Page 219 of 397 FirstFirst ... 119169209217218219220221229269319 ... LastLast
Results 2,181 to 2,190 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2181
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    rajraj sir.

    my favourite Qawwali song from Amar Akbar Anthony.

    'Parda hai Parda'

    நடிகர் திலகமே தெய்வம்

  2. Likes Russellmai, chinnakkannan, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2182
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ஜங்க்ளி' திரைப்படத்தில் ஷம்மிகபூர், சைராபானு இணைவில் 'Kashmir Ki Kali Hoon Main' அருமையான பாடல். பாடலின் சில கட்சிகள் சிவந்த மண் படத்தை ஞாபகப் படுத்தும்.




    அதுவே தமிழில் 'சி.ஐ.டி சங்கரி'ல் 'பிருந்தாவனத்தில் பூவெடுத்து' அழகாக உருவானது.

    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes Russellmai, chinnakkannan, kalnayak liked this post
  6. #2183
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    hi good morning all..

    ஹையாங்க்..நிறைய ஹோம் வொர்க் பண்ணனும் போல இருக்கே.. நிறைய வேலைப் பளு எனில் உள்ளே வர முடியவில்லை..மார்கழி வேற ஆரம்பிச்சுடுத்து..பாசுரத்துக்கு வேற கமிட்மெண்ட் மனசுல இருக்கு!

    கோபால் உங்கள் தொடரில் நான் நிறைய அறிந்து கொள்கிறேன்..தாங்க்ஸ்..இன்னும் இன்னும் எழுதுங்கள்..

    பஸ்பாடல்க்ள் கொடுத்த அனைத்து உள்ளங்க்ளுக்கும் கல் நாயக் வாசு ராஜேஷ் ராகவேந்தர் நன்றி..

    அப்புறம் வர்றேன் கடமை அழைக்கிறது..

  7. #2184
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோ,



    உங்கள் 'அன்பளிப்'பை கண்களாலும், மனதாலும் அளந்தேன். நானும் வினோத் சார் முன் கூட்டியே தெரிவித்துவிட படத்தை ரெகார்ட் செய்ய உட்கார்ந்து விட்டேன்.

    நல்லா இருக்கா நல்லா இல்லையா என்று இன்றுவரை நம்மை குழம்ப வைத்துக் கொண்டிருக்கும் ஒரு படம் குருதட்சனை போல.

    எல்லாம் இருந்தும் என்னவோ இல்லையே என்பது போல இருக்கும்.

    ஆத்தோரம் நாலுமுழ வேட்டி கட்டி காத்தாடப் போயி வரும் வீரன் அடிக்கடி சோர்ந்து போவதுதான் மிகப் பெரிய பலவீனம். அண்ணாமலைக்கு ஆதாரம். திரிலோக் ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் கேஸ். பிடித்தால் ஒரே பிடியாகப் பிடித்துவிடுவார் தெய்வமகன், இரு மலர்கள் போல். சொதப்பினால் ஒரேயடியாக சொதப்பி விடுவார் அன்பே ஆருயிரே, அன்பளிப்பு போல. அன்பு என்றால் இவருக்கு ஆகாதோ? உடனே 'அன்பே வா' வேறு ஞாபகத்திற்கு வருகிறது.

    //-ஏ.சி.திருலோக் சந்தர் எங்கே குறி தவறினர்?//

    குறி வைத்தால்தானே தவறுவதற்கு? குறியே வைக்க வில்லையே.

    'வள்ளி மலை மான் பாட்டி'க்கு தாவணி போட்டால் எப்படி சகிப்பது?

    ஆனால் எனக்குப் பிடித்தது 'என் வேஷப் பொருத்தம் எப்படி இருக்கு?... விவரஞ்சொல்லுடா தம்பி' எவராலும் நினைத்துப் பார்க்க முடியாத ஸ்டெப்ஸ். அதுவும் படு வேகமாக. இளமைத் துள்ளல் தென்னை மர உயரம் கிளம்பும் ரப்பர் பந்து போல்.

    'தம்பியுடையான் படைக்கஞ்சான்' எனும் போது டைமிங்காய் கழுத்தை அரித்துக் கொள்வார். சிரிப்போ சிருங்கார ரசம்.

    'தாய் வேறு ஆனாலும் மனம் ஒன்று பட்டதல்லோ' என்று உங்களுக்கு ஆகாத நடிகர் பாடும் போது நம்மவர் செல்லமாகக் காதைத் திருக்கும் பண்டரிபாயின் கரங்களை எடுத்துத் தன் நெஞ்சில் வைத்து, (சற்றே முதுகை பெண்டாக்குவார்) அன்பு பொங்க களங்கமில்லா சிறு பிள்ளை போல் சிரித்து, பக்கத்தில் ஜெய்யையும் பார்த்து ஆனந்தப்படுவார்.



    'எனக்குத் தெரியும் உனக்கும் புரியும் ஏதோ அது
    அடக்க நினைத்தால் அதிகம் வளரும் ஏதோ அது'

    டிபிகல் ராட்சஸி காபரே கலக்கல் பாடல். கீதாஞ்சலி அப்படியே விஜயலலிதாவின் ஆட்டத்தை நினைவுபடுத்துவார்.

    'கோபாலன் எங்கே உண்டோ' பாடல் 'வா கண்ணா வா' படப் பாடலை முன்னே வைக்கும்.

    இறுதி தீ சண்டைக் காட்சி கொஞ்சம் பிரம்மாண்டம்தான்.

    நாகேஷ், வி,கே ஆர். காமெடி ஓ.கே ரகம். ஆனால் அந்த 'அலெக் நிரஞ்ஜென்' சாமியார் இருவரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்.

    'மாதுளம்.... பழத்துக்குப் பெயர் மாதுளம்' படத்தில் கிடையாது. ஆடியோவோடு சரி.

    நடிகர் திலகத்தின் பாத்திரப்படைப்பு இன்னும் பட்டை தீட்டப் பட்டிருக்க வேண்டும்.

    எப்பேர்பட்ட நாட்டமையையும் சரியான தீர்ப்பு சொல்ல வைக்க முடியாத வினோத படம்தான் 'அன்பளிப்பு'
    Last edited by vasudevan31355; 16th December 2014 at 11:04 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. Likes Russellmai, kalnayak liked this post
  9. #2185
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    காலை வணக்கம் அனைவருக்கும்.

  10. #2186
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    நன்றி சி.க., வாசு, ராஜேஷ், ராகவேந்திரா மற்றும் கோபு அவர்களுக்கும்

    - என்னுடைய பஸ் பாடல்கள் பதிவை ஏற்றுக்கொண்டு பாராட்டியதற்கும், அத்துடன் மேலும் சில அருமையான பாடல்களை குறிப்பிட்டமைக்கும், உடன் பதிவேற்றியமைக்கும்.

    மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, மீரா மேலும் பார்த்தேன், ரசித்தேன்-களில் பஸ் பாடல் உண்டென தெரிந்திருந்தும் மறந்திருந்தேன். நினைவுபடுத்தினீர்.

    திருடா, திருடி - சுத்தமாக மறந்தேபோய்விட்டது (அந்த மன்மதராசா விளைவு).

    ஆளுக்கொரு ஆசை - அற்புதமான பாடல், நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும்.

    கழுகு - பொன்னோவியம் எப்படி மறந்தேனோ தெரியவில்லை

    மீண்டும் நன்றி!!!

  11. #2187
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    வாசு,

    "வேஷப் பொருத்தம் எப்படியிருக்கு?" - இவரே இப்படி கேட்கணுமா-ன்னு தோணுது.

    எந்த வேஷமிட்டாலும், அந்த வேஷமாகவே மாறுபவரை என்னவென்று சொல்வது? அன்பளிப்பு பதிவு அபாரம்!!!

  12. Thanks vasudevan31355 thanked for this post
  13. #2188
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by kalnayak View Post
    வாசு,

    "வேஷப் பொருத்தம் எப்படியிருக்கு?" - இவரே இப்படி கேட்கணுமா-ன்னு தோணுது.
    sabaash nayak.
    நடிகர் திலகமே தெய்வம்

  14. #2189
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி:- தினமணி


    "சினிமா சித்தன்" மாயவநாதன்


    மறைந்துபோன திரைப்படப் பாடலாசிரியர்களுள் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர் கவிஞர் மாயவநாதன்.விளம்பர வெளிச்சமில்லாமல் இருட்டுக்குள் புதைந்துபோன சினிமா சித்தன்.


    கேட்கும் தொகையை வழங்கத் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தபோதும், பணத்தை மட்டுமே குறியாகக்கொண்டு பாடல் எழுதாத பத்தினிப் பாடலாசிரியர்.


    திரையிசைப் பாடல்கள் பிரசித்தம் பெறத்துவங்கிய காலகட்டத்தில் பிரபலமாக இருந்தவர் கண்ணதாசன். அதனால் பிற கவிஞர்கள் எழுதிய நல்ல பாடல்கள் கூட கண்ணதாசன் எழுதியதாக இருக்கும் என்பதே வெகுஜனங்களின் யூகமானதால், மாயவநாதன் கண்ணுக்கு எட்டாத தூரத்திலேயே நின்றுவிட்டார்.


    சொந்த ஊர், நெல்லை மாவட்டத்திலுள்ள பூலாங்குளம்.தீவிரமான காளிபக்தர்.கரம்பைச் சித்தர், கரூர் சித்தர், பாலமுருக சித்தர் என்று சித்தர்களுடன் சிநேகமாக இருந்தவர்.

    படத்தயாரிப்பாளர் தேவரின் வேண்டுகோளை ஏற்று, மருதமலை முருகன் கோயில் கல்வெட்டில் பதிப்பதற்காக சில பாடல்களை மாயவநாதன் எழுதிக்கொடுத்தார்.அவரது அழியாப் புகழுக்கு அந்தக் கல்வெட்டு ஒரு நல்ல அடையாளமாகும்.


    சென்னை - மயிலாப்பூரில் உள்ள ஒரு விடுதியில்தான் அவர் வெகுகாலம் தங்கியிருந்தார்.


    நடிகை சந்திரகாந்தாவின் நாடகக்குழு அப்போது மிகவும் பிரசித்தம். அந்தக் குழுவினரின் நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதியதன் மூலம் திரையுலகின் கவனத்தைக் கவர்ந்தவர் மாயவநாதன்.


    1960 முதல் 1971 வரை, சில படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். இவர் திரைப்படங்களுக்கு எழுதிய பாடல்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், எழுதிய அத்தனை பாடல்களிலும் வெற்றிபெற்ற கவிஞன்.


    "படித்தால் மட்டும் போதுமா" திரைப்படத்தில்,

    "தண்ணிலவு தேனிரைக்க
    தாழைமடல் நீர்தெளிக்க
    கன்னிமகள் நடைபயின்று வந்தாள் - இளம்
    காதலனைக் கண்டு நாணி நின்றாள்

    என்ற பாடல் மூலம் அறிமுகமாகி, தன் முதல் பாடலிலேயே தனி முத்திரையைப் பதித்தார்.


    பழந்தமிழ்க் கவிதை சாயலில் இலக்கிய உணர்வலைகள் எழும்ப முதல் பாடலை எழுதி,

    "யார் இந்த மாயவநாதன்?"

    என்று திரையுலகில் மட்டுமல்லாமல் இலக்கிய உலகிலும் பரபரப்பை ஏற்படுத்திய கவிஞர் அவர்.


    "கண்ணதாசனின் செல்வாக்கை உடைத்த முதல் கவிஞன் என்ற பெருமையுடையவன் மாயவநாதன்என்று புதுக்கவிஞர் நா.காமராசன், தான் எழுதிய "சொர்க்க வசந்தத்தின் ஊமைக் குயில்கள்" என்ற நூலில் குறிப்பிட்டிருப்பது, மாயவநாதன் பற்றிய நேர்மையான மதிப்பீடாகும்.


    இதயத்தில் நீ - திரைப்படத்தில்,

    "சித்திரப் பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ - இந்த
    கட்டுக்கரும்பினைத் தொட்டுக் குழைந்திட
    யார் வந்தவரோ? - அவர்
    தான் என்னவரே...

    என்ற பாடல் இயற்றுவதில் கைதேர்ந்தவர் மாயவநாதன் என்பதற்கு இந்தப் பாடலின் மொழி இலாகவம் ஒரு நிரூபணமாகும்.


    சந்தச்சுவையும், கற்பனை வளமும் மிக்க இந்தப் பாடல் திரைப்படப் பாடல்களின் வரிசையில் ஒரு வாடாமலர் என்றுதான் கூறவேண்டும்.

    பூமாலை - திரைப்படத்தில், இருளில் ஓர் ஆடவனால் கற்பு சூறையாடப்பட்ட பெண் ஒருத்தியின் நிலையை விளக்க...

    "கற்பூரக் காட்டினிலே கனல் விழுந்து விட்டதம்மா

    என்று பளிச்சென்று நெஞ்சைத் தாக்குகின்ற மின்னல் வரிகளைப் படைத்தார்.

    மாயவநாதன் யார்க்கும் அஞ்சாத, பணிந்துபோகாத குணமுடையவர்.


    ஒரு முறை "மறக்க முடியுமா" திரைப்படத்துக்குப் பாடல் எழுத வந்தவர், இசையமைப்பாளரிடம் "என்ன மெட்டு?" என்று கேட்டார். அந்த இசையமைப்பாளர், "மாயவநாதன்...மாயவநாதன்" என்று தத்தக்காரத்தைக் கிண்டலாகக் கூறினார்.


    மாயவநாதனுக்கு "கவிக்கோபம்" வந்துவிட்டது.கிடைத்த வாய்ப்புக்காக மண்டியிடாமல் உடனே வெளியேறிவிட்டார்.பிறகு அந்த மெட்டுக்கு மு.கருணாநிதி எழுதியதுதான் "காகித ஓடம் கடலலை மீது" - என்ற பாடல்.மாயவநாதனின் கவியாளுமையை முற்றிலும் அறிந்து, தான் எழுதித் தயாரித்த படங்களில் வாய்ப்புகள் அதிகம் வழங்கி, மாயவநாதனுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் மு.கருணாநிதி என்பதும் மறுக்க இயலாத உண்மை.


    பூம்புகார் திரைப்படத்தில் மாயவநாதன் எழுதிய பாடல்கள், சினிமாப் பாடல்கள் என்பதை மறந்துவிட்டால் அத்தனையும் சித்தர் பாடல்கள்தான்.


    தத்துவசாரமும், மனிதநேயமும் உள்ளடங்கிய பாடல்கள் அவை.


    பந்தபாசம் - திரைப்படத்துக்கு கண்ணதாசனுக்குப் பதிலாக யாரை வைத்து எழுதுவது என்ற கேள்வி எழுந்தது. மாயவநாதனைத்தான் தெரிவு செய்தார்கள்.


    "பந்தபாசம்" படத்தில் வருகிற...

    "நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? - நெஞ்சில்
    நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?
    கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?
    குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?

    என்ற பாடல், அது வெளிவந்த காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கும் பிரபலமானது.


    பாலும் பழமும் - திரைப்படத்தில் ஒரு பாடல்,

    "பழுத்துவிட்ட பழமல்ல நீ விழுவதற்கு
    பாய்ந்துவிட்ட நதியல்ல நீ ஓய்வதற்கு
    எழுதிவிட்ட ஏடல்ல நீ முடிவதற்கு
    இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?


    வாழ்வின் வாயிலில் முதல் அடியை எடுத்து வைக்கும் அதே கணத்தில், சாவின் வாயிலில் அடுத்த அடியை எடுத்து வைக்க நேர்ந்துவிட்ட ஓர் இளம் கதாபாத்திரத்தின் நிலையை முதல் மூன்று வரிகளில் பெருஞ்சோகத்துடன் கூறிவிட்டு, நான்காவது வரியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.


    "இடையினிலே முடிவென்றால் முதல் எதற்கு?அற்ப ஆயுளில் ஒரு ஜீவனை முடித்து வைக்கும் விதியின் பிடரியில் அறையும் கேள்வி இது.


    என்னதான் முடிவு - திரைப்படத்தில் மனதை உருகவைக்கும்

    "பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே - செய்த பாவமெல்லாம்
    தீருமுன்னே இறக்க வைக்காதே

    என்ற மிகச்சிறந்த தத்துவப் பாடல் ஒன்றை எழுதினார்.

    நாத்திகவாதியின் மனதைக்கூட கரைந்துபோக வைக்கும் ஆன்மிக வரிகள் அவை.


    திரையிசையில் மாயவநாதன் எழுதிய தத்துவப் பாடல்கள் தலைசிறந்தவை. இலக்கிய வகைகளில் இசைப்பாடலும் ஒருவகை. தமிழ் மரபில் இசைப்பாடல்கள் காலாவதியாகிவிட்ட நிலையில் அதன் நீட்சியாக திரையிசைப் பாடல்கள் உருவானது. அந்த திரையிசைப் பாடல்களுக்கு இசையின்பத்தைத் தாண்டி ஓர் இலக்கிய இன்பத்தை ஏற்படுத்திய கவிஞர்களுள் முக்கியமானவர் மாயவநாதன்.


    1971இல் மாயவநாதன் காலமானார்.


    "டெல்லி டூ மெட்ராஸ்" - திரைப்படத்தின் பெயர் பட்டியலில் மாயவநாதனுக்கு அஞ்சலி செலுத்தி, அந்தக் கவிஞன் மீதிருந்த மதிப்பை வெளிப்படுத்தினார்கள்.

    மேதாவிலாசத்துடன் பாடல்கள் புனைந்த மாயவநாதன் சொற்ப வாய்ப்புகளையும், அற்ப ஆயுளையும் பெற்றது தமிழ்ப் பாடலுலகின் துரதிருஷ்டம் என்றுதான் கூறவேண்டும்.

    பொய்யும், புரட்டும், போலி விளம்பரமும் மலிந்த சினிமா உலகில், சித்த நெறியும், சத்திய வெறியும்கொண்டு ஞானச் சிறகடித்துப் பறந்த கவிஞன் மாயவநாதன்.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Thanks chinnakkannan thanked for this post
    Likes Russellmai, kalnayak liked this post
  16. #2190
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ரவி, காஞ்சனா நடித்த 'தேடி வந்த திருமகள்' படத்திலிருந்து ஒரு பாடல்


    'கேட்டால் ஒன்று தர வேண்டும்
    கொடுத்தால் அதைப் பெற வேண்டும்'

    நடிகர் திலகமே தெய்வம்

  17. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •