Page 12 of 397 FirstFirst ... 210111213142262112 ... LastLast
Results 111 to 120 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #111
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    குருதத் பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் எனக்கு 'Aar Paar' படத்தில் வரும்

    'Yeh Lo Main Haari Piya'

    பாடல் மிக மிக பிடித்த பாடல். குருதத் உடன் ஷ்யாமா. பாடுவது கீதாதத். ஓ.பி.நய்யரின் அருமையான டியூன். ஷ்யாமா கொள்ளை அழகு. காரிலேயே பாடல்.

    அருமையோ அருமை. இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டு மகிழ்ந்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. எங்கள் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருக்கும் இந்தப் படல் அவ்வளவு அத்துப்படி. குடும்பப் பாட்டு என்று கூட சொல்லலாம்.

    Last edited by vasudevan31355; 10th October 2014 at 01:36 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #112
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    Tamil Hindu

    பாலிவுட் வாசம்: பாலிவுட்டின் வைரமுத்து!



    பாலிவுட்டில் சாதிக்கும் கனவுடன் மும்பை ரயில் நிலையத்தில் அந்த இளைஞன் வந்திறங்கி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அவனுக்குப் பல அடையாளங்கள். திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், கவிஞர், சமூகப் போராளி எனப் பல முகங்கள். அவர்தான் ஜாவேத் அக்தர்.

    உருதுக் கவிஞரும் பிரபலப் பாடலாசிரியருமான ஜன் நிசார் அக்தர் மற்றும் எழுத்தாளர் சாஃபியா அக்தர் தம்பதியினரின் மகனாகப் பிறந்த ஜாவேத் அக்தரின் ரத்தத்தில் ஏழு தலைமுறை எழுத்தாளர்களின் மரபு கலந்துள்ளது. உருது மொழியில் மதிக்கப்படும் கவிஞரான மஜாஸ் இவரது தாய்மாமன்.

    1964-ல் மும்பை வந்த ஜாவேத் அக்தருக்கு முதல் திரைக்கதை வெற்றி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் யாகீன் படம் வழியாகக் கிடைத்தது. அடுத்து திரைக்கதை எழுத்தாளர் சலீம் கானுடன் இணைந்து திரைக்கதை எழுதத் தொடங்கிய ஜாவேத் அக்தர் சலீம்-ஜாவேத் என்ற பெயரில் எழுதிய தீவார், ஷோலே, சீதா அவுர் கீதா, டான் ஆகிய படங்கள் பெருவெற்றி பெற்றன. ஷோலே திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்குக் கோபக்கார இளைஞனான அமிதாப் பச்சன் கிடைத்தார்.

    ரமேஷ் சிப்பி இயக்கிய ஷோலே திரைப்படம் இந்திப் பட ரசிகர்களை மட்டும் அல்ல, இந்திய மக்கள் அனைவரையும் பித்துப்பிடிக்க வைத்த படமாகும். அகிரா குரசோவாவின் செவன் சாமுராய் படத்தை இந்தியச் சூழலில் அருமையான கௌபாய் கதையாக மாற்றிப் பெருவெற்றி பெற்றார்கள் சலீம்-ஜாவேத் இரட்டையர்கள். ஷோலே படம் வெளிவந்து 39 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் இந்திய சினிமாவின் அரிதான காவியங்களில் ஒன்றாக ஷோலே கருதப்படுகிறது.

    1981-ல் சலீம் கான் - ஜாவேத் அக்தரின் தொழிற்கூட்டணி முடிவுக்கு வந்தது. அதன் பிறகு கமல் ஹாசன் நடித்த சாகர், மிஸ்டர் இந்தியா, பேடாப் போன்ற வெற்றிப் படங்களுக்கு திரைக்கதை எழுதி சாதித்தார் ஜாவேத்.

    1980-ல் இருந்து உருதுக் கவிதைகளை எழுதத் தொடங்கியிருந்த ஜாவேத், 1981-ல் சாத் சாத் திரைப்படத்தில் பாடல்களை எழுதத் தொடங்கினார். இந்தி சினிமாவின் மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்தவர் அக்தர். 1942 எ லவ் ஸ்டோரி படத்தில் அதன் நாயகன் அனில் கபூர் பாடி இந்தியாவே ரசித்த ஏக் லட்கி கோ தேகோ தோ பாடல் இவர் எழுதியதே.

    அனில் கபூர் நடித்து மாதுரி தீட்சித்தைப் பெரும் புகழுக்குக் கொண்டுசென்ற தேசாப் படத்தில் வந்த ஏக் தோ தீன் பாடல் இவருடையதே. தமிழில் வெளியான ஜீன்ஸ் படத்தில் வைரமுத்து எழுதிய பாடல்களை இந்தியில் வெளியான ஜீன்ஸுக்கு மொழிமாற்றியவர் இவரே. வைரமுத்துவைப் போலவே காலம்தோறும் தன்னை நவீனப்படுத்திக்கொள்ளும் ஜாவேத் அக்தர், ஏ.ஆர்.

    ரஹ்மானின் இசையில் அமீர் கானுக்குப் பெரும்புகழைக் கொடுத்த லகான் படத்திற்கும் பாடல்களை எழுதினார். சமீபத்தில் விஸ்வரூபம் படத்தின் இந்தி வடிவமான விஸ்வரூப் படத்திற்கும் இவர்தான் பாடலாசிரியர். திரைப்பாடலுக்குப் பலமுறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

    கவிஞர் ஜாவேத் அக்தர் முக்கியமான சமூகச் செயல்பாட்டாளரும்கூட. பாபர் மசூதி தகர்ப்பு, குஜராத்தில் நடந்த இனப் படுகொலைகளுக்கு எதிராகத் துணிச்சலாகக் குரல்கொடுத்தது மட்டுமின்றி, சட்டப் போராட்டங்களையும் தன் மனைவியும் நடிகையுமான ஷபானா ஆஸ்மியுடன் சேர்ந்து நடத்திவருகிறார்.

    2010-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாவேத் அக்தர், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களின் கவுரவம் மற்றும் பொருளாதாரத்தை மீட்கும் காப்பிரைட் திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்ததில் முன்னின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    gkrishna

  5. Likes Russellmai liked this post
  6. #113
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    நன்றி விக்கி

    இன்று கே. பி. சுந்தராம்பாள் 106 வது பிறந்த நாள்



    கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 10, 1908 - செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்

    பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். பக்த நந்தனாரில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். 1935இல் இப்படம் வெளிவந்தது.

    அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.

    தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.

    தொடர்ந்து கேபிஎஸ் ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. 'பொறுமை யென்னும் நகையணிந்து' , 'கன்னித் தமிழ்நாட்டிலே - வெண்ணிலவே' போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கேபிஎஸ் பாடியவை 30.

    1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.

    மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973), மணிமேகலை (பாலசன்யாசி) உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார்.
    gkrishna

  7. Likes Russellmai liked this post
  8. #114
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    Thanks to Tamil HINDU



    போற்றுதற்குரிய ஆற்றல் மிக்க பலரது வாழ்வில் திடீரென ஏற்படும் மாற்றங்கள் அவர்களைத் திகைக்கவைப்பது கண்கூடு. மற்றவர்களின் வேதனையைப் போக்கும் சாதனை புரியும் அவர்கள், தங்களுக்கு நேரிடும் சில சோதனைகளை உடனே தீர்க்க முடியாமல் மனம் வருந்தும் உணர்வு திரையில் நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆற்றாமை உணர்வை அழகாக வெளிப்படுத்தும் மிகப் பிரபலமான இந்திப் பாடலையும் அதற்கு இணையான தமிழ்ப் பாடலையும் பார்ப்போம்.

    ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூர் நடித்து 1972 -ம் ஆண்டு வெளிவந்த அமர் பிரேம் (அழியாத காதல்) படத்தின் அனைத்துப் பாடல்களும் புகழ்பெற்றவை. எனினும் ஆர்.டி. பர்மன் இசையில் ஹஸ்ரத் ஜெய்பூரியின் வரிகளில், கிஷோர் குமார் பாடிய, இந்துஸ்தானி பைரவி ராகத்தில் அமைந்த, சாகா வரம்பெற்ற பாடல் இது. எளிய வரிகள், ஆழமான கருத்து, மனதைத் தொடும் இசை, இதமான குரல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய அந்தப் பாடல்:

    (ச்)சிங்காரி கோயி தட்கே,

    தோ சாவன் உஸ்ஸே புஜாயே

    சாவன் ஜோ அகன் லகாயே,

    உஸ்ஸே கோன் புஜாயே

    ஓ... கோன் புஜாயே

    பத்ஜட் ஜோ பாக் உஜாடே

    ஓ பாக் பஹார் கிலாயே

    ஜோ பாக் பஹார் மே உஜ்டே

    உஸ்ஸே கோன் கிலாயே

    ஓ கோன் கிலாயே...

    பாடலின் பொருள்:

    (திடீரென எழுகின்ற) தீச்சுவாலையை

    (அப்போது பெய்யும்) மழை அனைத்துவிடும்.

    மழையே தீயை உருவாக்கினால்

    அதை யார் அணைப்பது? யார் அணைப்பது

    இலையுதிர் காலம் உதிர்க்கும் தோட்டத்து இலைகளை

    வசந்த காலம் புதுப்பிக்கும்

    வசந்த காலத்திலேயே

    உதிர்ந்து நிற்கும் தோட்டத்தை

    எவரால் மலரச் செய்ய முடியும்.

    என்னிடம் கேட்காதே

    எப்படி (நம்) கனவு இல்லம் இடிந்தது என்று

    அது உலகம் செய்த செயல் அல்ல

    நாம் எழுதிய கதை

    எதிரி (உள்ளத்தில்) கோடரியை

    பாய்ச்சினால், ஆறுதல் அளிக்க

    நம் நண்பர்கள் இருப்பார்கள்

    நெருங்கிய நண்பர்களே (நம் மனதை) காயப்படுத்தினால் யார் சரி செய்வார்கள்

    என்ன நடந்திருக்குமோ தெரியாது

    என்ன செய்திருப்பேனோ தெரியாது

    சூறாவளிக்கு முன் எந்தச் சக்தியும் நிற்க முடியாது

    (என்பதை) ஏற்கவே வேண்டும்

    இயற்கையின் குற்றம் அல்ல அது

    (எனில்) வேறு எதோ சக்தியுடைய குற்றம்.

    கடலில் செல்லும் படகு தடுமாறினால்

    படகோட்டி (எப்படியாவது) கரை சேர்த்திடுவான்

    படகோட்டியே படகைக் கவிழ்த்துவிட்டால்

    (படகில்செல்பவரை) யார் காப்பாற்றுவார்

    ஓயார் காப்பாற்றுவார்.

    கதையின் அடிப்படையிலும் பாத்திரங்களின் இயல்பிலும் வேறுபட்டிருந்தாலும் இதற்கு

    இணையாக விளங்கும் தமிழ்ப் பாடல் வெளிப்படுத்தும் ஆற்றாமை உணர்வு இப்பாடலுடன் நெருங்கி இருப்பதைப்

    பார்க்கலாம். கடமை தவறாத காவல் அதிகாரியாக இருந்தும் தறுதலைப் பிள்ளையைத் திருத்த முடியாமல் அவன் செய்கையால் கலங்கும் கழிவிரக்க உணர்வைக் கன கச்சிதமான நடிப்பால் வெளிப்படுத்தும் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா நடித்த தங்கப் பதக்கம் என்ற வெற்றிப் படத்தின் பாடல்.




    இசை விஸ்வநாதன். பாடல் கவிஞர் கண்ணதாசன்.

    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

    வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

    சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது

    அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது

    ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல

    நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல

    பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல

    எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல

    ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல

    அந்தத் திருநாளை மகன் கொடுத்தான் யாரிடம் சொல்ல

    (சோதனை மேல் சோதனை)

    வசனம்: மாமா காஞ்சிபோன பூமி எல்லாம் வத்தாத நதியைப் பாத்து ஆறுதல் அடையும்.

    அந்த நதியே காஞ்சி போய்ட்டா?

    துன்பப்படுறவங்க எல்லாம் அந்தக் கவலையைத் தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.

    ஆனா தெய்வமே கலங்கி நின்னா?

    அந்தத் தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்???

    பாடல்: நானாட வில்லையம்மா சதையாடுது

    அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது

    பூவாக வைத்திருந்தேன் மனமென்பது

    அதில் பூநாகம் புகுந்துகொண்டு உறவென்றது

    அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா

    இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா

    (சோதனை மேல் சோதனை)

    துன்பப் படுறவங்க எல்லாம் அந்தக் கவலையைத் தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.

    ஆனா தெய்வமே கலங்கி நின்னா??

    அந்தத் தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?

    பாட்டின் இடையே வரும் இந்த வசனம் பல தருணங்களிலும் தளங்களிலும் மேற்கோளாகக் காட்டப்படுவது இங்கு குறிப்பிடத்தகுந்தது.
    gkrishna

  9. Thanks Russellmai thanked for this post
  10. #115
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    இணையத்தில் திரட்டிய தகவல்கள்

    தமிழ்நாட்டில் பிறந்து ஹிந்தியில் கொடிகட்டி பறந்த பறக்கின்ற நடிகை ரேகாவுக்கு இன்று வயது 60-அடிவயற்றை என்னமோ செய்கிறது

    ரேகா (Rekha) என்ற திரைப் பெயரால் அனைவராலும் அழைக்கப்படும் பானுரேகா கணேசன் (பிறப்பு: 10 அக்டோபர் 1954) இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்

    வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை... இந்த வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ நடிகை ரேகாவிற்கு பொருந்தும். இன்றைக்கு 60 வது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகை ரேகா, இன்னமும் இளமை மாறாமல் இருக்கிறார். இதை அவருடைய சமீபத்திய திரைப்படமான சூப்பர் நானி பார்த்தவர்களுக்குத் தெரியும். சினிமாவிற்கு சிலகாலம் இடைவெளி விட்டிருந்த ரேகா கிரிஷ் 2 படத்தில் நடித்த போதே ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இப்போது மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின்னர் சூப்பர் நானி படத்தில் நடித்துள்ளார். 1970 களில் பாலிவுட் உலகின் கவர்ச்சி ப்ளஸ் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த ரேகா 15 ஆண்டுகளுக்கும் மேலாக அசைக்க முடியாத நடிகையாகத் திகழ்ந்தார்.

    குழந்தை நட்சத்திரம் காதல் மன்னன் நடிகர் ஜெமினி கணேசன்- தெலுங்கு நடிகை புஷ்பவள்ளி தம்பதியின் மகளான ரேகா 1966ம் ஆண்டு தெலுங்கில் ரங்குலா ரத்னா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ரேகா.

    1969ம் ஆண்டு கன்னடத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். 1970 களில் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த ரேகா, அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். பின்னர், 1980களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

    1990களில் ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் உள்ளிட்ட ஹீரோயின்களுக்கு அம்மாவாகவும் நடித்தார். பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார் நடிகை ரேகா

    அமிதாப்பச்சன் நடிக்கும் ஷமிதாப் படத்திலும் நடிக்கிறார் ரேகா. 1981ம் ஆண்டு யாஷ் சோப்ரா இயக்கிய சில்சில்லா படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆர்.பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் நடிக்கும் ஷமிதாப் படத்தில் தான் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக ரேகா நடிக்க உள்ளார். இதை தனுஷ் உறுதிபடுத்தியுள்ளார்.

    இன்று 60 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரேகாவை நாமும் வாழ்த்துவோமே

    Last edited by gkrishna; 10th October 2014 at 04:17 PM.
    gkrishna

  11. #116
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    உண்மையில் அருமையான இன்றைய ஸ்பெஷல் (89)
    நன்றி வாசுதேவன் சார்
    உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் தங்களின் profile picture முடியுமானால் மாற்றிவிடவும் கட்டாயம் ஒன்றும் இல்லை மாற்றினால் நன்றாக இருக்கும்

    Quote Originally Posted by vasudevan31355 View Post
    இன்றைய ஸ்பெஷல் (89)

    இந்த மாதிரி இனிமையான பாடல்கள் கிடைக்க, பாடகர் , பாடகியர் கிடைக்க தமிழன் தவம்தான் செய்திருக்க வேண்டும்.

    என்ன மாதிரி ஒரு பாடல்!

    ஆயுசு முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

    ஆண்களை மடக்கி அவர்களை அடக்கி, வஞ்சக வலையில் சிக்க வைக்கும் பகாவலி ராணி. ஏமாந்து விட்டில் பூச்சிகளாய் விளக்கில் விழுந்து கருகும் வீரர்கள்.


    'கவறாடும் புவனம். பந்தயம் 10000 பொன். வெற்றிக்கு மணமாலை. வீழ்ச்சிக்கு சிறைச்சாலை'

    பகடை ஆட்டம் ஆட சதி பின்னிய வலை அழைப்பு.

    ஏமாந்து வருகிறான் போரோப்பு ராஜா. பகடையில் மன்னன் பன்னிரெண்டு கேட்க ராணி பகடை உருட்டுகிறாள். உடன் உள்ள சதிகாரன் முன்னேற்பாட்டின்படி விளக்கை அணைத்து வேறொரு பகடை பன்னிரண்டை தயார் செய்து மாற்றி வைத்து விடுகிறான். விளக்கின் ஒளி மறுபடி திட்டமிட்டபடி வந்தபின் பார்த்தால் மன்னன் கேட்ட பன்னிரண்டு. அதிர்ச்சி அவனுக்கு. வெற்றி. ராணிக்கு வஞ்சகத்தின் மூலம் வெற்றி. தோல்வி. போட்டியிட வந்த மன்னனுக்கு சதி அறியாத தோல்வி. மண்ணைக் கவ்வி விட்டான். விடுவாளா ராணி? அடிமைப்படுத்துகிறாள். கேவலப்படுத்துகிறாள். ஆண் இனத்தின் நிலைமையை அவமானப்படுத்துகிறாள்.


    மேற்கண்ட சூழல் முழுதும் இந்த அற்புதமான பாட்டிலே.

    போரோப்பு மன்னன் ஈ.ஆர்.சகாதேவன் (என்ன ஒரு தேஜஸ் மற்றும் அழகு) டி.ஆர் ராஜகுமாரி அழகுராணியிடம், "திமிர்த்தனம் கொல்லாதே....ஆடவரை ஏளனமாய் எண்ணாதே" என்று சொல்லி ஆட்டத்தைத் தொடங்குவதும், 'என்ன வேண்டும் கேள்' என்று ராஜகுமாரி கேட்க, 12 போட சகாதேவன் கேட்க, சூட்சுமக்கார தங்கவேலு தந்திரமாக விளக்கை அணைத்து வேறு 12 எண்ணிக்கையுள்ள பகடையை அங்கு மாற்றி வைத்துவிட, அதிர்ச்சித் தோல்வியில் சகாதேவன் உறைய, ஆண்களின் பரிதாப நிலையை கேலி செய்து ராஜகுமாரி பாட அற்புதமாகப் படமாக்கப்பட்ட பாடல்.

    ராஜகுமாரி கொள்ளை அழகு. முகம் அருகே காட்டப்பட்டு போது பால் நிலவு காய்கிறது முகத்தில். பல்வரிசைகளும், கண்கள் புரியும் ஜாலமும் எந்த ஆடவரையும் பைத்தியம் பிடிக்க வைக்கத்தான் செய்யும். இந்த அழகு கொண்ட நடிகை இன்னும் இங்கு பிறக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    'வீராப்பு பேசி வந்த போரோப்பு ராஜாவை வெட்டிட சொல்லு'

    என்று நிறுத்தி, ஒரு போடு போட்டு, சகாதேவனுக்கு உயிர் பீதியைக் கிளப்பி, ஒரு நொடி சகா படும் வேதனையை இன்பமாக அனுபவித்து,

    'மண் வெட்டிட சொல்லு'

    என்று மண்ணை வெட்டச் சொல்லி ஆணை இடுவது அமர்க்களம். (பாடலாசிரியருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்)


    பாடலைப் பாடியவர் தன் குரலால் லீலா வினோதங்கள் புரிந்த பி.லீலா. (உடன் திருச்சி லோகநாதன் என்று நினைவு) சும்மா அதம் பறக்கிறது. அதுவும் பகடை ஆட்டம் பாதிப் பாடல் முடிந்தது பாட்டின் இசையே முற்றிலும் மாறி 'மதியை இழக்கிறார்' என்று இவர் பாடும்போது அப்படியே நாம் ஜென்மம் சாபல்யம் பெற்றுவிட்டது போலத் தோன்றும். 'தலைவிதியால் காலகதியால் வந்து தனியே வாடுறார்' என்று பாடும் போது உச்சங்கள் தொடுவார். நம் உடம்பெல்லாம் புல்லரிப்பது போன்ற இனம் புரியா உணர்வு ஏற்படுவதை சொல்லி முடியாது.





    ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி' (1955) படத்தின் இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி. இயக்கம் ராமண்ணா. எம்ஜிஆர் ,டி.ஆர்.ராஜகுமாரி, ஜி.வரலஷ்மி, சந்திரபாபு, ராஜசுலோச்சனா, தங்கவேலு, சாய்ராம் ஆகியோர் நடித்த படம் இது.


    இனி பாடலின் வரிகள்.



    வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
    வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
    என்னை வெற்றி பெற முடியாது
    நீர் கற்ற வித்தையும் செல்லாது
    என்னை வெற்றி பெற முடியாது
    நீர் கற்ற வித்தையும் செல்லாது

    வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே

    அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே
    வீண் அகம்பாவத்தினாலே என்னை அலட்சியம் செய்யாதே
    இந்த ஜகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளறாதே
    இந்த ஜகமே புகழ் யுவராஜனை மதியாமல் உளறாதே
    எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே
    எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே

    என்ன வேணும் துரையே
    இஷ்டம் போலே கேள் இனியே
    என்ன வேணும் துரையே
    இஷ்டம் போலே கேள் இனியே

    பன்னிரண்டு போட வேணும்
    பலித்தாலே ஜெயம் காணும்
    பன்னிரண்டு போட வேணும்
    பலித்தாலே ஜெயம் காணும்

    ஈராறு பன்னிரண்டு
    ஏங்குதே உன் கண்ணிரண்டு
    ஈராறு பன்னிரண்டு
    ஏங்குதே உன் கண்ணிரண்டு

    வீராப்பு பேசி வந்த போரோப்பு ராஜாவை
    வெட்டிட சொல்லு
    மண் வெட்டிட சொல்லு
    சூராதி சூரன் என்று சோம்பேறியாய்த் திரிந்தார்
    கட்டிடச் சொல்லு
    மரத்தில் கட்டிடச் சொல்லு
    வீராப்பு பேசி வந்த போரோப்பு ராஜாவை
    வெட்டிட சொல்லு
    மண் வெட்டிட சொல்லு

    மதியை இழக்கிறார்
    மனப்பால் குடிக்கிறார்
    தலைவிதியால் காலகதியால்
    வந்து தனியே வாடுறார்

    மதியை இழக்கிறார்
    மனப்பால் குடிக்கிறார்
    தலைவிதியால் காலகதியால்
    வந்து தனியே வாடுறார்

    நிதியோடு வாழும் செல்வந்தர் யாரும்
    சதியால் பாவம் ஆகிறார்
    நினைவே வாழ்வில் கனவானதாலே
    நிலையே மாறி ஏங்குறார்

    மதியை இழக்கிறார்
    மனப்பால் குடிக்கிறார்
    தலைவிதியால் காலகதியால்
    வந்து தனியே வாடுறார்

    நிதியோடு வாழும் செல்வந்தர் யாரும்
    சதியால் பாவம் ஆகிறார்
    நினைவே வாழ்வில் கனவானதாலே
    நிலையே மாறி ஏங்குறார்
    விதியால் காலகதியால்
    வந்து தனியே வாடுறார்


    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  12. #117
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி ராமமூர்த்தி சார்.

    எனக்கு நிரம்ப பிடித்த பாடல் அது.

    நீங்கள் என்னுடைய அவ்தார் பிக்சரை மாற்றும்படி கேட்டிருந்தீர்கள். ஆனால் காரணம் கூறவில்லை. புகை பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது என்ற ரீதியில்தான் அதை மாற்றச் சொல்லியிருப்பீர்கள் என்று யூகிக்கிறேன். அப்படியே இருந்தால் நிச்சயம் உடன் பரிசீலனை செய்கிறேன். மாற்றவும் செய்கிறேன்.

    'மதுர கானங்கள்' திரியை கண்டு வாசித்து வருவதற்கு என் உளமார்ந்த நன்றி. தங்களின் மேலான பங்களிப்பையும் இங்கு அளிக்குமாறு விருப்பத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி!
    நடிகர் திலகமே தெய்வம்

  13. #118
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    மை லார்ட்

    ஜாமீன் இல்லாமல் ஜெயிலில் நிரந்தரமாக தினசரி ஒரு மாதம் முன் செய்த குலோப் ஜாமூன் (அதாவது களியும் இல்லாமல் கஞ்சியும் இல்லாமல்) சாப்பிட வைக்க வேண்டும் என்ற குறைந்த பட்ச தண்டனையை எனது கட்சிக்காரருக்கு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்
    எனது கட்சிக்காரர் பதிலுக்கு பழைய நீராகார சாதத்தில் 40 நாட்கள் நெய் ஊற்றி சாப்பிடும்படி பதில் தந்திருக்கிறார் கிருஷ்ணா சார். என்ன சொல்ல.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #119
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மாலை மதுரம்.



    என்ன அழகான பாடல்!

    'மனதை மயக்கும் அற்புதக் குரலில் ஒலிக்கும் அழியாத கானம். எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் எம்.எல்வசந்தகுமாரியின் தேனினும் இனிய குரலில்.

    1953 ல் வெளிவந்த 'மனிதன்' படத்தில்

    குயிலே குயிலே
    குயிலே குயிலே
    உனக்கனந்த கோடி நமஸ்காரம்
    குமரன் வரக் கூவுவாய்
    நீ குமரன் வரக் கூவுவாய்

    மலை மாங்கனி சோலையிலே
    மருவி எனையே பிரிந்த
    குமரன் வரக் கூவுவாய்
    நீ குமரன் வரக் கூவுவாய்

    வருவார் வருவார் என்றே எதிர்பார்த்தேன்
    விழி சோர்ந்தே'

    டி .கே. பகவதி, டி .கே.சண்முகம், கிருஷ்ணகுமாரி ஆகியோர் நடித்த புதுமைப் படைப்பு.

    Last edited by vasudevan31355; 10th October 2014 at 07:32 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Likes Russellmai liked this post
  16. #120
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    நிச்சயம் அதுதான் சார் வேறு எந்த காரணமும் இல்லை
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    நன்றி ராமமூர்த்தி சார்.

    எனக்கு நிரம்ப பிடித்த பாடல் அது.

    நீங்கள் என்னுடைய அவ்தார் பிக்சரை மாற்றும்படி கேட்டிருந்தீர்கள். ஆனால் காரணம் கூறவில்லை. புகை பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது என்ற ரீதியில்தான் அதை மாற்றச் சொல்லியிருப்பீர்கள் என்று யூகிக்கிறேன். அப்படியே இருந்தால் நிச்சயம் உடன் பரிசீலனை செய்கிறேன். மாற்றவும் செய்கிறேன்.
    மதுர கானங்கள்' திரியை கண்டு வாசித்து வருவதற்கு என் உளமார்ந்த நன்றி. தங்களின் மேலான பங்களிப்பையும் இங்கு அளிக்குமாறு விருப்பத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி!
    உண்மையில் மதுர கானங்கள் அற்புதமான வகையில் அன்பான கீதங்களின் மூலம் பயணம் செய்கிறது தினமும் கண்டு களிக்கிறேன்
    நன்றி திரு வாசுதேவன் சார்

    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •