Page 270 of 397 FirstFirst ... 170220260268269270271272280320370 ... LastLast
Results 2,691 to 2,700 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2691
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    ராஜண்ணா ரயிலில் தொடர்கிறார்...




    "கல்நாயக், கல்நாயக் ..." என்று எழுப்புகிறார் ராஜண்ணா.

    "என்னண்ணே?"

    "காபி சாப்பிடுறயா?"

    "சரி வாங்குங்க அண்ணே" என்றேன்.

    நான் எழுந்து உட்கார்ந்தேன். ரயில் திருச்சியை அடைந்திருந்தது.

    அண்ணன் ஜன்னல் வழியாக காபி விற்றவரை அழைத்தார்.

    "காபி எவ்வளவு?" காபி விற்றவர் விலையை சொன்னார்.

    "கொஞ்சம் குரைச்சு சொல்லக்கூடாதா?" என்றார் அண்ணன்.

    "என்ன கேட்டீங்க?"

    "இல்லை விலையை கொஞ்சம் குரைச்சு சொல்லக்கூடாதா?-ன்னு கேட்டேன்" என்றார் அண்ணன்.

    "நல்லாயோசனை பண்ணிதானே கேட்கிறீங்க?" - இது விற்பவர்.

    "ஆமாம். இதிலென்ன யோசனை பண்றதுக்கு இருக்கு? கொஞ்சம் குரைச்சு விலையை சொன்னால் எனக்கு சந்தோஷமா இருக்கும்" - இது அண்ணன்.

    "சரி சொல்றேன்" என்ற காபி விற்பவர், "வள், வள்" என்று நாய் போல இரண்டு முறை குரைத்து விட்டு அதே விலையை சொன்னார்.

    அண்ணன் முகம் என்னவோ போலாயிற்று. பிறகு என்ன நினைத்தாரோ கேட்ட விலைக்கு காபியை வாங்கி எனக்கும் கொடுத்து, அவரும் வாங்கிக் குடித்தார்.



    ரயில் திருச்சியிலிருந்து கிளம்பியது. அண்ணன் திரும்ப படுக்கையில் விழவில்லை. நன்றாக வசதி பார்த்து உட்கார்ந்து கொண்டார்.

    ரயில் வேகமாகவே சென்றது. ஆனால் சிறிது நேரம்தான். சிக்னலுக்காக அங்கங்கே நின்று நின்று போய்க் கொண்டிருந்தது. ரொம்பவே இது அண்ணனை படுத்தியிருக்க வேண்டும்.

    "ஏன் இப்பிடி நின்னு நின்னு போகுது?" என்றார்.

    "அண்ணே சிக்னல் கிடைச்சி இருக்காது. அதனால் வெய்ட்பண்ணி போகுது" என்றேன்.

    "இல்லை இல்லை வேற ஏதோ காரணம் இருக்கணும். அதனால்தான் இப்பிடி போகுது" என்றார்.

    நான் அமைதியானேன்.

    சிறிது நேரம் போனபின்பு என்னிடம் சொன்னார் - "இந்த ட்ரைவர் புதுசு போல இருக்கு".

    நான் "அதுக்கும் இப்பிடி நின்னு நின்னு போறதுக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.

    "பாவம் இந்த ரூட்ல புதுசா வந்திருப்பார். வழியில நின்னு நின்னு விசாரிச்சி ஓட்டுவார்." என்றார்.

    அதுக்குப் பிறகு நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது.



    ஒருவழியாக ரயில் திண்டுக்கல் சென்றடைந்தது. பக்கத்தில் இருந்தவரையும் எழுப்பி இறங்கினோம். இப்பயணம் முற்றிற்று.
    Last edited by kalnayak; 29th January 2015 at 12:35 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2692
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஹி ஹி கல் நாயக் பாட்டெல்லாம் வீட் போய்ப் பார்க்கேன்.. ஆமா இணைந்த கைகள்னா எனக்கு தண்ணிலாரிப் பாட் தான் நினைவுக்கு வருது!

  5. Likes kalnayak liked this post
  6. #2693
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.,

    "ராஜண்ணா தண்ணி லாரியில போறப்போ வரைக்கும் வெய்ட் பண்ணனுமா என்ன. உங்களுக்காக அந்த பாட்டு இதோ" அப்படின்னு தரலாமுன்னு தேடிப் பார்த்தேன். யாரும் அப்லோட் பண்ணலை போலிருக்கு. கிடைச்சதும் போட்டுடலாம்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  7. Likes chinnakkannan liked this post
  8. #2694
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கண்ணா,

    உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி. இனி நீங்கள் சொன்ன சொல்லாத படங்களும் அவை மதுரையில் வெளியான தியேட்டர்களும்

    அவளுட ராவுகள் - சென்ட்ரல்

    ரதி நிர்வேதம் - சென்ட்ரல்

    இத இவிடே வரே - மீனாட்சி

    ஈட்டா - மினிப்ரியா [கமல், சீமா - IV சசி]

    நெல்லு - நியூசினிமா [ கமல்- லட்சுமி]

    மதனோத்ஸவம் - சென்ட்ரல்

    மஞ்சில் விரிஞ்ச பூக்கள் [பணியில் பூத்த மலர்கள்] 1980-ன் இறுதியில் கேரளத்தில் வெளியானது. மதுரையில் ஒன்று அல்லது இரண்டு வருடம் கழித்து வெளியானது என்று கேள்விப்பட்டேன். அந்தப் படம் கேரளத்தில் வெளியாகும்போது நான் மதுரையில் இருந்தேன். அது மதுரைக்கு வரும்போது நான் மதுரையில் இல்லை. வெகு நாட்களுக்கு பிறகு டிவியில் பார்த்தேன். நீங்கள் சொல்வது சரிதான். மோகன்லாலின் அறிமுகப் படம் அதுதான். ஏன், இயக்குனர் ஃபாஸில் அவர்களுக்கும் அதுதான் முதல் படம்.

    அதே போன்று கேரளத்தில் வெகு பிரபலமாக ஓடிய ஈநாடு [IV சசி] சுந்தரம் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியதாக நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதன் திரைக்கதை வசனமும் தமிழாக்கம் செய்யப்பட்டு குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது.

    நியூடெல்லி பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அருமையான படம். ஜோஷி இயக்கம். அன்றைய நாட்களில் ஜோஷியின் ஆஸ்தான ஸ்கிரிப்ட் ரைட்டர் டென்னிஸ் ஜோசப் என்பவர் திரைக்கதை வசனம். பிரபல ஆங்கில நாவலாசிரியர் இர்விங் வாலஸ் எழுதிய The Almighty என்ற நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டிருக்கும். அதில் மம்மூட்டியின் GK [G.கிருஷ்ணமூர்த்தி] என்ற கேரக்டர்-ஐ மறக்கவே முடியாது.

    சத்யனின் பழைய படங்களை தேடிப் பிடித்துப் பாருங்கள், தவறில்லை. ஆனால் அவற்றை விட மம்மூட்டி, லால் படங்களோடு உங்களால் எளிதில் ஒன்ற முடியும்.

    நான் பரிந்துரைக்கும் சில மம்மூட்டி படங்கள் [action, serious எல்லாம் உண்டு]. சிலவற்றை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம்.

    ஆவநாழி

    நியூ டெல்லி

    சிபிஐ series - [இதில் நான்கு படங்கள்]

    அடிக்குறிப்பு

    ஒரு வடக்கன் வீர காத

    நாயர் சாப்

    மிருகயா

    மதிலுகள்

    களிக்களம்

    அமரம்

    இன்ஸ்பெக்டர் பல்ராம்

    கவுரவர்

    பப்பயுடே சொந்தம் அப்புஸ்

    துருவம் [ஒரு action படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். மம்மூட்டி சுரேஷ் கோபி ஜெயராம் விக்ரம் கன்னட பிரபாகர் கௌதமி, அஸ்வினி என்ற ருத்ரா ஆகியோர் நடிக்க இயக்கம் ஜோஷி உங்களுக்கு சூர்யா action சானல் வருமென்றால் அதில் அடிக்கடி பார்க்கலாம்]..

    வாத்சலயம்

    சைன்யம்

    The King

    The truth

    இப்படி பல படங்கள்.

    லால் படங்கள்

    தாளவட்டம் [மனசுக்குள் மத்தாப்பூ]

    நாடோடிக் காற்று [கதாநாயகன்]

    சன்மனசுள்ளவருக்கு சமாதானம் [இல்லம்]

    ராஜாவிண்டே மகன் [மக்கள் என் பக்கம்]

    இருபதாம் நூற்றாண்டு

    காந்தி நகர் 2 ண்ட் ஸ்ட்ரீட் [அண்ணா நகர் முதல் தெரு]

    சித்ரம் [எங்கிருந்தோ வந்தான்]

    கிரீடம் [கிரீடம்]

    வந்தனம்

    ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா

    பரதம்

    கமலதளம்

    மணிசித்ரதாழ் [சந்திரமுகி]

    தேவாசுரம்

    இப்படி நிறைய வரும்.

    இருவரும் சேர்ந்து நடித்ததில்

    No 20 மெட்ராஸ் மெயில்

    ஹரிகிருஷ்ணன்ஸ்

    ட்வென்டி ட்வென்டி

    துல்கர் வளர்ந்து வரும் நடிகன். நன்றாகவும் நடிக்கிறார். அவர் நடித்த உஸ்தாத் ஹோட்டல், செகண்ட் ஷோ, ABCD போன்றவற்றையும் பாருங்கள். நான் பெங்களூர் டேஸ் பார்த்தேன். விக்ரமாதித்தன் [மற்றொரு ஹீரோ உன்னி முகுந்தன் என்று நினைக்கிறேன்] பார்க்கவில்லை. தமிழில் கூட வாய் மூடி பேசுவோம் படத்தில் நன்றாக செய்திருந்தார் என்று கேள்விப்பட்டேன். புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் பார்ப்பதில்லை என்பதனால் அதை பார்க்கவில்லை. இப்போது மணிரத்னத்தின் ஓகே கண்மணி படத்தில் நாயகனாக நடிக்கிறார். பார்க்கலாம்.

    இது மதுர கானங்கள் திரியா இல்லை மலையாளப் படங்களுக்கான திரியா என்று மாடரேட்டர் வந்து கேள்வி கேட்கும் முன் நான் எஸ்கேப் ஆகி விடுகிறேன்.

    அன்புடன்

    ஆமாம், த்ரிஷ்யம் பார்த்தீர்களா?

  9. Likes kalnayak liked this post
  10. #2695
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சேச்சே, இங்க யாரும் மலையாளப் படத்தை பேசக்கூடாதுன்னு சொல்லமாட்டாங்க. அந்த படத்திலிருந்து பாட்ட போடுங்க. இல்லையா, அந்த படத்து ஸ்டில்ஸ் போடுங்கன்னு கேப்பாங்க. அம்புட்டுதான்.*
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  11. #2696
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ரகுபதி ராகவ ராஜாராம்

    சின்னக் கண்ணன்,
    பன்னீரில் ஆடும் செவ்வாழை க் கால்கள்
    பனிமேடை போலும் பால்வண்ண மேனி (ஜூரம் வராதோ)

    கல்நாயக்,
    "இந்த ட்ரைவர் புதுசு போல இருக்கு".

    நான் "அதுக்கும் இப்பிடி நின்னு நின்னு போறதுக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டேன்.

    "பாவம் இந்த ரூட்ல புதுசா வந்திருப்பார். வழியில நின்னு நின்னு விசாரிச்சி ஓட்டுவார்." என்றார்.

    ....................... உங்கள் இருவருக்கும் எப்படி இப்படியெல்லாம் தோன்றுகிறது? ரூம் போட்டு யோசிப்பீங்களா? வேலை கடுமைக்கு நடுவே கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வைக்கும் உங்களுக்கு நன்றி.

    ----------------------------------------

    நாளை உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாள். அவரது நினைவுநாள் ஜனவரி 30ம் தேதி வருவதற்கு காரணமாக இருந்த கோட்சேவுக்கு சிலை வைப்பதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நாளை பூமி பூஜை போடப்போகிறார்களாம். கோட்சே தேசபக்தராம். இதை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, இது எங்கள் நீதிமன்ற அதிகார வரம்புக்குள் வராது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து விட்டது. பூமி பூஜை நடத்தப் போவதாக அறிவித்துள்ள இந்து மகாசபாவின் நடவடிக்கையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது வேதனை.

    முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது மிகுந்த துயருற்றேன். இந்தியாவின் இளம் தலைவர் இப்படி அநியாயமாகப் கொல்லப்பட்டாரே என்று. ராஜிவ் காந்தியை கொன்றவன் தேச விரோதி என்றால் மகாத்மா காந்தியை கொன்றவன் மட்டும் தேசாபிமானியா? அவனுக்கு சிலை வைக்கலாமா?

    இதைக் கேட்டால் கேட்பவர்கள் மீது பிரிவினைவாதி, தேசவிரோதி என்று பழி விழும்.கோட்சேக்கு சிலை வைப்பவர்கள் தேச விராதியா? சிலை வேண்டாம் என்று கூறுபவர்கள் தேச விரோதியா?

    மத ரீதியாக பிளவு படாத வரைதான் இந்தியா வெற்றி பெறும் என்று அமெரிக்க அதிபர் இங்கு வந்து அறிவுரை சொல்லும் அளவுக்கு நம் நிலைமை ஆகிவிட்டது. என்ன கொடுமை சார் இது.

    பாரத விலாஸ் படத்தில் இந்திய நாடு என் வீடு.. பாடல் எனக்கு பிடித்த பாடல்.(இதிலும் மலையாள வரிகள் வரும் கல்நாயக். மது வேறு வருவார் ) ரகுபதி ராகவ ராஜராம்.... என்று பாடிய தேசப்பிதாவை நினைவு கூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் இந்தப் பாடலை தரவேற்றுங்களேன். (அப்பாடா! நான் தேசியவாதி)

    இப்படித்தான், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த பேரறிஞர் அண்ணாவைப் பார்த்து அன்றைய ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் தமிழ்த்தாய், தமிழன்னை என்று தேசியத்துக்கு எதிராக பிராந்திய வாதத்தை தூண்டுகிறீர்களே? எங்கே இருக்கிறாள் உங்கள் தமிழ்த்தாய்? அடையாளம் காட்ட முடியுமா? முகவரி உண்டா? என்று கேள்வி எழுப்பினார். அண்ணாவை மடக்கி விட்டதாக அவர்கள் தரப்பில் ஒரே ஆரவாரம்.

    அணுவைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் போல, அறிவுப் பெருங்கடலை குறு உருவுக்குள் அடக்கிய அறிஞர் அண்ணா சொன்னார் அமைதியாக.....பாரதமாதாவுக்கு பக்கத்து வீடு.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  12. Likes kalnayak liked this post
  13. #2697
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    கலைவேந்தன் உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

    இதோ நீங்கள் கேட்காத ரகுபதி ராகவ ராஜாராம் பாடல்:



    நீங்கள் கேட்ட இந்திய நாடு என் வீடு பாடல்:

    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  14. #2698
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா, கிருஷ்ணா...

    கேட்காமலும் கொடுப்பவரே கல்நாயக், கல்நாயக்.... வாழ்க. நன்றி.

    அன்புடன் :கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  15. Likes kalnayak liked this post
  16. #2699
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    முரளி குரு...ஹை அழகா லிஸ்ட் போட்டிருக்கீங்க தாங்க்ஸ்..

    அதுல பார்த்தீங்கன்னா கட்டக் கடைசியா போட்டீங்களே ஒருகொக்கி. அதுக்கு வர்றேன் த்ரிஷ்யம். முதல்ல.
    இல்லீங்க்ணா.. முத தபா டிவிடி வாங்கி ஒழுங்கான ப்ரிண்ட் இல்லைப்ளஸ் தூய மலையாளம்.. பத்து நிமிடத்திற்குப் பின் எடுத்து விட்டேன்..பின் ஒரு மாதம் கழித்து நல்ல ப்ரிண்ட் வாங்கி வைத்து..பின் பார்க்கலாம் என்று தேட அகப்படவில்லை..ஒருமுறையல்ல இருமுறை.. நாளையாவது மறுபடி தேடவேண்டும் இல்லையெனில் இன்னொரு காப்பி வாங்கணும்..(இங்கே கிட்டத் தட்ட மூன்று மாதங்கள் ஒரு தியேட்டரில் ஓடியதுங்க.. ஒருமாதம் பெரிய தியேட்டர் இருகாட்சிகள் சின்னதியேட்டர் ஒருகாட்சின்ன்னு அப்புறம் மத்த இரண்டுமாதம் த்ரீ ஷோஸ் சின்ன தியேட்டர்ல.ஒரு ரெகார்ட் தான் த்ரிஷ்யம்..இங்க.. ச் போயிருக்கலாம் )

    //ஈட்டா - மினிப்ரியா [கமல், சீமா - IV சசி]// போஸ்டர் மட்டும் நினைவிருக்கிறது.தமிழ்ப் படுத்தியது நினைவில்..என்ன “இன்ப தாகம்” என நினைக்கிறேன்.. இந்த ஐவி சசி இன்னொரு படம் எடுத்தார் அந்தப் படத்தை துபாயில் நண்பன் வீட்டில் பார்த்தேன்.. ப்ளூலாகூனோட தழுவல்..கொஞ்சம் லோ பட்ஜட் படம்.கதானாயகிக்கு மேலாடை வாங்கக் கூட ப்ரொட்யூசரிடம் பட்ஜெட் இடித்தது போலும்! படப்பெயர் மறந்து விட்டது.

    ஈ நாடு சுந்தரம் தான்.. ஆனால் பார்க்கவில்லை..கதானாயகியின் பெயர் மட்டும் சுரேகா என ஏனோ நினைவில் தங்கியிருக்கிறது! (சரிதானே)

    சிபிஐ சீரீஸ் (4வது இங்கு பார்த்தேன்..கோபிகை தானே) தவிர இதர மம்முட்டி படங்கள் பார்த்ததில்லை (கிராதகா எனப் பார்க்காதீர்கள்.- துபாயில் சிலவருடம் க.மு. அக்காவீட்டிலேயே ஜாகை.. எனது சகோதரி பயங்கரத் தமிழார்வம்..எனில் தமிழ் ஒன்லி அலோவ்ட் இன் த ஹவுஸ்.. பின் க.பி தனிவீட்டில் நார்த் இண்டியா தான்.. ஸீ டிவி புதிதாக வந்து ஒளிபரப்பாக அதுவே எண்டர் டெய்ன்மெண்ட் இன் டிவி.. தமிழ்ப்படம் என்றால் புதுப்பட காஸெட்- புதுமனைவி என்பதால் கொஞ்சம் பயம் (ஏண்டா பொய் சொல்ற இப்பவும் தானே… ஷ்ஷ் மனசாட்சி) )எனில் மலையாளப் படம் பார்க்கும் சந்தர்ப்பம் குறைவு தான்.. (ஆனால் மலையாள நண்பர்கள் நண்பிகள் அலுவலகத்தில் கிடைத்தார்கள்.)
    ஹை.. நீங்கள் சொல்ல விட்டுப் போன மம்முட்டி படம் நான் மதுரையில் பார்க்கவில்லை. பின்னர் பார்த்தேன் என்னவாக்கும் அது..மதுரை சக்தியில் ஓடியது.. யாத்ரா.. மம்முட்டி ஷோபனா (சரிதானே)

    லால்ல க்ரீடம் மணிசித்ர தாழ், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, மூணாம் முறா அம்புட்டு தான்.. புதுசு கொஞ்சம் நிறைய பார்த்திருக்கிறேன்.. அக்கர யக்கர யாக்காரே என்று ஒரு பழைய படம்..ஒரு க்ரீடம் கடத்தப் பட்டு அமெரிக்கா போய் லாலும் (லால் தானா) இன்னொருவரும் போய் கண்டுபிடிப்பதாக வரும்காமடி..

    இன்னொரு காமடி மலையாள ப் படம்… எனக்கு ரொம்பப் பிடித்த படம்…கஜ கேசரி யோகம்.. ஒரு மாவுத்தனுக்கு தான் வளர்த்த யானை இறந்துவிட பேங்க் லோன் வாங்கி ஒரு யானை வாங்குகிறான்..- நாப்பதாயிரமா அதுக்கெல்லாம் இதான் கிடைக்கும் என ஒரு சர்க்கஸ் யானையைத் தலையில் கட்டி விடுகிறார்கள். அதை வைத்து சம்பாதிக்கலாம் என மர ஆலைக்குச் சென்று மரத்தை எடு என ஹிந்தியில் (அதுக்கு ஹிந்தில பேசினா தான் புரியும்) சொல்ல அது சமர்த்தாய் வெட்டப் பட்டிருந்த மரத்தின் அடித்தளத்தில் ஒற்றைக்காலில் நின்று பிளிறும்!

    பின் இதான் சர்க்கஸ் யானையாச்சே என அதை சைக்கிள் ஓட்ட விட்டு காசு பண்ணலாம் எனச் செய்கையில் டொபுக்கென்று சுகுமாரி ஆஜர்.. ப்ளூ க்ராஸ்..பிராணிகளை எல்லாம் கொடுமைப் படுத்தக் கூடாது என..

    பின்னர் பாங்க் ஏன் இன்ஸ் டால் மென் ட் கட்டவில்லை என யானையைக் கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷனில் விட்டுவிடும்.. எனச் செல்லும் கதை.. இன்னஸண்ட் அவர் மகளாய் கோடை மழை வித்யா..

    உஸ்தாத் ஹோட்டல் நண்பர் வீட்டிற்குச் சென்ற போது போட்டிருந்தார்கள் பட் நான் தூங்கிவிட்டேன்..ம்ம் பார்க்கணும்..மற்ற படங்களையும்..


    நியூ டெல்லி பற்றி விரிவாக எழுதாததன் காரணம் இந்த ஆல்மைட்டி நாவல் நினைவில் எவ்வளவு முயற்சித்தும் வரவில்லை..மம்முட்டியின் கதாபாத்திரம் மறக்க இயலா ஒன்று..( கரகர குரல் தியாகராஜனும் உண்டு)

    .. இந்த வாயை மூடிப் பேசுவோம் டிவிடி வாங்கியும் பார்க்கவில்லை பின் ஒரு விடுமுறை நாளில் ஸீ தமிழில் சானல் மாற்றிய போது பாதியிலிருந்து பார்த்தேன் நன்றாக இருந்தது.. நஸ்ரியாவை விட மதுபாலா ஒரு இனிய ஆச்சர்யம்.. முன்பு பார்த்ததை விட வயதானால் எப்படி அழகு கூடும் …!
    அப்பாவுடன் நடித்தவர் பையனுடனும் நடித்த போது அதே அழகு..ஆமாம் அவர் என்ன நினைத்திருப்பார்.
    அழகன் படப்பாடல் தத்தித் தோம் ம, ம (மதுபாலா மம்முட்டி) புலமைப்பித்தன் வரிகள் மரகத மணி இசை?




    ஹையா த்ரெட்ட ஜஸ்டிஃபை பண்ணியாச்சு..(கண்ணா உஷார்பார்ட்டி டா நீ)

  17. Likes kalnayak liked this post
  18. #2700
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கலைவேந்தன். உங்கள் ரசிப்புத் தன்மைக்கு நன்றி.. தலைவர்கள் சொல்லும் நகைச்சுவையும் அழகு.. கோட்சேக்குச் சிலையா..ம்ம் கலிகாலம்.

    கல் நாயக் நீங்களிட்ட ரகுபதி ராகவ ராஜாராம் லிங்க் போனால் யூட்யூப் என்கிட்டயே வா என்கிறது.. ஆனால் பாரத விலாஸ் ஒர்க் ஆனது. எனில் பி.சுசீலா பாடிய பாடல்.

    https://www.youtube.com/watch?featur...yt-cl=85027636
    Last edited by chinnakkannan; 29th January 2015 at 09:53 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •