Page 370 of 397 FirstFirst ... 270320360368369370371372380 ... LastLast
Results 3,691 to 3,700 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3691
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
    பூணும் வடம் நீ யெனக்கு,புது வயிரம் நானுனக்கு;// வெகு அழகான பாடல்.. போய் கேக்கணும் ..அதுசரி திரைப் பாட் போடலாமா..


  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3692
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 53

    SP Balasubramaniam & Asha Bhosle -Athikalai Neram Kanavil Unnai Tamil duet

    படம் : "நான் சொன்னதே சட்டம் ".


    ஆண் .. அதி காலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன்
    அது கலைந்திடாமல்கையில் என்னை சேர்த்தேன்
    விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய்
    உன்னை சேர்ந்திடமால் வாடும் இந்த அன்றிலே .ஹோய்

    பெண் - ல லா ல ...

    ஆண் .-முல்லை பூவை மூடும்
    வெண்சங்கு போல ஊதும்

    பெண்
    காதல் வண்டின் பாட்டு
    காலம் தோறும் கேட்டு

    ஆண்
    வீணை போல உன்னை
    கை மீட்டும் இந்த வேளை

    பெண்
    நூறு ராகம் கேட்கும் நோயை கூட தீர்க்கும்

    ஆண்
    பாதி பாதியாக சுகம் பாக்கி இங்கு ஏது
    மீதம் இன்றி தந்தாள் எனை ஏற்று கொண்ட மாது

    பெண்
    தேவியை மேவிய ஜீவனே நீதான்
    நீ தரும் காதலில் வாழ்பவள் நான் தான்

    ஆண்
    நீ இல்லாமல் நானும் இல்லையே ..

    பெண்
    அதிகாலை..


    பெண்
    மாலை ஒன்று சூடு
    பொன் மேனி ஆறும் சூடு

    ஆண்
    மாதம் தேதி பார்த்து மனது சொல்லி கேட்டு

    பெண்
    வேளை வந்து சேரும் நம் விரகம் அன்று தீரும்

    ஆண்
    நீண்ட கால தாகம் நெருங்கும் போது போகும்

    பெண்
    காடு மேடு ஓடி நதி கடலில் வந்து கூடும்
    ஆசை நெஞ்சம் இங்கே தினம் அனலில் வெந்து வாடும்

    ஆண்
    வாடலும் கூடலும் மன்மதன் வேலை
    வாழ்வது காதல் தான் பார்க்கலாம் நாளை

    பெண்
    பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ

    ஆண்
    அதி காலை ------


  5. #3693
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 54
    சுடும் நிலவு , சுடாத சூரியன் - படம் "தம்பி "

    CK - காதில் விழுகின்றதா ? நிலவு தான் சுடுமாம் - சூரியன் அல்ல ... ( வேர்க்க விருவறுக்க , இந்த பாடலை தேடி உங்களுக்காக கண்டு பிடித்தேன் )

    Amazing lyrics Vairamutu ; A gem from Vidyasagar.. Amazing lyrics.. and

    Unni and Harini to top it all! what a song!


  6. Thanks chinnakkannan thanked for this post
  7. #3694
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ‘கலை’யில் வளரும் தமிழ்ச் சொத்து


    வாசு சார் , ரவி சார், கோபால், சின்னக்கண்ணன், கல்நாயக், ராகவேந்திரா சார் எல்லாரின் பதிவுகளும் அருமை.

    வாசு சார், ‘சாந்துப் பொட்டு தளதளங்க’ பாடலைப் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்தேன். பாட்டையே போட்டு விட்டீர்கள்.

    சின்னக்கண்ணன், வெயிலுக்கு இதமாய் சந்தனத்தை பூசுகிறீர்கள்.

    ரவி சார், சூரிய மண்டலத்துக்கே போய் அலசுகிறீர்கள். பாராட்டுக்கள். நன்றிகள்.

    கல்நாயக், வீரத்திருமகன் பாடலைப் பற்றி குறிப்பிட்டபோது அன்றே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். மறந்து விட்டேன். இசையரசியின் குரலில் ‘அழகுக்கு அழகு நிலவுக்கு நிலவு அசைந்திடும் பூச்செண்டு....’ பாடலை நிலாப் பாடல் லிஸ்டில் சேர்க்கலாமே. அடுத்த வரிகளில் வருவதைப் போல பாடலும் கற்கண்டு. ஆமா..... என்ன சிக்நேச்சர் இது ? புரியவில்லையே.

    கோபால், நன்றி.

    ராகவேந்திரா சார் எழுதியிருக்கும் அழகு சிரிக்கின்றது பாடலுக்கான விளக்கம் அருமை. அதில் வரும் வரிகளும் ராகவேந்திரா சார் கொடுத்துள்ள விளக்கங்களும் (வண்டு, மலர், மஞ்சம் மற்றும் சென்சார்)தான் என்னை இந்தப் பதிவு போடத்தூண்டியது. நன்றி சார்.

    -----------

    பிள்ளையோ பிள்ளை படத்தில் இடம் பெற்ற ‘வெள்ளை மலரில் ஒரு வண்டு...’ மிக இனிமையான பாடல். இங்கே நமது திரியில் இடம் பெற்றுள்ளதா தெரியவில்லை. விட்டு வைத்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். கவியரசரின் வரிகளில் மெல்லிசை மன்னரின் மயக்கும் இசையில் நம்மை புது உலகிற்கு அழைத்துச் செல்லும் பாடல்.

    பாடல் படமாக்கப்பட்ட விதமும் கண்ணுக்கு குளிர்ச்சி. கதாநாயகியின் (லட்சுமி) வீட்டில் பணிப்பெண்ணாக விஜயகுமாரி. இவர்தான் கதாநாயகன் முத்துவின் தாய்..... படத்தில். நாயகனை நினைத்து நாயகி பாடுவதாக பாடல். விஜயகுமாரி அருகே நிற்க, லட்சுமி பாடிக் கொண்டிருக்கும்போதே முத்துவுடன் பாடுவதாக அவருக்கு கற்பனை. விஜயகுமாரியை கழற்றி விட்டு முத்துவுடன் அவர் ஆடுவதை காட்டுவார்கள். (கிருஷ்ணன் பஞ்சுவா கொக்கா?) அற்புதமான பாடல்.

    வெள்ளை மலரில் ஒரு வண்டு
    அள்ளித் தருமே தேன் இன்று
    கொள்ளை இன்பம் இனி உண்டு
    கூடல் ஊடல் பல கொண்டு

    இணக்கமாக இருப்பது இன்பம் என்றாலும் கூடலும் ஊடலும் மாறி மாறி வந்து ஏற்படும் இணக்கம் இன்னும் நெருக்கத்தை அதிகரிக்குமல்லவா? அப்படி ஏற்படும் இன்பம் சாதாரண இன்பமல்ல, கொள்ளை இன்பமாம்.

    -----

    கத்தும் கடலில் மணி முத்து
    கலையில் வளரும் தமிழ்ச் சொத்து
    பருவம் இதுதான் இரு பத்து
    படிப்பேன் இளமை மனம் தொட்டு

    பிள்ளையோ பிள்ளை படம் வரும்போது ‘இல்லையொரு பிள்ளையென்று ஏங்கி வந்த திரையுலகில் பிள்ளையோ பிள்ளை என்று வருகிறார்’ என்று முத்துவை வாழ்த்தி தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதற்கேற்ற வகையில் கவிஞர் திரையுலகை கடலாகவும் மு.க.முத்துவை மணி முத்தாகவும் வர்ணித்து ‘கத்தும் கடலில் மணி முத்து’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    கலையில் வளரும் தமிழ்ச் சொத்து.... கலைஞர் கருணாநிதி அவர்களின் தந்தை பெயர் முத்துவேல். அவரது நினைவாகத்தான் தனது மகனுக்கு முத்து என்று பெயர் வைத்தார். இதை மனதில் கொண்டு கவிஞர் எழுதியிருக்கிறார். தாத்தாவான முத்து மறைந்து போனாலும் கலை(ஞர்) மூலம் முத்து பிறந்து வளர்கிறது. கூடவே அவரது சொத்தான தமிழும். இந்த இடத்தில் கவிஞர் ‘கலை’ என்று கூறியிருப்பதை என்னோடு பொருத்திப் பார்த்து மகிழ்வேன். (ஹி... ஹி...இருக்கட்டுமேங்க)

    -----

    கண்கள் அவனைப் பிரியாது
    கைகள் என்றும் விலகாது
    நெஞ்சம் அவனை மறவாது
    மஞ்சம் என்றும் உறங்காது

    கண்கள் அவனை பிரியாமல் பார்த்துக் கொண்டே இருக்கும். அணைத்தபடி இருக்கும் கைகள் என்றும் விலகப் போவதில்லை.

    நெஞ்சம் அவனை மறவாது..... இப்படிப்பட்ட சூழலில் எப்படி மறக்கும்?

    மஞ்சம் என்றும் உறங்காது..... உறங்குவதற்குத்தான் மஞ்சம். அந்த மஞ்சத்துக்கே உறக்கமில்லை, அதாவது ஓய்வு இல்லை என்றால்.............. கவியரசர் ‘ஃபுல்’லாக இருந்திருக்கிறார். mood-ஐச் சொல்றேன். அழகு சிரிக்கின்றது போன்ற பாடல்கள் மூலம் கிடைத்த அனுபவமோ என்னமோ? சென்சாரில் சிக்காமல் நாசூக்காக அதே நேரம் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டார்.

    ----

    எதிரில் தெரியும் வருங்காலம்
    இனிமை தவழும் மணக்கோலம்
    அன்பால் வளரும் புது உலகம்
    அகமும் புறமும் இனி மலரும்

    ஆஹா... எவ்வளவு அனுபவத்தோடு கூடிய தத்துவத்தை விளக்கியிருக்கிறார். திருமணக் கோலம் என்றாலே மகிழ்ச்சிதானே. அந்த மகிழ்ச்சியோடு கூடிய வருங்காலம் எதிரில் தெரிகிறது. அன்பால் புது உலகம் வளர்கிறது. அப்படி வளர்ந்தால் அகமும் புறமும் மலரும்.

    பொதுவாகவே, எல்லாரிடமும் நாம் மனம் மலர்கிறதோ இல்லையோ? புறம் மலரத்தான் இருப்போம், சூழ்நிலையையும் நாகரிகமும் கருதி. ஆனால், உண்மையான அன்பு வளர்ந்து விட்டால் அகமும் மலர்வது நிச்சயம்.

    இப்படியும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது, அப்படி அன்பு வளர்ந்தால் உலகிற்கே நாகரிகத்தை கற்றுக் கொடுத்து, நிலத்தை ஐவகையாகப் பிரித்து காதல், மானம், வீரத்தோடு வாழ்ந்த அந்த சங்ககாலத் தமிழனின் வரலாற்றை விளக்கும் சமூகமாக அகமும் (அகநானூறு) புறமும் (புறநானூறு) இனி மலரும் என்றும் கொள்ளலாம். (ரொம்ப தத்துவம் வந்து விட்டதோ? இன்று தத்துவ ஆசிரியர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பிறந்தநாள் என்பதால் இருக்கலாம்)

    எந்த வகையில் பார்த்தாலும் கவிஞர் கூறிய அந்த புது உலகம் வளர, அன்பை வளர்ப்போம்.

    ராகவேந்திரா சார், சென்சாரைப் பற்றி கூறியதும் நினைவுக்கு வருகிறது. 1996ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோது தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சராக முனைவர் தமிழ்க்குடிமகன் இருந்தார். 89-ம் ஆண்டு திமுக ஆட்சியமைத்தபோது சபாநாயகராக இருந்தவர். (சின்னக்கண்ணன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் உங்கள் ஊரில் யாதவா கல்லூரியில் முதல்வராக பணியாற்றியது உங்களுக்கு தெரிந்திருக்கும்)

    1996-ம் ஆண்டு தமிழ் செல்வன் என்று ஒரு படம். திரு.விஜயகாந்த் அவர்கள் நடித்து வெளியானது. நடிகர் திரு.சத்யராஜ் அவர்களின் மேனேஜராக இருந்த திரு.ராமநாதன் என்பவர் தயாரித்தது. படம் வெளியான சமயத்தில் திரு.கருணாநிதி அவர்களை சந்திக்க திரு.விஜயகாந்த் சென்றிருக்கிறார். அங்கு அமைச்சர் தமிழ்க்குடிமகனும் இருந்திருக்கிறார். அப்போது, திரு. விஜயகாந்த்தைப் பார்த்து திரு.தமிழ்க்குடிமகன் , ‘‘உங்கள் படத்தின் தலைப்பு ‘தமிழ்ச் செல்வன்’ என்று இருக்க வேண்டும். ஆனால், போஸ்டரைப் பார்த்தால் ‘தமிழ் செல்வன்’ என்று இருக்கிறது. ‘ச் ’ இல்லாதது பிழை’’ என்று கூறியிருக்கிறார்.

    குறுக்கிட்ட திரு.கருணாநிதி அவர்கள் கூறியது இது..

    ‘ச் ’ இருந்தா சென்சார்ல கட் பண்ணிடுவாங்கய்யா....


    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  8. Likes uvausan, chinnakkannan liked this post
  9. #3695
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ///பொதுவாகவே, எல்லாரிடமும் நாம் மனம் மலர்கிறதோ இல்லையோ? புறம் மலரத்தான் இருப்போம், சூழ்நிலையையும் நாகரிகமும் கருதி. ஆனால், உண்மையான அன்பு வளர்ந்து விட்டால் அகமும் மலர்வது நிச்சயம். /// ஹை ஐ ஐ...கலை உங்களது இடுகையில் என் அகம் மலர்ந்துவிட்டது.. நன்றிங்க்ணா..

    ‘ச் ’ இருந்தா சென்சார்ல கட் பண்ணிடுவாங்கய்யா....// ஆனா அது அந்தக்காலம் இந்தக்காலத்துல ச் லாம் கட்பண்ண மாட்டாங்க.. அப்புறம் ச் சுக்குப்புதிய பெயர் உண்டு.. லிப் லாக் காம்..!

    இந்தப் பாட் இதுவரை நான் கேட்டதில்லை..இங்கும் வந்ததில்லை.. நன்றிங்க்கோவ்.



    இன்னும் இன்னும் எழுதுங்கள்..

  10. #3696
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சாலையைக் கடக்க நின்றாள்
    அவளைக் கடந்தன
    பல கண்கள்
    *
    கண்களும் கீழே விழுந்தன
    அவள் தவற விட்ட
    புத்தகத்துடன்

    *
    புத்தகத்துள்
    உயிரிழந்த இரு பூச்சிகள்
    நிறையப் படித்திருக்குமோ
    *

    படித்தது எல்லாம் மறக்க
    நீல மசியில்
    தெரிகிறது வெறுமை

    *
    வெறுமையாகிவிட்டது
    அவள் சென்ற
    வீதியும் மனசும்..

    *
    மனசில் மயிலிறகு
    பல நாளின் பின் கேட்ட
    அவள் குரல்

    *
    குரல் கேட்கக்கேட்க
    உருவம் வளர்ந்தது
    நெஞ்சில்

    *
    நெஞ்சில் வலி வந்தாலும்
    முகத்தில் கட்டாயச் சிரிப்பு
    இருக்குமிடம் அ;லுவலகம்

    *
    அலுவலக நேரம் முடிந்தும்
    படபடப்பு
    அவளிடம் பேசவேண்டும்..
    *
    வேண்டும் எனச் சொல்லிவிட்டாள்
    தொலைபேசியில்
    பூத்தூவித் தெரிகிறது சாலை..

    *

    ஒரு ஹைக்கூ (?!) விற்கும் அடுத்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..ச்சும்மா அந்தாதி ட்ரை பண்ணினேன்..

    பொருத்தமாய் பாட்டா.. பொருத்தமில்லை ஆனா பாட் நன்னா இருக்கே

    ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை.. (இனிய உறவு பூத்தது படமாம் சுரேஷ் நதியா (படம் எப்படி இருக்கும்) பாட் இப்பத் தான் கேக்கிறேன் பார்க்கிறேன்..எனக்குப் பிடிச்சிருக்கே…(கொஞ்சம் ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை மெட்டின் சாயல் என நினைக்கிறேன்)


  11. Likes uvausan liked this post
  12. #3697
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 55

    கதிரவன் உதயம் கண்டேன் - கமலங்கள் முகம் மலரும் - படம் ஹரிதாஸ் 1944

    அருமையான பாடல் - " ச் " இல்லாத நடிப்பும் , வரிகளும் - நம்மை எங்கோ கொண்டு செல்லும் பாடல் இது - உங்களுக்காக


  13. #3698
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 56

    கண்ணொளி வழங்கும் கதிரவன் வாழ்க
    காலங்களாலே புதியவன் வாழ்க
    பொன்னொளி தந்தாய் பூமியில் எங்கும்
    போற்றுகின்றேன் நான் வணங்குகின்றேனே !!

    படம் : கங்கா கௌரி

  14. #3699
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    சி.க, ரவி, நாயக்

    உங்கள் அனைவரது பதிவுகளையும் படித்து முடித்து விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக திரிக்கு அழகு சேர்க்கின்றன. ரவி சூரிய கதிர்களால் கலக்குகிறார் என்றால் உடனே சி.க சந்தனம் தடவுகிறார். (சி.க பலே ஆள் அய்யா நீங்கள்!) கல்நாயக் அமாவாசை முடிந்து விட்டதா? மீண்டும் குளிர்ச்சி எப்போது?

    ராஜ் ராஜ் சார்!

    எக்ஸலண்ட். ஜுகல் பந்தியில் மிக அபூர்வமான 'mera naam chin chin chu ...... போட்டு கலக்கி விட்டீர்கள். எதிர்பார்க்கவே இல்லை. என் உள்ளம் கொள்ளை கொண்ட அருமையான பாடல். ஒரு காலத்தில் இப்பாடலை கேட்காத நாளே கிடையாது. நீண்ட நாள் சென்று பார்க்கும் போது பரவசம் அடைந்தேன். ஜுகல் பந்தியில் இது டாப். 'மேலே பறக்கும் ராக்கெட்டு' போல.

    ராஜேஷ்ஜி!

    என்ன சுசீலாவுடயது ஒன்றையும் காணோம்?

    ஆதிராம் சார்,

    நீங்கள் 'செந்தமிழ் பாடும் சந்தனக் காற்றை' ஞாபகப்படுத்தியவுடன் நம் நடிகர் திலகம் திரியில் குதூகலமாக 'வைர நெஞ்சம்' கொண்டாடியது நினைவுக்கு வந்து விட்டது. என்ன இனிமையான நாட்கள்!

    இன்னும் அதிகமான பங்களிப்பைத் தந்து ஜமாயுங்கள். நன்றி!
    sandhanamittu sadhiradum irukke .. neer parkalayo

  15. #3700
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    வாசு ஜி
    இதோ மண்ணுக்கு மரம் பாரமாவின் கன்னட வடிவம்
    இசையரசியின் குரலில்


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •