Page 182 of 397 FirstFirst ... 82132172180181182183184192232282 ... LastLast
Results 1,811 to 1,820 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #1811
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஜி!

    நேற்று எங்கே காணோம்? நேற்று நம்ம திரி கலக்குச்சே!
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1812
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    ஜி!

    நேற்று எங்கே காணோம்? நேற்று நம்ம திரி கலக்குச்சே!
    நேற்று வெளி வேலை அதனால் இங்கே வர முடியவில்லை.
    ஆம் நிறைய பக்கங்கள் நிறைய தகவ்ல்கள் என ஒரே தூள்.

  4. #1813
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    ஓடுகிற தண்ணியில


  5. Likes kalnayak, Russellmai liked this post
  6. #1814
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    இதுவும் மிக அழகான பாடல்
    எனக்கு பிடித்த சீர்காழியாரும் இசையரசியும்


  7. Likes kalnayak, Russellmai liked this post
  8. #1815
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அன்புசால் நண்பர் திரு.வாசு சார் அவர்களுக்கு,

    தங்கள் பதிலுக்கு நன்றி. எனக்கும் நேற்று அலுவல் நெருக்கடியால் உடனே பதிலளிக்க முடியவில்லை. மன்னிக்கவும். நான் வைத்திருக்கும் வசிய மருந்து பெயர் என்ன? என்று கேட்டுள்ளீர்கள். நிச்சயமாக அதை சொல்லத்தான் போகிறேன். அதுவும் இந்த பொது மன்றத்தில் சொல்வதன் மூலம் அதைப் படிக்கும் அனைவரும் பலனடையட்டுமே. ஆனால், நீங்கள் மட்டும் பலனடைய முடியாது. அதற்கான பதிலை பின்னால் கேள்வியாகத் தருகிறேன்.

    அரிய வசிய மருந்தான அது எனக்கே சமீபத்தில்தான் கிடைத்தது. முன்பே கிடைத்திருந்தால் உலகையே வசியம் செய்திருப்பேன். அந்த மருந்தின் பெயர் கொஞ்சம் நீளம்தான். இருந்தாலும் சொல்லியே தீர வேண்டும். பெயர்.... நண்பர்களை அன்பெனும் வேலியால் சிறைப்படுத்தும் நெய்வேலி வாசுதேவன். தெரிந்து கொண்டீர்களா? இப்போது சொல்லுங்கள். மருந்தே மருந்தை பயன்படுத்தி பலனடைய முடியுமா?

    நேரம் கிடைக்கும்போதெல்லாம், திரு.சின்னக் கண்ணன் சார் கோரியபடி பாடலோடு இங்கு வந்து பங்கு பெற்று மகிழ்வேன். நன்றி.

    அன்புள்ள: கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  9. #1816
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 24)



    'காற்றினிலே வரும் கீதம்' கதை முடிந்து இப்போது பாடல்கள்.

    1. முத்துராமனின் மனம் கவர்ந்த கவிதா பாடும் கானம் 'காற்றினிலே வரும் கீதம்'.

    முத்துராமனுக்கு மட்டுமா? நம் எல்லோருக்கும் தான்.

    ராஜாவின் டிபிகல் டைப் பாடல். அதே சுவையோடு. அதே தரத்தோடு. அதே ஜானகியோடு.

    அத்தனை இடங்களிலும் ஒலித்த கீதம். பாபுவின் ஒளிப்பதிவு பாடலைத் தூக்கி நிறுத்தும். இயற்கை காட்சிகள் குளு குளு ரம்மியம்.

    'கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்
    காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
    காற்றினிலே வரும் கீதம்'

    இனம் புரியா சுகம் இனிமையாய் உடலில் பரவும் சுகம் தந்த பாடல்.






    2. 'சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்
    என் முத்தான முத்தம்மா
    என் கண்ணான கண்ணம்மா'

    தமிழ் திரையுலகை புரட்டிப் போட்ட பாடல்

    ஜெயச்சந்திரனை எங்கேயோ கொண்டு தூக்கி நிறுத்திய பாடல்.

    'செம்மீனி'ன் 'கடலின் அக்கர போனோரே' ஞாபகம் வராமல் இருக்காதே. ராஜா புகுந்து விளையாடி களேபரம் பண்ணிய பாடல். கொலை ஹிட். கட்டை குட்டையாய் கம்பர் ஜெயராமன் துடுப்பு பிடித்து படகோட்டியபடியே பாட, உடன் இருக்கும் மீனவர்கள் 'தையரதய்யா...தையரதய்யா பாட, அலங்கரிக்கப்பட்ட படகில் கவிதாவும், முத்துராமனும் காதல் புரிய, மிக அழகாக ஒலிக்கும் பாடல்.

    பொதுவாகவே இந்த மாதிரி வரும் மீனவ பாடல்கள் பெரும்பாலும் மீனவர்களின் சோகத்தையே பிரதிபலிப்பதாக இருக்கும். ஆனால் இந்தப் பாடல்

    'மொத மொதலா தொட்டேனே
    வாய்க்காக் கரையோரம்
    சாயாமல் சாய்ந்தாளே மார்பிலே'

    என்று தன் மனம் விரும்பிய பெண்ணைப் பற்றி சந்தோஷமாகப் பாடி வரும் மீனவன். தொழில் சம்பந்தமாக அவன் பாடவே இல்லை. காதலி நினைவை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறான் இவன்.

    'ஏய் குரிய ஏலவாலி
    தண்ட ஏல வாலம்
    தையரதய்யா... தையரதய்யா'

    அடடா! என்ன இனிமை! மிக மிக அழகான பாடல்.






    3. 'ஒரு வானவில் போலே
    என் வாழ்விலே வந்தாய்'

    முரளி சார் மிக அழகாக எழுதியிருந்தார்.

    ஜெயச்சந்திரனுக்கு கொண்டாட்டம். ஜானகியும் செம ஈடு. பாடலின் துவக்க இசை சொர்க்கத்தின் உச்சம். உறுத்தாத மிக மெல்லிய இசை. மலைப் பிரதேச காட்சிகளுக்காக அமுதாக ஒலிக்கும் புல்லாங்குழல். சப்போர்ட் செய்யும் வயலின். பாடலின் இடையிசையில் காதுகளில் தேனாகப் பாயும் கிடார் ஒலி. அருமையான பாடல் வரிகள்.

    'கலைமானின் உள்ளம் கலையாமல்
    களிக்கின்ற கலைஞன் எங்கே
    கலைகள் நீ கலைஞன் நான்
    கவிதைகள் பாட வா'

    வரிகளில் கவிதா முத்துராமனை காமெரா மூலம் அப்படி இப்படி தாலாட்டிப் பார்க்கும் பாபு.

    இலக்கணம் மீறிய இயல்பான லவ் சாங்.

    அதுவும் பாடலின் முடிவில் ஜானகி பல்லவி வரிகளைத் தொடங்க, ஜெயச்சந்திரன் 'ம்ஹு ம் ம்ஹு ம்' என்று ஜானகியுடனே இழைவதும், பின் ஜெயச்சந்திரன் அடுத்த வரிகளைப் பாடத் தொடங்க, ஜானகி அவருடனேயே 'ம்ஹு ம் ம்ஹு ம்' 'ஹா ஹ ஹா ஹா' என்று இழையோ இழை என்று இழைவதும் முரளி சார் சொன்னது போல இப்பாடலை தொட்டபெட்டா சிகரத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது.


    Last edited by vasudevan31355; 30th November 2014 at 02:33 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. Thanks kalnayak thanked for this post
    Likes kalnayak, Russellmai, chinnakkannan liked this post
  11. #1817
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //கள்ளமில்லை கபடமில்லை காவலுக்கு யாருமில்லை..// ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் வாசு சார்

    //ஏய் குரிய ஏலவாலி
    தண்ட ஏல வாலம்
    தையரதய்யா... தையரதய்யா'// சும்மா மெட்டுக்குத்தான் எழுதின வரிகளா..இல்லாங்காட்டி அர்த்தம் எதுவும் இருக்குதா..

  12. Thanks vasudevan31355 thanked for this post
  13. #1818
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மீனவர் பாட்டு என்றதும் ஜேசுதாஸ் பாடிய இந்தப் பாடலை எவரும் மறந்திருக்க முடியாது. 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்' வீராசாமி துலாபாரம் படத்தில் பாடும் அற்புதமான பாடல்.

    'காற்றினிலே பெரும் காற்றினிலே
    ஏற்றி வைத்த தீபத்திலும் இருள் இருக்கும்'

    என்னவோ இந்தப் பாடலை கேட்பவர் நெஞ்சங்களை பாரம் அழுத்தி சோகத்தில் தோய்த்து எடுப்பது நிஜம்.

    தேவராஜன் அவர்களின் இசை இதயத்தை சுக்குநூறாக்கும். ராஜனையும், சாரதாவையும் பார்க்கும் போது கண்கள் கலங்காமல் இருக்கவே முடியாது.

    'ஆண்டவனும் கோயிலில் தூங்கி விடும் போது
    யாரிடத்தில் கேள்வி கேட்பது?'.

    'ஆடுவது நாடகம்
    ஆளுக்கொரு பாத்திரம்
    இறைவனுக்கு வேஷம் என்னவோ'

    நடிகர் திலகமே தெய்வம்

  14. Likes kalnayak, Russellmai liked this post
  15. #1819
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இதே பாடல் மலையாளம் 'துலாபாரம்' படத்தில். வயலாரின் வரிகளுக்கு தேவராஜன் இசை.

    காட்டடிச்சு கொடும் காட்டடிச்சு
    காயலிலே விளக்கு மரம் கண்ணடச்சு
    சொர்க்கமும் நரகமும் காலமாம் கடலில்
    அக்கரையோ இக்கரையோ

    ஜேசுதாஸின் குரலிலேயே.

    இதில் ராஜனுக்கு பதிலாக பிரேம்நசீர். ஜோடி அதே பாவப்பட்ட சாரதா.

    Last edited by vasudevan31355; 30th November 2014 at 03:00 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  16. Likes kalnayak, Russellmai liked this post
  17. #1820
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார்.. ரெண்டுமே நல்ல பாட்டுதான் இல்லைங்கல.. ஏன் சோகம்.. ஜாலியா இருக்கலாமில்லை..


    ஆனந்த ராகம் படத்திலிருந்து மீனவர் பாட்டு..உற்சாகம்..

    கடலோரம் கடலோரம்
    அலைகள் ஓடி விளையாடும்

    வலை வீசு வலை வீசு
    வாட்டம் பார்த்து வலை வீசு

    அம்மா கடலம்மா
    எங்க உலகம் நீயம்மா

    தினம் ஆடி ஓடி பொழைக்கும்
    எங்க பசியைத் தீர்க்கும் சாமி நீயே


    வயலில்ல வாய்க்காலில்ல
    விதை போடவில்ல
    மரம் வச்சு தண்ணி ஊத்தி
    பலன் தேடவில்ல

    நீ தந்தா சாப்பாடு

    இல்லேன்னா கூப்பாடு

    இருப்பதையெல்லாம்
    கொடுப்பாயே என் அம்மா

    இல்லேன்னு சொன்னதில்ல
    எங்க கடலம்மா


    நிலத்துக்கு சொந்தக்காரன்
    பல பேரு உண்டு
    கடலுக்கு சொந்தம் பேச
    உலகத்தில் யாரு


    உழைச்சாக்க கைமேலே
    பொன்னாக தருவாயே

    இருப்பதையெல்லாம்
    கொடுப்பாயே என் அம்மா

    இல்லேன்னு சொன்னதில்ல
    எங்க கடலம்மா





    அச்சோ.. இதைத் தொழில் பாட்டுல போட்டிருக்கலாமில்லை..ம்ம் வேற பாட் கிடைக்காமயாப் போய்டும்

  18. Likes kalnayak, vasudevan31355, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •