Page 372 of 397 FirstFirst ... 272322362370371372373374382 ... LastLast
Results 3,711 to 3,720 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3711
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    மரகதமணி சில நல்ல பாடல்களை கொடுத்துள்ளார். பெரும்பாலும் அர்ஜுன் படங்களுக்கும் இரண்டு பாலச்சந்தரின் படத்திற்கும் அவர் கொடுத்த பாடல்கள் நமக்கு தெரியும்

    கல் நாயக் படம் தமிழில்/தெலுங்கில் ஹீரோ என்று உருவானது. ஏ.ஜெகன்னாதன் இயக்கத்தில்
    சுகன்யா(மாதுரி வேடம்)
    ரகுமான்(ஜாக்கி ஷ்ராப்)
    வினோத்குமார்(சஞ்சய் தத்)
    வேடங்களில் நடித்தனர்.

    அதில் இந்த பாடல் பாலு சித்ரா குரல்களில் மிகவும் அழகான பாடல்


  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #3712
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajraj View Post
    We lack staff notation for Indian music. It will be nice if some music director does it for foreign born children.
    Maybe. Accepted. But I feel our Indian creativity and music sense is proportionately very much higher than other countries. I have come across many people who are capable of playing a note by just hearing one without the necessity for a staff notation.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. Likes chinnakkannan liked this post
  6. #3713
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    இன்னொரு பாடலும் பிரபலமாகாவிட்டாலும் நல்ல பாடல்
    வித்யாசாகரின் இசையில் சித்ரா,சுஜாதா மற்றும் ஜெயசந்திரன் அவர்களின் குரலில்


  7. Likes kalnayak, chinnakkannan liked this post
  8. #3714
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 64

    நன்றி திரு .கோபால் - உங்களுக்கும் , உங்கள் பிள்ளைகளுக்கும் , இந்த திரியில் பதிவிடும் , படிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் , அவர்கள் குடும்பத்தார்களுக்கும் ஒளிமயமான எதிர்காலம் நன்கே அமையட்டும் அந்த ஒளிக்கடவுளின் அருளினால் . என் கண்களில் தெரியும் அந்த ஒளிமயமான எதிர்காலத்தை இந்த பாடல் பிரதிபலிக்கட்டும் .

    ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
    இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது

    (ஒளிமயமான)

    நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
    நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
    நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
    நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
    மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால்
    வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

    (ஒளிமயமான)
    குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
    கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
    குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
    கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
    மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
    வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக
    ---------


  9. Likes Russellmai, kalnayak, chinnakkannan liked this post
  10. #3715
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ரவி.. நீங்க ஒளிக்கடவுளைப்பத்தி எழுதிக்கிட்டே இருங்க..

    நானும் எனக்குத் தெரிஞ்ச ஒரு கடவுளைப் பற்றி எழுதிப் பார்க்கட்டா..

    அது...அடுத்த போஸ்ட்டில்..வெய்ட் அண்ட் ஸீ..( இப்ப எதுக்குடா சஸ்பென்ஸ்..இதுலயே போடலாமில்லை.. ஷ்ஷ் மன்ச்சு..கொஞ்சம் ஒரு இது இருக்கவேண்டாமா. - எது.. சரி சரி நீஎதுவும் கேட்காத மன்ச்சு..இங்கயே போடறேன் )


    *

    ஹாய் குட்மார்னிங்க் ஆல்..


    கண்ணனை நாடி கோபியர் பாடும் பாடல் பல உண்டு..அதுவே முருகனை நாடிப் பாடும் பாட்ல்
    என்று பார்த்தால் குறைவு தான் இல்லியோ..

    *
    திருப்புகழில் அருணகிரி நாதர் என்ன சொல்கிறார்..

    ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே
    ..ஈசருடன் ஞான மொழி பேசுமுக மொன்றே
    கூறுமடியார்கள் வினை தீர்த்த முகமொன்றே
    ..குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகமொன்றே
    மாறுபடி சூரரை வதைத்த முகம் ஒன்றே
    ..வள்ளியை மணம்புரிய வந்தமுகமொன்றே
    ஆறுமுக மான பொருள் நீ அருள வேண்டும்
    ..ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே..

    *

    ஞான் மதுரைக்காரனல்லோ..எனில் திருப்பரங்குன்றம் பலமுறை அங்கு இருந்த காலகட்டத்தில் போயிருக்கிறேன்..

    வெகு சின்ன வயதில் என் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளியிருந்த சோமு என்ற நண்பனுடன் ஒரு தடவை போனது விசேஷம்..

    என்னவாம்..

    அவர்கள் வீட்டில் சோமாவாரம் அன்று அன்னதானம்வ்ழங்குவார்களாம் எங்கே..கோவிலில் திருப்பரங்குன்றத்தில்..

    எனில் நாலைந்து சமையல் காரர்களை ப் போட்டு வீட்டின் கொல்லைப் புறத்தில் (கொஞ்சம் சற்றே பெரிய வெட்டவெளி கொல்லைப் புறம்..பிற்காலத்தில்
    சோமுவின் வீடு கை மாற அங்குவந்தவர் அந்தக் கொல்லைப்புறத்தில் ஷெட் மாதிரி பண்ணி ஒர்க்*ஷாப் ஒன்று வைத்துவிட்டார்
    என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்)

    எதுவுமறியாமல் போனால்..கண்ணா.. சாயந்தரம் நீயும் வா கோவிலுக்கு

    அம்மாகிட்ட கேக்கணும் ( நான் சொல்வது எழுபதுகளின் இறுதி என நினைக்கிறேன்)

    அதெல்லாம் நாங்க ஏற்கெனவே சொல்லிட்டோம்ல - என்றார் செட்டியாரம்மா.. சோமுவின் அன்னை..

    சரி என்று வேடிக்கை பார்த்தால்..


    வீட்டின் கூடத்தில் சடக் சடக்கென நான்கைந்து பெரிய ஓலைப் பாய் விரித்தார்கள்.

    பின் சுடச் சுட வடித்திருந்த சாதத்தை ( அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் விளைந்ததாம்) கொட்டி
    ஆற வைத்து பின் இன்னொரு அண்டாவிலிருந்த புளிக்காய்ச்சலை ப் பிரம்புக் கரண்டியால்
    நாசுக்காய் அள்ளி வைத்து ( வாவ்..அந்தப் புளிக்காய்ச்சலின் மணமிருக்கிறதே..அனுபவித்தால் தான் தெரியும்)
    இன்னொரு மரச் சிப்பலால் கிளறிக் கலந்து மறுபடிஅண்டாக்களில் நிரப்பி
    கிட்டத்தட்ட எட்டு அண்டாக்கள்..வேனில் ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.. நாங்கள்
    அப்படியே பொடி நடை நடந்து டி.வி.எஸ். பஸ்ஸ்டாப்பிலிருந்து பெரியார் பஸ்ஸ்டாண்ட்
    பின் அஞ்சாம் நம்பர் பஸ் சென் ட்ரல திருப்பரங்குன்றம்.. கொய்ங்க் என்று போய்ச் சேர்ந்து
    பின் அர்ச்சனை முடிந்த பின்னர் டிஸ்ட்ட்ரிப்யூஷன்..

    கோயிலின்வாசலிலேயே என நினைக்கிறேன்..பட் நாட் மச் ரஷ்..எல்லாரும் வந்து
    பயபக்தியுடன் தொன்னையில் வாங்கிச் சென்றார்கள்.. நானும் நிரப்பி நிரப்பி வழ்ங்கியதாய் நினைவு..

    உள்ளே முருகனை ச் சேவிக்கச் சென்றால் அவர் சிரித்து ஹாய் கண்ணா என்று கூப்பிட்டது போலப்
    பிரமையாக இருந்தது..

    அப்புறம்..

    கொஞ்சம் இரு மணி நேரம் கழிந்த பின்னர் எனக்கும் சோமு அவன் தம்பி தங்கைகளுக்குத் தர..அந்தப்
    புளியோதரையின் டேஸ்ட்..அடடா அடடா அடடா..எனை ஏதோ செய்தது!

    *

    திருப்பரங்குன்றத்தில் என்ன விசேஷமாம்..

    (வலையில் தேடிக் கிடைத்தவை)

    //திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயில். குகைக்குள் தான் கருவறை என்பதால் சுற்றி வர முடியாது.
    முருகன் திருமணக் கோலத்தில் பீடத்தில் அமர்ந்து இருக்க, கீழே ஒரு புறம் மணப்பெண் தேவயானை அமர்ந்து இருக்கிறாள்.
    மறுபுறம் நாரதர்! (இந்திரன் என்று சொல்வாரும் உண்டு! ஆனால் முனிவர் போல் தாடியும் உண்டு,
    பின்னாள் "ஒட்டு வேலைகளும்" உண்டு)

    மேலே பறப்பது போல் பிரபையில் சூரிய சந்திரர்கள்.
    விளக்கொளியில் இன்னும் நுட்பமாகக் கருவறையை நோக்கினால் விநாயகர், அசுவினி குமாரர்கள், அமரர்கள்
    என்று பலரும் உண்டு! மிக முக்கியமாக துர்க்கை அன்னையும், சிவபிரானும், பெருமாளும் கருவறையில் உள்ளார்கள்.
    இப்படிச் சுற்றம் சூழ திருமணக் கோலமாகக் கருவறை உள்ளது!

    இங்கு முருகனுக்கு அபிஷேகம் (திருமுழுக்கு) கிடையாது! அனைத்து அபிஷேகங்களும் திருக்கை வேலுக்கே!

    கொடிமரத்தின் முன்பு மூன்று வாகனங்களையும் ஒரு சேரக் காணலாம்! எலி, நந்தி, மயில் என்று மூன்றும் முன்னிற்கும்!
    அதைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அனைத்து தெய்வங்களுக்கும் அவரவர் சன்னிதிகளைக் காணலாம்!
    எல்லாமே குட்டிக் குட்டிக் குறுகலான குடைவரைகள் தான்!

    சிவபெருமான் பரங்கிரி நாதராய் எழுந்தருளியுள்ளார். அம்மை ஆவுடை நாயகி.
    திருப்பரங்குன்றத்து ஈசனைச் சம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தேவாரத்தில் பாடியுள்ளனர்!//


    இதைப் இன்று படிக்கும் வரை எனக்கு திருப்பரங்குன்றம் குடைவரைக் கோவில் எனத் தெரியாது..இப்பொழுது தான்
    புரிகிறது ஏன் அப்படி வித்தியாசமாக சன்னிதிகள் இருந்தன என்று..


    முருகனைப் பற்றி ஒரு அழகிய பாடலில் ஒரு பெண் பாடுவாள்

    உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
    உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!


    சரியானது தான்..



    அப்படியே இந்த இளம் குமரி என்னவாக்கும் சொல்கிறாள் என்று பார்க்கலாமா..

    அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்
    அடுத்த நாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்
    இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன்
    என்னைத் தேடிவரும்வரைக்கும் விடவும் மாட்டேன்


    ஆண்டி போல வேஷமிட்டு அவனீருப்பானாம்
    அவனை அரசன் போல சிங்காரித்துதேரிழுப்பாராம்
    வேண்டியவர் வேண்டாதவர் அவனுக்கில்லை -மன
    வீட்டுக்குள்ளே அவனிருந்தும் காண்பவரில்லை


    அந்தி சந்தி அர்த்த ஜாமம் எத்தனை பூஜை-
    அவன் ஆலயதது மணியில்தான் எத்தனை ஓசை
    அந்தப்பூ முகத்தை காண எத்தனை கூட்டம்
    தொடர்ந்து நானும் பார்த்து வந்தால் தீர்ந்திடும் வாட்டம்





    குடும்பத் தலைவன் நிஜமாகப் பாடுவதுபோல் இருக்கும் சர்ரூ.. நிழலாய் வெகு அழகான்
    சுசீலாம்மாவின் குரல்..

    **

  11. Likes Russellmai, uvausan, kalnayak liked this post
  12. #3716
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 65

    காலை இளம் கதிரில் இரு காதலர்களின் காதல் ஓட்டம் - உடம்பிற்கும் , மனதிற்கும் தேவையான energy யை இந்த பாடல் மட்டும் அல்ல - கரங்கள் நீட்டும் அந்த கதிர்களும் அளவிற்கு அதிகமாகவே தருகின்றது .



    மிகவும் அழகாக படமாக்கப்பட்ட அருமையான பாடல். இந்த ஒளிப்பதிவிற்கு தேசிய விருது கிடைத்தது. ஒளிப்பதிவாளர் அசோக்குமார் .

  13. Likes kalnayak liked this post
  14. #3717
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 66


    ஜானகியின் குரலில் மனதை கவரும் பாடல்

    காலை பொழுது விடிந்தது என் நெஞ்சத்தைப்போல - படம் ராஜராஜேஸ்வரி -1979


  15. Likes kalnayak liked this post
  16. #3718
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 67

    Sakthi Leelai is a tamil devotional movie released in the year 1972 starring Gemini Ganesan, B.Saroja Devi,Jayalalithaa and Chittor V. Nagaiah in lead roles.The movie is directed by T. R. Ramanna. The music of the film is composed by M.S Viswanathan.

    காலை பொழுதே வருக வருக
    கண்ணிக்கதிரே வருக வருக --------------


  17. Likes kalnayak liked this post
  18. #3719
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 68


    ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் - நான் அவள் பூ உடலில் ஒரு அழகினை படைக்க வந்தேன்

    படம் : அந்தரங்கம்

    அருமையான பாடல் - திரு கமலஹாசன் அவர்களின் கவர்ச்சியான குரலில்


  19. Likes kalnayak liked this post
  20. #3720
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 69

    படம் : இரவும் பகலும்

    இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான் !
    உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான்

    கண்ணதாசனின் வரிகள் - வாழ்க்கையின் அர்த்தத்தை அழகாக படம் பிடித்து கொடுக்கும் பாடல் - மக்கள் கலைஞ்சரின் நடிப்பில் இன்னும் மெருகு ஏறும் பாடல்


  21. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •