Page 51 of 401 FirstFirst ... 41495051525361101151 ... LastLast
Results 501 to 510 of 4001

Thread: Makkal thilagam mgr part 13

  1. #501
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    புயலென திரி 13உக்கு பயணிக்கவைத்த அனைத்து மக்கள் திலகம் திரி பக்தர்களுக்கு என்னுடைய புத்தாண்டு நல வாழ்த்துக்கள். மற்றும் வர இருக்கும் தை திருநாள் அனைவருக்கும் நல்லதொரு வளமையும், வலிமையும், சீரையும், சிறப்பையும் கொடுக்கட்டும் என்று ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.

    புதிதாக வந்திருக்கும் திரு cs குமார் சார் ...வருக...வருக...தங்கள் வருகை நல வரவாகுக..!

    எஸ்வி சார்...உங்களுக்கு என்னுடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். !

    திரு யுகேஷ் ...இரு திரிக்கும் பாலமாக அமைந்திருக்கும் தங்களுடைய நல்ல மனதிற்கும் நல்ல எண்ணத்திற்கும் கோடானு கோடி நன்றிகள்..! தங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்...!

    கலைவேந்தன் சார் ! சௌக்கியமா ? சிறந்த நகைச்சுவையுடன் கூடிய சிந்தையை கிளரும் தங்களுடைய பதிவை படித்து நிறைய நாளாகிவிட்டது..! ஒரு பதிவு பதிவிட்டீர்களேயானால் மிகவும் நன்றாக இருக்கும்..! தங்களின் பங்களிப்பு இந்த திரிக்கு தனி பலத்தை சேர்த்துள்ளது..! இந்த புதுவருடத்தில் தை பிறக்கவிருக்கும் நிலையில் தங்களுக்கு எல்லா வளமும் இறைவன் கொடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு என்னுடைய புதுவருட மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

    மற்றும் இந்த திரி நண்பர்கள் திரு கலியபெருமாள், வெல்லூர் ராமமூர்த்தி சார், திரு சைலேஷ்பாபு சார்..மற்றும் திரியின் "புதுப்புயல்" முத்தையன் சார், மற்றும் அனுபவஸ்த்தர், தகவல்களின் கருவூலம் திரு பேராசிரியர் செல்வகுமார் சார், புதிதாக இணைந்துள்ள பெங்களூரை சேர்ந்த பழுத்த அனுபவஸ்த்தர், "ஞ்யாயஸ்த்தர்" அண்ணன் திரு cs குமார் அவர்கள் மற்றும் பெயர் விட்டுப்போன அனைத்து நண்பர்களுக்கும் இந்த ஆண்டு இனியதொரு ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி என் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

    Jaihind !

    Rks

    திரு.ஆர்.கே.எஸ்.

    தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள். புரட்சித் தலைவர் நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய அனைவருக்கும்,தாங்கள் எழுதிய கவிதைக்கும் நன்றி தெரிவித்திருந்தேன். அதைப் பார்த்தீ்ர்களா என்று தெரியவில்லை. தலைவர் நினைவஞ்சலி தொடர்பாக எங்கள் சகோதரர்கள் போட்ட காட்டாற்று வெள்ளம் போன்ற புகைப்படங்களில் எனது பதிவு அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

    அந்தக் கவிதைக்காக மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். அது முதல் கவிதை என்று வேறு சொல்லியிருந்தீர்கள். இத்தனை நாள் இந்த திறமையை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்? ‘சுரங்கத்தில் இருக்கும் ஒளிவீசும் வைரம் நீண்ட நாள் சுரங்கத்தில் தங்காது. வெளிவந்தே தீரும்’ என்று திரு.சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியது போல உங்கள் கவிதைத் திறமை வெளிவந்து விட்டது. அதுவும் முதல் கவிதை தலைவருக்கு நினைவஞ்சலியாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி. தலைவர் பிறந்தநாளில் உங்களின் 2வது கவிதையை எதிர்பார்க்கிறேன்.

    ‘மாற்றான் தோட்டத்து மல்லிகையே
    கணேசர் புகழ்பாடும் கவிக்குயிலே
    தலைவர் பிறந்த நாள் கவிதை ஆர்த்து
    களிப்பில் எம்மை ஆழ்த்து.’

    நகைச்சுவை பதிவு போட வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். இப்போது அந்த மனநிலையில் நான் இல்லை. காரணம், நண்பர் திரு.கோபால் நம்மிடமிருந்து 4வது முறையாக விடை பெற்றுக் கொண்டிருக்கிறார். அதனால் சோகத்தில் இருக்கிறேன். யார் கண்டது? அவர் என்னை விட திறமைசாலி. கணக்கு சரியாக வைத்திருப்பார். இதைப் பார்த்த உடனே, ‘‘பொய் சொல்லாதீர்கள் கலைவேந்தன். நான் 4 முறை விடைபெறவில்லை. 3 முறைதான்’ என்று சொல்லிக் கொண்டு வந்தாலும் வரலாம்.

    வரட்டும். வரவேண்டும். அதைத்தான் எதிர்பார்க்கிறேன். அப்படி வந்துவிட்டால் நமது மகிழ்ச்சிக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமேது? இப்போது உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாததற்கு மன்னிக்கவும். சோகமாக இருக்கிறேன்... அவ்...வ்...வ்... (நீங்கள் கேட்டதற்காக இது நகைச்சுவை பதிவு என்று நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல திரு.ஆர்.கே.எஸ்.)

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #502
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post


    வெளியீட்டு நாளன்று, திரண்ட பிரம்மாண்டமான கூட்டத்தை கட்டுப்படுத்த, தமிழக சிறப்பு காவல் படையின் உதவியை நாடும் அளவுக்கு, தமிழ் திரையுலகில் ஒரு புதிய வரலாற்று நிகழ்வினை ஏற்படுத்திய, மக்கள் திலகத்தின் மற்றுமொரு மகத்தான காவியம் “நீரும் நெருப்பும்” பற்றிய சிறப்பு பதிவினை பதிவிட்ட திரு. வரதகுமார் சுந்தராமன் என்றழைக்கப்படும் திரு. சி. எஸ். குமார் அவர்களுக்கு மிக்க நன்றி. ! .

    நீரும் நெருப்பும் படத்தைப் பற்றிய அருமையான தகவல்களையும் விமர்சனத்தையும் வழங்கிய திரு.குமார் சார் அவர்களுக்கும், அட்டகாசமான ‘கரிகாலன்’ ஸ்டில்லை பதிவிட்ட திரு.செல்வகுமார் சாருக்கும் நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  4. #503
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    பொன்மனச் செம்மலின் அட்டகாசமான காலண்டரை வடிவமைத்துள்ள திரு.முரளி அவர்களுக்கும் அதை பதிவிட்டு அனைவரின் கண்களுக்கும் விருந்தாக்கிய திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  5. #504
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by puratchi nadigar mgr View Post
    தலைவர் தொடர்பான பத்திரிகை செய்திகள், நினைவுநாள் அஞ்சலி படங்கள், இன்றைய சூழலுக்கு பொருத்தமான அவரது திரைப்பட பட்டியலில் மேலும் ஒரு படத்தை பொருத்தமாக பதிவிட்டவர்.......

    பல்லாண்டு வாழ்க - திரு.லோகநாதன்

    இதுவும் பொருத்தமே.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  6. #505
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Muthaiyan Ammu View Post
    எனது நூலகம்
    சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு,

    ‘அரசிளங்குமரி சில நினைவுகள்’ என்று நான் போட்டிருந்த பதிவில் நம்பியாரின் பேட்டியை பற்றி குறிப்பிட்டிருந்தேன். அது எம்.ஜி.ஆர்.கதை புத்தகத்தில் இருக்கிறது(2வது பாகம் என்று நினைக்கிறேன்) அந்த பேட்டியை பதிவிட்டால் எல்லாரும் படிக்கலாம். பதிவிட முடியுமா? நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  7. Likes Russelldvt liked this post
  8. #506
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Tenali Rajan View Post
    மக்கள் திலகம் தெய்வம் - வெற்றி-திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.


    அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.. அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
    புகழெல்லாம் எம்.ஜி.ஆர். பொன்மனம் எம்.ஜி.ஆர்.,
    பொன்மனம் எம்.ஜி.ஆர்.

    சத்யஅருளாலே தரணிக்கு வந்தவன், தத்துவ சோலையிலே தவமாக பூத்தவன்;
    தவமாக பூத்தவன்.

    அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.. அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
    புகழெல்லாம் எம்.ஜி.ஆர். பொன்மனம் எம்.ஜி.ஆர்.,
    பொன்மனம் எம்.ஜி.ஆர்.

    காவிய தலைவன் அவன், கருணையின் வடிவம் அவன்
    மன்னாதி மன்னன் அவன், மக்களின் திலகம் அவன்,
    மக்களின் வேந்தன் அவன்; மக்களின் வேந்தன் அவன்.

    அழகெல்லாம் எம்.ஜி.ஆர்.. அன்பெல்லாம் எம்.ஜி.ஆர்.
    புகழெல்லாம் எம்.ஜி.ஆர். பொன்மனம் எம்.ஜி.ஆர்.,
    பொன்மனம் எம்.ஜி.ஆர்.


    அருமையான கவிதையை வழங்கியுள்ள திரு. தெனாலிராஜன் அவர்களுக்கு நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  9. #507
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGRRAAMAMOORTHI View Post
    பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தலைவருக்கு பூக்களால் பூக்களே பூஜிக்கின்றன. அருமையான படம். நன்றி திரு.ராமமூர்த்தி சார். உங்களது வேலூர் ரெக்கார்ட்சை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. Likes Russelldvt liked this post
  11. #508
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் தீவிர பக்தர் திரு.தமிழ்நேசன் அவர்களின் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், தமிழ்நேசன் அவர்களுக்கு எனது அனுதாபங்களையும் தெரிவிக்கிறேன்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  12. #509
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like

    parakkum paavai

    சென்னை சரவணாவில் கடந்த 02/01/2015 முதல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "பறக்கும் பாவை " தினசரி 3 காட்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் சுவரொட்டியினை காண்க.

    Last edited by puratchi nadigar mgr; 4th January 2015 at 07:06 PM. Reason: MISSING PICTURE

  13. Likes ainefal liked this post
  14. #510
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இதயக்கனி இதழில் பிரசுரம் ஆன காலண்டர்.
    --------------------------------------------------


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •