Page 51 of 397 FirstFirst ... 41495051525361101151 ... LastLast
Results 501 to 510 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #501
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    “காட்டு வழி பாதையில கண்டெடுத்த ஆணிமுத்து நான் புடிச்ச மாமன் மகன் தான்”

    பாடல் நன்றாக இருந்தது ராஜேஷ்ஜி! காலை வணக்கங்கள்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #502
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இவர் கவிதைக்கு ராஜா - இன்று கவியரசு கண்ணதாசன் நினைவு நாள்

    சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24ல் சிறகை விரித்து, சிகாகோ மண்ணில் 1981 அக்.,17ல் வாழ்வை முடித்துக் கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், பிறருக்கு எட்டாத கருத்துக்களை கொட்டியவர்.

    பத்து வயதானதொரு பாலகன்
    உன் சன்னதியில் பாடியதும் நினைவில் இலையோ முத்து என இட்ட பெயர் முத்தாக
    வேண்டுமென முறையீடு செய்ததிலையோ! தமிழில் ஒரு கவிமகனை
    சிறுகூடல் பட்டிதனில்
    தந்த மலையரசித் தாயே-


    என மலையரசி கோயிலில் கவிதை வடித்தவர். அப்போது அவரது வயது பத்து. அவர் கவிஞர் கண்ணதாசன். வேலை கேட்டு ஒரு பத்திரிகை அலுவலகம் சென்றவரிடம், ஏதாவது இதழ்களில் எழுதி இருக்கிறீர்களா என கேட்க, ஆமாம் என்றார் கவிஞர். என்ன பெயரில் எழுதுகிறீர்கள் என சட்டென கேட்க, கொஞ்சமும் தயக்கமின்றி, கண்ணதாசன் என்ற பெயரில்... என்றார். இப்படித்தான் பெயரும், எழுத்தும் அவர் வசப்பட்டது.


    படைப்பாற்றல் : பெண்மையை போற்றி மாங்கனி என்ற சிறு காப்பியம் படைத்தார். சங்கரர் வட மொழியில் எழுதிய கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில், பொன்மழை யாகத் தந்தார். பஜகோவிந்தத்தை எளிய நடையில் மொழி பெயர்த்தார். பகவத்கீதைக்கு உரை விளக்கம் தந்தார்.
    1944 - 1981க்கு இடையே அவர் 4ஆயிரம் கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேல் சினிமா பாடல்கள் எழுதியுள்ளார். தனது அனுபவங்களை கவிதையாக்கியவர். உதாரணமாக கண்ணதாசன்,
    காங்கிரசில் இருந்து விலகினார். மீண்டும் அவரை காங்கிரசில் சேர்க்க தூதுவர் ஒருவரை அனுப்பினார் காமராஜர். காமராஜரே நேரில் பேசாமல் தூது அனுப்பியது, கவிஞருக்கு வருத்தத்தை தந்தது. தனது ஆதங்கத்தை அப்போது பட்டணத்தில் பூதம் என்ற படத்தில் வரும் பாடலில் தெரிவித்தார்... இப்படி:


    அந்த சிவகாமி மகனிடம்
    சேதி சொல்லடி
    எனை சேரும் நாள் பார்க்கச்
    சொல்லடி
    வேறு யாரோடும் நான்
    பேச வார்த்தை ஏதடி
    வேலன் இல்லாமல் தோகை ஏதடி


    என எழுதினார். சிவகாமி என்பது காமராஜரின் அன்னை பெயர்.
    தத்துவங்களை எளிமையாக்கி பாமரரும் புரியும் வண்ணம் பாடல்களில் புகுத்திய சாதனை கவிஞருக்கே உரியது. அவரது அர்த்தமுள்ள இந்து மதத்தை அவரது குரலிலேயே, தம்புரா இசைப் பின்னணியில் கேட்டுப்பாருங்கள். உலகமே உங்கள் வசப்பட்டதாய் உணர்வீர்கள். 270 நூல்களை எழுதியிருக்கிறார். அதில் வனவாசம் 30 பதிப்பு, மனவாசம் 20 பதிப்பையும் கண்டு சாதனை நிகழ்த்தி இருக்கிறது.


    அரசவை கவிஞர் :


    சாண்டோ சின்னப்பா தேவரின் தெய்வம் படத்தில் மருதமலை மாமணியே முருகையா, தேவரின் குலம் காக்கும் வேலையா


    என்ற பாடலை எழுதினார். இசைக்கருவிகளும் பாடலும் போட்டிபோட்டு ஒலித்த இந்தப் பாடலுக்கு இரண்டு அர்த்தம் கொள்ளலாம். சின்னப்பா தேவருக்கு இப்பாடல் மிகவும் பிடித்துப் போயிற்று. நிரப்பாத செக்கை கொடுத்து கவிஞரை பாராட்டினார்.
    ஒரு கவியரங்கில் கவிதை வாசித்த பத்து பேருக்கு கரவொலி கிடைக்கவில்லை. காரணம், கவிஞர் கவிதை வாசிக்க வேண்டும் எனக் கூட்டம் காத்திருந்ததுதான். கடைசியில் கவிஞர் கவிதை வாசித்தார். கைதட்டல் அடங்க நேரமாயிற்று.கவிஞர் சொன்னார், யார் கவிதை வாசித்தபோது நீங்கள் கூச்சலிட்டீர்களோ அவர் எழுதிய கவிதைதான் இது. புகழ்பெற்றவர் என்பதற்காக கைதட்டல் என்பது நல்ல மரபல்ல. நீங்கள் கவிதையை ரசிக்கவில்லை. வாசித்த நபரின் புகழைப் பார்க்கிறீர்கள். இது நல்ல பண்பல்ல, என்றார்.
    கவிஞரின் தமிழாற்றலை உணர்ந்தவர் எம்.ஜி.ஆர்., அதனால்தான் அவர் முதல்வராக இருந்தபோது, கவிஞர் கண்ணதாசனை அரசவை கவிஞராக்கினார்.மதுவிலக்கு அமலில் இருந்தபோது மதுகுடிப்பதற்கான பெர்மிட் பெற, அமைச்சர் கக்கனை சந்தித்தார். எனது பெர்மிட் என்ன ஆனது என்ற அவரது குரலில் கோபம் கொப்பளித்தது. அமைச்சர் கக்கன், சற்று அமருங்கள். தமிழ் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காகவே பெர்மிட்டில் கையெழுத்திடாமல் வைத்திருக்கிறேன் எனச் சொல்ல, கவிஞரின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.ஏசுகாவியம் எழுதுவதற்காக குற்றாலத்தில் பாதிரியார் தம்புராஜூடன் இருந்தார். தினமும் காலையில் குளித்து, நெற்றி நிறைய விபூதி பூசிய பின்பு, பகல் முழுவதும் ஏசுகாவிய எழுத்துப்பணி.அவர் மதுஅருந்துவார் என்பதை உணர்ந்த பாதிரியார், தேவையெனில் மாலையில் மதுஅருந்தி ஓய்வெடுங்கள் என்றார்.
    கவிஞரோ இப்பணி முடியும் வரை மது அருந்தமாட்டேன். இது உலக மக்களின் உயர்ந்த நூல் என்பதை என்மனம் சொல்கிறது என்றார்.


    கண்ணே கலைமானே....:


    கேள்விகளுக்கு மதிநுட்பத்தோடு பதில் சொல்வார்.அரசியல் மேடைக்கும், இலக்கிய மேடைக்கும் என்ன வித்தியாசம் என்றதற்கு, அரசியல் மேடை மனிதனை முட்டாளாக்குவதற்காகப் போடப்படுவது, இலக்கிய மேடை முட்டாள்தனத்தை தெளிய வைப்பதற்காக போடப்படுவது என்றார்.
    உங்கள் புத்தகத்தை படிப்போருக்கு நீங்கள் சொல்லும் புத்திமதி என்ன என்றதற்கு, புத்தகத்தில் உள்ள கருத்துக்களை பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரை பின்பற்றாதீர்கள் என போட்டு உடைத்தார். இதற்கும் ஒருபடி மேலே சென்று, எப்படி வாழக்கூடாது என்பதற்கு எனது வாழ்க்கையின் முற்பகுதியையும், எப்படி வாழ வேண்டும் என்பதற்கு காந்தியடிகளின் சுயசரிதையும் உங்களுக்கு வழிகாட்டும் என்று வனவாசத்தில் சொன்னவர் கவியரசர்.
    சினிமா உலகில் கால்பதிக்க அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதாக இல்லை. கலங்காதிரு மனமே என்ற பாடலுடன் துவங்கி, கண்ணே கலைமானே என்ற பாடலுடன் நிறைவானார். சாத்தப்பனுக்கு மகனாக பிறந்தான். ஆனால் இவன்தான் சினிமா பாடல்கள் மூலம் எல்லா வாசல்களையும் திறந்தான் என்கிறார் கவிஞரைப் பற்றி நெல்லை ஜெயந்தா.
    கண்ணதாசன் முறையாக தமிழ் படித்தவரில்லை என, சில தமிழறிஞர்கள் சொன்னபோது, அதனாலென்ன, தமிழுக்கு கண்ணதாசனைத்தான் தெரிகிறது என பதிலடி கொடுத்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். காட்டுக்கு ராஜா சிங்கம். கவிதைக்கு ராஜா கண்ணதாசன் என காமராஜர் பாராட்டினார் என்றால், அர்த்தமில்லாமலா இருக்கும்?

    - See more at: http://cinema.dinamalar.com/tamil-ne....vbc2m5S2.dpuf

  4. Likes Russellmai liked this post
  5. #503
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ்ஜி!

    பி.எம்.போட்டிருக்கேன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #504
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (96)

    இன்று ஒரு செம ஜாலியான பாட்டப் பாப்போம். 'இன்றைய ஸ்பெஷலி'ல் இன்னும் இந்த மாதிரி குத்துப் பாட்டு வரலையா? அதான் அந்தக் குறை இருக்கக் கூடாதேன்னு இந்தப் பாட்டு. இது என்ன மதுர கானமா இல்லை ........ குத்துப் பாட்டு கானமா அப்படின்னு சண்டைக்கு வந்துடாதீங்க. ஹி ஹிஹி ...ஒரு ஜாலிக்குத்தான். இந்த மாதிரிப் பாட்டுக்கு என் ராட்சஸி இல்லாமலா? அப்பிடி ஈஸ்வரி இல்லாம நான்தான் 'இன்றைய ஸ்பெஷல்' போட்டுடுவேனா?

    அதுவும் பாட்டை மட்டும் நீங்க கேட்கப்படாது. ராட்சஸியைப் பார்த்துகிட்டே நீங்க ஜாலியா சந்தோஷமா இந்த மழைக்கு பட்டாணியோ ,கடலையோ கொறிச்சுகிட்டே பார்க்கணும். அதான் நம்ம நோக்கமே. அந்த மாதிரி பாருங்க. செம குஜாலா இருக்கும்.


    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிச்ச 'நான்கு கில்லாடிகள்' படம் பத்தி உங்களுக்குத் தெரியாம இருக்காது. கொஞ்சம் காமெடியாவே போகும். ஜெய்சங்கர், மனோகர், தேங்காய், சுருளி, பாரதி, புஷ்பமாலா, குமாரி பத்மினி இப்படி எல்லோரும் ஆக்ட் குடுத்துருப்பாங்க. எடிட்டிங் அப்புறம் டைரெக்ஷனை எல்.பாலு அப்படின்னு ஒருத்தர் எடுத்துக் கட்டிக்கிட்டு செஞ்சிருப்பாரு. கதை வசனம் நம்ம ஏ.எல்.நாராயணன். அப்படியே படத்துல தலையும் காட்டி இருப்பாரு. பாட்டு கூட எழுதியிருப்பாரு கண்ணதாசன் கூட சேர்ந்து.

    பாட்டு ஒவ்வொன்னும் ஷோக்கா இருக்கும்.



    'செவ்வானத்துல ஒரு நச்சத்திரம்' அப்புறம் 'எது எதில பொருந்துமோ' அப்புறம் இன்னொன்னு 'நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி' அப்புறம் இப்ப போடப் போறப் பாட்டு.

    வழக்கமா மாடர்ன் தியேட்டர்ஸ்க்கு மியூசிக் போடுற வேதாதான் இதுக்கும் போட்டிருப்பாரு.


    இப்ப நீங்க பாக்குற பாட்டு சினிமா ஷூட்டிங் எடுக்குற பாட்டு. நாட்டுக்கட்டை கணக்கா பாரதி ஹீரோயினா நடிக்க நம்ம 'விஜயபுரி வீரன்' ஆனந்தன்தான் இந்தப் பாட்டுக்கு ஹீரோ. (படத்துக்கு இல்லீங்கோ)

    ரெகார்டிங் தியேட்டர்ல இசையமைப்பாளருங்க எல்லா மியூசிக் வாத்தியத்தையும் வச்சி மியூசிக் போட, நம்ம ராட்சஸி ஜோரா பாட, (ஈஸ்வரி எவ்வளவு ஒல்லியா அழகா இருக்காங்க) படா ஷோக்கா இந்தப் பாட்ட எடுப்பாங்க. கூட பொன்னுசாமி பாடுவாரு.

    'பூக்கடப் பக்கம் டீக்கடை ஓரம்

    ஏக்கத்தோடு நான் காத்திருந்தேனே'

    அப்படின்னுட்டு.


    அப்பிடியே டைரெக்டர் ஜெயசங்கரு கோஷ்டி இந்தப் பாட்ட படமா புடிக்கும். சேலம் ஏற்காடு பக்கத்துல மலைப் பக்கம் ஷூட்டிங் எடுப்பாங்க அவுட்டோரில. எல்லா காமெடி நடிகர்களும் இருப்பாங்க. மூர்த்தி, தேங்காய் எல்லாரும்.



    ஷோக்கு பாரதி பாவாட தாவணி போட்டுகிட்டு கொண்ட முடிஞ்சு பூ வச்சிக்கிட்டு அப்படியே அச்சு அசலா கிராமத்துக் கிளி மாதிரி இருப்பாங்க. லாரி டிரைவரா நம்ம ஆனந்தன் ஜோடி சேருவாரு பாரதி கூட. சும்மா இவரும் ஜோரா பேன்ட் ஷர்ட்டெல்லாம் போட்டுகிட்டு இன் பண்ணிக்கிட்டு வருவாரு. அப்புறம் சம்பந்தமே இல்லாம வெஸ்டர்ன் மியூசிக்கெல்லாம் கலக்க ரெண்டு பெரும் செம டான்ஸ். என்னவோபா நல்லாவே இருக்கும்.

    புல்லா மெட்ராஸ் பாஷைலே பாட்டு நகரும். நல்லா டைம் பாஸ் ஆகும். சின்னக் கண்ணரு சிலிர்த்துகிட்டே பாப்பாரு.


    ராட்சஸி ரிகார்டிங் தியேட்டர்ல இந்தப் பாட்டத்தான் பின்னுதுங்க ஹோய்.



    இந்தாங்க பாட்டோட மெட்ராஸ் பாஷை வரிங்க



    பூக்கடப் பக்கம் டீக்கடை ஓரம்
    ஏக்கத்தோடு நான் காத்திருந்தேனே
    இன்னாத்தே நீயும் வரல்லே

    பூக்கடப் பக்கம் டீக்கடை ஓரம்
    ஏக்கத்தோடு நான் காத்திருந்தேனே
    இன்னாத்தே நீயும் வரல்லே
    என் அத்தான் இந்த கண்ணாத்தா
    தூங்கவே இல்லே

    நான் என்னாத்தச் சொல்லுவேண்டி
    பொன்னாத்தா என்ன அந்த
    மல்லாவரம் லாரி ஓனரு
    போக்கிரிப் பையன் போகச் சொன்னான்
    பெங்களூரு
    லாரிய எடுத்து போகச் சொன்னான்
    பெங்களூரு

    எத்தினி பசங்க பொண்ணப் பாக்கவே
    வந்தாங்க ஊட்டாண்ட
    அட இன்னான்னு சொல்லுவேன்
    நின்னாங்க கேட்டாண்ட
    ஒன் மூஞ்சப் பாத்து சேஞ்சு ஆனேன்
    முட்டாளு நானு
    ஒன் மூஞ்சப் பாத்து சேஞ்சு ஆனேன்
    முட்டாளு நானு

    மூஞ்சுக்கென்ன பாரு நான்
    முன்னேறிய ஸ்டாரு அஹ்ஹங்
    மூஞ்சுக்கென்ன பாரு
    நான் முன்னேறிய ஸ்டாரு
    இன்னாடி முழிக்கிற சும்மா

    யாரு?

    டிரைவரு

    பூக்கடப் பக்கம் டீக்கடை ஓரம்
    ஏக்கத்தோடு நான் காத்திருந்தேனே
    இன்னாத்தே நீயும் வரல்லே
    என் அத்தான் இந்த கண்ணாத்தா
    தூங்கவே இல்லே

    நான் என்னாத்தச் சொல்லுவேண்டி
    பொன்னாத்தா என்ன அந்த
    மல்லாவரம் லாரி ஓனரு
    போக்கிரிப் பையன் போகச் சொன்னான்
    பெங்களூரு
    லாரிய எடுத்து போகச் சொன்னான்
    பெங்களூரு

    ரோட்டுல போற பொம்பளயெல்லாம்
    அடிச்சாங்க சைட்டு
    அட இன்னாடா பேஜாருன்னு
    உட்டேன் போ ரைட்டு
    ஒன் மூஞ்சப் பாத்து சேஞ்சு ஆனேன்
    முட்டாளு நானு
    ஒன் மூஞ்சப் பாத்து சேஞ்சு ஆனேன்
    முட்டாளு நானு

    நானு என்ன லேசா
    நான் கைபடாத ரோசா
    நானு என்ன லேசா
    நான் கைபடாத ரோசா
    அட இன்னாய்யா முழிக்கிற சும்மா

    யாரு?

    நான்தான்

    பூக்கடப் பக்கம் டீக்கடை ஓரம்
    ஏக்கத்தோடு நான் காத்திருந்தேனே
    இன்னாத்தே நீயும் வரல்லே
    என் அத்தான் இந்த கண்ணாத்தா
    தூங்கவே இல்லே

    தா

    என்னாத்தச் சொல்லுவேண்டி
    பொன்னாத்தா அந்த
    மல்லாவரம் லாரி ஓனரு
    போக்கிரிப் பையன் போகச் சொன்னான்
    பெங்களூரு
    லாரிய எடுத்து போகச் சொன்னான்
    பெங்களூரு


    Last edited by vasudevan31355; 18th October 2014 at 09:40 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  7. Likes Russellmai, chinnakkannan, rajeshkrv liked this post
  8. #505
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ராஜேஷ்ஜி!

    பி.எம்.போட்டிருக்கேன்.
    பதில் போட்டாயிற்று.

  9. #506
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    “காட்டு வழி பாதையில கண்டெடுத்த ஆணிமுத்து நான் புடிச்ச மாமன் மகன் தான்”

    பாடல் நன்றாக இருந்தது ராஜேஷ்ஜி! காலை வணக்கங்கள்.
    உங்களுக்கு பாடல் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.

  10. #507
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பூக்கடை பக்கம் எனது பிடித்தம். பாரதியும் ,ரவியும் ஒத்தையடி பாதையிலே கலக்கல்.அதையும் பதியுங்கள்.



    நான்கு கில்லாடிகள் வந்த போது என்னை கவர்ந்த படங்களில் ஒன்று. எனக்கு மாடர்ன் தியேட்டர் தியேட்டர் படங்கள் பொதுவாக பிடிக்கும். பாபு தியேட்டர் திறந்த போது "வல்லவன் ஒருவன் "அங்குதான் பார்த்தேன்.(கடலூர்)



    ஜிலுக்கடி ஜிலுக்கடியும் முடிந்தால்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  11. #508
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    நான்கு கில்லாடி பாடல் தூள். இதில் எல்லாமே சூப்பர் பாடல்கள்
    ரவி- பாரதி ஒரு வித அழகு என்றால் ஜெய் - பாரதி இன்னும் அழகு...

    இதில் மனோகர் சும்மா தூள் கிளப்பியிருப்பார்..

    இதில் இசையரசியும் ராட்சசியும் கலக்கும் ஒரு பாடல் உண்டு
    எது எதிலே பொருந்துமோ .. குமாரி பத்மினியும் பாரதியும்


  12. Likes Russellmai liked this post
  13. #509
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    பதில் போட்டாயிற்று.
    பாத்துட்டேன்ஜி! நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #510
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பராசக்தி' இன்று இதே தேதியில் அன்று (17-10-1952) வெளியான நாள். (சிறப்புப் பதிவு)

    'மதுர கானங்கள்' பராசக்தியையும், அதன் காலத்தால் அழிக்க முடியாத கலைஞனையும், பாடல்களையும் வாழ்த்துகின்றது.



    'வெளி வந்த நாள்: 17-10-1952

    மூலக்கதை: எம்.எஸ். பாலசுந்தரம்

    திரைக்கதை, வசனம்: கலைஞர் மு.கருணாநிதி

    இசை: ஆர். சுதர்சனம்

    ஒளிப்பதிவு: எஸ்.மாருதிராவ்

    தயாரிப்பு: நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள்

    இயக்கம்: கிருஷ்ணன்-பஞ்சு

    நடிக, நடிகையர்: நடிகர் திலகம், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்வரநாமம், வி.கே.ராமசாமி, பண்டரிபாய், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர்.

    கதை:

    பாரிஸ்டர் சந்திரசேகரன் தன் தம்பிகளுடன் சிறு வயது முதல் (ஞானசேகரன், குணசேகரன்) ரங்கூனில் வாழ்ந்து வருகிறார். தமிழ்நாட்டில் மதுரையில் தந்தையுடன் இவர்களின் தங்கை கல்யாணி வசித்து வருகிறாள். அவளுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளையும் பார்த்தாகி விட, உலகப் போர் காரணமாக அண்ணன்மார்கள் மூவரும் ரங்கூனிலிருந்து தங்கையின் கல்யாணத்திற்கு வர கப்பலில் இடம் கிடைக்காததால் கடைத்தம்பி குணசேகரன் மட்டும் திருமணத்திற்கு இந்தியா புறப்பட்டு வருகிறான். கப்பலும் குறிப்பிட்ட நேரத்தில் மதராஸ் வரமுடியாமல் போர்க் காரணங்களினால் தாமதப்படுகிறது. திருமணம் முடிந்து கர்ப்பமுறும் கல்யாணி குழந்தையைப் பெற்றெடுத்து கணவனை விபத்தில் பறி கொடுக்கிறாள். தந்தையையும் இழக்கிறாள். அநாதை ஆகிறாள். கப்பலில் மதராஸுக்கு தாமதமாக வந்து சேரும் குணசேகரன் தான் கொண்டுவந்த பணத்தையும், பொருளையும் வஞ்சகர்களிடம் பரிதாபமாகப் பறி கொடுக்கிறான். ஒரு சாண் வயிற்றுக்காக பைத்தியம் போல நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். விதவையான கல்யாணி இட்லிக் கடை நடத்தி குழந்தையுடன் கஷ்டப்படுகிறாள். தன் தங்கையை பல சிரமங்களுக்கிடையில் மதுரை வந்து கண்டு மனம் நொந்து போகிறான் குணசேகரன். தான் அண்ணன் என்று அவளிடம் காட்டிக் கொள்ளாமலேயே.அவளுக்கு துணையாக அவளுடனே இருக்கிறான். கல்யாணிக்கு அவன் கிறுக்கண்ணா. ஆனால் அங்குள்ள காமுகன் ஒருவனின் நடத்தைக்குப் பயந்து இட்லிக்கடையை விட்டு விட்டு குழந்தையுடன் அந்த ஊரை விட்டே போய் விடுகிறாள். கல்யாணியைக் காணாமல் தேடி அலைகிறான் குணசேகரன்.

    இடையில் போரின் உக்கிரம் தாளாமல் ரங்கூனிலிருந்து தமிழகம் திரும்ப பயணப்படும் ஞானசேகரனும் சந்திரசேகரனும் ஜப்பான் விமானங்களின் குண்டு வீச்சால் பிரிகிறார்கள். தம்பிகளை இழந்து தவிக்கும் சந்திரசேகரன் திருச்சி வந்து நீதிபதியாகி தன் தங்கை கல்யாணியைத் தேடுகிறார். ஞானசேகரன் குண்டு வீச்சால் கால்களை இழந்து நொண்டியாகிறான். பர்மா அகதிகளில் ஒருவனாக தமிழகம் வந்து சேர்கிறான். ஞானசேகரனும் அவனுடன் வந்த மற்ற அகதிகளும் ஆதரவின்றி பிச்சைக்காரர்களாகவே ஆகி விடுகின்றனர்.

    அனாதையாகத் திரியும் குணசேகரனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனுக்கு நல்வாழ்வு காட்டுகிறாள் புரட்சி எண்ணம் கொண்ட விமலா என்ற ஒரு கோதை.

    ஊர் விட்டு ஊர் மாறி வந்து காமுகர்களிடமும், கயவர்களிடமும் சிக்கி சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிறாள் கல்யாணி. பசிக் கொடுமையில் குழந்தைக்கு பால் வாங்கக் கூட இயலாத நிலையில் அனைவரிடமும் பிச்சை கூட கேட்கிறாள் கல்யாணி. ஆனால் யாரும் இரக்கம் காட்டவில்லை. மாறாக அவள் கற்பைத்தான் விலை பேசுகிறார்கள். கோவில் பூசாரி ஒருவன் கல்யாணியின் கற்பை சூறையாட முயல்கிறான். வாழவே வழியில்லாமல் போன நிலையில் பசியின் அகோரப் பிடியில் தவிக்கும் தன் மழலைச் செல்வத்தையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயல்கிறாள் கல்யாணி. ஆனால் காவலர்களிடம் மாட்டிக் கொள்கிறாள். வழக்கை விசாரிக்கும் நீதிபதியோ அவளுடைய அண்ணன் சாட்சாத் சந்திரசேகரன்தான். கல்யாணி தன்னுடைய சோகக்கதையை கோர்ட்டில் சொல்ல அவள் தன் தங்கை என்று தெரிந்து துடித்து விழும் நீதிபதி அண்ணன் சந்திரசேகரன் மனநிலை பாதிக்கப்படுகிறார்.

    கல்யாணின் வாழ்வை சூறையாட நினைத்த பகல் வேஷ காமாந்தக பூசாரி ஒருவனை வெட்டி நீதிமன்றம் புகுகிறான் குணசேகரன். அங்கு தனக்காகவும், குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக கோர்ட்டில் நிற்கும் தன் தங்கைக்காகவும் புரட்சிகரமாக புதுமையாக வாதாடுகிறான். தான் பட்ட துயரங்களையும் தன் தங்கை கல்யாணி பட்ட துயரங்களையும் எடுத்துரைக்கிறான். சமூகத்தில் பெண்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் ஏற்படும் கொடுமைகளைப் பற்றியும் சாடுகிறான். வழக்கு முடிவுக்கு வந்து குணசேகரன் நிரபராதி என்று விடுதலையாகிறான். கல்யாணியின் குழந்தையும் கருணை மனம் கொண்ட குணசேகரனுக்கு அடைக்கலம் தந்த அதே விமலாவால் காப்பாற்றப்பட்டு உயிர் பிழைப்பதால் கல்யாணியும் குற்றத்திலிருந்து விடுவிக்கப் படுகிறாள். தன் தங்கையைக் கண்ட சந்தோஷத்தில் அண்ணன் சந்திர சேகரனும் குணமடைகிறார். பிச்சைக்காரனாக அலைந்து திரிந்த ஞானசேகரனும் குடும்பத்துடன் இணைகிறான். தன் வாழ்வில் உறுதுணையாய் நின்ற விமலாவைக் கரம் பற்றுகிறான் குணசேகரன். பிரிந்த குடும்பம் ஒன்று சேர்கிறது. பிச்சைகாரர்களுக்காக ஒரு அநாதை விடுதியும் திறக்கப்படுகிறது.



    கதாநாயகன் குணசேகரனாக நடிகர் திலகம், அண்ணன் சந்திரசேகரனாக எஸ்.வி.சகஸ்ரநாமம், தம்பி ஞானசேகரனாக எஸ்.எஸ்.ராஜேந்திரன், தங்கை கல்யாணியாக ஸ்ரீரஞ்சனி, கதாநாயகி விமலாவாக பண்டரிபாய் திறம்பட நடித்தனர். கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் மிக அற்புதமாக இயக்கம் செய்தனர்.

    நடிகர் திலகத்தின் முதல் படம். நாயகனாக நடிகர் திலகம் ஒப்பந்தம் செய்யப்பட்டு சிலகாட்சிகளும் எடுக்கப்பட்ட பிறகு 'தோற்றப் பொலிவு சரியில்லை... பையன் மீன் மாதிரி வாயைத் திறக்கிறான்' என்று ஏ.வி.எம்.செட்டியார்,மற்றும் சிலர் சிவாஜியை நிராகரித்து அன்றைய பிரபலம் கே.ஆர்.ராமசாமி அவர்களை நாயகனாக மாற்றிப் போடலாம் என்று சொல்ல, படத்தின் தயாரிப்பாளர் பெருமாள் நடிகர் திலகத்தின் நடிப்பின் மேல் இருந்த நம்பிக்கையால் சிவாஜியை மாற்ற இயலாது என்று கண்டிப்பாகக் கூறி விட்டார். சிவாஜி இல்லையென்றால் படத்தின் பங்குதாரர் நிலையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்து விட்டார்.

    சிவாஜியின் அசாத்தியமான திறமையை நாடகங்கள் வாயிலாக அறிந்திருந்த, அப்போதைய அரசியல் பெருந்தலையாய் வளர்ந்து கொண்டிருந்த அறிஞர் அண்ணா சிவாஜியைத்தான் கதாநாயகனாகப் போட வேண்டும் என்று சிபாரிசு செய்ய வேறு வழியில்லாமல் மெய்யப்ப செட்டியார் ஒத்துக் கொண்டார்.

    ஒல்லியான உடல்வாகுடன் வறுமையாகத் தெரிந்த சிவாஜிக்கு இரண்டு மாதங்கள் நல்ல ஆகாரங்கள் வழங்கி அவர் தோற்றப் பொலிவு மெருகூட்டப்பட்டது. மறுபடி ஷூட்டிங் தொடங்கியது. இரவுபகலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு 1952-இல் பராசக்தி தீபாவளிக்கு வெளியிடப்பட்டு மாபெரும் புரட்சி வெற்றி பெற்றது. திராவிட இயக்க கொள்கைகள் பலமாக அடியெடுத்து வைத்து நுழைய பாலமாக அமைந்தது பராசக்தி.

    நடிகர் திலகத்தின் முதல் படத்திலேயே அவருடைய பிரம்மிக்கத்தக்க புதுமையான நடிப்பைக் கண்டு திரையுலகமே வாய் பிளந்தது. புரட்சிக் கருத்துக்கள் கொண்ட கூர்மையான கதைக்கு மிகவும் பொருத்தமான கலைஞரின் வசனங்கள் பட்டி தொட்டியெங்கும் சிவாஜியின் குரலில் சிங்கநாதமாய் ஒலித்தன. பராசக்தியின் வசனங்கள் புதிதாக வரும் நடிகர்களுக்கு பாலபாடமாகியது. அந்த நீதிமன்றக் காட்சி ("நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது") வசனத்தைப் பேசிக்காட்டினால்தான் திரையுலகிலே எவரும் அடியெடுத்து வைக்க முடியும் என்ற நிலை நீண்ட வருடங்கள் தொடர்ந்தது. கமல், சிவக்குமார் போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் அந்த வசனத்தைப் பேசிக்காட்டி விட்டுத்தான் தமிழ் சினிமா உலகில் கால் பதிக்க முடிந்தது.

    அதுவரை படம் நெடுக பாடல்களும், உணர்ச்சியில்லாத வசன உச்சரிப்புகளும், பொறுமையை சோதிக்கும் சவ சவ இழுவைக் காட்சிகளுமாய் இருந்த தமிழ்த்திரையுலகம் பராசக்திக்குப் பின் முற்றிலும் மாறிப் போனது. திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிக்க மிகப் பெரிய தூண்டுகோலாய் அமைந்தது 'பராசக்தி'

    பராசக்திக்கு முன் பராசக்திக்குப் பின் என்று தமிழ்த் திரையுலக வரலாறு மாறியது. சிவாஜிக்கு முன் சிவாஜிக்குப் பின் என்று உலக நடிப்பிலக்கணமே இரண்டாக ஆனது.

    இன்றுவரை அனைவரும் அதிசயப்படுவது இது சிவாஜிக்கு முதல் படமா? என்றுதான். நாடக மேடை அனுபவம் அப்படிக் கை கொடுத்தது இந்தக் கலைஞனுக்கு. 'தென்றலைத் தீண்டியதில்லை நான்' என்னும் வசனம் மட்டுமே திரையரங்குகளில் நம் காதுக்குக் கேட்கும். மற்ற வசனங்கள் ரசிகர்கள் கைத்தட்டல்களில் காதுகளில் விழாது. குரலின் ஏற்ற இறக்கங்கள், மிக மிகத் தெள்ளத் தெளிவான உச்சரிப்பு, நொடிக்கொரு தரம் மாறும் முகபாவம், முதல் படத்திலேயே பணக்கார ரங்கூன்வாசியாக, பணமிழந்து வாடும் ஏழையாக, ராஜாவாக, மந்திரியாக, சேவகனாக தனி நடிப்பு, பைத்தியக்காரனாக பலவித உணர்ச்சிகளில் பாங்கான நடிப்பு, டூயட்டில் ஆண்மை கம்பீரம், வறுமையின் வாட்டத்தை முகத்தில் பிரதிபலிக்கும் திறமை, நீதி மன்றத்தில் சிங்கமென கர்ஜித்து முழங்கும் முழக்கம் என ஒரே படத்திலேயே அத்தனை விஷயங்களையும் வழங்கி இன்று வரை நம் நெஞ்சில் குணசேகரனாக வாழ்கிறார் நடிகர் திலகம்.

    படம் காங்கிரஸ்கார ஆட்சியால் தடை செய்யப்பட்டு மீண்டு வந்து வெள்ளி விழாக் கொண்டாடியது. பல ஊர்களில் நூறு நாட்கள் கண்டது. ஈழத்தில் பிரம்மாண்ட வெற்றியினைப் பெற்றது. மறு வெளியீடுகளிலும் அமர்க்களமாக ஓடியது. அந்த வருடத்தின் மறக்க முடியாத தீபாவளி விருந்தாக அனைவருக்கும் அமைந்தது.

    'புதுப் பெண்ணின் மனதை தொட்டுப் போறவரே'.... 'ஓ ரசிக்கும் சீமானே வா'... 'கா கா கா... நெஞ்சு பொறுக்குதில்லையே'... 'பூமாலை... புழுதி மண் மேலே' என்ற வெகு பிரசித்தி பெற்ற சலிக்காத பாடல்கள்.

    பராசக்தி பாடல்களை இயற்றியோர்: மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி, உடுமலை நாராயண கவி, காமாஷிநாதன்

    மாருதிராவ் அவர்களின் சிறப்பான பளிச்சென்ற ஒளிப்பதிவு

    கிருஷ்ணன் பஞ்சு இரட்டையரின் அற்புதமான புதுமை இயக்கம்

    என்று இந்த பராசக்தி சகலத்திலும் சக்தி பெற்று விளங்கினாள். அது மட்டுமல்ல. தமிழ்த்திரை உலகம் பெருமை கொள்ள அருமையான சிவாஜி கணேசன் என்ற ஒப்பற்ற நடிக மைந்தனை நமக்கு அருளினாள்

    இந்தக் கட்டுரைத் தொடர் முழுதும் என் சொந்தப் படைப்பே.
    Last edited by vasudevan31355; 17th October 2014 at 11:40 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Thanks Russellmai, JamesFague, chinnakkannan thanked for this post
    Likes JamesFague, Gopal.s liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •