Page 242 of 397 FirstFirst ... 142192232240241242243244252292342 ... LastLast
Results 2,411 to 2,420 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2411
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    IR at his best - superb song from Nenjathai Kiladhe



  2. Likes kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2412
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Nice Melody from Padu Nilave - Malaiyoram Vesum Katru


  5. Likes kalnayak liked this post
  6. #2413
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    One of the best movie of Prabhu Manasukkul Mathappu - Fine Melody song


  7. Likes kalnayak liked this post
  8. #2414
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Super Hit song of Ponthotta Kavalkaran



  9. Likes kalnayak liked this post
  10. #2415
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 26)



    முள்ளும் மலரும் பாடல்கள்...





    'முள்ளும் மலரும்' படத்தின் பாடல்கள் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் டைட்டில் பாடலான இந்தப் பாடலை பெரும்பாலானோர் மறந்திருக்கக் கூடும். காளி தன் சிறுவயது தங்கையுடன் ஏக்கம் காட்டும் காட்சிகள், கழைக் கூத்தாடி ஒருவன் தன் தங்கையின் உயிருடன் விளையாடும் போது தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அதைப் பார்த்து பதறியபடி இருக்கும் காளி சிறுவன், பணக்காரக் குழந்தைகள் குடும்பத்துடன் காரில் பயணித்து காளியின் தங்கைக்கு பிஸ்கட்டைக் காட்டியும் காட்டாமலும் கொடுக்காமல் விளையாட்டுத்தனம் செய்ய, அதைப் பார்த்து கொதிப்படையும் காளி. அவர்கள் நகர்ந்தவுடன் கல்லெடுத்து காரின் விளக்குகளை உடைக்கும் கோபம் என்று பின்னணியில் காட்சிகள் ஒவ்வொன்றாக நகர இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் பாடல். அப்படியே டைட்டிலும் ஆர்ப்பாட்டமில்லாமல் 'ஹேய் ஹேய் ஹேய்' என்று இரைச்சல் இல்லாமல், கிராபிக்ஸ் வித்தைகள் காட்டாமல், சூப்பர் ஸ்டார் என்று மின்னி மின்னி மறையாமல் ரஜினிகாந்த் என்று வெறுமனே அமைதியாக ஆரம்பமாகும். எது சூப்பர் என்று நீங்களே முடிவுக்கு வாருங்கள்.

    நல்ல அழகான பாடல்தான். இன்னும் ஆழப்படுத்தி இருந்திருந்தால் ஹிட் அடித்திருக்கும். இளையராஜா குரல் பெரிய மைனஸ் பாய்ன்ட். சில இடங்களில் என்ன உச்சரிக்கிறார் என்றே புரியவில்லை. பூ, வாசம், வேலி, காவல் என்ற வழக்கமான பாசப் புலம்பல்களிலிருந்து விடுபட்டு வேறு ஏதாவது பாடலாசிரியர் (கங்கை அமரனோ) யோசித்து இருந்திருக்கலாம் இந்த வித்தியாச படத்திற்கு. வரிகள் நச்சென்று மனதில் பதியவில்லை. ஆனால் படமாக்கிய முறை கொஞ்சம் திருப்தி தருகிறது.

    இருந்தாலும் தப்பில்லை. உணர்வே இல்லாத, ஏற்ற இறக்கங்களே இல்லாத, கட்டையான ராஜா குரல் அல்லாமல் ஜேசுதாஸ் அல்லது பாலாவிற்கு தந்திருக்கலாம். ஜெயச்சந்திரன் கூட ஓகே.

    மானினமே முல்லப் பூ வண்ணமே
    மானினமே முல்லப் பூ வண்ணமே
    மயிலே குயிலினமே
    மயங்குது என் மனமே
    ஏ அன்னமே
    வண்ணப் பூ வனமே
    வழித்துணை கொடுக்கணுமே

    (மானினமே)


    ஆச விதை போட்டு வச்சே
    நீரும் இறைச்சேன்
    அல்லும் பகல் ஆசப்பட்டு
    காத்துக் கிடந்தேன்
    பூப்பதங்கு ஒண்ணே ஒண்ணு
    புத்தம் புது ரோசாப் பூவு
    ஏ சொர்ணமே
    இது என் வர்ணமே

    (மானினமே)


    பாசத்தில காவலிட்ட வேலி இருக்கு
    பாத்தியிலே பன்னீர ஊத்தி வளர்த்தேன்
    மொட்டு விட்டதம்மா அங்க
    முல்லை மனம்தானே இங்க
    என் உறவு இது என் கனவு

    (மானினமே)


    வாசமுள்ள பூ இருக்கு ஏழை கையில
    ஆசைப்பட்டு பூசிக்குது மஞ்ச வெயிலே
    பந்தத்துக்கு வேலி இல்ல
    பாசத்துக்கு நாளும் இல்ல
    பூ முல்லைப் பூ
    மனசோ வெள்ளைப் பூ

    (மானினமே)




    Last edited by vasudevan31355; 27th December 2014 at 02:22 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks uvausan thanked for this post
  12. #2416
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் ------


    இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்ப்பேன் - தர்மம் செய்ய ஒன்று - செய்த தருமத்தை மறக்க ஒன்று ------


    ஒரு பட்டி மன்றத்தில் கேட்டது :

    கார்மேகமும் , மேலே போகின்ற ஒரு தொழிற்சாலையின் கருப்பு புகையும் ஒரே நிறத்தில் தான் இருக்கும் - மேலே போவதில் அர்த்தம் இல்லை - கீழே வேருக்கு வரணும் - மழையினால் மட்டுமே கீழே வர முடியும் நல்லவன் திரும்பி வருவான் ..கெட்ட பழக்கங்கள் உள்ளவர்கள் எல்லோரும் கெட்டவர்களா , எனக்கு தெரியாது .; நல்ல பழக்கங்கள் உள்ளவர்கள் எல்லோரும் நல்லவர்களா , எனக்கு தெரியாது ஆனால் சிந்தனைகள் செயலாக மாறும் , செயல்கள் பழக்கங்களாக மாறும் ; பழக்கங்களே ஒரு கலாச்சாரமாக மாறும் ; ஒரு கலாசாரம் தான் ஒரு அடுத்த தலைமுறையை காப்பாத்தும் என்பது மட்டும் தெரியும் -------

    ஒரு மாணவன் என்னிடம் கேட்டான் - " ஏன் மேடம் எழுந்திருச்சு நின்றால் தான் மரியாதையா ? - நான் சொன்னேன் " எழுந்திருச்சு நின்றால் தான் மரியாதையா என்று எனக்கு தெரியாது -- ஆனால் மரியாதை நிற்கும் என்று மட்டும் தெரியும் !" நல்லவனாக ஒருவன் இருக்க வேண்டும் என்பதற்கு யாருக்கும் ஒரு probation period என்பதெல்லாம் கிடையாது --

    ஒரு மனிதனை இன்னொரு மனிதன் பார்க்கும் போது அவன் உள்ளத்தில் நம்பிக்கை பிறக்க வேண்டும் - Action Start - replay என்று நல்லது செய்வதற்கு சொல்ல முடியாது --- " நாம் fair weather good people ஆக இருப்பதில் அர்த்தம் இல்லை -தட்ப வெப்ப சூழ்நிலை நன்றாக இருக்கும் போது , கண்ணுக்கு முன்னால் அபாயம் இல்லாமல் இருக்கும் போது எல்லாராலும் நல்லவனாக இருக்க முடியும் - நல்லவனை தூக்கி கடுமையான சூழ்நிலையில் போடுங்கள் - வெளியில் நல்லவனாகவே வருகிறானா ? - அப்படி வந்தால் அவன் தான் மனிதன் ---------

    கீழ் வரும் ஒரு சம்பவம் நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை உறுதி படுத்தும் படியாக இருக்கின்றது - இப்படி முகம் தெரியாத எவ்வளவோ மனிதர்கள் , அவர்களை சந்திக்கும் வாய்ப்பு நமக்கு கிட்டாமலேயே போகலாம் - அவர்கள் எங்கோ இருப்பதினால் தான் இன்னும் பலர் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிண்டார்கள் , மழை இன்னும் பெய்து கொண்டிருக்கின்றது !!


    காணிக்கை

    தொழிலதிபர் சங்கரகிருஷ்ணன் என்றால் விருதுநகர் வட்டாரத்தில் மிகவும் பிரசித்தம். விருதுநகர் என்ன, தமிழ்நாடு முழுவதுமே சமீபகாலமாக அவர் பிரபலமடைந்து வருகிறாரே! வாரப் பத்திரிகைகளில் கவர் ஸ்டோரி, தொலைக்காட்சிகளில் நேரடிப் பேட்டி என, பொதுஜனங்களுக்கு அவரை அறிமுகம் செய்துவைப்பதில் போட்டாபோட்டிதான். சமையல் எண்ணெய், பருப்புவகைகள், உயர் ரக மளிகைச் சாமான்கள் என அவரது நிறுவனத் தயாரிப்புகள் பலரது சமையலறைகளுக்குள் நுழைந்து, அவரது புகழையும் மணம் கமழச் செய்கின்றன.

    சங்கரகிருஷ்ணன் பரம்பரைப் பணக்காரர் அல்ல. அதற்காக தடாலடியாகப் பணம் சேர்த்த, தாதாத்தனங்கள் கொண்ட திடீர் பணக்காரரும் அல்ல. செங்கற்களை அடுக்கி, கட்டடம் எழுப்புவதுபோல் படிப்படியாக உழைப்பினாலும், திறமையினாலும் முன்னுக்கு வந்தவர். அவருக்குத் தனது உழைப்பு, திறமை இவற்றைவிட வேறு ஒரு விஷயத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. அது, திருப்பதி பாலாஜி.

    திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நேரும் என்று பெருமாள் பக்தர்கள் கூறுவது, சங்கரகிருஷ்ணன் வாழ்க்கையில் நூற்றுக்குநூறு நிஜம். அவரது மறைந்த நண்பன் கோவிந்தசாமிதான் 15 வருடங்களுக்கு முன்பு முதன்முறையாக அவரைத் திருப்பதிக்கு அழைத்துச் சென்றவன். கூட்டிச் சென்ற கோவிந்தசாமிக்கு கோவிந்தா சாமி கொட்டிக் கொடுத்தாரோ இல்லையோ, கூடச் சென்ற சங்கரகிருஷ்ணனுக்கு திருப்திகரமான திருப்பங்களைக் கொடுத்தார். அதற்குப் பிரதி நடவடிக்கையாக, அவர் ஆண்டுதோறும் ஒரு கணிசமான தொகையை திருப்பதி உண்டியலில் சேர்ப்பது வழக்கம்.

    இப்போதும் தனக்கு ஏற்றம் தரும் ஏழுமலையானைத் தரிசித்து அவருக்கு காணிக்கையைச் செலுத்துவதற்காக காரில் பயணமானார் சங்கரகிருஷ்ணன். டிரைவர் பல முறை சாரி கேட்டு, அவசர வேலையாக ஊருக்குச் சென்றுவிட்டதால், காரை அவரது நண்பனும் கம்பெனி ஆடிட்டருமான ராமபத்ரன் ஓட்டிவந்தார். ராமபத்ரன் கிண்டல் பேர்வழி. ஆரம்பகாலத்தில் திருப்பதிக்குக் கூட வரும்போது, ஏம்பா உன் ஸ்லீப்பிங் பார்ட்னருக்கு டிவிடெண்ட் கொடுக்கவா? என சங்கரகிருஷ்ணனிடம் கேலி செய்வார். இல்லையேல், என்னப்பா, உயர் அதிகாரிக்கு கமிஷன் கொடுக்கப் போலாமா? எனச் சீண்டுவார். இதற்கெல்லாம் சங்கரகிருஷ்ணன் அசைந்துகொடுப்பதில்லை. எனது வளமான வாழ்க்கைக்கு வெங்கடேசப் பெருமாள்தான் காரணம். யார் கேலி பேசினாலும் நான் ஏற்கெனவே அவர்கிட்ட பிரார்த்தனை செய்த மாதிரி வருஷாவருஷம் எனது காணிக்கையைக் கொடுத்துட்டேதான் இருப்பேன் என்று கூலாக பதிலளிப்பார்.

    சென்னை மாநகரைத் தாண்டி ஆந்திர எல்லையைத் தொட இருந்தபோது, கார் திடீரென மக்கர் செய்தது. புஸ் புஸ் என்று சப்தத்துடன் ஏதோ ஒரு கிராமப்பகுதியில் நின்றுவிட்டது. சங்கரகிருஷ்ணனின் டிரைவர், தான் இந்த முறை திருப்பதி வரவில்லை என்பதால், வழக்கத்தைவிட கூடுதல் கவனத்துடன் காரை சர்வீஸுக்கு விட்டு, பெட்ரோலை நிரப்பி, எல்லாவற்றையும் சரிபார்த்துதான் ஒப்படைத்தான். பிறகு எப்படி?

    பேச்சு சுவாரஸ்யத்தில் திருப்பதிக்குச் செல்லும் சரியான பாதையை விட்டு, வேறு எங்கோ கார் வந்திருப்பது அப்போதுதான் தெரிந்தது. பக்கத்தில் மெக்கானிக் ஷாப் ஏதும் இருக்குமா? சரியான நெடுஞ்சாலைக்கு எப்படிப் போவது? சங்கரகிருஷ்ணனுக்கு சென்டிமென்டாக, தான் முதன்முதலாக திருப்பதிக்குப்போன ஜூலை மாதம் 2-ம் தேதி பாலாஜியை தரிசித்தாக வேண்டும். இதுவரை வழியில் எந்த இடைஞ்சலும் வந்ததில்லை. சொகுசாகத்தான் வருவார். தரிசனத்துக்குப் பின் ஒவ்வோர் ஆண்டும் வளர்ச்சியும் பிரமாதமாக இருக்கும்.

    சே! இந்தமுறை இப்படி நடுவழியில் மாட்டிக் கொண்டோமே என சங்கரகிருஷ்ணனுக்கு அவரது இயல்பை மீறி ஆத்திரமும் ஏமாற்றமும் பொங்கி வந்தது. அந்த முட்டா டிரைவருக்கு லீவு கொடுக்காம, வாடான்னு சொல்லியிருக்கணும். அவன் கூட வந்திருந்தா வழியும் தப்பியிருக்காது. ஏதாவது சரிபண்ணி கூட்டிப்போயிருப்பான். இப்போ ஒரு மணி நேரமா சும்மா நிக்கறோமே என்று புலம்பினார்.

    கோபப்படாதே சங்கரகிருஷ்ணா, எல்லாம் உன் பெருமாள் விளையாட்டுதான் என்று அப்போதும் கிண்டலடித்தார் ராமபத்ரன். சரி, சரி, பக்கத்துல எங்காவது விசாரிப்போம் என்று கூறி சங்கரகிருஷ்ணனை அழைத்துக்கொண்டு அவர் சற்று நடந்துவந்தபோது பக்கவாட்டில் பழமையான, சற்று சிதிலமடைந்த கோவில் ஒன்று தென்பட்டது. வாப்பா, இந்த சாமிட்ட பிரார்த்தனை செஞ்சுட்டு, அந்த சாமியைப் பாக்கறதுக்கு உபாயம் தேடுவோம் என்றார் ராமபத்ரன். சங்கரகிருஷ்ணனால் தட்ட முடியவில்லை. ஏதாவது வழி கிடைக்குமே என்ற எண்ணத்தோடு, ஏதோ ஒன்று அந்தக் கோவில்பால் அவரை ஈர்த்தது.

    அருகே சென்றபோது சிதிலமடையத் தொடங்கியுள்ள அந்தக் கோவில் சிவன் கோவில் எனத் தெரிந்தது. வாசலிலேயே பட்டர், இவர்களுக்காகக் காத்திருந்தவர்போல் நின்றிருந்தார். வாங்கோ, வாங்கோ என வாய் நிறைய சிரிப்போடு வரவேற்றார். என்னமோ தெரியலை, வழக்கமா பத்து மணிக்கு நடை சாத்திருவேன். ஏன்னா பெரிசா ஒண்ணும் ஆள் வரமாட்டா. உங்களைப்போல பெரிய மனுசா இங்க வர்ரதே அபூர்வம். இன்னைக்கு எம்பையனோட காலேஜ் அட்மிஷன் விஷயமா பெரிய மனுஷா ஒருத்தரைப் பார்க்கணும். என் பையன் வர்ரதுக்காக காத்துண்டுருக்கும்போதுதான் உங்களைப் பார்க்க முடிஞ்சது. எல்லாம் ஈஸ்வர சங்கல்பம். வாங்கோ, உள்ளபோய் சுவாமியை தரிசிக்கலாம் என்றார் பட்டர்.

    நல்ல அருமையான கோவில்தான். ஆனால் அங்கங்கே புதர் மண்டிக் கிடந்தது. ஏதாவது சோழனோ, பல்லவனோ கட்டியிருக்கணும். அது சரிதான் என்பதைப்போல, சார்! இது ஆந்திராவை ஒட்டி தொண்டை மண்டலமா இருந்தாலும், இதைக் கட்டினவன் சோழ மன்னன். குலோத்துங்கச் சோழன்னு சொல்றா. ஆனா, கல்வெட்டு எதுவும் அகப்படலை என்றார் பட்டர்.

    புராணப்படி பார்த்தா, இது விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்தபோது இங்க லிங்கப் பிரதிஷ்டை செஞ்சு, ஈஸ்வரனை வழிபட்டதா சொல்றா. சுவாமி பேரு கூட கூர்மேஸ்வரர்தான். இதைப்போல சென்னைல கச்சாலீஸ்வரர் கோவிலும், சிங்கப் பெருமாள் கோவில் பக்கத்துல திருக்கச்சூர்ல கச்சபேஸ்வரர் கோவிலும் இருக்கு. கூர்மம், கச்சாலம், கச்சபம் எல்லாமே ஆமையோட சம்ஸ்கிருதப் பேரு. விஷ்ணு கூர்ம அவதாரத்துல சிவபெருமானை வழிபட்ட ஸ்தலம்கறதுனால இந்த இடத்துக்கு கூர்மேஸ்வரம்னு ஒரு பேரு இருக்கு என்று மேலும் தொடர்ந்தார் பட்டர்.

    அப்போது, சங்கரகிருஷ்ணனைப் பார்த்துச் சிரித்தார் ராமபத்ரன். பார்த்தியா நீ கும்படற பெருமாளே, சிவலிங்கத்தைக் கும்பிட்டாராம்னு கேலி செய்வதுபோல் இருந்தது அவரது சிரிப்பு. இதற்கும் பட்டரின் வார்த்தைகள் மூலமே பதில் வந்தது. எல்லா பகவானும் சமம்னு சொல்றதே தப்பு. ஏன்னா, பகவான் ஒருத்தர்தான். அவர்தான் நமக்காக பல ரூபங்கள்ல காட்சி தரார். அவா அவா கும்படற சாமி மேல நல்ல பக்தியும் நம்பிக்கையும் வேணும்கிறதுக்காக பெருமாள் சிவனைக் கும்பிட்டார்னும், சிவன் சில இடங்கள்ல பெருமாளைக் கும்பிட்டார்னும் புராணங்கள் சொல்றது. பேதங்களெல்லாம் மனுஷா மனசுலதான். பகவான் ஒருத்தரேதான். அதோட நாம செய்யற நல்ல செயல்களுக்கும், நம்பிக்கைக்கும் ஏத்தாப்பலதான், நம்ம உழைப்புக்கும் தகுந்தபடி பகவான் அருளறார் என்றார் பட்டர். சங்கரகிருஷ்ணனனுக்கு மட்டுமின்றி ராமபத்ரன் மனதிலும் பட்டரைப் பற்றி உயர்ந்த எண்ணம் எழுந்தது.

    தரிசனம் முடிந்ததும் ஆரத்தித் தட்டில் 1000 ரூபாய் போட்டார் சங்கரகிருஷ்ணன். ஆரத்தி ஜோதியை விட அதிகமாக, பட்டரின் கண்கள் ஜொலித்தன. கோவில் பிரகாரத்தைச் சுற்றிவிட்டு மீண்டும் ஈஸ்வரன் சன்னதி நோக்கி சங்கரகிருஷ்ணனும், ராமபத்ரனும் வந்தனர். அப்போது, பட்டருடன் யாரோ பேசும் சப்தம் கேட்டது.

    அப்பா, இந்த முறையாவது நாம பார்க்கப்போற மாமா, கடன் கொடுத்துடுவாரா? இதுவரை நாலு முறை போயாச்சு! என்று பட்டரிடம், அருகில் நின்றுகொண்டிருந்த பையன் கேட்டதன் மூலம் அவன், பட்டரின் பையன் என்பது புரிந்தது. நம்பிக்கையை விடாதப்பா. எப்படியும் ஈஸ்வரன் கைகொடுப்பான். நமக்குக் கொடுப்பினை இருந்தா எப்படியும் 5 லட்சம் கிடைச்சுரும். நீ ஆசைப்பட்டபடி என்ஜினீயரிங் காலேஜ் சேர்ந்திரலாம் என்றார் பட்டர். எனக்காக வேணாம்பா, நியாயம், நேர்மை, பக்தி, பகவான் கைங்கர்யம்னு இருக்கற உங்களுக்காகவாவது நமக்குத் தேவைப்படறபோது பகவான் பணம் கொடுத்து உதவ வேண்டாமா? நான் கட்ஆஃப் மார்க் 190 எடுத்திருந்தாலும் டொனேஷன் கொடுத்தாதான் காலேஜ்ல சேரமுடியும்கற நிலைமை எதுக்கு? என்றான் படபடப்புடன் பையன். அப்படிப் பேசாதப்பா, பகவான் எல்லாத்துக்கும் கணக்கு வெச்சுருப்பான். அவனண்ட நம்ம பாரத்தை போட்டுட்டு அவனே கதின்னு இருப்போம். நல்லது நடக்கும் என்றார் பட்டர்.

    இருவரின் உரையாடலையும் கேட்டபடியே சங்கரகிருஷ்ணனும் ராமபத்ரனும் அங்கு வந்து சேர்ந்தார்கள். இங்க பக்கத்துல ஏதாவது மெக்கானிக் ஷாப் இருக்குமா? என்று கேட்டார் சங்கரகிருஷ்ணன். சார் அப்போ அங்க நிக்கறது உங்க காரா கவலைப்படாதீங்க சார். பக்கத்துலதான் மெக்கானிக் ஒருத்தர் இருக்கார். நான் சைக்கிள்ல போய் கூட்டிண்டு வரேன் என்று கூறி பதிலுக்குக்கூட காத்திராமல் சிட்டாய் பறந்தான் பையன்.

    சற்று நேரம் நிலவிய அமைதியைக் கலைத்தபடி, ஒரு விண்ணப்பம் என்று இழுத்தார் பட்டர். அடடா, ஆயிரம் ரூபாயை தட்டுல போட்டதும் பட்டருக்கு பணத்தாசை வந்துவிட்டதா, அவர் பையனுக்குக்கூட காலேஜ் அட்மிஷன் அது இது என்றாரே! என்ற எண்ணம் சற்று அசூயையுடன் சங்கரகிருஷ்ணன் மனத்தில் எழுந்தது. ஆனால், பட்டர் கேட்ட உதவி, சங்கரகிருஷ்ணனை அசரவைத்தது.

    நீங்களே பார்த்திருப்பேள். இந்தப் புராதனக் கோவில் கம்பீரமா இருந்தாலும், ரொம்ப சிதிலமாயி்ட்டது. நல்ல வருமானமுள்ள கோவில்னா கவர்ன்மென்ட் எடுத்துப்பா, கல்வெட்டு, புதைபொருள்னு ஏதாவது கிடைச்சதுன்னா ஆர்க்கியாலஜியாவது எடுத்துப்பா. ஆனா இது ரெண்டுக்கும் வழியில்லாத கோவில். நீங்க பெரிய மனசோட ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கேள்.. என்று சொல்லி தொண்டையைச் செருமிக்கொண்டார் பட்டர்.

    உங்களப் பார்த்தா பெரிய கம்பெனி ஓனர் மாதிரி இருக்கு. நீங்க சொந்தமாவோ இல்ல உங்க கம்பெனி மூலமாவோ இந்தக் கோவிலுக்கு மராமத்து செய்து திருப்பணி செய்யலாம். முடியுமா? என்று கேட்டார் பட்டர்.

    பட்டரின் பண்பான வார்த்தைகள், அவரது சுயநலமில்லாத பொதுநலம் எல்லாம் சங்கரகிருஷ்ணனைக் கவர்ந்தன. செய்துடலாம் சாமி, கோவில் சுவரைப் புதுப்பிச்சு பெயின்ட் எல்லாம் அடிக்க ஒரு லட்சம் ஆகும்ணு நெனக்கறேன். என் கம்பெனி நன்கொடையா அதைப் பண்ணிடறேன். கோவில் திருப்பணி உபயம் பெருமாள் பிரசாதம் அன் கோ-ன்னு ஒரு போர்டு மட்டும் வெச்சுக்க அனுமதி கொடுங்க என்றார் சங்கரகிருஷ்ணன், சற்று விளம்பர உத்தியையும் மனத்தில் வைத்தபடி.

    ஆகா, பேஷ் பேஷ்! சிவன் கோவிலுக்கு உபயம் பெருமாள் பிரசாதம். ரொம்ப அருமை. அண்ணா பேரு என்ன? என்று கேட்டார் பட்டர். சங்கரகிருஷ்ணன் என்று பதில் வந்ததும் பார்த்தேளா? உங்க பெயரே, அரியும் சிவனும் ஒண்ணுங்கற பெரியவா வாக்குக்கு ஏத்த மாதிரி இருக்கு என்று மகிழ்ந்தார்.

    இந்த மனிதரிடம்தான் எத்தனை ஞானம், பண்பு என்று வியந்தபடி, சாமீ, திரும்ப ஒரு தர ஆரத்தி காட்ட முடியுமா? என்று கேட்டார் சங்கரகிருஷ்ணன். ஓ காட்டிடலாமே என்று அவர், சுவாமிக்கு ஆரத்தி காட்டிவிட்டு, இருவர் பக்கமும் தட்டை நீட்ட, அதில் கட்டுக் கட்டாய் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதற்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாயைப் போட்டார் சங்கரகிருஷ்ணன். அடடா நீங்கதான் கம்பெனி செலவுல திருப்பணி செய்யறேன்னு சொன்னேளே? இப்போ இந்தப் பணத்தை தட்டுல போட்டிருக்கேளே? இதை எப்படி நான் காபந்து பண்ணுவேன்? நீங்களே வெச்சிருந்து திருப்பணி செய்யுங்கோ! என்று பதறினார் பட்டர்.

    இருக்கட்டும். இருக்கட்டும். திருப்பணியை என் கம்பெனி செலவுல செஞ்சுடறேன். இது உங்க பையன் என்ஜினீயரிங் காலேஜ்ல சேர நான் உங்களுக்குக் கொடுக்கற காணிக்கை என்றார் சங்கரகிருஷ்ணன். கண்ணில் நீர்க்கோர்க்க நன்றிகூட சொல்ல முடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்த பட்டரிடம், சாமி உங்க பையன் பேரு என்ன? என்று கேட்டார் சங்கரகிருஷ்ணன். பாலாஜி என்று பதில் கூறினார் அந்தக் கோவிலின் பட்டர் பரமேஸ்வர குருக்கள்.

    அப்படிபட்ட நல்ல உள்ளங்களை வாழ்த்தும் ஒரு இனிய பாடல் -உங்களுக்காக



    Last edited by g94127302; 28th December 2014 at 08:21 AM.

  13. #2417
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முரளி கிருஷ்ணா வாசுதேவா ... பெயர் மூன்று அவதாரம் ஒன்று..

    ஆம் தகவல் ஞான அவதாரங்கள் இந்த மூவரும் அள்ளித் தெளிக்கும் தகவல்கள் மதுர கானத்தின் மணி முத்துக்கள்..

    மூவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுக்கள்..

    ஓ... இன்னொன்று விட்டு விட்டதே..

    கோபாலா... அதுவும் இதே அவதாரம் தானே...

    இந்தத் தகவல் களஞ்சியங்களால் நிரம்பி வழிகிறது மதுர கானம் ... அதன் மூலமாக மய்யம் இணைய தளம்...

    இவற்றைப் பற்றிய விரிவான வர்ணனைக்கோ.. சின்னக் கண்ணன்...

    என்னா விநோதம் பாருங்க....

    எல்லாமே கண்ணனின் அவதாரம் தானுங்க...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. Thanks chinnakkannan, vasudevan31355 thanked for this post
    Likes kalnayak, chinnakkannan liked this post
  15. #2418
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி சார்,

    கிரேட். அருமையான சம்பவம். தெய்வ நம்பிக்கை எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பதற்கு இதை விட உதாரணம் கூறி விட முடியாது. திருப்பதிக்கான பணம் கூர்மேஸ்வரருக்கு போகவும், அது திரும்ப பாலாஜிக்கே போவதும் இறைவன் விளையாட்டல்லாமல் வேறென்ன?

    படிக்கையில் சிலிர்க்கிறது. நல்ல பதிவு. நன்றிகள் ஆயிரம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. #2419
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பாடல் இரண்டு
    பாணி ஒன்று


    தொடர் 9

    அன்பு ராகவேந்திரன் சாருக்கு அன்பளிப்பு.

    தாரகைகளின் தற்புகழ்ச்சிப் பாடல்கள்.

    இளம் பெண்கள் வீட்டில் தனியே இருந்தால் அவர்கள் மனதில்தான் எத்தனை எத்தனை என்ன ஓட்டம்!

    அதுவும் பெரிய நிலைக் கண்ணாடி முன்பு நின்று தன் அழகை பெருமிதத்துடன் பார்த்து பூரித்துக் கொள்வது, தன் பேரழகில் கர்வம் கொள்வது என்று இவர்கள் தன்னை மறந்து செய்யும் செயல்களைப் பாருங்கள்.

    முதலில் இந்த 'பியூட்டி'யைப் பாருங்கள்.

    தன் அறையில் ஒரு ஆடவன் இருப்பது தெரியாமல் இந்த மங்கை தன் அழகை தானே ரசித்து ஆட்டம் போடுகிறாள். பாட்டும் பாடுகிறாள். அவள் முகத்தில்தான் எத்தனை உற்சாகப் பிரகாசம்!

    'சோப்பு சீப்பு கண்ணாடி' படத்தில் 'அலேக்' விஜயநிர்மலா பங்கு கொள்ளும் ரகளை பாடல். சுசீலாம்மா கலக்கியிருபார்கள். நிறைய பேர் கண்டிப்பாக பார்த்திருக்க மாட்டீர்கள். நல்லா என்ஜாய் செய்யலாம் மறைந்திருந்து பார்க்கும் நாகேஷ் போலவே.

    'நிச்சயம் நானே நேச்சுரல் பியூட்டி
    நினைத்ததைச் செய்வேன்
    தட்ஸ் மை ட்யூட்டி

    கண்ணாடி போலே மேலே
    தன்னாலே மின்னும் நைலக்ஸ்
    கண்ணாலே பேசும் போது
    முன்னாலே தோன்றும் ஐடெக்ஸ்
    பொன்னான கைகள் மீது
    எந்நாளும் காணும் கியூடெக்ஸ்
    தேனாகக் கொஞ்சும் நேரம்
    பூவாக மாறும் லிப்ஸ்டிக்

    கேன் ஐ கிஸ்'?

    'பொம்சிக்கு பொம்சிக்கு பொம்சிக்கு பொம்சிக்கு'

    நைலக்ஸ், ஐடெக்ஸ், கியூடெக்ஸ் என்று அப்போதைய டாப் ரேஞ்ச் அழகு சாதனப் பொருள்கள் அதே ஆங்கில வார்த்தைகளில் பாடலில் வருவதை கவனியுங்கள்.

    நிஜமாகவே கலக்கல் சாங்க்தான்.



    அதே போலத்தான் இந்தப் பெண்ணும்.

    இவளுக்கு நடிகையாக வேண்டும் என்ற ஆசை. தன் அழகு மேல் மகா கர்வம் அவளுக்கு. அவள் ரூம் முழுக்க புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகைகளின் படங்கள்தான். குளித்துக் கொண்டே இந்த அழகுப்பதுமை இன்னொரு உருவம் எடுத்து பாடுவதை கேளுங்கள். மகிழுங்கள்.

    'மை ஃபிரண்ட் நெஞ்சத்தில் என்ன
    ஐ நோ அஞ்சாதே கண்ணு
    ஒருநாள் மலரும்
    உலகம் புகழும் உண்மையில் சந்தேகம் என்ன?

    கேரி ஆன்

    மேனி என்ற மலர் மூடுகின்ற உடை
    ராணி உன் அழகை மூடுமோ
    தேனை அள்ளி வரும் பாவை உந்தன் இதழ்
    தேவை வந்தவுடன் பேசுமோ'

    அற்புதமான பாடல். 'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' படத்தில் கல்பனாவின் அலம்பல்.

    இரண்டு பாடல்களுக்குமே இசை கோபாலின் டி .கே ராமமூர்த்திதான். இரண்டுமே சுசீலா பாடியதுதான். இரண்டு படங்களுக்குமே இயக்கம் திருமலை மகாலிங்கம்தான். பாடல்கள் ஒன்று போல் இருப்பதில் ஆச்சர்யம் என்ன?

    இதிலும் லவ்லி லைஃப், ஜாலி லைஃப், கேரி ஆன், ஐ நோ என்று ஆங்கில வார்த்தைகள் உண்டு

    Last edited by vasudevan31355; 27th December 2014 at 10:36 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes kalnayak, Russellmai liked this post
  18. #2420
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்,
    தங்களின் கற்பனையே தனி. ரூம் போட்டு யோசிப்பீங்களோ என்று கேட்கத் தேவையேயில்லை. நம் நண்பர்களுக்கு மதுர கானம் திரியில் எப்படியெல்லாம் இசை விருந்து படைக்கலாம் என்பதைப் பற்றிய சிந்தனைக்கு நேரம் போக மீதியைத் தங்களுக்கு என்று தாங்கள் ஒதுக்கிக் கொள்கிறீர்கள் என்றே நான் சொல்வேன். அந்த அளவிற்கு தங்கள் கற்பனை நேரம் உழைப்பு திறமை யாவையுமே இங்கு பிரதிபலிக்கின்றன.

    அதன் மற்றொரு பரிமாணமே பாடல் இரண்டு பாணி ஒன்று .. என்ன வித்தியாசமான சிந்தனை... அருமை அருமை.

    அதுவும் சரியான தலைப்பில் தொடரில் அடுத்து இடம் பெற்றுள்ள பாடல்கள் நிச்சயம் அனைவரின் கற்பனையூற்றும் பெருக்கெடுத்து ஓடச் செய்யும்.

    இதோ இத்தொடரில் மேலும் இரு பாடல்கள்..

    இப்பாடல்களின் வரிகளில் அந்நிய மொழியில்லை. ஆனால் பாருங்கள் கவிஞர்களின் கற்பனையை, தங்களைத் தாங்களே இத்தாரகைகள் புகழ்ந்து கொள்வதை மறைமுகமாக எடுத்துரைக்கின்றனர்.

    1. சரஸ்வதி சபதம் - திரை இசைத்திலகம் இசையில் கண்ணதாசன் வரிகள்

    உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி..

    இப்பாடலில் வரும் வரிகளில் சில..

    நாடும் நகரமும் நால்வகைப் படையும் நவரத்ன மாளிகையும் என் வசமே...
    ஆஹா.. எக்காலத்திலும் பொருந்தும்.



    2. அடுத்து மெல்லிசை மாமணி குமார் அவர்களின் இசையில் நெஞ்சையெல்லாம் கிறங்கச் செய்யும் மதுர கானம்...

    பல்லவியிலேயே தன் புகழ்ச்சியை அழுத்தமாக சித்தரிக்கிறாள் இத்தாரகை..

    காணக் கண்கோடி வேண்டும் கன்னிக் கனியல்லவோ



    இரண்டுமே இசையரசியின் குரலில் என்னமாய் நம் நெஞ்சை வருடுகின்றன..

    அது சரி...தற்புகழ்ச்சிப்பாடல் எனக்கு அன்பளிப்பா...

    இதில் ஏதும் உள்குத்து... ஏதாவது...

    எனிவே தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி...
    Last edited by RAGHAVENDRA; 27th December 2014 at 11:51 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Likes kalnayak, chinnakkannan, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •