீல் வெச்சுட்டாங்க. எனக்கு ஐநூறு கோடி இழப்பு.. இதுக்கு அவனை தீர்த்து கட்டினால் தான் எனக்கு மனசு ஆறும்”

    “ஐயா! மேல் கோர்ட் எதுக்கு இருக்கு? அப்பீல் பண்ணுவோம்! கேசை உடைப்போம். பெருமாளை கொலை பண்ணி என்ன லாபம்?”

    “என்ன பணிக்கர், புரியாத மாதிரி பேசறே! அதெல்லாம் நடக்கற காரியமில்லை. நம்ம பாக்டரிலேருந்து வரும் நச்சுப் புகையினாலே இந்த பக்க மக்களுக்கு கான்சர் நோய், சாவு அப்படின்னு அரசாங்கம் முடிவு எடுத்திடுச்சு. பெருமாளை தீர்த்து கட்டிட்டு வேறொரு அமைச்சர் மூலமாகத்தான் இந்த பாக்டரியை திறக்கணும். சும்மா வளவளன்னு எனக்கு அட்வைஸ் பண்ணாதே! நீ எப்படி பெருமாளை ஒழிக்கபோறோம்னு மட்டும் யோசி.”

    “அதைத்தான் ஐயா நானும் சொல்ல வரேன். ஏற்கெனவே இரண்டு முறை பெருமாளை போட்டுத்தள்ள, அவரது எதிராளிங்க முயற்சி பண்ணியிருக்காங்க. ரெண்டு தடவையும் அது நடக்கவில்லை. அதனாலே, பெருமாள் ரொம்ப அலெர்ட். எப்பவும் அவரை சுத்தி பத்து தடியாட்கள். கிட்டே நெருங்க முடியாது”

    “இதோ பாரு பணிக்கர், எனக்கு இருக்குற கோபத்திலே நானே அவனை சுட்டுத்தள்ளிடலாமான்னு இருக்கு. உனக்கு பத்து நாள் டைம். அதுக்குள்ளே பெருமாளை க்ளோஸ் பண்றே. இல்லே, உனக்கு உங்க வீட்டிலே திதி கொடுக்க வேண்டியிருக்கும்.”. கோபத்தோடு தொழிலதிபர் செந்தில் வெளியேறினார். சோர்ந்து போய் உட்கார்ந்தார் பணிக்கர். என்ன பண்ணலாம்?

    ****

    ஒரு தனியார் மன மருத்துவ மனை

    முகுந்தன், ஒரு கை தேர்ந்த ஹிப்னாடிஸ்ட். ஒரு 35 வயது. ஒரு தனியார் மன மருத்துவ மனையில் பணி.

    குடி, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், தற்கொலை முயற்சி பண்ணியவர்கள், மனச்சிதைவுக்கு ஆளானவர்கள் போன்றோருக்கு ஹிப்னாசிஸ் முறையில் ஆலோசனை, தீர்வு காண்பது அவன் வேலை.

    அன்று அவன் ஒரு பத்து சமூக ஆர்வலர் மற்றும் மன நோயாளிகளுக்கு ஒரு விழிப்புணர்வு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தான்.

    “ஹிப்னாசிஸ் , அப்படின்னா என்ன டாக்டர்?”- கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

    “ஹிப்னாசிஸ்னா லத்தின் மொழிலே தூக்கம்னு அர்த்தம். நான் உங்கள் மூளையை கட்டுப்படுத்தி ஒரு அரை மயக்க நிலைக்கு கொண்டு செல்வேன். அப்போ, உங்கள் அடி மனசில் இருக்கும் எண்ணங்கள், பழைய நினைவுகள் வெளியே வரும். எனது கேள்விகளுக்கு நீங்கள் உண்மையா பதில் சொல்ல, நான் உங்கள் பிரச்சனை என்னன்னு கண்டுபிடித்து, நீங்க என்ன பன்னனும்னுங்கறதை சொல்வேன். அந்த நிலையிலேயே, உங்க மனசு அதை முழுசா வாங்கி செயல்படுத்தும்.”



    “அதெப்படி?” ஒரு நோயாளி

    “இப்போ, உங்களுக்கு சிகரெட்டு பழக்கம் இருக்குன்னு வெச்சுக்குங்க. அதை விட முடியல்லே. இதற்கு மனோவசிய முறையில் தீர்வு காண முடியும். நான் உங்களை ஹிப்னாசிஸ் மூலமா உங்க சின்ன வயசுக்கு, பழக்கத்துக்கு அடிமையான ஆரம்ப நிலைக்கு கொண்டு போயிடுவேன்.”

    “அது எனக்கு தெரியுமா?”

    “தெரியாது ! நீங்க ஆழ்ந்த உறக்க நிலைக்கு போயிடுவீங்க! ஆனால், உங்கள் மூளை மட்டும் விழித்துக் கொண்டிருக்கும். நான் உங்களை, அந்த கால நினைவுகளை பற்றி கேட்டால், துல்லியமா,நீங்க சிகரேட் பிடிக்க ஆரம்பித்த காரணம், அப்போ உங்களோட இருந்த உங்க நண்பர் பெயர், அவரோட அந்த சமயம் பாத்த சினிமா முதற்கொண்டு எல்லாம் சொல்வீங்க. ஏன்னா, உங்க அடி மனசில் அது ஆழமா புதைஞ்சிருக்கும் நினைவுகள்.”

    “அப்படியா!”

    “அப்போ, அந்த அரை மயக்க சமயத்திலே, நான் உங்களுக்கு சிகரெட் பிடிக்கறதாலே ஏற்படற கெடுதல் பற்றி சொல்வேன். இந்த வயசிலே, அது ஏன் வேண்டாம் என்பதையும் சொல்வேன். நீங்க கேட்டுப்பீங்க!. அதை அப்படியே மனசிலே வாங்கிப்பீங்க. விழிப்பு வந்ததும், அந்த நினைவாலே, சிகரெட் பிடிக்கற வழக்கத்தை நீங்களே விட்டுடுவீங்க.”

    முகுந்தன் தொடர்ந்தான். “சுருக்கமா சொல்ல போனா, உங்க மைண்டை நான் கண்ட்ரோல் பண்ணுவேன். ஆனால், உங்க நன்மைக்காக!, உங்க அனுமதியோட ! ”

    “ஆச்சரியமா இருக்கே!”

    “இதிலே ஆச்சரியப் பட ஒண்ணுமில்லே. சின்ன குளவிகிட்டேயே இந்த மூளை சலவை திறமை இருக்கச்சே, நம்ம கிட்ட இருக்க கூடாதா?”

    “நம்பவே முடியலியே?”

    முகுந்தன் சிரித்தான். “நம்பித்தான் ஆகணும். இதோ இந்த படத்தை பாருங்க”

    ஒரு படத்தை திரையில் காட்டினான்.



    “இந்த சிலந்தி கோஸ்டா ரிகா என்கிற இடத்திலே தன் பாட்டுக்கு சிவனேன்னு வலை பின்னிக்கிட்டு, ஈ, எறும்பு தின்னுகிட்டு இருக்கும். திடீர்னு எங்கேருந்தோ ஒரு குளவி இங்கே வரும். சிலந்தி வலையிலே மாட்டிக்க இல்லே. சிலந்திய ஒரு வழி பண்ண. அதை தனது இனப்பெருக்கத்துக்காக மைன்ட் கண்ட்ரோல் செய்ய. குளவி, நேரே வந்து, ஏமாந்த சமயம் பார்த்து சிலந்தியை கொட்டிவிட்டு, அதன் வயிற்றில் தனது முட்டையை இட்டுவிட்டு பறந்து போயிடும். விழித்த சிலந்தி, பழையபடி சிவனேன்னு தன் பாட்டுக்கு, தனது வேலைய தொடரும்.

    கொஞ்ச நாள் கழித்து, முட்டையை உடைத்து கொண்டு வெளியே வரும் குளவிப் புழு, சிலந்தியின் வயிற்றின் மேலேயே உட்கார்ந்து சிலந்தியின் ரத்தத்தை குடித்து வளரும்."

    முகுந்தன் தொடர்ந்தான் "குளவிப் புழு, கூட்டு புழு பருவம் வரும்போது, அதற்கு ஒரு திரவம் சுரக்கும். அந்த திரவத்தை, மூளை சலவை கெமிகலை, சிலந்தியின் வயிற்றில் , குத்திவிடும். பாவம் சிலந்தி, அவ்வளவுதான், கிறுக்கு பிடித்தாற்போல், வழக்கமான ஆறு கோண வலைக்கு பதிலா, இரண்டு கோண வலை பின்ன ஆரம்பித்து விடும், ஒரு கூடு மாதிரி. அப்புறம், ஒரு மாதிரி மந்திரிச்சு விட்டா மாதிரி , கூட்டு நடுவிலே போய் உக்காந்துடும்.

    புழு, சிலந்தியை கொன்று, முழுவதும் உறிஞ்சி விட்டு, அடர்த்தியான, இரண்டு அடுக்கு வலையில், மழைக்கு பாதுகாப்பா, கூட்டுப் புழுவா அமர்க்களமா அமர்ந்து விடும். உழைத்தது யாரோ! அனுபவிப்பது யாரோ? கொஞ்சம் முதலாளித்துவம் போல இல்லே?

    கூட்டை விட்டு வெளியே வரும்போது ஒரு குளவியாக. கொஞ்ச நாள் கழித்து இது இன்னொரு பாவப்பட்ட சிலந்தியை தேடும். இது மாதிரி, இந்த உலகத்திலே நிறைய மைன்ட் கண்ட்ரோல் விஷயங்கள் நடந்து கிட்டு தான் இருக்கு“- முகுந்தன் முடித்தான்

    “அப்போ, நீங்க சொன்னா, நான் தற்கொலை கூட பண்ணிக்கிடுவேனா? அப்படி யெல்லாம் கூட நடக்குமா என்ன?”

    "நிச்சயமா ! மனோ வசிய முறையில் உங்களை என் வசப்படுத்தி , நான் சொன்னா, தற்கொலையும் பண்ணிக்குவீங்க , ஏன் கொலை கூட பண்ணுவீங்க !நீங்க இன்னும் என்னை நம்பவில்லை போல ! அப்போ, இந்த படக் காட்சியை பாருங்க. என்ன அழகா, இந்த ஜ்வல் குளவி, கரப்பான்பூச்சியை கொட்டி, அதை மூளைக் கட்டுப்பாடு பண்ணி , தன் இனத்தை பெருக்குது !



    கரப்பை ஒரு கோமா நிலைக்கு கொண்டுபோய், நாள் பட உயிரோட வெச்சு , கொஞ்சம் கொஞ்சமா ரத்தத்தை குடிக்குது. கிட்டதட்ட சாப்பாடு வெச்சுருக்கிற ஒரு ப்ரிட்ஜ் மாதிரி ! எப்படி இருந்த கரப்பான் இப்படி ஆயிடுச்சி பாருங்க ! "

    அந்த நேரத்தில், அலைபேசி அழைத்தது.

    “நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன்! இங்கே வரும்போது அலைபேசியை அனைச்சிட்டு தான் வரணுமென்று.”- முகுந்தன் கொஞ்சம் கோபமாக சொன்னான்.

    “சார்! அது உங்க மொபைல்”
    “ஓ! சாரி, ஒரு நிமிஷம்!” – முகுந்தன் வழிந்தான்.

    “ஹலோ! இங்கிட்டு முகுந்தன், அங்கிட்டு நீங்க யாரு?”

    “நான் செந்தில் கெமிக்கல் அண்ட் பெஸ்டிசைட் கம்பனிலேருந்து முதலாளியின் செகரட்டரி பணிக்கர் பேசறேன். உங்களை உடனடியா பாக்கணும், வர முடியுமா?”

    “என்னையா? நான் எதுக்கு? ஒண்ணும் புரியலியே?”

    “நேரே வாங்க சொல்றேன்! நாலு மணிக்கு கார் அனுப்பறேன். கட்டாயம் வரணும். முதலாளி ஐயா காத்துகிட்டு இருப்பார்”

    “சரி வரேன்”

    *****

    மாலை 5 மணி. தொழிலதிபர் செந்தில் அறை.

    செந்தில், பணிக்கர், முகுந்தன் அமர்ந்திருந்தனர்.

    “நான் நேரே விஷயத்திற்கு வரேன் முகுந்தன். எங்களுக்காக நீங்க ஒருத்தரை ஹிப்னடைஸ் பண்ணனும்.” – பணிக்கர்

    “யாரை?”- முகுந்தன் குழப்பமாக

    “சுகாதார அமைச்சர் பெருமாளின் கார் டிரைவரை”

    “எதுக்கு?”

    “சொல்றேன். நாங்க சொல்றபடி நீங்க செய்தீங்கன்னாக்க உங்களுக்கு 50 லட்சம் தரோம்.”

    “சார், நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியலே?”

    “நாங்க அமைச்சர் பெருமாளை தீர்த்து கட்டணும். அவரது டிரைவரை நீங்க வசிய படுத்தி, அவர் மூலமா ஒரு பெரிய கார் விபத்து நிகழ வைக்கணும். அதில் அமைச்சர் பெருமாள் இறக்கணும்."

    “அப்போ டிரைவர்?”

    “அவரையும் சேர்த்து தான். அது அவரோட தலைஎழுத்து”

    அதிர்ந்தான் முகுந்தன்.“சாரி, மன்னிக்கணும், என்னாலே முடியாது”

    “இங்கே பாருங்க முகுந்தன், உங்களுக்கு ஒரு ப்ராப்ளமும் வராது. அதை நாங்க பார்த்துக்கிறோம். சின்ன வேலை. பெத்த லாபம்”

    “வேண்டாம். என்ன விட்டுடுங்க. ப்ளீஸ்!” முகுந்தனுக்கு வியர்த்தது.

    “நாலு நாள் டைம் தறோம். யோசிச்சு முடிவெடுங்க.”


    ****


    ....தொடரும்
    Last edited by Muralidharan S; 11th January 2015 at 08:41 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •