Page 266 of 397 FirstFirst ... 166216256264265266267268276316366 ... LastLast
Results 2,651 to 2,660 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2651
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    அப்புறம். மூன்று நாட்களுக்கு திரி பக்கம் நான் வரமாட்டேன், வெளியூர் போவதால். கலை வேந்தரும் சிகவும் தொடர்ந்து கொண்டு இருங்கள். மற்றவர்களும் கலந்து கொள்ளட்டும்.செவ்வாய் கிழமை கலந்து கொள்கிறேன்.


    அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துககள்.*

    இப்போதைக்கு உங்களிருவரிடமும் விடை பெற்றுக் கொள்கிறேன். வணக்கம்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  2. Likes chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2652
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //அவர் தன் கருத்துககளை சொல்லட்டும். // கல் நாயக் கலைவேந்தன் நன்றி..ஹையாங்க் நான் சொல்ல வேணாம்னுல்லாம் சொல்லலை.அப்படி தொனி அந்தவரிக்குவந்துடுச்சா.. ஸாரி..கலைவேந்தன் நீங்கள் உங்கள் கருத்தை எழுதுங்கள்.வித்யாசமாகவும் அழகாகவும் எழுதுகிறீர்கள்

    பாட்டுகளுக்கு தாங்க்ஸ் கல் நாயக்..இன்னும் வேலையே ஆரம்பிக்கலை அதுக்குள்ள சுட்டியா ..லீவா..சரி சரி சமர்த்தாய் ஊர் போய்ட்டு வாங்கோ..எஞ்ச்சாய் யுவர் ஹாலிடே.(எங்களுக்கும் இங்கு திடீரென விடுமுறை..ஆக்சுவலா இன்றும் நாளையும் வீக் எண்ட் லீவ்.. நாளன்னிக்கும் லீவு..சவுதி மன்னர் மறைந்ததால்..பட் நான் ஆஃபீஸ் போகணும் வேலை இருக்கு)

  5. Likes kalnayak liked this post
  6. #2653
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //அவர் தன் கருத்துககளை சொல்லட்டும். // கல் நாயக் கலைவேந்தன் நன்றி..ஹையாங்க் நான் சொல்ல வேணாம்னுல்லாம் சொல்லலை.அப்படி தொனி அந்தவரிக்குவந்துடுச்சா.. ஸாரி..கலைவேந்தன்
    நன்றி சின்னக்கண்ணன். ஸாரி கேட்க வேண்டிய தேவையே இல்லை. நீங்கள் எதுவும் தவறாக சொல்லவும் இல்லையே. புரிதல் ஏற்பட்டு விட்டால் தவறாக சொல்லியிருக்கிறாரோ என்ற எண்ணமும் வராது. ஸாரி சொல்லவும் மாட்டோம். நான் உங்களை புரிந்து கொண்டிருக்கிறேன். நன்றி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  7. Thanks chinnakkannan thanked for this post
    Likes kalnayak liked this post
  8. #2654
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நன்றி கலைவேந்தன். என்னைப் புரிந்து கொண்டமைக்காக..ஒரு சின்ன அன்புப் பரிசு!


    *
    ம.தி, முத்துராமன், ஜெயலலிதா.. ஒரு தாய் மக்கள்.. வெகு அழகிய பாடல்..

    பாடினாள் ஒரு பாட்டு பால் நிலாவினில் நேற்று
    ஓடினேன் அதைக்கேட்டு தேடினேன் வலை போட்டு

    http://www.youtube.com/watch?x-yt-ts...yer_detailpage

  9. Likes kalnayak liked this post
  10. #2655
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஜெய்ஷங்கர் ஜெயசித்ரா ஜோடியில் கலாமாஸ்டரின் வார்த்தைப் ப்ரயோகமான கெமிஸ்ட்ரி கொஞ்சம் நன்றாகவே இருக்கும். ஜெயசித்ரா உணர்ச்சி வசப்படுவது போல் நடித்தால் கொஞ்சம் வாயைக் கோணிக் கொள்வார்!

    இருந்தாலும் சில படங்கள் ஓகே தான்.. இந்தப் பாட்டில் இரண்டு ஜெயசித்ரா – கொஞ்சம் கூட டிஃபரன்ஷியேட் பண்ணிக் காண்பிக்கவேண்டும் என்று நினைக்காமல் நடித்திருப்பார் – டைரக்டர் சொன்னதாலோ என்னவோ..மாடர்ன் ட்ரஸ், பாவாடை சட்டை தாவணி இரண்டுமே இரண்டு காரக்டர்ஸூக்கும் உள்ள வித்யாசம்.. சக்கப்போடுபோடு ராஜா படம் என்று நினைக்கிறேன்..

    கவிதை நான் கவிஞன் நீ..
    ஜெய்சித்ரக் கவிதை ஜெய்ஷங்கரக் கவிஞன்..ம்ம்

    பச்சைத்தோட்டம் பாவையுன்மேனி
    பாடிப்பறப்பேன் நானொரு தேனி!// காய்கறித் தோட்டத்துல தேனி எப்படிப் பறக்கும்?!

    http://www.youtube.com/watch?x-yt-ts...yer_detailpage

  11. Likes kalnayak liked this post
  12. #2656
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கலைவேந்தன் உங்கள் சிந்தனையை ஒட்டியே சில நாட்களுக்கு முன் நானே எழுதியிருக்கிறேன்..

    அவலங்கள் எல்லாமே அடியோடுதான்
    ..அவனியிலே எப்போதும் ஒழிந்திட வேண்டும்
    புவனமிது பூலோகம் சொர்க்க மென்றே
    …புவியதுவும் சீக்கிரமாய் மாறவேண்டும்
    அவதிமிகும் கொடியநோய்ப் பேய்களெல்லாம்
    …ஆர்ப்பட்ட மிட்டலறி ஓட வேண்டும்
    நவதான்யம் மற்றுபல செல்வமெல்லாம்
    ..நரருக்கு அருள்புரிவாய் சக்தி யம்மா

    சரி தானுங்களே


    http://www.youtube.com/watch?x-yt-ts...yt-cl=84503534

  13. Likes kalnayak liked this post
  14. #2657
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    நனவில் சிரித்திடும் நங்கையை நோக்க
    கனவதில் வந்தவள்போல் காண மனத்துளே
    தங்கி இருந்தவள் தானாய் வரக்கண்டு
    பொங்குதே நெஞ்சமும் போம்.

    கனவில் நின்ற திருமுகம் கன்னியிவள் பொன்முகம்

    http://www.youtube.com/watch?x-yt-ts...yer_detailpage

  15. Likes kalnayak liked this post
  16. #2658
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தொழில் பாட்டுக்கள் 9
    ******************

    அது ஒரு கனாக்காலம் என்று ஆரம்பிக்கலாமா.. அல்லது
    அது ஒரு கற்பனைகள் பூத்துக் குலுங்கித் திரிந்த காலம் எனலாமா

    அல்லது அது ஒரு அழகிய எழிலெலாம் கோர்த்த வெள்ளந்தி மனம் கொண்டிருந்த, இகவாழ்வு பற்றி அறியாத இளமைப் பருவம் எனலாமா..

    (யோவ் என்ன தான்யா சொல்ல வர்றே நீ..
    வெய்ட் வெய்ட்)

    யெஸ். இளமைப் பருவம்.. என்னுடையது.. 1990. தலைகீழ்ப் ப மீசை, கண்களில் மின்னல், காதுகளுக்குத் துணையாக விருதாவுடன் மின்னிய கிருதாக்கள், விட்டேத்தியாய் அலைபாயும் தலைமுடியை அடக்கி வாசித்திருந்த சமயம்..பின்ன ஆஃபீஸுக்குள்ள போய் வந்துக்கிட்டிருந்தேன்.

    ஒரு நாள் டெலிஃபோன் தபுவாய் ச் சிணுங்கிக் கூப்பிட்டது..

    எடுத்தால் “ நாளைக்குக் காலை கிளம்பறியாடா கண்ணா..கூட ஹரி வர்றானா”

    கேட்டது டாக்டர் கல்யாணி ஆண்ட்டி.. என் சகோதரியின் கணவரின் ரிலேஷன். இருந்தது அபுதாபி தாண்டி டெல்மா ஐலேண்ட் எனப்படும் இடத்தில்.. வேலை ஹாஸ்பிட்டல் இன்சார்ஜ்.. கைனி. (இப்போது அவர் உயிருடன் இல்லை)

    யெஸ் ஆண்ட்டி.. ஹரியும் வர்றான்..காலைல பஸ்ல அபுதாபி வந்துடுவோம்..பின் அங்கருந்து ஜபல்தானாக்கு இன்னொரு பஸ்..அப்புறம் கடல்கரை தானே..போட் தானே..

    ஆமாம்” என்றார் டாக்டர்.. “ நீ வர்றச்சே ஃபெர்ரி போயிருக்கும். ஸோ கரைல்ல ஒரு மோட்டார் போட் சின்னது சொல்லியிருக்கேன்.. ரெண்டு லோக்கல் ஆள் இருப்பாங்க..என் பேரைச் சொல்லு. நானும் அவங்களோட பேசிடறேன்..

    சரி என்று ஃபோனை வைத்து ஹரியைக் காலை வரச் சொல்லிவிட்டு உறங்கினேன்..

    மறு நாள் காலை கத்தரிக்காய்க்கு கைகால் முளைத்துக் கண்ணாடியும் போட்டாற்போல் இருந்த ஹரி துள்ளிக் குதித்து வர அவனை அள்ளி பஸ்ஸிலேற்றி துபாய் டு அபுதாபி இரண்டரை மணி கழித்து அபுதாபி ட்டு ஜபல்தானா இரண்டுமணி நேரம் ட்ராவல் செய்து அந்தப்பக்கம் உள்ள கடற்கரையை அடைய மதியம் மூன்று மணி ஆகியிருந்தது. (நடு நடுவில் பஸ் மாற காத்திருக்க வேண்டியிருந்தது)

    போனால் ஒரு சின்ன இயந்திரப் படகு..முழு வெள்ளை ஆடை அணிந்து தலையிலும் முக்காடும் அணிந்த இரண்டு அரபு நபர்கள்..

    ஹாய்..

    ஹாய்.. நீங்கள் டாக்டர் சொன்ன..

    அவர்களே தான்.. போகலாமா..

    இரண்டு அரபு நபர்களில் ஒருவன் ஒல்லி கருப்பு இன்னொருவன் செவேலென இருந்தான் சற்றே குண்டு.. டபக்கென எங்களை ஏறச் சொல்ல, மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்த அலைகளினால் சற்றே மெலிதாக டான்ஸ் ப்ராக்டிஸ் செய்துகொண்டிருந்த படகில் கால் வைக்க அது வெட்கப் பட்டு மறுபடியும் ஆட ஹரி பொத்தென உள் விழுந்தான். பின் நான் ஏறி அமர..ட்ர்ருர்… எனக் கிளம்பி கடலில் படகு தாவினால்..


    ஆஹா.. மேலே வெளிர் நீல வானம்.. சிலச் சில வெண்ணிற மேகங்கள் பலப் பல வடிவில்.. கீழே யாரோ கோபித்துக் கொண்டு வெள்ளிக்காசுகளை நீலப் படுக்கை விரிப்பில் எறிந்தாற்போல் மின்னுகின்ற கடல்..

    கிடுக் கிடுக்கென இருபது நிமிடத்தில் படாரெனக் கடல் நடுவில் வந்துவிட சுற்றிலும் எங்கு பார்த்தாலும் நீல ம் நீலம் நீலம்…

    எவ்ளோ நல்லா இருக்கு – என்றான் ஹரி..

    ம்ம் என்றேன் நான்..என் மனக்கடலில் சாண்டில்யனின் ராஜதிலகக் கதா நாயகி மைவிழிச் செல்வி (எப்படிச் சுருக்கிக்கூப்பிடலாம் மையூ..ம்ஹூம் செல்லூ!) வாளை மீன் குட்டியாய்க் கடலில் நீந்திக் கொண்டிருக்க அருகில் ராஜசிம்மனாய் மாறிய நான் அவளுக்கு இணையாய் நீந்த இடையில் அவள் இடையில் கை பட அவளோ மென் குரலில் கடலுக்குள்ளேயே சிவந்த உதடுகளை அசைத்து “ம்க்கும் இப்படி எல்லாம் செய்தால் எப்படி நீந்துவது ட்ர் ரி க் க்ர்ர்ர்” என ஏன் இவள் குரல் இப்படி இருக்கிறது என திடுக்கென முழித்தால்.. படகு நின்றிருந்தது. நடுக்கடலில்..

    “என்ன ஆச்சு”

    ஒல்லி அரபி நோப்ராப்ளம் என மென்சிரிக்க குண்டு அரபி மோட்டாரைக் கொஞ்சம் செக் செய்து கொண்டிருக்க ஹரி கவலையுடன் “ கண்ணா என்னடா இது”

    “அவன் தான் நோ ப்ராப்ளம்னு சொல்றானே”

    “எனக்கென்னவோ பயம்மா இருக்குடா..அதோ பார்” நடுக்கடலைக் காட்டினான்.”அங்கிட்டிருந்து என்னோட தாத்தா கூப்புடறமாதிரி இருக்கு”

    “ஷ் ஷ்..கவலைப் படாதே” எனச் சொன்னாலும் என்னையும் கவலை பற்றத் தான் செய்தது..சற்றே ஆடிய படகில் ஒல்லியும் ஹெல்ப்புக்கு ச்சென்று மோட்டாரின் கவரைக் கழற்றி உடம்பு தெரிந்து செக்ஸியாக நின்றிருந்த இயந்திர பாகங்களை என்னவோ ஆராய்ந்துகொண்டிருந்தான்..

    ஹரி விடாமல், “கண்ணா.. நாம ரெண்டு பேரும் ஒண்ணா கல்யாணம் பண்றதா இருந்தோமே” எனப் புலம்ப “அப்படில்லாம் ஐடியா வச்சிருந்தீனா நானே இப்படிக் குதிச்சுடுவேன்” என நான் சொல்ல “இல்லடா நீ தனியா நான் தனியாடா “ என எக்ஸ்ப்ளனேஷன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ட்ர்ரு ட்ரு.. மோட்டார் கிளம்பி விட்டது..

    துள்ளிக் குதித்து டுவேர்ட்ஸ் டெல்மா ஐலாண்ட்..ஆனால் எனக்கோ மனதில் தினம் தோறும் கடலாடுபவர்கள் நினைவில் வந்தார்கள்..மீனவர்கள்..

    பின் அரைமணி நேரத்தில் டெல்மா ஐலண்ட் போய் அங்கிரு நாட்கள் கல்யாணி ஆண்ட்டியுடன் தங்கி அந்தக் குட்டி த் தீவைச் சுற்றிப்பார்த்து பின் துபாய் வந்தது எல்லாம் கனவாய்த் தான் இருக்கிறது..

    இருந்தாலும் இந்தக் கடல் – இன்று வரைத்தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்னை..

    கடல் எப்போதும் ஆச்சரியம் தான்..

    **

    ஆழம் பலகொண்டு ஆட்டுவிக்கும் நெஞ்சத்தில்
    கோலமிட்டு நன்றாய் கொலுவிருக்கும் - வேழத்தைப்
    போல வலுவும் பொலிவுகளும் கொண்டமங்கை
    நீலக் கடலுக்கு நேர்

    சுமையெதுவும் எண்ணாமல் சூதானமாய் நின்றே
    அமைதியாய் உள்ளிருக்கும் ஆற்றல் – இமைப்பொழுதில்
    சூறையென ஆடியே தூற்றியே நீர்தூவும்
    பிறைநெற்றிப் பெண்ணாம் கடல்


    முத்த மிடுதற்போல் மீன்களது நீந்தியங்கு
    சித்தமது சொன்னாற்போல் செல்வதுவும் – நித்தமும்
    எண்ணிலா ஜீவன்கள் ஏற்றமாய் வாழுமிடம்
    கண்படுங் காதற் கடல்

    அலைபோல எண்ணங்கள் ஆர்ப்பரிக்கும் என்பார்
    கலையாக ஆடுங் கடலால் – வலைவீசும்
    ஆடவர் மீன்பிடிக்கும் அல்லலெலாம் கண்டாலோ
    வாடி மனமிளகு வார்..

    **

    கடலைப் பற்றிய பலபடங்கள் வந்திருக்கின்றன..இருந்தாலும் மனதுள் பதிந்த ஒரு படம் அது.. அதைப் பற்றி..அடுத்த போஸ்டில்

    **
    Last edited by chinnakkannan; 26th January 2015 at 10:43 PM.

  17. Likes kalnayak liked this post
  18. #2659
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தொழில் பாட்டுக்கள் - 9 (தொடர்ச்சி) பகுதி இரண்டு..

    **

    நீளமாய், நீலமாய் வானில் காய்ந்துகொண்டிருந்தான் கதிரவன்..

    கீழே அவனைப் பிரதிபலித்தவண்ணம் சிற்சில எண்ணச் சலனங்களைக் கொண்டவாறு அலைபாய்ந்திருந்தது..கடல்..

    சற்றுத் தள்ளிக் கரையோரம் போடப்பட்டிருந்தது ஒரு தோணி..கொஞ்சம் நீளவாக்காக இருந்தாலும் சற்றே உயரமாக இருந்தபடியால் தோணியின் அந்தப்புறத்தில் கொஞ்சம் நிழல்..அந்த நிழலில் சாய்ந்து கொண்டு பரீக்குட்டி..அவனைப் பார்த்தபடி நின்றிருக்கும் கறுத்தம்மா..

    கறுத்தம்மா தன் வெண்பற்கள் காட்டிச் சிரித்தாள்..”என்ன சின்ன மொதலாளி..என் அப்பாக்கு தோணிவாங்கக் காசு வேண்டுமென்றால் எனக்காக வேண்டுமென்றால் தாரேங்கறீங்க.. எம்மேல அம்புட்டு நம்பிக்கையா”

    சிரித்த கறுத்தம்மாவையே பார்த்தான் பரீக்குட்டி..இவள் .கறுத்தம்மா..மரக்காத்தி..சிறுவயது முதற்கொண்டே இந்தக் கடற்கரையோரம் எனக்குக் கிடைத்த சினேகிதி.. நாங்கள் பேசாச பேச்சா..விளையாடாத விளையாட்டா..ஆனால் இப்போது..

    மீண்டும் பார்க்க கறுத்தம்மாவின் உடை.. பெயர் தான் கறுத்தம்மா..ஆள் நல்ல சிவப்பு.. அவள் கழுத்திலிருந்து இடைவரை சரேலென இறங்கி அடங்கியவண்ணம் இருந்த செவேல் ரவிக்கை. பின் மாலை மங்கி இரவு கூடிவரும் பொழுதில் மெல்லிய இருள் படரும் மலர்களைப் போல சற்றே மங்கிய நிறத்தில் சின்னப் பூக்கள் போட்ட சாயம்போன பாவாடை.. நன்றாகத் தான் வளர்ந்திருக்கிறாள்..உடலெங்கும் ததும்பி நிற்கும் அழகு..அழகுடன் துள்ளும் இளமை..அட இவள் சிரிப்பு என்னை எங்கோ தூக்கிச்செல்கிறதே..

    சிரித்துக்கொண்டிருந்த கருத்தம்மா நிறுத்தினாள்.கொஞ்சம் வெட்கம், பயம் வந்தது சின்ன முதலாளி பார்த்த பார்வையினால்..உடலில் ஒருவித கூச்சம்..கூடவே ஒரு சிலிர்ப்பு.. என்னாயிற்று இவனுக்கு என நினைத்துப் பார்வையைத் திருப்ப பயம்..ஏனெனில் தொலைவில் இருந்த மரமொன்றின் பின்னால் பார்த்திருந்த பஞ்சமி.. அவள் தங்கை..

    கறுத்தம்மா..

    பரிக்குட்டி கூப்பிட்டான்.. ‘உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா”

    கறுத்தம்மாவினால் கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை.. நான் யார் கறுத்தம்மா.. ஒரு மரக்காத்தி..சின்னமொதலாளி வேறு இனம்.. ஆனாலென்ன.. ஏனிப்படி ஒரு கேள்வி.. பதில் சொல்ல நேரமில்லை..பஞ்சமி பார்த்து விட்டாள்..இப்போது கிளம்பியாக வேண்டும்..

    வர்றேன் மொதலாளி..
    சட்டெனக் கிளம்பிச் சிட்டென ஓடினாள் தொலைவில் இருந்த தனது குடிசை நோக்கி..

    அதற்குள் வெடி பத்தவைக்கப் பட்டு விட்டது பஞ்சமியால்..

    வீட்டு வாசலிலேயே சக்கி. அவளுடைய அம்மா...”என்ன இவளே..எங்க போன”

    அழகின் பொக்கிஷமாய் குறுகுறு கண்களில் கனவுடன் ஓடி வரும் மகள்..அவள் எண்ணம் சக்கிக்குச் சட்டெனவும் புரிந்தது..

    “இங்க தான் கொஞ்சம் காலாற நடந்தேம்மா.. நீ ஏன் இப்படிக் கலவரப் படறே”

    “கொஞ்சம் உள்ளவா” குடிசையுள் அழைத்துச் சென்று சொன்னாள் சக்கி. “சின்ன மொதலாளி கூடவா இருந்தே”

    “ஆமாம்..ச்சும்மா பேசிக்கிட்டிருந்தேம்மா”

    “சிரிச்சுப் பேசினயாம்”

    “யார் சொன்னதும்மா” பஞ்சமியாய்த் தான் இருக்கும்..மனசுள் நற நற.

    ‘இந்த பார். நீ வளந்துட்ட . பெரிய பெண்ணாய்ட்ட..ஒனக்குக் காலாகாலத்துல கல்யாணம் பண்ணிவைக்கணும்னு எனக்கு க் கவலை அடிச்சுக்குது..ஏன் தெரியுமா கறுத்தம்மா.. நீ ஒரு மரக்காத்தி..மரக்காத்திங்கறவ நெருப்பாட்டம் இருக்கணும்.. அப்படி இல்லாம கொஞ்சம் மனச அலைபாய விட்டுட்டு இருந்தேன்னாக்க உன்னைக் கட்டிக்கிட்டவன கடல் காவு வாங்கிடும்.. நியாபவம் வெச்சுக்கோ..”

    “அம்மா..ஏம்மா இப்படில்லாம் நெனக்கறே”

    “எனக்கு ஒன்னோட நெனப்பு தெரியும்டி..அதான் கண்ணு ஒடம்புல்லாம் மலந்து மலர்ந்து பேசுதே.. அந்த சின்ன மொதலாளி நினைப்புல்லாம் வேண்டாம்..
    ‘அம்மா”

    “சும்மா பேசாத..இன்னிக்கு அந்த ஆளு வரட்டும் அவன்கிட்ட ஒன்னோட கல்யாணத்துக்கு என்ன பண்ணப் போறேன்னு கேக்கப்போறேன்”

    சக்கி அந்த ஆள் என்று சொன்னது செம்பன் குஞ்சுவை..அவள் கணவன்..மரக்காத்தன்..இப்போதைக்கு கும்பலோடு கும்பலாய் தோணியிலேறி மீன்பிடிப்பது தான் தொழில்..ஆனால் அவனுக்கும் ஒரு நெடுங்காலக் கனவு..இந்தத் துறையில் சொந்தமாய்த்தோணி வாங்க வேண்டும் என்பது..

    அந்த மீன்பிடிக்கும் திருக்குன்றங் கரையில் பலகாலம் கடலாடுபவன் தான் அவன்.. மரக்காத்தன் கையில் துட்டு சேராது என்பது காலம் காலமாகப் பேசப்படும் வழக்கு.. அதை முறியடிக்க வேண்டும். சொந்தத்தோணி எக்கச் சக்க துட்டு..

    அன்றிரவு செம்பன் குஞ்சு வர, ஒருபுறம் சக்கி கறுத்தம்மா பற்றி பேச்செடுக்க நினைக்கையிலேயே அவன்சொன்னான்..” ஒரு பழைய தோணி விலைக்கு வருது வாங்கலாமுன்னு இருக்கேன்”
    சக்கிக்குக் கறுத்தம்மா பற்றிய கவலை பின்னுக்குத் தள்ளப் பட்டுவிட “அவ்ளோ பணம் எப்படி சம்பாரிக்கப் போறீங்க”

    “சக்கி. எனக்கு வாரதெல்லாம் உன்கிட்ட தான் கொடுக்கறேன்..”

    “அது சரி..ரெண்டு பொட்டப் புள்ள..காலாகாலத்துல கட்டிக் கொடுக்க வேண்டாமா. அப்படி ஒண்ணும் நா நிறையசேத்துடலை. நீங்களும் நிறைய தந்துடலை”

    “கவலைப் படாதே சின்ன முதலாளி தர்றேன்னுசொல்லியிருக்காங்க”

    “யாரு கிட்டங்கி பரீக்குட்டி மொதலாளியா” சக்கியின் நெஞ்சுக்குள் பகீர்.. “எப்ப்டித்தருவாகளாம்..”

    “பிடிக்கிற மீன்லாம் தர்றேன்னு சொல்லியிருக்கேன்.. நாளைக்கே பக்கத்து கிராமத்துல ஒருதோணி விலைக்கு வருது வாங்கப் போறேன்”

    உரையாடலைக் குடிசையில் இன்னொரு தட்டியறையில் கேட்டுக் கொண்டிருந்த கறுத்தம்மாவிற்குப் புரிந்தது. பரீக்குட்டியிடமும் அவ்வ்ளவு துட்டு இல்லை..இருக்கிற – தன் கிட்டங்கி வியாபாரத்தின் முதலுக்காக வைத்திருக்கும் பணத்தை – தன்னை நம்பித் தருகிறான் என்பது..ஆனால் அப்பா திருப்பித் தருவாரா என்பது சந்தேகம் தான்.

    தொடரும்..

  19. #2660
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    தொழில் பாட்டுக்கள் - 9 பகுதி மூன்று..

    செம்பன் குஞ்சு வெளியில் போனதும் கேட்டும் விட்டாள். “அம்மா..மொதலாளிக்கு தந்துடுவாரா அப்பா”

    சக்கியின் மனதிலும் சந்தேகம் தான்..இருப்பினும்.” நல்லாத்தருவாக சும்மா கவலைப் படாதே”

    இரவில் பாயில் படுத்திருக்கும் போது கரையோரம் பரீக்குட்டி பாடும் பாட்டு அவளுக்குக் கேட்டது..விச்ராந்தியாய் வெள்ளந்தியாய் பாடுகின்ற அந்தப் பாட்டு அந்தக் குரல் அவள் மேனியை சிலிர்க்க வைத்தது..

    சொன்னாற்போல மறு நாள் தோணி பார்க்கப் போய்விட்டு கொஞ்சம் கவலையுடன் வந்தான் செம்பன் குஞ்சு..
    “ஏன் கவலை”

    ‘சக்கி நீ சேர்த்துருக்கற துட்டும் பரீக்குட்டி கொடுத்திருக்கற முன்னூறு ரூபாயும் பத்தாது.. இதர சாமானுக்கு முப்பதாவது வேணும்”

    “என்னபண்ணப் போறீங்க..”

    “பரீக்குட்டியையே கேக்கப் போறேன்” போய் கேட்டு வந்தவன்சந்தோஷமாய் இருந்தான்.. முதலாளி தந்துட்டாரு.. நாளைக்கே தோணி வாங்கி மறு நாள் கடல்ல இறக்கறேன்.

    அதே போல் தோணியைக் கடலாடி – செம்பன் குஞ்சு சில ஆட்களையையும் வைத்துக் கொண்டு – திரும்பும்போது பார்த்தால் தோணி முழுக்க மீன்கள்..முகம் முழுக்க சந்தோஷம்..

    கரையில் வரும்போதே சில்லறைவணிகத்துக்காக மீன்கள் வேண்டி பெண்கள் சூழ்ந்து கொள்ள, கூடவே பரிக்குட்டியும்… ஆனால் செம்பன் குஞ்சு அவன் முகத்தைப் பார்க்கவே இல்லை.. வந்த மீன்களையெல்லாம் நல்ல விலைக்கு மற்றவர்களிடம் விற்று கிடைத்த காசை சக்கியிடம் கொடுக்க சக்கி, “மொதலாளிக்கு மீன் கொடுக்கலையா”

    “என்ன அவசரம்” அலட்சியமான பதில்.. கொஞ்சம் சேர்த்துக்கிட்டு கொடுக்கலாம்.. இப்ப கொடுத்தா காசு வாராது.. கடன்ல குறைச்சுக்கிடுவார்…

    கறுத்தம்மாவுக்கு அப்போதே புரிந்தது.. தன் தகப்பன் பரீக்குட்டிக்குத்தரப் போவதில்லை..

    அதே போல் சில மாதமும் போக நல்ல வியாபாரம் செம்பன் குஞ்சுவும் செய்ய பரீக்குட்டி முதல்போடக் காசில்லாமல் அவனது கிட்டங்கி வேலை நின்று போனது..ஆனாலும் செம்பன் குஞ்சுவிடம் கொடுத்த காசை க் கேட்கவில்லை அவன்.

    கறுத்தம்மா உசுப்பேற்ற சக்கியும் கவலையாய் சிலசமயம் செம்பன்குஞ்சுவிடம் கேட்டாள்..கிடைத்த பதில் “சும்மா யிரு பொண்ணுக்குக் கல்யாணத்துக்குப் பார்க்கலாம்”

    கறுத்தம்மாவிற்குத்தான் பரீக்குட்டியின் நினைப்பு பொங்கும்..கூடவே சக்கி விடுகிற முறைப்பும் புரியும்..அவனுடன் பேசுவதும் இல்லை.பார்த்தாலும் விலகி விலகிச் சென்றாள்

    ஒரு நாள் செம்பன் குஞ்சு சந்தோஷமாய் “ கறுத்தம்மாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்..இதுபழனி.. என்கிட்ட புதுசா சேர்ந்தவன் மத்த குன்றத்து ஆள்..”

    “உறவுகள்ளாம்” சக்கி கேட்க “அதெல்லாம் இவனுக்குக் கிடையாது.. நல்ல மரக்காத்தன்..சும்மா சொய்ங்க் சொய்ங்க்னு மீனு அள்ளுறான்.. நல்லா துடுப்பும் போட்றான். கறுத்தம்மாவை கவனிச்சுக்குவான்”

    பழனி நல்ல கறுகறுவென்று இருந்தான்..சின்னவயதிலேயே தாய் தந்தை இல்லாமல் தானாக்வே தோணியில் சேர்ந்து தொழில் காரன் ஆனவன் எது பற்றியும் கவலை இல்லாதவன்..

    ஆனால் சக்கிக்குக் கொஞ்சம் குழப்பம்..உறவுசனம் இல்லாதவனுக்குப் பொண் கொடுப்பதா.. கறுத்தம்மா ஒன்றும் சொல்லவில்லை. பரவாயில்லை அம்மா..சின்னமொதலாளி கடன் மட்டும் கொடுத்துவிடச் சொல்லு அப்பாவை..

    நல்ல நாளில் மீனவர்தலைவரான துறை அரையரைக் கூப்பிட்டு கல்யாணம் செய்கையில் தான் அது நடந்தது..

    மீனவக் குடும்பங்களில் வேறு துறை க்காரர்கள் மணம் செய்யவேண்டுமென்றால் துரை அரையருக்கு கட்டணம் செலுத்த வேண்டும்..செலுத்தாமலும் இருக்கலாம்..ஆனால் துரை அரையர் இஷ்டம் அது..

    கல்யாணத்திற்கு பழனி தன் நீர்க்குன்றத்துறையிலிருந்து பத்து ஆண்பிள்ளைகளை அழைத்து வந்திருந்தான் அதுவே கறுத்தம்மாவின் துறையில் இருந்தவர்களுக்கு அதிசயம்…என்ன ஒரு பெண்பிள்ளை கூட இல்லை..

    துறை அரையர் மாப்பிள்ளை 75 ரூபாய்கொடுக்கணும் கட்டணமாய் என்றதும் வெடித்தது பூகம்பம்.. “அதெப்படிக் கேக்கலாம் “ என பழனியுடன் வந்த ஒருவன் கேட்க “அது அப்படித் தான்” எனத் துறை அரையர் சொல்ல வந்தவன் “ எங்களுக்கு விஷயமேதும் தெரியாதுன்னா சொல்றீங்க..ஒங்க துறைக்காரப் பொண்ணு ஒண்ணும் அவ்ளோ சுத்தமிலலின்னு எல்லாரும் பேசிக்கறாங்க.மத்த சாதிக்காரனோட அது சிரிச்ச சிரிப்பு ஊரெல்லாம் சிரிக்குதே..இல்லைன்னா ஏன் சாதிசனம் இல்லாத எங்க ஊர் ஆளை மாப்பிள்ளையாக் கூட்டிருக்கீங்க”

    (தொடரும்)

  20. Likes kalnayak liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •