Page 268 of 397 FirstFirst ... 168218258266267268269270278318368 ... LastLast
Results 2,671 to 2,680 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2671
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நன்றி கல் நாயக் தங்கள் பாராட்டுதலுக்கு..

    //சின்ன சந்தேகம். தொழிற்முறை பாட்டு என்று கதையை முழுதும் கொடுத்து, பாட்டையும் கொடுத்து *இருக்கிறீர்கள். இதில் ஏதோ ஒன்று குறைந்தது போல் எனக்கு தோன்றுகிறது. சட்டென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை// என்ன குறை என்று தயங்காமல் சொல்லுங்கள்.. அடுத்த தடவை எழுதும் போது சரி செய்து கொள்கிறேன்..

    மீனவர்களின் வாழ்க்கை - கடலும் கடல் சார்ந்த இடமும் - நெய்தல் - பற்றி ச் சொல்ல இது அகப்பட்டது..முழுக்கதையையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. நான் ரசித்ததை உங்களுக்குப் பகிர்ந்து கொண்டேன். அந்தப்பாடல்கள் இன் டிவிஜுவலாக (என்ன இங்க்லீஷ் வேண்டிக்கிடக்கு - சரி சரி மனசாட்சி ) தனித்தனியாகப் போட்டு சொல்ல ஆசை தான்..மொழிபெயர்ப்பு அகப்படவில்லை.. மலையாள லிரிக்ஸ் இன் இங்க்லீஷ் தான் கிடைத்தது..
    ஒரு வேளை இது தான் உங்கள் குறையாக இருக்கும் என நினைக்கிறேன்..

    சரி ஈ ஈ எனக்கு படம் இங்கே போடத் தெரியாது..சமர்த்தா நெட்ல சர்ச் பண்ணி செம்மீன் ஸ்டில்ஸ் போடுமேன் இங்கு..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2672
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    சி.க.
    மலையாளத்தில் 'செம்மீன்' என்றால் இறால் மீனாமே! இறால்-க்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? தெரிஞ்சவா சொல்லுங்கோ.* அது சரி, நீங்க மீன் சாப்பிடறவரா இருந்தால், அது என்ன மீன் என்று தெரிஞ்சிக்க ஆசைப்பட்டிருப்பீங்க. இப்ப 'தங்கமீன்கள்' மாதிரி ஏதோ ஒரு மீன்னு கண்டுக்காம விட்டுபுட்டீங்க. பரவாயில்லை.

    மலையாளத்திலும் பாரதிராஜா அம்மா பேர்ல இவ்வளவு பாசமா இருப்பாங்கன்னு நான் நெனைக்கவேயில்லை. நீங்க எழுதினதில் சில இடங்களில் 'கருத்தம்மா' -என்று சரியாகவும், பல இடங்களில் 'கறுத்தம்மா' என்றும் வந்துள்ளது. மலையாளத்தில் 'கறுத்தம்மா'-தான் சரியோ என்னவோ.

    சரி கீழே பாருங்க செம்மீன் இரண்டு வண்ணங்களில்: (நெட்டில் காப்பியடித்தது, இமேஜ் வேண்டுமென்றால் ஏதாவது ஸர்வரில் ஏற்றவேண்டுமே நான் ஸர்வரில்*ஏற்றவில்லை. அதனால் லிங்க் மட்டுமே வரும்.)

    http://upload.wikimedia.org/wikipedi...een_Prawns.JPG

    http://www.icookipost.com/wp-content...athu_thumb.jpg

    நீங்க அடிக்க வருவீங்க. அதனால்


    http://pyaretoons.pyaretoonsforum.co...aturang-Katha-[English]_PyareToons_Page_000.jpg

    http://3.bp.blogspot.com/_7CHLQyiufU...emmeen_300.jpg

    http://yentha.s3.amazonaws.com/conte...5_chemmeen.jpg
    Last edited by kalnayak; 28th January 2015 at 11:46 AM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  4. #2673
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //மலையாளத்தில் 'செம்மீன்' என்றால் இறால் மீனாமே! // கல் நாயக்.. ஆமாங்க..சொல்ல விட்டுப்போட்டேன்..எடுத்த நோட்ஸ்ல குறிச்சு வச்சுருந்தேன்..ஆமா.. எனக்கு மீனா பத்தித் தெரியும் இது அந்த மீனா என மீன்வகையக் கேட்டா தெரியாது..

    அப்புறம் சொல்ல மறந்தது கிட்டங்கி..- இந்தப் பரீக்குட்டியோட கிட்டங்கி என்பது கருவாடு செய்து விற்கும் கடை.. மீன் வாங்கி உப்புப்போட்டு வேகவைத்து காயவைத்து விற்பார்கள் என்பது போல வரும்..சரி தானா

    ஆரம்பத்தில் பரீக்குட்டி பைசாவிற்குப் பதிலாக கருவாட்டுக் கூடைகள் தான் செம்பன் குஞ்சுவிற்குக் கொடுப்பான் (தன்னுடைய ஸ்டாக்கிலிருந்து!)

  5. Likes kalnayak liked this post
  6. #2674
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //இப்ப 'தங்கமீன்கள்' மாதிரி ஏதோ ஒரு மீன்னு கண்டுக்காம விட்டுபுட்டீங்க. //
    //மலையாளத்திலும் பாரதிராஜா அம்மா பேர்ல இவ்வளவு பாசமா இருப்பாங்கன்னு நான் நெனைக்கவேயில்லை. //

    //நீங்க எழுதினதில் சில இடங்களில் 'கருத்தம்மா' -என்று சரியாகவும், பல இடங்களில் 'கறுத்தம்மா' என்றும் வந்துள்ளது. மலையாளத்தில் 'கறுத்தம்மா'-தான் சரியோ என்னவோ.// பிரச்னை என்னவென்றால் கல் நாயக் கருத்தம்மா தான் சரியாய் த் தமிழில் வரும்.. செம்மீன் நாவலில் முழுக்க முழுக்க கறுத்தம்மா தான் வருது.. அதான் கன்ஃப்யூஷன்

    ஏம்ப்பா செம்மீன் பட ஸ்டில்ஸ் போடுங்கன்னா மீன் பட்ம் போட்டிருக்கீங்க.. மத்த லிங்க் ஏனோ ஒர்க் ஆகலை..வீட் போய்ப் பார்க்கறேன்..

    பட் படம் பேரு செம்மீனே தவிர கடல்ல எல்லா டைப் மீன் தானே கிடைக்கும்..ஆமா எறால் மீன் கடல்ல நிறைய இருக்குமா என்ன.. கோவில் குளத்துல இருக்கற மீன்லாம் எறாலா..குட்டியா கருப்பா இருக்குமே..

  7. Likes kalnayak liked this post
  8. #2675
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post

    அப்புறம் சொல்ல மறந்தது கிட்டங்கி..- இந்தப் பரீக்குட்டியோட கிட்டங்கி என்பது கருவாடு செய்து விற்கும் கடை.. மீன் வாங்கி உப்புப்போட்டு வேகவைத்து காயவைத்து விற்பார்கள் என்பது போல வரும்..சரி தானா
    கிட்டங்கி என்பது தமிழ்ச் சொல்தான். தமிழர்கள் பயன்படுத்தாமல் மறந்துபோன சொற்களில் இதுவும் ஒன்று.
    Last edited by kalnayak; 28th January 2015 at 12:45 PM.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  9. #2676
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மூவரும் போவோம்

    நன்றி, கல்நாயக். சிவகங்கை சீமை படம் அவசியம் பாருங்கள். தயவு செய்து ஒரு வேண்டுகோள். வீரபாண்டிய கட்டபொம்மனை நினைத்துக் கொண்டு பார்க்காதீர்கள். அது வேறு; இது வேறு. படம் வந்தபோதே கட்ட பொம்மனுக்கு போட்டி என்று விளம்பரப்படுத்தப்பட்டதால் எதிர்பார்ப்பு கூடிப் போய், அதே கண்ணோட்டத்தில் மக்கள் பார்த்து கடைசியில் படம் போதுமான வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.

    வாசு சார், சின்னக்கண்ணன், கோபால், ரவி சார், கிருஷ்ணா சார், ராகவேந்திரா சார், போன்று நன்றாக எழுதும் எல்லாரது எழுத்துக்களுமே எனக்கு பிடிக்கும். நீங்கள் ராஜண்ணாவுடன் பஸ்சில் சென்றதை விளக்கியதையும் ரசித்து சிரித்தேன்.

    கார்த்திக் சார் இருக்கிறாரே. அருமையாக எழுதக் கூடியவர். சிவலிங்கம் செட்டியாரின் காரில் இருந்து ஒரு நடிகை இறங்கி ஓடியதை தன் நண்பருடன் பார்த்ததை அவர் விளக்கியிருந்த விதம் காட்சியை நேரில் பார்ப்பது போலிருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அந்த கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் நிச்சயம் திருப்தி இருக்கும்.
    நீங்கள் முதலில் போட்ட செம்மீன் படத்தை பார்த்து வாய்விட்டு சிரித்தேன். நன்றி.

    சரி, என்ன நீங்கள், நான், சின்னக்கண்ணன் என நாம் மூவர் மட்டுமே இருக்கிறோம். இதைப் பார்த்து இந்தப் பாடல் மனதில் தோன்றியது.

    மறக்க முடியுமா? படத்தில் இசையரசியின் குரலில் இடம் பெற்ற அருமையான பாடல். காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்.... இந்தப் பாடலைக் கேட்டாலே வேதனை இதயத்தை கசக்கிப் பிழியும். படமும் சோகம். வாழ்க்கையில் எந்த மனிதனுக்கும் வரக்கூடாத நிலைமை.

    துயரம், ஏமாற்றம், அதீத மகிழ்ச்சி, வேலை நிமித்தம் என்று பல காரணங்களால் நான் தூங்காத இரவுகள் பல உண்டு. மறக்க முடியுமா? படம் பார்த்த இரவும் அதில் ஒன்று. கிளைமாக்ஸ் காட்சியும் திரு. எஸ்.எஸ்.ஆர். மற்றும் தேவிகா அவர்களின் நடிப்பும் உறைய வைக்கும்.

    இந்தப் பாடலின் ஆரம்பத்தில் சுசிலாவின் விசும்பல் .... என்ன ஒரு அர்ப்பணிப்பு. அழுகை உணர்வு இல்லாமல் விசும்புவது, அதிலும் ஒலிப்பதிவு கருவியில் நன்கு பதிவாக எவ்வளவு அழுத்தமாக விசும்ப வேண்டும்?

    பூவா தலையா? பதிவில் திரு.கருணாநிதியின் அரசியலை நான் ஏற்பவனல்ல என்றும் ஆனாலும் அவர் திறமையாளர், நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்றும் கூறியிருந்தேன்.

    அவரது திறமைக்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம். பாடல் எழுதுவதில் திறமை என்பதை விட அதை 30 நிமிடத்தில் எழுதியிருக்கிறார் அதுவும் காட்சிக்கு பொருத்தமாகவும் மெட்டுக்கு வார்த்தை உட்காரும்படியும் என்பது இன்னும் திறமை.
    கவிஞர் பூலாங்குளம் மாயவநாதன் அற்புதமான கவிஞர். படத்தின் இசையமைப்பாளரான டி.கே.ராமமூர்த்தி. (எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களிடம் இருந்து பிரிந்த பிறகு அவர் இசையமைத்த படம்)இந்த மெட்டை மா....ய...வ...நா....த...ன் என்று அவர் பெயரிலேயே ராகத்தோடு பாடிக்காட்டியிருக்கிறார். இதனால், கோபம் கொண்டு மாயவநாதன் போய் விட்டார். பாடல் ஒலிப்பதிவாக வேண்டும். விஷயம் திரு.கருணாநிதிக்கு சென்றது. போனிலேயே மெட்டைக் கேட்டு விட்டு 30 நிமிடத்தில் அவர் எழுதிய பாடல் இது.

    படம் வேறு சோகம். பாடலும் சோகம். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண திரு.கருணாநிதியின் நகைச்சுவையையும் பார்ப்போமே. அதுவும் இந்த பாடலோடு தொடர்புடையதே. புதிய பறவையில் எங்கே நிம்மதி? பாடலுக்கு 64 வயலின் பயன்படுத்தியுள்ளனர். அதேபோன்று எஃபெக்ட் கிடைக்க இந்த பாடலிலும் 64 வயலின் பயன்படுத்தலாம் என்று திரு.கருணாநிதியிடம் திரு.ராமமூர்த்தி சொல்லியிருக்கிறார்.

    அதற்கு திரு.கருணாநிதி கூறிய பதில், அந்தப் படத்தில் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. அதனால், 64 வயலின். இதில் ராமமூர்த்தி மட்டும் தானேய்யா... 32 போதுமே. அதான் கருணாநிதி. முரசொலி மாறன் தயாரிப்பில் சொந்தப் படம் வேறு, விடுவாரா?

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  10. Likes kalnayak liked this post
  11. #2677
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கலைவேந்தன் .. நல்ல பாடலை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.. காகித ஓடம் கேட்கும் போதே நெஞ்சத்தைக் கவ்வும்..சோகம் சூழ்ந்து கொண்டு ஸ்தம்பிக்க வைக்கும்.. நன்றி..

    ஆனால் ஏனோ இதுவரை மறக்கமுடியுமா பார்த்ததில்லை..பாடல் கூட வீடியோவில் ஒருதடவை பார்த்திருக்கிறேன் என நினைக்கிறேன்..காரணம் எதுவுமில்லை..ஒரு தடவை மதுரை ஸ்ரீ தேவியில் போட்டு எனக்கு நேரம் கிடைத்துப் பார்க்கலாம் என்றிருந்த போது மூன்றே நாளிலோ என்னவோ படம் மாற்றிவிட்டார்கள்..அதற்குப்பிறகு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை..டிவிடி சோகப்படங்கள் எல்லாம் வாங்க மாட்டேன்

    ம்ம் //இதில் ராமமூர்த்தி மட்டும் தானேய்யா.. /நல்ல நகைச்சுவை.. ஏங்காணும்.. நாம் மூவர் இருந்தே நல்லவிதமாகச் செல்லலாமே.. நல்ல ஓடத்திலேயே.. மற்றவர்களையும் வரவழைக்கலாம் நம் எழுத்தின் மூலமாக..

    நீங்கள் கேட்ட பாடல் இதோ..இது முதல் பாடல் என நினைக்கிறேன்.. வீட் போய் பார்த் சொல்க்


    Last edited by chinnakkannan; 28th January 2015 at 06:07 PM.

  12. Likes kalnayak liked this post
  13. #2678
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இது இரண்டாவது பாடல் என நினைக்கிறேன்


  14. Likes kalnayak liked this post
  15. #2679
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //கார்த்திக் சார் இருக்கிறாரே. அருமையாக எழுதக் கூடியவர். சிவலிங்கம் செட்டியாரின் காரில் இருந்து ஒரு நடிகை இறங்கி ஓடியதை தன் நண்பருடன் பார்த்ததை அவர் விளக்கியிருந்த விதம் காட்சியை நேரில் பார்ப்பது போலிருந்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. அந்த கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் நிச்சயம் திருப்தி இருக்கும்.// எங்கிட்டோ போய்ட்டீங்க.. மாதங்களைச் சொன்னேன் ஸ்வாமி..ம் ம் வீ வில் வெய்ட்.. வருவார்..

  16. Likes kalnayak liked this post
  17. #2680
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் நடித்த கலங்கரை விளக்கம் படப்பிடிப்பு முடிந்ததும் படம் நீளமாக இருப்பதைக் கண்டு எந்த இடத்தில் கத்திரி போடலாம் என இயக்குநர் கே.சங்கர் யோசித்திருக்கிறார்.
    பொன்னெழில் பூத்தது புதுவானில் பாட்டு ரொம்ப பெருசா இருக்கு அதையே தூக்கிருவோம் என முடிவும் எடுத்துவிட்டார்.
    உடனே அந்தப் படத்தின் வசனகர்த்தாவான மா.லட்சுமணன் இடைப்பட்டு " பஞ்சு நல்லா எழுதியிருக்கான்.. அந்தப் பாட்டு இருக்கட்டுமே , வேற எதாவது காட்சிகளை வேண்டுமானால் நீக்குங்கள் " என தயாரிப்பாளர் ஜி. என்.வேலுமணியிடமும், இயக்குநர் கே.சங்கரிடமும் கெஞ்சிக் கேட்டிருக்கிறார்.
    இயக்குநர் கே.சங்கர் இரங்கி பாடலைக் கத்தெரிக்காமல் விட்டு விட்டார்.
    எம்.எஸ்.வி இசையில் சுசிலாவும் டி.எம்.எஸ்ஸும் இணைந்து பாடிய பொன்னெழில் பூத்தது புதுவானில்

    0
    பழைய படங்களில் பாடல்கள் கண்ணதாசன் என்று போட்டுவிட்டு கீழே உதவி பஞ்சு அருணாச்சலம் என்று போடுவார்கள்.
    தனது சித்தப்பாவான கண்ணதாசன் பாடல் வரிகளைக் கூறக் கூற அதைப் பேப்பரில் எழுதிக் கொண்டே வருவதுதான் அந்த உதவி ! இதற்காக ஒரு பாடலுக்கு 50 ரூபாய் சம்பளம் பெற்றிருக்கிறார் பஞ்சு அருணாச்சலம்.
    இயக்குநர்களும் கதாசிரியர்களும் பாடலின் சூழலை கண்ணதாசனிடம் விளக்குவதை பக்கத்தில் இருந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்ததால் பின்னாளில் சிறந்த கதை ஆசிரியராகவும் பாடலாசிரியராகவும் ஜொலித்தார் பஞ்சு அருணாச்சலம்.

  18. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •