Page 358 of 397 FirstFirst ... 258308348356357358359360368 ... LastLast
Results 3,571 to 3,580 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #3571
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    திரையில்மலர்ந்த நாவல்கள் - 6 தொடர்ச்சி..

    ஜானகி
    ********

    என்னபேச்சு பேசிகிறது இந்த வைதேகி..இன்னொரு தங்கை இருக்கிறாளாம்..அடியேய்..

    ம் நான் தான் தப்பா..அம்மன் கோவிலில் முறையிட்டு ரயிலில் ஏறியாயிற்று.. உடன் கம்பார்ட்மெண்டில் யாரும் இல்லை..இல்லை இல்லை ஒரு வயதான மாது.அவரது மூக்கில் என்ன..ப்ப்பளீரென சிகப்பு மின்னலைப் போல செந்நிற ஒளியை வீசும் மூக்குத்தி..

    என் பரிதாபமான தோற்றத்தைப் பார்த்தும் அவர் ஏதும் பேசவில்லை...

    “கவலைப் படாதே” இது மட்டும் தான் அவர் பேசியது.. எனக்கோ என்ன பேசத் தெரியவில்லை.. “இந்தா இதை வைத்துக்கொள்” அனிச்சையாய்க் கை நீட்டினால் நீட்டிய கையில் சிவப்புக் கல் மூக்குத்தி.. நாளை க்காலை இதை அணிந்துகொள்.. எல்லாம் நல்லதே நடக்கும்.. இப்போ தூங்கு..

    தூங்கி எழுந்தால் ரயில் நின்றிருந்தது..என் ஊர்..ஆனால் எதிரில் அந்த அம்மா இல்லை.. ஹேண்ட்பேகில் திறந்தால் சிவப்புக் கல் மூக்குத்தி.. இதை அணிந்து கொள்ளவேண்டுமாம்.. இதை அணிந்தால் என்னாகும்..எனக்குக் குழந்தை பிறக்குமா..சிரிப்பு தான் வந்தது எனக்கு..

    ராகவன்:
    ******
    ஆச்சர்யம் தான்..ஆனால் உண்மை..சிவப்புக்கல் மூக்குத்தியில் பளீரென ஜானகியின் முகம் இருந்ததா… அதில் நான் மதி மயங்கினேனா.. பத்து மாதத்தில் பெண்குழந்தை பிறந்ததா..அதற்கும் இப்பொழுது மூன்று வயது ஆகிறதா..அடடா.. நம்ப முடியாமல் தான் இருக்கிறது..

    இருப்பினும் ஒரே ஒரு கவலை..வைதேகி..பித்துப் பிடித்தவள் போல இருக்கிறாள் .. நெருங்க விடுவதில்லை..ஜானகியையும் கூட..

    வைதேகி..
    **********
    எனக்கு என்னவோ ஆகிவிட்டதாம்.. நினைக்கிறார்கள் சொல்கிறார்கள்..ம்ஹூ ஹீம்.. நான் யார் ஒரு அதிர்ஷ்டமும் இல்லாமல் பாரமாய் இருப்பவள்..இறப்பதே வழி என நினைத்தாலும் அதை நிறைவேற்றும் தைரியமில்லை..

    ஜானகியின் பெண் நிம்மி எவ்ளோ சுட்டி..மூணுவயதுக்கு எவ்ளோ பேசுகிறது..இதுவே என் பெண்ணாக இருந்திருக்கக் கூடாதா..ஏன் இருக்கக் கூடாது..ஜானகியிடமே கேட்டுவிடட்டுமா..

    கேட்டேன்.. ஜானகி எதுவும் பேசவில்லை..எங்கு கொடுப்பாள்.. நான் பைத்தியம் என்று தானே நினைக்கிறாள்..சமர்த்தாய் இருப்பேனே நிம்மி என்கூட இருந்தால்..

    மறு நாள் காலை பார்த்தால் நிம்மி என் அருகில் தூங்கிக் கொண்டிருக்கிறது.. ஜானகியைக் காணோம் இவரும் தேடி த் தேடிப் பார்த்தார்.. நிம்மிக்குப் பக்கத்தில் ஜானகியின் சிவப்புக் கல் மூக்குத்தி.. இதை வைத்துக் கொண்டு நன்றாக இரு.. நான் குறுக்கிட மாட்டேன்..அக்க்கா..இப்படியா செய்வது..

    உன்னைப் போகவா சொன்னேன்…

    கதறினேன்.. அவரிடமும் சொன்னேன். பல மாதங்கள் தேடினோம்..எனக்கு முழுக்கவும் குணமாகிவிட நிம்மியும் என்னிடம் ஒட்டிக் கொண்டு விட்டது..ஆனால் மறுபடியும் எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.. நிம்மியும் ஒரு காய்ச்சலில் கண்மூடி விட்டாள்..

    காலங்கள் எல்லா துக்கத்தையும் மாற்றத்தான் செய்கின்றன என்பார்கள்..உண்மை தான் இரண்டு வருடங்கள் கழிந்து ஒரு நாள் அதைப் பார்த்தேன்.. டிரஸ்ஸிங் டேபிளில் இடுக்கில் இருந்தது அந்த சிவப்புக்கல் மூக்குத்தி.. அணிந்தால் என்ன..

    அணிந்தேன்..அணிந்ததால் என் உடலுக்கும் அணிகலன் வந்தது சில மாதங்களில் .. ஆம் நான் சூல் கொண்டேன்..
    அக்கா கடைசியாய்ப் பார்த்த கோவில் செல்ல வேண்டும் என ராகவ்விடம் கேட்டேன்.. எட்டரை மாதம்..இப்போதா வைதூ என்றார்.. இல்லை வாருங்கள் போகலாம் எனச் சொல்லி க் காரில் கிளம்ப இரவேறிய நேரத்தில் ஒரு கிராமத்தைத் தாண்டும் போது எனக்கு வலியெடுக்க அவர் செய்வதறியாது வண்டிக்குள் என்னை விட்டு விட்டு கிராமத்துக்குள் சென்று நர்ஸைக் கூட்டி வந்தார்..

    பிரசவமும் ஆனது..பெண் குழந்தை.. என்று சொன்ன குரல்.. ஜானகி.. அக்க்கா என நான்கத்தியது அவருக்கும் கேட்க அவரும் என்ன என்று கேட்க காரினுள் இருந்தே தொலைவில் சொல்லும் உருவத்தைச் சுட்டினேன்..அக்கா..

    ராகவ்…
    *******

    என்னது நர்ஸாக ஜானகியா.. துரத்தினேன்..அந்த உருவமும் சளைக்காமல் சென்று ஒரு குடிசையில் புகுந்து கொண்டது..

    கதவைத் தட்டினேன்.. திறக்கவில்லை..மோதித் திறக்கலாம் என்று பார்த்தால் ஒரு வயதான அம்மா வந்தார்.. ஜானகி முன்பு சொன்ன வர்ணனை..

    ஜானகி..

    இனி வரமாட்டாள்.. உன் ஜானகி வைதேகியுடன் இருக்கிறாள்.. போ.. குடிசைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டார்..

    நான் மெல்ல காரை நோக்கி நடந்தேன்..

    ****
    இது கவியரசர் கண்ணதாசன் எழுதிய “சிவப்புக் கல் மூக்குத்தி” நாவலின் சுருக்கம்.. கவியரசர் வெகு பிரமாதமாக எழுதியிருப்பதை நான் என் பாணியில் கொஞ்சம் சற்றே மாற்றி எழுதியிருப்பதால் கொஞ்சம் சுவாரஸ்யக் குறைவாக இருக்கலாம்…அது என் பிழையே..

    பின்னர் படமாகவும் வந்தது..மதுரை கல்பனா தியேட்டரில் ரிலீஸ் என நினைவு..ஆனால் பார்க்கவில்லை..

    யூட்யூபில் படம் கிடைக்கவில்லை பாடல்கள் மட்டும் கிடைத்தன..ஒன்று விஜயகுமார் ஸ்ரீதேவி..ஆத்தங்கரை அரசமரம்.. அப்புறம் கமல் பாடும் இரண்டு பாடல்கள்.. ஒரு பாடல் ஸ்ரீதேவியை அம்மனாக – காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி எனக் காண்பிக்க இன்னொரு பாடலும் அம்மன் பாடல் தான்..

    படம் அப்படியே எடுத்திருக்க மாட்டார்கள் என்பது மட்டும் தெரிகிறது.. படம் பார்த்தவர்கள் சொல்லவும்..
    கமல் பாடும் பாடல்




    அப்புறமா வாரேன்..

  2. Thanks vasudevan31355 thanked for this post
    Likes uvausan, vasudevan31355 liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3572
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்,

    அருமை. 'sri suryanarayana meluko' பாடலை மிகவும் என்ஜாய் செய்தேன்.

    தங்களது 'ஆயிரம் கரங்கள் நீட்டி' தொடரை தொடர்ந்து ரசித்து படித்து வருகிறேன். அதில் நீங்கள் பதிந்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' பாடல் என் வாய் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாகும். அருமையான பாடல்களை தேடித் பிடித்து தொடரை சிறப்பாக கொண்டு செல்கிறீர்கள். மிக்க நன்றி.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #3573
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கல்நாயக்,

    தங்கள் பாராட்டிற்கு மிக நன்றி! தங்களின் நிலாப் பாடல்களின் தொடரை மீண்டும் ஒரு நோட்டம் விட ஆரம்பித்து இருக்கிறேன். அப்பா! எவ்வளவு உழைப்பு! ஒவ்வொன்றும் அருமை. பாராட்டும் போது கூட நிலவுடனேயே குளிர்ச்சியாக வந்து பாராட்டும் அளவிற்கு நிலாவுடன் நிரந்தரமாக ஒன்றிப் போய் விட்டீர்கள். ரவி சாரும் கதிரவன் போல சூடாக பதிவுகள் இடுகிறார்.

    கடலூர் கிருஷ்ணாலயாவில் பூக்கள் விடும் தூது வெளியானதை மிகச் சரியாக ஞாபகம் வைத்து இருக்கிறீர்களே! சூப்பர்ப். நானும் பட வெளியீட்டு தினத்தன்றே காலைக் காட்சி பார்த்து விட்டேன். பாடல்கள் மட்டுமே பிடித்தது.

    அதே போல உங்கள் 'கூகுளினேன்' விழுந்து விழுந்து சிரித்து ரசித்தேன். எப்படி அய்யா இப்படியெல்லாம்?

    உங்களுக்கும், கலைக்கும் நடுவில் நடக்கும் வயது செல்லச் சண்டையை 'குழந்தையாய்' தவழ்ந்து கவனிக்கிறேன். ஒன்றுமே புரியவில்லை. 'குழந்தைப் பருவ'மல்லவா? பெரியவர்கள் என்ன பேசிக் கொ(ல்)ள்கிறீகள் என்று பாலகனுக்கு விளங்கவில்லை. இன்னும் பத்து வயது போனால்தான் விளங்கும் போல.

    ம்...இதற்கு என்னென்னன விளைவுகளை சந்திக்கப் போகிறேனோ? தயாரா இருடா வாசு செல்லம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. Thanks kalnayak thanked for this post
    Likes kalnayak liked this post
  7. #3574
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க,

    //வாசுண்ணாவைப் பாருங்க.. ஒரே பந்துல ஒன்பது ரன்லாம் அடிக்கறார்..ரசனைக்காரர்//.

    ஒரு பந்தில் ஒரு ரன் தான் சி,க.

    //கலைவேந்தன் அய்யா அவர்களும் வாசுதேவன் அவர்களும் தனி லெவல் உங்களைப் போல. நீங்களெல்லாம் ஒரே பந்தில் ஒன்பது என்ன அதற்கு மேலேயும் அடிப்பீர்கள்//

    இதற்கு என் சார்பாக கலை உங்களுக்கு தலைவலி கொடுப்பார். கலை! ப்ளீஸ்.

    திலக சங்கமம் என்று ராகவேந்தர் சார் போட்டால் நீர் நடிகர் திலகமும் நடிகையர் திலகமும் என்று திலக சங்கமம் போடுகிறீரே! உம்ம குறும்புக்கு லிமிட்டே இல்லையா?
    Last edited by vasudevan31355; 8th May 2015 at 08:26 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes kalnayak, chinnakkannan liked this post
  9. #3575
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க,

    கவியரசர் எழுதிய “சிவப்புக் கல் மூக்குத்தி” நாவலின் சுருக்கம் நன்றாக இருந்தது. சி.க, எப்படித்தான் டைப் பண்றீங்களோ! கை வலிக்கல?
    'சிவப்புக் கல் மூக்குத்தி செம போர்'. அதுவும் கமல் பூசாரி. போதும்டா சாமி.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Likes chinnakkannan liked this post
  11. #3576
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்!

    திலக சங்கமம் திகட்டாத ஒன்று. நடிகர் திலகத்தின் பிறந்தநாள் அன்று தமிழகம் முழுதும் இப்பாடல் இப்போதும் ஒலிக்குமே!

    'செந்தமிழ்நாட்டுக் கலையுலகின் திலகமே' அருமையான வரிகள் என்றாலும், 'உலகத் திரையுலகின் திலகமே' என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

    'வடிவுக்கு வளைகாப்பு' பாடல்கள் விவரத்திற்கு நன்றி சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes kalnayak liked this post
  13. #3577
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க,

    'மானா மதுரையிலே... குட்டி மரிக்கொழுந்து வித்தவளே' டியூன்தான் 'சாலையிலே ரெண்டு மரம் ஜமீன்தாரு வச்ச மரத்'தின் டியூன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes chinnakkannan liked this post
  15. #3578
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க,

    எம்.என்.ராஜத்தைத் தவிர மற்ற இரு பெண்கள் யார் தெரியுமா?

    ஒன்று கிரிஜா. 'மனோகரா' படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடி.

    இன்னொன்று பி.கே சரஸ்வதி. 'துளிவிஷம்' படத்தில் வில்லன் நடிகர் திலகத்திற்கேற்ற வில்லி. என்னுடைய 'துளிவிஷம்' பட ஆய்வில் இதுபற்றி விவரமாக நடிகர் திலகம் திரியில் எழுதி உள்ளேன்.

    இதே படத்தில் டி ஏ.மோத்தி பாடிய இன்னொரு அருமையான பாடல். 'வான் முகில் கண்ட வண்ணத் தோகை மயில் போல' உடன் டி.வி.ரத்தினம் பாடி இருப்பார். ('மாட்டு வண்டி பூட்டிகிட்டு' பாடுவாரே)

    Last edited by vasudevan31355; 8th May 2015 at 08:53 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Thanks chinnakkannan thanked for this post
    Likes kalnayak, rajeshkrv liked this post
  17. #3579
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    மதுர கானத்தேரை சி.க முன்னிலை வகித்து வடம் பிடிக்க பின் ஆங்காங்கே பக்தர்களாகிய கல் நாயக், நான் மற்றும் அங்கிள் வடம்பிடிக்க முயல
    பின்னாலிருந்து இரு தூண்களாக ராகவ்ஜியும் வாசு ஜியும் மீண்டும் தேரை நகர்த்த வந்த பயில்வான்களாக ஆம் எழுத்துத்திறமையில் கனவான்களாகவும் விளங்கும் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ..... அன்புடன் ராஜேஷ்

  18. Thanks chinnakkannan, vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, vasudevan31355 liked this post
  19. #3580
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கனவான்

    பயில்வான்

    ம்..

    ராஜேஷ்ஜி! கமான்.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •